நீங்காத நினைவுகள் – 2

This entry is part 11 of 29 in the series 12 மே 2013

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் எழுத்தாளர் சுந்தா அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப் பட்ட்து. இந்தக் கொண்டாட்ட்த்துக்கு ஏற்பாடு செய்திருந்த்து கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை. பேராசிரியர் கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பொன்னியின் புதல்வர் எனும் தலைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னால் எழுதிய ஆசிரியர் சுந்தா என்பது இதற்கு ஒரு கூடுதல் காரணமாகும். இவ்விழாவுக்குச் செல்லா விட்டாலும், அது பற்றிய சேதிகளை அறிந்து மகிழ்ந்ததற்குக் காரணம் சுந்தாவை நான் சந்தித்து அளவளாவியுள்ளதுதான். அந்தச் சந்திப்பின் போது அவருடைய மேன்மைகளைப் புரிந்துகொள்ள வாய்த்தது.

1990 இன் தொடக்கம் என்று நினைவு. திருநெல்வேலி, பாட்டப்பத்து கிராமத்தைச் சேர்ந்த என் அலுவலகத் தோழி – எனக்கு மிகவும் மூத்தவர் – ஒருவர் சுந்தாவின் குடும்பத்தை அறிந்தவர். சென்னைத் தியாகராய நகரில் குடியேறியிருந்த அவரை ருக்மிணி எனும் அந்தத் தோழி என் வீட்டுக்கு ஒரு நாள் வந்திருந்த போது அவரைச் சந்திக்க வேண்டும் எனும் தன் விருப்பத்தைக் கூற, எனக்கும் பெரிய எழுத்தாளரான அவரைக் காணும் அவா இருந்த்தால் நாங்கள் இருவரும் ஒரு நாள் பிஞ்சாலா சுப்பிரமணியம் தெருவில் இருந்த அவரது வீட்டுக்குச் சென்றோம்.

இலக்கிய உலகம் பற்றியும், தமது சில அனுபவங்கள் பற்றியும், சில புகழ்பெற்ற பத்திரிகைகளின் ஆசிரியர்கள் பற்றியும் பல விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். ‘யாரிடமும் இவற்றையெல்லாம் சுந்தா சொன்னதாய்ச் சொல்லிவிட மாட்டாய்தானே?’ என்று என்னிடம் கேட்டுக்கொண்ட்தன் பிறகே அவற்றை யெல்லாம் பகிர்ந்து கொண்டார்!

அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூட மனம் விட்டுப் பேசினார். பேச்சு வாக்கில், ‘நான் இளைஞனாக இருந்த போது மிகவும் அழகாக இருப்பேன்…’ என்று அவர் தொடங்கியதும், ‘ஏன்? இப்பவும்தான்! இல்லையா மாமி?’ என்று எங்களோடு அமர்ந்திருந்த திருமதி சுந்தா அவர்களைப் பார்த்துக்கொண்டே நான் வினவ, இருவருமே சிரித்து மகிழ்ந்தார்கள்.
சுந்தா தொடர்ந்தார்: ‘சின்ன வயதில் நான் அழகாய் இருப்பேனா? அதனால் என்னைச் சுற்றி எப்போதும் பெண்களின் கூட்டம் இருக்கும்!’ என்று அவர் ஆங்கிலத்தில் தொடர, “Even now you are surrounded by ladies! – இப்போதும் உங்க்ளைச் சுற்றிப் பெண்கள்தான் இருக்கிறார்கள்!” என்று நான் இடைமறித்தேன்.
‘இவளுக்கு இருக்கிற குசும்பைப் பாத்தியா? இப்பவும் என்னைச் சுத்திப் பெண்கள்தான் இருக்காளாம்!’ என்று அவர் தம் மனைவியிடம் முகம் சிவந்து கூறிச் சிரிக்க, அந்த அம்மாளும் கொல்லென்று சிரித்தார்.
தமது பேச்சிடையே பயங்கரமும் அருவருப்பும் நிறைந்த ஒரு தகவலையும் சுந்தா வேதனையுடன் கூறினார். அவ்வூரில் சிவப்புத் தோல் படைத்த பெண்கள் இறந்தால், அவர்களின் பிணங்களோடு உடலுறவு கொண்ட பின்னரே சுடுகாட்டு வெட்டியான்கள் அவற்றை எரிப்பார்களாம்! பிற ஆண்கள் சிலருக்கும் இப்பெண்பிணங்களை அனுபவிக்க வசதி செய்து கொடுத்து அவர்களிடமிருந்து காசு வசூலித்துக்கொள்ளுவார்களாம். இப்படியும் செய்வார்களா என்று அதிர்ந்து போனோம். இந்த அருவருப்பும், அநீதியுமான கொடுமையைச் சுந்தா அவர்கள் அக்கிராமத்தின் செல்வாக்கு மிகுந்த ஊழியரான பிறகு தலையிட்டு நிறுத்தினாராம். அதாவது, பெண்களின் சடலங்களை உடனடியாகவே உறவினர்கள் முன்னிலையில் எரித்தாக வேண்டும் என்று சட்டம் இயற்றினாராம்.
கல்கி பொன்விழாப் போட்டியில் மணிக்கொடி எனும் எனது வரலாற்றுப் புதினம் பரிசு பெற்றபோது நடந்த விழாவுக்கு வந்து என்னை நேரிலும் பாராட்டினார். இந்திய விடுதலைப் போராட்டப் பின்னணியில் அமைந்த அந்நாவல் மேலும் பரிசுகளையும் கவனிப்பையும் பெறும் என்று எனக்குக் கடிதமும் எழுதினார். அது உண்மையாயிற்று.
கல்கியில் அந்நாவல் தொடராக வெளிவந்து முடிந்த பிறகு கல்கிக்குத் தாம் எழுதிய பாராட்டுக் கடித்த்தில், ‘இந்தியாவுக்குக் காந்தியடிகளால் மட்டுமே விடுதலை கிடைத்துவிடவில்லை. பகத்சிங், நேதாஜி போன்ற புரட்சியாளர்களின் பங்கும் அதில் உள்ளது’ எனும் முடிவை நான் அதில் வெளியிட்டிருந்த துணிச்சலைப் பாராட்டி, சர்ச்சைக்குரிய கடிதத்தை அவர் எழுதினார்.
நாங்கள் விடை பெற்றுக் கிளம்புவதற்கு முன்னால், ‘என்னோட பொண்ணு ரமாமணி எவ்வளவு அழகாயிருப்பா, தெரியுமா? சினிமா ஸ்டார் மாதிரி இருப்பாளாக்கும்!’ என்று கூறிய பின் தன் மகள் – எழுத்தாளர் – ரமாமணி சுந்தரின் புகைப்படத்தை எடுத்து வந்து ஒரு தந்தைக்குரிய பெருமித்த்துடன் எங்களுக்குக் காட்டினார்.
அவர் பல பிரபலங்கள் பற்றிக் கூறியவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் என்னை நம்பி அவற்றைச் சொன்ன அவர் பற்றிய வியப்பு இன்னும் எனக்கு அடங்கவில்லை.
(லண்டன் B.B.C. யில் பணியாற்றிய உயர் அதிகாரியாவார் திரு சுந்தா அவர்கள்.)

jothigirija@live.com

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்….! – 5சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

 1. Avatar
  IIM Ganapathi Raman says:

  //பயங்கரமும் அருவருப்பும் ….அநீதியுமான கொடுமையைச் …//

  இதில் பயங்கரமிருக்கிறது. அருவருப்பு இருக்கிறது. அநீதி எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை.

  காலங்காலமாக அக்கிராமத்தில் நடக்கும் செயல். பிணங்களை வெட்டியானிடம் காலங்காலமாக விட்டுச்சென்ற உறவினர்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். தெரிந்தே விட்டுச்சென்றிருக்கிறார்கள். நெடுங்காலப்பழக்கம் தெரியாமலிருக்குமா?

  இதில் நீதி…அநீதி யெங்கே வருகின்றன‌ என்று எனக்குத் தெரியவில்லை. பயங்கரமிருக்கிறது – ஏனெனில் சுடுகாட்டுப்பிணமென்றால் நம்க்குப்பயம்தானே. வெட்டியானுக்கு அது கிடையாது. அருவருப்பு நமக்கு. அவனுக்கன்று.

  ஒருவேளை, இச்செயல் அவ்வூர்க்காரகளுக்குத் தெரிய்வேயில்லையென்றால் மட்டுமே இது நம்பிக்கைத் துரோஹம். தெரியவில்லையென்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு நாள், இருநாள் பழக்கமா…நெடுங்காலப்பழக்கம். நல்லடக்கம் பண்ண வேண்டுமென்று நினைப்பவர்கள் கண்டிப்பாக வெட்டியான செய்யாமலிருக்க வழி பண்ணிவிடுவர்.

  எனவே வெட்டியான் அவ்வூரில் காலங்காலமாக செய்தது, ஒரு கூட்டுச்செயல் – அதில் உறவினருக்கும் பங்குண்டு. அப்படிப்பார்க்கையில் நீதி அநீதிக்கு இடமில்லை. உயிருள்ள பெண்ணையும் குழந்தைகளையும் ஆண்கள் கூட்டம் வன்புணர்ந்து கொல்வதே அநீதி, அக்கிரமம். பயஙகரம் என்று பொருந்தவரும்.

  பழக்கத்தை உடனடியாக நிறுத்திய அந்த எழுத்தாளர் பாராட்டுக்குரியவர்.

  சமீபத்தில் சிலநாடுகளில் இப்பழக்கமிருப்பதாக ஒரு பதிவாளர் எழுதியிருந்தார்.

  சிவப்புத்தோல் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது:

  சில்லாண்டுகளுக்கு முன் ஒரு பெரிய ஊழல் சுங்க இலாகாவில் நடந்து சி பி எஸ் ஸி சேர்மன் வர்மா கைது செய்யப்ப்ட்டார். தில்லி விமான நிலைய சுங்க அதிகாரிகள் செய்த ஊழல். சேர்மனுக்கும் உடந்தை. அவர் மகன் வழியாக.

  இந்த ஊழலில் தனித்துவம் என்னவென்றால், பணம் மட்டுமல்லாமல் பெண்களும் கொடுக்கப்பட்டனர் அவ்வதிகார்களுக்கு. அப்பெண்கள் உருசியப நாட்டுப் பெண்கள். அங்கிருந்து டூரிஸ்ட் விசாவில் வரவழைக்கப்பட்டு அதிகாரிகளுக்கு காமப்பசியைத் தீர்க்க விலைமாதராவார்கள்.

  பிடிபட்டவுடன் சொன்ன வாக்குமூலத்தில்: அதிகாரிகள் வெள்ளைக்காரிகளைத்தான் விரும்புகிறார்கள். அவர்களின் செந்தோல்களுக்கு ஏங்குகிறார்கள். அவர்களே கேட்டுக்கொண்டதற்கிணங்க நாங்கள் இறக்குமதி பண்ணினோம்.

  இந்த ஊழலில் சிறப்புப்பெயரே அந்த விலைமாதர் கூட்டத்தலைவியின் பெயரை வைத்தே வரும்.

  பலபல வெள்ளைக்கார சுற்றுலாப்பயணிகள் இந்தியர்க்ளால் வன்புணரப்படுதலுக்கும் இச்செந்தோல் மோஹம் காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *