தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
புன்னகை ஆரத்தைக் கையில் ஏந்தி
நின்றாள் அவள்
பன்னிற வண்ணப் பூக்கள் போல் !
கண்ணீர்ச் சுவைத் துளிகள் சொட்டும்
மனச் சோர்வுக் கனிகளின்
கனத்த பாரத்தை
மனத்தில் நான் சுமக்கிறேன் !
அந்த அழகி திடீரென வந்து
“அருகில் வா !
நாம் மாற்றிக் கொள்வோம் !” என்பாள்
அவள் முகத்தை உற்று நோக்கி
அதிர்வடைந்தேன் !
அவள் நளினக் கவர்ச்சி என்மேல்
பரிவு கொள்ளாதது !
எனது பருவ கால மழைக் கும்பாவை
உணர்வு மங்கக் கூர்ந்து நோக்கி
பற்றிக் கொள்வாள் !
புது வசந்தப் பூக்கள் மலர்ந்த அவள்
பூ மாலையை,
என் நெஞ்சருகே தூக்கினேன் !
“வென்றவள் நான்” என்றவள் சொல்லிச்
சென்றவள் பின்பு
விரைவில் மறைந்து போனாள்
வெகு தூரத்தில் !
பொழுது சாயும் போது
வேனிற் சூட்டில் நான் கண்டேன்
வாடிப் போய்
விழுந்த எல்லாப் பூக்களையும் !
+++++++++++++++++++++++++
பாட்டு : 245 1925 ஜனவரி 17 இல் தாகூர் 63 வயதினராய் இருந்த போது தென் அமெரிக்காவிலிருந்து இத்தாலிக்குக் கப்பலில் திரும்பும் போது இந்தக் கவிதையை எழுதியுள்ளார். புரபியில் பௌதோல் [“Baudol” in Purabi] என்னும் பெயரில் அதே ஆண்டில் வெளியானது.
தாகூர் எடுத்துக் கூறும் பெண்மணி விக்டோரியா ஒகாம்பு ஆக [Victoria Ocampo] ஆக இருக்கலாம். அவரைத் தாகூர் புயூனஸ் ஏரஸில் [Buenos Aires] சந்தித்து அவருக்கு நெருங்கிய நண்பரானார். பெயர் பெற்ற புரபி கவிதைகளில் விக்டோரியாவின் இருப்பைக் காணலாம். அந்தக் கவிதைகள் பிஜொயா [Bijoya, the name given to Victoria] வென்னும் விக்டோரியாவுக்கு அர்ப்பணம் செய்யப் பட்டன]
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] February 13, 2013
- விசுவும் முதிய சாதுவும்
- எழுத்து
- அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
- அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
- இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
- ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
- தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
- ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
- அக்னிப்பிரவேசம்-23
- விஸ்வரூபம்
- செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4
- குரான்சட்டமும் ஷரீஆவும்
- வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
- வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6
- ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
- மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.
- தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !
- கோப்பெருந்தேவியின் ஊடல்
- பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்
- நேர்த்திக்கடன்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8
- சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
- கவிதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1
- நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது