தாகூரின் கீதப் பாமாலை – 80 பருவக் கால மழை .. !

This entry is part 15 of 15 in the series 1 செப்டம்பர் 2013

 

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

அறிவேன், நான்  அறிவேன்

தெரியாமல்  

இப்பாதையில் நீ மறந்து போய்

வழி தவறி  

வந்து விட்டாய் என்று !

அப்படியே  இருக்கட்டும்,  ஆமாம்

அப்படியே  இருக்கட்டும்.

திறந்து வைத்துள்ளேன்

வாசல் கதவை !

 

ஆபரணம் எதுவும் நீ

அணி யாமல்  

வந்திருப்பதைக் காண்கிறேன்.

குலுங்கும்  பாதச்

சிலம்பும் அணிய வில்லை  !

அப்படியே  இருக்கட்டும், ஆமாம்

அப்படியே இருக்கட்டும்.

 

எளிமை யாக நீ வா  

நளினத் துவ மின்றி !

என் முற்றத்தின் முன்னால்

மைசூர் மல்லிகைப்*  பூக்கள்

சிதறிக் கிடக்கும்.

ஏன் பொறுக்கக் கூடாது

சில வற்றை,

அவிழ்த்த கொண்டை அலங்கரிக்க  !

தயாராக எதுவு மில்லை

இந்த வீணைக் கம்பிகள்

இன்னும்

முறுக்கப் படாமல் உள்ளன !

அப்படியே இருக்கட்டும், ஆமாம்

அப்படியே இருக்கட்டும்.

 

நெஞ்சுக்குள் வந்து விடு

அண்டைப் புறத்தில்

ஊமை மாய்க் கிடக்கும்

வீணை !

பருவக் கால மழை நிற்காது

கொட்டும்

காட்டு வெளியில் !

என் மனத்தில்

எழும் கான  இசையும்

அவ்வித ஓசையில் தான் பாடும்

தாள நயமோடு

துள்ளிடும் காற்றால்

உள்ளம்

ஊஞ்சலாடி !

 

++++++++++++++++++++++++++++++

Maloti or Malati flowers à *மைசூர் மல்லிகை

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 44   1935  ஆகஸ்டில் தாகூர்  74 வயதினராய்  இருந்த போது எழுதப் பட்டு,  பருவ கால விழாக் கொண்டாட்டத்தில்  பாடப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] August 27, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *