க. புவனேஸ்வரி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை (SFC)
தேசியக்கல்லூரி (தன்னாட்சி)
திருச்சிராப்பள்ளி – 1.
முன்னுரை
ஒரு மனிதனின் முழுவாழ்வையும் வெளியிடும் ஆற்றல் மிக்க இலக்கிய வகையாகத் திகழ்வது புதின இலக்கியமாகும். மனிதனின் அகவுணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் புதினத்திற்கு மட்டுமே உண்டு. கூர்ந்த அறிவும், கடின உழைப்பும் மிக்க மனிதர்கள் யாவரும் விரும்பும் இலக்கியமாகத் திகழ்வது புதினமாகும். நாம் வாழும் கலாச்சாரம், பண்பாடு இக்காலத்தியச் சூழலை நாமே உணரும்படி முழுமையான வார்ப்பாகக் கண் முன்னே சமுதாயத்தைக் காட்டும் இலக்கியவகை புதினமாகும். அகல்விளக்கு என்னும் புதினத்தில் காணப்படும் வாழ்வியல் விழுமியங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.
கல்வியறிவு
கல்வி, தன்னம்பிக்கையைத் தருகிறது. வாழ்க்கைக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. உலகியல் அறிவை வளர்க்கிறது. பண்பாட்டு நிலைக்கு மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. இத்தகைய சிறப்புடைய கல்வியை அனைவரும் பெறுவது எவ்வாறு என்பதை அகல்விளக்கு என்னும் புதினத்தில் வேலு பாத்திரப்படைப்பின் வாயிலாக மு. வரதராசன் விளக்குகிறார். படிக்கிற காலம் ரொம்ப நல்ல வாய்ப்பான காலம், காலத்தைப் பயன்படுத்திக்கிட்டு நல்லபடியா படிச்சிட்டுவா மாணவ பருவத்தில் தான் மனசுல கவலை இருக்காது. மனசை ஊன்றிப் படிச்சிடு. நல்ல படியா அஸ்திவாரம் போட்டுக்கோ, சும்மா வெறுமே படிப்போடு நின்னுடாதே, புதுப்புது மனிதர்களை
1
சந்தித்துப் பேசு. புதுப்புது அனுபவங்களை கத்துக்கோ, அது தான் படிப்போட நோக்கம் என்று வேலுவின் மூலம் கூறும் அறிவுரையிலிருந்து அறியலாம்.
இதில் பாடத்புத்தகங்களை மட்டும் கற்றால் போதாது, பாடங்களுக்கு அப்பால் மனிதர்கள், ஊர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார். பாடத்திட்டங்களைத் தாண்டியும் கல்விப் பரப்பு அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். இஃது கல்வி பற்றிய அவரது புதிய சிந்தனையாகும் மாணவர்கள் தாமே பெற்றுக் கொள்ளும் அறிவையும் சேர்த்தே கல்விக்குரிய வரம்பாகக் கொள்ள வேண்டும் என்னும் மு. வரதராசன் புதிய கருத்து, எதிர்காலத்தில் கல்வித்துறை கருத்தில் கொள்ள வேண்டிய பயனுள்ள சிந்தனையாகும்.
சந்திரன் பள்ளி பருவத்தில் படிப்பில் முதல் மாணவனாக இருக்கிறான். ஆனால் கல்லூரியில் படிக்கும் போது கடை மாணாக்கனாக இருக்கிறான். அவனோடு படிக்கும் வேலு பின் தங்கிய மாணவனாக இருக்கிறான். ஆனால் கால சூழலின் மாற்றத்தால் கல்லூரியில் படிக்கும் போது முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறான். அதனால் அரசாங்க வேலையும் கிடைக்கிறது. உழைப்பினால் அவன் முன்னேற்றம் அடைகிறான் என்பதை மு. வரதராசனார் அழகுபட பதிவு செய்துள்ளார்.
பழக்கவழக்கம்
நாம் உறவினர் வீட்டுக்கோ அல்லது மற்றவர் வீட்டுக்கோ செல்லும் போது வெறும் கையோடு செல்ல கூடாது என்பதால் பூ, பழம் மற்றப் பொருள்களை நாம் வாங்கி செல்லுவோம். அது போல்தான் சந்திரனின் அத்தையும் வேலுவின் தாயை பார்க்க வரும் போது கைநிறையப் பொருள்களை கொண்டு வந்தார் அவர்கள் குடும்பத்திலேயே கற்ற குடும்பக்கல்வி அது உறவு நீடிப்பதற்கு அது ஒரு வழி என்று கடமையாகவே கொண்டார் என்பதை உணர்த்துகிறார் ஆசிரியர்.
2
பெண்ணுரிமை மறுக்கபடுதல்
பெண்மை என்பது பெண்ணின் தன்மைகளாகும். அவளுடைய இயல்பான, நிலையான பெள்-என்ற அடிச்சொல்லைக் கொண்டது. பெள்தல் – பெட்டல் என்பது பாதுகாத்தல் அல்லது புறந்தருதல் என்பது பொருள் தருகிறது. செல்வம், கல்வி, மண், விண், நீர், உணவு, மொழி, நாடு என்ற எல்லாவற்றிலும் பெண்ணின் உருவைக் கண்டு மகிழ்ந்து பாரதப் பண்பாடாகும்.
இத்தகைய பெண்மையின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதும் வெளிப்படுத்துவதும் மிகவும் அரிய செயலாகும். அவற்றை பற்றி மு.வ. கூறும் போது,
வீட்டிலே வாய்க்குச் சுவையாகச் சமையல் செய்யக் கற்றுக் கொள்ளணும். பொருள்களை வீடு வாசலைச் சுத்தமாக வைத்திருக்கக் கற்றுக் கொள்ளனும். அது தான் முக்கியம். நீ படித்துவிட்டு என்ன செய்யப்போகிறாய் அதை சொல், நீ ஒன்பதாவது பத்தாவது படித்தால், மாப்பிள்ளை பி.ஏ, எம்.ஏ, படித்தவனாகப் பார்க்கணும். அவன் தலையோ ஆகாசத்திலே பார்க்கும். தாட் பூட் என்பான் என்று இப்படி எல்லாம் கூறி சந்திரனின் தந்தை தன் மகள் கற்பகத்தின் படிப்பை தடை செய்கிறார். அவறுடைய உரிமை மறுக்கப்படுவதை ஆசிரியர் இயல்பாக கூறியிருக்கிறார்.
ஜோதிடம்
பி.ஏ படித்து இருக்கிறான் ஆனால் தேர்வு எழுதும் முன்னரே மாலனுக்கு திருமண ஏற்பாடு செய்வதாக குடும்பத்தில் முடிவு செய்துள்ளதை தன் நண்பன் வேலுவிடம் தெரிவிக்கிறான் மாலன். “எங்கள் குடும்பத்துக்குப் பழக்கமான சோதிடர இந்த ஆவணியில் முகூர்த்தப் பொருத்தம் இருப்பதாகவும், குருதிசை பலமாக இருப்பதாகவும், இன்னும் நான்கு வாரத்தில் திருமணம் கூடிவிடும் என்றும் தெற்குத்திசையில் அல்லது தென்மேற்குத் திசையில் பெண் வீடு அமையும் என்றும், ராசிநாதனை எடுத்துப் பார்த்தால் அப்படித் தெரிகிறது என்றும் சொல்லியிருக்கிறாராம்’’ என்றான் மாலன். நாம் என்ன தான் படித்திருந்தாலும் இந்த நம்பிக்கையை மாற்றவும் இல்லை மறக்கவும் இல்லை என்பதை ஆசிரியர் சுட்டிகாட்டுகிறார்.
3
விட்டுக்கொடுத்தல்
குடும்பம் சமூகத்தின் மிகச் சிறிய நிறுவனம் ஆகும். ஆண், பெண் இருவராலும் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்பட்ட குடும்பத்தில் வாரிசுகளை உருவாக்கி வளர்த்து மனித வாழ்க்கையின் தொடச்சிக்குப் பெண் மிக இன்றியமையாத பங்காற்றுகிறாள். வாரிசுகளைப் பெறுவதோடு மட்டும் பெண்ணின் பணி முடிவதில்லை. வீட்டைப் பேணுவதும், குழந்தை பெற்று அதனை வளர்ப்பதும் எல்லாச் சுமைகளையும் சுமந்து குடும்பத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து விட்டு கொடுத்து வாழ்பவள் பெண்ணாவாள். ஆனால் உரிமைகளோ ஆண்களுக்கு, கடமைகளோ பெண்களுக்கு என்ற நிலை தான் தொடர்கிறது.
தாய் தந்தைக்கு அடுத்தபடி கணவர்தான் அன்பு மிகுந்தவர் தன்னலம் இல்லாத ஆளாக இருந்தால் அந்த அன்பு நாளடைவில் வளர்ந்து பெருகும். முதலில் பொறுமையோடு அவர் வழியில் நடந்தால் காலம் செல்லச் செல்ல முழுவதும் உன் வழியில் வந்துவிடுவார். உலகில் பார்! பெண்கள் இட்ட கோட்டைக் கடக்காமல் எத்தனை ஆண்கள் வாழ்கிறார்கள்? பயந்து வாழ்கிறவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டா. அன்பால் முழுவதும் விட்டுக் கொடுத்து வாழ்கிற கணவன்மார் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்று பாக்கியம் வேலுவின் தங்கை மணிமேகலையிடம் வாழ்க்கையின் நிலையை எடுத்து கூறுகிறார் என்பதை ஆசிரியர் அழகாக நமக்கு உணர்த்துகிறார்.
அறச்செயல்
மூட்iடைப்பூச்சிகளை, கொசுக்களை, எலிகளைக் கொல்கிறோம். அவைகள் நம் வாழ்வுக்கு இடையூறு செய்கின்றன. அதனால் கொல்கிறோம். புலி சிங்கங்களையும் அப்படியே வேட்டையாடிக் கொல்கிறோம். ஆனால் ஆடம்பரத்துக்காக அழகுக்காகக் கொலை செய்யலாமா? பட்டுத்தொழில் இந்த இரண்டையும் விடக் கொடுமையானது பட்டுப்பூச்சிகளைத் தீனியிட்டு வளர்க்கிறார்கள். நூலுக்குள் சுற்றிக் கொண்டு கிடக்கும் நிலை வந்ததும் கொதிக்கும் நீரில் அந்தப் பட்டுப் பூச்சிகளை அப்படியே உயிரோடு போட்டுச் சாகடிக்கிறார்கள் பிறகு வெளியே எடுத்து,
4
நூலைச் சேர்த்துக் கொண்டு செத்த உடம்புகளை எரிக்கிறார்கள். ஆடம்பரத்துக்காகச் செய்யும்
கொலை இது ஒருவன் பசிக்கு ஒரு சின்ன கோழி அல்லது அரைக்கால் ஆடு போதும். ஆனால் ஒரு பட்டுச் சேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொதிக்கும் வெந்நீரில் இட்டு வதைத்துக் கொல்வார்கள் அந்தக் கொடுமையை நான் கண்ணாரப் பார்த்தேன் என்று வேலுவின் தாய் மற்றும் மனைவி கயல்விழியிடம் தங்கை மணிமேகலையிடம் பாக்கியம் கூறும் போது நமக்கே பட்டின் மீது இருக்கும் ஆசையை குறைய செய்கிறது என்பதை ஆசிரியர் உணர்த்துகிறார்.
முடிவுரை
முற்போக்குச் சிந்தனை வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பல புதிய நோக்குகளும், சிந்தனைகளும் தோன்றி வருகின்றன. ‘அகல்விளக்கு என்னும் புதினத்தில் விழுமியங்கள்’ என்பதில் கல்வியறிவு, பழக்கவழக்கம், பெண்ணுரிமை மறுக்கப்படுதல், ஜோதிடம், விட்டுக்கொடுத்தல், அறச்செயல் கூறுவதோடு மட்டுமின்றி அதற்கான தீர்வுகளையும் கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.
- பொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்
- சின்னஞ்சிறு கிளியே
- காலத்தின் கொலைகாரன்
- அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11
- சங்க இலக்கிய மகளிர்: விறலியர்
- தங்கமே தங்கம்
- விண்மீனை தேடிய வானம்
- தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !
- வெல்லோல வேங்கம்மா
- கனிகரம்
- பணிவிடை
- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்
- செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]
- அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்
- எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்
- வெற்றிக் கோப்பை
- புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15
- புகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்
- நம்பி கவிதைகள் இரண்டு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5
- அக்னிப்பிரவேசம்-29
- நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
- முத்தம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்
- புகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்
- தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்