அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….

This entry is part 3 of 30 in the series 17 பிப்ரவரி 2013

 

 

திண்ணை உறவுகள்

தெருமுனையில் முடிந்துவிடும்

என்பார்கள்.

நாம் சந்தித்த திண்ணையும் சரி

நம் உறவுகளும் சரி

முடியாமல்

மரணித்தப் பின்னும்

காலனை வென்ற புதுமைப்பித்தனின்

கிழவியாய்

அருகிலிருந்து

மயிலிறகாய் வருடிக் கொடுக்கிறது.

 

எப்படி சொல்வேன்?

“நீ இல்லை “என்பதை

நீயே அறிவித்த உன் கைபேசி

குறுஞ்செய்தி

அப்பாவின் மரணத்தை

மகள் அறிந்த தருணங்கள்

இரண்டாவது முறையாக

மீண்டும் அதே வலியை

உணர்ந்தேன்.

 

 

எப்போதாவது

பேசிக்கொள்வோம்

அதை எப்போதும் நீ

எல்லோரிடமும் சொல்லிக்கொண்டாய்

அதிலும் உன்னைச் சந்திப்பதாய்

நான் சொல்லி

எத்தனையோ முறை

ஏமாற்றிக்கொண்டிருப்பதையும்

சேர்த்தே சொல்லுகிறாய்

உன்னைச் சந்தித்தால்

நீ என்னை மாற்றிவிடக்கூடும்

என்பதால்

உன்னை நான் சந்திக்காமலேயே

இருப்பதாய்…..

அது உண்மையல்ல என்றாலும்

அப்படி சொல்லிக்கொள்வதில்

உனக்கிருக்கும் ஆனந்தம்…

என்ன சொல்வேன்? எதைச் சொல்வேன்?

 

 

என் கருத்துகளை

மூர்க்கமாக விமர்சித்தாய்

என் கதைகளையும்

கதை மாந்தர்களையும்

நீயேதான் நேசித்தாய்.

 

என்னை உன் மகளென்று

உன் வட்டமெங்கும்

சொல்லிச் சொல்லி

பூரித்ததாய்

நான் காணாத உன் வாசல்

கதவுகள்

இப்போது சொல்லுகின்றன.

 

எப்போதும் உன்னோடு

சண்டையிடும் நான்

இப்போதும் அப்படியே தான்

இருக்கிறேன்

என்னோடு

சொல்லாமல்

நீ போனதற்காய்!

 

 

நாம் புதியவர்கள்

உன்னைப் புரிந்துகொள்ள

நான் முயன்றதில்லை

என்னைப் புரிந்துகொள்ள

நீ விரும்பியதில்லை

 

வாழ்க்கைத் திசையில்

நீ வேறு நான் வேறு

இந்த முரண்வெளியில்

நம்மைப் போல

வாழ்ந்தவர்கள்

எவருண்டு?

 

 

நாம் வாழ்ந்தோம்

என்பதற்கு சாட்சியாய்

இருக்கிறது

நாம் சந்தித்த

திண்ணை.

 

 

இப்படிக்கு

அன்போடு

PM

(priyamuLLa makaL)

 

 

 

 

 

 

 

 

 

வாசிப்பதும் வாசிப்பதை நேசிப்பதும்

முரண்படுவதும் முரண்வெளியில்

Series Navigationஎழுத்துஅய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
author

புதிய மாதவி

Similar Posts

Comments

  1. Avatar
    கோவை எம் தங்கவேல் says:

    மலர்மன்னன் அமரர் ஆகி விட்டாரா? இன்றைக்குத்தானே தெரிகிறது. மனதைப் பிழியும் கவிதை வரிகள் எனக்குள்ளே ஈட்டியாக அவரின் மரணத்தை செலுத்துகிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *