தாகூரின் கீதப் பாமாலை – 91 என் ஆத்ம சமர்ப்பணம்.. !

author
0 minutes, 16 seconds Read
This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

எனது வாழ்வுக் கிண்ணத்தில் நீ

இனிமையை ஊற்றி

வழிய வழிய நிரப்பி யுள்ளாய்  !

அதை நீ அறியாய் !

அதை நீ அறிய மாட்டாய் !

அதன் விலை மதிப்பு என்ன வென்று

நிர்ணயம் செய்ய மாட்டாய் !

தனக்குத் தெரியாமலே

வெண்ணிற மலர்ச் செடிபோல்

நறுமணத்தை இரவிலே

நிரப்பி வைப்பாய் !

கனவைப் போன்றது அந்தக் காட்சி !

உனக்குத் தெரியாது; ஆம் அது

உனக்குத் தெரியாது !

உனது பாடலை

எனது முக்கிய கருப் பொருளில் நீ

ஊற்றி யுள்ளதும்

உனக்குத் தெரியாது  !

 

விடைபெறும் தருணம் நெருங்கி

விட்டது உனக்கு !

விரைந்து செல் !

உனது பரிவு முகம் காட்டு

எனக்கு !

நிமிர்ந்து நில் !

நிமிர்ந்து முகம் காட்டு !

இனிய மரணத்தில் தான் வாழ்வு

பூர்த்தி அடையும் !

உன் திருப் பாதங்களில் அப்போது

நான் விட்டுச் செல்வது

என் ஆத்மாவை !

அது  உனக்குத் தெரியாது !

ஆம் தெரியாது !

அமைதி யான இரவில்

அவனது இரகசியத் துன்பத்துக்கு

முடிவு காணட்டும் !

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 43   1938  -1939 இல்  தாகூர்  77 வயதினராய்  இருந்த போது  எழுதப் பட்டது.  இந்தக் கீதம் ஷியாமா [Shyama] பாட்டு நாடகத்தில் இரண்டாம் காட்சியில் பாடப் படுகிறது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  November  27 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *