தமிழ் ஸ்டுடியோவின் 19வது பௌர்ணமி இரவு.

This entry is part 4 of 20 in the series 21 ஜூலை 2013

 

நாள்: 22-07-2013,திங்கள் (பௌர்ணமி)நேரம்: இரவு 9 மணிக்கு.

இடம்: The Spaces, Besant Nagar Beach (தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் அருகே)

திரையிடப்படும் படம்: உதிரிப்பூக்கள்.

நண்பர்களே நீண்ட காலமாக தடைபட்டிருந்த தமிழ் ஸ்டுடியோவின் பௌர்ணமி இரவு திரையிடல் நிகழ்ச்சி இடம் இல்லாத காரணத்தால் சில இடையில் தடைபட்டிருந்தது. இப்போது மீண்டும் தொடங்குகிறோம். திரையிடலில் நிலாச்சோறும் வழங்கப்படும். நிலாச்சோற்றோடு தமிழின் ஆக சிறந்த படங்களில் ஒன்றான மகேந்திரனின் “உதிரிப்பூக்களை” பார்த்து மகிழுங்கள். திரையிடல் முடிந்ததும், இரவு முழுக்க முழுக்க இந்த படம் குறித்து நண்பர்கள் உரையாடலாம். அல்லது அங்கேயே படுத்து உறங்கலாம். அல்லது படம் முடிந்ததும், நீங்கள் வீட்டிற்கும் செல்லலாம்.

அனுமதி இலவசம். ஒரு அருமையான ராத்திரியை, அதன் ஏகாந்தத்தை உணர, சென்னை மாநகரின் வரங்களில் ஒன்றான பெசன்ட் நகர் கடற்கரையில் ஒன்று கூடுங்கள்.

தொடர்புக்கு: 9840698236

கொஞ்சும் நிலவு… கொஞ்சம் வெளிச்சம்… அகன்று விரிந்த கடல், காட்சிகளால் கண்களுக்கு விருந்தளிக்கும் திரைப்படம், ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களோடு உரையாடல், இரவு ஒரு மணிக்கு இதமான ஒரு தேநீர்… 


அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com
 

 
Series Navigationமாயமாய் மறையும் விரல்கள்வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -11 மூன்று அங்க நாடகம்
author

அறிவிப்புகள்

Similar Posts

Comments

  1. Avatar
    govind.karup says:

    கொஞ்சும் நிலவு… கொஞ்சம் வெளிச்சம் … அதில் நிறைய சந்தோஷமுடன் சிரித்த முகமாய் பௌர்ணமி போல் இருப்பது எப்படி… இந்த மாதிரி அழுகை காவியங்களை பார்ப்பது எப்படி. உபூ அற்புத படம், கருத்து வேறுபாடில்லை… அதற்காக இப்படியா?
    ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களோடு உரையாடல், –> ஒத்த சிந்தனையென்றால் மண்டையாட்டத் தான் முடியும்… எப்படி உரையாட முடியும்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *