இதய வலி

This entry is part 30 of 33 in the series 6 அக்டோபர் 2013

Inline image 1

 

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு

                                                                    

காற்றெழுதும் உந்தன் ஞாபகத்தை

யார் தடை செய்குவார் ?

தோற்றம் தரும் இந்த காதலையும்

யார் பிணை செய்குவார் ?

 

தொடரட்டும் உன்னோடு

நான் கொண்ட ஊடல்.

இதழினில் எப்போதும்

காதலின் கூடல்.

 

சுகமோ வலியோ

சுகித்துவிடு.

சுகித்தால் போதும்

கடந்துவிடு.

 

தடை செய்ய முடியாத

நினைவுகள் இன்று

உடல் தீண்டிக் கொல்கின்ற

மாயங்கள் உண்டு.

 

இதழ்கள் சொல்லும்

இல்லை என்று !

விழிகள் கெஞ்சும்

வேண்டும் என்று !

 

முரண்பட்ட கூற்றிற்குள்

தடுமாறும் நெஞ்சம்.

சுகப்பட முடியாமல்

உடல்களும் மிஞ்சும்.

 

தொடரும் தினமும்

இந்தப் பிணி.

என்றோ தீரும்

இதய வலி !

 

++++++++++++++++++++++

Series Navigation~ சீதாயணம் ~ (முழு நாடகம்)இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *