ஷைன்சன்
அன்னா ஹஸாரே எப்படி சில நாட்களுக்குள்ளாக இந்தியாவின் மிக முக்கியமான நபராக மாறி, அதே வேகத்திலேயே மறக்கப்பட்டும் போனார்? பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வரும் இந்திய நாட்டில் நிர்பயாவின் மீதான வன்முறை மட்டும் எப்படி நாட்டின் மனசாட்சியை உலுக்கும் ஒரு சம்பவமாய் மாறிப்போனது? நாடெங்கும் பல கொலைக்குற்றங்கள் நடக்கின்ற போது நொய்டா இரட்டைக் கொலை மட்டும் எப்படி நாடு முழுக்க பிரபலமானது? பத்து வருடங்களுக்கு முன்பு நாட்டின் மனசாட்சியை உலுக்கிய குஜராத் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த மோடி இப்போது முன்னேற்றத்தின் முகமாகத் தோன்றுவது எப்படி?
இந்தக் கேள்விகள் பலவாயிருந்தாலும் இவற்றின் பதில் ஒன்று தான். ஊடகங்களே இவற்றுக்குக் காரணம். ஊடகங்களே கதாநாயகர்களையும், வில்லன்களையும் உருவாக்குகின்றன. அவர்களைச் சார்ந்த பிம்பங்களையும் உருவாக்குகின்றன. தங்கள் தேவைகளுக்கேற்ப அவர்களை அரங்கேற்றவும், காணாமற்போகவும் செய்கின்றன.
ஊடகங்களின் இத்தகைய வலிமையை உணர்த்தும் திரைப்படம் இது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன் இந்திய அமெரிக்கத் தந்தையால் கட்டாயப்படுத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு இளைஞனும் அவன் தோழனும் எப்படி ஊடகங்களின் புதுக் கதாநாயகர்களாகிறார்கள் என்பதை இத்திரைப்படம் சித்தரிக்கிறது.
அவ்விளைஞன் அமெரிக்காவில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அவனது தந்தை அவனை கட்டாயப்படுத்தி இந்தியாவில் வாழுமாறு அனுப்பி வைக்கிறார். இந்தியாவில் தன் மகன் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே அனுப்பி வைக்கிறார். ஒரு இந்தியக் கல்லூரியிலும் அவனைச் சேர்த்து விடுகிறார்.
தொடர்ந்து அவர்களது செலவு குறைவான வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் ஊடகங்கள் அவர்களை இந்திய இளைஞர்களின் முன்மாதிரியாக முன் நிறுத்துகின்றன. அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களை நகைச்சுவையுடன் விவரித்துச் செல்கிறது இத்திரைப்படம்.
இளைஞர் முன்மாதிரிகள் என்று சித்தரிக்கப்படுபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எத்தனை முரணுடையதாயிருக்கிறது என்பதை நாம் இத்திரைப்படத்தில் காண்கிறோம். புதிதாக அரசியலுக்கு வந்த ஒரு அமைச்சரின் வாரிசும் இளைஞர் முன்மாதிரியாக முன்நிறுத்தப்படுகிறார். அவரது முரண்பாடுகள் கேலி செய்யப்படுகிறன்றன. இந்திய அமெரிக்க இளைஞர்களின் இந்தியாவை விட்டுத் தப்பித்தல் என்னும் ஆசையும், இந்திய ஊடகங்கள் அவர்கள் மீது இருத்தும் கதாநாயக பிம்பமும் ஒரு முரண்நகை விளைவை ஏற்படுத்துகின்றன.
படத்தினிறுதியில் நமது கதாநாயகர்களும், நம்மை உலுக்கும் நிகழ்ச்சிகளும் இப்படித்தான் ஏற்படுத்தப்படுகிறார்களோ என்று நமக்கே மனச்சோர்வு ஏற்படுகிறது.
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 28
- நத்தை ஓட்டுத் தண்ணீர்
- ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
- நிஜம் நிழலான போது…
- ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்
- ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்
- இருண்ட இதயம்
- மருமகளின் மர்மம் – 6
- குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
- பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு
- ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்
- வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )
- கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்
- கவுட் Gout மூட்டு நோய்
- உனக்காக மலரும் தாமரை
- 4 கேங்ஸ்டர்ஸ்
- ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
- திண்ணையின் இலக்கியத்தடம் -12
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
- தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று
- சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]
- சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
- பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.
- புகழ் பெற்ற ஏழைகள் 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
- மனம் போனபடி .. மரம் போனபடி