கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…

author
9
0 minutes, 45 seconds Read
This entry is part 10 of 31 in the series 31 மார்ச் 2013

 

ராஜேந்திரன்

 

 

அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்” பின்னூட்டத்தில் பின்வருமாறு சொன்னது மனதை இன்னும் அரிக்கிறது..

March 28, 2013 at 8:02 am

ஈழத் தமிழர்களுக்காக தமிழக மாணவர்களும் மாணவிகளும் கொதித்து எழுந்து போராடுகின்றனர். அவர்கள் உண்மையில் தமிழ் இன உணர்வால் போராடினால் அதை நான் பாராட்டுகிறேன். தமிழ் நாட்டு மாணவர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் அபிமானிகளே. இதற்கு நாம் ஏதும் செய்ய முடியாது. அவரவரின் அரசியல் தலைவரின் வழிகாட்டுதலின்படியே அவர்கள் செயல் படுவார்கள்.

ஆனால் அத்தைகைய அரசியல் கட்சிகளின் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டவர்களாக அவர்கள் இப்போது செயல்பட்டால் அது பாராட்டுதற்குரியது.

இந்தச் சூழலில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பற்றி ஒரு சோகமான உண்மையை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்!

மலேசியா, சிங்கப்பூரில் நான் கண்டவரையில் ஈழத் தமிழர்கள் மற்ற தமிழர்களுடன் சேர்ந்து ” நாம் தமிழர் ” என்று காட்டிக் கொள்வதில்லை. அவர்கள் தனியாகவே ஈழத் தமிழர் என்று தனியேதான் இயங்கி வருகின்றனர். அவர்களுக்கென்று தனியாக CEYLON TAMILS ASSOCIATION அல்லது SRI LANKA TAMILS ASSOCIATION என்றுதான் வைத்துள்ளனர். இவர்கள் மற்ற தமிழர்களை ” கூலித் தமிழர்கள் ” என்றும் ” எஸ்டேட் தமிழர் ” என்றும் மட்டமாகத்தான் பார்க்கின்றனர்.

இதற்குக் காரணம் இவர்கள் இந்த நாடுகளுக்கு ஆங்கிலேயர்களால் WHITE COLLAR JOBS செய்ய கொடுவரப் பட்டவர்கள்.

ஆனால் தமிழ் நாட்டிலிருந்து தமிழர்கள் கூலி வேலைக்குதான் கொண்டு வரப் பட்டுள்ளனர்! இதனால் தான் இந்த அவல நிலை இன்றும்!..

இது மலேசியா சிங்கபூர் தமிழர்கள் நிலை! மற்ற நாடுகள் பற்றி எனக்கு தெரியாது!…டாக்டர் ஜி.ஜான்சன்.

இதைப் படித்த பின் எத்தனை மாணவர்கள், ஜாப்னா தமிழர்களின் மனநிலை பற்றியும், அவர்களின் எதேச்சிகார மனப்போக்கு தான் இன்றைக்கு இந்த நிலைக்கு அவர்கள் வந்தார்கள் என்பதையும் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை…

ஆனால், டாக்டர் ஜான்சனின் கருத்தைப் புறந்தள்ள முடியாது , ஏனெனில் அதில் அரசியல் இல்லை.

நாளையே ஒரு ஜாப்னா தமிழர் வைத்தியத்திற்காக அவரிடம் போனால், மனப்பூர்வமான சிகிச்சை தருவார்.

அப்படிப்பட்டவரின் கருத்து தொடர்பாக சில கேள்விகள் –

மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக “ஏதோ” நியூஸ் வந்ததே..

அதற்கு இந்த ஜாப்னா தமிழர்களோ இல்லை கொடி பிடிக்கும் தமிழக கும்பலோ என்ன செய்தார்கள்…?

ஒரு மாணவன் பேட்டி கொடுக்கிறான், விகடனுக்கு- “நாங்கள் கல்லூரி பீஸுக்கோ, வேலைக்கோ போராடவில்லை.. தமிழ் இனம் காக்கவே போராடுகிறோம்..”

பாருங்கள் என்னே அறிவு..

இவனது கைக்குள் இருக்கும் பிரச்சனைக்கு, இவனுக்கும் இவன் தலைமுறைக்கும், இவன் இனத்திற்கும் உபயோகமாயிருக்கும்,

இலவச கல்வி

துட்டுக்கு பட்டம்

கொள்ளையர்கள் கூடாரமாகப் போன கல்விக்கூடங்கள்

சாராயக்காரர்களின் குவார்ட்டர் வசூலில் முளைத்த பள்ளிகள்

எம்ஜிஆரிடம் / கருணாநிதியிடம் அண்டிப் பிழைத்து, நம்மை ஆண்டியாக்கி அவர்கள் கல்விப் பேரரசுகளாகியவர்களின் பல்கலைக் கழகங்கள் தொடங்க வந்த பணத்தின் வழி கேட்டுப் போராட்டம்..

அது எப்படி மந்திரியும், மந்திரி பினாமியும் மட்டும் கல்வித்தாளளர்கள் ஆக முடிகிறது என்ற போராட்டம்..

மேட்டுக்குடிக்கு ஏர்போட்டில் குடிக்க வசதி

ஏழைக்கு பஸ் நிறுத்தத்தில் டாஸ்மாக் வசதி என்ற அரசின் லட்சிய கொள்ளையை கேட்கப் போராட்டம்..

“பிஸ்லரி” “”பிசினாரி” என்று நூற்றுக்கணக்கான பெயர்களுடன் , கோடி கணக்கான பாட்டில்களுள் அடைக்கப்பட்டு, கத்தாழம் காட்டு வழி பெட்டிக் கடை வரையில் வந்துள்ள “மினரல்”வாட்டர்கள், ஏன் முறைப்படுத்தப்பட்டு

குடி நீர் குழாய்கள் மூலமாக வீடுகளுக்கு கிடைக்கவில்லை எனும் போராட்டம்…

கறுப்புப் பணத்தில் ஓபனாக வாங்கப்படும் தங்கம், நிலம், பற்றிய போராட்டம்..

சேல்ஸ் டாக்ஸ் ஆபிசில், ஆர் டி ஓ ஆபிசில் , ரெவின்யூவில், போலீசில், நீதிமன்றத்தில் என எங்கும் வியாபிக் கிடக்கும் லஞ்சத்தின் மென்னியை திருகும் போராட்டம்…

அரசியல் திருடர்களின் பிரம்மாண்டமான பங்களா, தோட்டம் , பண்ணைவீடு, உயர்ரக கார்கள் ஆகியன வந்த வழி கேட்டுப் போராட்டம்…

ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்ந்து குஷியுடன் இருக்கும் குஜால் நபர்களின் வீட்டு வாசல் போராட்டம்..

ஐ டி கட்டாத சினிமாக்காரன் வீட்டு வாசல் முன் போராட்டம்..

தமிழ் இனத்தின் அடையாளமாய் வேட்டியுடன் பை ஸ்டார் ஓட்டல் போனால், விரட்டியடிக்கப்படுவது தடுக்கும் போராட்டம்..

வீடு பக்கத்து பள்ளியில் கட்டாயம் அட்மிஷன் எனும் போராட்டம்..

சுரண்டல் லாட்டரி அதிபருக்கு கட்சியில் மிகப்பெரிய பதவி கொடுத்து, புதிய தலைமுறை என்று சொல்லும் பேடித்தனத்திற்கு எதிரான போராட்டம்..

ராஜ்பாக்‌ஷேயிடம் பல் இளித்து பரிசு பெற்று பின் இங்கு வந்து சோனியா வாழ்க என்று கத்தி விட்டு, பின் சோனியாவை தாக்குபவர்களை கண்டிக்கும் போராட்டம்..

புத்த பிக்குகளை தாக்கிய கோழைத்தன ரவுடிகளை பிடித்து குண்டாசில் போடாத அரசுக்கெதிரான போராட்டம்…

என எத்தனையோ போராட்டம் இருக்க…

தன இனக்குழந்தைகளை விளையாட வேண்டிய வயதில், துப்பாக்கி கொடுத்து பலியாக்கிய ஒருவர், தனது பிள்ளையை மட்டும் சொகுசுடன் நீச்சல் குளத்தில் வளர்த்தெடுத்தார்…

கொத்துக் கொத்தாய் ஏழைகளாயும் நிர்கதியற்றவர்களாயும் இருந்து முள்வேலியில் மாட்டிக் கொண்டு அழுது அழுது இறந்த குழந்தைகளுக்கு போராடாத கும்பல்,

4 வருடம் கழித்து, திடீரென்று போராடுகிறது என்றால்,

அதிலும், தாக்குதல், சோனியா, கருணாநிதி இருவரையும் மையம் கொண்டே இருக்கிறது என்றால்,

ஒரே காரணம், அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற.. ஒருவர் செய்யும் தந்திரம் அன்றி வேறென்ன..?

ஆனால், இந்தப் பிரச்சனையால் 0.3 சதவிகதம் ஓட்டு வேண்டுமானால் மாறலாம்.

இப்பொழுது மாணவர்கள் பலர் இணையத்தின் புண்ணியத்தால் நடப்பது பற்றி அறிந்து தெளிவு பெற ஆரம்பித்து விட்டார்கள்,

மாணவர் கூட்டமைப்பு :ஜெ க்கு நன்றி என்று வீதியெங்கும் போஸ்டர் ஒட்டுகிறது.

ஆம், தெருமுனையில் நீங்கள் முஷ்டி மடக்கும் கோஷம் போட்டவுடன் சட்டங்கள் மாற்றி எழுதப்படப் போகின்றன… -என்று நினைத்தால்,

உங்களில் ஒரு காளிமுத்துவோ, துரைமுருகனோ வரலாம்…

ஆனால், மற்ற எல்லோரும் கீழிருப்பது போல் தான் நாளை எழுத வேண்டும்.

 

 

  • Needhidevan says:

March 29, 2013 at 3:58 am

I as student. Was witness to 1965 anti Hindi agitation and personally know how the future of thousands of students ruined beyond repair except a handful who dabbled in politics. The biggest beneficiary at that time was DMK And by corollary karunas and his henchmen. Now looking at the faces of ” students ” in visual media and I am yet to see a face of a forward community student with tell tale signs of brightness in academics. Most of them look like excuses. After keeping passive in 2009 , now crying wolf when the horses have bolted is futile.there are really self serving forces behind these agitations . It hardly causes a ripple in rest of India.

நன்றி நவநீதன், உண்மையைப் பகிர்ந்ததற்கு..

”மொழி எங்கள் இடுப்பில் இருக்கும் வேட்டி” என்று பேசியவர்களிடம்,

30 வருடம் மேல் ஆட்சி இருந்தது.

அவர்களிடம் ஐ டி துறை இருந்தது.

தமிழ் தட்டச்சு மேம்பட்டதா..?

தமிழுடன் செல்போன்கள் கீ வந்துள்ளதா..?

திருவள்ளுவரையும், நாலடியாரையும் தாண்டி,

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஹெமிஸ்ட்ரி, என்ற படிப்புகளுக்கான புத்தகங்கள் ஆழமாய் தமிழில் வந்ததுவா..?

நீதிமன்றங்கள் வழக்காடு, இன்னும் “யுவர் ஆனர்” என்பதில் தானே இருக்கிறது.

புளூ பிலிம் தரத்தில் படமெடுத்து, தமிழில் “நீலம்” என்று பெயர் வைத்தால் உடனே வரி விலக்கும் பணமுடிப்பும் தரப்பட்டதே..

“நான் ரொம்ப நல்லா இருக்கேன், எனக்கு தமிழ் பிடிக்குது…” என்னும் சிவந்த வட இந்திய பெண்களிடம் போட்டி போட்டி ஜோடி சேரும்

இனமான தமிழ்ப் படைப்பாளிகள்

தமிழ் கலர், தமிழ் ஜாடையில் எத்துனை பெண்களை நடிக்க வைத்தார்கள்.

பரதேசி தமிழச்சியாய் ஒரு வெள்ளைப் பெண்ணிற்கு கறுப்பு தடவி கருங்குரங்கு மாதிரி தானே காண்பித்தார்கள்..?

ஏன்..?

சலாம் குலாமு என்று வழக்குகளில் இருந்து தம்மை காத்துக் கொள்ள சோனியா வீட்டில் பல்டி குட்டிக்கரணம் அடித்து விட்டு,

தேர்தலில் ஓட்டு கிடைக்காதோ எனும் போது, மத்திய அரசை சாடுதல் எந்த ரகம்..?

கேட்டால், அரசியல் சாணக்கியராம்..

எது சாணக்கியம்..?

பயந்து நடுங்குவதா..?

திமுகவின் தூண் முரசொலி மாறன் குடும்பத்து பிளைட், தினம் தினம் கொழும்பு பறக்கிறது….

அது மட்டும் சரி…

ஆனால், சாமான்யன் யாரும் கொழும்புடன் வியாபார தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாதாம்..?

என்ன நடக்குது இந்த நாட்டில்..?

இந்தியா நம் தேசம்..

நமக்கு ஆயிரம் பிணக்கு இருக்கலாம்,

ராஜாஜி, காமராஜர், ஆர்.வி, சி.எஸ், டி டி கே, மூப்பனார், சுப்ரமணிய சுவாமி, என்று கொடி கட்டி டில்லியில் இருந்த தமிழர்கள் உண்டு. இன்றும் பல தமிழர்கள் இருக்கிறார்கள்.

நாம் திரள வேண்டும். நாம் இந்தியத் தமிழர்கள் என்று உணர்த்த வேண்டும். – பேரணி போய் அல்ல மௌனமாய், சாதித்து.

ஆனால், டில்லி போய் கடலில் குழி தோண்டினால், தோண்டாமலே மணல் சரிவு என்று கொள்ளையடிக்கலாம் என்று வாழ்ந்ததும்,

2ஜி என்று அடித்த அடியில் தானே,

நம் பொழைப்பு , சீ… சீ.. என்றானது..

மக்களின் கோபத்தை,

மது பாட்டிலில் அடைக்கலாம்

மதத்தில் அடைக்கலாம்

என்பது தாண்டி,

தமிழ்நாட்டு மக்களின் கோபம்,

2 ஜீ காரணமாகவும்

சசிகலா கும்பல் காரணமாகவும்

இரட்டைக்குழல் துப்ப்பாக்கியாகி,

நம்மைத் துளைத்து விடலாம் என்ற பயத்தால் –

இரண்டு கழகங்களும் கண்ட ,

மது, மதம் தாண்டிய இன்னொரு விஷயமே,

ஈழப் பிரச்சனை.

ஏதோ கடையில் இலந்தப்பழம் என்பது போல், ஆள் ஆளுக்க்கு பேசுகிறார்கள்.

தமிழன் என்ற உணர்வு வேண்டும் என்கிறார்கள்..

அது என்னய்யா தமிழன் உணர்வு..

அப்படியெனில்,

நீங்கள் போட்டிருக்கு சட்டை சேலையில் வடக்கத்தி, தெக்கத்தி உணர்வு உள்ளது..

ஓட்டும் வண்டியில் ஜப்பான் உணர்வு இருக்கிறது,,

வண்டியில் போடும் பெட்ரோலில் அரேபிய உணர்வு இருக்கிறது..

வயிறாரா உண்ணும் பீட்சாவில் இத்தாலிய உணர்வு இருக்கிறது..

அமெரிக்கா ஒழிக என்று எழுதும் இணையத்திலும் பேஸ்புக்கிலும் அமெரிக்க உணர்வு இருக்கிறது…

கட்டும் பாலத்தில் ஜெர்மன் உணர்வு

மாத்திரைகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, உணர்வுகள் இருக்கிறது..

மருத்துவ மனைக்கு நீங்கள் போனால், அதில் இனி தமிழ் உணர்வு கேளுங்கள்..

மவனே … நீ செத்த…

மருத்துவத் துறையிலும் , விஞ்ஞானத்திலும் இன்று நீ சைபர்… மச்சான்..

அதெல்லாம் கூட விட்டு விடலாம்,

சித்தர் முறைப்படி வைத்தியம் பார்க்கலாம் இனி , தமிழ் உணர்வுடன்..

பலருக்கும் அமெரிக்கா , “சீ.. சீ… இந்தப் பழம் புளிக்கும்” கதை தான்..

அமெரிக்கா அடுத்த நாட்டை ஆக்கிரமிக்கறது… வெரி பேட் பாய் என்னும் தமிழ் உணர்வாளர்களே…

அப்புறம், ஏன்

கங்கை கொண்டான்

கடாரம் வென்றான்

என்ற பேத்தல்..

உங்களின் சில மன்னர்கள், சிறு தொழிலாய் செய்ததை அமெரிக்கா பெருந்தொழிலாய் செய்கிறது என்று கொள்ளலாமே..

திருட்டு டிவிடியில் அமெரிக்கப் படங்களை காப்பியடிக்கும் இந்த தமிழ் உணர்வுள்ள கலைஞர்கள், இனி தமிழ் கதைகளை சீத்தலை சாத்தானரிடம் இருந்து ஆரம்பிக்கலாமே.

அமெரிக்காவை திட்டி விட்டு ஒரு டிக்கெட் ஓசியில் கிடைக்கிறது என்றவுடன்,

அமெரிக்க கான்சுலேட்டில், “நான் அப்படில்லாம் இல்லீங்க..” என்று குழைவது ஏன்..?

செல்போனை தூக்கியெறிங்கய்யா… அதில் கொரியன் உணர்வும், அமெரிக்க உணர்வும் தான் இருக்கிறது..

தமிழ் உணர்வுடன், கையை குவித்து..

“எலேய்….. மகேஷீஷீஷீ….”

என்று கூவ வேண்டியது தானே..

பேரப்பாரு,

மகேஷ்

சுரேஷ

ஷிரையா…

என்னத்த ஷிரையாவோ, சிரைக்கவோ…

இதிலெல்லாம் தமிழ் உணர்வு தமிழர் உணர்வு எதையும் காணோம்..

அதுவும் போக, அடுத்த நாட்டுக்காரனுக்கு நாம்,

தமிழ் உணர்வு என்ற பெயரில்

நகது தேச கட்டமைப்பை அசைத்தால்,

மத உணர்வுடன் இங்கிருந்து பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்வதும்,

இஸ்ரேலுக்காக இங்கு பஸ்ஸை அடித்து நொறுக்குவதும்

சரி என்று தானே ஆகிவிடும்.

அப்புறம்,

பிற மாநிலங்களில்

நாட்டில் வாழும் தமிழர்களை

சுளுக்கெடுக்கனும் என்று தானே பிறருக்குத் தோன்றும்.

உலகமயாக்கப்பட்ட பொருளாதார வாழ்வு முறையில்

சுருங்கி மீண்டும், காட்டுமிராண்டியாக்குவது என்ன சிந்தனையோ..?

அதனால் தானோ,

பெரியார்

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றது.

தீர்க்கத்தரிசி…

தமிழ் என்பது ஒரு மொழி

மொழி என்பது பதிவு, உரையாடல் தாண்டி, ஒரு வரலாறு பதிவும் தான்.

ஆனால், அந்த உரையாடலும் பதிவும் இன்னொரு உலக மொழியில் முடியுமென்றால் இதுவும் எதற்கு..?

அதன் மேல் என்ன வெறி…

உன் மொழியால் , உன் வயிறு நிரம்பவில்லை என்றால், உன் அறிவு ஞானத் தேடலும், வேலை கிடைத்தலும் நடக்கவில்லையென்றால் அது எப்படி இருக்கும்.?

கோழைகள் நாம் என்பதே உண்மை..

அதிலும் உண்மை உணர்ச்சி முட்டாள்கள் என்பதே..

அதனால், தான் ஆளப்பட்டோம்..

அதெல்லாம் விடுங்க…

வீரபாண்டிய கட்டபொம்மன் எனும் சினிமாவில்,

வெள்ளையர்களிடம் மாட்டியாச்சு, இனி தன் இனம் காக்க வேண்டுமானால் தான் சரண்டாகி, தூக்குக் கயிற்றை முத்தமிடுதலே சரி,

என்று தன் இனைத்தை காக்க..

தன்னை எதிரியின் முன் நிறுத்தி..

எங்கே , அவன் கையால் தூக்கிலிடப்பட்டால் உணர்ச்சி வெடித்தலால் தனது இனம் பெரிதாய் சாவைச் சந்திக்கும் என்ற தியாக எண்ணமுடன்,

தானே முன்சென்று தனது கழுத்தில் தானே தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டு

தன் மரணத்திலும் தன் இனம் காத்தானே…

அவன் தலைவன்..

ஒருக்காலும் தன் ஒருவனைக் காக்க தன் இனத்தை எதிரியின் முன் நிறுத்தி தானும் அழிந்து தன் இனைத்தையும் அழிக்கவில்லை அவன்.

இது தான் வரலாறு சொல்லும் பாடம்…

நாம் நமது பலத்தை விட அதிகமாக நமது பலீவனத்தை கருத்தில் கொள்ள வேண்டும் – இது தெரிய அர்த்த சாஸ்திரம் படிக்கத் தேவையில்லை. பகவத் கீதையும் தேவையில்ல்லை. குரானும், பைபிளும் தேவையில்லை..

ஜஸ்ட் காமன் சென்ஸ்.

ராஜீவ் காந்தி நல் எண்ணத்துடன் அனுப்பிய அமைதிப்படையால் விளைந்தது கேடென்றால், பொது சேனல்கள் மூலம்

அவரது மனதைத் தொட்டு பிரதிபலனாக  காரியம் சாதித்திருக்க வேண்டும்.

அதுவிடுத்து, ஒரு மாத்தையா போல, ஒரு துரையப்பா போல, ஒரு அமிர்தலிங்கம் போல அவரையும் சிதறிடித்தால், விஷயம் அது போலவே முடிந்திராது என்பது யோசித்திருக்க வேண்டும்.

அதுவும் போக, 9/11 உலகின் சிந்தனையை பதம் பார்த்தது.

புலம் பெயர்ந்தவர்கள் பலருக்கும், ஊர் அமைதியானால் திரும்ப வேண்டியிருக்கும் என்ற நிலையும் – இலங்கை விஷயத்தில் கலாட்ட தொடருவது ஊக்கிவிக்கப்பட காரணமாக இருக்கலாம் என்கிறார் எனக்கு தெரிந்த ஒருவர்.

ஒன்று யோசிப்போம், ஐ நாவிலும் சரி, இந்திய உளவு அமைப்பிலும் சரி மிக முக்கிய பொறுப்பில் தமிழர்களுடன் தான் இந்திய – அமெரிக்க – இலங்கைப் பிரச்சனை கையாளப்படுகிறது.

ரா ரா என்கிறோமே, அந்த ராவின் இப்பிராந்திய தலைவரே தமிழர் தான்.

இலங்கைப் பிரஜைகளின் கருத்தறியாமல் நாம் மூக்கை நுழைப்பது எப்படி சரியாகும்..

மொழி உணர்வால், ஆம்

இன உணர்வு என்று சொல்லவே முடியாது..

இன உணர்வு என்றால்,

மலையகத்தமிழர்களுக்கு ஜாப்னா தமிழர்கள் எந்த விதத்தில் போராடினார்கள்..?

மலேசிய தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்.?

கரும்புத் தோட்டத்திற்காக பிஜி போன தமிழர்களை , ஜாப்னா தமிழர்கள் சேர்த்துக் கொண்டார்களா..?

சிங்கப்பூரின் கூலித் தமிழர்கள் இவர்களுக்கு கீழ் நிலை தானே…

ஏனென்றால், அவர்கள் எல்லாம் என் ஊரின் தாழ்த்தப்பட்ட பரதேசிகள்..

அவர்களுக்கு கங்காணிகளாய் இருக்கத் தானே இவர்களுக்கு தெரிந்தது…?

உன் தாத்தனும் பூட்டனும், சாஸ்திரி ஒப்பந்தத்தில் ஓட்டாண்டியாய் தமிழகத்திற்கும், இலங்கை மலையகத்தில் இருந்து வந்திருக்கிறானா…?

என் பூட்டன் வந்திருக்கிறான்…

அப்போது இவர்கள் என்ன செய்தார்கள் ..?

இது எத்துனை மாணவர்களுக்குத் தெரியும்..

பாடமும் தெரியாது, வரலாறும் தெரியாது..

ஆனால், கோஷம் போட மட்டும் தெரியும் –

இப்படி இருந்தால் நாளை அரசியல் ஊர்வலம்

இல்லை

நடிகனின் திரைப்படம்

இரண்டுக்கும் திரளும்

பிரியாணி – குவார்ட்டர் தமிழகனாகத் தானே ஆவான் இவன்.

ஏன் திருமா, தனது இனத்தின் தமிழனுக்கு, மலையகத் தமிழனுக்கு போராடலாமே..?

ராஜ்பாக்‌ஷேயை சந்தித்த போது

திருமா –

அடங்க மறுத்து

அத்து மீறியிருக்கலாமே..

அங்கு ஏன் சிரம் தாழ்த்தி வணக்கம்..

மெரினாவில்,

சோனியா வாழ்க

சோனியா வாழ்க

என்று தொண்டை நரம்பு புடைக்க கத்தியபோது தானே..

முள்வேலி நிகழ்வு நடந்தது..

அரசியலில்

முழு ஆளுமையுடன்

பிரபாகரனுக்கு எதிராக நிமிர்ந்த

ஜெ

இன்று , இந்த பிரச்சனையை கிண்டுவது,

சோனியா சேர்க்க மாட்டார் என்று தீர்மானவுடன் தானே..

கருணாநிதி மாதிரி இதில் கேனைத்தனம் யாரும் செய்திருக்க முடியாது

தைரியமாக, சாதாரண இலங்கைத் தமிழர்களுக்கு இந்த பிரச்சனைக்கும் உள்ள வித்தியாசம்,

மலையகத் தமிழர்கள், சாஸ்திரி ஒப்பந்தம் என எல்லாம் விளக்கி ,

என் உயிரினும் மேலான உடன் பிறப்பே என்று எழுதியிருக்கலாமே…

ஆனால், உண்மை,

ஸ்டாலின் தன் உயிரினும் கீழான உடன்பிறப்பை அரசியலில் காலி செய்ய உபயோகித்ததே உண்மை.

ஆக, வகுப்பிற்கு கட் அடிக்க ஆசைப்பட்ட மாண்வர்கள்,

வெளிநாடு போயும் ஒரு குறிப்பிட்ட இனத்தை அறிவால் ஜெயிக்க முடியாத வயிற்றெரிச்சலில் தூண்டிவிடும் கும்பல்-

கருணாநிதியின் உலகத் தமிழர் பட்டத்தை உடைக்கும் எண்ணமுடன் ஜெ-

அழகிரி அரசியல் பலத்தை ஒழிக்க ஸ்டாலின்-

வழக்கம் போல், கடை வியாபாரம் நல்லா நடக்க

தமிழ் உண்ர்வாளர்களால் –

நடக்கும் விஷயம் இது..

ஆனால், தமிழர்கள் புத்திசாலிகள்,

அதானால் தான் விகடன் சர்வே, இப்படியிருக்கு

vikata

 

இந்தக் குட்டிக்கரணம் அடித்தும் தேர்தலில் ஜெக்கு கடுமையான போட்டியே…

தமிழகத்தில் என்ன உணர்வு, மேல் ஜாதி ,மட்டை என்று சொன்னாலும், மோடியின் பெர்பான்மஸே ஜெயிக்கிறது ஓட்டில்

இலங்கை பிரச்சனையில் கவனம் திசைமாறும் என்று நினைத்தது புஸ்வானம். 17% பேரே தினப்பிரச்சனையால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள்.

62% சதவிகிதம் ஜெயின் பிரதமர் கனவு பகல் கனவென்றிருக்கிறார்கள்.

அது சரி, காங் பாஜக தேமுதிக திமுக அதிமுக தாண்டி, இந்த கம்யூனிஸ்ட்கள் பற்றி எதுவும் காணோம்..

நல்ல மனுஷந்தான்யா நல்லகண்ணு…

அவர், ஈழத்தமிழருக்கு கொந்தளிக்கிறார்…

நம்ம கேள்வி, சிம்பிள், அது சரி தோழரே, உங்க சீனா ரஷ்யா எல்லாம் என்ன நிலை.. அவர்களின் எம்பஸி முன் கோஷம் போடலாமே… சொல்லுங்கய்யா பெரியவரே…

ஜெ இனி இந்தப் பிரச்சனையால் ஒன்றும் அரசியல் லாபமில்லை என்று உணர வேண்டும்.

மக்கள் மனதில் இருக்கும் திமுக மீதான கோபம் , கொள்ளையர் கூடாரமாய் அது ஆகிப் போனதே..

அக் கோபம் வெளிப்படுத்தும் வாய்ப்பாய் இந்தப் பிரச்சனை என்பது அவருக்கு தெரிந்தாலும்,

அந்த பேச்சுடன் மேடையேறினால்,

சசிகலா, பெங்களூர் என்று வரும் என்று,

இந்த உணர்ச்சி கொந்தளிப்புக் கொள்ளியை திமுகவை அழிக்க ஜெ எடுத்திருக்கிறார்..

அது தொடர்ந்தால், நிலை மாறும் என்பதை சோ அவர்களாவது ஜெக்கு சொல்ல வேண்டும்.

இந்த ராகுல் உண்மையை உணர வேண்டும். தனது அடிவருடிகளையும் , அடியாட்களையும் திணிக்காமல் சற்றே மரியாதையுள்ள நபர்களை களம் இறக்க வேண்டும்.

மூப்பனாரின் தமாகா சாதித்ததை , ப.சியின் ஜ.பேரவை சாதிக்கவே முடியவில்லை என்பதை உணர்தல் நல்லது.

காங்கிரஸிற்கான வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும். அதற்கு ஈடுபாடு வேண்டும்.

காங் மற்றும் பிஜேபியே நாடாளுமன்றத்தில் நாம் ஓட்டு போட வேண்டிய கட்சிகள்.

ஆனால், தகுதியற்ற ஆட்களை அவர்கள் நிற்பாட்டினால், பிற கட்சியில் தகுதியான நபர்கள்,

அதாவது ரவுடிகளாகவோ,

முன்னாள் இந்நாள் கொள்ளையர்களாகவோ,

அவர்தம் வாரிசாகவோ

இல்லாமல் இருந்தால் வாக்களிக்கலாம்.

இல்லாவிட்டால், ஒரு ஓ போட வசதியாக,

“ஓ” பட்டனை மின்னனு வாக்கு எந்திரத்தில் வைப்பதற்க்கு மாணவர்கள் போராடினால்,

மாற்றம் வரும்..

இல்லாவிட்டால்

பத்து பதினைந்து அரியர்ஸுடன்

வாழ்வில் ஏமாற்றம் வரும்.

இந்திய நாடு நம் நாடு

ஆயிரம் உண்டிங்கு ஜாதி

அதில்

அந்நியர் புகுதல் என்ன நியதி..

என் மொழி பேசினாலும்

என் நிறத்தனவானாலும்

எந்நாடு இந்தியா

அதில் சிக்கல் எனில்

சீர் செய்வேன்..

சிறப்பாக்க முயல்வேன்.

வாழ்க இந்தியா..

வளமுடன்.. வலிமையுடன்.

 

 

Series Navigationபரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?கவிதைகள்
author

Similar Posts

9 Comments

  1. Avatar
    Bala says:

    ஒரு பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள் இந்தக் கட்டுரையைச் சுருக்கி எழுதியிருந்தால் படிக்கவும், கருத்துரைக்கவும் எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  2. Avatar
    paandiyan says:

    //மூப்பனாரின் தமாகா சாதித்ததை , ப.சியின் ஜ.பேரவை சாதிக்கவே முடியவில்லை என்பதை உணர்தல் நல்லது.

    //
    எனக்கு 2 MLA நூறு சதவீத வெற்றி என்று சொன்னாற … அந்த வெற்றி எப்படி… ராஜீவ் இருந்தால் கொலையாளிகளை மன்னித்து இருப்பார் என்ற உளறலைவிட இவர் உலரும்போதுதான் நன்றாக சிரிப்பு வருகின்றது

  3. Avatar
    IIM Ganapathi Raman says:

    திண்ணை தனக்கென ஒரு கோட்பாடை வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. தற்போது வந்து கொண்டிருக்கும் கட்டுரைகள் பல கட்டுரை என்ற பெயரையே மாற்றும்படி நீளமாக ஒரு குறுநூல் வடிவில் வருகின்றன.

    இதைத்தொடங்கி வைத்தவர் கிருஸ்ணகுமார். இப்போது இராசேந்திரனும் பின்னடக்கிறார்.

    நீண்ட கட்டுரைகளைப்பார்த்தவுடன் பலர் அதைப் படிக்காமல் வேறு கட்டுரைக்குப் போய்விடுவார்கள்.

    நீளத்தைக்குறையுங்கள். திண்ணை எடிட் பண்ணிப்போடலாம். அல்லது எழுத்தாளர்களுக்கு கட்டுரை என்ன வரம்புக்குள் வரவேண்டுமென தெரிவித்து, அவ்வரம்பை மீறியவை திண்ணை ஏற்காது எனச்சொல்லி விடலாம்.

    மேலே உள்ள கட்டுரை ரொம்ப நீளம்.

    1. Avatar
      ராஜேந்திரன் says:

      கிறிஸ்துவரான ஜெகத் காஸ்பர் தன்னை தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் போது, தமிழ்பண்பாட்டு வழியில் மனைவியை நடத்தாத பாடலாசிரியர். அப்துல் ரஹ்மான் தன்னை தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் போது, இந்தியாவின் அரசியலில் முக்கிய முடிவுகளை ஆதிக்கம் செலுத்தக் கூடிய, மதுரையை பெற்றோரில் ஒருவரின் பூர்வீகமாகக் கொண்ட சுப்ரமணிய சாமி சொல்வதில் என்ன குறை. அமெரிக்க நல்லுறவுடன், முஸ்லீம் மருமகன் கொண்ட அவர் நல்லவரா..? இல்லை தீவிரவாதிகளுக்கு வால் பிடிக்கும் பிற தலைவர்கள் எனும் சொல்லிக் கொள்ளும் தறுதலைகள் நல்லவரா..? முதலில் சுப்ரமணியசாமி அளவிற்கு அவை மரியாதை பெறுங்கள்.. பின் பார்ப்போம். தமிழர்கள் என்றாலே ரவுடிகள், கொள்ளையர் எனும் நினைப்பு தான் இன்று டில்லியில்… அதை மாற்றும் முக்கிய அடையாளம் சுப்ரமண்யசாமி.. என்பதே உண்மை

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \கட்டுரை என்ற பெயரையே மாற்றும்படி நீளமாக ஒரு குறுநூல் வடிவில் வருகின்றன.
    இதைத்தொடங்கி வைத்தவர் கிருஸ்ணகுமார். இப்போது இராசேந்திரனும் பின்னடக்கிறார்.\

    ம்…… ஐயன்மீர் நான் இந்த தளத்தில் சமர்ப்பித்தது எனது முதல் முயற்சி.

    பின்னும் சொல்லப்படும் விஷயத்தில் உண்மை உள்ளது.

    எனது அடுத்த வ்யாசத்தில் இதை கவனத்தில் கொள்வேன்.

  5. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீ ராஜேந்திரன்,

    பெரும்பாலும் கருத்துச் சமநிலை சார்ந்துள்ள தங்கள் கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.

    கடைசியில் தாங்கள் எழுதியுள்ள கருத்தாழமான வரிகளின் ஆதாரத்தில் அதற்கு முன் சொன்ன விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன என அறிகிறேன்.

    தமிழ் இன உணர்வு, தமிழ் மொழி உணர்வு, பல அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் இந்த மூன்று விஷயத்தை விசாரித்துள்ளீர்கள். அன்பர் ஜான்சன், நீதிதேவன் (நவநீதன் அன்று) போன்றோரின் உத்தரங்களை வ்யாஜமாக வைத்து .

    \ஆனால், டாக்டர் ஜான்சனின் கருத்தைப் புறந்தள்ள முடியாது , ஏனெனில் அதில் அரசியல் இல்லை.\

    வழிமொழிகிறேன். கூடவே, சில சமயம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவரது கருத்துக்களில் காணப்படும் கருத்து நேர்மையையும் நான் அவதானித்து வருகிறேன்.

    முரண்பாடுகளை செம்மையாக விளாசியுள்ளீர்கள்.

    தங்களுடைய மற்றும் ஸ்ரீ புனைப்பெயரில் அவர்களுடைய வ்யாசங்களில் படைக்கும் விதத்தில் ஒற்றுமையைக் காண்கிறேன். சிறிய கருத்தாழமிக்க வாசகங்கள் வ்யாசத்திற்கு மெருகேற்றுகிறது.

    இன்னும் குறைவான வாசகங்களால் இதே கருத்துக்களை இன்னமும் ஆழமாகச் சொல்லியிருக்க முடியும் எனத்தோன்றுகிறது.

  6. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு ராஜேந்திரன் அவர்களுக்கு வணக்கம். என்னுடைய பின்னூட்டத்தை மேற்கோள் காட்டி ஒரு நீண்ட கட்டுரையைப் படைத்துள்ள தங்களைப் பாராட்டுகிறேன்.

    நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்தும் அர்த்தமுடையவைதான். இவற்றுக்கு யாராலும் சரியான பதில் தர இயலாது.

    ஈழத் தமிழர்களுக்காக போராடும் தமிழ் நாட்டுத் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை.அங்கு இறுதிப் போர் நடந்தபோது தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு அந்த போரை உடன் நிறுத்த மத்திய அரசிடம் ஒன்றுபட்டவர்களாக முறையிடவில்லை. டெல்லி பாராளுமன்ற அனைத்து தமிழ்ப பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை இராஜினாமா செய்யவில்லை. அப்போதும் அரசியல் கட்சிகளின் வேற்றுமைகளே மேலோங்கியது.

    ஆனால் எல்லாம் முடிந்தபின் எல்லா கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்காகே வாய் கிழியப் பேசுவது பைத்தியத்தனமானது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போலானது. தமிழக மக்களை மேலும் முட்டாள்கள் ஆக்குவதாகும்!

    தமிழ் ஈழ மக்களுக்கு இனிமேலும் உண்மையாக ஏதேனும் செய்ய வேண்டுமெனில் தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசிடமே முறையிட வேண்டியுள்ளது. இதில் தமிழக அரசால் ஒன்றுமே செய்ய இயலாது. உதாரணமாக தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படையினரை தமிழக போலீசால் தாக்க முடியுமா? முடியவே முடியாது! அதற்கு மத்திய அரசிடம்தான் கெஞ்சவேண்டும்!

    தமிழ் நாட்டில் நடைபெறும் போராட்டம் எவ்வாறு மத்திய அரசை அசைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    ஆகவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு டில்லியுடன் போராடி, இந்திய அரசை தமிழ் ஈழம் எனும் தமிழ் தாய் நாடு ஒன்றை , பங்ளா தேஷ் பாணியில் பெற முயல்வதே புத்திசாலித் தனம். அதை விடுத்தது தனித் தனியாக இப்படி போராடுவது விழலுக்கு இரைத்த நீர்தான்! அவ்வளவும் வீண்தான்!…டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *