ம்ம்ம்ம்ம்….நல்ல தூக்கமா ஆன்ட்டி…குழந்தைகள் இன்னும் தூங்கறா போல…!.இதோ… நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்..
இதோ….இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா…முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு புரோஹிதர் சொன்னார் . அதான் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். அங்கே போனால் இவரும் அங்க இருந்தாரா…அப்படியே பேசிண்டே திரும்பி வந்துட்டோம்.
ஓஹோ……கங்கைல ஜலம் நிறைய இருக்கோ…?
அவ்வளவு கவலையா உனக்கு…? ம்ம்ம்ம்….நானும் கங்கை தான்னு தெரியற அளவுக்கு இருக்கு. அமைதியா எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பரந்து விரிந்து இருக்கு கங்கை நதி. இந்தக் குட்டியூண்டு ஊருக்கு இந்த கங்கை தான் ராணியா..? சின்னச் சின்ன படகுகள்..போயிண்டே இருக்கு…கரையோரமா படிக்கட்டுகள்….குட்டி குட்டியா…நெருக்கம் நெருக்கமா கட்டிடங்கள்…கோயில்கள்…எங்க பார்த்தாலும் யாராவது முங்கிக் முங்கி குளிச்சுண்டே இருக்கா…பாவம்மா கங்கா தேவி.
ஏன்….கங்கை பாவம்…? அவள் தான் மனுஷா பண்ற பாவத்தையே கரைக்கிறவளாச்சே…!
அதான்…சொன்னேன்…..எல்லாரும் குளிச்சுட்டு தன்னோட பாவமெல்லாத்தையும் கங்கையோட தலையில் ஏத்திட்டு போறாளே….நானும் தான்….என்னையும் சேர்த்துத் தான் சொல்லிக்கறேன்.
இதைக் கேட்டதும் சித்ரா மௌனமானாள். உன் விதி இப்படி வீதி சிரிக்கும் படியாவா ஆகணம். கல்யாணமே ஆகாமே…ரெண்டு குழந்தைகள்…..1 நாளைக்கு அந்த சாஸ்த்திரி பாட்டுக்கு ஏதாவது கேட்டுத் தொலைச்சால் என்ன சொல்வேன்….?
ஒண்ணுமே …சொல்லாதே….தேவையில்லாத எந்தக் கேள்விக்கும் பதிலே சொல்லாதே..இன்னைக்கு நான் அதைத் தான் பண்ணேன்.
ஓ …இன்னைக்கே கேட்டாச்சா..? அப்ப சரி………கௌரி…குழந்தை அழற சத்தம் கேட்குது பார்….!
அவசரமாக இருவரும்….வரேன்…….வரேன்.
ஆளுக்கொரு குழந்தையாக தூக்கி கொண்டு….இவாளை முதல்ல ரெடி பண்ணு கௌரி….இன்னைக்கே கிளம்பி விஸ்வநாதரைப் பார்த்துட்டு வந்துடலாம். காசி விஸ்வநாதர் தான்…இங்க…எல்லாம்…..நாளை
ஒண்ணும் கேட்கலை..நீ எந்த உளவும் பார்க்காதே. நீ நினைக்கறது எதுவும் எந்தக் காலத்துலயும் நடக்காது. ஏதோ…நமக்கு முன்னாள் பழக்கம். நம்ப அப்பாவும் ரொம்ப வருத்தப் பட்டு அவருக்குக் கடைசியா கடிதமெல்லாம் எழுதியிருக்கார். லெட்டரைப் படிச்சியே…..அதான்….பிரசாத்
நடக்குமா கௌரி….? பிரசாத்தின் குரல் கௌரிக்கு காதில் எதிரொலித்தது…!
நடக்கும்…பிரசாத்…..! என் அப்பாவின் ஆசீர்வாதம்….என்னோட வேண்டுதல்…உங்கம்மாவோட ஆசை..இதெல்லாம் இந்த காசி விஸ்வநாதர் நிறைவேற்றி வைக்கணும்ன்னு இன்னைக்கு ப்ரே பண்ணிக்கறேன்.
மனத்தில் எழுந்த எண்ணங்களோடு குழந்தைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தாள்.
அறையைப் பூட்டி விட்டு வெளியே வரும்போது, வாசலில் இவர்களுக்காகவே காத்திருந்த பிரசாத்தைப் பார்த்து…..கோவிலுக்கு…..எங்கி
யெஸ்….நானும் உங்களுக்காகத் தான் வெய்டிங்….கௌசிக்கைக் கொடுங்கோ….நான் தூக்கீண்டு வரேன் என்று கை நீட்டி குழந்தையை வாங்கிக் கொண்டவன், மெதுவா நடங்கோ……தெரு வழுக்கும்….ஒரே சேறும் சகதியுமா இருக்கு..என்று சொல்லியபடி காலைத் தூக்கி எட்டி எட்டி வைத்து நடக்கிறான்.
அம்மா…..பிரசாத்தைப் பாரேன்….எப்படி நடக்கிறான்னு….!
ஆம்மாம்….கல்லா…..மண்ணா…
ஆச்சரியத்துடன் சித்ரா நடந்தவள்….அவ்ளோதான்….இனிமே
அம்மா….இன்னும் கொஞ்ச தூரம் தான்….வா…மெல்ல வா….வேடிக்கை பார்த்துண்டே போய்டலாம்..கௌரி கெஞ்சுகிறாள்.
எங்கு பார்த்தாலும் தலைகள்……மக்கள் வெள்ளம் அலையடிக்க, கூட்டத்தில் கரைந்து போனவர்களாக ஒரு வழியாக காசி கோவிலுக்குள் நுழைந்து ஒவ்வொரு காவல் தடுப்பையும் தாண்டிக் கடந்து நெரிசலில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பயந்து…பயந்து…இறுதியில் ஒரு நிமிட தரிசனத்திற்கு இவர்களை இரண்டு காவலர்கள் தள்ளிவிட..அவர்களைத் திட்டிக் கொண்டே…
அங்கதான்….ஜருகண்டி….ஜருகண்
அரியும் சிவனும் ஒண்ணு …அறியாதவர் வாயில மண்ணுன்னு தெரியாமலா சொல்லிருக்கா…சித்ரா மூச்சு வாங்கச் சொல்கிறாள்.
நீங்க நன்னா தரிசனம் பண்ணேளா …பிரசாத்..?
ஒரே கூட்டம்…..உள்ளுக்குள்ள பூவா தான் தெரிஞ்சுது…அதான் சாமியா….? எனக்கொண்ணும் அவ்ளோ தெரியலையாக்கும்.
பட்….நான் நன்னாயிட்டு.வேண்டீண்டேனாக்கும்
என்னன்னுட்டு….! சித்ராவும், பிரசாத்தும் ஒரே குரலில் கேட்கவும்.
நான் செஞ்ச பாவங்கள் கரையணம்….! உங்களுக்குக் கல்யாணம் ஆகணம் ..!
ரெண்டையும் நடத்தித் தருவார்..! பார்த்துண்டே இரு…! சித்ரா சொல்லும்போது பிரசாத்தின் முகம் மலர்ந்தது.
அங்கங்கே தமிழ் குரல்கள், தெலுங்கு பேசும் குரல்கள், ஹிந்தி குரல்கள்…என்று கலந்து காதில் விழுந்து கொண்டே இருந்தது…புதிய அனுபவத்தில் திளைத்த கௌரி..எப்டியோ..நல்ல படியா வெளியே வந்தாச்சு… என்கிறாள்.
சீக்கிரமா ரூமுக்குப் போயாகணம் . நடக்க முடியாது ஏதாவது வண்டியைப் பிடியுங்கோ..!சித்ரா குரல் கொடுக்கவும்.
அந்த இரவு நேரத்திலும் தெருக்களில் வியாபாரக் கூச்சலும், மக்கள் நெரிசலும் ஜே…ஜே….என்று விளக்கொளியில் பிரகாசிக்க ஒரு ஆட்டோவில் ஏறியதும்…..அவன் ஆட்டோ ஓட்டும் திறமையைப் பார்த்து இவர்களின் வயிற்றுக்குள் லாரியே ஓடியது. குலுங்கிக் குலுங்கி இவர்களைச் சத்திரத்தில் கொண்டு வந்து விட்ட ஆட்டோகாரனைக் கையெடுத்து கும்பிட்டாள் சித்ரா.
காசில ஆட்டோ ஓட்டினா..உலகத்துல எந்த மூலைல போனாலும் பொழைச்சுக்குவான், இல்லையா கௌரி.
நான் குழந்தைகளை வெச்சுண்டு பயந்தே போயிட்டேன். சூப்பர் ஸ்பீட்..! சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தவள்..,
குட் நைட் பிரசாத்….சொல்லிக் கொண்டே கதவைச் சாத்துகிறாள் கௌரி.
ஜிர்ங் …ஜிர்ங் …ஜிர்ங் ….ஜிர்ங் …..மின்விசிறியின் சத்தம் பின்னணி பாட, உறங்கிப் போனார்கள்.
ஒவ்வொரு கட்டமாய் உருட்டிய பிண்டன்களைக் கரைத்து விட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் முங்கிக் குளித்து விட்டு…..குழந்தைகள் தலையில் கங்கை நீரை எடுத்து சொம்பால் விட்டுக் குளிப்பாட்டும் போது..சித்ராவை அர்த்தமுள்ள பார்வை பார்த்தவளாக கௌரி தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள்….”எங்கள் பாவங்கள் கரைந்து விட்டது…கங்கையே எங்களை மன்னித்துவிடு…”
- மெல்ல மெல்ல…
- அகமுகம்
- விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.
- மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு
- ஆழ் கடல்
- உலகெலாம்
- சிறுகவிதைகள்
- நய்யாண்டி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. !
- ஆணோ பெண்ணோ உயிரே பெரிது
- கண்ணீர் அஞ்சலிகளின் கதை
- பிரயாணம்
- லீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்
- பாவடி
- ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்
- புகழ் பெற்ற ஏழைகள் 29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழை
- என்ன இது மாற்றமோ ..?
- திண்ணையின் இலக்கியத் தடம் -5
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)
- சீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)
- “காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.
- நெடுநல் மாயன்.
- Writing Competition on Tamil History, Arts and Culture (Organized by Ilankai Thamil Sangam) on Saturday November 2nd
- க்ளோஸ்-அப்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 23
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- பார்வையற்றோர் நலப் பணி நினவு கூர்தல்