டெல்லியில் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் குற்றவாளிகளின் பாலியல் இச்சைகளுக்கு/விருப்பத்திற்கு எதிராக தீவிரமாக போராடியதால் தான் உயிரை இழக்கும் அளவிற்கு வன்முறைக்கு ஆளாகி இருக்கிறார்.
இதற்கு முன் அந்த கும்பல் ஒரு ஆணை பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி இருக்கிறது.நம்மில் 100இல் 99 பேர் உயிருக்கு பயந்து இருப்பதை எல்லாம் கொடுத்து விட தயங்க மாட்டோம்.ஒட்டு துணி கூட விடாமல் அனைத்தையும் பிடுங்கி கொண்டாலும் உயிர் பிழைத்ததே மகிழ்ச்சி என்று ஓடி வந்து விடுவோம்.
காவல்காரர் நண்பர்களோடு இருக்குமிடத்தில் போதை மருந்து விற்கபடுகிறது,rave பார்ட்டி நடக்கிறது என்ற சந்தேகத்தில் கைது செய்து சந்தேக வழக்கில் கூட்டி சென்று காவல் நிலையத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து கேள்வி கேட்டாலும் ,அடித்து உதைத்தாலும் விட்டு விட்டால் மகிழ்ச்சி தான்.அதனால் மாறாத ரணம் எனபது ஆண்களுக்கு கிடையாது.
பல லட்சக்கணக்கான ஆண்கள் காவல்துறையினரால் ஆணுறுப்புகளில் மின்சாரம் பாய வைக்கப்பட்டு துன்புருத்தபட்டிருக்கிரார்கள்.
ஆனால் பெண்கள் மட்டும் பெரிய இழப்பை சந்தித்தது போல ஆணாதிக்க சமூகத்தால் பார்க்கும் நிலையில் வைக்கபட்டிருக்கிறார்கள்.என்னை நாலு பேர் கட்டி போட்டு ,அடி அடி என்று அடித்தாலும்,ஆசன வாயில் கட்டையை விட்டு குத்தினாலும் உயிரோடு தப்பித்தால் பெரும் மகிழ்ச்சி தான்.காயங்கள் ஆறிய பிறகு சில நாளில் பழைய நிலைக்கு திரும்புவதற்கு பெரிய மன தடைகள் கிடையாது.
என் மகள்கள்,மனைவி,தாய்,பெண்,ஆண் நண்பர்கள் அனைவருக்கும் சொல்வது இது தான். மானமாவது ,மயிராவது,உயிர் தான் முக்கியம்,ரொம்ப ரொம்ப முக்கியம்.திருடர்கள் மிரட்டும் போது நகைகளை கழட்டி கொடுப்பது எப்படி புத்திசாலித்தனமோ,அதே போல எதிர்ப்பில்லாமல் எல்லா வன்முறைகளையும் தாங்கி கொண்டு உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்.,காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.உயிரை விட முக்கியமானது ஒன்றும் கிடையாது.ஏதோ இழந்து விட்டோம் என்ற நினைப்பு மிக பெரிய தவறு.
எனக்கு என் குடும்பத்தவரின்,நண்பர்களின் உயிர் தான் முக்கியம்.உயிரை இழந்தாவது மானத்தை காப்பற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணுவதை விட முட்டாள்தனம் கிடையாது என்பதை தான் வலியுறுத்துவேன்.
இது வன்முறை நிறைந்த உலகம்.இங்கு ஆண் சந்திக்கும் வன்முறைகளுக்கு குறைவு கிடையாது.அவனுக்கு கற்பு,பயிர்ப்பு ஒன்றும் கிடையாது என்பதால் அவன் அவன் மேல் விழும் வன்முறைகளை எளிதாக தாண்டி செல்கிறான்.அதே மனநிலையை பெண்களும் வளர்த்து கொள்ள வேண்டும்
கல்லூரியில் ராக்கிங் போது உடைகளை கழட்டு
என்று மிரட்டப்படும் போது மிகவும் தயங்கும்,அழுது கெஞ்சி,மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மாணவன் தான் ,மன,உடல் ரீதியான அதிக ராக்கிங்கிர்க்கு உள்ளாக்கபடுபவன்.சொல்லி முடிக்கும் முன்பே இந்தாடா என்று உடைகளை கழற்றி எறிபவன் தப்பிப்பது எளிது.
தன்னை காயபடுத்திய காவலர்களையோ,கயவர்களையோ,காமுகர்
உயிரை விட பெரியது ஒன்றும் கிடையாது.அதை கொண்டு சாதிக்க முடியாதது என்றும் எதுவும் கிடையாது.
- மெல்ல மெல்ல…
- அகமுகம்
- விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.
- மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு
- ஆழ் கடல்
- உலகெலாம்
- சிறுகவிதைகள்
- நய்யாண்டி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. !
- ஆணோ பெண்ணோ உயிரே பெரிது
- கண்ணீர் அஞ்சலிகளின் கதை
- பிரயாணம்
- லீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்
- பாவடி
- ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்
- புகழ் பெற்ற ஏழைகள் 29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழை
- என்ன இது மாற்றமோ ..?
- திண்ணையின் இலக்கியத் தடம் -5
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)
- சீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)
- “காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.
- நெடுநல் மாயன்.
- Writing Competition on Tamil History, Arts and Culture (Organized by Ilankai Thamil Sangam) on Saturday November 2nd
- க்ளோஸ்-அப்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 23
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- பார்வையற்றோர் நலப் பணி நினவு கூர்தல்
உண்மையிலேயே இவர் தன் கருத்தாகச் சொல்கிறாரா அல்லது வஞ்சப்புகழ்ச்சியணியில் சொல்கிறாரா என்று குழப்பம்.
உண்மையேயென்றால் –
இக்கட்டுரையில் அடிநாதமாக வரும் சொல் ‘மானம்’ அல்லது ‘கற்பு.
ஆண் வன்புணரப்படுவதில்லை. பெண்ணெ அதற்குள்ளாகிறாள். மானம் என்ற சொல் உடல் சார்ந்த – அதாவது வன்புணரப்படும்போது மானத்தை இழக்கிறாள் எனக்கொள்க – இழப்புக்கு குறியீடாக இங்கே கொள்ளப்படுகிறது.
இந்த இழப்பையும் ஆண் போலீசால் படும் வன்கொடுமைகளையும் இணத்துப்பேசி, ஆண் அவற்றத்தாங்கிக்கொண்டு வந்துவிடுகிறான். பெண்ணோ தாங்காமல் அதை இழந்தால் எல்லாவற்றையும் இழந்தேன் என தன்னை மாய்த்துக்கொள்கிறாள். பெண்ணுக்கு மானம் பெரிதன்று உயிரே பெரிது. பூவண்ணன் சொல்வது: அதை மாற்றிவிடுக. உயிரே பெரிது மானம் பெரிதன்று. அதாவது ஒரு கபோதிக்கும்பல் ஒரு அப்பாவிப்பெண்ணை வன்புணர்ச்சிக்காளாகும்போது அப்பெண் தன்னுயிரைக்காத்துக்கொள்ள அதற்கிணங்கிவிடவேண்டுமெபதுதான் பூவண்ணன் கருத்து.
இது தவறான வாதமாகப்படும். பெண் இழப்பும் ஆணின் இழப்பும் இங்கே வெவ்வேறாக இருக்கும்போது எப்படி இணைத்துப்பேச முடியும்?
வன்புணர்ச்சி என்றாலே அது பெண்ணுக்குத்தானே ?
வன்புணர்ச்சி ஒருத்தியை ஒரு கும்பல் பண்ணுவது; தில்லிச்சம்பவம். அல்லது ஒருத்தியை ஒருவன் பண்ணுவது பல் எடுகோள்கள் உண்டு. இதுதான் பூவண்ணன் கட்டுரையில் பேசப்படுகிறது.
அதே வேளையில் ஒரு நாடடை இன்னொருவன் இராணுவம் வீழ்த்தி தோல்வி நாட்டின் பெண்களை கூட்டம் கூட்டமாக வன்புணர்ந்து விட்டு போய்விடும். இங்கு ஒருவேளை பூவண்ணனின் கொள்கை சாத்தியாமாகலாம்.
//பெண்ணுக்கு மானம் பெரிதன்று உயிரே பெரிது. பூவண்ணன் சொல்வது: அதை மாற்றிவிடுக. உயிரே பெரிது மானம் பெரிதன்று. //
இஃதை இப்படி வாசித்திடுக:
பெண்ணுக்கு உயிர் பெரிதன்று; மானமே பெரிது;
பூவண்ணன் சொல்வது: இதை மாற்றிடுக:
பெண்ணுக்கு மானம் பெரிதன்று; உயிரே பெரிது.
இந்தக் குதர்க்கமான கண்ணோட்டம் ஆணாதிக்கத்தை நிலை நாட்டும் ஓர் ஆணாதிக்க வாதியின் பிற்போக்கான அநாகரீகக் கருத்தோட்டம். நீண்ட நாட்கள் பேரதிர்ச்சி தரும் இந்த கொடூர வன்புணர்ச்சி விளைவைப் பற்றி ஓர் பெண்தான் எடுத்துக் கூற வேண்டும்.
ஓர் ஆடவன் அத்தீங்கின் விளைவை ஆழமாக, மனித நேயமுடன் உணரவே முடியாது. நியாயம் கூறவும் முடியாது.
இம்மாதிரிக் குதர்க்கமான கருத்தோட்டம் வன்புணர்ச்சிக் கொடுமைகள் இன்னும் அதிகமாக விடுதலை நாட்டில் விதை விதைக்கும்.
சி. ஜெயபாரதன்
\ மானமாவது ,மயிராவது,உயிர் தான் முக்கியம்,ரொம்ப ரொம்ப முக்கியம்.திருடர்கள் மிரட்டும் போது நகைகளை கழட்டி கொடுப்பது எப்படி புத்திசாலித்தனமோ,அதே போல எதிர்ப்பில்லாமல் எல்லா வன்முறைகளையும் தாங்கி கொண்டு உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்.,காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.உயிரை விட முக்கியமானது ஒன்றும் கிடையாது.ஏதோ இழந்து விட்டோம் என்ற நினைப்பு மிக பெரிய தவறு. \பெண்ணுக்கு மானம் பெரிதன்று உயிரே பெரிது. பூவண்ணன் சொல்வது: அதை மாற்றிவிடுக. உயிரே பெரிது மானம் பெரிதன்று.\இஃதை இப்படி வாசித்திடுக: பெண்ணுக்கு உயிர் பெரிதன்று; மானமே பெரிது; பூவண்ணன் சொல்வது: இதை மாற்றிடுக: பெண்ணுக்கு மானம் பெரிதன்று; உயிரே பெரிது.\
ஸ்ஸ்ஸ்……….ஸப்பா கண்ண கட்டுதே……
கல்வியா செல்வமா வீரமா ……..அது அந்தக்காலம்
மயிரா, உயிரா மானமா? ………இது இந்தக்காலம்
கே.பி. சுந்தராம்பாள் அம்மாளிடம் (ஔவையாரிடம்) தான் கேழ்க்க வேண்டும்.பெரியது எது
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
……………………………………………..
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே
ஆள விடுங்க சாமி, நீர் புலவர்………நான் தருமி……..ஆனால் எனக்குப் பொன்னும் வேண்டாம் பொருளும் வேண்டாம். குழப்பமும் வேண்டாம்.
கட்டுரை ஆசிரியர் சொல்லும் அறிவுரை புரிகிறது, வன்புணர்ச்சி நோக்கில் தாக்கப்பட்டால் உடன்பட்டுவிடுங்கள் பெண்களே, உயிரைக் காத்துக்கொள்ளுங்கள், உங்கள் மனக்காயம் காலப்போக்கில் மாறும், உயிர் வாழ்வதே முக்கியம் என்கிறார். அவர் நல்லெண்ணத்தில் சொல்கிறார்.
“மாறாத ரணம் எனபது ஆண்களுக்கு கிடையாது” என்பது சரியல்ல. இவ்வாறு உடன்படுவது காலப் போக்கில் மனக்காயத்தை ஆற்றியதாகத் தெரியவில்லை. அதனால் இது ஒத்துக்கொள்ளப்படும் கருத்தாகத் தோன்றவில்லை. அவ்வாறு காலம் மனக் காயத்தை மாற்றாததாலேதான் சிறுவர்களாக இருந்த பொழுது தனக்கு நடந்த வன்புணர்வு அநீதியை பெரியவர்களானாலும் மறக்க முடியாத வெளிநாட்டு ஆண்கள் பிறகு மெல்ல வெளியிட்டு நீதி கேட்கிறார்கள்.
நம் நாட்டில் இந்தக் கொடுமை சிறுவர்களுக்கு நடக்காமல் இருந்திருக்காது. இந்திய ஆண்கள் இதைப் பற்றி முறையிட்டதாகத் தெரியவில்லை. கணவர்கள் மனைவியால் தாக்ப்பட்டாலும் இந்திய ஆண்கள் வெளியில் சொல்லமுடியாதவாறு சமுதாயத்தில் அது அவமானகரமான நிகழ்ச்சி என்பதால் மனதில் வைத்துக் கொள்வார்கள்.
இந்திய சமுதாயத்தில் பெண்களிடம் ஒரு எதிர்பார்ப்பு நிர்ப்பந்திக்கப் படுவது போல ஆண்களிடமும் ஒரு எதிர்பார்ப்பு நிர்பந்திக்கப் படுகிகிறது என்பதே உண்மை. அதனால் ஆண்களுக்கு பாதிப்பு இல்லை என்னும் ஆசிரியரின் கருத்து அடிப்படை இன்றி இருப்பது தெரிகிறது. மனதளவில் பாதிப்பு இருபாலருக்கும் உண்டு. ஆனால் இந்திய சமுதாயத்தில் பெண்களின் வாழ்வே பாதிக்கபடுவது உண்மை.
அத்துடன் காவல் துறையினரால் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை அனுபவிப்பதும், உடன்படிக்கும் மாணவர்களால் உடைகளுருவப்பட்டு அவமானப்படுத்துவதும் வன்புணர்வு தாக்குதலும் ஒன்றல்ல. அவை சித்திரவதை என்பதுடேன் நிற்பது. வன்புணர்வு என்பதில் சித்திரவதையுடன் தனிமனித உரிமையின் மீதான அத்துமீறல் அதிகம்.
இதற்காக குற்றவாளிகளுடன் உடன்படுவது தீர்வளிக்காது. அடிமேல் அடிகொடுத்து கயவர்களை மாற்றவேண்டும். தேசத்திற்காகப் போராடும் போராளிகளைப் போல சில பெண்களின் உயிர் காவு கொடுக்கப்படும் பொழுது அநீதி வெளிக்கொணரப்பட்டு தீர்வைத்தேடி சமுதாயத்தின் கவனம் திருப்பபடுகிறது. சட்டம் ஒழுங்குதான் சரியாகக் கையாளப்பட வேண்டும்.
கொடுமையான தண்டனைகளை கடைபிடிக்காத நாடுகளுக்கும் அங்குள்ள பெண்களின் சுதந்திர நிலைக்கும் உள்ள தொடர்பு சரியான முறையில் புரிந்து கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. மக்களின் சுதந்திர மனபோக்கின்படி இருபாலரையும் சரிசமமாக கருத வேண்டும், இருவருக்கும் சுதந்திரம் உள்ளது என்பதை அந்நாடுகளில் பெரும்பாலோர் நம்புவதால் பெண்கள் துன்பம் கொள்வதும் குறைவாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
கட்டுரை ஆசிரியர் கொடுக்கும் அறிவுரை, அக்கால பத்தாம்பசலி தாய்மார்களும், சமூகமும் கொடுமைக்கார கணவனுக்கு பணிந்து போவது நல்வாழ்க்கை தரும், காலப்போக்கில் எல்லாம் சரியாகப்ப் போய்விடும் என்று பெண்களுக்குக் கூறிய அறிவுரைக்கு ஒப்பானது.
பல்லாண்டுகளாக மக்களின் மனதில் ஊற வைக்கபட்டிருக்கும் கருத்தை தானே நீங்களும் சொல்கிறீர்கள்
ஆண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஆணுறுப்புகளில் மின்சாரம்,ஆயுதங்கள் பாய்ச்சப்படுவது பாலியல் வன்முறை அல்ல எனபது சரியான ஒன்றா
ஓரின சேர்க்கையாளரான காவல் துறை அதிகாரி,திருடன் ஆன் உறுப்பில் புணர்ச்சி செய்தால் தான் வன்புணர்ச்சியா.அப்படி செய்யப்படும் ஆண் கற்பை இழந்தவன் ஆகிறானா
நிர்வாணப்படுத்தப்பட்டு மின்சாரம் பாய்ச்சப்பட்டால் பொறுத்து கொள்ளலாம்,மானம்@கற்பு போகாது ,ஆனால் இன்னொரு ஆணின் உறுப்பு நுழைவதை உயிரை கொடுத்தாவது தடுக்க வேண்டும்.அல்லது அதை விட உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் எனபது ஞாயமா
ஆண் மீது நடத்தப்படுவதும் ,பெண் மீது நடத்தபடுவதும் பாலியல் வன்முறை தான்.அதை நாம் பார்க்கும் பார்வை தான் வேறு.கருகலைப்பு வசதிகள் இல்லாத காலத்தில் வன்முறை காரணமாக கரு உருவானால் வன்முறைக்கு ஆளானதை மறக்க முடியாத நிலைகள் பெண்ணுக்கு இருந்தன.இன்று அந்த நிலை கிடையாது
ஆணை போலவே பெண்ணும் தன மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை கண்டு துவண்டு விடாமல் எதிர்த்து நிற்க வேண்டும் என்று கருதுவதில் என்ன தவறு
நண்பர் பூவண்ணன்,
இதற்கு நேராகப் பதில் சொல்லுங்கள்.
உங்கள் குதர்க்கக் கட்டுரைப்படி வன்புணர்ச்சிக்கு உட்பட்டுக் கருத்தரித்துக் கலைத்த ஓர் அப்பாவிப் பெண்ணை, மனம் விரும்பி உங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைப்பீரா ?
சி. ஜெயபாரதன்
இதை என்னிடம் கேட்டால் என் பதில்”
காந்தியார் ஒரு சம்பவத்தில் ஆயிரக்காண பெண்கள் வன்புணர்ச்சிக்காளாகிய போது, அவர்களை மணன் செய்ய நல்லமனம் படைத்தவர்கள் முன்வரவேண்டுமென்றார். அச்சம்பவம் நினைவிற்கு வரவில்லை.
வன்புணர்ச்சி நாள்தோறும் ஆளாகுபவர்கள் CSWs (Commercial Sex Workers) அவர்கள் விரும்பித்தானே அங்கு வந்தார்கள் என்று குதர்க்க வாதம் புரியலாம். ஆனால்,அவர்கள் விரும்பாமலும் நட்க்கும். அதாவது மேடம் சொன்னால் போக வேண்டும்.
அவர்கள் வாழ்கிறார்கள். அரசு என் ஜீ ஓக்களோ அவர்களை மீட்டு வாழ்வில் அமர்த்துகிறது.
ஜயபாரதன் சுவாமியைப்போன்றவர்களின் கேள்வி அவர்களை அநாதைகளாக்கும்.
நல்லோருண்டு. அந்த ந்ல்லோரையும் கோழைகளாக்குவது கற்பு உடல் சார்ந்தது. loss of body chastity means loss of life itself. என்ற எழுதப்ப்டா சமூகச் சட்டம். எழுதப்பட்ட சட்டங்களைவிட எழுதப்படாதவையால் பெண்கள் வாழ்க்கை பாழாகிறது என நினவில் கொள்க. (எடு கோள்: ஆண் மூலம் அரசாளும். பெண் மூலம், நிர்மூலம்)
பூவண்ணன் இப்படி நோக்கத்துடன் எழுதவில்லை. நான் சொல்கிறேன். பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாவது அவளுக்கு நேர்ந்த கொடுமை. அவள் CSW ஆனது அவள் விரும்பியன்று.
பின்னர் ஏன் எழுதப்படா நெறிகளை நீங்களே கற்பனையாக வைத்துக்கொண்டு. அப்பாவிப் பெண்ணை, மனம் விரும்பி உங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைப்பீரா ?
இக்கேள்வி காந்தியாரைப் பரிகாசம் செய்கிறது. அப்பெண்களை மணம் செய்துகொள்ள வரவேண்டுமெனற விண்ணப்பத்தைகேட்போரை கேட்காதே என்று சொல்வதைப்போல இருக்கிறது.
//அப்பாவிப் பெண்ணை, மனம் விரும்பி உங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைப்பீரா ?//
ஏன் முடியாது?
நீங்கள் உங்கள் மகள்களை இலங்கை வாழ் தமிழ்ப் போராளிகளாய் இருந்து இன்று நிர்கதியற்ற ஊனமுற்ற ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பீர்களா? அவரது கருத்து தனி மனித தாக்குதலுக்கு நீங்கள் -வழக்கம் போல் – உபயோகிப்பது தவறு…
திரு பூவண்ணன் கூறியுள்ளது ஆபத்தான வாதமாகும். பெண்கள் எல்லாரும் இப்படி பாலியல் வன்முறை செய்பவர்களுடன் ” ஒத்துழைத்தால் ” நிலைமைய் என்ன ஆகும் தெரியுமா?
* இவளை அவிழ்க்கச் சொன்னால் உடன் எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டு தானே படுத்துக்கொண்டு தருவாள் என்று எல்லாரும் நினைக்கத் தோன்றிவிடும். அதனால் கற்பழிப்பு என்பது அன்றாட சாதாரண நிகழ்வாகிவிடும். அப்படி பலியாகும் பெண்கள் அது பற்றி யாரிடமும் சொல்லாமல் அதை ஒரு கெட்ட கனவாகவே எண்ணிவிடும் காலம் வந்துவிடும்.
* கற்பு என்பதை இழப்பது என்று சொல்வது கேலிக் கூத்தாகிவிடும்.
* இப்போதுகூட பாலியல் பலாத்காரத்துக்கு உட்படும் எல்லா பெண்களும் அதை வெளியில் சொல்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே.
* என்னக்குத் தெரிந்து மாற்றாந் தந்தையால் ( step – father ) பல நாட்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படும் மகள்கள் பல மாதங்களுக்குப் பிறகே தாயின் வற்புறுத்தலின் பேரில் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அத்தகைய பெண்களை நான் பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்லியுள்ளேன்.
* கூட்டாகவோ அல்லது தனியாகவோ பாலியல் பலாத்காரம் செய்வது மிருக குணமாகும். இதற்கு கடும் தண்டனையே தரவேண்டும். இதற்கு வெறும் சிறைத் தண்டனை போதாது. அவர்களுக்கு ஆண்மை நீக்கம் ( Castrate ) செய்யலாம். அந்தக் காலங்களில் இது போன்றவர்கள்தான் அரசர்களின் அந்தப்புரத்து பெண்களின் காவலுக்கு தைரியமாக அமர்த்தப்பட்டிருந்தனர்.
* இது தவிர வேறு என்ன தண்டனை தந்தாலும் அவர்கள் திருந்த மாட்டார்கள். அவர்களளின் ஹார்மோன் செயல்பாடு மாறாது. அதனால் அதை ஒரேயடியாகே இல்லாமல் ஆக்கிவிடவேண்டும்.
… டாக்டர் ஜி. ஜான்சன்.
நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,
அழுத்தமான பின்னோட்டம் சான்றுகளுடன் இட்டதற்குப் பாராட்டுகள். இதோ அடுத்து உங்கள் கதைக்கு ஓர் கதைக்கரு உங்கள் பதிலிலே உள்ளதே.
///என்னக்குத் தெரிந்து மாற்றாந் தந்தையால் ( step – father ) பல நாட்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படும் மகள்கள் பல மாதங்களுக்குப் பிறகே தாயின் வற்புறுத்தலின் பேரில் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அத்தகைய பெண்களை நான் பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்லியுள்ளேன்.///
சி. ஜெயபாரதன்
இஃது எப்படி இருக்கிறதென்றால், நீதிமன்றத்தில் ஒரு கற்பழிப்பு வழக்கில் கற்பழித்தவன் எனக்குற்றஞ்ச்சாட்டப்பட்டவனுக்காக (அவந்தான் செய்தான் என நன்கு தெரிந்தாலும்) வாதாடும் வழக்குரைஞரை, உன் மகளுக்கு நேர்ந்தால் இப்படி இவனுக்காக வாதாடுவீரா? என்று கேட்பதாகும். நீதிபதி உடனே அப்படிக்கேட்பவரின் மேல் வழக்குப்போட்டு உள்ளே தள்ளச்சொல்வார். வழக்குமன்ற நியதிகளை மீறுவது குற்றம்.
ஏனென்றால் வழக்குகளில் ஒரு நன்கு தெரிந்த குற்றவாளிக்கு ஆஜராக எவரும் முன்வராதபோது அரசாங்க வழக்குரைஞர் அவனுக்காக வாதாடப்பணிக்கப்படுவார். அரசாங்க அதிகாரிகளையோ ஆட்சிப் பதிவியிலிருப்பவர்களிடம் இதே கேள்வியை கேட்க தைரியமுண்டா? ஏய் அரசே, கசாப்புதான் கொன்னான் எனத்தெரிந்தும் அவனுக்காக வாதாட அரசாங்க வக்கீலைப்போட்டாய்? உன் வீட்டிலுள்ளவர்களைக்கொன்றால் தாங்குவாயா?
ஜயபாரதன் சுவாமி இதை நினைவிற்கொள்ள வேண்டும். இது விவாத அரங்கு. ஒருவர் தன் கருத்தை முன்வைத்து விவாதத்தைத் தொடங்குகிறார். அதில் கலந்து கொள்ளவேண்டுமே தவிர அவரிடம் அவர் தனிநபர் வாழ்க்கையை இழிவுபடுத்தும் கேள்விகளை வைப்பது விவாத அரங்கின் நாகரிமன்று. அவர் கருத்து அபத்தமான கருத்தென்றால் சொல்லலாம். எப்படி அபத்தம் என்று விளக்கலாம். ஆனால் ஒருபோதும் தனிநபராக விமர்சிக்கும் கேள்விகள் தகாதவை.
அந்நாகரிகத்தை மீறுவது அனுமதிக்கப்பட்டால், திண்ணை ஒரு பஜனைமடமாகும். அதாவது மாற்றுக்கருத்தேயிருக்காது. எல்லோரும் ஒத்துப்போகும்போது விவாதத்திற்கு இடமேயில்லை சார்..
Throwing the baby with bathwater.
மருத்துவரின் புல்லட்டட் பாயிண்ட்ஸ்களை கூட்டிக்கழித்துப் பாருங்கள். இந்த விடை வரும். வன்புணர்ச்சிக்காளாகும் பெண் தன்னை மாய்த்துக்கொள்ளவேண்டும். பூவண்ணன் வேண்டாம் தேவையில்லை. ஆண் செய்கிறானா எனக்கேட்கிறார்.
மருத்துவர் சொல்வதை ஏற்றுக்கொண்டால், என்ன நடக்கும்? அவர் எதை விரும்புகிறாரோ அதற்கு மாறாகவே நடக்கும். ஒரு பாயிண்டில் சொல்கிறார். பல பெணகள் இப்படி தங்களுக்கு நேருவதை வெளியில் சொல்வதில்லை.
பூவண்ணன் சொல்கிறார். அவர்கள் உயிரை மாய்த்துகொள்வதிலும் இதே நேரும்.
தில்லியில் வன்புணர்ச்சிக்காளான பெண், உடனே மரித்துவிடவில்லை. சில நாட்கள் உயிருடன் போராடிக்கொண்டிருந்தார். தான் உயிர்வாழ விரும்புவதாகவும் குணமாகி வந்தவுடன் தன்னை வன்புணர்ந்தவர்களை தண்டிக்க என்ன செய்ய முடியுமோ அதைச்செய்வேனென்றும் சொன்னார்.
அமில வீசப்பட்டு மரித்த விநோதினி, தன் முகங்கருகிய நிலையிலும் சில நாட்கள் அவர் உயிரோடிருந்தார்; அப்பொது தன் பெற்றோர்களிட,ம் தன்னை இப்படிச்செய்தவனை அவன் முகத்திலும் அமிலம் வீசி அவனும் உணரவேண்டுமெனச் சொன்னதாக வினோதினியின் தாயார் சொன்னார்.
இதிலிருந்து என்ன தெரிகிற்து என்றால், குற்றம் செய்தவர்கள் நன்கு தப்பிக்க வேண்டுமானால், வன்புணர்ச்சிக்காளோனோர் தங்களை மாய்த்துக்கொள்ளவேண்டுமென்பதா மருத்துவரே?
–தொடரும்.
மருத்துவரே…தொடர்ச்சி.
கேள்வி ஒன்றே. பூவண்ணன் நோக்கம் வேறு. என் நோக்கம் வேறு.
என் நோக்கத்தின்படி –
வன்புணர்ச்சிக்காளாகும் பெண் தன்னை மாய்த்துக்கொண்டால், இரு தண்டனைகள் அவளுக்கு.
1. கொடியவனனாலோ, கொடியவர்களாலோ பாலியல் கொடுமை.
2. தன் உயிரை தானே மாய்த்துக்கொள்வது (இதற்கு காரணம் ‘மருத்துவரின் புல்லட்ட பாயிண்டு //கற்பு என்பதை இழப்பது என்று சொல்வது கேலிக் கூத்தாகிவிடும்.// According to Doctor and general society, loss of body chastity means loss of life itself. The person should commit suicide. உலகம் தன்னை பழிக்குமே என அவள் தன்னை மாய்த்துக்கொள்கிறாள்.
மருத்துவருக்குத்தான் இக்கேள்வி:
என் இரு தண்டனைகள் அவளுக்கு?
ஆண்மை நீக்கம் சரியான தீர்ப்பு.
5 வயது சிறுமீ அப்பாவால் கற்பழிக்கப்பட்டு வெறும் அபராதம் உடன் தந்தை ஜாம் என்று வந்துவிட்டார் சௌதியில் . இந்த அதி மேதாவி கருத்தை எப்படி அன்டத பிஞ்சு வரை கொண்டு செல்வது ??
//அதே வேளையில் ஒரு நாடடை இன்னொருவன் இராணுவம் வீழ்த்தி தோல்வி நாட்டின் பெண்களை கூட்டம் கூட்டமாக வன்புணர்ந்து விட்டு போய்விடும். இங்கு ஒருவேளை பூவண்ணனின் கொள்கை சாத்தியாமாகலாம்.//
பூவண்ணனின் கருத்து ஒருத்தி என்றளவில் நிற்க அதை நாம் பயங்கரமான கருத்தென்கிறோம்.
பங்களா தேஷ் – பாகிஸ்தான் போரில் ஆயிரக்கணக்கான பங்களா தேசத்துப்பெண்கள் வன்புண்ர்ச்சிக்காளாக்கப்பட்டனர் பாகிஸ்தான் இராணுவத்தால். அவர்களுள் பலர் வன்புணர்ச்சிக்குப்பின் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பலர் தாய்மையடைந்தனர். அவ்வன்புணர்ச்சியில் குழந்தைகள் பிறந்தன.
இக்கொடுமையைச் சிங்களப்படை தமிழ்ப்பெண்கள் மீது நடாத்தியது. பல நாடுகளில் இப்படி நடக்கிறது. வரலாற்றில் வெற்றியடைந்த படை ஊரையும் நாட்டையும் கொள்ளையடிக்கிறது. அழிக்கிறது. ஆண்களைக்கொல்கிறது. பெண்களை வன்புணருகிறது. இது இன்றுவரை தொட்ரும் வரலாறு.
திருவாளர்கள் தேமோழி, ஜயபாரதன், மருத்துவர் ஜாண்சன் – இன்னும் பலரும் சேர்ந்துகொள்ளலாம் – என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்::
” இப்படி வன்புணர்ச்சிக்காளானோர் ஓரிருவர் அல்ல; பல்லாயிரக்கணக்கான பெண்டிர்….இவர்களெல்லாரும் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ளவேண்டுமா? “
நண்பர் கணபதி ராமன்,
பூவண்ணனின் இந்தக் கட்டுரை தனிப்பட்ட ஓர் அப்பாவிப் பெண்ணைப் [Individual Human Crime] பலவந்தப்படுத்தும் மூர்க்க ஆடவன் / ஆடவரைக் கடுமையாகத் தண்டிக்காமல் ஆதரித்து, பலி ஆடு பணிந்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதைபோல் ஆணை யிடுவது ஏற்றுக் கொள்ள முடியாத குதர்க்க வாதம்.
நீங்கள் தண்டிக்க முடியாத, போர்க்காலத்து இராணுவக் காட்டுமிராண்டிக் கற்பழிப்புகளை [Massive War Crime] இதனோடு ஒப்பிடுவது ஓர் ஒவ்வாத, உதவாத உபதேசம்.
சி. ஜெயபாரதன்.
என் கேள்விக்கு ‘ஆம்’ என்றால், பூவண்ணனின் பயங்கரமான கருத்துக்கு ஆம் என்று சொல்வது தொலைவில் இல்லை. உஷார்!
பூவண்ணன் பின்னூட்டம் படிக்க: ஆணும் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறான் என்கிறார்.
இருநாட்களுக்கு முன் தமிழ் தொலைக்காட்சியொன்றில் ஒரு போலீசதிகாரி ஆண்களிடையே ஓரினச்சேர்க்கை கொலைகள் பெருகிவருகிறது என்றார். அப்பேட்டி, சென்னையில் போனவாரம் ஒரு வங்கி அதிகாரி தன் வீட்டில் பத்து சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்குத் தொடர்ந்து உள்ளாக்கிய போது கொல்லப்பட்டார்.
சிறைச்சாலைகளில் நடப்பவை – மரக்கலத்தில் நாட்கணக்கில் குடிநீரில்லாமல் தவிப்போர் கடல் நீரைப்பருகுவ்து போல – குளிர்மலை மீது விழந்த விமானத்தில் உயிர்பிழைத்த பயணிகள், பலநாட்களாக காப்பாற்றப்பட வழியில்லாமல், உணவில்லாமல் தவித்து, அருகில் கிடக்கும் மனித சடலங்களைப் பிட்டுபிட்டு சாப்பிட்டு தங்களுயிரைக் காப்பாற்றிக்கொள்வது போல- அபரேசன்ஸ்.
ஆணுக்கு ஓரினச்சேர்க்கையில் இழைக்கப்படும் வன்புணர்வுக்கொடுமை, ஒரு அப்நார்மல் சிச்சுவேசன் சமூஹத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஓரினச்சேர்க்கை நார்மலன்று. சரியா தவறா என்பது எட்டார்னல் ஆர்குமெண்ட். அவுட் ஆஃப் பர்வியூ இங்கே. அப்நார்மல் என்றால் மட்டும் போதும் நமக்கு.
அந்த போலீசு ஏன் செய்கிறான்? அங்கே பெண்ணிருந்தால்? அவளைத்தான் வன்புணர்ந்திருப்பான். சிறைச்சாலைகளில் ஓரின வன்புணர்ச்சிகள் அதிகம்.
ஆணுக்கு இங்கு நேருவது அபரேசன்ஸ்; அப்நார்மல்ஸ். பெண்ணுக்கு நேருவது இயற்கை. இரண்டையும் ஒப்பிட முடியா.
பெண் உடல் வலிமை ஆணுக்கு நிகரானதன்று என்பது உண்மை.
எனவே இங்கே வெறும் வன்புணர்ச்சிக் கொடுமை மட்டுமன்று. ஒரு வலிமையற்ற பிராணியை இன்னொரு வலிமைமிக்க விலங்கு விரட்டிப் புணர்ந்து கொல்கிறது எனவும் கொள்க. அப்படிக்கொள்ளின், அப்பிராணியை எவர் காப்பாற்ற வேண்டும்?
கருநாநிதி எழுதியது போல ‘என்றைக்கடா உங்கள் அம்மன் பேசினாள்??’ அப்படத்தில் இவ்வசனம், ஒரு ஏழை அனாதையாக அலையும் பெண்ணை ஒருவன் கோயிலில் வைத்தே வன்புணரவருவான். அதாவது இறைவனை நம்பி பயனில்லை. மனிதனையே நம்பவேண்டும். சட்டங்கள். போலீசு, மற்றும் நாம்.
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்றா கூறி உள்ளேன். குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்று தர கூட பாதிக்கப்பட்டவர் உயிரோடு இருந்தால் வாய்ப்பு அதிகம் என்று தானே கூறுகிறேன்
எதிர்க்க முடியாத சூழ்நிலையில் இழக்க கூடாத ஒன்று இருக்கிறது,அதை இழப்பதை விட உயிரை மாய்த்து கொள்வதே மேல் என்ற எண்ணத்தை விட உயிரோடு தப்பித்து கொண்டு பிறகு தன்னிடம் வன்கொடுமை புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுங்கள் என்று கூறுவது தவறா
வன்கொடுமையால் ஆண் ,பெண் இருவருக்கும் பாதிப்புகள் உண்டு.ஆனால் பெண்ணை சமூகம் இழக்க கூடாத ஒன்றை இழந்தவள் என்று பார்க்கும் பார்வை சரியான ஒன்றா.கத்தியால் குத்துபட்டது போல,உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி கொடுமை செய்யப்பட்டது போல தான் அதுவும் சமூகம் கருத துவங்கினால் பெண்ணின் மீது மட்டும் திணிக்கப்பட்ட இழக்க கூடாத ஒன்று அவளிடம் இருக்கிறது என்ற பயமுறுத்தும்,அடிமைபடுத்தும் எண்ணம் ஒழியும் வாய்ப்புகள் இருக்கிறது அல்லவா
ஒரு சந்தேகம் இங்கு . கட்டுரையளார் முஸ்லிம், கிரிஸ்துவ பெண்களுக்கும் சேர்த்துதான சொல்லுகின்றார் ?
அன்பின் பூவண்ணன்,
மிக நல்ல நோக்கத்துடன் எழுத விழைந்துள்ளீர்கள். எழுத முயற்சிக்கிறீர்கள். நல்லது.
வன்புணர்ச்சிக்கு ஆளான பெண் அதை ஒரு விபத்து போன்று எதிர்கொண்டு — அந்த குற்றத்தை செய்த குற்றவாளி மற்றும் குற்றவாளிகளை தண்டிக்க முனைய வேண்டும். அந்த நிகழ்ச்சிக்குப் பின் வாழ்க்கை குலைந்தது போன்று துவண்டு போகாது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கலாம். மேலும் சமூஹத்திலும் இந்த நிகழ்வுக்கு உள்ளான ஒரு பெண்ணை குற்றவாளி போன்று கருதாது ஆதுரத்துடன் அந்த பெண்ணை அரவணைக்கும் போக்கு சமூஹத்தில் வளர வேண்டும்.
அதே சமயம் இது போன்ற வன்முறையில் ஈடுபடும் அடாவடியான ஆண்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வன்புணர்வால் ஒரு பெண் இறந்தால் — வன்புணர்வு என்ற அம்சத்துடன் — கொலை — அதுவும் Rarest of the rare கொலை — என்று கருதப்பட்டு சட்டத்தால் இது போன்ற கொலைக்கு — குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அது அவசியம் கொடுக்கப்பட வேண்டும்.
வன்புணர்வுக்கு ஆளான பெண் – அந்த நிகழ்ச்சிக்குப் பின் அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய முறையான Psychological counselling – சட்டத்தின் வழிகாட்டல்கள் படி வன்புணர்வுக்கு ஆளான பெண்ணையும் குற்றவாளிகளையும் முறையாகக் கையாள வேண்டிய போலீஸ்துறை — அந்தப் பெண்ணின் மீது சாக்ஷிக்காக வேண்டி நிகழ்த்தப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் — அந்த பெண்ணுக்கு உரிய காலத்தில் முறையாகக் கிடைக்க வேண்டிய மருத்துவ சிகித்சை – அந்த பெண்ணை அரவணைக்க வேண்டிய சமூஹம் — வாய்தாக்கள் இல்லாது வக்காலத்தை துரிதமாக முடிக்க வேண்டிய ந்யாயாலயம் — குற்றத்தின் intensityக்குத் தக்கவாறு கிடைக்க வேண்டிய தண்டனை – இவையத்தனையும் இந்த விஷயம் சார்ந்து எழுதப்பட வேண்டும். ஒரே நபர் எழுதுவது கஷ்டம் தான். மருத்துவம் மற்றும் மருத்துவம் – சட்டம் பிணைந்த விஷயங்களை தனியொரு வ்யாசமாக அன்பர் ஜான்சன் சமர்ப்பிக்க வேண்டும் என விக்ஞாபிக்கிறேன். மற்ற துறைகளைச் சார்ந்தவர்களும் இது சார்ந்து எழுத வேண்டியது அவசியம்.
அன்பின் பூவண்ணன், வன்புணர்வுக்கு ஆளான பெண் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும் என்பதிலும் அவளை சமூஹம் ஆதுரத்துடன் அரவணைக்க வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. இதை மயிர், உயிர், மானம் என்பது போன்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையாளாது இருந்திருக்கலாம்
ஜான்சன் ஐயா
நீங்கள் சொல்வதை தானே நானும் கூறுகிறேன்.எதனால் பெண்கள் தங்கள் மீது இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை பற்றி புகார் கொடுக்க கூட தயங்குகிறார்கள்
வீட்டில் திருடு போனால்,பலரால் கட்டி வைத்து அடிக்கப்பட்டால்,கத்தியால் குத்தப்பட்டால் புகார் கொடுக்க தயக்கம் இருக்குமா
இழக்க கூடாத ஏதோ ஒன்று இருக்கிறது.அதை இழந்து விட்டு உயிர் வாழவதே தவறு.அதனால் அதை மறைத்து விடு என்ற எண்ணம் தானே இந்த தயக்கத்திற்கு காரணம்.அதை எப்படி உடைப்பது
மும்பையில் பத்திரிக்கையாளரை வன்புணர்வு செய்த குழு அதற்க்கு முன் பலரை அதே இடத்தில வன்புணர்வு செய்துள்ளது மெதுவாக வெளியே வருகிறது.இதற்கு முன் ஏன் அவர்கள் புகார் செய்யவில்லை.அதனால் தானே தொடர் வன்புணர்வுகளும்.
இழக்க கூடாததை பறி கொடுத்தவள் என்று உலகம் தூற்றுமே என்ற எண்ணம் இருக்கும் வரை நூற்றில் ஒரு வன்புணர்வுக்கு தான் புகார்கள் பதிவாகும்.
பாலியல் வன்முறையை மற்ற வன்முறைகளை போல எடுத்து கொண்டு ,வன்முறையால் பாதிக்கப்பட்டவர் அதற்கான தண்டனையை வன்முறையை நிகழ்த்தியவர்கள் பெற போராட அவர்கள் முதலில் மற்றவர்களை விட தான் தொலைக்க கூடாததை தொலைத்தவள்,அதனால் சமூகத்தால் குறைவாக மதிக்கபடுவோம் என்ற எண்ணத்தை மனதில் இருந்து அழிக்க வேண்டும்.
அன்புள்ள பூவண்ணன் அவர்களுக்கு ,
உங்கள் கட்டுரையை படித்த பின் எனக்கு எழுந்த சில கேள்விகள் இவை .
1.பாலியல் வன்முறைக்கு தண்டனை கடுமையாக இருக்கும் நாடுகளில் பெண்கள் அடிமை நிலையில் இருக்கிறார்கள் என்றும் அது இல்லாத நாடுகளில் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறீர்கள் .சரி பாலியல் வன்முறைகள் குறைய உங்கள் கருத்துப்படி என்ன வழி என்று கூறுங்கள் .இல்லை தண்டனையே இல்லை என்று சொல்லிவிட்டால் அவை இல்லாமலே போய் விடக்கூடுமா ?
2.மானம் பெரிதென நினைத்து போராடியதால் தான் இத்தகைய வன்முறையை அந்த பெண் சந்திக்க நேர்ந்தது என்று கூறுகிறீர்கள் .பலரால் வன்புணரப்படும் பெண் அனைவரின் இச்சை தீரட்டும் என்று பொறுத்திருந்தால் சிறு காயங்களுடன் தப்பியிருக்கக் கூடுமா ?
அதே போல சிறு காயங்களுடன் தப்பிய பெண் உயிராவது பிழைப்போம் என்று இணங்கியதால் தான் அவ்வாறு தப்ப இயன்றதா ?.
3.வன்புணர்பவர்களை இத்தகைய வன்முறைக்கு அந்த பெண்ணின் எதிர்ப்பே தூண்டியது என்பதற்கு என்ன சான்று ?sexual perversionsல் பிறரை துன்புறுத்தி ஏன் சாகடித்து கூட climax எய்துபவர்கள் இருக்கிறார்கள் என்று உளவியல் சொல்கிறது .இந்நிலையில் என்ன செய்வது ?
4.ஆண்களிடம் பாலியல் வன்முறை பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று கூறுகிறீர்கள் .இது உண்மைக்கு புறம்பானதாகும் . ஆணோ பெண்ணோ பாலியல் வன்முறை என்பது அவர்கள் மனதில் ஆறாத ரணங்களையே ஏற்படுத்துகிறது .
5.பணிபுரியும் இடங்களில் எல்லாம் பெண்கள் பாலியல் தீண்டல்களுக்கு
ஆளாக்கப்படுவது (புணர்ச்சி அல்லாத )பற்றி உங்கள் கருத்து என்ன ?சரி தடவ தானே செய்கிறார்கள் ,செத்தா போய்விட்டோம் என்று போக வேண்டியது தானா ?
நீங்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு பின் வாழ்க்கை இருக்கிறது என்று ஆறுதல் சொல்வது போல சொல்லி ஒரு ஆபத்தான கருத்தை வலியுறுத்தி இருக்கிறீர்கள் .வன்புணர்ச்சி தானே ,போகிறது என்று பொறுத்து கொண்டால் ,பின்னர் வாழ்க்கை இருக்கிறது என்று சொல்கிறீர்கள் .போராடுவதால் தானே அது வண்புணர்ச்சியாகிறது இல்லாவிட்டால் வெறும் புணர்ச்சி (sex )தானே என சொல்ல வருகிறீர்களா ?
போராடும் ஒவ்வொரு பெண்ணின் வலிமைக்கு பின்னால் போராட முடியாத அல்லது அனுமதிக்கப்படாத பல்லாயிரம் பெண்களின் வலி இருக்கிறது .
பாலியல் வன்முறை என்பது ஒரு உரிமை மீறல் .
ஒரு பெண்ணின் உடல் அவளின் தனி உரிமை .அதை தொடவும் புணரவும் அனுமதிக்கும் அதிகாரம் அவளுக்கு மட்டுமே உண்டு .அதை மீற முயல்பவர்கள் கண்டிப்பாக எதிர்க்கப்பட தண்டிக்கப்பட வேண்டியவர்கள் .
அவர்கள் அறியாதவர்களாக இருந்தாலும் சரி ,உடன் பணிபுரிபவராக இருந்தாலும் சரி இல்லை கணவனாக இருந்தாலும் சரி .
அன்புடன் ,
பூங்குழலி
நான் கூற நினைத்ததை எளிமையாக விளக்கிய நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு மிகவும் நன்றி.
வன்புணர்வு தவறு எல்ல எனபது என் வாதம் அல்ல.உயிரை வேண்டுமானாலும் விடலாம் ஆனால் வன்புணர்வை தடுக்க வேண்டும் என்று என்னும் அளவிற்கு அதனால் பாதிப்பு ஒன்றும் கிடையாது என்பதை தான் வலியுறுத்த விரும்பினேன்.
பரீட்சையில் தோல்வி,காதல் தோல்வி,மிகவும் நேசித்த உறவின் மரணம்,பெரும் பண இழப்பு,தொழிலில் மோசடி,கொடிய நோய் என்று எது வந்தாலும் அதனை எதிர்கொண்டு வாழ வேண்டும் என்று கூறுவோமா அல்லது அதை எதிர்கொள்வதை விட தற்கொலை மேல் என்று கூறுவோமா
இதை போல வன்புணர்வை எடுத்து கொள்ளுங்கள் என்று தானே கூறுகிறேன்.அதனால் பாதிப்பு மிக மிக அதிகம் என்ற கருத்தாக்கம் சாதிப்பது என்ன.பாதிக்கப்பட்டவர் வாழ்நாள் முழுவதும் பறி கொடுத்த நிலையில் வாழ்வது ,அவர் இழந்தது இழக்க கூடாத ஒன்று என்று மற்றவர்கள் பச்சாதாபம் காட்டுவது தான் சரியான ஒன்றா
விபத்து போல எடுத்து கொள்ளுங்கள்.அதில் உங்கள் தவறு ஒன்றும் கிடையாது.அதனால் மறக்க கூடாத,மறக்க முடியாத இழப்பும் ஒன்றும் கிடையாது.தைரியமாக நடந்ததை வெளியில் கூறி தண்டனை பெற்று கொடுங்கள் என்று சொன்னால் நல்ல மாற்றங்கள் வராதா
நண்பர் பூவண்ணன்,
Charity begins at home.
இதற்கு நேராகப் பதில் சொல்லுங்கள். உங்கள் குதர்க்கக் கட்டுரைப்படி வன்புணர்ச்சிக்கு உட்பட்டுக் கருத்தரித்துக் கலைத்த ஓர் அப்பாவிப் பெண்ணை ஆதரித்து, மனம் விரும்பி உங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைப்பீரா ?
நான் முன்பு கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், இதை ஒரு விபத்து என்று கருதி ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி நியாயப் படுத்தி நழுவி விட்டீர்களே !
சி. ஜெயபாரதன்
மணவயது வந்த மகன் ஒரு தந்தைக்கடிமையென நினைப்பதே தவறு. உங்கள் கேள்வியின் அடிப்படை அத்தவறான பார்வையே.
தந்தை ஆலோசனை சொன்னலாம்: இப்பெண் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு விருப்பமா என்றுதான் கேட்க வேண்டும்.
ஒரு வன்புணர்ச்சிக் கொடுமைக்கு ஆளான பெண் அப்பாவியே. அவளை ஒருவர் தன் மகனிடம் மணந்து கொள் என்று சொன்னால் அவர் மகன் தகப்பனைப்போல சிந்தனையுடயவனாயின் செய்வான். ஆனால் மறுதலிக்கலாம். அவன் விருப்பம். (ப்ளீஸ் நோட்: அவளிடம் மற்றபல அக்கம்பளிஷ்மெண்ட்ஸ் இருக்கவேண்டும். ‘பாவம்’ என்று செய்யப்படும் மண்ங்களும் பெண்ணைச் சிறுமைப்படுத்தலே!)
எனவே திரு ஜயபாரதனின் கேள்வி: மகனை விட்டுவிட்டு, நீங்கள் உங்கள் இளவயதில் உங்கள் தந்தை இப்பெண்ணை மணந்து கொள்கிறாயா என்றால் ஆமென்பீர்களா? என்றுதான் இருக்க வேண்டும்.
திரு ஜயபாரதன்! ஆமென்றோர் பலருண்டு. இன்னொருவனை இளம்பிராயத்தில் தவறாக நம்பி மோசம் போன பெண்கள் அத்தவறை உணர்ந்து பின்னர் அத்தவறை மணத்திற்கு முன்பேயே சொல்லிவிட்டு மணாளனின் விருப்பத்தோடே மணம் புரிந்தோருண்டு.
எடு கோள். டி .வி ராஜேந்தர். உஷா என்ற நடிகை ஒரு நடிகரால் ஏமாற்றப்பட்டார். அதைக் கண்டு தெரிந்தபின்னரே உஷாவை மணமுடித்தார் ராஜேந்தர். அவர்கள் குழந்தைகள்தான் சிம்பு, குறள். அப்பெண்ணை அவர் ஒருதலையாகக் காதலித்திருந்திருப்பார்.
சமூகம் மாறும்போது நாமும் மாற வாய்ப்புண்டு. உடல் சார்ந்த ஒழுக்கம் முக்கியம் இருபாலருக்கும். அதே சமயம், பாலியல் பலாத்காரக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண், உடல் சார்ந்த ஒழுக்கத்தை இழந்தால் அவள் அனைத்தையும் இழந்தாள் என்ற கற்பனையான பார்வை ஆணாதிக்கத்தின் உச்ச கட்டம். இப்படி பெண்ணாதிக்கமுண்டா? பெண்ணுக்கு என்ன சொல்லப்படுகிறது? ‘கலியாணத்துக்கு முன் ஆம்பிளைங்க அப்படி இப்படி இருப்பாங்கதான்!’ (மணத்திற்குப் பின்னும் சொல்லப்படுகிறது)
களவொழுக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறாக வைக்கப்பட்டது ஆணாலே. (அவள் பிள்ளை பெற்றுக்கொள்வாளே நாங்கள் பெற மாட்டேமே என்பது முட்டாள்தனமான வாதம்!)
திரு ஜயபாரதன் ஒரு திரைப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் தீமே இதுதான். ராஜா ராணி. One of the best films that have hit the Tamil screen in recent times, slight defects here and there notwithstanding.
அன்புள்ள பூங்குழலி அவர்களுக்கு
நான் தண்டனையை என்றும் எதிர்க்கவில்லை.இறந்த உடலுடன் உறவு கொள்ளும் மனநோயாளியை போல,பார்ப்பவர்களை எல்லாம் கடிக்கும் மனநோயாளியை போல வன்புணர்வு செய்த குற்றவாளிகளை பாருங்கள்.அவர்களால் பாதிக்கப்பட்டவர்களை பரிதாபமாக பார்க்காதீர்கள் என்று தான் கூறுகிறேன்.
வன்புணர்வு செய்பவர்களுக்கு சிறையிலேயே தனி மன நல பிரிவு வைத்து அங்கு சிகிச்சை செய்ய வேண்டும்.மருந்துகளின் மூலம் ஆண்மையை அகற்றும் வைத்தியமும் செய்வதில் எனக்கு முழு உடன்பாடு தான்.
எந்த குற்றமாக இருந்தாலும் மரண தண்டனை சரியான தண்டனை,நாகரீக சமூகம் கொடுக்க கூட தண்டனை அல்ல என்பதே என் கருத்து
நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை.அடித்து துன்புறுத்தி சாகடித்து,இறந்த உடலுடன் வன்புணர்வு செய்பவர்களும் இருக்கிறார்கள்.கூட இருந்த நண்பன் சிறுகாயங்களுடன் வெளிநோயாளியாக தான் மருத்துவம் பார்க்கபட்டதையும்,வண்டியில் இருந்து வெளியே தள்ளப்பட்ட பிறகு மணிகணக்கில் இருவரும் உதவிக்கு கதறியதையும் வைத்து ஒரு வேளை போராடாமல் இருந்திருந்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்குமோ என்ற எண்ணம் தவறா
தப்பிக்க வேறு வழியில்லாத நிலையில் உயிர் முக்கியம் என்ற எண்ணம் கொள்ளுங்கள் என்பதில் தப்பிக்க வேறு வழியே இல்லை என்பதை விட்டு விட்டு பார்ப்பது ஞாயமா.அலுவலகத்தில்,பொது இடங்களில் பாலியல் அத்துமீறல்களை தைரியமாக தட்டி கேட்க அவற்றை தங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையாக மட்டும் பார்க்கும்,பெரிய இழப்பாக எண்ணாதவர்களால் சுலபமாக முடியும்.
அத்துமீறல்களை பெரிய இழப்பு என்று எண்ணி,அதை பற்றி புகார் தெரிவித்தால் பெரிய அவமானம் என்று வருந்தி வேலையை விடுபவர்களை எப்படி புகார் செய்யும் நிலைக்கு,வேலையை விடாமல் வன்முறை புரிபவர்களை தண்டிக்க வைக்க போராடும் நிலைக்கு நீங்கள் எதையும் இழக்கவில்லை,சமூகமும் உங்களை ஏளனமாக பார்க்காது என்ற கருத்தை அவர்கள் எண்ணாத வரை எப்படி மாற்ற முடியும்.
ஆண் சந்திக்கும் பாலியல் வன்முறைகளுக்கு குறைவு கிடையாது. சிறுவர்கள் பெண்களை விட அதிகம் வன்முறைகளை சந்திக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகளும் உண்டு.
பலரின் முன் நிர்வானபடுத்தபபட்டு,ஆண் உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சபடுவது அவ்வளவு பெரிய காயம் கிடையாது என்ற எண்ணம் பலருக்கு இருப்பது வியப்பை தருகிறது.காவல்துறையினரால் இப்படி விசாரிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும்.இப்படி நடந்ததை வெளியில் சொல்ல தயங்கும் ஆண்களின் சதவீதம் வெகு குறைவு.
அவனிடம் இந்த வன்முறைகளை காரணம் காட்டி நீ குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டும் செல்,குறிப்பிட்ட உடை தான் உடுத்த வேண்டும்,உனக்கு எப்போதும் துணை அவசியம் என்று கட்டுபடுத்த வேண்டிய நிலையை ஆணாதிக்க சமூகம் விரும்பாததால் ஆண் சந்திக்கும் வன்முறைகளை,அத்துமீறல்களை ஆணும் சரி,பொது சமூகமும் சரி சாதாரணமாக எடுத்து கொள்கிறது
திரு ஜயபாரதன்
‘தனிப்பட்ட அப்பாவிப்பெண்ணை’ என்பவைதானே உங்கள் சொற்கள்?
பூவண்ணன் என்ன சொல்கிறார் கட்டுரையில்? அப்பெண் தன்னை மாய்த்துக்கொள்ளக்கூடாது. ஆண் மாய்த்துக்கொள்கிறானா? பின் ஏன் பெண் மாய்த்துக்கொள்கிறாள்? உயிருடன் வாழட்டும் என்கிறார்.
உயிர்பெரிது என்று அவள் தன்னுயிரைக்காப்பாற்றிக்கொண்டால், அஃது அவளுக்கு வன்கொடுமை செய்தவரை மன்னித்தலோ அல்லது அவர்களை விட்டுவிடுவதோ ஆகும் என்று எப்படி முடிவு கட்டினீர்கள்?
கேள்விகள் –
ஏன் ஆண் தன்னுயிரைப்பெரிதெனக்கொண்டு பாலியன் வன்கொடுமைக்காளாக்கப்பட்ட பின்னரும் வாழ்கிறான்?
பெண் தன்னுயிர் பெரிதன்று; தன் உடல் சார்ந்த கற்பே பெரிது என்று வாழும்படி எவர் சொன்னார்? அவளுக்கு அப்படிப்பட்ட எண்ணம் எப்படி உருவாகியது?
Here lies the nub of the issue: You discriminate between men and women when it comes to their bodies. உணமையா பொய்யா?
நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். விநோதினியும் ஜோதி பாண்டேயும் (தில்லிச்சம்பவம்) உயிர்வாழ விரும்பினார்கள்; ஏன்? அப்போதுதான் தங்களை வன்கொடுமைக்காளாக்கியோரை உலகுக்குக்காட்டி தண்டனை பெறச்செய்ய்லாம். அவர்கள் தண்டனை பெறுவதை தாங்கள் பார்க்க வேண்டும் என்பதுதான்.
Death closes all. So, do you want to close all? Beware, you are helping the criminals go scot free :-P
வன்முறைக்கப்புறம் செத்துவிடவேண்டுமென்பதும். அப்படி வாழவது பெண்மையல்லயென்பதும். ஆணாதிக்க உலகத்து எழுதாச்சட்டங்கள். இதற்கு பெண்களே துணைப்போகுமளவுக்கு internalize பண்ணப்பட்டிருப்பதைக் காணலாம்; அல்லது படிக்கலாம்.
(வாசகர்கள் தெரிய வேண்டியது என் வாதமும் பூவண்ணனின் வாதமும் ஒரே பொருளைப்பற்றி இருந்தாலும் அடிப்படைகள் வெவ்வேறு)
ஜெயபாரதன் சார்
திருமணம் எனபது திருமணம் செய்து கொள்பவர்களின் விருப்பம்.அதில் மற்றவர்களுக்கு என்ன வேலை பெற்றோராக இருந்தாலும்.
என் திருமணத்தில் என் பெற்றோரின் வேலை நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பெண்ணை வாழ்த்தியது தான்.
கைம்பெண்களுக்கு,மண விலக்கு பெண்களுக்கு திருமணங்கள் நடப்பது இல்லையா.என் குடும்பத்தில் கடந்த முப்பது வருடங்களில் ஐந்து திருமணங்கள் கைம்பெண்கள்/மன விலக்கு பெற்ற பெண்களோடு தான்.வரும் தலைமுறையில் இது ஒரு பொருட்டாக கூட இருக்காது.
அப்படி இருக்கும் போது வன்புணர்வு விபத்திற்கு ஆளான பெண்ணை திருமணம் செய்வது பெரிய தியாகம் போல பேசுவது சரியான ஒன்றா.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்.அதனால் நீ என்ன செய்வாய் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.நான் ராணுவத்தில் பணி புரிந்தவன். என் மகள்களும் என்னை போல பணி புரிய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.அவர்கள் ஏதாவது விபத்துக்களை சந்திக்க நேரிட்டால் அந்த விபத்துக்களின் காரணமாக அவர்களின் வாழ்க்கை பாதிக்கபடாமல் இருக்க என்னால் இயன்ற அளவு முயற்சிப்பேன்
நண்பர் பூவண்ணன்,
////அலுவலகத்தில்,பொது இடங்களில் பாலியல் அத்துமீறல்களை தைரியமாக தட்டி கேட்க அவற்றை தங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையாக மட்டும் பார்க்கும்,பெரிய இழப்பாக எண்ணாதவர்களால் சுலபமாக முடியும்.
அத்துமீறல்களை பெரிய இழப்பு என்று எண்ணி,அதை பற்றி புகார் தெரிவித்தால் பெரிய அவமானம் என்று வருந்தி வேலையை விடுபவர்களை எப்படி புகார் செய்யும் நிலைக்கு,வேலையை விடாமல் வன்முறை புரிபவர்களை தண்டிக்க வைக்க போராடும் நிலைக்கு நீங்கள் எதையும் இழக்கவில்லை,சமூகமும் உங்களை ஏளனமாக பார்க்காது என்ற கருத்தை அவர்கள் எண்ணாத வரை ////
எப்படி மாற்ற முடியும்.
வன்புணர்ச்சி பற்றிய உங்கள் குதர்க்க வாத முறையைச் சமூகத்தில் எப்படி செயல் முறையில் கொண்டு வருவீர் ? அல்லது மூர்க்க ஆடவருக்கு ஆதரவாய்ப் “பலவந்தச் சகிப்புத்” தன்மையைப் பெண்பாலருக்குக் கல்வியாக எப்படிப் புகட்டுவீர் ? வெறும் திண்ணை டமாரம் மட்டும் போதுமா ? உங்கள் இல்லத்தில் உள்ள தாய்,தாரம்,சகோதரிப் பெண்களே உங்கள் தீவிரக் கருத்தை ஏற்றுக் கொள்வாரா ? ஊருக்கு உபதேசம் மட்டும் தானா ?
சி. ஜெயபாரதன்
ஜெயபாரதன் சார்
நீங்கள் மறுபடியும் மறுபடியும் நான் சொல்லாத ஒன்றை என் மீது திணிக்கிறீர்கள்.
உயிரை காப்பாற்றி கொண்டு பின் நீதிக்காக போராடுங்கள்.உயிரை விட்டாவது பாலியல் வன்முறையை தடுக்க வேண்டும் என்று உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள்,தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று தான் கூறி உள்ளேன்
இழக்க கூடாத ஒன்று கற்பு ,அதை தடுக்க உயிரையும் தரலாம் என்ற கருத்தாக்கம் ஆணாதிக்க சமூகம் பெண்களின் மேல் திணித்த ஒன்று என்று எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுவேன்.இதை என் குடும்பத்தாரிடம்,நண்பர்களிடம், ,மனைவி,மகள்கள் அனைவரிடமும் கூறி கொண்டு தான் வருகிறேன்.ஏற்று கொள்வதும் ,ஏற்று கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்
பாலியல் வன்புணர்வு நிகழ்வுகளை காரணம் காட்டி பெண்களை மறுபடியும் வீட்டிற்க்குள் /புர்தாவிர்க்குள் அடைக்கும் முயற்சிகள் தான் நடக்கின்றன.தனியாக உயர்கல்விக்காக பரீட்சை எழுத வேறு மாநிலங்களுக்கு செல்லாதே,இரவு பணி,நடுநிசியில் திரும்பும் வேலைகளுக்கு செல்லாதே என்று அவர்கள் மேல் அடக்குமுறைகள் அதிகம் ஆனது தான் பலன்
உலகிலேயே பெண்கள் வாகனம் ஓட்ட கூட அனுமதியில்லாத ,அதிக அளவில் விவாகரத்துக்கள் (மற்ற நாடுகளில் ஆன்,பெண் இருவரும் விவாகரத்து செய்வார்கள்.இங்கு 99 சதவீதம் ஆண்கள் தான் விவாகரத்து செய்வது)பல தார மணம் நடக்கும் நாடுகள் பெண்கள் வாழ நல்ல நாடுகள் எடுத்துகாட்டு நாடுகள் என்ற வாதம் பலரால் வைக்கபடுகிறது.அந்த வாதத்திற்கும் பலத்த ஆதரவு காணப்படுவது வேதனை தான்.மின்சாரம் என்று இருந்தால் லட்சத்தில் ஒரு விபதாவது ஏற்படும்,வாகனம் ஓட்டினாலும் விபத்துக்களை முழுவதும் தவிர்க்க முடியாது
பாலியல் தொடர்பான வெறி/மன நோய் உள்ளவர்களை முற்றிலும் ஒழிக்கும் வரை பெண்கள் வீட்டிற்க்குள் அடைபட்டு இருப்பது தான் அவர்களுக்கு நல்லது என்றால் என்றும் அவர்கள் ஆணின் தயவில் தான் வாழ வேண்டும்.
எதிர்பாராத விதமாக மாட்டி கொண்டால் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பதில் ஒரு வழி தான் நகைகளை,பணத்தை கழட்டி கொடுப்பது போல ,பாலியல் வன்முறையை தடுக்க உயிரை மாய்த்து கொள்ளாமல் இணங்குவது.இல்லை ஒரு பெண்ணிற்கு உயிரை விட மானம் தான் முக்கியம் .அதை காப்பாற்றி கொள்ள உயிரையும் விடுவது தான் நம் கலாசாரம்,பெண்மை,பெண்ணிற்கு அழகு என்று பேசுவது உங்கள் உரிமை.
நண்பர் பூவண்ணன்,
////பாலியல் வன்புணர்வு நிகழ்வுகளை காரணம் காட்டி பெண்களை மறுபடியும் வீட்டிற்க்குள் /புர்தாவிர்க்குள் அடைக்கும் முயற்சிகள் தான் நடக்கின்றன.தனியாக உயர்கல்விக்காக பரீட்சை எழுத வேறு மாநிலங்களுக்கு செல்லாதே,இரவு பணி,நடுநிசியில் திரும்பும் வேலைகளுக்கு செல்லாதே என்று அவர்கள் மேல் அடக்குமுறைகள் அதிகம் ஆனது தான் பலன்///
///பாலியல் வன்முறையை தடுக்க உயிரை மாய்த்து கொள்ளாமல் இணங்குவது.இல்லை ஒரு பெண்ணிற்கு உயிரை விட மானம் தான் முக்கியம் .அதை காப்பாற்றி கொள்ள உயிரையும் விடுவது தான் நம் கலாசாரம், பெண்மை,பெண்ணிற்கு அழகு என்று பேசுவது உங்கள் உரிமை.////
மது குடிப்பதை நியாயப் படுத்தும் நீங்கள் ஒருவர்தான் இப்படித் தெளிவாகச் சுயபுத்தியில் எழுதி வருகிறீர். இதுவரை வந்திருக்கும் பின்னோட்டங்களில் யாராவது உங்களைத் தவிர இதை மீண்டும் மீண்டும் எழுதி வருகிறாரா ?
உங்கள் வண்புணர்ச்சிக் குதர்க்க வாதமும், மதுக்குடி ஆதரிப்பு வாதமும் சமூகத்தை நாசமாக்கும் இராணுவ முறைக் கருத்துக்கள்.
சி. ஜெயபாரதன்
http://maattru.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/
இவை மூன்றும் நமக்கு உணர்த்துவது- பாலியல் வன்முறையை தனி மனித குற்றமாக்குவது பிரச்சனைக்கு தீர்வாகாது. பாலியல் வன்முறைப் பற்றி சமூகத்தின் பார்வை, நிர்வாகத்தின் பார்வை மாற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியாக்குவதோ அல்லது, “பாவம். அவளது மானமே போய்விட்டது, இனிமேல் யார் கல்யாணம் செய்துக் கொள்வார்” என்று கூறுவதோ பெண்ணை இழிவுபடுத்தும் செயலே. மேலும் ”பூவை கசக்கி விட்டான், களங்கப்பட்டு விட்டாள், நாசமானாள்” என்று வசனம் பேசி திரியும் அனைவரும் பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்த “கற்பு” என்ற ஒன்று அழிக்கப்பட்டு விட்டது என்ற பிற்போக்குத் தனமான ஆணாதிக்க சிந்தனையை வற்புறுத்தி திணிப்பவர்கள் தான். இன்னமும் சில ஊடகங்கள் “கற்பழிப்பு” என்ற வார்த்தையே பிடிவாதமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் எல்லோருக்கும் உரக்கச் சொல்ல விரும்புவது- இது பாலியல் வன்முறை. ஒரு பெண்ணின் உடல் மீது அவள் விருப்பமில்லாமல் ஏவப்படும் மனித நேயமற்ற செயல். இதில் வெட்கப்பட வேண்டியது அந்தப் பெண் அல்ல. அந்த ஆண் வெட்கப்பட வேண்டும். இப்படி கொடூர சம்பவங்களை நடக்க அனுமதிக்கும் இந்த சமூகம் வெட்கப்பட வேண்டும்.
இங்கு எழுத்தாளர் சொஹைலா அப்துல் அலி கூறுவதை நினைவு கூற விரும்புகிறேன். அவர் 1980களில் தனது 17வது வயதில் மும்பையில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். உடன் சென்ற அவரது நண்பரும் தாக்கப்பட்டார். “பாலியல் வன்புணர்வு கொடுமையானது தான். ஆனால் சமூகம் கூறும் அபத்தமான காரணங்களுக்காக அல்ல. நீங்கள் அத்துமீற படுகிறீர்கள் என்பதால், உங்கள் உடலை வேறொருவன் கைப்பற்றி விடுகிறான் என்பதால். உங்கள் தந்தையின், அண்ணனின் “மானம்” பறி போய் விட்டதால் அல்ல.
எனது நற்குணம் எனது பிறப்புறுப்பில் உள்ளது என்ற கருத்தாக்கத்தை நான் மறுக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேண்டியது ஆறுதல். மூட்டை மூட்டையாய் அறிவுரைகள் அல்ல. நான் தாக்கப்பட்ட அடுத்த வாரம் பக்கத்து ஊரில் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் வீட்டுக்கு ஒடி வந்து தீக்குளித்து இறந்து விட்டாராம். இந்த சம்பவத்தை என்னிடம் கூறியவர் அந்த பெண்ணின் செயலை மனம் நெகிழ்ந்து பாராட்டினார். நல்லவேளை எனது பெற்றோர்கள் எனக்கு இதை புரியவைக்கவே இல்லை” என்று நியூ யார்க் டைம்ஸில் சமீபத்தில் எழுதினார். போலீஸில் புகார் அளிக்க செல்லும் போது இவரை நடத்திய அநாகரிகமான விதத்தையும், கேட்ட அவமரியாதையான கேள்விகளையும் ’மனுஷி’ பத்திரிகையில் பதிவு செய்துள்ளார் தனது பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டே.
” ஆணோ பெண்ணோ உயிரே பெரிது ” என்பது உலகறிந்த உண்மை. யார்தான் உயிரை துச்சமென்று எண்ணி உயிரைத் தியாகம் செய்வார்? மத வெறி பிடித்த தீவிரவாதிகள்தான். அவர்கள் தங்கள் கடவுளுக்கும் மதத்திற்கும் உயிர் விட்டால் சொர்க்கம் செல்லலாம், அங்கு ஒன்பது கன்னிப் பெண்களை அனுபவிக்கலாம் என்று முட்டாள்தனமாக நம்பி தற்கொலை வெடி குண்டாக மாறி அன்றாடம் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ,இந்தியா போன்ற நாடுகளில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்துவிட்டு தாங்களும் மாண்டுபோகின்றனர். அவர்கள் சொர்க்கம் போனார்களா என்பது வேறு விஷயம். அதுபோன்றே மடிந்த அப்பாவிகள் எங்கு போவார்கள் என்பதும் யாமறியோம்.
உயிர் என்பது, மனிதனாக இருந்தாலும், மிருகமாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், மீனாக இருந்தாலும் புரியாத புதிராக இருப்பதால் அது மிகவும் அபூர்வமானது. அது படைப்பின் அதிசயம். ஒரு புது உயிரை நம்மால் உருவாக்க முடியாது. பிரிந்துபோன உயிரை நம்மால் திரும்பவும் உயிரோடு கொண்டுவர முடியாது.
இத்தகைய அபூர்வமான உயிரை ஒரு பெண் தன்னை ஒருவனோ அல்லது பலரோ பலாத்காரமாகப் புணர்ந்து விட்டால் தன்னுடைய கற்பு பறிபோகுதே என்ற அதிர்ச்சியில் போராடி உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமா என்பதே கேள்வி. அப்படி அதற்குப் போராடாமல் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்தால் மட்டும் அவர்கள் அவளைப் பாராட்டி விட்டுவிடுவார்களா என்பது அடுத்த கேள்வி. அப்படி அவளைப் போகவிட்டால் அவள் தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவாள் என்ற பயத்தில் அவளை கொன்று விடும் ஆபத்தும் உள்ளதே. அது இணங்கி உயிர் விடுவதற்கு சமமாயிற்றே!
இந்த கற்பு என்பது என்ன? பெண்ணின் பாலியல் உறுப்பு கணவனுக்கு மட்டும்தான் சொந்தம் என்பதுதானே? இந்த கற்பு என்பது தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமா? மேல்நாடுகளில் ஒரு காலத்தில் கற்பு இடைவார் ( Chastity Belt ) என்பதைப் பயன்படுத்தி ” அதை ” பூட்டி வைத்து தேவைப் படும்போது திறந்து பயன்படுத்தினர். சாவி இல்லாவிட்டால் வேறு யாரும் திறக்க முடியாது. இதுபோன்று அவர்கள் ” கற்பைப் ” பேணி பாதுகாத்தனர். இது பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநாகரீகமான அடிமைத்தனம்.
இந்தியாவில் முகலாயர் படையெடுப்பின்போது ராஜபுத்திரர்கள் தங்கள் மனைவிகளை தாங்களே கொன்று குவித்துவிட்டு போரில் வீர மரணம் அடைந்துளனர். மனைவிகளின் கற்பை முகலாயர்கள் சூறையாடக்கூடாது என்ற வைராக்கியம் கொண்டவர்கள் ராஜபுத்திரர்கள். அதுபோன்றே இந்தியாவில் அப்போது கணவன் இறந்தபின் மனைவியின் கற்பு வேறொருவனுக்கு சொந்தமாகக் கூடாது என்று பெண்கள் உடன்கட்டை என்ற கொடிய தண்டனைக்கு உள்ளாயினர்!
இந்த கற்பு என்பது என்ன.? பெண்ணை போகப் பொருளாக தனக்குத் தானே சொந்தமாக வாழ்நாள் முழுதும் வைத்திருந்துவிட்டு அதன்பின் அவள் விதவையாகவே வாழ வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரால் உருவாக்கப்பட்ட அடிமைச் சாசனம் எனலாம். இது அந்தக் காலம்
விவாக ரத்துகளும், மறுமணங்களும், மறுமறுமணங்களும் , மறுமறுமறுமணங்களும் பெருகி வரும் இக்காலத்தில் கற்பு பற்றி பேசுவது பொருத்தமற்றது! அது அழிந்து போனது என்பதும் அர்த்தமற்றது!
நல்லொழுக்கம் என்பதே ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான கற்பு என்பதே முறையாகும்.
பெண் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்காப்புக் கலைகள் கற்றிடவேண்டும். முடிந்தால் தங்களுடைய கைப்பைகளில் ஆயுதம் ஏந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். வேலை இடத்திலோ அல்லது வெளியிலோ பாலியல் துன்பத்தை எதிர்நோக்கினால் அதை மறைக்காமல் அம்பலப்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்… டாக்டர் ஜி. ஜான்சன்.
Dr.G.Johnson says:
October 31, 2013 at 4:25 am
//அவர்கள் தங்கள் கடவுளுக்கும் மதத்திற்கும் உயிர் விட்டால் சொர்க்கம் செல்லலாம், அங்கு ஒன்பது கன்னிப் பெண்களை அனுபவிக்கலாம் என்று முட்டாள்தனமாக நம்பி தற்கொலை வெடி குண்டாக மாறி அன்றாடம் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ,இந்தியா போன்ற நாடுகளில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்துவிட்டு தாங்களும் மாண்டுபோகின்றனர். //
டாக்டர்.ஜான்சன் ஸார்! தாங்கள் எந்த மதத்தை குறிப்பிடுகிறீர்கள்? இஸ்லாமையா? ஆபிரகாமிய வழி வந்த யூத,கிருஸ்துவ,இஸ்லாமிய மார்க்கங்களில் தற்கொலைக்கு அனுமதியில்லையே.அது கடவுளை திருப்திபடுத்தி சொர்க்கம் செல்ல நடக்கும் போரில்கூட ஒரு விசுவாசி தன்னை கொன்று மற்றவர்களை மாய்ப்பதர்க்கு அனுமதி இல்லையே.
தற்கொலை கடும் பாவம் என்றுதான் அனைத்தும் கூறுகின்றன.மதத்திற்காக தற்கொலை செய்தால் சொர்க்கம் சென்று கன்னிப்பெண்ணை அடையலாம் என்று எந்த வேதத்தில் படித்தீர்கள்? ஆதாரம் ஆபிரகாமிய மார்க்கங்களில் எடுத்துக்காட்டமுடியுமா? தற்போது நடைமுறையில் அதுதானே நடக்கிறது என்பதே உங்கள் பதிலாக இருக்கும்.உண்மைதான்.
ஒரு காலத்தில் கிருஸ்துவ உலகம் பாதிரிகளின் கைக்குள் அடங்கி கிடந்தது.உலகம் உருண்டை என்றான் கலிலியோ.மரணத்தையே பரிசாக கொடுத்தனர் மத புரோகிதர்கள்.என்னை விஷம் கொடுத்து கொலை செய்தாலும் உலகம் உருண்டையாகத்தான் இருக்கும் என்றான் கலிலியோ.இன்று ஆபிரகாமிய மதங்களை ஆட்டிப்படைப்பது வேதங்களல்ல.வேதம் தாங்கிய வேஷதாரி மத புரோகிதர்கள்.முஸ்லிம் மூட முல்லாக்களின் மூளைசலவையின் காரணமாகவே தற்கொலை குண்டுகள் வெடிக்கின்றன.ஆபிரகாமிய மார்க்கத்தில் குறிப்பாக இஸ்லாத்தில் இதற்க்கு கடுகளவும் அனுமதி இல்லை.இவர்களுக்கு கடும் நரகம் காத்திருக்கிறது என்றே வேதம் சொல்கிறது.உதாரணமாக ஒரு வரலாற்று சம்பவம்.
நபிகள் நாயகம் அவர்களும் அவரது தோழர்களும் கைபர் என்னும் இடத்தில் நடந்த போரில் எதிரிகளுடன் சண்டையிட்டனர்.அதில் ஒரு தோழர் எதிரிகளுடன் கடுமையாக சண்டையிட்டு
படுகாயமடைந்தார்.இவரின் தீரச்செயலை நபிகள் நாயகத்திடம் மற்ற தோழர்கள் எடுத்துக்கூறினர்.அதைக்கேட்ட நபிகள் “ இவர் ஒரு நரகவாசி, நரகத்திற்கு செல்பவர்” என்று கூறினர்.சிறிது நேரம் சென்ற பிறகு ஒரு தோழர் வந்து கூறினார்,”அந்த மனிதர் படுகாயத்தின் வலி தாங்கமுடியாமல் தனது அம்பை எடுத்து தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.”
தற்கொலை படை தாக்குதலை இஸ்லாம் அறிமுகப்படுத்தவில்லை.மூட முல்லாக்கள் மூலையில் உதித்த ஒன்று.இதற்கும் வேதம் வழங்கப்பட்ட ஆபிரகாமிய மார்க்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை டாக்டர்.ஜான்சன் அவர்கள் அறியவும்.
பெண்களின் பாதுகாப்பு பற்றிய இந்த அருமையான விவாதத்தில் ஆண்களே அதிகமாக பங்கெடுத்து எழுதுகின்றனர். துணிச்சலுடன் எழுதி கேள்விகள் கேட்டுள்ள பூங்குழலிக்கு நன்றி. இதுபோல் இன்னும் அதிகமான திண்ணையில் எழுதிவரும் பெண் எழுத்தாளர்களும், வாசகிகளும் துணிவுடன் கருத்து பகிர்ந்துகொண்டால் சிறப்பாக இருக்கும். இந்த முக்கியமான சமுதாய அவலம் பற்றி அவர்களின் கருத்துகளையும் தெரிந்து கொள்ளலாம். நன்றி… டாக்டர் ஜி. ஜான்சன்.
நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,
பூங்குழலி தவிர வேறு மாதர் யாரும் பின்னூட்டம் இட வில்லையா ?
கேலி செய்யும் நண்பர் ஷாலி, சகலகலா வல்லவர் ஷாலி யாரென்று நினைத்தீர்கள் ? சக்தியின் மறு அவதாரம் போல் தெரிகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
தேமொழியும் பின்னோட்டம் கொடுத்துள்ளார்.
சி. ஜெயபாரதன்
கணவனை இழந்து ,அந்த இழப்பிற்கு அரசு தரும் பரிகாரமான வேலைவாய்ப்பை ஏற்று கொண்டு பெண் காவலராக பணி புரியும் பெண்ணின் வாக்குமூலம்.
தன்னை நம்பி இருப்பவர்களை காக்க உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த உன்னை விட சிறந்தவர்கள் யாரும் இவ்வுலகில் கிடையாது .உனக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள்
http://in.news.yahoo.com/why-no-one-wants-policewomen-in-latehar-065157178.html
Recalling the night she was attacked, Neetu says, “I have already lost my husband in conflict. That day my sister was murdered. Our family has seen too much violence. So when that day they dragged me out of the vehicle I went quietly. Those who ask me why I did not resist, would they have come to feed my children had the men slaughtered me? I wasn’t in a position to resist. I have lost too much in life to resist. I wanted to live because I had children waiting back home.” She cries silently and then begins looking up at the sky to calm herself. After a while, she gathers herself and speaks in a quiet rage about the complete absence of training that she or her female colleagues receive. They do ‘regular duty’ as ASI Rameshwar Singh said, but without the regular training that any man in the police gets, setting them up to fail.
நண்பர் பூவண்ணன்,
இது ஓர் விதி விலக்கு உதாரணம். கோடியில் ஒன்று ! விதி விலக்கு ஆதாரங்கள் பொது விதிக்கு ஆதரவு அளிக்கா !
உயிரை விட மானமே பெரிதென மதித்து வாழும் பெண்கள் இந்தியா நாகரீகக் கலாசாரத்தில் அதிகம் என்பது என் கருத்து.
விதிவிலக்கு பொதுவிதி ஆகாது !
சி. ஜெயபாரதன்.
நண்பர் பூவண்ணன்,
பச்சையாகச் சொல்கிறேன். நீங்கள் ஒரு பெண்ணில்லை. மூடி மறைக்கும் பொங்கி எழுந்த முலைகள் இல்லை. போற்றிக் காக்கும் பெண்குறி யோனி இல்லை. கடவுள் படைத்த பெண்ணுக்குரிய எந்த காம சுரப்பியும் இல்லை.
பத்து முரடர் மாற்றி மாற்றிப் பலவந்தப் படுத்தி மானமும், மதிப்பும், உடம்பும், உள்ளமும் பாதிக்கப் பட்டவர் அல்லர்.
பெண்ணுக்கு மானம் பெரிதா, உயிர் பெரிதா என்று வழக்காட எந்தத் தகுதியும் உங்களுக்கு இல்லை.
நீங்கள் ஓர் ஆணாதிக்க இராணுவ அதிகாரி.
சி. ஜெயபாரதன்.
நண்பர் பூவண்ணன்,
பலவந்தப் பாதிப்புக்குப் பலியாகும் பாவை ஒருத்தி முன்வந்து உடன்பட்டால் அவளது உயிர் பாதுகாக்கப்படும் என்பது உங்கள் அற்புதக் கற்பனை யூகம் ! ஆலோசனை !
அத்தகைய மூர்க்க மகாத்மாக்கள் எங்கே இருக்கிறார் ?
உடன்பட்டுப் பலியாகும் அப்பாவிப் பெண்ணும் காவல்துறை அதிகாரிடம் தம்மைக் காட்டிக் கொடுத்து விடுவாள் என்று அஞ்சி மூர்க்கர் அவளைக் கொல்லமாட்டார் என்று நீங்கள் உத்திரவாதம் கொடுப்பீரா ?
சி. ஜெயபாரதன்.
பலவந்தப் படுத்தவரும் முரட்னுக்கு உடன்பட்டு பெண் பாதிக்கப் பட்டுத் தன்மானம் இழந்தால், சட்ட மன்றம் கூட நடவடிக்கை எடுக்க முடியாது முரடனைத் தண்டிக்க !
முரடனுக்கு இரட்டை வழி ஆதாயம். பால் நழுவிப் பழத்தில் விழுந்த மாதிரி !
நல்ல ஆலோசனை நண்பர் பூவண்ணன் !!!
பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி ! என்று வாசிக்கவும்.
நல்ல ஆலோசனை நண்பர் பூவண்ணன் !!!
சி. ஜெயபாரதன்
பெண்களை முறைத்துப் பார்த்தோலோ, கண்சிமிட்டி சாடை காட்டி விஷம சங்கேதங்கள் செய்தாலோ, பஸ்ஸில் தெருவில் என இடித்தாலோ, கல்லூரி பள்ளிகளில் அலுவலகங்களில் என சந்தர்ப்ப சூழலை சாதகமாக்கி சிலுமிஷங்கள் பண்ணிணாலோ , அது மாதிரியான குற்றவாளிகளை வாழத்தகுதியற்ற வகையில் பொது இடத்தில் அவமானப்படுத்த வேண்டும், தண்டனை தர வேண்டும். பொது இடத்தில் வைத்து காறி உமிழ வேண்டும். அவளை வன்புணர்வு செய்தால் அந்த இடத்தை கட் செய்து விட வேண்டும். பின் நரம்பு கால்களை துண்டித்து விட வேண்டும் – மயக்க மருந்து கொடுக்கலாம். மது , சிகரெட் போல பெண்களை நினைப்போரை மறுதலித்து சிறை தள்ளல் வேண்டும். முதலில், பெண்ணை கை வைத்தால் அதோடு வாழ்வு அவ்வளவு தான் என்பது மது மயக்கத்திலும் புரியும் வண்ணம் தண்டனைகள் இருக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகளை அரசு சூவீகாரம் செய்ய வேண்டும். சட்டத்தை செயல்படுத்த முடியாத பூனைப் படை அரசுகள் விரட்டியடிக்கப்பட வேண்டும்.