மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உனக்குத் தெரியாமல் போனது
என்னைப் பற்றி !
அதுவும் நல்லதே ! அதுவும் நல்லதே !
அப்பால் நீங்குவ தற்குப் பதிலாய்
அருகி லிருந்து நீ யெனக்கு
அளிப்பது வேதனை !
திக்கு முக்காடச் செய்வதேன் நீ
பக்கத்தில் அமர்ந்து !
என் வசந்த காலம்
ஈர்த்துக் கொள்ளும் மெய்யாக
இசைத் தொனியை !
மூங்கில் மரத் தோப்பு நிழல்
ஓங்கி வளர்க்கும் இனிய உணர்ச்சி !
ஏனிந்த மாதிரி தீவிர வாசனை
இருந்து விடக் கூடாது ?
பயணத் தோப்பாய்க் காதல ருக்கு
தயாராய் இருக்கும் இது !
உன்னாசை விழிகளிலே
ஓடி விளையாடும் குசும்புத்தனம்
எனக்கு
இரகசிய மாய்த் தெரியுது !
புயல் வருவதற்கு முன்னே உன்
புடவை முந்தானை
படபடப் பதைப் பார்க்கிறேன் !
தாறு மாறாய்ப் பறக்கும்
உனது கூந்தல் !
எனக்கும் உனக்கும் இடையே
இருப்பதை
உரைக்க முடியாது !
என் ஆத்மாவில்
ஒளிந்திருக்கும் அந்த அறிவுரை !
எனது
புல்லாங்குழல் பொழிந்திடும்
சொல்ல முடியாத
சுவையை !
+++++++++++++++++++++++++
பாட்டு : 190 1926 ஏப்ரல் மாதம் தாகூர் தன் 64 வயதில் சாந்திநிகேதனத்தில் எழுதி [19-21 Chaitra 1332 BS] வெளியானது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 12, 2013
http://jayabarathan.wordpress.
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 21 இரா.முருகன் – ‘மூன்றுவிரல்’
- திருக்குறளில் மனித உரிமைகள்!
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12
- கரிகாலன் விருது தேவையில்லை
- காலம்
- நூல் கொண்டு ஆடும் பொம்மைகள்
- எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்
- மூன்று அரிய பொக்கிஷங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -1
- சுத்தம் தந்த சொத்து..!
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1
- மெல்ல நடக்கும் இந்தியா
- மஞ்சள் விழிகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு (6)
- வாலிகையும் நுரையும் – (15)
- யாதுமாகி நின்றாய்….. !
- மூக்கு
- தாகூரின் கீதப் பாமாலை – 56 புல்லாங்குழல் பொழியும் இனிமை !
- விட்டில் பூச்சிகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -15 என்னைப் பற்றிய பாடல் – 8 (Song of Myself)
- “தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்” )
- புதுத் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பூதச் செர்ன் விரைவாக்கியில் உறுதியானது.
- அக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48
- நடு வலதுசாரி திட்டத்தை முன்வைக்கிறார் நரேந்திர மோடி