திண்ணையின் இலக்கியத் தடம்-13

This entry is part 27 of 32 in the series 15 டிசம்பர் 2013

சத்யானந்தன்

செப்டம்பர் 2,2001 இதழ்:

பெரியார்?- அ.மார்க்ஸ் நூல் குறித்த எனது கருத்து- மா.ச.மதிவாணன்- பெரியார் எதிர்த் தேசியவாதி அல்லர். அதாவது தேசியத்துக்கு எதிரானவர் அல்லர். அவர் தமிழ்த் தேசியத்தை முன் வைத்தவர்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109022&edition_id=20010902&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1.மூப்பனார், 2.டர்பனில் மாநாடு,3. அகதிகள், 4.தெஹல்கா, 5.திருத்தங்கள்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109021&edition_id=20010902&format=html )

பொருளாதரத்தின் அலை வடிவம்- ஒரு கடிதம்: டாக்டர் காஞ்சனா தாமோதரன்- அமெரிக்கா சமீபத்திய சில ஆண்டுகளில் காட்டிய வளர்ச்சி அபரிமிதமானது ஆனால் அடிப்படையான ஸ்திரத்தன்மை அற்று கடன்களால் எழுப்பப் பட்ட காகித வளர்ச்சி. அதன் திருத்தம் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெருமளவு வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் வாங்கும் சக்தி குறைதல் ஆகிய ஆபத்துகள் நெருங்கி விட்டன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109024&edition_id=20010902&format=html )

திருவனந்தபுரம் இலக்கியக் கூட்டம்- திலக பாமா- திலகபாமாவின் கவிதை நூலை ஒட்டி நடத்தப் பட்ட இலக்கிய அமர்வு பற்றிய கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60109021&edition_id=20010902&format=html )

சினிசங்கம்- தமிழ் விவரணப் படம் மற்றும் குறும்பட விழா- அக்டோபர் 2001ல் லண்டனில் நடக்க இருக்கும் குறும்பட விழா பற்றிய அறிவிப்பு
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60109022&edition_id=20010902&format=html )

சத்யஜித் ராய் இன்று- அம்ஷன் குமார்- ராய் அவர்களின் 80வது பிறந்த நாளை ஒட்டி பிரிட்டிஷ் கவுன்சில் ஒழுங்கு செய்திருந்த காணொளி காட்சி பற்றிய கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60109023&edition_id=20010902&format=html )

கதைகள்- சேவல் கூவிய நாட்கள்- வ.ஐ.ச.ஜெயபாலன், மௌனமாய் ஒரு மரணம்- சேவியர், நடுத்தர வர்க்கம்- பவளமணி பிரகாசம்
கவிதைகள்- மூன்று பேர்-2-தொடர் நிலைச் செய்யுள்- விக்கிரமாதித்தன், வீண்- பாரதிராமன், சம்மதம்-அ.மணவழகன்,மூன்று கனேடியக் கவிதைகள்- வ.ந.கிரிதரன், மூன்று விகட கவிதைகள்- தி.கோபால கிருஷ்ணன், டி.எஸ்.எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்-4- ருத்ரா, சக மனிதனுக்கு- கோகுல கிருஷ்ணன், நான்கு கவிதைகள்- கரிகாலன், அன்னையும் தந்தையும்- பசுபதி, கோகுல கண்ணன் கவிதைகள்

சமையற் குறிப்பு- நொக்கல், புட்டு

செப்டம்பர் 3 இதழ்- கவிதைகள்: சுவர்- கோகுல கிருஷ்ணன்

செப்டம்பர் 10, 2001 இதழ்:

மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்- ஞானியுடன் யமுனாராஜேந்திரன் உரையாடல்- கோவை ஞானி அவர்களுடன் ய.ரா.வின் மிக நீண்ட விரிவான ஆழமான உரையாடல். முழுவதுமாகப் படிக்க வேண்டியது தலித்தியம் என்பது இலக்கிய தளத்தில் அரசியலுக்காக முன் வைக்கப் படுகிறது என்று கருதும் ஞானி பல புற நானூற்று மற்றும் திருக்குரள் பாக்களை மேற்கோள் காட்டி தமிழ்ப் பண்பாட்டில் அடிப்படையில் மேலோர் கீழோர் என்னும் போக்கு இல்லை என்று வாதிடுகிறார். திருவள்ளுவர் மற்றும் குறவர்கள் கணிதம் மற்றும் மருத்துவ நிபுணர்களாக மதிக்கப் பட்டனர். பௌத்தம், சமணம், சாக்தம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதே இந்தியப் பாரம்பரியம். தமிழ் நாட்டில் பெரியாரின் பின்னோடிகள் அவரது பெயரைச் சொல்லி புரோகிதம் செய்வதில் போட்டி போடுகின்றனர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60109101&edition_id=20010910&format=html )

மௌனியின் படைப்புலகம்- ஒரு கலந்துரையாடல்- அரவிந்தன் – காலச்சுவடு ஏற்பாடு செய்து பாண்டிச்சேரியில் நடத்திய மௌனியின் படைப்புகள் பற்றிய கலந்துரையாடல். இதில் அவரது சிகிச்சை என்னும் கதை பெண்ணடிமையை நியாயப் படுத்துவதாக நிகழ்ந்த விவாதங்கள் உட்பட பல எழுத்தாளர்களின் கருத்துக்கள் சுருக்கமாகக் கட்டுரையில் தரப் பட்டிருக்கின்றன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60109102&edition_id=20010910&format=html )

சாதி என்னும் சாபக்கேடு- இஃபத் மாலிக்- இந்தியாவில் உள்ளது போல் பாகிஸ்தானிலும் சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் உண்டு. தாழ்ந்த சாதியினர் ‘கம்மி’ என்று அழைக்கப் படுகிறார்கள். ஜாதி உட்பிரிவுகளுக்குள்ளே தான் திருமணம் நடக்கிறது. கிருத்துவர்கள் தாழ்ந்த சாதியினராகக் கருதப் பட்டு இழிந்த வேலைகளே அவர்களுக்குத் தரப் படுகின்றன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109101&edition_id=20010910&format=html )

அமெரிக்கப் பொருளாதாரத்துக்குத் தங்க நங்கூரம் வேண்டும்- ஜாக் கெம்ப்- 15.8.1971 முதல் அமெரிக்கா டாலருக்கு பதிலாகத் தங்கத்தைக் கேட்கும் கொள்கையைக் கைவிட்டது முதலான பொருளாதாரப் பின் விளைவுகளை அலசி சம காலத்தில் அமெரிக்க ‘பெட்’ வங்கி செய்ய் வேண்டியது என்ன என்று பரிந்துரைக்கும் பொருளாதார ஆய்வுக் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109102&edition_id=20010910&format=html )

பன்றியை வெறுப்பவர்களும் பன்றியை விரும்புபவர்களும்- மார்வின் ஹாரிஸ் – யூதர்களும், இஸ்லாமியரும் பன்றியை வெறுத்தாலும் ஐரோப்பிய சீனப் பாரம்பரிய உணவுகளில் பன்றிக்கறி சுவைக்காகவும் கொழுப்புக்காகவும் தனி இடம் பெற்றது. ஐரோப்பியப் பழங்குடியினரின் வாழ்விலும் பண்பாட்டிலும் பன்றிக்கறி முக்கிய இடம் வகிக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109103&edition_id=20010910&format=html )

கதைகள்- சேவல் கூவிய நாட்கள்- 2-வ.ஐ.ச.ஜெயபாலன், சித்த சுவாதீனம் -நீல.பத்மநாபன்

கவிதைகள்: காசுப் பாட்டு- பாரதி ராமன், பசுபதியின் கவிதை படித்து-அலமேலு மணி- கானடா, பட்டினிப் படுக்கைகள்- சேவியர், சூரியனுக்கும் கீழே- திலக பாமா, நகரத்துப் புறாக்களுக்கு மத்தியிலே நான்- வ.ந.கிரிதரன், மூன்று குறும்பாக்கள்- பசுபதி, குழப்பங்கள்-ஸ்ரீனி, பாரம்-சேவியர், ஒரு தண்ணீரின் கண்ணீர் -ருத்ரா, கற்பக விருட்சம் – வந்தியத் தேவன், நீ..நான்..நாம்-கே.ஆர்.விஜய், கரிசல் காட்டு வார்த்தைகள்-எட்வின் பிரிட்டோ, ஆதலினால் காதல் செய்வீர், நல்லவர்கள்- கோபால கிருஷ்ணன், முரண்கள்- சு.கு. கார்த்திகேயன்

சமையற் குறிப்பு- கோழிக்கறி சாஷ்லிக், தம் ஆலு

செப்டம்பர் 11 இதழ்: கவிதைகள்:எனது தமிழும் இனி- வ.ஐ.ச.ஜெயபாலன், பக்தி-வேங்கட ரமணன்

செப்டம்பர் 17,2001 இதழ்:

பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு- வ.ந.கிரிதரன்- பாரதி “கருத்து முதல் வாதியா?” அல்லது “பொருள் முதல்வாதியா?” அல்லது இரண்டுமா? அவரது முரண்களில் அவரது கவித்துவமும் தத்துவமும் பொதிந்துள்ளன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60109171&edition_id=20010917&format=html )

புதுமைப்பித்தன் படைப்புகள் செம்பதிப்பு – சில கேள்விகள்-கோபால் ராஜாராம்- இரா.வெங்கடாசலபதி & காலச்சுவடு மற்றும் வேத சகாயகுமாருக்கு இடையே புதுமைப்பித்தனின் படைப்புகளை ஆய்வு செய்தது தொகுத்தது குறித்துப் பல சர்ச்சைகள் தொடரும் போது ஒரு கேள்விக்களைத்தை உருவாக்கி கோபால் ராஜாராம் சம்பந்தப்பட்ட அனைவரின் நிலைகளை அனைவருக்கும் தெளிவு படுத்தும் கட்டாயத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொருவருக்குமே சில கேள்விகளை முன் வைக்கிறார். வேதசகாய குமார் ஓரங்கட்டப் பட்டாரா என்னும் நோக்கில் கேள்விகள் சில உண்டு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60109172&edition_id=20010917&format=html )

உலக வர்த்தக மையம் மீது தாக்குதல்- பாரிபூபாலன்- தாக்குதலின் போது கட்டுரையாசிரியர் நேரடியாகக் கண்ட மனம் வெதும்பும் காட்சிகள் பற்றிய் விவரங்கள்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109171&edition_id=20010917&format=html)

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- உலக வர்த்தக மையம் தாக்கப் பட்டதின் பல்வேறு பரிமாணங்கள்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109172&edition_id=20010917&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- உலகத்தின் வரலாறு

கதைகள்- சேவல் கூவிய நாட்கள்- 3-வ.ஐ.ச.ஜெயபாலன், சலனம்-ஸ்ரீனி, இன்னொரு மனசு- விழி.பா.இதயவேந்தன்

கவிதைகள்: வாடகை வாழ்க்கை- சேவியர், விடிவெள்ளி-ஸ்ரீனி, காதல் புனிதமென்று-அ.லெ.ராஜராஜன், சித்ர(தே)வதை-தி.கோபாலகிருஷ்ணன், எங்கிருந்தாலும் வாழ்க-வந்தியத்தேவன், இயற்கையைச் சுகித்தல்- வ.ந.கிரிதரன், டி.எஸ்.எலியட்டும் கள்ளிக் காட்டுக் கனவுகளும்-ருத்ரா, நட்பை நாகரீகமாக்குவோம்- நா.பாஸ்கர், துணை-திருமாவளவன், கருப்புச் செவ்வாய்- பசுபதி, மலேசியப் பாவாணர் ஐ.உலகநாதனின் கவிதைகள், மூன்று பேர்-3-தொடர் நிலைச் செய்யுள்- விக்கிரமாதித்தன்.

சமையற் குறிப்பு- பெப்பர் சிக்கன் மசாலாக் குழம்பு,முட்டை ரவாப் பணியாரம்

செப்டம்பர் 24 இதழ்:

விக்கிரமாதித்தனின் கவிமூலம்- கோபால் ராஜாராம்- விக்கிரமாதித்தனின் கவி மூலம் நூல் விமர்சனத்தில் எழுத்தையே தொழிலாகக் கொண்டு போராடும் அவரது ஆளுமையைப் பற்றிய குறிப்பு உண்டு. விக்கிரமாதித்தன் மரபு இலக்கியத்தை வாசித்துத் தம்மை படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் கருத்துள்ளவர். இந்திரா பார்த்தசாரதியும் இதை வலியுறுத்தியவர். ஏன் தமது நட்பு வட்டம் எழுத்தாளர்களோடு முடிந்து போனது போல எழுதியிருக்கிறார் என்னும் கேள்வியுடன் கட்டுரையை முடித்திருக்கிறார் கோபால் ராஜாராம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60109241&edition_id=20010924&format=html )

புதுமைப் பித்தன்- கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும்- காலச் சுவடு கண்ணன்- வேதசகாய குமார் – காலச்சுவடு இருவரிடையே நடந்த நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விவாதங்கள் விரிவாக உள்ளன. காலச்சுவடு தரப்பில் எவ்வளவு முயன்றும் காலச்சுவடின் குழுவோடு இணைந்து பணியாற்ற, உதவ குமார் மறுத்து விட்டார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60109243&edition_id=20010924&format=html )

புதுமைப் பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள்- இரா.வெங்கடாசலபதி- வேத சகாய குமார் தம் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயன்றதை வருத்தத்துடன் குறிப்பிடும் சலபதி தம் தரப்பை மிகவும் இதமாகப் பண்போடு தெரிவித்திருக்கிறார். தமிழ்ச் சூழல் பற்றிப் பிடிபட இந்த சர்ச்சை நல்ல உதாரணம் என்று நாம் புரிகிறோம்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60109244&edition_id=20010924&format=html )

உறவும் சிதைவும்- பாரி பூபாலன்- உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் இடிந்து விழுந்த போது தாய் தந்தையர் இருவரையும் பறி கொடுத்த குழந்தைகளின் சோகம் பற்றிய கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109241&edition_id=20010924&format=html )

ஏன் போர்கள் நடக்கின்றன – மார்வின் ஹாரிஸ் (முதல் பகுதி)- மாரிங் பழங்குடியினரை உதாரணமாக வைத்துப் பார்க்கும் போது, உணவுத் தேவைக்கும், உணவுப் பற்றாக்குறையைப் போக்கும் இயல்பான தீர்வாக போர்களில் மக்கட் தொகை குறைவதும் தென்படுகின்றன. ஆனால் இன்று ஒரு போர் வந்தால் அணு ஆயுதங்களால் மனித இனமே அழியவே வாய்ப்புண்டு.
(www.thinnai.com/index.php?module=displaysection§ion_id=22&edition_id=20010924&format=html )

உலக வர்த்தக மையத் தாக்குதல் – கருத்துக் குருடர்களின் ராஜ பார்வையும் அறிவு ஜீவி – நேர்மையின்மையும்- மஞ்சுளா நவநீதன்-எஸ்.வி.ராஜதுரை, சீதாராம் யெச்சூரி ஆகியோர் இழிவு படுத்தப் பட்ட மக்களின் எதிர்வினை இது என்பதைக் கடுமையாகச் சாடுகிறார். அப்படிப் பார்த்தால் பாபர் மசூதி இடிப்பு, மும்பை வகுப்புக் கலவரம் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது போல ஆகிவிடும். பயங்கரவாதத்தின் காரணத்தை ஆராயலாம். ஆனால் பயங்கரவாதத்தை நியாயப் படுத்துவது விபரீதமானது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109243&edition_id=20010924&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- அண்ட வெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்- வ.ந. கிரிதரன்

கதைகள்- கண்ணாடி- திலீப் குமார், கரிய முகம்- பிரபஞ்சன், சவல் கூவிய நாட்கள்- 4-வ.ஐ.ச.ஜெயபாலன்

கவிதைகள்- பரிமாணங்களை மீறுவதெப்போ அல்லது இருப்பு பற்றிய விசாரம்- வ.ந. கிரிதரன், ஒற்றைப் பறவை -ஸ்ரீனி, அலங்காரங்கள்- பெரியசாமி, பிதாவே இவர்களை- ருத்ரா, பலகாரம் பல ஆகாரம்- பசுபதி,போர்க்காலக் கனவு- திருமாளவளவன் , உயிர்த்தெழும் மனிதம்-திலகபாமா, முன்னுக்குப் பின்- தி.கோபாலகிருஷ்ணன், பாத்திரம், நான் தான் WTC பேசுகிறேன்- சேவியர், கற்றுக் கொண்டேன் – நா.பாஸ்கர்

சமையற் குறிப்பு: பாம்பே டோஸ்ட், ஷேப்ட் சாலன்

அக்டோபர் 1 இதழ்:

இந்தவாரம் இப்படி-மஞ்சுளா நவநீதன்- சிமி இஸ்லாமிய இயக்கம், ஆஃகான் பாகிஸ்தான் உறவு, ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் தேர்தல், தடா

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110012&edition_id=20011001&format=html )
அமெரிக்கப் பொருளாதாரத்தில் கிரீன்ஸ்பான் அவர்களின் பங்கு- தாமஸ் கிஷோர்- பண அழுத்தத்தை எதிர் கொள்ள ஃபெட் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள் சரியான திசையில் தான் இருக்கின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110012&edition_id=20011001&format=html )

ஏன் போர்கள் நடக்கின்றன? – மார்வின் ஹாரிஸ்- அத்தியாயத்தின் இறுதிப் பகுதி- ஃபோர் பழங்குடியனரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். எல்லாப் பழங்குடியினரிடையேயும் பெண் சிசுக் கொலை சர்வ சாதாரணமாக இருந்தது. ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் போர் ஒரு முக்கியக் கருவியாக இருந்தது. இதுவே போரின் காரணம். மக்கட் தொகைக்கும் பன்றிகளுக்கும் ஏற்ற நிலங்கள் போரில் வென்ற குழுவால் கைப்பற்றப் பட்டன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110013&edition_id=20011001&format=html )
வைரமுத்துவின் “கள்ளிக் காட்டு இதிகாசம் ஒரு பார்வை”- ஜெயானந்தன்- ஜெயமோகனின் கற்பனை உலகமான “விஷ்ணுபுரம் ” நாவலை விடவும் இந்த நாவல் மண்வாசனையுடன் பரிமளிக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60110011&edition_id=20011001&format=html )
அன்னை இட்ட தீ- புதுமைப்பித்தனின் நூலுக்கான முன்னுரை- இரா.வெங்கடாசலபதி- புதுமைப்பித்தனின் படைப்புகளைத் தொகுத்த விவரங்களை நினைவு கூருகிறார் சலபதி. வேதசகாய குமாரின் பங்களப்பையும் பாராட்டுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60110012&edition_id=20011001&format=html )
அறிவியலும் தொழில் நுட்பமும்- கணினி வலையம் – இரா.விஜயராகவன்

கதைகள்: சேவல் கூவிய நாட்கள்: 5- வ.ஐ.ச.ஜெயபாலன், கொட்டாவி-லாவண்யா, சொந்தக்காரன்- வ.ந.கிரிதரன்

கவிதைகள்: வரையாத ஓவியம் அனந்த், முத்தம்- எட்வின் பிரிட்டோ, குயிலே குயிலே- ருத்ரா, காளியாய்க் கீழிறங்கி கன்னி போல் நெளிந்து ஆடி- கவியோகி வேதம், குழப்பக் கோட்பாடு- பசுபதி, பேரரசிக்கொரு வேண்டுகோள்- வ.ந.கிரிதரன், பாரதி மன்னிக்கவும்- கு.முனியசாமி, கிறுக்கல்கள்- ஸ்ரீனி.

சமையற் குறிப்பு – ஆப்பம்

அக்டோபர் 7, 2001 இதழ்:

மனிதனின் ஆளுமையும் சிக்மென்ட் பிராய்டும்: வ.ந. கிரிதரன். பிராய்ட் மனிதனின் மன இயல்புகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார் – உணர்வு உந்தும் இயல்பு (id), 2.நான் என்னும் முனைப்பு (EGO), 3.அதியுயர் மனக்கூறு(SUPER EGO).
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110071&edition_id=20011007&format=html )
தமிழ்த் தேசியம் முதலான கேள்விகளை எழுப்பிய நண்பர் திராவிடனுக்கு பதில்- மஞ்சுளா நவநீதன்- சாதி வேறுபாடு களைதல் சமூக நீதி திராவிட கட்சிகளால் ஏன் அவர்கள் கட்சிகளில் பெரும்பான்மையாயுள்ள மேல் சாதி மற்றும் பிற்படுத்தப் பட்டோரைக் கொண்டு ஏன் சாதிக்க முடியவில்லை?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110072&edition_id=20011007&format=html )
இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- ஆஃகானிஸ்தானில் தாக்குதல், பாகிஸ்தானில் சர்வாதிகார ஆட்சி, உள்ளாட்சித் தேர்தல், ஆஃகானிஸ்தானில் யார் ஆட்சி அமையும், ஓசாமாவைப் பிடிக்க பாகிஸ்தான் பணம் பெற்றதா? போலிஸ் சங்கம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110073&edition_id=20011007&format=html )
முதல் உலகத் தமிழ்த் திரைப்பட விழா- 2001 அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை சினிசங்கம் லண்டனில் திரையிடப் படும் படங்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60110071&edition_id=20011007&format=html )
கவிதைகள்: எதிர்பார்ப்புகள்- சேவியர், செந்தீ பிழம்புக்கு இறையாகும் முன்- மா.சிவஞானம், ராகு காலம்- வந்தியத் தேவன், கயிற்றரவு- ருத்ரா, வயிற்றுப் பா(ட்)டு- அனந்த், அறிவெனும் சக்தி- ஸ்ரீனி, நகரத்து மரங்களும் பொந்துப் பறவைகளும்- வ.ந.கிரிதரன், பின் லேடன்- பசுபதி, ச் இந்தியா, கருகும் நினைவுகள்- தி.கோபால கிருஷ்ணன்.

கதைகள்;மேலும் சில மனிதர்கள்- சேவியர், சிரிக்கிறானேடா-நா.பாஸ்கர், சேவல் கூவிய நாட்கள்-6- வ.ஐ.ச.ஜெயபாலன்

சமையற் குறிப்பு- முட்டை சமைக்க சில வழிகள்

அக்டோபர் 14 இதழ்;

மஞ்சுளா நவநீதனின் “தமிழ்த் தேசியம் முதலான..” என்ற பதிலுக்கு விளக்கம்.. திராவிடன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110151&edition_id=20011015&format=html )

இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி- மொழிக்கான மரபணு அடிப்படை- நிக்கோலாஸ் வேட்- மொழியைக் கற்பதில், கையாள்வதில் ஜீன்களால் வரும் சாதக பாதகங்கள் மிகவும் சிக்கலானவை. ஆராய்ச்சி தொடர்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110152&edition_id=20011015&format=html )

மேற்கு எவ்வாறு இந்திய அறிவியலைக் கேவலப் படுத்துகிறது? -ஏபிஜே அப்துல் கலாம், ஒய் எஸ் ராஜன்- ஒவ்வோரு முறை இந்தியா பெரிய சாதனைகளை நிகழ்த்தும் போதும் அதை இந்தியாவின் தொழில் நுட்ப அறிவுக்கு மீறியதாக மேற்கத்திய நாடுகள் சித்தரிக்கும். உதாரணத்துக்கு 1989ல் அக்னி ஏவுகணையைச் செலுத்திய போது அமெரிக்காவும் ஜெர்மனியும் தத்தம் நாட்டிலிருந்தே இந்தத் தொழில் நுட்பத்தை இந்தியா பெற்றது என்று அறிக்கை வெளியிட்டார்கள்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110153&edition_id=20011015&format=html )

அறிவுலகின் பெரும் சறுக்கல்- வி.எஸ்.நைபால் பற்றி- எட்வர்டு சையித்- “நம்பிக்கைக்கு அப்பால்” என்னும் நைபாலின் நூலில் பல ஆண்டுகளாக அவர் வெளிப்படையாகவே காட்டி வரும் இஸ்லாமிய வெறுப்பே வெளிப்படுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110155&edition_id=20011015&format=html )

சமகால உளவியல் ஆய்வுகள் குறித்து- ராம் மகாலிங்கத்துடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்- டாக்டர் ராம் உளவியலில் புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர். அவருடன் ய.ரா. வின் நீண்ட உரையாடல். சாதி அல்லது இனம் என்பது மரபணு சார்ந்ததா இல்லையா என்னும் கேள்விக்கான விடையில் அது மனப்பாங்காக அரசியல் ரீதியாக சமூக ரீதியாக உருவாக்கப் பட்ட மனப்பாங்காக மட்டுமே நிற்பதாக ராம் கருதுகிறார். அதாவது பிறப்பால் மரபணு ரீதியாக இந்தக் குணங்கள் அல்லது திறன்கள் என்று நிறுவுவது ஆராய்ச்சிகளில் ஐயமின்றி நிரூபிக்கப் படாத நிலையே. எனவே அரசியல் ரீதியான ஒரு தாக்கத்தில் வளரும் மேல் சாதியினர் அல்லது தலித் இந்த அரசியலைத் தாண்டி வர சமூக மாற்றமே தேவை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110154&edition_id=20011015&format=html)

நமது அகில உலகக் கலாசார சமுதாயம்- வி.எஸ். நைபால்- ஈரான் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் உள்ள சூழலை நஹீத் ரோசலின் எழுதிய “வெளிநாட்டுக்காரி” மற்றும் ஜோஸப் கான்டிராடின் கதைகளை முன் வைத்து அலசுகிறார் நைபால்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110156&edition_id=20011015&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- முதல்வர் பன்னீர் செல்வத்தின் எளிமையும் அடக்கமும், 2.காலிதா ஜியா பிரதமராகிறார் 3. வெவ்வேறு நாடுகளில் நடக்கும் மதக் கலவரங்களும் இனப் படுகொலைகளும் மூன்றாம் உலகப் போர் தானோ இவை என்று ஐயம் கொள்ள வைக்கின்றன. 4.திமுக கூட்டணியில் பாமக. 5.நைபாலுக்கு நோபல் பரிசு
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110157&edition_id=20011015&format=html )

ஆப்கானிஸ்தான் அமெரிக்கப் போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=70110151&edition_id=20011015&format=html )

தேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்- சீன எழுத்தாளர் ஆஞ்சி மீன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து சுதந்திர சிந்தனை என்றால் என்ன என்ற புரிதலை எட்டிய விவரக் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60110151&edition_id=20011015&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும் -பௌதிக வானியல்- தோற்றமும் அதன் வடிவமும் -வ.ந. கிரிதரன்.
கவிதைகள்- பட்டாம்பூச்சி வாழ்க்கை, பழைய இலைகள்- சேவியர், பாதச் சுவடுகள்- வெ.அனந்த நாராயணன், அகமுடையவனே-ஜனனிபாலா, உயிரோடு உரசாதே -வந்தியத் தேவன், அவர்களும் நானும்-இரா.ரமேஷ் குமார், பூப்பு-தி.கோபால கிருஷ்ணன், மனசாட்சி-ருத்ரா, பூஜ்ய நிலம்-பசுபதி

கதைகள்-இன்னொரு வகை ரத்தம் -சேவியர், சமூகப் பணி-கோபி கிருஷ்ணன்

சமையற்குறிப்பு- கோழிக்கறி பொடிமாஸ், இட்லி மிளகாய்ப் பொடி

அக்டோபர் 22 2001 இதழ்:

உலக வர்த்தக மையம் இல்லாத உலகம் – டெக்ஸன்- இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டதன் பின்னணி குறித்து மின்னஞ்சல் வழியே நிகழ்ந்த விவாதம்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110221&edition_id=20011022&format=html )

பழிக்குப்பழி என்பது கடமையா?- சதுர்வேதி பத்ரிநாத்- வன்முறையையும் பழி வாங்குதலையும் மகாபாரதம் கூடாது என்று அறிவுறுத்துகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110223&edition_id=20011022&format=html )
இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை, உள்ளாட்சியில் தலித்துகளுக்கு இடமில்லையா?, சுதந்திரப் போராட்டம் எது? பயங்கரவாதம் எது?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110224&edition_id=20011022&format=html )
கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் பகவத் கீதை- வ.ந.கிரிதரன்- 14.10.2001 அன்று டோரண்டோவில் நடை பெற்ற பத்மா சுப்ரமணியத்தின் நாட்டிய நாடகம் பற்றிய கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60110221&edition_id=20011022&format=html )
கதைகள்: சேவல் கூவிய நாட்கள்: 8,8,10- வ.ஐ.ச.ஜெயபாலன், பிரசாந்திற்குக் கல்யாணம்- என். அனந்த குமார், கனடாவில் கார்- அ.முத்துலிங்கம், என் விழியில் நீ இருந்தாய்- சி. ஜெயபாரதன்,

கவிதைகள்: பயராத்திரி – பசுபதி, இருட்டுப் பன்றிகள்- வ.ந.கிரிதரன், அர்த்தங்கள்-ஸ்ரீனி, கிளி ஜோசியம்- சேவியர், ஒரு மலைக்கால மாலைப் பொழுதில் -தி.கோபாலகிருஷ்ணன், உந்தன் நினைவில்-கு.முனியசாமி, விஷக் கிருமிகள்-அனந்த்

சமையற் குறிப்பு- தான்ச்சா- ஆட்டுக்கறி சாம்பார், பிரியாணி

அக்டோபர்- 28,2001- நிலவு- கவிதை- திலகபாமா

அக்டோபர் -29,2001:

பகல் நேர சேமிப்பு: பாரி பூபாலன்- குளிர்காலம் முடிந்து கோடை வரும் போது ஒரு மணி நேரம் முந்தி கடிகாரத்தை சரி செய்வது பற்றிய கட்டுரை
யூதர்களுக்கும் கிறிஸ்தவப் போராளிகளுக்கும் எதிரான ஜிகாத்- பின் லேடன் ஃபெப்ரவரி 1998ல் உலக முஸ்லீம்களுக்காக ஊடகத்தில் வெளியிட்ட ஜிகாத் அறிக்கை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110292&edition_id=20011029&format=html )
இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- ஓ பன்னீர் செல்வம்- முக ஸ்டாலின் சந்திப்பு, பயங்கரவாதத் தடுப்பு சட்டம் – பழைய மொந்தையில் புதிய கள், இந்தியாவின் செயற்கைக் கோள், போப்பாண்டவர் மன்னிப்புக் கேட்கிறார், ஆப்கானிஸ்தான் போர் இன்னும் எத்தனை நாள்?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110293&edition_id=20011029&format=html )
அறிவியலும் தொழில் நுட்பமும்- மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸ்பர்

கவிதைகள்- நிலவு-திலகபாமா, நாகரீக மானுடமே- வ.ந. கிரிதரன், கலைமகளே பதில் சொல்வாய்- கவியோகி வேதம், கண்ணீர்- சேவியர், கொலுசுணிந்த பாதங்களுக்கு ஒரு முத்தம்- அபராஜிதா, எனக்கு மழை வேண்டாம்- ஆர்.சிவசங்கரன், மறக்க முடியுமோ- அனந்த அனந்த நாராயணன்

கதைகள்: சேவல் கூவிய நாட்கள்-இறுதிப் பகுதி வ.ஐ.ச.ஜெயபாலன், வடிவ அமைதி -காஞ்சனா தாமோதரன், நியதி- வ.ந.கிரிதரன்

சமையற் குறிப்பு- கருவாட்டுக் குழம்பு

Series Navigationகடத்தலின் விருப்பம்மருமகளின் மர்மம் – 7
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *