ஒரு நாள், இன்னொரு நாள்

1
0 minutes, 1 second Read
This entry is part 10 of 23 in the series 16 ஜூன் 2013

 

நள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது

கொள்ளிவாய்ப் பிசாசாய்.

கால்கள் சென்றன தம்போக்கில் கணினியை நோக்கி.

திரை யொளிரத் தொடங்குவதற்காய் காத்திருக்கும் நேரம்

கரை மீறும் ஆத்திரம்.

பின், சுரங்கெட்ட பியானோ வாசிப்பாய்

விசைப்பலகை மீது தட்டத்தொடங்கும் விரல்கள் சில.

திறந்துகொள்ளும் இணைய இதழில் எழுதியுள்ளோர் பெயர்களைத்

துருவியாராய்ந்து தயாரித்துக்கொள்ளப்படும் ‘ஹிட்-லிஸ்ட்’.

இவர் ஃபர்ஸ்ட், அவர் நெக்ஸ்ட்….

கதையோ கவிதையோ கட்டுரையோ-அட, உள்ளடக்கமோ சாரமோ – ஒரு பொருட்டில்லை யெப்போதும்   _

விருப்பம்போல் கருப்பொருளைத் திரிக்கத் தெரிந்தால் போதும் –

கொய்துவிடலாம் எளிதாய் வேண்டுமட்டும் தலைகளை….

 

அன்று இணைய இதழைத் திறந்ததும் இதயமே நின்றுவிட்டதுபோல்..

கதை கவிதை கட்டுரை யெதிலும் இடம்பெறவில்லை ஓரெழுத்தும்.

எல்லாம் வெள்ளைமயம்.

’கொள்ளை போய்விட்டதே எல்லாம்…. அய்யோ,

இனி எதைச் சாட, எதைக் குதற…?’

_ரொம்பவே பதறித்தான் போய்விட்டார் பாவம்.

குய்யோ முறையோ வெனக் கூவத் தொடங்கியது உள்.

மறுகணம் பிறந்தது ஞானம். ஐயோடீ!

கைபோன போக்கில் பதிவு செய்யும் கருத்துக்கு

கதை கட்டுரையில் எழுத்துகள் இருந்தால் என்ன,

இல்லாவிட்டால்தான் என்ன?

ஆனபடியால் வழக்கம்போல்,

இல்லாத படைப்புகளையும்

சொல்லியடிக்கத்தொடங்கிவிட்டார்

வில்லாதிவில்லனார்;

பின்னூட்டப் ‘பவர் ஸ்டார்‘!

Series Navigationமருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்மூன்று சைன விண்வெளி விமானிகள் பூமியைச் சுற்றிவரும் சைன அண்டவெளிச் சிமிழுக்குள் நுழைந்தார்.
author

ரிஷி

Similar Posts

Comments

  1. Avatar
    தேமொழி says:

    ///கைபோன போக்கில் பதிவு செய்யும் கருத்துக்கு
    கதை கட்டுரையில் எழுத்துகள் இருந்தால் என்ன,
    இல்லாவிட்டால்தான் என்ன?///

    பின்னூட்டப் ‘பவர் ஸ்டார்‘! வேடிக்கையான, ஆனால் உண்மையான நிகழ்வுகளை நினைவு கூரச்செய்கிறார், நல்ல கவிதை …நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *