தாகூரின் கீதப் பாமாலை – 89 கண்ணீர்ப் பூமாலை .. !

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

image (2)

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

அடையாளம் கண்டு கொள்வர்

அவளை ஒருநாள் !

தன்னம் பிக்கை இல்லா அவளை

அடையாளம் காண்பார் ;

எதற்கும்

கவலைப் படாதவள் அவள் !

காலை இளம் பரிதியின்

கீழ்வான விளக்கு இந்த

கருமை முகத்திரை அகற்றும் !

மூழ்க்கி விடும்

மூடுபனி மூட்டத்தின்

வனப்பில்லா

முகத்திரை மறைக்காது அவளைக்

காட்டிக் கொடுத்து விடும் !

இன்று பூமாலையை அவள்

தொடுக்கட்டும் !

துன்ப அந்திப் பொழுது

தாரைக் கண்ணீரை

ஓர் ஆரமாய்க்

கோர்த்து விடட்டும் !

சில சமயம்

வீட்டு வாசல் அருகில்

விருந்தாளி ஒருவர் வருகை தந்து

பூமாலையை

நெற்றிக்கு மேல் தூக்குவார் !

இன்றிரவு

எவரும் காணாத ஒன்று

அவள் கிளிஞ்சல் விளக்கை

உணர்வு பூர்வமாய் ஏற்றி வைக்கும்

ஒருகணம் !

அப்போது அடையாளம் காண்பர்

அவளை !

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 137 1938 மே – ஜூனில் தாகூர் 77 வயதினராய் இருந்த போது “பிரவசி” [Prabasi] இதழுக்காக எழுதப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] November 12 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *