தாகூரின் கீதப் பாமாலை – 92
என் கனவை நிறைவேற்று
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
தப்பிக் கொள்கிறான் எனக்குத்
திகைப்பூட்டி !
தப்பிச் செல்கிறான் இன்னும்
எனக்குப் பிடிபடாது !
அவனுக் கென்னை அளித்திட நான்
முன்வந் துள்ளேன் !
எங்கே ஒளிந்து கொண்டான் அவன் ?
ஒவ்வோர் நாளும்
நூறு சாக்குப் போக்குகள்
கூறிப் புறத்தே
மறைந்து கொள்கிறான் !
என் கனவு நிறைவேறியது
வந்து விடு !
என் இளமை வாலிபத்தை நீ
வளமை ஆக்கி விடு !
இந்தப் பூந்தோட்டத் துக்கு
இனிய தென்றலை
அனுப்பி வை !
துயர்ப் படல மூட்டத்தை
நிவர்த்தி செய் !
நல்வாழ்வுக்கு எனக்கோர்
நற்செய்தி அனுப்பு
புதிய இசைப் பாடலாய் !
வாழ்வு மீது
நம்பிக்கைத் தாகம் மிகுந்து
கொந்தளிக்குது !
அதற்கோர் வாய்மொழி தேடு
இருட்டு வெளியில் !
விண்வெளியில் செல்லட்டும்
திசை மாறும் காற்றாக,
தரையில் வீழ்ந்த
போகுள்* பூக்களின் சிதறும்
நறுமணம் போல் !
++++++++++++++++++++++++++++++
போகுள்* பூக்கள் : Bokul tree’s creamy white flowers
++++++++++++++++++++++++++++++
பாட்டு : 218 1939 ஜனவரியில் தாகூர் 77 வயதினராய் இருந்த போது எழுதப் பட்டது. இந்தக் கீதம் ஷியாமா [Shyama] பாட்டு நாடகத்தில் பாடப் படுகிறது. அதில் ஷியாமா முன்பின் தெரியாத ஒருவன் மீது காதல் வயப்படுகிறாள்.
++++++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] December 3 , 2013
http://jayabarathan.wordpress.
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 28
- நத்தை ஓட்டுத் தண்ணீர்
- ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
- நிஜம் நிழலான போது…
- ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்
- ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்
- இருண்ட இதயம்
- மருமகளின் மர்மம் – 6
- குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
- பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு
- ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்
- வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )
- கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்
- கவுட் Gout மூட்டு நோய்
- உனக்காக மலரும் தாமரை
- 4 கேங்ஸ்டர்ஸ்
- ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
- திண்ணையின் இலக்கியத்தடம் -12
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
- தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று
- சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]
- சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
- பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.
- புகழ் பெற்ற ஏழைகள் 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
- மனம் போனபடி .. மரம் போனபடி