மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு

This entry is part 16 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013


டாக்டர் ஜி. ஜான்சன்

மாதவிலக்கின் போது அதிகமாக இரத்தப்போக்கு உண்டாவதை மெனோரேஜியா ( MENORRHAGIA )என்று அழைப்பதுண்டு . அதிக நாட்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பதையும் இவ்வாறே கூறலாம்.
ஒரு மணி நேரத்தில் ஒரு விலக்கு கச்சை( sanitary pad ) மாற்ற நேர்ந்தால் அதை அதிகமான இரத்தப்போக்கு எனலாம்.

மாதவிலக்கை சீராக கட்டுப்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ( OESTROGEN ) , புரோஜெஸ்ட்டரான் ( PROGESTERON ) எனும் இரண்டு ஹார்மோன்கள்.

ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் கருப்பை உட்சுவரை கரு தங்குவதற்கு தயார் செய்கிறது. அந்த சுவர் தடித்து நிறைய புதிய இரத்தவோட்டம் அப்பகுதியில் உருவாகிறது. இது மாதவிலக்கு வட்டத்தின் ( MENSTRUAL CYCLE ) முதல் நிலை.

கரு தங்கினால் புரோஜெஸ்ட்டரான் ஹார்மோன் கருப்பையின் உட்சுவரை மேலும் தடிக்கச்செய்து கரு முட்டைக்கு தேவையான சத்துக்களை கொழுப்பு, இரத்தம் மூலமாக தர உதவுகிறது.

ஆனால் கரு தங்காவிடில், புரோஜெஸ்ட்டரான் சுரக்காமல் போய்விடும். அதனால் ஒரு வாரத்தில் கருப்பையின் உட்சுவர் உடைந்து இரத்தமாக வெளியேறிவிடுகிறது. இதையே மாதவிலக்கு இரத்தப்போக்கு என்கிறோம்.

இது தவிர இவை உண்டானாலும் அதிக இரத்தப்போக்கு எனலாம்:

* இரவில் அதிகம் போவதால் எழுந்து கச்சை மாற்றுவது

* அதிகமாக இரத்தக் கட்டிகள் வெளியேறுவது

* 7 நாட்களுக்கு மேல் மாதவிலக்கு நீடித்தால்

* மாதவிலக்கால் தூக்கம் கெடுவது

* இரத்தசோகையும் களைப்பும்

அதிகமான இரத்தப்போக்குக்கான சில முக்கிய காரணங்கள் வருமாறு:

* ஹார்மோன்களின் சமநிலையின்மை – hormonal imbalance

* மெனோபாஸ் நெருங்குதல் – close to menopause

* தசைநார்க் கட்டிகள் – fibroids

* கருத்தடை சாதனங்கள் – intra uterine devices

* கருக்சிதைவு

* குழாயில் கரு வளர்வது – ectopic pregnancy

* கருப்பை, சினைப்பை, பாலோபியன் குழாய் அழற்சி – pelvic inflammatory disease

* கருப்பை, சினைப்பை , கருப்பை கழுத்து புற்றுநோய் – uterine , ovarian , cervical cancer

* இரத்தத்தை இலேசாக்கும் மருந்துகள் – blood thinners

* இதர மருத்துவ பிரச்னைகள் – other medical problems

பரிசோதனைகள்

அதிகமாக இரத்தப்போக்கு உண்டானால் அதற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவரைப் பார்க்கவேண்டும். காரணம் தெரிந்தபின் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ளலாம். மருத்துவர் அல்ட்ராசௌன்ட் ( ultrasound ), ஹிஷ்டெரோஸ்கோபி ( hysteroscopy ) போன்ற பரிசோதனைகள் செய்து பார்ப்பார். தேவைப்பட்டால் டீ & சீ ( D & C ) செய்வார். இத்துடன் சிறுநீர், இரத்தப் பரிசோதனை , பேப் ஸ்மீயர் ( pap smear ) பரிசோதனைகளும் தேவைப்படும்.

சிகிச்சை முறைகள் :

* புருஃப்பன் ( Brufen ) போன்ற வலி குறைக்கும் மாத்திரைகள்

* ஹார்மோன் சிகிச்சை

* டிரான்எக்ஸ்அமிக் ஆஸிட் ( Tranexamic Acid ) இரத்தத்தை கட்டியாக்கி இரத்தப்போக்கை நிறுத்துகிறது

* டீ & சீ

* மையோமெக்டமி ( myomectomy ) – இதில் கட்டி மட்டும் கருப்பையிலிருந்து அகற்றப்படும் .

* ஹிஸ்டரக்டமி ( hysterectomy ) – புற்றுநோயாக இருந்தால் கருப்பை முழுதுமாக அகற்றப்படும்.

* இரத்தச் சோகைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் ( iron supplements ) தரப்படும்.

ஆகவே இந்த குறைபாடு உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. ஒரு பெண் நோய் சிறப்பு மருத்துவரை ( Gynaecologist ) பார்க்கவேண்டும். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதே மேல்.

( முடிந்தது )

Series Navigationவசை பாடல்பாரம்பரிய இரகசியம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *