நடு வலதுசாரி திட்டத்தை முன்வைக்கிறார் நரேந்திர மோடி

author
16
0 minutes, 5 seconds Read
This entry is part 26 of 26 in the series 17 மார்ச் 2013

சசி சேகர்

modi-23_350_031713014948குஜராத் முதலமைச்சர் இந்தியா டுடே கான்க்லேவ் 2013 நிகழ்ச்சியில் பேசியது, அந்த நிகழ்ச்சியிலும், இணைய உலகத்திலும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. அதனை இணைய ஒளிபரப்பு செய்தது ஒருமுறை தடங்கலுக்கு உள்ளானாலும் அந்த நிகழ்ச்சியே 20 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது என்பதும், அந்த நிகழ்ச்சிக்குள் நுழைய ஏராளமான கூட்டம் இருந்ததும், அதனால் தடங்கலானதும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துகொண்டே இருந்தார்.
நரேந்திர மோடியின் பேச்சுக்கு இருந்த எதிர்பார்ப்பு புரிந்துகொள்ளக்கூடியது. நமது ஜனநாயகத்தில் இன்னமும், முதன்மை அரசியல்கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை, பாராளுமன்றத்துக்கு வெளியே, மக்கள் முன்னால், வைக்கக்கூடிய அமைப்பு ஏதும் இதுவரை இல்லை. இப்படிப்பட்ட ஊடகங்கள் அமைக்கும் நிகழ்ச்சிகளே மேற்கத்திய நாடுகளில் நடக்கும் விவாதங்களுக்கு சற்றே அருகே வரக்கூடியவை.
டெல்லியில் காங்கிரஸை நீக்கிவிட்டு அங்கே பாஜகவை உட்கார வைக்க எந்தமாதிரியான சவால்களை எதிர்கொள்ளப்போகிறது என்பதை பற்றியும் அதனை ஒட்டி எந்த மாதிரியான செய்திகளை நரேந்திர மோடி கூறப்போகிறார் என்பது பற்றியும் விவாதங்கள் நடந்த வண்ணம் இருந்தன. சமூக வலைத்தளங்களில்(ட்விட்டர் பேஸ்புக்) போன்றவற்றில், நரேந்திர மோடியின் பேச்சுக்கு பின்னால், இடதுசாரி மனவலி எவ்வளவு இருக்கப்போகிறது என்பது பற்றி நகைச்சுவை ஓடிகொண்டிருந்தது. நிதி சென்ட்ரல் (என்ற பாஜக ஆதரவு இணையதளத்திலும்) மோடி எந்த வகையான விஷயங்களை பேசப்போகிறார் என்பது பற்றிய அங்கத செய்தி வெளியிட்டது. மேற்குலகில், சுய அங்கதம் இப்போது வழமையாக ஆகியிருக்கிறது. அதே வழி இப்போது இந்தியாவிலும் பரவுகிறது என்பதற்கு அறிகுறியே இது.

 

 

அவரது பேச்சு முப்பது நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
மோடியின் பேச்சுக்கு முன்னால், இந்தியா டுடேயின் தலைமை ஆசிரியர் அருண் பூரீ, “மோடி” என்பது இந்திய அரசியலில் மிகவும் பேசப்படும் வார்த்தை என்று சொல்லி ஆரம்பித்து வைத்தது சுவாரஸ்யமானது.
மோடி எழுதி வைத்து படிக்காமல் சுயமாக இந்தியில் பேசினார். நேரடியாக பேச்சுக்கு செல்லாமல், ஒரு வீடியோவை காட்டி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 2008 ஒபாமா அரசியல் விளம்பரத்தை நினைவூட்டும் அந்த 12 நிமிட வீடியோ அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் செய்யப்படும் விளம்பரங்களை ஒத்து இருந்தது. தற்போது தொலைக்காட்சிகளில் இருக்கும் விவாதங்களில் திரிக்கப்படும் வழமையான செய்திகளை தாண்டி, குஜராத்தை பற்றி செய்திகளும் எண்ணிக்கைகளும் கொண்டதாக இருந்தது.
பேச்சும், வித்தியாசமான தொனியில் இருந்தது. அது அரசியல் பேச்சு அல்ல. அது பார்வையாளர்களை கிளர்ந்தெழச் செய்ய வைக்க குறி வைத்ததும் அல்ல. அது பேச்சு வழக்கிலும், இடையிடையே சில சிறுகதைகளையும் நிகழ்ச்சிகளை விவரிப்பதாகவும் இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி ஒருவர் முதன்முறையாக நடு-வலதுசாரி கொள்கைகளை விவரித்து மக்களிடம் பேசியதாக இருக்கும். நரேந்திர மோடி தான் தொடர்ந்து செல்ல இருக்கும் பாதையையும் அது எவ்வாறு தற்போதைய யூபிஏ அரசாங்கம் செல்லும் பாதைக்கு மாறுபட்டது என்பதையும் விவரித்து கூறினார். தனது கொள்கையும் வழியும் தனது கட்சியாலேயே எவ்வாறு பலமுறை கேள்விக்குள்ளாக்கப்பட்டது என்பதையும் அவர் கூறத்தவறவில்லை.
ஜனநாயகம் என்பது மக்களும் அரசாங்கமும் கொண்டுள்ள பார்ட்னர்ஷிப் என்பதும், மக்கள் தங்களது பிரச்னைகள் எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் அனுப்பும் விஷயமல்ல என்பதையும் அவர் பேசினார். அதிகார வர்க்கத்தின் மனநிலைப்பாடுகளை மாற்றுவது என்பதை பற்றியும், அதிகாரிகள் தாங்கள் சேவை செய்யும் சமூகத்தினரிடம் பொறுப்புள்ளவர்களாக இருப்பது எப்படி என்பதையும், அதற்கு நிலையான கொள்கைகளும், மக்களை மையமாக வைத்த துன்பம் தீர்க்கும் அமைப்பு ரீதியான வழிமுறைகளும் முக்கியம் என்பதையும் பேசினார்.
அரசாங்கம் வியாபாரம் செய்யும் வேலையில் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார். உரிமைகள் அடிப்படையான வியாபார சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதை பேசினார். தற்போதைய யுபிஏ அரசாங்கத்தின் NREGA என்ற அரசாங்க வேலைவாய்ப்பு திட்டத்தை எதிர்த்தும், அந்த அரசாங்கம் புதிய புதிய சட்டங்களை உருவாக்கி அதன் மூலம் பிரச்னைகள் தீர்த்துவிடலாம் என்று நினைப்பதையும் முதன்முதலாக ஒரு பாஜக தலைவர் எதிர்த்து பேசியதும் இதில்தான்.
”நமக்கு புதியதாக சட்டங்கள் வேண்டாம். வேண்டியதெல்லாம் செயல்கள்தான்” (We don’t need more Acts we need action) என்று சொன்னது பார்வையாளர்களுக்கு உவப்பாக இருந்தது.
மோடியின் பேச்சில் வலிமையான பகுதிகள், அவர் குப்பைகள் மேலாண்மை (waste management )பற்றி பேசியதும், சூரிய வெளிச்சம் மூலம் மின்சக்தி பற்றி பேசியதும், இந்த கருத்துக்கள் அமைப்புரீதியாக ஆக்கப்பட வேண்டும் என்பதும், அது தனிநபர் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்பதும், இவையே தொடர்ந்த சுற்றுசூழல் பாதிக்கப்படாத வளர்ச்சிக்கு உதவும் என்பதும் ஆகியவை.
இந்திய ரயில்வே தனியார் துறையாக மாற்றப்பட வேண்டும் என்றும் நரேந்திர மோடி பேசினார். இது எந்த ஒரு முக்கிய இந்திய அரசியல்வாதியும் பேசாத ஒரு விஷயமாகும். இந்தியாவின் ஆயுதங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும் என்றும், இந்தியா ஆயுத இறக்குமதியிலிருந்து ஆயுத ஏற்றுமதிக்கு மாற வேண்டும் என்றும் பேசினார். இந்திய அரசாங்கம் தொழிற்சாலைகளை நடத்தும் வேலையிலிருந்து விலக வேண்டும் என்றும் கூறினார். இதன் பின்னணியில், பார்வையாளர்களிடமிருந்து குஜராத் அரசாங்கம் ஏன் இன்னமும் தொழிற்சாலைகளை நடத்துகிறது என்ற கஷ்டமான கேள்வியையும் அவர் எதிர்கொள்ள நேரிட்டது.
அரசாங்கம் நடத்தும் தொழிற்சாலைகள் இருக்கும் தொழில்களை தனியார் துறையிலிருந்து போட்டி உருவாக்குவதும் முக்கியம் என்று கூறி, தனது தனிப்பட்ட கருத்துக்கும், அரசியல் தேவைக்கும் உள்ள முரண்பாட்டை பற்றி பேசினார்.
அதன் பின்னால் நடந்த கேள்வி பதில் பகுதியில், குஜராத்திலிருந்து டெல்லிக்கு வரும் தொலைவை குறிப்பிட்டு காட்டக்கூடியதாக இருந்தது. அவரது சிறப்பான பதில்கள், அவர் பிரதமராக விரும்புகிறாரா என்பதிலிருந்து டெல்லிக்கு வருவதற்கு தடை பற்றியும் பேசியதில் வந்தவை. hdi , fdi, உணவுக்குறைபாடு, 2002 கலவரம் பற்றிய டெல்லி உயர்மட்ட பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நிச்சயம் அவர்கள் எதிர்பார்த்த பதில்கள் வந்திருக்காது.
முதன்முறையாக எதிர்கட்சியிலிருந்து பிராந்திய குஜராத்திலிருந்து ஒரு முதன்மை தலைவர் டெல்லி உயர்வர்க்கத்தின் நடுவே நின்று பலதரப்பட்ட கேள்விகளுக்கு தேசிய தொலைக்காட்சியில் பதிலளித்திருக்கிறார்.

இதுவரை எந்த அரசியல்வாதியும் பேசாத , செல்லாத பொருளாதார திட்டக்கொள்கைகளை மக்கள் முன் வைத்திருக்கிறார் நரேந்திர மோடி.

 

மூலம்

வீடியோ

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48
author

Similar Posts

16 Comments

 1. Avatar
  govind.karup says:

  மோடி நம்மை பாதுகாப்பார் என்ற உணர்வு பரவலாக காணப்படுகிறது. ராகுல் இதை கவனிக்க வேண்டும்

 2. Avatar
  paandiyan says:

  குஜராத் சட்டசபை தேர்தலின் போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3டி தொழில்நுட்பத்தில் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரம் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளது.தேர்தல் பிரசாரத்தின் போது, 3டி தொழில் நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் 53 இடங்களில் 55 நிமிடங்கள் மோடியின் தேர்தல் பிரசாரம் ஒளிபரப்பப்பட்டது. நிற்க —
  paid interview, தயாரிக்கப்பட்ட கேள்விகள் இதை வைத்து ஊழல் விளையாடும் *.காந்திகளுக்கு மீடியாவை விலைக்கு வாங்கி, புகுந்து விளையாட பண, அதிகார பலம் இருகின்றது . இது பல தலைவர்களுக்கு இல்லாமல் போனதால் அரசியலில் காணமல் போயிவிட்டார்கள். இவரிடம் அந்த பாட்சா பலிக்காது. ஒரு குறிப்பிட்ட டெலிவிசன் பயங்கர கஷ்டப்பட்டு நிதிஷ்யை தனிய கொண்டுவர பல பல காரியம் செய்துகொண்டுள்ளது. award கொடுத்து award வாங்குவது வெளிநாட்டு பணம் என்று எல்லாம் தகடுதனம் பண்ணுபவர்கள். facebook , twitter டெக்னாலஜி வந்தபோது சற்று மிரண்டுதான் போனார்கள்.நல்லது சீக்கிரம் நடக்கும் என்று நம்புவோம் .

 3. Avatar
  paramasivam says:

  Sasi sekar says that Modi talked in Hindi.Sasi sekar has given lot of build up but omitted to give Tamil translation of Modi”s speech.Sasi has made us deprived of a speech from the person who is perceived to be the saviour of India.I should know Hindi to learn the new ideology from Modi?

 4. Avatar
  paramasivam says:

  Sasi sekar praises the speech by Modi as never heard of from a politician.I would request him to read Union Finance Minister P.Chidambaram”s K.Subrahmaniyam Memorial Lecture delivered at New Delhi on “India”s National Security-Challenges and Priorities”Even though it has title as the one related to National Security,it is basically a politico-economic lecture.This lecture was delivered during the first week of Feb,2013.

 5. Avatar
  admin says:

  பரமசிவம்,
  அடுத்த முறையிலிருந்து உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதுங்கள்.

 6. Avatar
  vedamgopal says:

  ஸ்ரீ.நரேந்திரமோடி டெல்லி பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்ரீ.ராம் வர்தக கல்லூரியில் நிகழ்திய பேர் உரை
  இந்த உரையின் சில முக்கிய செய்திகள் –
  1. முன்னேற்றம் ஒன்றுதான் எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கமுடியும்.
  2. எனது அசையாத நம்பிக்கை என்னவென்றால் நமது பாரத இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரின் கனவான ”ஜகத் குரு பாரத்” (உலகத்திற்கே பாரதம் ஒரு குருவாக வழிகாட்டிட) ஆவன செய்வார்கள்.
  3. நான் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல் அமைச்சர் என்ற முறையிலும் எனது இந்த அனுபவத்திலும் சொல்கிறேன் இப்பொழுதுள்ள ஜன சமூகத்தைக் கொண்டே சட்டதிட்டங்கள், விதிமுறைகளைக் கொண்டே நாம் எல்லாவிதத்திலும் தங்குதடையின்றி முன்னேற்றம் காணலாம்.
  4. நான் இந்த தேசத்து இளைஞர்களை வயதிற்கு வந்து தேர்தலில் வெறும் ஒட்டு போடுபவர்களாக காணவில்லை நான் அவர்களை ஒரு ஒரு புது யுக எழுச்சிக்கு ஊந்துகோலான சக்தியாக மதிக்கிறேன்.
  5. நமது முன்னேற்றதிற்கு மூன்று முக்கியமான கூறுகள் – விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, சேவை துறை வளர்ச்சி (Agriculture, industries and service sector) இவை ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து சென்றால் ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்சியை எந்த சக்தியும் தடுக்கமுடியாது.
  6. தன்நம்பிக்கை கொண்டவர் கண்னாடி கிண்ணத்தில் பாதி தண்ணீர் இருக்கிறது என்பர். தன்நம்பிக்கை இல்லாதவர் கண்ணாடி கிண்ணம் பாதி காலியாக இருக்கிறது என்பர். நான் சொல்வேன் இந்த கண்ணாடி கிண்ணம் பாதி தண்ணிராலும் பாதி காற்றாலும் நிரம்பி இருக்கிறது என்று.
  7. நாம் நமது பாரதத்தை உலக வர்தக சந்தையாக்குவோம் நமது பொருள்களை மிகுதியாக ஏற்றுமதி செய்வோம்.
  8. என்னை பொருத்தவரையில் நமது அரசாங்கத்திற்கும் வியாபாரத்திற்கும் நேரடியான இணக்கம் தேவை இல்லை. அரசாங்கத்தின் குறைந்த பஷ்சம் மேற்பார்வையே போதும்.
  இந்த கூட்டம் 2013 பிப்ரவரி 6ம் தேதி மாலையில் நடைபெற்றது .அன்று திரு.மோதி அவர்களின் உரையை கேட்க வேண்டும் என்று வந்த மாணவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் காட்டிய ஆரவாரமும், ஒரு புது சாகாப்தத்தை நிலை நாட்டியுள்ளது என்பது மிகை ஆகாது.

 7. Avatar
  vedamgopal says:

  குஜராத் முதலமைச்சர் இந்தியா டுடே கான்க்லேவ் 2013 நிகழ்ச்சியில் பேசியது, இதை முதலில் ஆங்கிலத்தில் மறுமொழியாக அனுப்பியதை தாங்கள் வெளியிடவில்லை. அவர் இந்தியில் பேசியது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வலைதளங்களில் உள்ளதைதான் நான் பதிவு செய்தேன். அதை மீண்டும் தமிழ் படுத்தினால் சொல்லியவற்றின் சாரம் ஒவ்வொரு மொழி பெயர்பிலும் அதை மொழி பெயர்பவரின் மனநிலை பொருத்தும் அதன் தன்மை மாறும் என்பது இயற்கை. மேலும் இந்த கட்டுரையில் ஆங்கிலத்தில் உள்ளது போல் உரையின் முழுசாரமும் சொல்லப்படவில்லை. எனவே நான் பதிவு செய்யும் முழுவிவரங்களை தாங்கள் வெளியிடவேண்டுகிறேன்.

 8. Avatar
  vedamgopal says:

  Recent quotes of NaMo (ஓம் நமோ நாராயணா- வருவாயா ? செய்வாயா?) –
  • மதசார்பின்மை பற்றி – எல்லா இந்தியர்களுக்கும் பாதுகாப்பு அவசியம். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று கூறுவது ஒரு ஓட்டு வங்கி அரசியலே தவிற வேறு ஒன்றும் இல்லை
  • சமநீதி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சலுகைகள் என்பது எவறுக்கும் கிடையாது. குறைந்த பஷ்ச அரசாங்க நேர் தலையீடும் – மீகுதியான அரசாங்க மேற்பார்வை தான் இன்றைய தேவை.
  (இந்த இரண்டையும் செய்தாலே இந்தியாவின் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்)
  • ந.மோ மந்திரம் – அரசாங்க உழியர்கள், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக, சேவை செய்ய தங்களை அர்பணித்துக் கொள்ளவேண்டுமே தவிற அரசியல் தலைவர்களை தேர்வு செய்வதிலும், அரசாங்கங்கள் அமைப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளகூடாது
  ( கோர்ட் டவாலியிலிருந்து நாட்டின் ஜனாதிபதிவரை எல்லோரும் அரசாங்க ஊழியர்கள். கவர்மெண்ட் சர்வன்ட்- சேவை மனபான்மையுடன் எளிய வாழ்கையை விரும்பி ஏற்பவர்கள் தவிற மற்றவர்கள் இந்த வேலைகளுக்கு வரக்கூடாது என்பதை தான் இவ்வாறு கூறியுள்ளார்)
  • நமது பழங்கால நீதிநெறிகள் நம்மை கைவிடாது நான் என்றுமே அதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன்.
  • நமக்கு இப்பொழுது சட்டங்கள் தேவை இல்லை ஊக்கமான செயல்முறைகளே தேவை. தற்போதைய அரசை தாக்கி – செயல்முறைகளி்ல் விருப்பம் இல்லாததால் அல்லது செய்ய தெரியாததால் சட்டங்களை இயற்றிக்கொண்டு கண்துடைப்பு செய்கிறார்கள்.
  • இந்த ஊரகவேலைவாய்பு உருதி திட்டத்தில் பொதுஜன பங்கும் நாட்டின் வளர்சியை குறிவைத்து இருக்கவேண்டும்
  • நமது செயல்பாடுகள் என்றைக்கும் ஒரு குறிக்கோளை ஒட்டியே இருக்கவேண்டும்.
  • மக்களின் குறைகளை நிவர்திசெய்வது என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கியமான குறிக்கோள் ஆகும். நாடடின் கடைசி ஏழையிலும் ஏழைகூட நமக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.
  • தனிப்பட்டவர்கள் வந்து போவார்கள் ஆனால் உருதியான கொள்கைகளையும் புதுபுது யுக்கதிகளையும் அமைப்புரீதியாக ஆக்கவேண்டும். ஒரு தலைவரின் பெயரிலோ அல்லது ஒரு தனிப்பட்ட மனிதரின் பெயரிலோ நடத்தப்படும் திட்டங்கள் நீண்டநாட்கள் நீடிக்கமுடியாது.
  • நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு பொதுஜன எழுச்சி இன்று தேவை ஆனால் இந்தியாவை ஆள்பவருக்கும் இந்திய பொதுஜனங்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி ஏற்ப்பட்டுள்ளது.
  • குஜராத்பொறுப்பில் நான் இருந்தவரையில் எந்த ஒரு சிக்கல்கள் நிறைந்த காரியமாக இருந்தாலும் முனைப்புடனும் உருதியுடன் செயல்பட்டால் தீர்வை அடையலாம் என்பதை எனது அனுபவத்தில் அறிந்துள்ளேன்.
  • தற்போதய காங்கிரஸ் பொதுஜனங்களிடம் தேசியசிந்தனையை ஊட்டிவளர்க்கவும் ஆர்வத்துடன் தேசியவளர்சியில் பங்குகொள்ள செய்யவும் தவற விட்டு விட்டது.

 9. Avatar
  vedamgopal says:

  • பொதுஜனங்கள் தாங்கள் அரசியல்வாதிகளுக்கு ஐந்தாண்டிற்கு ஒருமுறை ஆள்வதற்கு ஒர் ஒப்பந்தம் (கான்டிராக்ட்) அளித்துள்ளதாக நினைக்கிறார்கள். ஜனநாயகம் என்பது ஜனங்களையும் அரசியல்வாதிகளையும் பிரித்துபார்கமுடியாத ஒரு உறவு முறை என்பதை மறந்துவிடுகிறார்கள்
  • நமது இது இப்படித்தான் என்ற மாறாத மனநிலை ( மையின்ட் செட்) மிகவும் தவறான போக்காகும். நாம் எல்லாவிதமான கஷ்டங்களையும் இது நமக்களித்த முன்னேற்றத்திற்கான ஒரு சந்தர்பம் என்று எண்ணம் வேண்டும்
  • பொறுப்பற்றவர்களின் கையில் முடிவுஎடுக்கும் அதிகாரம் இருப்பதால் ஊழல்கள் பல்கி பெருகுகின்றன. உருதியான கொள்கைகள் அடிப்படையில் அரசு இயங்கவேண்டும் என்பது அத்தியாவச்சிய தேவை.
  • ராணுவ பலம் பொருளாதார பலம் என்ற காலங்கள் முடிந்துவிட்டன. 21 ஆம் நூற்றாண்டு ஆழ்த அறிவாற்றல் பலம் உள்ளவர்களிடம் உள்ளது. சரித்திர சான்றுகள் அறிவாற்றல் பலம் பொற்றவர்கள் இந்தியர்கள் என்பதை என்றுமே நிறுபித்து வந்திருக்கிறது.
  • கழிவுகளை அப்புறப்படுத்துவம் மறு சுழர்ச்சி செய்வதும் சூரிய சக்திளைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கும் காற்றில் மாசுகளை குறைப்பதற்கும் இதை அமைப்பு ரீதியாக மாற்றவேண்டும்.
  • இந்திய ரயில் துறையை தனியார் மயமாக்கவேண்டும்.
  • நமது எல்லா ராணுதேவைக்கான வெடிமருந்துகள் இயந்திரங்கள் உபகரணங்களை நாம் உள்நாட்டிலேயே தயார் செய்யவேண்டும். இவற்றை இறக்குமதி செய்கின்ற நிலைமாறி நாம் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறவேண்டும்.

 10. Avatar
  paramasivam says:

  Without providing easy means of writing in Tamil by the magazine itself like that provided in Dinamani,Viduthalai etc,banning comments in English is not a wise decision.Admn should reconsider its decision.If it is not done,it confirms the opinion of many that Thinnai is there for projecting only Hinduthva.

 11. Avatar
  paramasivam says:

  Modi has been given a “halo” behind his head by vested interests.Even today,11 lakhs households in Gujarat are not having any source of electric power.But Modi earned profit by selling “surplus”power to neighbouring states.10 lakhs people are unemployed.It has the highest percentage of children”s death due to malnutrition.Giving land,power at concessional rates to big industries and waiving taxes for them is not development.There is no inclusive growth and distributive justice in Gujarat.While discounting hero worship in other parties,Modi”s admirers call his doctrine as Namo Narayana Mandiram.

  1. Avatar
   paandiyan says:

   //But Modi earned profit //

   மிச்ச எல்லாம் உண்மைதான்பா… !!!!!??????

 12. Avatar
  IIM Ganapathi Raman says:

  மோடியின் ஆசைகள் முதலாளித்துவ ஆசைகள்.

  மோடியில் பேச்சை நன்கு கூர்ந்து பாருங்கள். முதலாளிகளுக்கான இந்தியாவை உருவாகக வேண்டும்.
  முதலாளிகள் நன்கு வாழும்போதுதான் தொழிலாளிகள் வாழமுடியும். அதாவது, முதலாளி-தொழிலாளி. பணக்காரன் – ஏழை. முன்னவனுக்கு மட்டுமே வசதியான இந்தியாவை மோடி உருவாக்குவார்.

  அவை நிறைவேற இந்தியா ஒரு குஜராத்தாக அதாவது மார்வாடிகள் நாடாக மாற வேண்டும்.
  இந்தியாவின் பெரிய முதலாளிகள் அவரை பிரதமராக்க விழைகிறார்கள்.
  அதற்கு பிஜேபியிலேயே எதிர்ப்பு.
  ஆர் எஸ் எஸ்ஸும், விஷவ ஹிந்து பரிஷத்தும் மோடியை ஆதரிப்பதன் காரணம்,
  முதலாளிகள் இந்துக்கள். அவர்கள் இந்துமதத்துக்கு பொருளாதாரத்தால் உதவுவார்கள்.
  பணம் இருந்தால்தான் இந்து மதம் இருக்கும். எனவே முதலாளித்துவததை ஆதரிக்கும்
  ஒருவர் பிரதமரானால் இந்து இயக்கங்களுக்கும் இந்துத்வாவினருக்கும் வசதி.

  கும்பமேளாவில் சாமியார்கள் நிர்வாணமாக ஊர்வலம் போவார்கள்.
  ரிஷிகள் ஏழைகள்; சித்தர்கள் அனைத்தையும் துறந்தவர்கள். பத்ரகிரியாரின் திருவோட்டைப் பட்டணத்தார் நக்கலடிக்க – இதைக்கூட இவனால் விட முடியவில்லை பாருங்கள் என்பதுதான் அக்கிண்டல் – பத்ரகிரியார்அதை விட்டெறிய அது அவரின் நாயின் மேல் பட்டு அந்நாய் மரித்தது. (அந்த நாயையும் பட்டணத்தார் ‘ஒரு பாசம்’ என்று நக்கலடித்தார். எனவே இரண்டையும் இழந்தார் பத்ரகிரியார். Thereby, both showed to the world the last word in renunciation.

  Oh! they are of old Hindu religion a thousand years ago. Today, it helps only to make a பூச்சு வேலை செய்யவும்
  மட்டுமே உதவும்.

  அன்று பழனி முருகன் ஆண்டிக்கோலத்தில் வழிபடப்பட்டான். இன்று எங்கு பார்த்தாலும் இராஜ உருவத்தில்தான்.
  முதலில் எனக்குத் தெரியவில்லை. இது யார்? என வினவ, ஒருவர் சொன்னார்: “தெரியலையா நோக்கு. இதுதான் பழநி முருகன்!”

  பழனி முருகன் என்றாலே ஆண்டிதான். ஆனால் இன்று அக்கோலமே அசிங்கமாக விரட்டப்படுகின்றது.
  ஆண்டிகளை இன்றைய இந்துக்கள் விரும்புவதில்லை. அதையேன் கேட்கிறீர்கள் ? சாமியார்கள் அந்நாளில் பிச்சையெடுத்து வாழ்ந்தார். இன்னாளில் ஏசி ரூமில் இருந்து கொண்டு தர்சனம் அருளுகிறார். ஆனால் இவரைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். எப்படி ஸ்கோடா காரில் வந்திறங்கி ஒரு மார்லோ சிகரெட்டை எடுத்து பிடிக்கும் வக்கீலை பெரிய வக்கீலாக நினைத்து கட்சிக்காரகள் ஓடுவருவதைப்போல.

  போனவாரம் தினமலர் ஆன்மிக மலரில் ஒருவர் கேள்வி: பழனி முருகனை ஆண்டிக்கோலத்தில் வழிபடவேண்டுமா அல்லது இராஜ கோலத்திலா?

  இவரின் ஐயத்தைப்பாருங்கள்? வியப்பாக இருக்கிறதல்லவா? ஏன்? பழநி என்றாலே ஆண்டி என்று இருக்கும்போது எப்படி இந்த ஐயம் வந்தது? காரணம் பணம். அதைப்பெருக்க ஆண்டிக்கோலம் ஒரு அபச்சாரம். பட்டாபி இராமனைத்தான் வீட்டில் வைக்கவேண்டும். காடேகுபவனை அன்று என்றால் அங்கே மங்கலம்-அமங்கலம் சமாச்சாரத்தை ஏற்க காரணம் இரண்டுமே அந்த – வில்லாதி வில்லனின் (கர்ட்ஸி: ஜெயபாரதன்) – வாழ்க்கையில் இருக்கின்றன. பழநியிடம் இருப்பது இல்லாமை என்னும் ஆண்டித்தன ஒன்றேதானே. அதைக்கண்டு ஓடக்காரணம் இந்துக்களுக்கு மோடியில் மீது கவர்ச்சி வந்ததால். அதாவது குஜராத் பிராண்டு.

  அந்த பிராண்டு ஏழைகளிடம் இன்று ரீச்சாக மறுக்கிறது. மற்ற மதங்கள் அவர்களை அள்ளிக்கொண்டு
  போகின்றன.

  கிராமத்து இந்துமதத்துக்கும் மோடி போன்றவர்களுக்கும் தொடர்பில்லை.

  மோடி வந்தால் உயர்ஜாதி இந்து மதம் வாழும். எனவே மோடியை ஆதரிப்போம்.

 13. Avatar
  paandiyan says:

  கம்முயுனிசம் பேசி கோதுமை பிச்சை மட்டும் இல்லை இன்னும் எதோ எதோ முதலாளித்துவ நாட்டிடம் கேட்டால் அதை தான் கிராமப்புற ஹிந்து விரும்புவான் போல. கட்டுரை, அதில் உள்ள விஷயம் , மோடி 3 முறை தேர்ந்து எடுக்கப்பட்ட விதம் இது எல்லாம் ஆராய முற்றபட்டால் தலைவலி. பேசாமல் மோடி டு முருகன் ஊவமையில் அப்பா எல்லாம் சரி என்று ஒரு என்னத்தை வளர்த்துகொள்வோம். இப்படிப்பட்ட அனலிசிஸ் இருக்கும்வரை மோடி க்கு வேறு எந்த கஷ்டம் இல்லை என்றுதான் தோன்றுகின்றது . அதுசரி காட்டு தெய்வம் , கருப்பசாமி போன்றவர்களுக்கு ராகுல் விஞ்ச வந்தால் ஆபத்து இருக்குமா ??

 14. Avatar
  IIM Ganapathi Raman says:

  கருப்பசாமி உயர்ஜாதி இந்துக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களும் கருப்பசாமியைக் கவனிப்பதில்லை.

  ஆக, மோடி என்றால் கருப்பசாமி, மாடசாமி, இசக்கி, மாரி என்றெல்லாம் வருதில்லை.

  எனவே பாண்டியன் மகிழ்ச்சியாக வாழலாம் மோடி காப்பாற்றுவார் அவரையும் அவர் ஆட்களையும். தங்களைக் காப்பாற்றுவார் என்றுதானே மோடியில் பின்னால் ஓடுகிறார்கள் ?

  ‘அண்ணே காட்டு வழிதனிலே கள்ளர் பயமிருந்தால் ?…
  எங்கள் வீட்டுக்குலதெய்வம் வீர்ம்மை காக்குமடா!

  நிறுத்துவண்டியென்றே கள்ளர் நெருங்கிக்கேட்கையிலே ?…
  எங்கள் கறுத்த மாரியின் பேர் சொன்னால்
  காலனும் அஞ்சுமடா”

  ஆக, பாண்டியன்! கறுத்த மாரி ஏழைகளைக் காக்கட்டும்.

  பெருத்த மோடி உங்களைக் காக்கட்டும் அதாவது பணக்காரர்களை.

  (என் பின்னூட்டம் கட்டுரையை ஒட்டியதன்று; வேதம் கோபாலின் மோடிப்பேச்சின் உரையை வைத்தே)

 15. Avatar
  paandiyan says:

  //அவரையும் அவர் ஆட்களையும். தங்களைக் காப்பாற்றுவார் //
  அது சரிதான் . குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று போயி எல்லாம் இன்று + ஆகி இருக்க அன்னையும், விஞ்ச்ம் இன்றும் நுறு வருடம் உங்களுக்கு தேவைதான.. இல்லையா ? இல்லை ஸ்பீட போயி முடித்துவிடுவீர்கள. ஹெலிகாப்ட்டர் விபத்து இல்லை என்றால் பக்தத்து மாநிலம் இன்று அந்த நிலையை எட்டி இருக்கும் .. இல்லையா ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *