(மலேசியா)
யாருக்குத் தெரியும்?
நேற்று கம்பத்தின் ஒதுக்குப்புற வீட்டில் கொள்ளை.
இந்திய மூதாட்டி தினைத்துணையாய் தினைத்துணையாய்
சேர்த்து வைத்த காசு திருடப்பட்டது.
அது இளைய மகன் கார் வாங்கக் குறிவைத்த காசு.
கேட்டு அலுத்துவிட்டான்.
தன்னை அம்போ என்று விட்டுக் காதலியுடன் ஓடிப்போனான்.
“கொள்ளையிலே போக” என சபித்தாள்.
கொள்ளையில்தான் போயிற்று.
கழுத்துச் சங்கிலியை இறுகப் பிடித்தாள்.
அறுத்தெடுத்ததில் குரல்வளையில் பெரும்காயம்.
ஆனால் மூதாட்டியின் கவலையெல்லாம்
அவள் பொத்திப்பொத்தி வைத்திருந்த
காலஞ்சென்ற கணவனின்
கைக்கடிகாரம் போனதில்தான்.
அது தங்க முலாம் பூசப்பட்டு இப்போது கருத்துப் போனது.
கருத்துப் போனாலும் அவள் கருத்தில் போகவில்லை.
அதை அவள் ஒளித்திருந்த இடம் யாருக்குத் தெரியும்,
மூத்த மகனைத் தவிர?
————————————————————
எங்கிருந்து?
மணக்க மணக்க மீன் குழம்பு ஆக்கி
இறக்கி வைத்தாள் அம்மா.
மகன் உடுத்திக்கொண்டு மோட்டார் சைக்கிளை
உதைத்து உயிர்ப்பித்தான்.
“எங்கடா போற சாப்பாட்டு நேரத்தில?” என்றாள்.
“ஃபிரண்டு சாப்பிடக் கூப்பிட்டிருக்கான்” என்றான்.
“எங்க?”
“பாக் குத் தே ரெஸ்ட்டாரண்ட்.” போய்விட்டான்.
“கருமம், இப்படி பண்டிக் கறி சாப்பிடல்லன்னா தூக்கம் வராது.
எங்கிருந்து கத்துக்கிட்டானோ!”
வெளியே போயிருந்த அப்பா பொட்டலத்தோடு வந்தார்.
“என்னங்க?”
“காட்டுப் பண்டிக் கறி. ரகசியமா சுட்டுக் கொண்டாந்திருக்காங்க!” என்றார்.
இங்கிருந்துதான்!
- நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…24 கிருஷ்ணன் நம்பி – ‘காலை முதல்’
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24
- நீங்காத நினைவுகள் – 7
- தூக்கு
- செங்குருவி
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14
- மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)
- மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்
- ஒரு நாள், இன்னொரு நாள்
- மூன்று சைன விண்வெளி விமானிகள் பூமியைச் சுற்றிவரும் சைன அண்டவெளிச் சிமிழுக்குள் நுழைந்தார்.
- அந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா உரை
- புகழ் பெற்ற ஏழைகள் – 11
- தாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !
- யதார்த்தாவின் ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழா
- ஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !
- அக்னிப்பிரவேசம்-38
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -6
- நவீன அடிமைகள்
- மாய க்குகை
- தண்ணி மந்திரம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்