( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை,
மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
12.ஆடுமேய்த்த அறிவியல் மேதை…..
ஒண்ணு தெரியுமாங்க? அட..யாரு?…அடடே நீங்களா? வாங்க… என்ன ஏதோ தெரியுமாங்குறீங்க?…என்னது?.
அவரு இதக் கண்டு பிடிச்சதே எதேச்சையாத்தான். தோட்டத்துல அவரு ஒரு ஆப்பிள் மரத்தடியிலே ஒக்காந்துருந்தாரு…அப்ப மரத்து மேல இருந்து அவரு மேல ஒரு அப்பிள் பழம் விழுந்தது. நாம என்ன செய்வோம் அத எடுத்து அப்போதே கடிச்சுத் தின்னுருப்போம். ஆனா அவரு திங்கல…அதுக்கு மாறாக அந்த ஆப்பிளத் தூக்கித் தூக்கிப் போட்டுப் பாத்தாரு… ஏன் அந்த ஆப்பிள் மேல போகமாட்டேங்குது…திரும்பத் திரும்பக் கீழேயே வந்து விழுது? அப்படின்னு கேட்டுக்கிட்டே இருந்தாரு..யோசிச்சாரு..அவரு யோச்சிச்சு யோசிச்சுப் பார்த்ததுல தமது அறிவுக் கூர்மையால் முயன்று விடை கண்டவர் சர் ஐசக் நியூட்டன் என்ற மேதை. புவியீர்ப்பு விசையை இவர் கண்டுபிடித்து கூறிய பின் உலகம் வியந்தது. ‘ஒப்பற்ற அறிவுலக மேதை சர் ஐசக் நியூட்டன்’ என்று அவரைப் பாராட்டியது.
அறிவாளிகள் சோதனைகளோடுதான் பிறப்பார்கள்; அல்லது பிறந்தபின் வாழ்க்கை அவர்களுக்கு சோதனையாக அமையும். சோதனைகளையும், அதன் வழியாகக் கிடைக்கும் வேதனைகளையும் எதிர்த்துப போராடிக் கொண்டோ, அல்லது அவைகளை எல்லாம் துச்சமென மதித்தோ அவர்கள் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டே தான் வெற்றி என்னும் சிகரங்களை எட்டிப் பிடித்திருத்திருக்கிறார்கள் என்பதை பல மேதைகளின் வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. இது சர் ஐசக் நியூட்டனுக்கும் பொருந்தும்.
அறிவியல் கல்விக்கும், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் தன் நுண்ணறிவைப் பயன்படுத்தியவரும் – அறிவியலையே தனது வாழ்க்கைத் துணையாகக் கொண்டு வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தவரும் ஆராய்ச்சிகளின் தந்தையாக விளங்கிய அற்புத மனிதர்தான் சர் ஐசக் நியூட்டன்.
நியூட்டன் 1642-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் ஏசுநாதர் பிறந்த அதே நாளில் இங்கிலாந்து நாட்டில் இலங்காசையர் எனுமிடத்தில் ‘உல்ஸ் த்ரோப்’ என்ற சிறு கிராமத்தில் ஒரு விதவைத் தாய்க்கு மகனாகப் பிறந்தார். ஆம்…உலகம் பேரானந்தத்தோடு கொண்டாடும் கிறிஸ்துமஸ் அன்றுதான் நீயூட்டன் பிறந்தார். மகன் பிறந்ததை நினைத்து அவரது தாய் மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஏனெனில், நியூட்டன் பிறப்பதற்கு முன், அதுவும் இரண்டு மாதங்களுக்குப் முன்புதான் நியூட்டனின் தந்தை எதிர்பாராதவிதமாக மரணத்தைத் தழுவினார். இந்தச் சோகம் நியூட்டனின் தாயாரைப் பாதித்திருந்ததால், நியூட்டனின் பிறப்பு அவருக்கு வேதனையைத் தான் கொடுத்தது.
கணவன் இல்லாமல் காலமெல்லாம் வாழ நியூட்டனின் தாயார் விரும்பவில்லை. நியூட்டனுக்கு மூன்று வயது ஆகின்றபோது அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார். பிறப்பதற்கு முன்பே, தாய் இன்னொரு மனிதரிடம் அடைக்கலம்.. ஏது செய்வதென்பது கூட புரியாத பருவத்தில் இருந்த நியூட்டனை அவரது பாட்டிதான் பராமரித்தார். தந்தையின் பொறுப்பும், தாயின் பரிவும் இந்தப் பாட்டியிடமிருந்து தான் நியூட்டனுக்கு கிடைத்தது.
தாய், தந்தை இருவருடைய அன்பை இழந்த சர் ஐசக் நியூட்டன் தனது பாட்டியிடம் அவ்விருவருடைய அன்பையும் பெற்றார். இப்படி அனாதையாக்கப்பட்ட சர் ஐசக் நியூட்டன் தான் பிற்காலத்தில் மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The best and invaluable gem of Mankind) என்று மக்களால் பாராட்டத்தக்க பண்பாளராகவும் – படைப்பாளராகவும் விளங்கினார்.
நியூட்டன் இளம் வயதிலேயே தன்னார்வம் மிக்கவராகத் திகழ்ந்தார்; சுயசிந்தனையும் சுய முயற்சியும் உடையவராக விளங்கினார். நியூட்டன் தமது கையாலேயே ஒரு காற்றாலையின் மாதிரியை அமைத்தார். கல்லினால் கதிரவ நிழற்கடிகை ஒன்றையும், நீர்க் கடிகாரங்களையும் வடிவமைத்தார். அத்துடன் படங்கள் வரைதல் – புத்தகங்கள் படித்தல் – மரத்தாலான மாதிரி உருவங்களை வடிவமைத்தல் – பூக்களையும் பல்வகைப் பூண்டுகளையும் திரட்டுதல் – பகற்கனவு காணல் ஆகியவை நியூட்டனது இளமைக்காலப் பொழுதுபோக்குகளாக அமைந்தன. என்னங்க..நம்ம அறிஞர் அப்துல்கலாம், ”கனவு காணுங்கள்” என்று சொன்னது நினைவுக்கு வந்திருச்சா…ஆமாங்க நாம எதைப் பற்றி கனவு காண்கிறோமோ அதுவாகவே மாறிப்போயிடுறோம்…நியூட்டனு
கல்வி
நியூட்டன் தாம் பிறந்த உல்ஸ்திரோப் என்ற கிராமத்தில்தான் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பள்ளிக் கல்வியை முடித்த பின்பு நியூட்டனுக்குக் கல்லூரி சென்று கணிதம் படிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. ஆனால் வறுமையோடு போராடிக்கொண்டிருக்கும் நியூட்டனின் பாட்டியால், மேற்கொண்டு அவரைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இயலவில்லை.
உண்ணும் உணவைத் தேடுவதற்கே பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டிய நிலை. அப்பறம் நியூட்டனை எப்படிப் படிக்க வைப்பார்? நியூட்டனுக்கு படிக்க ரொம்ப ரொம்ப ஆசைதான்… ஆனா ஆசை இருந்து பயன் என்ன?…பணமில்லை…அதனால நியூட்டனுடைய ஆசைக்கு தடையேற்பட்டுப்போச்சு. “ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா?, காசில்லாதவன் குடும்பத்திலே” அப்படிங்கற மாதிரி ஆயிப்போயிடுச்சு.
உயிர்வாழ ஏதாவதொரு வேலை தேடுவதே நல்லது என்ற முடிவுக்கு நியூட்டன் வந்தார். வேலையும் அவ்வளவு எளிதாக நியூட்டனுக்குக் கிடைக்கவில்லை. இறுதியில் நியூட்டனுக்கு ஒருவேலை கிடைத்தது. நியூட்டன் தனக்குக் கிடைத்த வேலையில் விருப்பத்தோடு பணியாற்றினார். நியூட்டனுக்குக் கிடைத்த வேலை என்ன தெரியுமா? சொன்னா ஆச்சரியப்படுவீங்க… ஆடுமேய்க்கிற வேலைதான்.. என்ன மலைச்சுப் போயிட்டீங்க.. அறிவியல் மேதையா ஒளிவீசப் போற ஒருத்தரு ஆடு மேச்சிருக்காரு…பாத்திங்களா? …
ஒரு நிலப்பிரபுவின் ஆடுகளை மேய்ப்பதே நியூட்டனுக்குக் கிடைத்த முதல் வேலை. அந்த வேலையை நியூட்டன் நான்காண்டுகள் மிகச் சிறப்பாகச் செய்தார். படிக்க வேண்டிய பையன், ஆடு மேய்ப்பதை அறிந்து, நியூட்டனின் தாய்மாமன் கண் கலங்கினார். அவரது முயற்சியால் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் நியூட்டன் சேர்க்கப்பட்டார். அங்கு சிறப்பாகப் பயின்று நியூட்டன் கணிதத்தில் பட்டம் பெற்றார்.
புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்தல்
ஒருமுறை விடுமுறை நாளில் தனது கிராமத்திற்கு வந்த நியூட்டன் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் ஆப்பிள் மரத்தினடியில் அமர்ந்திருந்தார் அப்போது ஒரு மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஒன்று கீழே விழுவதை நியூட்டன் கண்டார். இந்தக் காட்சிதான் அவரை சிந்திக்கச் செய்தது. மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது? என்ற வினா அவர் உள்ளத்தில் உட்கார்ந்து கொண்டது…. அதன் விளைவு எல்லாப் பொருட்களையும் தன் மையத்தை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது பூமி என்பதை நியூட்டன் அறிந்து ‘பூமிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு’ என்பதைக் கண்டறிந்தார்.
பூமிக்குள்ள ஈர்ப்பு சக்தி, வானத்திலுள்ள கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றிற்கும் உண்டு என்பதையும் நியூட்டன் கண்டுபிடித்தார். அந்த ஈர்ப்பு சக்திதான் கோள்களைச் சூரியனைச் சுற்றி வரும்படி செய்கின்றன என்று அறிந்ததும் நியூட்டன்தான்.
பணியும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்
1667 – ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தப் பணியில் நியூட்டன் மிகச்சிறப்பாகப் பணியாற்றினார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. நியூட்டன் அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். அவர் ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார்.
ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 – ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ஒளியைப் பற்றிய ஆய்வில் நியூட்டன் இரவு பகலாக பாடுபட்டார். சூரியனின் ஒளியை வெண்மை நிறம் என்றுதான் இன்றும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சூரியனின் ஒளி வெண்மை அல்ல; அது ஏழு நிறங்களின் தொகுப்பு என்று நியூட்டன் கண்டுபிடித்தார். இந்த நிறங்களின் சுருக்கம்தான் ஆங்கிலத்தில் ‘விப்ஜியார்’ என்று குறிப்பிடப்படுகிறது. நியூட்டனின் வட்டத் தகட்டைக் கொண்டு, சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களின் தொகுப்பைக் காணலாம்.
Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் நியூட்டன் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் நியூட்டன் வகுத்துத் தந்தவையே ஆகும்.
பெற்ற சிறப்புகளும் எழுதிய நூல்களும்
நியூட்டனின் அறிவாற்றலையும், கண்டுபிடிப்புகளையும் கவுரவிக்கும் வகையில், இங்கிலாந்து அரசானது அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தது. மேலும் இங்கிலாந்தின் நாணயச் சாலை பாதுகாப்பாளராகவும் நியூட்டன் பணி ஆற்றினார். ஆனால் அரசியலில் நியூட்டனின் அக்கறை செல்லவில்லை. அவரது மனம் முழுமையும் அறிவியலே நிறைந்திருந்தது.
1703 – ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் நியூட்டன் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 -ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி சிறப்பித்தார். இது நியூட்டனுக்குக் கிடைத்த உயரிய விருதாகும்.
நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன் பயனாக 1687 -ஆம் ஆண்டு “Mathematical Principles of Natural Philosophy” என்ற புத்தகம் வெளியானது. “Principia” என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இறுதிக்காலம்
1692 -ஆம் ஆண்டு முதல் 1694 -ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்க்கு ஆளானார். அவருக்கு நரம்பு தொடர்பான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் நியூட்டன் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார்.
பூமியின் ஈர்ப்புத் தன்மையைக் கண்டுபிடித்த இந்த மேதையை, குடும்ப வாழ்க்கை ஈர்க்கவில்லை. அதனால் இறுதிவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது வாழ்க்கையை அறிவியல் ஆய்வுகளோடு பிணைத்துக் கொண்டார். இதனால் நியூட்டன் நோய்வாய்ப்பட்டார். தன் அறிவால் அனைத்தையும் துலக்கமுறச் செய்த அறிவுப் பகலவனாகிய நியூட்டன் நோயின் தாக்கம் அதிகமானதன் விளைவாக 1727-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20-ஆம் தேதி தனது 85-ஆம் வயதில் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்றார். அவருடைய உடல் லண்டனில் அரச குடும்பத்தாரைப் புதைக்கும் புகழ்பெற்ற “Westminster Abbey”-யில் அடக்கம் செய்யப்பட்டது. இது எந்த மேதைக்கும் கிடைக்காத சிறப்பாகும். இங்குதான் இங்கிலாந்து நாட்டின் இளவரசியான டயானாவும் புதைக்கப்பட்டார்.
மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டது. நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் அலெக்ஸாண்டர் போப் எழுதிய “இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்… நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது” என்ற வாசக அஞ்சலி மிக ஆழமானது. இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது!
பாத்தீங்களா பிறக்கறது எந்தச் சூழல்ல வேணும்னாலும் இருக்கலாம். ஆனால் அப்படியே முயற்சி பண்ணாம முடங்கிப் போயிடக் கூடாது. முயன்றால் முடியாதது எதுவுமில்லைங்கறது நியூட்டனுடைய வாழ்க்கையிலிருந்து நமக்குத் தெரியுது பாருங்க…இனிமே என் சூழல் சரியில்லை…அப்படி இப்படின்னு…தத்துப்பித்துன்னு உளாறாதீங்க… உயர்ந்த நிலையில ஒங்களப் பத்திக் கனவுகாணுங்க… நீங்க என்ன நெனச்சீகளோ அதை உடனடியா அதை அடைவீங்க…அந்த நினைவுகள், கனவுகள் உண்மையானதா, நேர்மையானதா இருக்கணும்…அப்பறம் என்ன வெற்றி நம்ம பக்கம்தான்…
படித்தது மூன்றாவது…..அதுக்கு மேல படிக்க வசதியில்லே…வறுமை…அச்சுக்கோ
- படைப்பு
- மொழியின் அளவுகோல்
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.
- புகழ் பெற்ற ஏழைகள் – 12
- கல்யாணியும் நிலாவும்
- மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25
- நம்பிக்கை
- தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !
- என்னைப் பற்றிய பாடல் – 23
- காரைக்குடி கம்பன் கழகம்
- மனதாலும் வாழலாம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- லிங்கூ-வில் இயங்கும் காலமும் வெளியும் – கவிஞர் என்.லிங்குசாமி கவிதைகளை முன்வைத்து
- மாலு : சுப்ரபாரதிமணியனின் நாவல் – சமகால வாழ்வே சமகால இலக்கியம்
- ப.மதியழகன் கவிதைகள்
- பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்
- கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 8,9,10
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15
- உள்ளே ஒரு வெள்ளம்.
- ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 8
- “செங்கடல்”
- இரயில் நின்ற இடம்
- என்ன ஆச்சு சுவாதிக்கு?
- நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -7