மது விலக்கு தேவையா ? சாத்தியமா?

This entry is part 8 of 26 in the series 27 அக்டோபர் 2013

மது என்ற விஷயத்தில் எதிர்கருத்தை கேட்க கூட மாட்டேன்.மது அருந்துவது தவறல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள் இங்கு வாழ வேண்டிய அவசியம் இல்லை.வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று மது எதிர்ப்பாளர்கள்/மது விலக்கு போராளிகள் எடுக்கும் நிலை வருந்த வேண்டிய ஒன்று.இதே போல தான் மத மாற்றம்,சாதி மறுப்பு திருமணம் போன்றவற்றை எதிர்க்கும்  மத/சாதி அடிப்படைவாதிகளும் பேசுகிறார்கள்

          addiction எனபது வியாதி. மது இல்லை என்றால் மாத்திரை/பக்தி,சாதி வெறி(முக்கால்வாசி வெறி பிடித்தவர்கள்,காந்தியை கொலை செய்ய துணியும் கோட்சேக்கள் எந்த பழக்கமும் இல்லாதவர்கள் தான் )
மதுவை வெறியோடு எதிர்ப்பவர்களில் 100 க்கு 99 பேர் மத /சாதி வெறியர்கள் தான்.
         மத ரீதியாக மதுவை எதிர்ப்பவர்கள் எதிர்க்கும் பலவற்றில் மதுவும் ஒன்று .மனித உரிமை என்பதை ஒரு பொருட்டாக கருதாதவர்கள் தான் அவர்கள்.அவர்கள் மத குருக்கள்,மத புத்தகங்கள் எதிர்க்கும் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்,தடையை மீறி தடை செய்யப்பட்ட செயலை செய்பவனை கொலை செய்தாலும் சரி என்று தலை ஆட்டுபவர்கள் தான் அவர்கள்.
        இந்த மத /சாதி வெறி இல்லாத சிலரும் மதுவை வெறியோடு எதிர்ப்பது,அதை தடை செய்தே தீர வேண்டும் என்று துடிப்பது எதனால்.அதிகம் எடுத்து கொள்வதால் வரும் தீமைகளை விளக்குவது சரியா அல்லது அதை ஒழிக்க வேண்டும் எனபது சரியா.
   மதுவிலக்கு இருக்கும் மாநிலங்களில் வாழ்ந்தவன்  என்ற முறையில் கூறுகிறேன்.அது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.முட்டாள்தனமான கொள்கை
 மனிதன் அரிசியை முதலில் பயிர் செய்ய துவங்கியதே சாராயத்திற்காக தான் என்று பல ஆராய்ச்சியாளர்கள் இப்போது கருதுகின்றனர்.கிடைக்கின்ற அனைத்து உணவு பொருட்களில் இருந்தும் சாராயம் தயாரிக்கும் முயற்சி ஆதி மனிதன் தொட்டு இன்று வரை நடைபெற்று வருவது

மணிப்பூரில் ஒவ்வொரு வீட்டிலும் அரிசியில் இருந்து சாராயம் காய்ச்சுவார்கள்.அதில் போதையை அதிகமாக்க என்ன சேர்க்க வேண்டும் என்பதில் தான் வேறுபாடு

    குஜராத்தின் கதையை பற்றி விரிவாக கீழே
மது விலக்கு என்று குஜராத்தில் அடிக்கப்படும்  கூத்தை இன்னும்   இந்த உலகம் நம்புவது விந்தை தான்
http://www.indianexpress.com/news/gujarat-eases-liquor-norms-tourists-to-get-permit-on-arrival-at-airport/1122093/0

பணம் இருப்பவன் மருத்துவ சான்றிதழ் வாங்கி பெர்மிட் வாங்கி குடிக்கலாம்
அண்டை மாநிலங்களின் அருகில் இருக்கும் ஊர்களில் வசிப்பவர்கள் அங்கு சென்று குடித்து விட்டு வரலாம்,ஊர் சுற்ற வருபவர்கள் குடிக்கலாம், அதற்காக விடுதிகளில் சாராயம் வைத்து இருக்கலாம்.
ஏழைகளுக்கு மட்டும் தான் குடிப்பது சிரமம் அவர்களுக்கு ஒரே வழி கள்ளசாராயம்.இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் கள்ள சாராயதினால் இறப்புகள்,கண்பார்வை போகுதல் போன்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெற்ற மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.

            கள்ள சாராய சாவுகள் மிக அதிகம் என்பதால் நம்ம
சங்க பரிவாரங்களின் வழக்கமான நாட்டாமை தீர்ப்பான மரண தண்டனை சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் கொண்டு வரப்பட்டது. .

கொள்கை ரீதியாக நாங்கள் மதுவை எங்கள் மண்ணில் ,எப்படி முட்டையை கூட ரயிலில் விடவில்லையோ அது போல மதுவை அனுமதிக்க மாட்டோம் என்று சிலர் வாதிடுவதை பார்க்கும் போது /குஜராத்தில் வருமானத்தை பற்றி கவலைப்படாமல் மது விலக்கு என்று எப்படி மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் /மது எதிர்ப்பாளர்கள் பாராட்டும் நிலைக்கு மூளை சலவை செய்யபட்டிருகிறார்கள் என்பதை பார்க்கும் போது மிகுந்த ஆச்சரியம் வருகிறது

    .ஊர் சுற்ற வருபவனுக்கு சாராயம் குடிக்க/வாங்க பெர்மிட் வாங்க அரசாங்கம் குஜராத்திற்குள் வரும் போதே இரத்தின கம்பளம் விரித்து பெர்மிட் வழங்குகிறது.அதிக பணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகளில் சாராயம் தண்ணீராக ஓடலாம்.
     மருத்துவர் சான்றிதழ் பெற்று யார் வேண்டுமானாலும் மது அருந்தலாம்.குஜராத் மாநில மது விலக்கு சட்டத்தின் கீழ் வெளிமாநிலத்தில் பத்து வருடம்,வெளிநாட்டில் ஐந்து வருடம் (நமக்கு வெளிநாடு என்றால் எந்த விஷயமாக இருந்தாலும் உசத்தி ஆயிற்றே )வசித்து பின் குஜராத்திற்கு திரும்பியவர் என்றார் மருத்துவர் சான்றிதழ் இல்லாமல் கூட மது பாட்டில்கள் வாங்கலாம்.அருந்தலாம்.
    இந்த அழகில் மது விலக்கு எங்கள் உயிர்மூச்சு என்று அதனை பெருமையாக பேசவும் வாய்ப்பு.ஒரே கல்லில் பல மாங்காய் எனபது இது தானோ
     மது விலக்கு இருக்கும் சில மாநிலங்களில்
பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தல்/அங்கு இருக்கும் ராணுவ வீரர்களிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கி விற்றல் போன்றவை மிக அதிகம்
போக்குவரத்து வசதிகள்/சாலைகள் பெருகிய இந்நாளில் அண்டை மாநிலங்களுக்கு செல்ல அதிக நேரம் எடுக்கும் ஊர் எதுவும் தமிழகத்தில் கிடையாது.புதுவை/ஆந்திரம்,கேரளம்,கர்நாடகம் என்று மற்ற மாநிலங்களில் சென்று மது அருந்துவதோ,அங்கிருந்து ரகசியமாக வாங்கி வந்து விற்பதோ மிகவும் எளிதான ஒன்று
        .விலை குறைவு என்று மிக சிறிய மாநிலமான புதுச்சேரியில் இருந்து  தமிழகத்திற்கு வரும் மது பாட்டில்களில்  நூற்றில் ஒரு பங்கு கூட பிடிபடுவதில்லை.பிடிபட்டாலும் போலிசுக்கு அதிக வருமானம்.அவ்வளவு தான்
        முன்னாள் ராணுவத்தினர்  மது வாங்குவதை மாநில அரசின் மதுவிலக்கு தடை செய்ய முடியாது.ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மாசம் வாங்கும் பாட்டில்கள் மூன்று லட்சத்திற்கும் அதிகம்.மது விலக்கு வந்தால் இப்போது கொடுத்தால் கிடைக்கும் விலையை விட இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கிடைக்கும்.அவர்களுக்கு
         பணக்காரர்களுக்கு லைசென்ஸ் ,ஐந்து நட்சத்திர விடுதிகளில் அனுமதி இருக்கும்.நடுத்தர வர்க்கத்தினர் நூறு கிலோமீட்டர் தள்ளி போய் பக்கத்து மாநிலத்தில் குடித்து விட்டு விழுந்து கிடப்பர்.போதைக்கு அடிமையாக விரும்புபவர்கள் இருமல் மருந்துகளில் மாத்திரைகளை கலந்து பாட்டில் பாட்டில் ஆக முழுங்குவர்
கள்ள சாராயம் பல கொலை/திடீர் பணக்காரர்களை உருவாக்கும் .
        இணையத்தின் மூலம் சாராயம் எப்படி தயாரிக்கலாம் என்பதை எளிதில் யார் வேண்டுமானாலும் கற்று கொள்ள முடியும்.
        வெளிமாநிலங்களில் இருந்து தினமும் தமிழகம் வரும் லட்சக்கணக்கான வாகனங்களையும் /லட்சக்கணக்கான மக்களையும் சோதனையிட எத்தனை ஆயிரம் காவல்துறையினர் தேவை.
மது பழக்கம் உள்ள/எளிதாக அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் உடைய பலரை கடத்தல்காரர்கள் ஆக்கும் நிலை தான் மது விலக்கினால் கிடைக்கும் பலனாக இருக்கும்
       மது விலக்கு வந்தால் கள்ள சாராயம் என்ற அரசியல்வாதிகள்,காவல்துறையினருக்கு உருவாகும் தங்க சுரங்கத்தை பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்
பாலியல் வன்முறைகள் அதிக அளவில் நடைபெறுவதால் ஆண்களின் பாலியல் உறுப்புகளை அழித்து விட்டு இப்போது மாடுகளுக்கு பெரும்பாலும் செய்யபடும் செயற்கை கருத்தரிப்பு போல மக்களுக்கும் செயற்கை கருத்தரிப்பு/க்ளோனிங் மூலம் குழந்தைகள் என்பதை நடைமுறைபடுத்தி விட வேண்டும் என்று கோருவதற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கோருவதற்கும் வித்தியாசம் கிடையாது.
Series Navigationதுளிப்பாக்கள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 46 ஆதாமின் பிள்ளைகள் – 3
author

பூவண்ணன்

Similar Posts

27 Comments

 1. Avatar
  ஷாலி says:

  மனித அறிவு எப்படியெல்லாம் மழுங்கிபோகிறது என்பதற்கு இந்த ஒரு கட்டுரை போதும்.
  // மத ரீதியாக மதுவை எதிர்ப்பவர்கள் எதிர்க்கும் பலவற்றில் மதுவும் ஒன்று .மனித உரிமை என்பதை ஒரு பொருட்டாக கருதாதவர்கள் தான் அவர்கள்.//

  பூவண்ணன் அவர்களே! மதத்தை விட்டுத்தள்ளுங்கள்.அறிவியல் ரீதியாக தொடர்ந்து மது குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பது உண்மையானால் மது குடிப்பது மனித உரிமை தான்.ஆனால் உண்மை அப்படி அல்லவே.எல்லா குடிகாரர்களும் தங்கள் உடம்பை குட்டியசுவராகத்தானே ஆக்கிக்கொல்கிறார்கள்.
  அரிசி விளைவிக்கும் காலத்திலிருந்து சாராயம் உற்பத்தி செய்வதால் சாராயம் உணவாக மாறிவிடுமா? போதை தரும் வஸ்துக்கள் அனைத்தும் தனி மனிதனுக்கு சமூதாயத்திற்கு கேடு விளைவிப்பவைதான்.இவற்றை தடுப்பதற்கு எதையாவது கிள்ளிப்போடுங்கள்.தீமைகளை நியாயப்படுத்த குஜராத்துக்கும் பாண்டிக்கும் ஓடாதீர்கள்.தீமை மதுவுக்கு துணை போக அறிவை பயன்படுத்தாதீர்கள்.அறிவு முடமானால் தடம் மாறிப் போகும்.

 2. Avatar
  பூவண்ணன் says:

  http://www.medicaldaily.com/7-health-benefits-drinking-alcohol-247552

  என் மருத்துவ பணியில் பார்த்த பல வயதானவர்களில் மகிழ்ச்சியாக வாழும் பலர் மதுவை அளவாக அருந்துபவர்கள்,
  தள்ளாத வயதிலும் நண்பர்களை ஆர்வத்தோடு வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்கும் பலர் மது அருந்துபவர்கள் தான்.

  பணியில் இருந்து ஓய்வு பெற்ற 70, 80 வயதை தாண்டிய வீரர்கள் மிக மகன்/உறவினர் /நண்பர் வாங்கி வந்த உயரிய வகை மது இருக்கிறது என்று நண்பர்களை அழைத்து கொடுக்கும் விருந்துகள் பலவற்றில் கலந்து கொண்டு இருக்கிறேன்

  ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு இலவசம் என்று சொல்லும் அளவிற்கு மிக குறைந்த விலையில் மது கிடைக்கிறது.பல்லாயிரக்கணக்கான மது அருந்துபவர்களோடு பழகியவன் நான்.

  மதுவை ஒரு பெருந்தவறாக எண்ணும் கூட்டத்தை விட அளவாக மது அருந்துவதை வழக்கமாக கொண்ட இந்த கூட்டத்தில் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக காலத்தை கழித்து கொண்டு உயிர் வாழ்பவர்கள் அதிகம்.

  பிரெஞ்சு நாட்டில் ஒரு பகுதியில் வாழும் பலர் நீண்ட நாள் நல்ல உடல்நலத்துடன் வாழ அவர்கள் அருந்தும் ரெட் வைன் தான் காரணம் என்று கண்டறியப்பட்டு ,மது அருந்தாதவர்களுக்காக ரெட் வைன் மாத்திரை வடிவத்திலும் வர ஆரம்பித்தது

  அதிக அளவில் மது அருந்துவதால் வரும் தீமைகள் மிக அதிகம்.அது எண்ணெய் பலகாரங்கள்,இனிப்புகள்,மாமிசம்,பன்னீர் என அனைத்திற்கும் பொருந்தும்.அது தவறு என்பதை வலியுறுத்த வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக தடை செய்தால் வேறு இன்னும் கெடுதலான போதைகளை தேடி தான் போதைக்கு அடிமை ஆகிறவர்கள் செல்வார்கள்.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   நண்பர் பூவண்ணன்,

   உங்கள் இராணுவ மதுக்குடிப்பு நடைமுறைகளை நியாயம் காட்டி, ஏழைகள் இல்லங்களில் அனுதினம் நிகழும் குடும்பக் கலகங்களை மூடி மறைத்து, அரசாங்கத்துக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் உங்கள் குடிப்பழக்கத்தை திண்ணையில் விளம்பரப் படுத்த வேண்டாம்.
   குடிப்பவர் பலருக்கு வரைமுறை, எல்லை தெரிவ தில்லை என்பதுதான் உண்மை.

   சி. ஜெயபாரதன்

 3. Avatar
  paandiyan says:

  போலீஸ் இருந்தும் திருட்டு இல்லயா ? அது வேண்டுமா ? விபசாரம் தடுப்பு சட்டம் இருந்தும் அது இல்லையா ? அது வேண்டுமா ? இதுதான் என்னுடிய அடுத்த கட்டுரை இங்கு . பொழுது போக வேண்டாமா எனக்கும் இங்கு ..

 4. Avatar
  ஷாலி says:

  தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
  மது குடிப்பதால் சில பயனுண்டு என்று சிலர் கூறுவதை, இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.அதாவது இதய நோய் மற்றும் மாரடைப்பு (Coronary Heart Diesease) வராமல் தடுப்பதில் சிறிது பங்குண்டு.ஆயினும் இப்படி சிறிது மது குடிப்பவனின் நிலமை,ஒருவன் செங்குத்தாக வழுக்குப்பாறையில் ஏறுவதற்க்குச்சமம்.எந்த நிலையிலும் அவன் சறுக்கிவிலலாம் உயிருக்கு ஆபத்து.ஆகவேதான் இதில் பல மடங்கு தீமை உள்ளது என்பதை
  உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்வுக்கழகமான அமெரிக்காவின் மாயோ மருத்துவ கழகமும் இதையே கூறுகின்றது.( Mayo Foundation for Medical Education and Research )

  “Alcohol may offer some health benefits, Especially for your heart. On the other hand, alcohol may increase your risk of health problems and damage your heart. Certainly, you do not have to drink any alcohol,and if you currently do not drink, and do not start drinking for the possible health benefits. In some cases, its safest to avoid alcohol entirely – the possible benefits do not outweigh the risks. ” ——www.mayoclinic.com/health/alcohol/SC00024
  “More harm than good” from red grape antioxidant”
  http://www.medicalnewstoday.com/articles/263751.php

  Consumption of even the slightest amount of alcohol could have an impact on gut health, U.S. researchers suggest. Dr. Scott Gabbard and colleagues at the Dartmouth-Hitchcock Medical Center and the Mayo Clinic said just one drink per day for women — two for men — could lead to small intestinal bacterial overgrowth and subsequently cause gastrointestinal symptoms such as bloating, gas, abdominal pain, constipation and diarrhea.
  http://inthenews.mayoclinic.org/2011/11/01/alcohol-may-impact-gut-health/

  நான் எழுத நினைத்ததை திரு.பாண்டியன் எழுதி விட்டார். நன்றி நண்பரே!

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   //நான் எழுத நினைத்ததை திரு.பாண்டியன் எழுதி விட்டார். நன்றி நண்பரே!//

   எப்படியோ சமரசமாப் போனா நல்லதுதான்.

   சாமிதான் கைவிட்டுவிட்டார். குடிப்பிரச்சினையாவது உங்களை இணைக்கிறதே !

 5. Avatar
  ஷாலி says:

  நண்பர் பூவண்ணன் நல்ல எழுத்தாளர்,சிந்தனையாளர்தான் ஆனால் மதியை மயக்கும் மது,மாது,சூது எதில் எவர் விழுந்தாலும் தன் தவறு தெரியவிடாது நியாயப்படுத்தும் நிலையை அடைவார்கள்.ஒன்னும் பிரச்சினை இல்லை.இப்ப ஜாலியாக பாட்டைக் கேட்போம். இப்ப தமிழ்நாட்டில் முக்காவாசிப்பேருக்கு தண்ணியிலே கண்டம்.கிணத்துத் தண்ணி,ஆத்துத் தண்ணி மட்டும் அல்ல ஊத்துகிற தண்ணி யிலும் தான்.

  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
  இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
  என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
  சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து

  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

  புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
  ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்

  அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
  இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா

  மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்
  என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்
  காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்

  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
  இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
  என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
  சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
  சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

  இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
  மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
  இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
  மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
  எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
  இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு

  ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
  மானம் போச்சு கானம் போகாது
  ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது

  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

  இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
  என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
  சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து

  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
  இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
  என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி.
  படம் :சிந்து பைரவி,அடுத்து அஞ்சாதே மிஷ்கின் பாட்டைக் கேட்போம்.

  கண்ணதாசன் காரைக்குடி
  பெயரைச்சொல்லி ஊத்திக்குடி
  குன்னக்குடி மச்சான் போல் பாடப்போறேண்டா
  கண்ணாடிக் கோப்பையிலே கண்ணை மூடி நீச்சலடி
  ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடிப்போகும் விஷக்காய்ச்சலடி
  போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்
  சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம்தான்

  அண்ணனும் தம்பியும் எல்லோரும்
  இங்கே வந்தா டப்பாங்குத்துதானே
  ஓவரா ஆச்சுதுனா வெட்டுக்குத்துதானே
  எங்களுக்கு தண்ணியிலே கண்டமில்லை
  எங்களுக்கு சாதி மதம் இரண்டுமில்லை
  கட்சிக்கார மச்சி என்னா ஆச்சி வேட்டி அவுந்து போச்சு
  ரோட்டு கடையிலே மனுஷன் ஜாலியப்பாரு
  சேட்டு கடையிலே மனைவி தாலியப்பாரு!…

  http://www.mayoclinic.com/health/alcohol/SC00024

 6. Avatar
  IIM Ganapathi Raman says:

  //மதுவை வெறியோடு எதிர்ப்பவர்களில் 100 க்கு 99 பேர் மத /சாதி வெறியர்கள் தான்.//

  மதுவிலக்கு போராட்டம் அரசியல கட்சியொன்று தமிழகத்தில் நடாத்தும்போது அங்கே குடியில் மூழ்கிய தொண்டர்கள் இல்லாவிட்டால் அப்போராட்டம் நடாத்த முடியாது. இதை செல்வி ஜெயலலிதா அவர்கள் சட்டசபை உரையில் சுட்டிக்காட்டினார்கள். அக்கட்சி வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தது.

  ஜாதித்தலைவர்களுக்கு எடுக்கப்படும் குருபூஜைகள் போது டாஸ்மார்க் கடைகள் நான்கு நாட்களாக மூடப்பட வேண்டும் என்ற உத்தரவு இன்றைய தினங்களில் மதுரை, தேனி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமலில் இருக்கிற்து. தண்ணி போடாமல் ஜாதித்தலைவன் அவர்களுக்கு உயரமாகத் தெரியமாட்டான் போலும்.

  1. Avatar
   பூவண்ணன் says:

   கணபதி ஐயா

   எல்லா கூட்டங்களுக்கும் அழைத்து வரப்படும் அதே தொண்டர்கள் சாதி ஒழிப்பு பேரணிகளுக்கும் புல்லாக வருவார்கள்.அவர்களுக்கு சாதியின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக,போற்ற வேண்டிய தலைவர்களாக காட்டபடுபவர்களை பார்த்தால் என் கூற்றின் உண்மை புரியும்

   மதுவை ,மது அருந்தும் பாருக்கு செல்பவன் யாரும் அதை நடத்துபவன் எந்த சாதி,எந்த மதம் என்பதை பார்த்து செல்வதில்லை.ஆனால் குறிப்பிட்ட மதத்தவர்,சாதியினர் நடத்தும் உணவகங்களுக்கு செல்வதை தவிர்ப்பவர்கள் பெரும்பான்மையானோர் மதுவை வெறுப்பவர்கள் தான்.வெளியில் பச்சை தண்ணீர் கூட அருந்த மாட்டேன் என்று பெருமை பேசுபவர்களுக்குள் இருப்பது சாதி வெறி,சாதி பெருமை.

 7. Avatar
  Dr.G.Johnson says:

  திரு பூவண்ணன் அவர்களின் கேள்வி இன்று இன்றியமையாதது. இது பற்றி சமுதாய ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், திண்ணை வாசகர்களும் கருத்து சொல்வது நல்லது.

  உலகின் பல நாடுகளில் மது தாராளமாகக் கிடைக்கிறது. மது விற்பனையால் கோடிக் கணக்கில் அந்த அரசுகளுக்கு வரி விதிப்பதின் மூலம் பல கோடிகள் வருமானம் கிடைக்கிறது.

  இவ்வாறு தாராளமாக மது கிடைக்கும்போது மக்கள் மது தேடி ஓடுவதில்லை. அதுவும் எல்லா பொருட்கள் போன்று எளிதில் கிடைப்பதால் வசதி உள்ளவர்கள் வாங்கி பருகுகின்றனர். அது ஓர் அபூர்வப் பொருளாகக் கருதப்படுவதில்லை.

  ஆனால் மது விலக்கு அமுலில் இருந்தால் மது அபூர்வப் பொருளாகி விடுகின்றது. அது கிடைக்கும் இடம் நாடி ஓடுகின்றனர் இதைப் பயன்படுத்தி கள்ள சாராயம் தயார் செய்து விற்பது பெருகுகிறது. அதைக் குடித்து மடிவோர் எண்ணிக்கையும் பெருகுகிறது.

  சில மதங்கள் மது அருந்துவதை தடை செய்தாலும் , அதன் அரசுகள் மது விற்பனையைத் தடை செய்யாமல் அதற்கான வரியை வருடாவருடம் உயர்த்தி கஜானாவை நிரப்புகின்றன. .

  மது அருந்துவது உடல் நலத்தைக் கெடுத்து, பொருளாதாரத்தை அழித்து குடும்பத்தை சீர்குலைத்துவிடும் என்பதை அறிந்துதான் பலர் குடித்து வருகின்றனர். குடிப்பது தனி மனிதனின் உரிமைதான் என்றாலும் அதன் விளைவுகளை அரசுகள் விளம்பரப் படுத்த வேண்டும்.
  இன்று தமிழ் நாட்டில் மது விற்பனை தாராளமாக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் கூட கால், அரை, என்று பாட்டில்கள் திருட்டுத் தனமாக விற்பனை ஆகின்றன. வயலில் வேலை இல்லாவிட்டாலும் , குடிப்பவர்கள் எப்படியோ வாங்கி குடித்துக் கொண்டுதான் உள்ளனர். இதுகூட கிடைக்காவிடில் இவர்கள் கள்ள சாராயத்தைத்தான் நாடுவர்.

  பாண்டிச்சேரியில் உள்ள மக்களுக்கு மதுக் கடைகள் பழகிப்போனதால் அவர்களுக்கு குடிக்கும் வெறி இல்லை. அதுபோல் தமிழ் நாட்டிலும் மதுக் கடைகள் தாராளமாக இருந்தால் அது சாதாரணமாகி குடி வெறியும் தானாக
  அடங்கிவிடும். எப்போதுமே ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றாலே அதன் மீது மோகம் கொள்வதுதானே மனிதனின் குணம்?….. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  1. Avatar
   பூவண்ணன் says:

   தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி ஐயா.சுற்றுலா பயணிகளுக்காக வந்து இறங்கும் இடத்திலேயே குடிக்க பெர்மிட் வழங்கும் வசதிகளை செய்து கொடுக்கும் அரசுகள் ,மது விலக்கு எங்கள் உயிர்மூச்சு என்று பேசும் பாசாங்கான கபட நாடகங்களை எப்போது புரிந்து கொள்ள போகிறோமா

 8. Avatar
  பூவண்ணன் says:

  paandiyan ஐயா

  ஐயையோ இந்தியாவில் மது அருந்துதல்/மது விற்பனை தடை செய்யப்பட்ட ஒன்றா.தெரியாமல் கட்டுரை எழுதி விட்டேனே

  இந்தியாவில் 29 மாநிலங்கள் ,ஏழு யூனியன் பிரதேசங்கள்.தமிழகத்தில் மட்டும் அரசுக்கு வருவாய் 20000 கோடிக்கு மேல்.தமிழகத்தை விட கேரளா,பஞ்சாப்,மகாராஷ்டிரத்தில் தனி நபர் மது அருந்துதல் per capita liquor consumption அதிகம்.
  தமிழகத்தை போல வரும் வருவாயை சீர் செய்தால் ஆண்டுக்கு அரசுக்கு மூன்று லட்சம் கோடிக்கு மேல் (இப்போதே இந்திய அளவில் இரண்டு லட்சம் கோடிகளுக்கு அருகில் அரசுகளுக்கு வருமானம் வருவது மது விற்பனையில்,அதன் மீதான வரிகளில் இருந்து தான் )வருமானம் வரும்.
  இந்திய அளவில் மிக முக்கியமான வருவாய் ஈட்டும் தொழில்களில் மது விற்பனை முதன்மையானது.21ஆம் நூற்றாண்டில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்க போகும் துறை சுற்றுலாத்துறை எனபது தான் வல்லுனர்களின் கருத்து.
  உலகில் எந்தெந்த நாடுகளில் மது தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை பார்த்தால் மது எதிர்ப்புக்கும் மதவெறிக்கும்/சாதிவெறிக்கும் உள்ள நேரடி தொடர்பு தெரியும்.ஆனால் நாம் கண்களை திறந்து பார்த்தால் தானே

  இந்திய அளவில் மக்கள் மேம்பாட்டில் முதல் இடத்தில விளங்கும் சிறு மாநிலங்கள் கோவாவும் ,புதுச்சேரியும்.மதுவை ,மது விற்பனையை,அதன் மூலம் வரும் சுற்றுலா பயணிகளை சார்ந்த மாநிலங்கள் இவை இரண்டும்.அங்கு யாரும் மதுவை ஒழிப்பும்,தடை செய்வோம் என்று போராடுவது கிடையாது.இங்கு தான் காட்டு கூச்சல்

  பெரிய மாநிலங்களில் தமிழகமும்,கேரளாவும் சராசரி ஆயுள்,தாய் சேய் இறப்பு,தனி நபர் அடிப்படை வசதிகள்,கல்வி கற்கும் வாய்ப்புகள்,பெண் கல்வி,வேலைவாய்ப்பு,ஆன்-பெண் சதவீதம் ஆகியவற்றில் முதலிடம் பெறும் மாநிலங்கள்.

  1970 ஆம் ஆண்டு தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்த மக்கள் ஐம்பது சதவீதத்திற்கும் மேல்.இன்று அது 19 சதவீதம்.மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு வருவாய் வேண்டும்.கள்ள சாராய சாவுகளுக்கு குறையில்லாத,கள்ள சாரயத்தினால் பல கொலைகள்,சண்டைகள் நடந்து கொண்டிருந்த காலம் அது.

  சாத்தியமில்லாத மது விலக்கு கொள்கையை அரசு கை விட்டதால் கிடைத்த வருவாயின் மூலம் அரசு அடைந்த பலன்களை தான் மேலே பட்டியல் இட்டுள்ளேன்.

 9. Avatar
  பூவண்ணன் says:

  ஷாலி சார்

  மத வெறி,சாதி வெறியோடு மது எதிர்ப்புக்கும் நேரடி தொடர்பு உண்டு.மதுவை வெறுக்கும்,அடியோடு எதிர்க்கும் பெரும்பானமையானோர் தீவிர சாதி,மத வெறி பிடித்தவர்களாக இருப்பது தற்செயல் அல்ல
  மதுவை எதிர்ப்பவர்கள் அனைவரும் சாதி வெறி,மத வெறி பிடித்தவர்கள் என்று கூறவில்லை ,ஆனால் 100இல் 99 சதவீத மது எதிர்ப்பு போராளிகள் தீவிர மத/சாதி வெறியர்கள் தான்
  மதுவை வெறுக்கும் கிராமம் ,மதுவே அண்டாத குடும்பம் என்றால் அங்கு தீண்டாமை,சாதி பழக்க வழக்கங்களில் வெறி,தான் ,தன பழக்கம் தான் உயர்ந்தது என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும்

  அடுத்தவன் மது அருந்த கூடாது,மாட்டு கறி உண்ண கூடாது ,மாட்டு பால்,ஆட்டு பால் குடிக்க கூடாது என்று தடை போடும் உரிமை அரசுக்கு /நீதிமன்றங்களுக்கு உண்டு எனும் நிலையே சரியான ஒன்று கிடையாது.உண்மையான மக்கள் ஆட்சியும் கிடையாது

  மது அருந்தாத ஒருவனுக்கு பல சாதிகள்/மதங்களிலும் நண்பர்கள் இருப்பதை விட மது அருந்தும் ஒருவனுக்கு அதை போல பல மடங்கு நண்பர்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்

  சாதிகளை,மதங்களை கடந்து திருமணம் செய்தவர்களை ஆராய்ந்தால் பெரும்பான்மையானோர் மது பழக்கம் கொண்டவர்களாக தான் இருப்பார். அதனால் தான் சாதி வெறியர்களும்,மத வெறியர்களும் மதுவை வெறியோடு எதிர்க்கின்றனர்

  அண்டை நாட்டு ராணுவங்களில் மத வெறி அதிகமாக இருக்க முக்கிய காரணம் அங்கு மது என்றால் பெரும்பாவம் என்ற மத அடிப்படையிலான எண்ணம் தான்.இங்கு ஆட்சியை பிடிக்க அலையாத ராணுவம்,அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் ராணுவம் இருக்க முக்கிய காரணம் மது.

  பல ஆயிரம் மது அருந்துபவர்களோடு பழகியவன் என்ற முறையில் மதுவை வெறுப்பவர்களில்,மது அருந்துவது பெருங்குற்றம் என்று கருதுபவர்கள் பெரும்பான்மையானோர் மிக அதிகமான மத வெறி/சாதி வெறி கொண்டவர்கள் என்பதை என் அனுபவத்தில் இருந்து என்னால் உறுதியாக சொல்ல முடியும்

  நான் மாதம் பத்து பாட்டில்கள் வாங்குவதை (அதுவும் ரம் என்றால் 600 ரூபாய்க்கு பத்து பாட்டில்கள் )எந்த மாநில அரசாலும் தடை செய்ய முடியாது.என்னை போல சலுகை விலையில் மாத கோட்டா உள்ள பல ஆயிரக்கணக்கானோரில் எவ்வளவு பேர் மதுவுக்கு அடிமை ஆகி உள்ளனர் என்பதை ஆராய்ந்தால் அரசு மது கடைகள் நடத்துவதால் சீரழிவு அதிகம் என்ற வாதம் எவ்வளவு தவறானது எனபது தெளிவாக புரியும்.

  மதுவோ மாட்டு கறியோ அது தனி நபரின் உரிமை.அதை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்,குடிக்க வேண்டும் என்று யாரையும் வற்புறுத்துவதும் தவறு,தடை செய்வதும் தவறு

 10. Avatar
  பூவண்ணன் says:

  மதுவின் பாதிப்புகளை குறைக்க மைனர்களின் கையில் மது கிடைக்காமல் தடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேச முதலில் மது விலக்கு என்ற சாத்தியமில்லாத இலக்கிலிருந்து வெளி வர வேண்டும்.
  மிக குறைந்த சதவீத மது வகைகளை (நான்கில் இருந்து ஆறு சதவீதம்)மட்டும் அனுமதிக்கலாமா,தத்கால் வாங்க அடையாள அட்டை கட்டாயம் எனபது போல அடையாள அட்டையின் நகலை வாங்கி கொண்டு மது விற்கலாமா போன்ற வழிகளை அரசு ஆராயலாம்
  விற்கப்பட்ட மது பாட்டிலின் எண்ணை அடையாள அட்டையோடு இணைத்து பதிவு செய்தால் ,மைனர்களின் கையில் உள்ள மது பாட்டில்கள் எந்த கடையில் ,யாரால் வாங்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வது எளிதான ஒன்று.அப்படி சிறுவர்களுக்கு மதுவை கிடைக்குமாறு செய்தவர்களை தண்டிக்கலாம்.அதிக அளவில் மது அருந்துபவர்களை கடை பணியாளர்களே அடையாளம் காட்டி alcoholics anonymous போன்ற குழுக்களின் உதவியை அவர்கள் நாடுமாறு செய்யலாம்.அப்படி பாதிக்கப்பட்டவர்களை AA குழுவினர் அணுகி உதவிகள் புரியலாம்.
  மதுவுக்கு அடிமையானவர்களை அதில் இருந்து விடுவிப்பதில் alcoholics anonymous குழுவின் பணி மிகவும் போற்றத்தக்கது.
  மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதனை செய்ய ஒவ்வொரு சுங்க சாவடியிலும் அல்கோசென்சொர் கருவிகள் வைத்தால் ,ஓட்டுனர் உரிமம் உடனே பறிக்கபட்டால் மது அருந்தி வாகனம் ஒட்டுவதால் நிகழும் விபத்துக்கள் பெருமளவு குறையும்.
  விமான ஓட்டிகள் விமானத்தில் ஏறும் முன் அல்கோசென்சார் பரிசோதனைக்கு மருத்துவர் முன் உட்படுத்தபடுவர்.மருத்துவர் அவர் ரத்தத்தில் மதுவின் அளவு இல்லை என்று சான்று தந்த பிறகே அவர் விமானத்தை ஓட்ட முடியும்.அவர் சோதனையில் மதுவின் பிடியில் இருப்பது தெரிய வந்தால் ஓட்டுனர் உரிமம் சச்பெண்ட் செய்யப்படும்.
  இதே நடைமுறையை அனைத்து அரசு, தனியார் வண்டிகளுக்கும் நடைமுறைப்படுத்தலாம்.alco சென்சர் கருவியின் மற்றும் வீடியோ பதிவு செய்யும் முறையின் உதவியால் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை தண்டிப்பது எளிது.
  இவைகளை நடைமுறைப்படுத்தினால் ஓரிருவர் செய்யும் தவறுகளால் மொத்தமாக மது அருந்துபவர்கள் அனைவரின் மீதும் விழும் குற்றசாட்டுக்களில் இருந்தும் தப்ப முடியும்

 11. Avatar
  ஷாலி says:

  பூவண்ணன் ஸார்! தாங்கள் மீண்டும் மதுவோடு,சாதி மதத்தை சேர்த்தே எழுதிக்கொண்டு வருகிறீர்கள்.இந்தியா தமிழ்நாடு என்பதை விடுத்து உலகளாவிய மானிட ஜென்மங்களுக்கு மது நன்மை தருகிறதா? அல்லது தீமையை கொடுக்கிறதா? அறிவியல் ரீதியாக நன்மை உண்டு என்று சில இணைப்புக்களை கொடுத்தீர்கள்.புதிய அறிவியல் ஆய்வு முடிவுகள் படி மது மனிதனுக்கு செய்யும் நன்மையை விட தீமையே அதிகம்,குறிப்பாக சிவப்பு ஒயின் தீமை செய்கிறது என்ற ஆய்வு தகவலையும் நான் கொடுத்துவிட்டேன்.

  மதுவில்லா சமூதாயம் காண,தமிழகத்தில் பூரண மது விலக்கு வேண்டி பல போராட்டமும் வழி நடைப்பயணமும் மேற்கொண்ட திரு.வைகோ எந்த சாதி,எந்த மதம்? மக்கள் நல் வாழ்வு அரசுக்கு போதை வருமானம் அவமானாமில்லையா?

  உண்ணற்க கள்ளை உனில் உண்க சான்றோரான்
  எண்ணப்பட வேண்டாதார்.

  உட்கப் படா அர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
  கட் காதல் கொண்டோழுகுவார்.

  மதுவின் மீது விருப்பம் கொண்டு குடிப்பவர் எப்பொழுதும் நன்மை தீமை அறியாமல் இருப்பர்.பழி பாவத்திற்கு அஞ்ச மாட்டார்.முன் பெற்ற நற்பெயரையும் இழப்பர். என்று கூறிய திருவள்ளுவர் எந்த சாதி என்ன மதம்?

  நாட்டின் குடிமகனையெல்லாம் குடிகார மகனாக்கி அழித்தபிறகு யாருக்காக இந்த குடி கெடுக்கும் அரசு?

  அப்பனுக்கு சாராயம் – புள்ளைக்கு சத்துணவு! கல்லூரி மாணவர்களுக்கு பாஸ் மார்க் கிடைக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கண்டிப்பாக உண்டு.
  யார் எது சொன்னாலும் கவலைப்படாதீர்கள்.பாட்டி சொல்லை தட்டாதீர்கள்.நம்ம அவ்வை பாட்டி சொல்கிறார்.
  ஊக்க “மது”கைவிடேல்.

  மா சம்பத்து புட்டி அடிக்கிறதா சொல்கிறீர்கள்.குடியும் குடித்தனமுமாக இருப்பதில் தப்பில்லை.எதற்கும் கல்லீரலை யும்,கணயத்தையும் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

 12. Avatar
  ஷாலி says:

  டாக்டர்.ஜான்சன் ஸார்!ஒரு மருத்துவர் என்றமுறையில் மதுவினால் ஏற்ப்படும் தீமைகளைப்பற்றி அறிவுபூர்வமாக விளக்கம் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.ஏமாந்தேன்.
  போகிற போக்கில் பொத்தாம்பொதுவாக
  //மது அருந்துவது உடல் நலத்தைக் கெடுத்து, பொருளாதாரத்தை அழித்து குடும்பத்தை சீர்குலைத்துவிடும் என்பதை அறிந்துதான் பலர் குடித்து வருகின்றனர். குடிப்பது தனி மனிதனின் உரிமைதான் என்றாலும் அதன் விளைவுகளை அரசுகள் விளம்பரப் படுத்த வேண்டும்//
  என்று சொல்லிவிட்டு அரசு லாப நட்ட கணக்கை பார்க்கிறீர்கள்.இது ஒரு மருத்துவர் கருத்தாக தெரியவில்லை.ஒரு கிருஸ்துவர் கருத்தாகவே தெரிகிறது.

  நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் – Wine – திராட்சரசமும் கூட்டிக்கொள். – 1 திமோத்தேயு 5:23

  சவுலாக இருந்து செயின்ட் பவுலாக மாறிய,இயேசுவை காணாத மனிதரின் வார்த்தையை கடைப்பிடிக்கிறீர்கள். கர்த்தரின் வார்த்தையை கை விட்டுவிடுகிறீர்கள்.

  ஏசாயா 5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!

  நீதி 23: 29. ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
  30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், [கலப்புள்ள] சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

  நீதி 23: 20. மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.

  மதுபானம்(Wine) இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

  இன்று உலக அளவில் “குடிப்பழக்கம் உடலுக்கு கேடு” என்று விளம்பரங்களே செய்யப்படுகின்றன.

  “ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் தேவன் அவனை அழிப்பார்(destroy). நீங்களே அந்த ஆலயம்” என்று வாசிக்கிறோமே. எனவே அன்புக்குரிய தேவனுடைய பிள்ளைகளே, நாம் வஞ்சிக்கப்படாதிருப்போமாக. உங்கள் சரீரம் தேவனுக்குச் சொந்தம். நீங்கள் கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே (you were bought with a price). கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள், கிரக்கத்திற்கு விலைபோகலாமா? நித்தியத்தை “சிறு துளி பேரிழப்பு” என்று தொலைக்காதிருப்போமாக. Wine மதுபானம் குடிக்காதீர்கள்.

 13. Avatar
  Dr.G.Johnson says:

  நண்பர் ஷாலி அவர்களே, நீங்கள் கூறியுள்ளது தவறு. நான் இங்கு எழுதியது ஒரு முன்னுரைதான். மதுவினால் உண்டாகும் தீமைகளையும் நோய்களைப் பற்றியும் விரிவாக திண்ணைக்கு மருத்துவக் கட்டுரை எழுதியுள்ளேன். அது அடுத்த வாரம் வெளிவரும்.

  பைபிள் போதனைகள் அனைத்தும் நான் படித்தவைதான். அவற்றை திண்ணை வாசகர்களுக்கும் தந்துள்ள தங்களுக்கு நன்றி.

  மது என்பதில் இரண்டு வகை உள்ளது என்று கருதுகிறேன். liquor என்பதும் wine என்பதும். இதில் wine என்பது முழுக்க முழுக்க திராட்சைப் பழ இரசத்தில் தயார் செய்வது. மத்திய தரைக்கடல் பகுதிகளில் திராட்சைப் பயிரிடுவது அதிகம் இருந்துள்ளது. திராட்சைத் தோட்டம் பற்றி நிறைய உவமைகள் கூறியுள்ளார் இயேசு. பைபிள் காலத்தில் பெருவாரியானவர்கள் இந்த ஒயின் குடித்துள்ளனர். ஏசு கிறிஸ்துவும் இதைக் குடித்துள்ளார். அவர் செய்த முதல் அற்புதமே கானா ஊர் கல்யாணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதே. இதை ஆங்கிலத்தில் எழுதியவர்கள் wine என்று எழுதியுள்ளனர். அவர் கடைசியாக காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில் இராப்போஜனத்தின்போதும் திராட்சை ரசம் பரிமாறப்பட்டுள்ளது. அதை நினைவு கூறும் வகையில் இன்றும் தேவாலயங்களில் இராப்போஜன ஆராதனையில் அப்பமும் திராட்சை ரசத்திற்குப் பதிலாக wine பரிமாறப்படுகிறது. அவர்கள் அதை போதையூட்டும் மதுவாகக் கருதவில்லை. .. டாக்டர் ஜி. ஜான்சன்.

 14. Avatar
  Dr.G.Johnson says:

  விடிந்தால் தீபாவளி. இன்று இரவே குடிப்பவர்கள் மதுவில் மிதப்பார்கள். சாதாரணமாகக் குடிப்பவர்கள்கூட இன்று அளவுக்கு மீறி போதைக்குள்ளாவார்கள். இதுபோன்ற பண்டிகை நாட்களில் குடிப்பது வழக்கமாகிவிட்டது. அதிலும் இளைஞர்கள் குடித்துவிட்டு ஆடுவதும், சண்டையிடுவதும் காண சகிக்கமுடியாது. குடிப்பது பற்றி நான் நன்கு அறிவேன். குடிப்பதை நான் ஆதரிக்கவில்லை. 2500 வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் மதுவின் தீமைகள் பற்றி ” கள் உண்ணாமை ” எனும் அதிகாரத்தில் நமக்கு சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டார். நாம் இன்னும் குடிப்பது சரியா தவறா , மதுக் கடைகள் இருக்கலாமா அல்லது மதுவிலக்கு தேவையா என்று கடும் வாதத்தில் ஈடுபட்டுள்ளோம்!…………….அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

 15. Avatar
  பூவண்ணன் says:

  லேஸ் சிப்ஸ்.பெப்சி.கோகோ கோலா,,பஜ்ஜி,நெய் பலகாரங்கள் எல்லாம் உடலுக்கு நல்லவையா
  அளவோடு மது அருந்தினால் இருக்கும் நன்மைகள் என்றாவது சிலது உண்டு.இதில் எந்த அளவு எடுத்து கொண்டாலும் கெடுதி தான்.
  வெறும் பச்சை காய்கறிகள்,பழங்கள் /வேக வைத்த காய்கறிகளை உண்டு வாழ்ந்தால் மிகவும்நன்மை தான்.ஆனால் அதை கட்டாயபடுத்த முடியுமா
  பஜ்ஜியை,சிப்சை,இனிப்பு வகைகளை தடை செய்ய வேண்டும் என்று போராட முடியுமா.இவற்றால் இல வயது சக்கரை வியாதி,உடல் பருமன் போன்றவை குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன.அதை எடுத்து கொள்வதால் வரும் தீமைகளை விளக்குவது வழியா அல்லது தடை செய்வதா

 16. Avatar
  ஷாலி says:

  நண்பர் டாக்டர்.ஜான்சனின் அவர்களின் விளக்கத்திற்கு நன்றி! மதுவின் தீமைகளை குறித்து தாங்கள் எழுதும் அந் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  // மது என்பதில் இரண்டு வகை உள்ளது என்று கருதுகிறேன். liquor என்பதும் wine என்பதும். இதில் wine என்பது முழுக்க முழுக்க திராட்சைப் பழ இரசத்தில் தயார் செய்வது.//
  மதுவுக்கு தாங்கள் கொடுக்கும் இருவித விளக்கம் வித்தியாசமாக உள்ளது.எதிலெல்லாம் ஆல்ககால் உள்ளதோ அதற்க்கு பெயர்தான் மது(Liquor).எல்லா மதுக்களும் தானியங்கள்,பழங்களை ஊறவைத்து நொதிக்கச் செய்து பின்பு காய்ச்சி வடிப்பார்கள்.(Fermentation and Distillation).ஒயின் மட்டும் திராட்ச்சையை நொதிக்க்கச்செய்துபெறுவது. திராட்சை சாற்றை மதுவாக மாற்றும் நுண்ணுயிர் ஈஸ்டின் அறிவியல் பெயர் “சாக்கரோ மைசெஸ் செர்விசெஸ்” (Saccharomyces cerevises ) ஒரு துளியில் 50 லட்சம் நுண்ணுயிர்கள் இருக்கும், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்தில் இவை இரண்டு மடங்காக பெருகும். இவை பழத்திலுள்ள இனிப்பை உண்டு பல மடங்காக பெருகி நொதிகளை வெளிவிடுகின்றன. இந்த என்சைமே(Zymase) சர்க்கரையை சிதைத்து எத்தனால்(Ethanol) என்னும் ஆல்கஹால் மதுவாக மாற்றுகிறது.(Glycolysis Fermentation Metabolism) ஈஸ்ட் செல் வெளியிடும் ரஸமே ஒயின் என்னும் திராட்சை ரசம். மதுவில் உள்ள ஆல்ககாலின் விகிதாசாரத்திற்கு தகுந்தாற் போல் பெயர் மாறும்.சிவப்பு ஒயினில் 10.6 gr.ஆல்ககால் உள்ளது. Spirit என அழைக்கப்படும் மற்ற மதுக்களில் 20%- 40% வரை ஆல்ககால் கலந்திருக்கும்.
  திராட்சை பழத்தை பிழிந்து உடனடியாக அருந்துவது பழச்சாறு.இயேசு கிறிஸ்து தண்ணீரை பழச்சாறாக மாற்றினாரா அல்லது பழரசமாக ஒய்னாக மாற்றினாரா என்பது அவரவர்கள் நம்பிக்கையை பொறுத்தது.மக்களை சீர்திருத்த வந்த மாபெரும் புருஷர்கள் போதை மதுவை அருந்தி வழி காட்டினர் என்பது முரண்பாடு.மது வெறியில் மகளுடன் கூடிய சம்பவத்தை நோவாவின் சரிதையில் அறியலாம்.ஒயின் அருந்துவதால் போதை ஏற்ப்படும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.போதை ஒயினை ஆதரிக்கவும் முடியாது.

  இயேசுவின் சம காலத்தில் வாழ்ந்த யோவான் ஸ்நானனை(John the babtist) பற்றி குறிப்பிடும் போது,தாயுன் வயிற்றில் பிறந்த எவரும் யோவான் ஸ்நானைக் காட்டிலும் பெரியவர் ஒருவரும் இல்லை என்கிறார்.மேலும் “அவர் மது குடிப்பதில்லை”என்று இயேசு சொல்கிறார்.(“Shall drink no wine or strong drink –Luke.1:15.)ஆனால் யோவான் வழி செல்லும் இயேசு குடிப்பார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.இறுதியாக,

  “ Therefore donot be foolish,but understand what the Lord will is.Donot get drunk on wine,which leads to debauchery. Instead ,be filled with the Spirit.” –Ephesians. 5:15-18
  .
  Paul also tells us in Galatians 5 that drunkness is one of the acts that lead as away from the kingdom of God.

  1,Thessalonians 5 Tell as that if we get drunk we were not prepared for the coming of Christ kingdoms at the time.

 17. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள ஷாலி அவர்களே, Wine என்பதை ஒயின் என்றுதான் எழுதுகிறார்கள். அதற்கு ஒரு சொல்லில் தமிழில் வார்த்தை இல்லையா? Wine என்பதை திராட்சை மது என்று New Suras Supreme Dictionary அர்த்தம் கூறுகிறது.
  பண்டைய தமிழகத்தில் கள் இருந்ததுபோல் ஒயின் இல்லை. திராட்சைக் கோடிகள் பின்னாட்களில்தான் இறக்குமதி செயப்பட்டு பயிரிடப்பட்டிருக்கலாம். தென்னையும் பனையும் நம்மைச் சேர்ந்தவை என்பதால் கள் நமது முன்னோரின் கண்டுபிடிப்பாக இருக்கலாம். ஒயின் மத்திய தரைக்கடல் ( Mediteranean ) பகுதி கண்டுபிடிப்பாக இருக்கலாம். பண்டைய கிரேக்க கடவுள்கள் மதுவில் மயங்கி மனிதனின் நிலை கண்டு மேலோக்த்திலிருந்து கீழே எட்டிப் பார்த்து புன்னகை புரிவதாக டேனிசன் கவிதைகளில் எப்போதோ படித்ததாக நினைவு. அது Ambrosia என்ற மது என்று எண்ணுகிறேன். ( இது பற்றி நண்பர் சி. ஜெயபாரதன் அறிந்திருப்பார் என எண்ணுகிறேன். அவர்தான் ஆங்கில கவிதைகளின் மேதையாக விளங்குகிறார்! )

  இந்த ஒயின் பற்றிய விளக்கம் தந்தமைக்கு நன்றி. அதில் 10 சதவிகிதம் alchohol ( இதற்கும் சரியான தமிழ்ப் பெயர் தெரியவில்லை ) உள்ளது என்றும் விளக்கம் தந்துள்ளீர்கள். இந்த விளக்கம் ஒயினுக்கும் liquor ( இதை தமிழில் எப்படி சொல்வது? ) கும் உள்ள வித்தியாசத்தைக் கூறுகிறது. ஒயின் மிதமான பானம் ( லைட் drink ). இதனால்தான் பெண்கள் இதை விரும்பிப் பருகுகின்றனர்.

  கிறிஸ்துவ வேதநூலில் அல்லது வேதாகமத்தில் அல்லது பைபிளில் மதுவின் தீமைகள் பற்றி பழைய ஏற்பாட்டிலும் ( Old Testament ) புதிய ஏற்பாட்டிலும் ( New Testament ) பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை நீங்கள் உதாரணங்களாக சுட்டிக் காட்டியுள்ளதற்கு நன்றி.
  வேதாகமத்தில் மதுவுக்கும் திராட்சை ரசத்துக்கும் வேறுபாடு உள்ளது தெரிகிறது. லூக்கா 1 : 15 வசனம்:

  ” அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் ,மதுவும் குடியான்…” என்று யோவான் பற்றி கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து திராட்சை ரசம் என்பது மதுவிலிருந்து வேறுபட்டது எனலாம். இதைத்தான் நாம் ஒயின் என்றும் கூறுகிறோம். மது என்பது அப்போது சாராயம் போன்று வேறொரு பானம் அப்போதும் இருந்திருக்கலாம்.

  இந்த ஒயின் என்ற திராட்சை ரசம் சாதாரண வீடுகளில் அன்றாடம் பரவலாகப் பரிமாறப்படும் பானமாக இருக்கலாம். கானா ஊர் திருமண வீட்டில் இயேசு தண்ணீரை திராட்சை ரசமாகவே மாற்றியுள்ளார். அதை அவரும் பருகியுள்ளார்.
  யோவான்ஸ்நானன் பற்றியும் தன்னைப்பற்றியும் யூதமக்கள் கூறும் அவதூறை இயேசு இவ்வாறு கூறியுள்ளார் :

  மத்தேயு 11: 16 – 19 :
  16. இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து,

  17. உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்‌த்தாடவில்லை ; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.

  18. எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்றார்கள்.

  19. மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள் : இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
  இதிலிருந்து இயேசு திராட்ச ரசம் எனும் அந்த ஒயினைதான் குடித்துள்ளார் அப்படி அளவோடு குடிப்பது யூதர்களின் பழக்கமாக இருந்திருக்க வேண்டும். நான் ஒரு கிறிஸ்துவன் என்பதற்காக இதை மறைத்து போய் சொல்ல விரும்பவில்லை.

  திராட்சை ரசம் அப்போது உடல் நலத்துக்கு நல்லது என்று யூதர்கள் நம்பியிருக்கலாம். இன்றும் சிவப்பு ஒயின் அளவோடு குடிப்பது இரத்த ஓட்டத்தை சீர் செய்வதின் மூலம் இருதயத்தைப் பாதுகாக்கிறது என்று ஒரு சாரார் கூறிவருகின்றனர்.
  அமிர்தம் என்பது ( புராணத்தில் ) இரவாமையைத் தரக்கூடிய , தேவர்களின் உணவு என்று கூறுகின்றனர். இதையே அளவுக்கு மீறினால் உயிரை குடிக்கும் நஞ்சாகும் என்பதால்தான் தமிழ்ப் பழமொழி, ” அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு .” என்று தோன்றியிருக்குமோ?… அன்புடன் ஜி. ஜான்சன்.

 18. Avatar
  ஷாலி says:

  டாக்டர்.ஜான்சன் அவர்களின் விளக்கத்திற்கு என் பணிவான நன்றிகள்!இவ்விஷயத்தை தொடர்ந்து எழுத நான் விரும்பவில்லை.கைப்புண்ணிற்கு கண்ணாடி கேட்கும் உலகில் வறட்டு வாதங்களை நான் வைக்க விரும்பவில்லை.மது மற்றும் திராட்சை ரசம் பற்றிய விளக்க இணைப்பு கொடுத்துள்ளேன்.ஏற்றுக்கொள்ளலாம் அல்லது வேறு சபை விளக்கம் என்று விலக்கித் தள்ளலாம்.

  “ புளிக்கவைத்த திராட்சை பழச்சாறும் வேறு பழங்களின் சாறும் மது பானம் கொண்ட குடிவகையாகும்.பழைய காலங்களில் திராட்சை ரசம் முக்கிய குடிவகையாகும்.

  .யேசுக்கிறிஸ்துவின் உவமை களில் இது முக்கியம் பெறுகிறது அத்துடன் சுவிஷேசங்களிலும் இது கூறப்படுகின்றது.
  திராட்ச ரசம் என்று வேதாகமத்தில் கூறப்படுவதெல்லாம் புளிக்க வைத்த திராட்சரசம், அதில் மதுபானம் அடங்கியுள்ளது. புளிக்க வைக்காத திராட்சபழச் சாறு திராட்ச ரசம்(வைன்) என்று அழைக் கப்படுவதில்லை. புதிய திராட்சப்பழச் சாறு மிக அண்மையில் அறு வடையில் கிடைக்கப்பெற்றதாகும். பழைய திராட்சரசம் என்பது கடந்த வருட அறுவடையின் போது கிடைக்கப் பெற்றதாகும். இந்த இரண்டு வகையிலும், பழைய திராட்சரசம் விரும்பப்படுவதற்கான காரணம் அது இனிப்பாகவும் மதுபானம் நிறைந்த்தாகவும் காணப்ப டும் .( லூக். 5:39). புதிய திராட்சரசம் புளிக்கவைக்கப்படுவதால் அது வெறி யூட்டும் தகுதியைப் பெறுகின்றது.( எசாயா. 49:26, ஓசி. 4:11, அப். 2: 13, நியா. 9: 13) ஆனால் புதிய திராட்சரசம் பழைய திராட் சரசம்போல் அதிகமாக புளிக்கவைக்கப் பட்டதல்ல (யோவேல் 2:24).வெறியூட்டும் மதுபானமானது திராட்சரசத்திலிருந்து மட்டும் பெறப்படுவதில்லை ஆனால் அவை வேறு பார்லிபோன்ற வற்றி லிருந்தும் பழவகைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றது.( நீதி.20:1., ஏசா யா 24: 9) குடித்துவெறித்தல் என்பது ஆதியாகமத்தில் நோவா வைப் பற்றிக்கூறப்பட்டுள்ளது (ஆதி.9:2121. )மதுபானம் நிச்சய மாக வெறி கொள்ளவைக்கும்.(ஏசாயா. 28: 7-8.); மதுபானமும் திராட்சரசமும் குடிக்கவேண்டாம் என்றுலேவியராகம்ம் 10: 9 இல் கூறப்படுகின்றது………”
  http://thepentecostalmissionnagercoil.blogspot.com/2011/01/blog-post.html

 19. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  மதுக்குடி கேடு பற்றி டாக்டர் ஜி. ஜான்சன் கட்டுரை

  http://puthu.thinnai.com/?p=23362

  ///உடல் உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால் கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகிறது. ஆனால் மது அருந்து வோருக்கு கல்லீரல் கரணை எனும் உயிருக்கு உலை வைக்கும் நோய் உண்டாகிறது. இது நோய்க் கிருமிகளால் உண்டாவது அல்ல. முழுக்க முழுக்க மது அருந்துவதால் மட்டுமே ஏற்படுவது.

  மதுவை உடைத்து உடலிலிருந்து வெளியேற்றுவது கல்லீரல். தினமும் தொடர்ந்து மது பருகினால் கல்லீரலின் இந்த வேலை பளு அதிகமாகி அதன் செல்கள் ( cells – இதற்கு சரியான வார்த்தை தமிழில் இல்லை ) அழிவுக்கு உள்ளாகின்றன. அந்தப் பகுதியில் தழும்புகள் ( scars ) நிறைந்துவிடுகின்றன. இவற்றால் கல்லீரலின் வேலையைச் செய்ய இயலாது. இவ்வாறு தழும்புகளால் சுருங்கிப்போன கல்லீரலை கரணை நோய், ஈரல் இறுக்கி நோய் அல்லது ஆங்கிலத்தில் Cirrhosis Liver என்று அழைக்கிறோம். இதனால் கல்லீரல் செயலிழந்துபோய் ( Liver Failure ) மரணம் நேரிடுகிறது. மற்றொரு விதத்திலும் இந்த தழும்புகள் பாதிக்கின்றன. இவற்றால் கல்லீரலில் உள்ள இரத்தக்குழாய்கள் அழுத்தப்பட்டு இரத்தவொட்டம் தடைப்பட்டு, பின்னோக்கிச் சென்று கழுத்துப் பகுதி இரத்தக் குழாய்கள் புடைத்து வெடிக்க நேரிடும். அதனாலும் உயிர் போகலாம்!
  சிறிது நேர இன்பத்துக்காக இப்படியெல்லாம் உயிர் போகவேண்டுமா? ஆனால் மதுவைக் குடிப்பவர்கள் இப்படித்தான் குடித்துவிட்டு சாக நேரிடுகிறது.

  அமெரிக்காவில் வருடந்தோறும் சுமார் 30,000 பேர்கள் குடியால் கல்லீரல் கரணை நோயால் மரணமடைகின்றனர். வேறு நாடுகளில் இதன் புள்ளிவிவரம் தெரியவில்லை. இந்த வியாதி முற்றிவிட்டால் கல்லீரலை பழைய நிலைக்குக் கொண்டு வர இயலாது. ஒரு சிலருக்கு மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் பரவலாக இல்லை.

  கல்லீரல் கரணை நோய் மிகவும் கொடியது. நமது கல்லீரல் 3 பவுண்டு எடை கொண்டது. அது ஒரு காற்பந்து அளவுமிக்கது. உடல் உறுப்புகளில் மிகவும் பெரியது கல்லீரல்தான். அதன் பயன் மிகவும் முக்கியமானது. நாம் உண்ணும் உணவை ஜீரணம் செய்யத் தேவையான பித்தம் ( Bile ) கல்லீரலில் தான் உற்பத்தியாகிறது. அந்த பித்தம் பித்தப்பையில் ( Gall Bladder ) சேமித்து வைக்கப்பட்டு, சிறு குடலுக்குள் செலுத்தப் பட்டு கொழுப்பு நிறைத்த உணவு வகைகளை ஜீரணிக்கச் செய்கிறது.

  இரத்தத்தில் கலக்கும் இனிப்பு, கொழுப்பு, புரோதம் ஆகிய சத்துகளின் அளவை நிர்ணயம் செய்வதும் கல்லீரல்தான்.

  ஒயின் அருந்துவதில் உலகில் புகழ்பெற்ற நாடு பிரான்ஸ். அந்த நாட்டில் இருதய நோய் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் கல்லீரல் கரணை நோயை மிக அதிகமாகக் காணலாம். இருதயம் பாதுகாக்கப்பட்டவர்களைவிட, கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்தோரின் எண்ணிக்கை அதிகமாகும்.

  மதுவினால் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. அவற்றில் கல்லீரல் அழட்சி ( Alchoholic Hepatitis ) ஏற்பட்டால் கல்லீரல் வீங்கி, காய்ச்சல்,குமட்டல், பசியின்மை, மஞ்சள் காமாலை, குழப்பம் போன்றவை உண்டாகும். இது நீடித்தால் கரணை நோய் உண்டாகும்.

  கொஞ்சமாகக் குடிப்பவர்களுக்குக்கூட கல்லீரலில் கொழுப்பும் நீரும் தேக்கமுற்று கொழுப்பு கல்லீரல் ( Fatty Liver ) என்பதை உண்டாக்கும். இதனால் வலியும் மஞ்சள் காமாலையும் உண்டாகும்.
  கல்லீரல் கரணை நோயின் அறிகுறிகள்

  நோயின் தொடக்க காலத்தில் எந்த அறிகுறியும் தென்படாது. நோய் முற்றியபின் பின்வரும் அறிகுறிகள் தோன்றும்

  * குமட்டல், வாந்தி, பசியின்மை.

  * அசாதாரணமான எடை கூடுதல் அல்லது குறைதல்.

  * மஞ்சள் காமாலை.

  * மஞ்சள் நிற சிறுநீர்

  * இரத்தம் கலந்த அல்லது கருப்பு நிறத்தில் மலம்

  * இரத்த வாந்தி.

  * வயிறு வீக்கம் .

  * உடல் முழுதும் அரிப்பு.

  * கால்கள் வீக்கம்.

  * தூக்க குறைபாடு.

  * குழப்பமான மனநிலை.

  * களைப்பு.

  * ஆணுக்கு மார்பக வளர்ச்சி ( பெண் மார்பு போல ).

  * குறைவான பாலியல் உணர்வு.

  * நெஞ்சுப் பகுதியிலும் தோள்பட்டையிலும் சிலந்தி வலை போன்ற இரத்தக்குழாய்கள் தோன்றுதல். ////

  நன்றி டாக்டர் ஜி. ஜான்சன்.

  சி. ஜெயபாரதன்

 20. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  மது அடிமைத்தனம் : டாக்டர் ஜி. ஜான்சன்.

  http://puthu.thinnai.com/?p=23317

  /////மது அடிமைத்தனத்தின் அறிகுறிகள்

  * தற்காலிக ஞாபக மறதி, திடீர் நினைவிழத்தல் ( Blackouts )

  * குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் அடிக்கடி சண்டைச் சச்சரவு

  * இளைப்பாற, உற்சாகமடைய, தூங்க, பிரச்னையை எதிர்நோக்க, இயல்பாக இருக்க மதுவை நாடுதல்.

  * மதுவை நிறுத்தினால் தலைவலி, பரபரப்பு, பயம், தூக்கமின்மை, குமட்டல் போன்றவை உண்டாகுதல்.

  * நடுங்கும் கைகள், தொடந்த வயிற்றுப் போக்கு, தனிமையில் குடிப்பது, காலையிலேயே குடிப்பது. இரகசியமாகக் குடிப்பது.

  மது அடிமைத்தனத்தால் உண்டாகும் உடல் ரீதியான வியாதிகள்

  * இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. சக்திக்கு எரிபொருள் சர்க்கரை. அளவுக்கு அதிகமான சர்க்கரை கெடுதி என்றாலும், குறைவான சர்க்கரையும் கெடுதியே.

  * வயிற்றில் புண்ணை உண்டுபண்ணி அது புற்று நோயாகவும் மாறும் ஆபத்து உள்ளது.

  * கணைய அழற்சியை உண்டுபண்ணி , கடுமையான வலியை உண்டுபண்ணுவதோடு புற்று நோயாகவும் மாறலாம்.

  * உணவுக் குழாய், வயிறு, குடல் போன்றவற்றில் புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

  * கல்லீரல் சுருங்கி கரணை நோய் ( Cirrhosis Liver ) உண்டாகி கல்லீரல் செயல் இழந்து உயிர் பிரியும். மதுவுக்கு அடிமையானவர்களில் ஐந்து பேர்களில் ஒருவர் இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறார்.

  * சிறுநீரகம், மூளை, இருதயம், இரத்தக் குழாய்கள் போன்றவையும் பாதிப்புக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணலாம்.

  மது அடிமைத்தனத்துக்கு முக்கிய காரணங்கள்

  மரபணு, மனோவீயல் , உடல், சுற்றுச் சூழல், சமுதாயம் ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப் படுகின்றன. இவை ஆளுக்கு ஆள் மாறலாம். இவற்றில் மரபணுவின் பங்கு முக்கியமானது. பெற்றோர் ஒருவருக்கு மதுப் பழக்கம் இருந்தால் பிள்ளைக்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு சில பிள்ளைகள் வைராக்கியத்தின் மூலம் இதிலிருந்து தப்பும் வாய்ப்பும் உள்ளது.

  மது அடிமைத்தனத்துக்கு முக்கிய காரணங்கள்

  மரபணு, மனோவீயல் , உடல், சுற்றுச் சூழல், சமுதாயம் ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப் படுகின்றன. இவை ஆளுக்கு ஆள் மாறலாம். இவற்றில் மரபணுவின் பங்கு முக்கியமானது. பெற்றோர் ஒருவருக்கு மதுப் பழக்கம் இருந்தால் பிள்ளைக்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு சில பிள்ளைகள் வைராக்கியத்தின் மூலம் இதிலிருந்து தப்பும் வாய்ப்பும் உள்ளது.

  சிகிச்சை முறைகள்

  மது அருந்துவதை நிறுத்துவதே நிரந்தரமான குறிக்கோள். ஆனால் மதுவுக்கு அடிமையானவர் திரும்பத் திரும்ப அதை நாடும் நிலை ஏற்படுவதால் இந்த குறிக்கோள் நிறைவேறு வதில் சிரமம் உள்ளது. அடிமையானவர்கள் எப்போதும் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் – மதுவுக்கு மீண்டும் திரும்ப. இதனால் சிகிச்சை முறைகள் வெற்றி காண்பதில் சிரமம் உள்ளது.

  முன்பெல்லாம் மனதில் உறுதி இல்லாதவர்கள், குணத்தில் மாறுபட்டவர்கள் என்று இவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் இப்போது இது யாரை வேண்டுமானாலும் தாக்கவல்ல ஒரு வியாதியாகக் கருதப்படுகிறது.///

  நன்றி டாக்டர் ஜி. ஜான்சன்

  சி. ஜெயபாரதன்

 21. Avatar
  Dr.G.Johnson says:

  நன்றி நண்பர் சி. ஜெயபாரதன் அவர்களே. மருத்துவக் கட்டுரையை யாரும் படித்து பின்னூட்டம் எழுதியதில்லை. படிக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. அதனால் அதை எடுத்து மது தொடர்புடைய இந்த பகுதியில் HIGHLIGHT செய்தமைக்கு நன்றி…. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 22. Avatar
  Justin says:

  மதுபானம் அது விஷம்
  பாட்டலில் எழுதி உள்ள வாக்கியத்தை மாற்றி எழுங்களே மனசாட்சி இருந்தால்

  குடி குடியை கெடுக்கும் குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் ….
  குடி குடியை ஆரோக்கியம் அடைய செய்யும் ,குடி பழக்கம் உடல் நலத்தை பாதுகாக்கும் என்று எழுதுங்கள் ,,,,,

  குடித்தவன் தாறுமாறாக பேசுவான் ,காரணம் இல்லாமல் சண்டை,காயம், மரணம் என்று…..எத்தனை நடக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *