தாகூரின் கீதப் பாமாலை – 94 வசந்த காலப் பொன்னொளி .

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

image (2)

உன் ஆத்மாவோ டிணைந்துளது

என் ஆத்மா

பாடல் பின்னல்களில் !

உன்னை நான் கண்டு பிடித்தது

உனக்கே தெரியாது,

அறியாதன வற்றை அறியும்

முறைப்பாட்டில் !

போகுள்* பூக்களின் நறுமணத்துடன்

புதைந்து கொண்டது

அம்முயற்சி !

கவிஞனின் தாள இசையுடன்

கலந்து கொண்டது !

உனக்குத் தெரியாமல்

உன் பெயரை முலாம் பூசினேன்

பன்னிறத் தொனி

வண்ணத்தில் !

உன் வடிவற்ற தோற்றத்தை

வெளிப் படுத்த

முன் வந்திருக் கிறேன் நான்,

புதிய வசந்த காலம்

புதுப்பித்த ஒளிமயத்தில் !

தொடு வானுக்கு அப்பால்

லலித்-வசந்த ராகத்தில்

வாசிப்பேன் என் புல்லாங் குழலை !

பாட்டுத் தாள இசைப்

பூரிப்பில்

பொன்னொளி நர்த்தனம் செய்யும்

உன் கழுத்தணியில் !

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 222 1939 மார்ச்சு 12 இல் தாகூர் 77 வயதினராய் இருந்த போது எழுதப் பட்டது. இந்தப் பாடலில் வருபவர் : தேன்குரல் பெண்மணி அமீதா ஸென் [Amita Sen Aka Khuku] சாந்திநிகேதனத்தில் பயில்பவர்.

++++++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] December 17 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *