ராஜேந்திரன்
இன்று இலங்கையில் மாட்டிக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களின் அல்லல்களுக்காக குரல் கொடுக்கப்படுவது மிகச்சரியே…
உலகின் எந்தப் பகுதியெனினும், சாமான்ய மக்களுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால், அதே நேரத்தில் மாணவர்களை தங்களது இயக்க நோக்கங்களுக்காக உபயோகப்படுத்துவதும் நடக்கிறது.
இதில் பேராபத்தாக நான் நினைப்பது –
அமெரிக்காவில் இருந்து வரும் அர்த்த ராத்திரி போன்கள்.
கண்ணைக் கசக்கி,
Good evening… no no good morning sir.. – என்றால்,
”என்னது ,வணக்கம் என்று சொல்லுங்கள்.
தமிழன் பண்பாடு அது.
அமெரிக்கா வந்தும் நாங்கள் வணக்கம் என்று தான் சொல்கிறோம்.” -என்பர்
( வணக்கம் என்று சொல்லாமல் விட்டதால், அரை மணி நேரம் காச்சி எடுத்த புண்ணியவான் இப்போது அமெரிக்காவில் $100,000 வாங்கிக்கொண்டு, பொழுதுபோகாமல் , தமிழ்நாட்டில் தமிழ்மொழி கல்வி வேண்டும் என்று இணையத்தில் எழுதிக்குவிக்கிறார் )
வாரக் கடைசியில் பிள்ளைகளை, தமிழ் வகுப்பில் போட்டிருக்கிறோம் ,என்பார்கள்.
பின், கூடங்குளம், ஈழப் பிரச்சனை என்று ஆரம்பித்து இவனை உசுப்பேத்தி விடுவார்கள்.
நம்மள மாதிரி உணர்ச்சி பொட்டலம் கரெக்டா இவனுகள்ட்ட மாட்டும்.
நமக்கோ வீட்டில், அமெரிக்காவில இருந்து இரண்டு மணி நேரம் பேசுறாங்க என்று பெருமை….
இந்தப் போதை தான் இன்று அதிக நாசம் செய்கிறது.
தமிழ்நாட்டில் இருப்போரை தமிழில் படிக்கச் சொல்லும் இவர் போன்றோர், தங்கள் பிள்ளைகளை வளர்ப்பது அமெரிக்காவில்.
சிட்டிஸன் ஆனவுடனே, ஊர்ல வந்து தான் பிள்ளைகள படிக்க வைக்கனும் என்று வீடு பிளாட் வாங்கிப் போட்டிருக்கேன் என்பார்கள்.
பின், பிள்ள நான் சொல்றத கேட்கலை அதனால், அவங்க இங்கேயே டெக்ஸ்ஸாஸ்ல போட்டிருக்கேன். .என்பார்கள்.
”ஏன், அட்வைஸ் பண்ணலையா, “ என்று கேட்டால்,
இங்கெல்லாம் தலையிட முடியாது, அப்புறம் அது டீச்சருக்கு தெரிந்தால், போலீஸிடம் புகாராக போயிடும், பிரச்சனை என்பார்கள்.
அங்கு வேலை கிடைக்காட்டி கூட உரிமை பேசி, பிசா பர்கர் என்று வக்கனையா திங்கலாம்…
ஆனா, இங்கு …?
ஏற்கனவே, பட்டம் பெற்ற மாணவர்கள் வேலைக்கு எடுக்கும் அளவிற்கு தகுதியில்லை என்று மறுத்தல்அதிமாக இருக்கிறது..
இந்த லட்சணத்தில் யாரையோ யாரோ பழிவாங்க தூரத்தில் இருந்து இந்தக் குட்டையில் கல்லெறிந்து கொண்டு.
முன்பு ஜெயை திட்டினார்கள். இன்று அம்மா என்கிறார்கள்.
கலைஞரே, உலகத் தமிழர் தலைவர் என்றார்கள், இன்றோ, கிழவன் என்று திட்டு…
ஒரு குறிப்பிட்ட ஜாதியை மிக மிக கேவலமாகத் திட்டுவார்கள்.
ஆனால் இன்று இந்த போராட்டமே அந்த ஜாதி சேர்ந்த பத்திரிக்கை தரும் நியூஸ் முறையால் தான் நடக்கிறது.
அரவணைப்பாக இருந்து, போராட்டங்களை தொடர அனுமதிப்பதும் அந்த சாதி சேர்ந்த முதல்வரால் தான்.
இவர்களிடமிருந்து தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
”அமெரிக்கா , இந்த விஷயத்தில் அராஜக நிலை எடுத்திருக்கிறது”- என்ற கோஷத்திற்க்கு அவர்கள் தூபம் போட்டால்,
முதலில் அவர்களை அமெரிக்க குடியுரிமை, கிரீன் கார்ட்டு அல்லது என்ன நிலையோ அதெல்லாம் திரும்பக் கொடுத்து விட்டு, தங்களது பிள்ளை குட்டிகளுடன் திரும்ப வ்ந்து போராடச் சொல்லுங்கள்.
1965 – மாதிரி போராட்டம் என்கிறார் ஒருவர்.
இன்று என்ன ஆனது அதனால்.?
முச்சந்தியிலும், நாற்சந்தியிலும் கண்ணகிக்கு கற்பு 100% இல்லை மாதவிக்கு 100% என்று மேடை கண்டு விடிய விடிய கூத்தடித்தது தாண்டி என்ன நடந்தது…?
இன்று சிபிஎஸ்ஸி, ஐஜிசிஎஸ்ஸி முறையென ஆக்கிரப்படுகிறதே, கல்வி முறை அதற்கு என்ன செய்தீர்கள்.
யூ பி எஸ் ஸி யில் பிராந்திய மொழி இல்லையென்ற போது என்ன செய்தீர்கள் ..?
அனுபவத்தால், கனிமொழி, ஹிந்தி படியுங்கள் என்றால் அவரை கேவலமாக விமர்சிப்பது. (அவரது அரசியல் 2ஜி பற்றி ஒரு பக்கம் இருக்கட்டும்.)
அவர் சொன்னதில் என்ன தவறு..?
ஹிந்தி தாண்டி , நீங்கள் ஆங்கிலமுடன் அமெரிக்கா வரை சென்று விட்டு , இங்கிருப்போனை தூண்டி விட்டு சிரிப்பது உங்களது மனநிலை கோளாறு தானே..?
கனடாவில், பிரஞ்சும் ஆங்கிலமும் கற்று குடியுரிமை பெற தகுதி அதிகரிப்பது மட்டும் எப்படி சரி…?
அங்கு தமிழ் மட்டும் தான் என்று சொல்லலாமே…?
நமது மாநிலம் சார்பாக, காங், கம்யூ, பிஜேபி யில் ஆட்கள் இருந்தால் என்ன ..?
காங்கிரஸையும், பிஜேபியையும் தவிர்த்து இந்திய அரசியலோ, அதிகார அமைப்போ இல்லை. அதுவே உண்மை.
கம்யூனிஸ்டுகளை கூட்டங்களில் பேச விடுகிறார்கள்.
ஆனால், ரஷ்யாவும், சைனாவும் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலை தானே எடுத்திருக்கிறது…?
அதைத் தட்டிக் கேட்கலாமே… சிவப்பு சிந்தனையாளர்கள்.
இந்திய அமைப்பில் ஆயிரம் குறைகள் இருக்கலாம், அதற்காக தனியாகனும் என்பதில் என்ன விவேகம் இருக்கிறது.?
அமெரிக்காவில் இருந்து ஜாதிய தாக்குதல் நடத்தும் பலர், இன்போஸிசில் வேலை கிடைத்தால் என்ன வேண்டாம் என்றா சொல்லுவார்கள்.?
அவர்களுக்கு உண்மையில் தமிழர் நலன் இருந்தால்,
-
ஆளுக்கொரு நிர்கதியற்ற தமிழர்களை தத்தெடுக்கலாம்.
-
தாங்கள் முன்பு படித்த கல்லூரியில் ஒரு வகுப்பை, கண்காணிப்பு தத்து எடுக்கலாம், அதாவது அந்த மாண்வர்கள் ஒழுங்காக படிக்கிறார்களா.. இல்லை அவர்களுக்கு எந்த முறையில் வழிகாட்டுதல் தேவை என்று அறிந்து “ஸ்கைப்” மூலம் இலவச வகுப்புகளை வாரக் கடைசியில் எடுக்கலாம்.
முள்வேலி முகாமில் சித்திரவைதை ஆட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கலாமே …?
அன்று காந்தி சொன்னது போல், விதவைப் பெண்களை மணம் செய்யலாமே..?
ஒரே ஒருவர், தமிழகத்திலிருந்து முகாம் போன போது தனது மகனுக்கு ஒரு பெண்ணை மணமுடித்தார். விகடனில் வந்தது.
அவர் கால்களுக்கு வந்தனம்.
இதை விட அதிகமான, அட்டூழித்தை பார்த்திருக்கிறது நாஸி பிரச்சனையால், ஐரோப்பிய தீபகற்பம்.
போலந்து போய் வரலாற்றுக் கண்காட்சி பாருங்கள்.
அதற்கப்புறம் இந்த நாடு எப்படி ஜெர்மனியுடன் இயைந்து வாழ்கிறது என்று வினவி அறிவீர்கள்.
நாஸிக்களுடன் பின் எப்படி ஒன்றிணைந்து வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டது என்று கேட்டறியுங்கள்.
வெனிசுலாகாரர் ஒருவர் இறந்ததற்கு ஒரு தமிழர் தலைவர் வீரவணக்கம் என்றார் போன வாரம்.
இந்த வாரம் வெனிசுலா ,இலங்கைக்கு ஆதரவாக நிலையெடுத்திருக்கிறது.
அதற்கு என்ன பதில் …?
உங்கள் பிள்ளைகள் இணையத்தில் ஆபாச படம் பார்த்திடும் என்ற பயம் தாண்டி,
இன்று கேடாக தவறான உணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆளாவது உணருங்கள்.
இல்லாவிடில் உணர்ச்சிவசப்படும் குணத்தை கட்டுப்படுத்த பயிற்சி எடுக்காமல் போனல், காலம், காசு, நிலம், தொழில், என்று இழப்பது உங்கள் குழந்தைக்கட்டு நடக்கலாம்…
அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்சம் $50 டாலர்கள் சம்பாதிக்கிறார்கள்.
படிக்கும் காலத்தில் அவர்கள் இந்த மாதிரி போராட்டங்களில் என்ன நிலை எடுத்தார்கள் என்று கேளுங்கள்.
போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல், யாரையோ பழி வாங்குவதாக நினைத்து சக தமிழர் குழந்தைகளின் எதிர்காலத்தையே சவக்குழிக்குள் தள்ளுகிறார்கள்.
அமெரிக்காவில் சாமான்யன் வாழ்வு பாதுகாப்பு முறைப்படுத்தப்பட்டது.
அவர்களுக்கு வேலை முடிந்த காலகட்டங்களில், சோஷியல் செக்யூரிட்டியிலிருந்து பணம் கிடைக்கும்.
அவசர கால மருத்துவத்தை எந்த ஆஸ்பத்திரியும் மறுக்க முடியாது.
முதலில் ஆபரேஷன், பின் தான் பணம் கட்டவில்லையெனில் கேஸ் என்ற முறை.
பணத்தை கவுண்டரில் கட்டிவிட்டு வந்தால் தான் அவசர வைத்தியம் எனும் முறை கிடையாது.
ஒவ்வொரு ஆஸ்பத்திரி வாயிலிலும், “பிரசவத்திற்கு வருவோரிடம் எந்த கேள்வியும் கேட்கப்படாமல் வைத்தியம் பார்க்கப்பட வேண்டும்” என்றிருக்கும்.
தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க,
இங்கு எந்த ஜாதியினரை கேவலமாக பேசத் தூண்டுகின்றனரோ, அவர்கள் போல் , பரதநாட்டியம் யோகா தியானம் என கலை கட்டும் அவர்கள் வாழ்வு.
ல –விற்கும் ழ –விற்கு உச்சரிப்பு வித்தியாசம் தெரியாதோர் கூட,
இங்கிருக்கும் தமிழர்களை அர்த்த ராத்திரி ஃபோனிலோ ,ஃபேஸ் புக்கிலோ தமிழ் தமிழர் இனம் எனத் தூண்டி விட்டுக் கொண்டு.
ஏன், அவர்கள் பிள்ளைகள் வகுப்புப் புறக்கணிப்பு செய்யலாமே..?
ரோட்டில் அமர்ந்து அமெரிக்காவில் போராடலாமே..?
ஏன், நமது இந்திய தமிழ் மாணவர்கள் மட்டும் கல்லூரி போகாமல் வீதிக்கு வர வேண்டும் ..?
அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் அமெரிக்கர்களாக படிக்கிறது. அந்த பாஸ்போர்டுடன் மிடில் ஈஸ்டில் வேலை வாங்கினால்,
உங்கள் பிள்ளைகளின் இந்திய பாஸ்போர்ட் அடையாளத்துடனான சம்பளம் போல் 3 மடங்கு கிடைக்கும்.
உலகளாவிய வகையில் படிப்போர் அதிகமாகி வருகின்றனர். அதனால், நாளை வேலை கிடைப்பதற்கு நம் குழந்தைகளை தயார் படுத்த வேண்டும்.
தமிழில் படிக்க வையுங்கள் என்று சொல்லும் அவர்களின் குழந்தைகள்,
: ஸ்பெல்லிங்க் பீ : – எழுதுகின்றன. அதனால், ஆங்கில திறமை பண்மடங்காகிறது.
“குமான்” போன்ற வகுப்புகளில், கணிதத்தை கற்கின்றன.
இணையத்தில் கவிதையில் கலக்கும் ஒருவர் – அமெரிக்க குடியுரிமை பெற்றத் தமிழர் – மணம் புரிந்துள்ளது சீனப் பெண்ணை.
சொல்லப் போனால், இங்குள்ள பண வசதி படைத்தவர் போல் அங்கு சாமான்யனும் வாழ்கிறான்.
ஆனால், படிப்பையும் நாளை கிடைக்கப் போகும் வேலையையும் மட்டுமே நம்பி இருக்கும் நம் மாணவர்கள் நிலை…?
நம் மாணவர் நலனை பாதுகாக்க, பெற்றோர்களே அசட்டையாக இருக்க வேண்டாம்..
உணர்ச்சிகளை தூண்டி விட்டு, தங்களது இயலாமையை பொறுக்க முடியாமல், நம் மாணவர்கள் மூலம் பழி தீர்க்க பலரும் இணையத்தில் இருக்கிறார்கள்..
போராடுவது இன்றியமையாத விஷய்த்திற்காக இருக்க வேண்டும்,
-
இலவசக் கல்வி
-
குறைந்த பட்ச வேலை வாய்ப்புப் பயிற்சி முறைகள்
-
வேண்டிய மொழி கற்க இலவச மையங்கள்
-
டாஸ்மாக் , சினிமா போதைகள் எதிர்த்து..
-
ரவுடிகளை எதிர்த்து நார்மலாக வாழ முறைபடுத்தப்பட்ட காவல் நிலைய கலாச்சார முறை
-
லஞ்ச ஒழிப்பு
-
ஹவாலா ஒழிப்பு
-
கட்டப்பஞ்சாயத்து வாழ்வு முறை ஒழிப்பு
-
நடக்க முடியாத, சைக்கிளில் செல்ல முடியாத வாழ்வு முறைக்கான போராட்டம்
என எவ்வளவோ இருக்கு.
அதுவும் போக, காற்றில் கயிறு திரிப்பது போல் ஒரு குழுவிற்கு – அதுவும் அனைவரையும் புறந்தள்ளிய – ஆதரவாக மட்டும் குரல் எழுப்பி, நமது அரசியல் கட்டமைப்பின் மேல் காழ்ப்புணர்ச்சியை தூண்டும் இவர்கள்
-
அமெரிக்க தீர்மானம் பிடிக்கவில்லையெனில் அமெரிக்காவில் போராட வேண்டியது தானே..?
பண்ண மாட்டார்கள், ஏனெனில் அவனது வாழ்வு கெடும் என்று தெரியும். அதனால், சோதனைச் சாலை எலிகளாய் தமிழக மாணவர்கள் அவர்களுக்கு.
அதுவும், திடீரென போராடும் மாணவர்களிடம் குறிப்பிட்ட போஸ்டர்கள் கையில் கொடுக்கப்படுகிறது.
என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவர்களும் அதை ஏந்தி…
இங்கு அரசியல் கணக்குகள் தீர்க்கப்படுகின்றன –
பாடம் சொல்லித் தர வேண்டிய ஒரு கல்லூரி, மத அரசியலுக்காக நிலை எடுக்கிறது.
“கிராஸ் பயரில் பொதுமக்கள் இறப்பது சகஜம் தான்” என்று சாமான்யர்கள் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்ட போது சொன்னவர் இன்று ஆபத்பாந்தவர்.
பல தலைமுறைக்கு தமிழ் மொழியை காத்த கருணாநிதி இன்று விரோதி.
காங்கிரஸ் அரசு இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிந்தும் , ஆட்சி அதிகாரத்திற்காக அவர்களின் மேலும், திமுக மேலும் வெறுப்பு வரும் வகையில் இருப்பதால், தமிழக அரசே சாதூர்யமாய் இதை கட்டுக்குள் கொண்ட போராட்டமாக வைத்திருக்கிறது..
உண்மையில் இந்தப் பிரச்சனையால் வரும் பாராளுமன்ற வாக்கு போடுதலில் பாதிப்பு இருக்காது.
காங்கிரஸ் செய்யும் தவறு மீண்டும் மீண்டும் ப.சி யை முன் நிறுத்துவது.
பொதுமக்கள் வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வேறு என்பதை உணர வேண்டும்.
பொதுமக்கள் திரளும் போராட்டம் பொது மக்களுக்காக இருந்தாலே தாக்கம் ஏற்படுத்தும், அதில் அரசியல்காரணங்களுக்காக ஒரு இயக்கத்தின் தலைவர் மற்றும் கொடியினை திணிப்பது தோல்வியையே தரும்.
இந்த அரசியலில் பிள்ளைகள் ஏன் மாட்டவேண்டும் …?
கருணாநிதியின் மேல் இருக்கும் பல்தரப்பட்ட காழ்ப்பும் ,வெறுப்பும் இன்று சொல்லாமலே ஒன்றாகி இந்தப்பிரச்சனை யைமையமாக்கி தாக்குதல் நடக்கிறது.
ஒரு இனத்தின் வேதனை இன்று ஒரு தனி மனிதனின் அரசியலை ஆட்டங்காணச் செய்யவே உபயோகிக்கப்படுகிறது.
இதினால், எந்த விஷயத்திற்க்காக கருணாநிதி வெறுக்கப்படுகிறாரோ – ஊழல், ரவுடிகளை வளர்த்துவிட்டது, குடும்ப அரசியல், குறிப்பிட்டமத இன துவேஷம் – அந்த விஷயத்தை வெளிப்படையாக சொல்லி அவரை எதிர்த்தால், இன்னொரு கருணாநிதி அரசியல் முறை வராமல் இருக்கும்.
இல்லையெனில் ஒன்றும் பிரயோஜனமில்லை…
பெற்றோர்களே… சிந்தியுங்கள்,
முன் நின்று போராட்டத்தில், கூக்குரலிடும், பாடையில் உருவ பொம்மையை கொளுத்தி ஒழிக கோஷமிடும்,
நபர்களின் தரத்தை உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள் :
அவர்களின் தங்களுக்கான எதிர்காலத் திட்டம்
தற்போது வாங்கிக் கொண்டிருக்கும் மார்க்
ஏதாவது கல்வி சம்பந்தமாக ரிசர்ச் செய்கிறார்களா..? இணைய உதவிடயன் தங்கள் கல்வி சம்பந்தமாக அதிகமான அறிவுத் தேடலில் ஈடுபடுகிறார்களா..?
இல்லை, உலக அரசியல், செயல்பாட்டு முறை,
தீவிரவாதிகளின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டவர்களா..?
வெறுப்புணர்வை உமிழும் நபர்களால் கட்டுக்குள் வைக்கப்பட்டவர்களா
உலகப் பொருளாதார அறிவு
என்று அனைத்தும் கேளுங்கள்.
இதெல்லாம் விட,
தன் கண் முன்னே தன் தெருவில்
தன் வீட்டருகே
தன் வார்டில்
தன் ஊரில்
நடக்கும், அக்கிரங்களைத் தட்டிக் கேட்டார்களா என்று கேளுங்கள்.
ஒழுங்கான சாக்கடையில்லா ஊரைச் சரி செய்யத் தெரியாதவர்கள்
ரோட்டில் ஒன்னுக்கு போவதை தட்டிக் கேட்க முடியாதவர்கள்,
லஞ்சப் பேயை விரட்ட முடியாதவர்கள்
16 மணி நேர பவர் கட்டை சரி செய்ய எதுவும் செய்யாதவர்கள்,
உலக பிரச்சனையொன்றில்,
அமெரிக்க ஜனாதிபதி ஒழிக
என்பது
காங் ஒழிக என்பதும்
என்னத்தைப் பெற்றுத் தரும், என்று கேளுங்கள்.
கடனை வாங்கி பிள்ளைகள் நாளை இன்ஜினியர் / டாகடர் ஆவார் எனக் கனவுகாணும் பெற்றோர்களே, அவனது மார்க் ஷீட்டை பாருங்கள்.
தொடர்ந்து பாஸ் ஆகியிருக்க வேண்டும்.
பெயில் ஆயிருக்க கூடாது.
அவனது சப்ஜக்டில் அவனுக்கு பாஸ் ஆயிருந்தால் மட்டும் போதாது… அதில் விஷய ஞானம் இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து தூண்டி விடுவோரிடம், வேலைக்கான உதவி கேளுங்கள், பின் தெரியும் நிலவரம்.
ஏற்கனவே, சிங்கப்பூரில் விசா முறைகளில் மாற்றம் வந்தாச்சு.
அமெரிக்கா விசா இனி குதிரைக் கொம்பு
லண்டன் ஜெர்மனி பிரான்ஸ் நாடுகளில் வேலைக்காக உள்ளேயே போக முடியாது.
கனடா , ஆஸ்திரேலியாவில் போய் படிப்போர் இப்போது அதிகம்.
40லட்சம் இருக்கிற்தா உங்களிடம், அங்கு உங்கள் பிள்ளைகளை அனுப்ப…
முன்பு மாதிரி, முட்டாள்கள் கூட பொய் பயோடேட்டா கொடுத்து வெளிநாடு போய் செட்டில் ஆனது இனி நடவாது.
மொழி முக்கியம் தான். அதனினும் முக்கியம் அதில் இருக்கும் அளப்பறிய தத்துவங்களும் சிந்தனைகளும்.
ஆங்கிலத்தையும் வெறுத்திருந்தால் இன்று நமது நிலை மோசமாயிருக்கும்.
ஹிந்தி வேண்டாம் என்று போராடினார்கள்,
ஆனால் இன்று சிங்கப்பூரில் பல இடங்களில் தமிழ் மொழி டிஸ்ப்ளே இல்லை. ஹிந்தியும் சிங்கப்பூர் அரசு மொழியாக்குவதற்கு பேச்சு நடக்கிறது.
இங்கு, இந்திய பள்ளிகள் சி பி எஸ் ஸி பாடத்திட்டம் வழங்குகின்றன.
( வந்து பாருங்கள், சிங்கப்பூரில் சில இடங்களில் தமிழர்கள் கூலிகளாய் வந்து படும் அவதிகளை.. அதற்கு போராடலாமே. )
மிடில் ஈஸ்டிலும் சிபிஎஸ்ஸி பாடத்திட்டம் இருக்கிறது.
அது போல், தமிழ்மொழி சார்ந்த ஸ்டேட் போர்டு பாடத்திட்டம் உண்டா..?
ஆஸ்திரேலியாவில் தலையாய பல்கலைக் கழகங்களில் ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்திற்கு அங்கீகாரமே கிடையாது, அதாவது தமிழ்நாட்டு ஸ்டேட் போர்டில் படித்திருந்தால் அங்கெல்லாம் ( டாப்10 பல்கலைகளில் ) அட்மிஷன் கிடையாது.
இதெல்லாம் சரியாக நாம் என்ன செய்திருக்கிறோம்..?
இதெல்லாம் அறியுங்கள். இங்கு மாற்றப்பட வேண்டியது & போராட வேண்டியது நிறைய இருக்கு…
மொழியின் பெயரால் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம், அரசியல்வாதிகள் பலரால்.
செண்ட்ரல் கவர்மெண்ட் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்ந்தது.
மன்மோகன் போய் நாளை மோடி வரலாம், இல்லை ஜெயாவோ அழகிரியோ, யாரோ வரலாம்.
தமிழகம் என்பது ஒரு அமைதிப் பூங்கா என்று சொல்வது உண்மையாயிருக்க வேண்டும்.
அப்போது தான் தொழில் தொடங்க வரும் கூட்டம் அதிகரிக்கும்.
**
காட்டையும் வித்தாச்சு
கழனியும் இல்லை..
காது கழுத்து நகை –
நம் பிள்ளையின்
கல்லூரி பீஸாச்சு…
இனி
பீஸா தின்று செரிக்காமல்
தூண்டிவிடும் வர்க்கத்தின்
சுயநலத்திற்கு பலியானால்-
நம்
பிள்ளைகள் தம் வாழ்வு
பீஸ் போன பல்பாகும்..
**
அன்றொருநாள், மாணவர்கள் தமக்காய் திரண்டபோது,
சுயநலமாய் அவர்களைப் பயன்படுத்தாமல்,
“போ… போ… போய் படிக்கிற வழியப்பாரு“ –என்று நம்மை
விரட்டியடித்த காமராஜரின் கூற்றே உண்மை.
காமராஜர் அப்போது திட்டியதைக் கேட்காமல்,
உணர்ச்சி தூண்டும்
பேச்சு, செயலுக்கு அடிமையாகி
அன்று அவரைப் புறந்தள்ளினோம்…
அவரது அரசைக் கவிழ்த்தோம்..
நமது வாழ்வைத் தொலைத்தோம்.
நமது வாழ்வை
நாம் தொலைத்தது போல்,
பெற்றோர்களே….
நமது பிள்ளைகளின் தலைமுறையிலும் தொடர வேண்டுமா …? சிந்தியுங்கள்.
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2013
- ஒட்டுப்பொறுக்கி
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13
- தாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -16 என்னைப் பற்றிய பாடல் – 9 (Song of Myself) விடுதலைக் குரல்கள் ..!
- காணிக்கை
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……22 வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -2 மூன்று அங்க நாடகம்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 49
- ‘அப்பு’வின் மகாராணியும் ‘ஆதி’யின் பகவானும்
- தொல்காப்பியம் ஆந்திரசப்தசிந்தாமணி கூறும் எழுத்தியல் கோட்பாடு
- ஒற்றைச் சுவடு
- ஐந்து கவிதைகள்
- தீராத சாபங்கள்
- அக்னிப்பிரவேசம்-28
- எம் ஆழ்மனப் புதையல்!
- குறும்படப்போட்டி
- செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’
- ஈசாவின் பிளாங்க் விண்ணுளவி பெரு வெடிப்பின் முதன்முதல் பூர்வத் தோற்றப் பிரபஞ்சத் தடப்படம் எடுத்தது
- தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து
- பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்
- பொதுவில் வைப்போம்
- அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்
- செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7
- குரல்வளை
- முறுக்கு மீசை
- வெளுத்ததெல்லாம் பால்தான்!
- ஒரு தாயின் கீதா உபதேசம் ..!
- காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை