(1819-1892)
(புல்லின் இலைகள் –1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
திரும்பி நினைத்து வந்தேன்
மிருகங்க ளோடு நான் வசிப்பதற்கு !
மிகவும் அமைதி யானவை !
தன்னடக்கம் கொண்டவை !
நெடு நேரம் நின்று அவற்றை
நோக்குவேன், ஆம்
நெடு நேரம் !
இழிவு நிலைக்கு அவை
புலம்புவ தில்லை !
புகார் செய்வ தில்லை !
பயத்தால் வேர்ப்ப தில்லை !
இருட்டில் படுத்து
விழித்தி ருப்ப தில்லை !
பண்ணிய பாவங் களுக்கு அவை
கண்ணீர் விடுவ தில்லை !
மனநோய் அளிப்ப தில்லை
எனக்கவை,
கடவுளுக்குச் செய்யும் தமது
கடமை யைப் பற்றித்
துருவி விளக்கி !
திருப்தி அடையாத ஒன்றில்லை !
சொந்தம் கொண்டாடும்
பித்த மில்லை !
மற்ற ஒன்றின் முன்பு
மண்டி யிட்டுத்
தொண்டு செய்வ தில்லை !
ஆயிரம் ஆண்டுக்கு முன்பு
வாழ்ந்த அவற்றின்
பூர்வீக இனத்துக்குத்
தலை வணங்குவ தில்லை !
அனைத்துப் பூமிமேல்
மதிப்புள்ளது
வெறுப்பில்லை ஒரு விலங்குக்கு !
விலங்குகள் எனக்குத் தம் தொடர்பை
வெளிப்படுத்தும் !
ஏற்றுக் கொள்வேன்
நானுமதை !
என்னுடம்பின்
முத்திரைச் சின்னங் களை எனக்குச்
சித்தரித்துக் காட்டும் !
தம்மிடம் உள்ள வற்றைச்
செம்மையாய் வெளிப் படுத்தும் !
சின்னங் களை எல்லாம்
எங்கிருந்து பெற்றன என்று
வியப்படைவேன் !
பன்முறை இந்தப் பாதையை
முன்பு நான் கடந்து
சென்றேனா ?
புறந்தள்ளி அவற்றைத்
துறந்தேனா ?
இன்றோ பிறகோ
எப்போதுமே அப்பாதையில்
முன்னடி வைப்பேனா ?
நிறையச் சேமித்து
வெளிப் படுத்தி விட்டேனா
விரைவாக ?
+++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986] - Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/
Walt_Whitman [November 19, 2012] - http://jayabarathan.wordpress.
com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (May 1, 2013)
http://jayabarathan.wordpress.
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -22 என்னைப் பற்றிய பாடல் – 16 (Song of Myself) விலங்குகள் நேர்மையானவை .. !
- சங்கல்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 63 உன் இதயத்தில் போட்ட என் முடிச்சு .. !
- நவீன தோட்டிகள்
- மருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்
- அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்
- தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும்
- புகழ் பெற்ற ஏழைகள் 5. உலகத்திலேயே அதிக நூல்களை எழுதிய ஏழை!
- “ 13 ”
- அரிசிபருப்பு சோறு: சுப்ரபாரதிமணியன்
- நிழல்
- செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (9)
- தெளிதல்
- ஆனந்தயாழ் – தங்கமீன்கள்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! 4
- துறவியின் இசைக்குறிப்புகள் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்பு
- இன்னொரு எலி
- கவிதைகள்
- ஒரு தாதியின் கதை
- என். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)
- கரையைத் தாண்டும் அலைகள்
- பசுமையின் நிறம் சிவப்பு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 9
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -8 [இரண்டாம் அங்கம் முடிவு]
- மத நந்தன பாபா
- விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் சுழலும் பூதச் சூறாவளி கண்டுபிடிப்பு !
மொழிபெயர்ப்புக் கவிதை அருமை. படித்து இரசித்தேன். பாராட்டுகள் நண்பரே! மனிதன் மிருகமாகிறான் என்று நாம் மிருகங்களை குறைவாகேவே ஒப்பிடும் வேளையில், இங்கே ஒரு நூற்றாண்டுக்கு முன்பே வால்ட் விட்மன் மிருகங்களிடமும் மனிதன் இரசித்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன என்பதைச் சொல்லியுள்ள விதம் அற்புதம்!…டாக்டர் ஜி.ஜான்சன்.
நண்பர் டாக்டர் ஜான்சன்,
வணக்கம்.
வால்ட் விட்மன் வட அமெரிக்காவின் பாரதியார். அவர் சிந்தனை ஊற்று, ஆழமானது, செழிப்பானது, உலகெலாம் உணர்ந்து ஓதுதற்குரியது.
பாராட்டுக்கு நன்றி நண்பரே.
சி. ஜெயபாரதன்.