சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14

This entry is part 29 of 29 in the series 5 ஜனவரி 2014

[சென்ற வாரத் தொடர்ச்சி]

சீதாயணம் படக்கதை -14

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

வடிவமைப்பு :  வையவன்

ஓவியம் :  ஓவித்தமிழ்

படம் : 28 & படம் : 29  [இணைக்கப் பட்டுள்ளன]
[படம் : 1 இராமன்] 
 
சீதாயணம்

ஓரங்க நாடகத்தின் பின்னுரை

 

(முன்வாரத் தொடர்ச்சி)

 

இராமகதை உண்மையாக இந்தியாவில் நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து.  கம்பரும்  பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று  மாற்றி யுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச்  சித்திரிக்க வில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருத வில்லை  என்றும் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன், இராமனின்  அவதாரப் பணி முடிந்து விட்டது என்றும், அயோத்திய புரியில் பட்டம் சூடிய பிறகு  இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட  வேந்தனாகவே வாழ்ந்தான் என்றும் இராஜாஜி கூறுகிறார். முன்பாதிக் காலத்தில்  இராமன் அவதாரத் தேவனாகத் தோன்றிப் பல மாய வித்தைகள் புரிந்து, பின்பாதிக்  காலத்தில் மனிதனாக மாறி வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுவது முன்னுக்குப் பின்  முரணாக இருக்கிறது!  முழுக்க முழுக்க இராமன் மனிதாகப் பிறந்து, மனிதனாக  வளர்ந்து, மனிதனாகவே நல்லதும், கெட்டதும் செய்து வாழ்ந்தான் என்பது எனது அழுத்தமான கண்ணோட்டம் !

கர்ப்பிணி சீதா இரண்டாம் முறை காட்டில் விடப்பட்டு, வால்மீகியின் ஆசிரமத்தில்  இரட்டையர் பிறந்து அவர்கள் இளைஞரான சமயத்தில் தந்தை இராமனை எதிர்பாராது சந்திக்கிறார்கள்.  முடிவில் பாலர்களை மட்டும் ஏற்றுக் கொண்ட இராமன், வால்மீகி வலியுறுத்திய பிறகும், சீதையைக் கூட்டிச் செல்ல மறுத்ததும்,  சீதா மனமுடைந்து மலைக் குன்றிலிருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக்  கொள்கிறாள். சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண  கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றி இந்துக்களில் பலர்  பல்லாயிரம் ஆண்டுகளாக சீதாவையும் இராமனையும் ஒன்றாக வைத்து வணங்கி  வருகிறார்கள். கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிட மன்னனாக  மீண்டும் மாற்றி எனது சீதாயண நாடகம் எழுதப் பட்டுள்ளது! இந்த நாடகத்தில் வரும்  இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்  படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை!

பத்துத் தலை கொண்ட அரக்கனாக இராவணன் இங்கே கருதப்பட வில்லை!  தென்னவரான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும்  கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக எனது சீதாயண  நாடகத்தில் வருகிறார்கள். சீதையைக் காட்டுக்கு அனுப்பும் இறுதிக் காண்டத்தில் நேர்ந்த  அதிர்ச்சிக் காட்சியை இராம கதையின் உச்சக் கட்டமாக நான் கருதி நாடகத்தை எழுதினேன். காட்டில்  தனித்து விடப்பட்ட சீதா, வால்மீகி ஆசிரமத்தில் குழந்தைகள் பெற்று, வளர்த்த பிறகு  ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, இந்திய  இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் துன்பியல் காவிய வரலாறு என்பது  என் அழுத்தமான கருத்து!

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில்  வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் ஆழ்ந்த கருத்து.  பின்னால் அவரது சீடர்களோ அல்லது பின்னால் பெருகிய இராம பக்தர்களோ மூலக்  கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  அனுமான் போல ஆறறிவு பெற்று பன்மொழி  பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு  உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி  மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க்  கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி  முடித்தேன். வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி  வித்தைகள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர  வால்கள் ஆகியவற்றை வடிகட்டி முக்கிய கதா நபர்களை மனிதராக மாற்றிக்  கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சி களாகப் படைத்தால் இராம கதை இனியதாய், எளியதாய், நம்பக்கூடிய மகத்தான ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று  எழுகிறது.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை வால்மீகிக்கு நேராகச் சொல்லியதாலும்,  வால்மீகி லவா, குசா வளர்ப்புக் காண்டத்தில் தானே ஒரு முக்கிய குருவாக  இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் பல குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும்,  தெளிவாகவும், மெய்யான தாகவும் நம்பக் கூடியதாகவும் உள்ளன. வில்லை முறித்துச்  சீதாவை இராமன் மணந்தது, மூத்தவன் இராமன் இருக்க இளையவன் பரதனை  அரசனாக்கத் தாய் விழைந்தது, தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக்  காப்பாற்ற இராமனைப் பதினாங்கு வருடம் காட்டுக்கு அனுப்பியது, அதன்பின் தந்தை  தசரதன் மனமுடைந்து இறந்தது, காட்டில் மானைப் பிடிக்கப்போய் இராமன்  மனைவியை இழந்தது, வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது, அனுமார்  படையினர் இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான்  அவதூறு கூறியது, மனம் விண்டு சீதா இறுதியில் குன்றி லிருந்து குதித்து உயிரை  மாய்த்துக் கொண்டது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன.

கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை  மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை  இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்!  காவியத்தில் மாதருக்கு ஏற்பட்ட அந்தக் கோர முடிவுகள் இரண்டும் படிப்பவர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக்  குளமாக்கும் அவலத் தன்மை படைத்தவை!

சீதாயண நாடகம் நமக்குப் போதிக்கும் முக்கிய பாடம் இதுதான் : இராமன் ஓர் அவதாரத் தேவன் அல்லன்;  அவன் முழுக்க முழுக்க ஒரு மனிதன் என்பதே! பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தர் பலர்  புரியாத ஏதோ ஒரு காரணத்தில் அவனைத் தேவ மகனாக்கி வந்ததால், அயோத்திய புரியில் இப்போது பாப்ரி மசூதி இருந்த இடத்தில், இராம பிரானுக்குப் புதுக் கோயில் ஒன்றை எழுப்புவது வட நாட்டில் பெரிய மதப் போரைத் துவக்கிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கில் இந்தியர்  கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வட நாட்டில் இராமன் எந்த  இடத்தில் பிறந்தான் என்று நிச்சயமாய் யாரும் நிரூபிக்க முடியாத போது,  பிரச்சனை யான பாப்ரி மசூதி இருந்த இடத்துக்கு ஆயிரம் அடி அப்பால், இராம  பக்தர்கள் இராமனுக்குப் புதிய கோயில் கட்டினால் என்ன குறைவாகும் என்பதே எனது முடிவான  கேள்வி!

**********

Seetha 28Seetha 29

 

 

 

 

 

 

 

Scene -1 Rama with Brothers

[​முற்றியது]

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

http://jayabarathan.wordpress.com/

 

 

 

 
Series Navigationமருமகளின் மர்மம் -10
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

95 Comments

 1. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஸ்ரீமான் ஜெயபாரதன்

  இன் க்விசிஷன், க்ருசேட் போன்ற கொடூர முறைமைகளால் உலகில் கோடிக்கணக்கான அப்பாவி மாற்று மதத்தினரின் ரத்தம் சிந்தக் காரணமாக இருந்த — சரித்ரத்தில் இருந்திருக்க சாத்தியமே இல்லாத — தேவ குமரானான ஏசு க்றிஸ்து — என்ற celestial கற்பனை பாத்ரத்தை ஹிந்துக்களிடம் ஜபர்தஸ்தியாக சரித்ரத்தில் இருந்த மனிதன் என வ்யாபாரம் செய்ய விழையும் — மதம் பிடிக்காத ஹிந்து என்று தன்னை – சொல்லிக்கொள்ளும் தாங்கள் —-

  மட்டற்ற ஹிந்துமதக்காழ்ப்புடன் படைத்துள்ளது இந்த அலக்கியம்

  சொல்லொணா துன்பத்துக்கு ஆளாகும் ஒரு பெண் எடுக்க வேண்டிய முடிவு – துன்பங்களை எதிர்கொண்டு நீதியை நிலைநாட்டல் என்ற படி இல்லாது — ஆத்மஹத்யை — என்று உலகிற்கு காட்டி பெண்மையை இழிவு செய்துள்ளது இந்த அலக்கியம்.

  ஆஸேது ஹிமாசலம் பற்பல பாஷைகள் புழங்கும் ஹிந்துஸ்தானத்தில் பல கோடி ஹிந்துக்களால் போற்றப்பட்டு புழக்கத்திலிருக்கும் வால்மீகி ராமாயணம் என்ற நூல் இடைச்செருகல்களால் *பொய்*க்கதையாய் மங்கிப்போனது என்றும் — மட்டற்ற ஹிந்துமதக்காழ்ப்புடன் — மதநம்பிக்கையுள்ள ஹிந்துக்களை புண்படுத்த வேண்டி — மிஷ நரிப்பார்வை மிக – உங்களால் படைக்கப்பட்டுள்ள இந்த அலக்கியம் — *மெய்* என்றும் சாதித்துள்ளீர்கள்.

  புழக்கத்தில் உள்ள வால்மீகி ராமாயணம் இடைச்செருகல்களால் *பொய்க்கதையாய்* மங்கியது என்பதற்கும் தாங்கள் ஆதாரம் ஏதும் முன்வைக்கவில்லை. மேலும் தங்களால் மட்டற்ற ஹிந்துமதக்காழ்ப்புடன் முன்வைக்கப்பட்ட அலக்கியம் *மெய்*யாக சரித்ரத்தில் நிகழ்ந்தது என்பதற்கும் ஆதாரம் ஏதும் முன்வைக்கவில்லை. அப்படி முன்வைக்கப்படாத படிக்கு இரண்டு விஷயத்துக்கும் தங்கள் பால் ஆதாரம் ஏதும் இல்லை என்பது மிகத்தெளிவாக சித்தமாகிறது. அது மட்டிலும் அன்றி — மட்டற்ற தங்களது ஹிந்துமதக்காழ்ப்பே இவையிரண்டிற்கும் ஆதாரம் ஆகிறது என்றால் மிகையாகாது.

  தேவகுமாரனான ஏசுபிரானை எந்த ஆதாரமும் இல்லாது சரித்ரத்தில் இருந்தவர் என ஹிந்துக்களிடம் வ்யாபாரம் செய்ய விழைகிறீர்கள்.

  ஹிந்து மதநூலான வால்மீகிராமாயணம் ராமபிரானை விஷ்ணுவின் அவதாரம் எனச்சுட்டிக்காண்பித்த பின்னும் – வால்மீகி ராமாயணம் என்ற நூலை ஒரு அக்ஷரம் கூட வாசிக்காது — ஆனால் வால்மீகி ராமாயணத்தில் காண்பிக்கப்பட்ட படிக்கு ராமபிரான் ரு மனிதன் தான் என்று இந்த தளத்தினருக்கு பொய்யான ஒரு பார்வையை முன்வைக்க விழைகிறீர்கள்.

  இவற்றையெல்லாம் தாங்கள் செய்யத் துணிவது — இப்படியெல்லாம் செய்தாலும் — ஹிந்துக்கள் இதே போல கீழ்த்தரமாக இரங்கி – க்றைஸ்தவர்கள் போற்றும் ஏசுபிரானை – இழிக்கத் துணியார் என்று நினைப்பதாலா என எண்ணத்தோன்றுகிறது. உத்தரங்களினூடே வருத்தமும் சினமும் மிக — யஹூதியர்களின் ஏசு இகழ்ச்சி செய்யும் ஆராய்ச்சியை வாசித்து பகிர்ந்தாலும் — என்னில் பதிந்துள்ள ஹிந்து சப்யதை அது போன்ற ஆராய்ச்சிகளை ஒரு வ்யாசமாக எழுதி சமர்ப்பிக்கும் ஒரு முயற்சியைத் தடுக்கிறது. முடிவில் வெல்வது என்னில் குறைவாகவோ அல்லது நிறைவாகவோ பதிந்துள்ள ஹிந்து சப்யதையா அல்லது எனது வருத்தமா என்பதை காலமே சொல்லும்.

  எது எப்படி இருப்பினும் — இந்த அலக்கியத்தில் சொல்லப்பட்ட பொய்க்கருத்துக்கள் காரணமாகவேனும் — ஜகம் புகழும் புண்யகதையான ராமகதையின் சில பகுதிகளை — நான் பதிலிறுக்க வேண்டியாவது மீள்வாசிப்பு செய்ததில் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

  எனது தொகுப்பின் முதல் பாகம் தயாராகி விட்டது. இரண்டாம் பாகம் – எழுதி வருகிறேன்.

  உங்கள் வாழ்த்துக்களுடன் சமர்ப்பிக்க விழைகிறேன்.

  பணிவன்புடன்
  க்ருஷ்ணகுமார்.

 2. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  நண்பர் திரு. கிருஷ்ணகுமார்,

  தேவ மைந்தனாகக் கருதப்படும் ஏசு பெருமான் பூலோகத்தில் ஒரு தாயின் வயிற்றில் ஏதோ ஒரு தந்தைக்குச் சிசுவாய்ப் பிறந்து, மனித வடிவில் நடமாடி மானிட சேவை செய்து, சிறைப் பட்டு, சிலுவையில் அடிக்கப் பட்டு, ஒரு மனிதனாக மரித்த ஒரு மகாத்மா வென்று நான் நம்புகிறேன்.

  உங்கள் இராம வரலாற்றுக் கட்டுரை ஒரு Encyclopedia. அதில் முழுமையாக இராமனைப் பற்றியோ, சீதாவைப் பற்றி எதுவும் புதுமையாக இல்லை.

  இறுதியில் தெய்வீக இராமனும், அடியாள் சீதாவும் எப்படிக் காலமானார் என்று மறக்காமல் எழுதுங்கள்.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

 3. Avatar
  paandiyan says:

  //தேவ மைந்தனாகக் கருதப்படும் ஏசு பெருமான் பூலோகத்தில் ஒரு தாயின் வயிற்றில் ஏதோ ஒரு தந்தைக்குச் சிசுவாய்ப் பிறந்து,//

  ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு

 4. Avatar
  புனைப்பெயரில் says:

  செயபாரதன் அவர்கள், ஜீஸஸ் டைனஸ்டி என்ற வெள்ளைக்காரன் புத்தகத்தை படிக்கவில்லை போலும். அதுவும் போக, டாவின்சி கோட் பார்த்தாரா தெரியலை. நெட்டில் இருக்கும் ஜெருசலேம் தொடர்பான அக்ழவாராய்ச்சி உண்மைகளை படித்தால், அவருக்கு தெளிவு வரலாம். நம்ம ஊரிலேயே லோக்கல் சரக்கான கள் உடலுக்கு நல்லது ஆனால் வெளிநாட்டு மோகத்தில் வகை வகையாக பெருமையாக சரக்கு அடிக்கும் கும்பலின் ரசனை மாதிரி தான் செயபாரதன் நிலைப்பாடு உள்ளது. இயேசு என்பது நமது நிலை மறைக்க வந்த போதையே தவிர வேறொன்றுமில்லை. மதம் மாறி 100 ஆண்டுகள் தாண்டியும் அடையாளம் மாறவில்லையே , யாருக்கும். அது தான் கசக்கும் உண்மை. நமது குட்டை கலங்கல் என்றால் தெளிவு பெற வைக்க பொறுமை வேண்டும். அதற்காக தூரத்து கானலை குட்டை என்று தவ்வி மூச்சு முட்டி துயர் கொள்வதும் , பிறந்த குட்டையை தூற்றுவதும் ஏன்..?

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   ஜீஸஸ் டைனஸ்டியும், இராமர் டைனஸ்டியும் முழுக்க முழுக்க ஒன்றுதானே ! அத்தனையும் பின்னால் திரிக்கப் பட்டவை, பொய் புனைவுகள் சிற்சில சேர்க்கப் பட்டவை. மாற்றப் பட்டவை.

   ஏசு நாதரின் மெய்யான பெண் சீடர் மேரி மகதலீன் முழுவதும் நீக்கப் பட்டார். 12 ஆடவச் சீடர்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப் பட்டார்.

   சீதை மரணத்துக்கு முழுக் காரணமான இராமன் தேவனாக திரிக்கப் பட்டான்.

   மெய்யான ஏசு நாதரை, இராமனைப் பற்றி இங்கே நாம் உரையாடலாம். அவரது டைனஸ்டி பற்றி இங்கே தர்க்கம் இல்லை.

   சி. ஜெயபாரதன்.

 5. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  ஸ்ரீமான் ஜெயபாரதன்,

  க்றைஸ்தவர்கள் ஏசுபிரான் என்ற நபர் சரித்ரத்தில் இருந்ததாகச் சொல்வதையும் ஹிந்துக்களிடம் அப்படி ஒரு விஷயத்தை வ்யாபாரம் செய்ய விழைவதையும் — ஹிந்துக்களை பித்தலாட்ட முறைமைகளில் மதமாற்றம் செய்ய விழைவதையுமே – நான் எதிர்க்கிறேன். க்றைஸ்தவ மதம் உலகில் பரவ கோடானுகோடி மக்கள் ஹிம்சைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை மறைக்கவும் முடியாது.

  க்றைஸ்தவ மதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

  ஆனால்,க்றைஸ்தவர்களுடைய மத நம்பிக்கைகளை (அது சரித்ரம் என்ற விஷயத்தைத் தொடாத வரை) திரிப்பதிலோ இழிவு செய்ய விழைவதிலோ எனக்கு உடன்பாடில்லை.

  தேவ மைந்தனான ஏசுபிரானானவர் கன்னிமரியாளுக்கு பரிசுத்த ஆவியினிடத்து ஜனித்ததாகவே க்றைஸ்தவ நம்பிக்கை.

  \ ஏசு பெருமான் பூலோகத்தில் ஒரு தாயின் வயிற்றில் ஏதோ ஒரு தந்தைக்குச் சிசுவாய்ப் பிறந்து, \

  இதை ஏன் மேற்கண்ட வாசகப்படி திரிக்க விழைகிறீர்கள். ஏதாவது ஒரு மதத்தில் பூர்ண விச்வாசம் கொள்ளுங்கள் என்று மட்டிலும் என்னால் சொல்ல முடியும்.

  ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது ஆபத்தானது.

  \ உங்கள் இராம வரலாற்றுக் கட்டுரை ஒரு Encyclopedia. \

  என் வ்யாசத்தின் முதல் தொகுப்பு ராமபிரானைப் பற்றி அல்ல. மாறாக வால்மீகி ராமாயண காவ்யப்படைப்பு பற்றியது.

  \ இறுதியில் தெய்வீக இராமனும், அடியாள் சீதாவும் எப்படிக் காலமானார் \

  ஐயன்மீர், ஹிந்து மத நம்பிக்கைப்படி தேவர்கள் புவியில் வருவதும் மறைவதும் ஆவிர்பாவம் மற்றும் அந்தர்தானம் – அஃதாவது – தோற்றம் மற்றும் மறைவு என்றே — சொல்லப்படுகிறது. மனிதர்களைப்போல இவர்கள் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை.

  சீதாபிராட்டியின் அந்தர்தானம் பற்றி வால்மீகி ராமாயணம் சொல்வதைப் பகிர உள்ளேன். வாசித்துள்ளேன். ராமபிரானின் அந்தர்தானம் பற்றி வாசித்துப் பகிர விழைகிறேன்.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   திரு. கிருஷ்ணகுமார்ஜி,

   நேற்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன். அதில் கதா நாயகன் வேலை கிடைத்துச் செல்லும் முதல் நாளன்று, அவன் தந்தை, முருகன், விநாயகரைக் கும்பிட்டுப் போவென்று சொல்கிறார்.

   மகன் நேரே மாலையுடன் சுவரில் தொங்கும் எம்ஜியார் படத்தைத் தொழுது செல்கிறான். படத்தின் கீழ் “எங்கள் தெய்வம்” என்று எழுதப் பட்டுள்ளது. தந்தை சிலையாய் நிற்கிறார் !

   ஶ்ரீமான் இராமனும் இப்படித்தான் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு தெய்வமாகி, இந்துக்களால் வணங்கப்பட்டு நிரந்தரத் தேவன் ஆகிவிட்டான். விஷ்ணு அவதாரக் கதைகளை அவரது வாரிசுகள் பின்னால் கட்டி விட்டார்கள்.

   இன்னும் ஐம்பது ஆண்டுகளில் பெரியார், எம்ஜியார், ஜெயலலிதா மூவரும் முப்பெரும் தமிழகத் தெய்வங்களாய் ஆலயங்களில் பகுத்தறிவுத் தோழர்களால் தொழப் படுவார்.

   சி. ஜெயபாரதன்.

   சி. ஜெயபாரதன்.

   1. Avatar
    புனைப்பெயரில் says:

    மத துவேஷம் நீங்கள் விஞ்ஞானம் படித்தும் மாறவில்லை என்பது வியப்பு. சக மனித நம்பிக்கை மதிப்பை விஞ்ஞானம் பெற்று தரும் என்ற விதியின் பிறழ் நீங்கள். நம்ம வீடுகள் பலவற்றில் அப்பா அம்மா தாத்தா பாட்டி படங்கள் மாலை குங்குமமிட்டு இவர்கள் தான் இறைவன் என்பார்கள். அது போல் தான் இராமர் , அதவாது அந்தக்கால எம் ஜி ஆர் தான் ராமர் என்றால் இந்துக்களுக்கு கோபம் வராது. சரி, இருந்துட்டுப் போகட்டுமே என்று தொடர்வார்கள். தீது நீக்கி நல் பருக எங்களுக்கு மதம் கற்றுக் கொடுத்திருக்கிறது. எப்போதும் இகழ்தலும், வன்மமும் தான் உங்களுக்கு உங்கள் படிப்பும் நம்பிக்கையும் தந்திருக்கு என்றால்… தந்தை மகற்காற்றியது இது தானா என்று வருத்தமே தோன்றுகிறது. ஏசு நாதர் எனப்படுவருக்கு தீட்யதை தந்தது இமயமலைச் சாரல் இந்து சாமிகள் என்று இஸ்ரேலியர்களில் பலரும் சொல்வதை பற்றி சாமி நீங்க சொல்வது என்ன…? இந்துமதத்தில் சாமி என்பது நம்மில் வெளியில் இருப்பதல்ல… நம்முள் கலந்திருப்பதே… நாளை நீங்கள் சாமியாக சிலரால் அல்லது பலரால் கொண்டாடப்படலாம்.. அது தவறல்ல.. அதனால், அந்த பயத்தால் – அதாவது ஒரு இனத்தில் பிறந்த ஒருவன் மட்டுமே சாமி எனும் நிலை நீர்த்துப் போனால் பிறரை ஆளமுடியாது எனும் ஆதிக்க தளர்வு பயத்தால் தான் இஸ்லாமும், கிறிஸ்துவமும் ஒருவரை தாண்டி பிறரை தூதுவராகவோ, இறைவனாகவோ ஏற்பதில்லை. இந்துமதத்திற்கு அந்த பயம் கிடையாது. ஒரு இந்து அதனால் தான் சகஜமாக இன்சா அல்லா என்று புன்சிரிப்புடன் சொல்ல முடிகிறது. மேரியை , மாரியம்மாவாக கொண்டாட முடிகிறது. அதற்கு, மனம் வேண்டும். உங்கள் ஏசு அதை உங்களுக்கு ஒரு நாள் அருள்வார். அப்போது வெறுப்பு உமிழ்ந்து அதிலேயே நீங்கள் மூழ்கி மூச்சு முட்டாமல் இருப்பதற்கு உதவுவது இந்து மத்தின் மீதான உங்கள் துவேஷத்தை இந்துக்கள் சகிப்பதே என்று உணர்வீர்கள். இதே மாதிரி ஒரு தொடர் இஸ்லாத்தைப் பற்றியோ இல்லை முகமது பற்றி எழுதிப் பாருங்கள்.. அப்போது தெரியும் ராமனின் சேனையான் இந்த குரங்குகள் மனித மனத்திலும் உயர்ந்த நிலை கொண்டவை என்று.

  2. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   திரு. கிருஷ்ணகுமார்ஜி,

   ஏசு பெருமான் பிறந்து மானிட சேவை செய்தை நம்பிப் போற்றிய பலர் மகா மேதைகள்,

   1. திருக்குர்ரான் எழுதிய நபி நாயகம்.

   2. இந்துமத வேத ஞானி விவேகானந்தர்.

   3. இராம மந்திர மகாத்மா காந்திஜி.

   நீங்கள் ஏசு நாதரை நம்பா விட்டால் வானிடிந்து விடாது !

   சி. ஜெயபாரதன்.

 6. Avatar
  ஷாலி says:

   //தேவ மைந்தனாகக் கருதப்படும் ஏசு பெருமான் பூலோகத்தில் ஒரு தாயின் வயிற்றில் ஏதோ ஒரு தந்தைக்குச் சிசுவாய்ப் பிறந்து,//
  ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ……….//

  திருக்குரானில் உள்ள 6666 வசனங்களில், இஸ்லாத்தை போதித்த நபிகள் நாயகம் அவர்களின் பெயர் நான்கு இடங்களில் மட்டுமே இடம் பெறுகிறது.ஆனால் இவருக்குமுன் 600 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இயேசு கிறிஸ்து என்னும் ஈஸா நபியின் பெயர் குரானில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது.திருக்குரானில் பெயர் சொல்லப்படும் ஓரே பெண் பெயர் மரியம்.(மேரி) மொத்தம் உள்ள 144 அத்தியாயங்களில் 98 வசனங்கள் அடங்கிய ஒரு அத்தியாயத்திற்கு பெயர் சூரத்துல் மரியம்.(Chapter Mary)
  இயேசுவின் பிறப்பை பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது? தெரிந்து கொள்வோம்.

  வானவர் தூதுவர் கேப்ரியேல் மரியத்திடம் மனித உருவில் வந்து,
  “மரியமே! உனக்கு இறைவன் ஈஸா என்ற மகனை நற்செய்தியாக வழங்குகின்றான் என்றதும் அதற்க்கு மரியம், “ எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கேட்டார்.
  “இது எனக்கு சுலபமானதே! மனிதர்களுக்கு அத்தாட்சியாகவும்,நம்மிருந்து ஓர் அருளாகவும் நாம் அவரை ஆக்குவோம். இது விதிக்கப்பட்ட விசயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான் என்றார்.”

  பிறகு குழந்தை பிறந்ததும் அதை சுமந்துகொண்டு தம் ஜனங்களிடம் சென்றதும், ஜனங்கள் கைக்குழந்தையை இவரிடம் கண்டதும்,” மரியமே! உமது தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை,உம் தாயும் கெட்ட நடத்தை பிசகியவாறு இருக்கவில்லை.” என்று பழித்தனர். இதற்கான காரணத்தை குழந்தையிடம் கேட்கும்படி ஜாடை காட்டினார்.அதற்க்கு மக்கள் கைக்குழந்தையிடம் எப்படி பேசுவோம்? என்றனர். உடனே குழந்தை ஈஸா ,”நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியானாக இருக்கின்றேன்! அவன் எனக்கு வேதத்தை கொடுத்திருக்கின்றான்; இன்னும் என்னை தூதராக ஆக்கியிருக்கின்றான்.” என்று குழந்தை பேசியது.(குர் ஆன் கூறும் இயேசுவின் முதல் அற்புதம்.) இதைதொடர்ந்து வரும் வசனம்,
  “ அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டியதில்லை; அவன் தூயவன். அவன் ஒரு காரியத்தை தீர்மானித்தால், “ஆகுக!” என்றுதான் கூறுவான்; உடனே அது ஆகிவிடுகிறது.”
  -திருக்குர்ஆன் அத்தியாயம் சூரா மரியம்.19:19-36.

  1. Avatar
   புனைப்பெயரில் says:

   சரி, அதே விக்கிபீடியா, தனது இந்த சுட்டியில்,
   http://en.wikipedia.org/wiki/Unknown_years_of_Jesus
   ….. Jacolliot used the spelling “Christna” instead of “Krishna” and claimed that Krishna’s disciples gave him the name “Jezeus,” a name supposed to mean “pure essence” in Sanskrit.
   என்று சொல்லியிருக்கிறதே… அதையும் போடலாமே…
   ஆனால், எனக்கு இந்து மதம் கற்றுக்கொடுத்தது , பாதியை போடாதே, முழுசாய் போடு என்று…
   அதனால்,
   However, according to Max Müller that is not a Sanskrit term at all and “it was simply invented” by Jacoillot

   இது டிஸ்கவரி சேனலில் வந்தது… வெள்ளைகாரன் தான்.. அதனால் செயபாரதன்கள் நம்புவார்கள்.
   http://www.youtube.com/watch?v=23jhFJSnf_Q
   இதில் குழாயடி சண்டை மாதிரி துவேஷமாக எழுதாமல், அறிவுப்பூர்வமாக சொல்லப்பட்டிருக்கும்.
   புத்திஸத்தில் இருந்து ஜீஸஸ் கற்றவை பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.
   பிரவாகமெடுத்து வரும் நீர் ஒரு சிறு சுனையில் இருந்து தான் புறப்படுகிறது.
   காட்டாறாய், அகண்ட நதியாய், ஆறாய், பிரிந்து குட்டையாய், குளமாய், வாய்க்காளாய் பல ரூபங்களில் இருக்கிறது. கடலில் கலக்கிறது. அது போன்றதே இந்து மதம்.
   அதிமாய் இருக்கிறேன் என்று கடல் மமதை கொள்ளத் தேவையில்லை.
   சிறு சினை என்று ஊற்றும் வருத்தப்படத் தேவையில்லை.
   எல்லா, நீர் தான். துளி தான் ஆதியும் அந்தமும்.
   புரிந்தால் துளியில் உலகமுண்டு. அதனால், தான்
   பூஜ்யத்திற்குள் ராஜ்யம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.

   1. Avatar
    புனைப்பெயரில் says:

    http://www.tombofjesus.com/index.php/en/faq இந்த் வீடியோவில், 8:24 பாயிண்டிலிருந்து ( அதாவது அந்த வீடியோவின் 8.24 வது மணித் துளியிலிருந்து ) அந்த டாகுண்டரிக்காரர் சொல்வதைக் கேளுங்கள் அவர் ஒரு கிறிஸ்துவர் தான். ஆனால், அவர் சொல்வதைக் கேட்டபின், லோக்கல் மதம் மாறிய நபர்களின் மனநிலை நமக்கு புரியும். மதத்தின் கோட்டாடு உணர்ந்து எந்த மதத்திற்கும் மாறுவது வேறு. ஆனால், சமூக ஏற்றத் தாழ்வு முறையில் முன்னேற்றத்திற்க்காக அறிவு சான்றோரை வெல்ல முடியாமல் சில கிப்டுகளுக்காக மதம் மாறுவறிவர்களின் அல்லது மத துவேஷம் செய்பவர்களின் கருத்துக்கள் வேறு என்பது புரியும். ( நான் மிக பிற்படுத்தப்ப்ட்ட வகுப்பினன் )

 7. Avatar
  IIM Ganapathi Raman says:

  //இராமகதை உண்மையாக இந்தியாவில் நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து.//

  இப்படிப்பட்ட எழதா வரலாறு, செவிவழி வந்தது எப்போது என்றே தெளிவில்லாவதவற்றைப்பற்றி தம் உறுதியானக் கருத்து என்று வரலாற்றாய்வாளர்கள் கூட வைத்துக்கொள்வதில்லை.

  இராஜாஜி, அப்படி இராமன் அவதாரமில்லையென எழுதவில்லை. அவர் எழுதியது; விஷ்ணு மனிதஅவதாரமெடுத்தபடியாலே, அவ்வவதாரம் மனிதனின் நிறை குறைகளைக்கொண்டு வாழவேண்டியதாயிற்று. அப்படி வாழ்ந்த‌து மனித வர்க்கத்துக்கு பல பாடங்களை எடுத்துக்காட்டவே. அதாவது சீதையை தீக்குளிக்கச்சொன்னால், அப்படி மற்றவன் பேச்சைக்கேட்டு உன் பெண்டாட்டியைச் சந்தேகித்துக்கொள்ளாதே என்று பொருள் எடுத்துக்கொள்ளுங்கள் என்பதுதான்.

  இராம காதை ஒரு ஹிதிகாசம். அதை இந்துக்களின் புனித நூல் என்று இந்துக்களில் பலர் ஏற்றுக்கொள்ள, இன்னும் பலர் வெறும் காவியமாகத்தான் ஏற்றுக்கொள்ள, பொது இந்தியர்களுக்கு பொது காவியமாகவும் இருந்துவருகின்றது. எனவே ஒருவர் இராமனை வெறும் மனிதனாகப் பார்த்து எழுதுவது ஒன்றும் தவற்ன்று. அப்படித்தவறென்று சொல்பவர் அனைவரும் ஆஃப்கானிஸ்தான் சென்று தாலிபானின் சேர்ந்து விடலாம். இந்துமதத்திலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள்.

  பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே செவிவழிக்கதையாக கேட்ட இராமகாதையில் இடைச்செருகல்கள் இருக்க் முடியாது என்று கிருஸ்ணகுமாரின் கருத்து கற்றோர் சபையில் சிரிப்போலியை உண்டாக்கும். தரவுகள் கேட்பதும் அப்படித்தான். பகவத்கீதையே இடைச்செருகள் ம்ஹாபாரத்தத்தில் என்பது பலர் கருத்து.

  கண்ணகியையும் சீதையையும் ஒப்பிடுகிறார் ஜயபாரதன். தவறு. கண்ணகி கணவனால் கைவிடப்பட்டு அலந்தவள் அன்று. கணவன் கொல்லப்பட்டான். அதற்கு நீதி கேட்டுப்போராடி அப்போராட்டத்தில் வெற்றிபெற்று. அதன் பின்னர் கணவனில்லா வாழ்க்கை பாழ் என்ற நோக்கிலே வான்மேகினாள். சீதை கணவனால் கைவிடப்பட்டவள். எப்படி ஒப்பிட முடியும்?

 8. Avatar
  IIM Ganapathi Raman says:

  இராமன் மனிதனாக இந்துக்களால் பார்க்கப்படவில்லை. அப்படி மனிதனானால், இந்துமதம் தன்னிலை குலைந்துவிடும். மதம் நம்பிக்கைகளால் கட்டப்பட்டது. இப்ப்டி நம்புகிறார். அப்படியே போகட்டும். என விட்டுவிட்டு அந்த நம்பிக்கை வைத்து அவர்களால் தீங்கு செய்யப்படுகிறதா, நன்மையா செய்யப்படுகிறதா என்ற் கேள்வியே எழ வேண்டும்.

  கத்தியை வைத்து கயவர்கள் மனித உயிர்களை எடுத்து மகிழ்வார்கள். மருத்துவர்கள் கொடுத்து மகிழ்வார்கள். அதே போல இராம காதையை நம்பி மசூதியை உடைக்கலாம். இந்துகளையும் இசுலாமியரைகள் ஒருவருக்கொருவர் எதிராக நிற்க வைத்து இந்திய அமைதிக்குப் பங்கம் விளைவிக்கலாம்.

  இராமனின் பலபல செயல்களைக் கடைபிடித்து – ஏக பத்தினி விரதம், தந்தை தாயை உயிருக்கு மேலாக மதித்து நடத்தல், சொன்ன வாக்குகளைக்காப்பாற்றல், மனிதர்களுக்கிடையே பாகுபாடுபாராமல் அவர்கள் நல்ல உள்ளஙக்ளை வாழ்த்தி, அப்படிச்செய்யாதோரைக்கடிதல் (சப்ரி கதை, இலக்குவணைக்கடிதல்) – இப்படிப்பார்த்து, பிறகதாபாத்திரங்களையும் – தன் அண்ணியைத் தெய்வத்துக்குச் சமமாக வைத்தல் – தன் அண்ணியின் முகத்தைக்கூட பாராமல் காலைப்பார்த்தே பேசுவான் இலக்குவணன் என்கிறார் வால்மீகி- தன் அண்ணனுக்குச்சேரவேண்டியது அநீதியாக தனக்கே வந்தாலும் அதைப்பேணி அண்ணனிடமே கொடுத்துவிடல் – பரதன் கதை – பிறன்மனை நோக்கா பேராண்மை உடைய இராமனின் மனைவியைக்கவர்ந்து தன் அழிவுக்குக் காரணமாதல் – இராவணன் கதை – இப்படி பலபல வாழ்க்கைச்சித்திரங்களைக்கண்டு தங்கள்தங்கள் வாழ்க்கையைச்செம்மைப்படுத்தியோர் உண்டு. செம்மைப்படுத்தலாம். அதே வேளையில் இராமன் மற்றும்ப்ல கதாபாத்திரங்களில் ஏற்கமுடியா செயல்களை விட்டுவிடலாம். உலகில் எதுவும் முழுமையாக வருவதில்லை. நிலவிலும் கலங்கமுண்டு.

  ஆக, இராம காதை உண்மையா பொய்யா, இராமன் மனிதனா அவதாரமா என்ற கேள்விகளைவிட, அக்கதையை வைத்து பிறம்க்களுக்கும் நுமக்கும் கொடுமைகள் இழைத்தீர்களா, அல்ல நன்கு வாழ்ந்தீர்களா என்ற கேள்வியுடனே இச்சீதாயாணம் முடியவேண்டும்.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   ஒரு சலவைக்காரர் சீதையின் கற்பைக் கேள்விக்குறியாக்கினார் என்பதற்காக தன் மனைவியை அக்னிப்பிர்வேசம் செய்யத்தூண்டியது ‘கைவிடப்பட்டாள்’ என்றே பொருளாகும். உண்மையில் கற்புடைய பெண்ணான சீதையை இப்படி பொதுமக்களிடையே வைத்து கொச்சைபபடுத்தல் கைவிடப்படுதலைவிட மோசமானது.

   இச்செயலை எவருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவேதான் சொன்னேன் இராமன் மனித அவதாரத்தின் குறை நிறைகள் உண்டு அவற்றில் நிறைகளை (அவற்றையும் சுட்டிக்காட்டினேன்) மட்டுமே எடுத்து நல்வாழ்க்கை வாழுங்கள். ஜய‌ சிரிராமென்று ஓங்காரமிட்டுக்கொண்டே மசூதியை இடிப்பது ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயில்’ எனபதற்குச் சமமாகும்.

   குறைகளைச்சுட்டிக்காட்டக்கூடாது என்பது அக்குறைகளைச் சரியென்று ஏற்றுக்கொள்வதாகும். அப்படி ஏற்றுக்கொள்வோருக்கும், மனைவியைச் சந்தேகித்து அவளைத்துண்டம் துண்டமாகி வெட்டிவீசுவோருக்கும் வேறுபாடில்லை.

   “நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற கொள்கையுடையோனே உண்மை இந்துவாம்.

   இந்துமதம் அனைத்தையும் கண்ணைமூடி ஏற்றுக்கொள் என்று சொல்லவேயில்லை. எதிர்கேள்விகள் கேட்டோரையும் நம்ப மறுத்தோரையும் இந்துமதத்தை இழிவு செய்கிறாய் என்று சொல்வோர் இந்துமதத்தின் அடிப்படையே தகர்க்கிறார்.

 9. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே செவிவழிக்கதையாக கேட்ட இராமகாதையில் இடைச்செருகல்கள் இருக்க் முடியாது என்று கிருஸ்ணகுமாரின் கருத்து கற்றோர் சபையில் சிரிப்போலியை உண்டாக்கும். \

  அடுத்தவர் சொல்லாத கருத்தை அடுத்தவர் சொல்லியதாக பொய் கூறும் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களின் கருத்துக்கள் கற்றோர் சபையில் எதை உண்டாக்கும்?

  நான் 13ம் பாகத்தில் பதிந்த கருத்து.

  \ வால்மீகி ராமாயணம் என்ற மூல நூல் பலரால் பலமுறை மாற்றப்பட்டு பொய்க்கதையாய் மங்கிப்போனது என்று அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் முன்வைத்த கருத்தை அணுகுகையில் …….

  வால்மீகி ராமாயணம் என்ற படைப்பு தொடர்ந்த மட்டற்ற இடைச்செருகல்களால் உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளதா என்பதே விசாரிக்கப்பட வேண்டிய கருத்து.

  ஆய்வாளர்கள் மூல நூலை வாசித்துப் பல ஆய்வுக்கூறுகள் மூலம் பரிசீலனை செய்ய விழைந்துள்ளார்கள். \

  க்ருஷ்ணகுமார் எங்கு எப்போது ராமாயணத்தில் இடைச்செருகல்கள் என்பது அறவே இல்லை என்று சொல்லியுள்ளார் — என்று ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் இந்த தளத்தில் பகிரவில்லை — என்றால் ஜோ சொல்லிய கருத்து பொய் என்று மட்டிலும் ஆகும்.

  வால்மீகி ராமாயணம் என்ற படைப்பில் இடைச்செருகல்கள் உள்ளதாக வ்யாக்யானங்கள் எழுதி முதன் முதலில் இந்த காவ்யத்தை critical ஆக analayse செய்ய விழைந்த சான்றோர்களே பகிர்ந்துள்ளனர். அது என் தொகுப்பில் குறிப்பிடப்பட்டும் உள்ளது.

  விவாதம் ராமயணத்தில் இடைச்செருகல்கள் என்பது உள்ளனவா இல்லையா என்பது இல்லை? ஆயிரக்கணக்கான வருஷம் முன்பு உள்ள ஒரு காவ்யத்தில் இடைச்செருகல்கள் உண்டு என்பது பொதுவிலே ஏற்கப்படும் விஷயம் தான்.

  அறிஞர்களின் ஆராய்ச்சியை நாடுவதே அப்படியான இடைச்செருகல்கள் யாதாக இருக்கக்கூடும்? என்பதும்

  வால்மீகி ராமாயணத்தில் ஒரு அக்ஷரம் கூட படிக்காது — வால்மீகி எழுதிய ராமாயணத்துடன் ஒப்பிடுகையில் இன்று இருக்கும் ராமாயணம் பொய்க்கதை என்று அடித்து விடும் விக்ஞானியின் — புளுகு மூட்டையை — கட்டுடைப்பது

  விவிதமான அறிஞர் பெருமக்கள் கருத்தினை முன்வைப்பதன் மூலமே சாத்யம். நான் கு பாகங்களாலான எனது முதல் தொகுப்பில் இந்த விஷயமே — பல கோணங்களில் பல அறிஞர் கருத்துக்களையும் — இன்றைய பொதுவில் புழங்கும் ராமாயண ப்ரதியில் காணப்படும் விஷயங்களையும் அணுகி விசாரம் செய்கிறது.

 10. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ எனவே ஒருவர் இராமனை வெறும் மனிதனாகப் பார்த்து எழுதுவது ஒன்றும் தவற்ன்று. \

  யாரும் எந்த விஷயத்தை எழுதுவதையும் — உரிமை சார்ந்து இங்கு – யாரும் விசாரிக்கவில்லை. அப்படி கருத்துப்பகிர்வது அப்பட்டமான பொய்.

  \ இராம காதை உண்மையா பொய்யா, இராமன் மனிதனா அவதாரமா என்ற கேள்விகளைவிட, அக்கதையை வைத்து பிறம்க்களுக்கும் நுமக்கும் கொடுமைகள் இழைத்தீர்களா, அல்ல நன்கு வாழ்ந்தீர்களா என்ற கேள்வியுடனே இச்சீதாயாணம் முடியவேண்டும். \

  ராமகதை என்ற பெயரில் விக்ஞானி அவர்கள் பகிர்ந்த ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்களை விசாரிக்காது இந்த சீதாயணம் என்ற அலக்கியப் படைப்பு நிறைவு பெறாது.

  மறுவாசிப்பு என்ற பெயரில் ……

  சொல்லொணா துன்பத்துக்கு ஆளாகும் ஒரு பெண் எடுக்க வேண்டிய முடிவு ஆத்மஹத்யை தான் என்று விக்ஞானி ஜெயபாரதன் தன் *மெய்*க்கதையில் கதைக்க முனைகிறார்.

  அதை அவரது விசிறிகள் விசாரம் செய்யாது நழுவ முனையலாம். அல்லது ஏற்கவும் முனையலாம்.

  ஆனால் அப்படிப்பட்ட பெண்மையை இழிவு செய்யும் ஒரு கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் கண்டிப்பாக அதை இடித்துறைப்பார்கள்.

  மறுவாசிப்பி என்ற பெயரிலான இந்த அலக்கியப்படைப்பு –

  பெண்மையை இழிவு செய்யும் ஒரு புனைவு

  மறுவாசிப்பு என்ற பெயரில் ஒரு புனைவை அப்படியே எழுதிச்செல்வது மரியாதைக்குறியது.

  ஆனால் வால்மீகி ராமாயணம் என்று புழக்கத்தில் இருக்கும் நூலில் அறவே சொல்லப்படாத விஷயங்களை அதில் சொன்னதாகப் பொது தளத்தில் துணிந்து பொய்களை முன்வைக்கும் படைப்பு — பொது தளத்தில் கட்டுடைக்கப்பட வேண்டும்.

  அந்த விஷயத்தை — அந்த குறிப்பான கருத்து வேறுபாடுகளை அறவே விவாதத்திற்கு உட்படுத்தாது — விவாதத்தை தடம் புரளச் செய்வது விசிறிகளின் பணி. இருந்தும் அப்படிப்பட்ட பொய்க்கருத்துக்கள் கண்டிப்பாக இடித்துறைக்கப்படும்.

  ராமஜன்ம பூமி இயக்கத்தை – ஆப்ரஹாமிய ஆதரவு சக்திகள் எதிர்ப்பது புதிதல்ல. தேச நலனில் அக்கறை உள்ள முஸல்மாணியர் முதற்கொண்டு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமையை அமரர் மலர்மன்னன் மஹாசயர் வ்யாசமாகப் படைத்துள்ளார். இந்த விஷயத்தை இதற்கென தனியாக விசாரம் செய்வது — ஒரு முழுமையை அளிக்கும். எண்ணிறந்த வ்யாசங்கள் இது சம்பந்தமாக எழுதப்பட்டுள்ளன.

  என்னுடைய தற்போதைய இலக்குகள் விக்ஞானியின் படைப்பில் சொல்லப்பட்ட அப்பட்டமான அடிப்படைப்புரிதலற்ற மற்றும் பொய்யான கருத்துக்களை பொது தளத்தில் கட்டுடைப்பது. என் விவாதங்கள் அந்த இலக்குகள் சார்ந்து இருக்கும்.

 11. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ நீங்கள் ஏசு நாதரை நம்பா விட்டால் வானிடிந்து விடாது ! \

  நாம் நம்ப மறுப்பது ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இருந்திருக்கிறார் என்ற பொய்யான கருத்தை.

  ஏசு சரித்ரத்தில் இருந்தார் என்பதற்கு நீங்கள் முன்வைக்க வேண்டியது சரித்ரத் தரவுகள்.

  காந்தியடிகள் நம்பினார், விவேகானந்தர் நம்பினார் என்று லிஸ்டு கொடுப்பதால் ஏசு சரித்ரத்தில் இருந்தார் என்று எப்படி ஆகும்.

  புனைவுகள் வேண்டுமானால் நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்படலாம். சரித்ரம் தரவுகளின் அடிப்படையில் மட்டிலும் எழுதப்படும்.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   திரு. கிருஷ்ணகுமார்ஜி,

   புத்தர் பிறந்ததற்குச் சரித்திரம் உள்ளதா ? அதுபோல் வள்ளுவர், வால்மீகி, வசிஸ்ட்டர், ஔவையார், கம்பர், இளங்கோ வடிகள், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், ஆண்டாள், அருணகிரி நாதர் ஆகியோர் பிறந்ததற்கும் சரித்திரம் எழுதப் பட்டுள்ளதா ?

   சி. ஜெயபாரதன்

  2. Avatar
   IIM Ganapathi Raman says:

   ஜய பாரதன் எழுதியதை அன்பர் க்ருஸ்ணகுமார் சரியாக கிரஹிக்கவில்லை

   ஏசுநாதரை நம்பாவிட்டால்’ என்று அவர் சொன்னது, ஏசு சரித்திரத்தில் வாழ்ந்தார் என்பதை நம்பாதவர் என்றுமட்டும் பொருளில்லை. ஏசு நாதர் எதற்காக வாழ்ந்தார்? எதற்காக மறைந்தார்? என்ன சொன்னார்? என்று அறிந்து நம்புவதையும் சேர்த்துதான்.

   //நாம் நம்ப மறுப்பது ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இருந்திருக்கிறார் என்ற பொய்யான கருத்தை.// என்ற அன்பர் க்ருஸ்ணகுமார் கருத்து ஏசு என்ற சரித்திர நபரை தான் நம்பவில்லை; ஆனால் கிருத்துவமதக்கொள்கைகளை அதாவது ஏசுவின் போதனைகளை ஏற்றுக்கொள்கிறேன் என்றே பொருள்.அப்படி அனேக கிருத்துவர்களே இருக்கிறார்கள்.

   //காந்தியடிகள் நம்பினார், விவேகானந்தர் நம்பினார் என்று லிஸ்டு கொடுப்பதால் ஏசு சரித்ரத்தில் இருந்தார் என்று எப்படி ஆகும்.//

   காந்தி ஏசுவின் போதனைகளை நிராகரிக்கவில்லை. விவேகானந்தரும் அப்படியே. விவேகானந்தரின் குரு இராமக்ருஷ்ணர் இயேசுவின் நினைப்பில் தியானமிருந்து இயேசுவின் ஆவி தன்னுள் வந்தது என்று சொல்லியிருக்கிறார். அவரின் வரலாற்றை இராமகிருஸ்ணமடம் வெளியிட்டிருக்கிறது. படித்துத் தெரிந்துகொள்ளலாம். காஞ்சி சந்திரசேகர சரஸ்வதிகள், தான் புதிய ஏற்பாட்டை விரும்பிப்படித்ததாக சொல்லியிருக்கிறார். அதையே காந்தியும் செய்தார்.

   இவர்களெல்லாம் சரித்திர நபரா இயேசு என்று ஆராயாமல் இயேசு என்ன சொன்னார் என்பதைத் தெரிந்து ஏற்றுக்கொண்டார். க்ருஷ்ணகுமார் அவ்வாறே என்றால், very great!

 12. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  திரு. கிருஷண்குமார்ஜி,

  2000-3000 ஆண்டுகளுக்கு முன் இந்து மூதறிஞர் அல்லது யூத மூதறிஞர் யாராவது எழுதிய வரலாற்று நூல்கள் உள்ளனவா ?

  பிரிட்டீஷார் எழுதிய இந்திய வரலாற்று நூல்கள் தவிர வேறு இந்து மேதைகள் எழுதிய வரலாற்று நூல்கள் உள்ளனவா ?

  அவற்றில் வீரசாவர்க்கர் பிறப்பு பற்றி எழுதப் பட்டுள்ளதா ?

  நீதிமன்றமே நிறுத்தியுள்ள போது குறிப்பிட்ட தர்க்க பூமியில் சட்டத்தை மீறி இராமருக்கு ஆலயம் கட்டப் போகிறீரா ?

  சி. ஜெயபாரதன்.

 13. Avatar
  புனைப்பெயரில் says:

  http://www.tombofjesus.com/index.php/en/faq
  இதில் இந்தியாவில் ஜீஸஸ் பற்றி ஆராய்ச்சி பூர்வமாக சொல்லப்பட்டவை இருக்கிறது.
  கண்டிப்பாக இந்த சுட்டி படியுங்கள். ஒருவர் ராமரை இகழ்கிறார் என்பதற்காக இந்துக்கள் தரம் தாழக் கூடாது. இயேசுவை அரவணைத்து அந்த குழந்தைக்கு ஞானப்பால் கொடுத்த தேசம் இது.

 14. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஸ்ரீமான் புனைப்பெயரில்

  எனது ஹிந்துஸ்தானி உபசாஸ்த்ரீய சங்கீத இசை ஆசிரியர்கள் முஸல்மாணியர்கள். எனக்கு பூஜ்யர்கள். எத்தனை தான் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்று வரை உத்தரங்கள் பதிவதில் வினம்ரதை பூர்வமாக கருத்துப் பதிவதில் ஆதாரமாக நான் அவதானித்து வருவது ஜெனாப் சுவனப்ரியன் என்ற அன்பரையே.

  நான் வாசித்த பல நூற்கள் வாயிலாகவும் க்றைஸ்தவர்களது மதநூலான பைபள் மற்றும் இஸ்லாமியரின் மதநூலான குரான்-ஏ-கரீம் போன்ற நூற்களில் காணப்படும் அதீத முரண்பாடுகளால் ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இருந்திருக்க முடியாது என்பது என் புரிதல். நான் இதுவரை இது சம்பந்தமான சரித்ர சான்றுகளை வாசித்து அறிந்த விஷயம் இது. சார்பான எதிர்மறையான கருத்துக்கள் பலவற்றை நான் இது சம்பந்தமாக வாசித்துள்ளேன். இதை சான்றாதாரங்கள் சார்ந்து மறுக்கும் கருத்துக்களை — நிச்சயம் மேலும் அறிய விழைவேன். காவ்யாவின் மித்ரரான அன்பர் சுந்தரவடிவேலு அவர்களின் ஒரு பக்ஷத்திலான வ்யாசம் மட்டிலும் பகிரப்பட்டதை நினைவு கூர்கிறேன். பல விஷயங்கள் ஸ்ரீமான் சீதாராம் கோயல் அவர்களது நூலில் பகிரப்பட்டவையே. அவருடைய நூலுக்கு ஆதரவான வ்யாசங்கள் எதிர்மறையான ….குறிப்பாக ரெவரெண்டு கருவசிரா என்ற பாதிரியின் சாரம் குறைந்த கருத்துக்களையும் வாசித்து உள்வாங்கியிருக்கிறேன்.

  இதற்கு முன் இந்த தளத்தில் இது சம்பந்தமான வ்யாசம் பதிவேறியதில் ஆப்ரஹாமிய அன்பர்களும் ஆப்ரஹாமிய சார்புடைய அன்பர்களும் …… இந்த கருத்தை சான்றாதாரங்கள் சார்ந்த எதிர்க்கருத்துக்கள் மூலம் அணுகாது ….. ஓலமிடுதலிலும் ஒப்பாரி வைத்தலிலும் மட்டிலும் எதிர்கொண்டார்கள் என்பதை நினைவு கூர்கிறேன்.

  ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள்…… கிட்டத்தட்ட சகுந்தலை படத்தில் வரும் நகைச்சுவை காட்சியான………..ங்கொப்பம்மவனே சிங்கண்டா என என்.எஸ்.க்ருஷ்ணன் ………. அதே வசனத்தை பல ச்ருதிகளில் சொல்வது போல ……. சான்றாதாரங்கள் எதுவும் முன்வைக்காது…………ஒரே ப்ரலாபமாக……. அவர் மதிக்கிறார்,…… இவர் மதிக்கிறார்…….ஐயகோ ஏன் மறுக்கிறீர்கள் என்றே எதிர்கொண்டார் என நினைவு கூர்கிறேன்.

  மதிப்பிற்குறிய ஸ்ரீமான் தேவப்ரியா சாலமோன் அவர்கள் கருத்துக்களையும் இது சம்பந்தமாக பல உத்தரங்களினூடே வாசித்ததுண்டு.

  யஹூதிகளின் ஏசுபிரானை இழிவு செய்யும் ஆராய்ச்சி என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு விதத்தில் ஒரு முரண்பாடே. எப்போது ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இல்லை என நான் திண்ணமாக ஒரு முடிவுக்கு வந்துள்ளேனோ ….. அதன் படி அணுகுகையில்… ஒரு ஆய்வு… அது ஏசு என்ற நபரை இழிவு செய்கிறது என்றாலும் கூட என் முடிவுக்கு எதிர்மறையானது அது என்பதையும் கூடவே அவதானிக்கிறேன். அந்த ஆய்விலும் மட்டற்ற இழிவுகளைத் தவிர சரித்ர உண்மைகள் என்ற படிக்கு ஆழ்ந்த கருத்துக்கள் காணக்கிட்டவில்லை என்பதை நினைவு கூர்கிறேன்.

  ராமபிரானைப் பற்றியும் ஹிந்துமதக்காழ்ப்புடனும் ஒருவர் ஒரு படைப்பை சமர்ப்பித்துள்ளார் என்பதற்கு பதிலாக அதே அளவு தரம் தாழ்ந்து க்றைஸ்தவர்கள் போற்றும் ஏசுபிரானை இகழ்ந்து இழிவாகப் படைக்க நான் முயலுவது மதி ஹீனம் சப்யதா ஹீனம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

  முருகப்பெருமான் எனக்கு நன்மதியையே அருளட்டும்.

  \ ஒருவர் ராமரை இகழ்கிறார் என்பதற்காக இந்துக்கள் தரம் தாழக் கூடாது.\

  இந்த மேற்கண்ட கருத்தை என் சென்னியில் ஏற்றுகிறேன். உண்மையான உயர்வான கருத்து.

  1. Avatar
   புனைப்பெயரில் says:

   கண்டிப்பாக, கிறிஸ்துவர்கள் ஏசு என்று வணங்கப்படுபவர் ரோம் அரசின் நிர்வாக தந்திரம் என்றே தான் பலவற்றிலும் சொல்லப்படுகிறது. ஏசு என்று குரானில் சொல்லப்படுபவர் முஸ்லீம்களின் தூதர்களில் ஒருவர் என்றே அரேபியாவில் சொல்லப்படுகிறது. அவர்கள் ஏசு எனப்படுபவரை ஏற்பதில்லை. நம்புவது தவறில்லை… அவர்கள் நம்பட்டும். அதே சமயம் ஜெயபாரதனின் மேதாவித்தன சீதா படைப்பு கீழ்மட்டச் சிந்தனை. இல்லாது ஒன்றென்றால் அவருக்கு அதில் ஏன் இவ்வளவு அக்கறை. துவேஷமின்றி வேறேது.

   1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///சீதா படைப்பு கீழ்மட்டச் சிந்தனை. இல்லாது ஒன்றென்றால் அவருக்கு அதில் ஏன் இவ்வளவு அக்கறை. துவேஷமின்றி வேறேது.///

    இதற்கு ஆதாரங்கள் தேவை !!!

    வெறுமையாக நம்பப்படும் இராமனிடம் உள்ள குறை பாடுகளை ஏன் நிறுத்துக் காட்டக் கூடாது ? தெய்வீகத் தேவ மகன் இராமன் சாதாரண ராஜா, ராணிக்குப் பிறந்தவன் தானே.

    இந்துமதம் சீதாயணத்தில் எங்கே தூற்றப்படுகிறது ?

    சி. ஜெயபாரதன்.

 15. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன், அன்பர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ,

  பல்லாயிரம் வருஷ முன்பு வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட வால்மீகி ராமாயணம் என்ற நூலில் இடைச்செருகல்கள் இருக்க வாய்ப்புண்டு என்பது சரிதான். ஆனால் அதன் ப்ரபாவம் எத்தகையது என்பது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று மனம் போன போக்கில் பகிரப்பட வேண்டிய கருத்து இல்லை. ஆழ்ந்த ஆய்வின் மூலம் ஆராயப்பட வேண்டிய கருத்து. விவிதமான அறிஞர்கள் இக்கருத்தை ஆராய்ந்துள்ளார்கள்.

  அந்த ஆய்வுக்கருத்துக்களை நான் வாசித்து எனது வ்யாசத்தில் பகிர்ந்துள்ளேன்.

  மூல காவ்யத்த்திற்கும் இன்று புழக்கத்தில் இருக்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் மத்தியில் இடைச்செருகல்கள் உண்டு என்பது வாஸ்தவமே. ஆனால் அவை மூலகாவ்யத்தை ஒட்டு மொத்தமாகச் சிதைத்து இன்று புழக்கத்தில் இருக்கும் நூல் பொய்க்கதை என்று சொல்லுமளவுக்கு ப்ரபாவம் உள்ளதாக எந்த ஆய்வும் எந்த ஆய்வாளரும் கருத்துப் பதியவில்லை என்பதனை அவதாரிகையாகச் சொல்லி விடுகிறேன்.

  விரிவான ஆய்வு விஷயங்கள் நான் கு பாகங்களிலான என் வ்யாசத்தில் இருக்கின்றன.

  எனது அன்பிற்கு பாத்ரமான அன்பர்களும் நண்பர்களும் என்னால் சமர்ப்பிக்கப்படும் வ்யாசத்தை வாசித்து அதில் உள்ள நிறைகள் மற்றும் குறைகளைப் பகிர்ந்து என் புரிதலையும் நம் புரிதலையும் இந்த விஷயம் சார்ந்து மேலும் மேம்படுத்துமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 16. Avatar
  ஷாலி says:

  //தெய்வீகத் தேவ மகன் இராமன் சாதாரண ராஜா, ராணிக்குப் பிறந்தவன் தானே.//

  அய்யா திரு.ஜெயபாரதன் அவர்களே! இராமன் ஜனகருக்குத்தான் பிறந்தானா? என்பதிலும் விவகாரம் வில்லங்கம் இருப்பதாக வால்மீகி ராமயானம் சொல்கிறது.ஜனகனுக்கு பட்டத்து ராணிகள் நான்கு பேர்.அதல்லாமல் அந்தப்புரத்தில் அறுபது ஆயிரம் மனைவிகள் ஆனாலும் ஒருவருக்கும் குழந்தை இல்லை.

  எனவே அந்தக்கால வழமைப்படி அஸ்வமேத யாகம் செய்தனர்.அதன்படி யாகம் நடத்திய அந்தணர்களின் தயவால் யாவும் நலமாக முடிந்தது.இந்தக் கதையை நம்ம கம்பர் கைச்சரக்கு சேர்த்து, யாகத்திலிருந்து பாயாசம் வந்ததாகவும் அதை நான்கு மனைவியரும் பங்கு வைத்து உண்டு, உண்டானதாகவும் தமிழ்ப்படுத்திவிட்டார்.

  ஆனாலும் கம்பன் செய்யத் தவறிய ஒரிஜினல் வால்மிகி ராமாயணத்தை நமது மஹாசயர் ஸ்ரீமான் க்ருஷ்ண குமார் அவர்கள் தங்கள் வ்யாசத்தில், இராமன் பிறப்பின் உண்மையை எழுதுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ராமனின் பிறப்பும் இறப்புவுமே பிரச்சினைக்குரியதாக இருப்பதால் ஸ்ரீமான் க்ருஷ்ணாஜி அவசியம் இதை தீர்க்க வேண்டுகிறேன்.

 17. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ அய்யா திரு.ஜெயபாரதன் அவர்களே! இராமன் ஜனகருக்குத்தான் பிறந்தானா? \ ஜனகனுக்கு பட்டத்து ராணிகள் நான்கு பேர்.அதல்லாமல் அந்தப்புரத்தில் அறுபது ஆயிரம் மனைவிகள் ஆனாலும் ஒருவருக்கும் குழந்தை இல்லை.\

  \ எனவே அந்தக்கால வழமைப்படி அஸ்வமேத யாகம் செய்தனர். \

  ம்………வால்மீகி ராமாயணம் என்ற தலைப்பை வாசித்து விட்டு இதில் சொல்லியுள்ளதாக யார் யாரெல்லாம் அவரவர் மனம் போன படி கதையளப்பார்களோ அதெல்லாம் வால்மீகி ராமாயணம்.

  பொலிக.

  விடிய விடிய ராமாயணம் வாசித்து…………….

  இது ஒரு கருத்து. இந்தக் கருத்துக்கு விசாரம் வேறு வேணும்.

  கற்றோர் சபை கற்றோர் சபை என்று ஒருவர் கூச்சல் போடுவாரே. எங்கே அவர்?

  1. Avatar
   ஷாலி says:

   அன்பு நண்பர் திரு.க்ருஷ்ண குமார் அவர்களே! நான்தான் தவறுதலாக ராமனின் தந்தை ஜனகன் என்று எழுதி விட்டேன்.நீங்களாவது பின்னூட்டத்தில் ஸ்ரீ ராமனின் தந்தை தசரதன் என்று திருத்தியிருக்கலாம்.சான்ஸே தவறவிட்டு விட்டீர்கள்.ஸ்ரீ ராமனின் தந்தை தசரதன் என்பதில் பிரச்சினை வருவதுபோலவே ஜனகனின் மகள் சீதாபிராட்டி பிறப்பிலேயும் தெளிவில்லை.தந்தை யார் என்றே தெரியவில்லை.

   பூமியில் ஒரு குழியில் அல்லது ஒரு பொந்தில் இருந்து ஜனகன் எடுத்து வளர்த்த தாகவே ராமாயணம் கூறுகிறது.ஆக,ஸ்ரீ ராமன்,சீதாபிராட்டி இருவரின் தோற்றமும்,மறைவும் மர்மமாகவே உள்ளது.ஸ்ரீ ராமனுக்காவது பெற்ற தாயார் உள்ளார்.சீதாபிராட்டிக்கு தாயும் தந்தையும் யாரென்று யாருக்கும் தெளிவாக தெரியவில்லை.அன்பர் க்ருஷ்ண குமார் இவ்விசயத்தையும் விசாரம் செய்து விளக்குமாறு வேண்டுகிறேன்.அன்பர் பார்க்கும் க்ருஷ்ணபருந்து பார்வையில் எதுவும் தப்பி விடக்கூடாது என்பதே என் கவலை.

 18. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  அன்புமிக்க ஷாலி அவர்களே,

  திரு. கிருஷ்ணகுமார்ஜிடம் மூன்று முறை கேட்டேன், இராம பிரானும், சீதா தேவியும் எப்படி இறந்தார் என்று. அவர் தன் புதிய என்சைக்ளோபீடியாவை நுணுகி, நுணுகி நோக்கி வருகிறார்.
  திண்ணையில் அவரது முதல் கட்டுரைக்கு அதிக வரவேற்பு இல்லாமல் போகவே, அவர் இப்போது தமிழ்ஹிந்து வலைக்கு http://www.tamilhindu.com/2014/01/ramayana-research-in-birds-view-1/ தாவி உலாவப் போய்விட்டார்.
  என் சீதாயணம் நாடகத்தைச் சிறப்பாக அதில் பரப்பி வரும் கிருஷ்ணகுமாருக்கு கோட்டி,கோடி நன்றிகள்.
  சி. ஜெயபாரதன்

 19. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  ஸ்ரீமான் ஜெயபாரதன், நான் முதலில் சொல்லிய படி முதல் தொகுப்பு எடுத்துக்கொண்ட விஷயம் – மூல நூலான வால்மீகி ராமாயணம் பிற்காலத்தில் ஏற்பட்ட இடைச்செருகல்களால் பொய்க்கதையாக ஆகிப்போனது என்று தாங்கள் அடித்துவிட்ட சமாசாரம்.

  எந்த விஷயத்தையும் அடிப்படை புரிதல் கூட இல்லாது அடித்து விடுதல் உங்களுக்கு புதிது இல்லை. ஆகவே ஆய்வாளர்கள் இது விஷயம் என்ன சொல்கிறார்கள் என்பதை விசாரம் செய்யு முகமாக முதல் தொகுப்பு.

  உங்கள் கேழ்விகள் இரண்டாம் தொகுப்பில் முழுமையாக விசாரிக்கப் படும். பொறுமை காக்க.

  தமிழ் ஹிந்து தளத்திலும் தாங்கள் கருத்துக்கள் பகிர்ந்துள்ளீர்கள். எனக்கு நினைவு இருக்கிறது. அங்கு உங்கள் அலக்கியம் விமர்சிக்கப் படுவதில் உங்களுக்கு அச்சமா. என் உத்தரங்களில் இதை முன்னமே பகிர்ந்து இருக்கிறேனே

  உங்களுடைய அலக்கிய படைப்பு விசாரிக்கப் படப்போவது இரண்டாம் தொகுப்பில்.

 20. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  திரு. கிருஷ்ணகுமார்,

  இதுவரை 45 பேருக்கு மேல் தமிழ்ஹிந்து வாசகர் சீதாயணம் நாடகத்தைக் கடந்த ஐந்து நாட்களில் படித்துள்ளார். யாரும் அதைத் திறனாய்வு செய்ய வில்லை.

  இராம பக்தர்கள் உங்களுக்குப் புகழாரம் சூட்டுவதில் பெரும் வியப்பில்லை.

  சி. ஜெயபாரதன்

 21. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ இதுவரை 45 பேருக்கு மேல் தமிழ்ஹிந்து வாசகர் சீதாயணம் நாடகத்தைக் கடந்த ஐந்து நாட்களில் படித்துள்ளார். யாரும் அதைத் திறனாய்வு செய்ய வில்லை.\

  ஸ்ரீமான் ஜெயபாரதன், க்ஷமிக்கவும். *சீதாயணம்* என்ற அலக்கியத்தில் *ஆய்வு* செய்ய ஏதும் இல்லை. அதில் உள்ள குறைகளை பட்டியலிடுவதற்கு *திறன்* என்று ஏதும் தேவை இல்லை. அடிப்படைப் புரிதலும் அடிப்படை வாசிப்புமே உங்கள் படைப்பை அலக்கியம் என்று சுட்ட போதுமானது. *கேடுகெட்ட வண்ணான்* குரங்கு விஷயம்……. இத்யாதிகள்……..என்று தாங்கள் அடித்து விடும் விஷயங்கள் *பாட்டி கதை* *காழ்ப்புக் கதை* என்பதை ஒரு முறையாவது ராமாயணம் வாசித்தவரே அறிவரே.

  ம்……..ஐயா, தமிழில் முறையாக எழுதவும் தெரியாத நான் எந்தப் புகழாரத்திற்காகவும் என் வ்யாசத்தொடரை சமர்ப்பிக்கவில்லை. பொதுதளத்தில் எந்த ஆதாரமும் இன்றி வைக்கப்பட்ட கருத்துக்கள் பிறழ்வானவை என்று நான் திண்ணமாக அறிந்த படிக்கு…….. முறையான ஆதாரங்களை என் தரப்பிலிருந்து பொதுதளத்தில் மீண்டும் முன்வைக்குமுகமாக மட்டிலும் என் வ்யாசத் தொடர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

  விஷயத்தில் ஆர்வம் உள்ள அன்பர்களை இந்த வ்யாசத் தொடர் சென்று அடைந்துள்ளது என்பதே எனக்கு நிறைவை அளிக்கும் விஷயம்.

  எனக்கு உங்கள் விக்ஞானம் சார்ந்த வ்யாசங்கள் மட்டிலும் போதும்.

  இந்த அலக்கியத்தின் வ்யாஜமாக ராமாயணத்தின் பல பகுதிகளை வாசிக்க நேர்ந்தமைக்கு நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   திரு. கிருஷ்ண குமார்,

   சீதை உயிரைப் போக்கிக் கொள்ள முக்கிய காரணியான தேவன் இராமனும், நாரீமணி சீதையும் எப்படி இறந்தார் என்று இன்னும் சொல்லாமல் ஏன் தாமதிக்கிறீர் ?

   சி. ஜெயபாரதன்.

 22. Avatar
  paandiyan says:

  அது தவிர இந்து மத விரோதியான கி.வீரமணியின் பாராட்டுக்குப் பாத்திரமாகி வீரமணியின் விஷம் கக்கும் செயலுக்கு உடந்தையாக இருந்து வருவதைப் பெருமையுடன் காண்பித்திருக்கிறார் தமது தளத்தில்: http://jayabarathan.wordpress.com/seethayanam/#comment-116105

  திரு. ஜெயபாரதன் அவர்கள்,

  வணக்கம். தங்களது மின்அஞ்சல் கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி!

  துணிச்சலான தங்களது ‘சீதாயணம்’ ஒரு புதிய சிந்தனை. இராமாயணம் நடந்த கதை என்பதை எங்களைப் போன்றவர்களால் ஏற்க முடியாது என்றபோதிலும், தங்களது கருத்து வடிவம், எழுத்து நடை எல்லாம் அணுசக்தி விஞ்ஞானியாக இருந்துள்ள நிலையில் இவ்வளவு சிறப்புடன் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

  அந்நூல்பற்றி நான் விரைவில் சென்னை பெரியார் திடலில் வாரந்தோறும் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் விளக்கி உரையாற்றவிருக்கிறேன்.

  நிறைய இதுபோல் சுதந்திர சிந்தனையுடன் எழுதுங்கள்.

  இங்கு வரும்போது பெரியார் கல்வி நிறுவனங்களுக்கும் வந்து பாருங்கள்.

  தங்களன்புள்ள,
  கி.வீரமணி

  SOURCE : TAMILHINDU

 23. Avatar
  ஷாலி says:

  நண்பர் பாண்டியன் போன்றவர்கள் கூட ஹிந்து மதத்திற்கு எதிராக கருத்துரை பரப்ப காரணமாகலாம் என்பதை அவர் பின்னூட்டமிட்ட திரு.கி.வீரமணியின் கடிதம் மூலம் தெரிந்து கொண்டேன். நண்பர் பாண்டியனுக்கு நன்றி! நன்றி!! ஆக, பெரியார் திடலிலும்,தமிழ்இந்து தளத்திலும் பேசப்படும் பொருளாக மாறிய ‘சீதாயணம்’திரு.ஜெயபாரதனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

 24. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  மிக்க நன்றி, பாண்டியன் அவர்களே.

  சீதாயணத்தை ஆக்க வழியில் பரப்பி வருகிறீர் !!!

  பாருங்கள், என் சீதாயணம் நாடகம் திரு. கி. வீரமணி போன்ற சிந்தனையாளரால் வரவேற்கப் படுகிறது.

  இராமனைத் தேவனாக எடுத்துக் கொள்வதால் இந்தியாவில் தொடர்ந்து மதக் கலவரங்கள் நிகழ வாய்ப்புள்ளன.

  இராமனை வெறும் மனிதனாக ஏற்றுக் கொண்டால், நாட்டில் மதச் சண்டைகள் குறைவு.

  இராம பக்தர் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் உரிமை

  சீதாயண நாடகத்தை நான் வடித்ததின் முக்கிய காரணம் : இராமன் குறை, நிறையுடைய ஒரு மானிட வேந்தன் என்பதே.

  சி. ஜெயபாரதன்

 25. Avatar
  IIM Ganapathi Raman says:

  பாண்டியனுக்கு பாராட்டுக்கள்.

  வீரமணி எவராகவாவது இருக்கட்டும். அம்மடலில் கருத்துக்கள் சரியே.

  சீதாயாணம் எழுத‌ துணிவும் சுதந்திர சிந்தனையும் வேண்டும். சுதந்திர சிந்தனையை பழமைவாதிகளில் கூட்டம் எக்காலத்திலும் அழிக்கத்தான் பார்க்கும். சுதந்திர சிந்தனையாளர்களை எரித்துக்கொள்ளும். கலிலியோவை ரோமானிய சர்ச் கொன்றது போல. இந்துமதத்தில் முன்பு அப்படி கிடையாது. இப்போது அத்தாலிபானித்தனம் வரவேற்கப்படுகிறது சிலரால்.

  திண்ணை போன்ற இணைய இதழ்களில் சீதாயாணம் வெளிவந்தபடியால், பொதுமக்களுக்குத் தெரியவில்லை. நூலவடிவில் வந்தால் நன்று. விமர்சனங்களைப்பலரும் எழுதுவார்கள். கண்டிப்பாக அவற்றுள் பல – இந்துக்களிடமிருந்தே வரும். அது வீரமணி சொன்னதைப்போலவே வரும் என்பது திண்ணம்.

  இராமாயாணம் என்று ஒன்றிருந்தால் சீதாயாணம் ஒன்று எப்போதே எழுதப்பட்டிருக்கவேண்டும். சீதையில் நிலையிலிருந்து அக்காவியம் சொல்லப்படவேண்டும். Better late than never!

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   நண்பர் கணபதி இராமன்,

   சீதாயணம் நூல் வடிவில் 2012 ஆகஸ்டில் சென்னை தாரிணி பதிப்பக வெளியீடாக வையவன் செய்துள்ளார்.

   ஃபோன் : 99401 20341

   என் சீதாயணம் நாடகத்தை வலை உலகில் தொடர்ந்து பரப்பி வருபவர் திருவாளர். கிருஷ்ண குமார்ரும், பாண்டியனாரும்தான்.

   என் நூலை அவர்கள் இகழ,இகழ அதன் மதிப்பீடு மிகை யாகிறது.

   சி. ஜெயபாரதன்.

   1. Avatar
    IIM Ganapathi Raman says:

    No you are wrong. It should stand on its own merits. Not on negative publicity. Let the masses decide. Hopefully, they will have to accept if a female perspective is offered to them.

    சில பிரதிகளை விமர்சங்களை எழுதும் தமிழ்ப்பத்திரிக்கைகள் அனைத்திற்குமே அனுப்பிவிடுங்கள்.

 26. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  சி. ஜெயபாரதன் சொல்கிறார்:

  From: veeramani k
  Date: 11 June 2013 16:40
  Subject:
  To: “vannan.1935@gmail.com”

  Dear Thiru K.V. Vannan,

  Vanakkam. Happy to receive your mail along with Mr.S.JayaBarathan.
  It is really very enjoyable to hear from a old friend and that too as an alumni of Annamalai University.

  Please furnish more details about your present position, residence etc.

  We enjoyed JayaBarathan’s ‘Seethayanam’ – a very original, bold thinking. We appreciate it inspite of some of the disagreeable aspects in it.

  Really it is a new approach to the literary world.

  We are to give prominent coverage for the book in ‘Periyar Library reader’s circle’ which is a popular association – an organization conducting weekly meetings regularly.

  With kind regards,

  Yours fraternally,
  K. Veeramani

 27. Avatar
  புனைப்பெயரில் says:

  இங்கு வரும்போது பெரியார் கல்வி நிறுவனங்களுக்கும் வந்து பாருங்கள்.
  தங்களன்புள்ள,
  கி.வீரமணி –> அப்படி சந்தித்தால், அந்த நிறுவனங்கள் யார் வீட்டு காசில் கட்டப்பட்டு யார் வீட்டு வாரிசுகள் அதில் கொழிக்கின்றன என்றும் வீரர் ஜெயபாரதன் கேட்கலாம், வீரமணியிடம்.
  பாப்பான் என்று பழித்துப் பேசியே பேங்க் பேலன்ஸ் ஏற்றும் எத்தர் கூட்டம் அது என்று புரிந்தால், விஞ்ஞானியின் மனது விசாலமானது என்று அறியப்படும்.
  இந்துமத நம்பிக்கைகளை தூற்றி வயிர் நிரப்பும் கும்பல் அது. எங்கே வீரர்கள் இல்லையென்றால், ஹஜ் போகும் கூட்டம் முன் கடவுள் இல்லையென்று கோஷம் போட்டு பார்க்கட்டுமே….

 28. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ சீதாயாணம் எழுத‌ துணிவும் சுதந்திர சிந்தனையும் வேண்டும். சுதந்திர சிந்தனையை பழமைவாதிகளில் கூட்டம் எக்காலத்திலும் அழிக்கத்தான் பார்க்கும். \

  அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ,

  பேத்தல்.

  என்னுடைய ஒரு உத்தரத்தில் கூட ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் இந்த அலக்கியத்தை எழுதுவதற்கான உரிமை பற்றி கேழ்வி எழுப்பியது கிடையாது. இந்த தளத்திலாவது அல்லது தமிழ் ஹிந்து தளத்திலாவது ஸ்ரீமான் ஜெயபாரதனுக்கு சீதாயணம் என்ற அலக்கியத்தை எழுதுவதற்கான உரிமையை நானோ அல்லது வேறு எந்த நபர்களோ கேழ்விக்கு உட்படுத்தியிருந்தால் …… மிகக் குறிப்பாக உத்தரத்தைச் சுட்டவும்.

  ஜெயபாரதனுக்குப் பாலாபிஷேகம் செய்யும் கும்பல் போல சீதாயணத்துக்கு அல்லேலூயா பாடத் தயாராக இருப்பவர்கள் அதை மட்டிலும் செய்வர்.

  என்னுடைய விமர்சனங்களில் சீதாயணம் என்ற அலக்கியத்தைப் பற்றிய குறைகள் மட்டிலும் பகிரப்படவில்லை. அதிலுள்ள நிறைகளும் என்னால் பகிரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் அது பதிவும் ஆகியுள்ளது. வாசித்துப்பார்க்கவும்.

  \ நூலவடிவில் வந்தால் நன்று. \

  நூல் வடிவில் இந்த அலக்கியம் ஏற்கனவே ப்ரசுரிக்கப்பட்டுள்ளது என்பது என் புரிதல். ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் விளக்கமளிக்கலாம்.

  \ இராமாயாணம் என்று ஒன்றிருந்தால் சீதாயாணம் ஒன்று எப்போதே எழுதப்பட்டிருக்கவேண்டும். சீதையில் நிலையிலிருந்து அக்காவியம் சொல்லப்படவேண்டும். \

  சீதாயணம் என்ற அலக்கியம் சீதையின் நிலையிலிருந்து எழுதப்பட்டிருந்தால் ஸ்ரீமான் ஜெயபாரதன் சீதையை கொலை செய்திருக்க மாட்டார். எப்படி இந்த்ரஜித் மாயாசீதையை வாளால் கொலை செய்தானோ…… அப்படியே தீரா விட அசுர சக்திகளால் கொண்டாடப்படும் ஸ்ரீமான் ஜெயபாரதன் சீதையைக் கொலை செய்துள்ளார். இந்தக் கந்தற கோள அலக்கியத்தை சீதையின் நிலையில் இருந்து எழுதியதாகச் சொல்வது வெட்கம். வெட்கம். மஹாகவிகளான பவபூதி மற்றும் பல உத்தரராமாயணத்தை சீதையின் நிலையில் இருந்து எழுதிய உண்மையான கவிகளுக்கு செய்யும் இழிவு.

  ம்………… எதை வேண்டுமானாலும் பேத்துவதற்கு ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு உரிமை உண்டே. வேண்டுமானால் முக்கோணத்துக்கு நான்கு கோணம் மற்றும் சதுரத்திற்கு மூன்று கோணம் என்று புஸ்தகம் எழுதினால் — பேத்தல்களுக்கு ஆதரவு அளிப்பதையே வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்ட தீரா விட கும்பல் இதைக் கூடப் போற்றலாமே.

  இவருக்குப் பாலாபிஷேகம் செய்யும் கும்பல் இவருக்கு இதற்கும் கூட பாலாபிஷேகம் செய்யலாமே.

  துப்பாக்கி குண்டுகளால் காந்தியை ஸ்ரீ நாதுராம் கோட்சே செய்த கொலை என்ன கொலை……. என தனது ஜபர்தஸ்தியான ஆப்ரஹாமிய பித்தலாட்ட மதமாற்றக்கருத்துக்களுக்கு கூசாமல் ஆதரவு அளித்து மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசத்தில் காந்தியடிகளை…… பித்தலாட்ட க்றைஸ்தவ மதமாற்றத்துக்கு எதிரான அவரது கருத்துக்களை கொலை செய்வது மூலமாக……. ஸ்ரீமான் ஜெயபாரதன் கொலை செய்துள்ளார்.

  சீதையின் நிலையில் சீதாயணம் எழுதப்பட்டிருந்தால் ஸ்ரீமான் ஜெயபாரதன் சீதாபிராட்டியின் மூலம் நீதி பேசி ராமபிரானுடன் சீதையை தன் குழந்தைகளுடன் சேர்த்திருக்க வேண்டும்.

  ஜெயபாரதன் சீதையின் நிலையில் சீதாயணம் எழுதவில்லை. மிஷ நரியின் நிலையில் சீதையையும் ராமனையும் இழிவு செய்ய இந்த அலக்கியத்தை எழுதியுள்ளார்.

  இவருக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாத வால்மீகி ராமாயணம் என்ற நூலில் சொல்லாத விஷயங்களைச் சொன்னதாக புளுகு மூட்டைகளை உதிர்த்துள்ளார். *கேடு கெட்ட வண்ணான்* என்று தன் உரைநடையை உதிர்த்துப்போட்ட கவிதை என்ற கழுதையில் பாட்டிகதையை பகிர்ந்துள்ளார். எந்த ராமாயணத்தில் இது சொல்லப்பட்டுள்ளது. முகமூடி சுவிசேஷப்படையினர் இது வரை ஒரு ஸ்லோகம் கூட சுட்ட இயலாது ஆனால் விடாது ஜெபம் பண்ணும் பௌத்த ராமாயணத்திலா அல்லது ஜின ராமாயணத்திலா? இந்தக் கந்தறகோள கவிதை அல்லது கழுதை ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது புனைவு என்றால் அதில் *கேடு கெட்ட விக்ஞானி* என்று போட்டிருக்கலாமே.

  ஜெயபாரதன் எப்போது தான் எழுதும் பேத்தல் வ்யாசங்களைப் படிப்பவர்கள் அடிமுட்டாள்கள் என்று கருதாது……. தான் அடித்து விடும் புளுகு மூட்டைகளை விடுத்து ………ஒரு விஷயத்தை எழுது முன்னர் முதலில் அடிப்படையாக அந்த விஷயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்?

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   ////சீதையின் நிலையில் சீதாயணம் எழுதப்பட்டிருந்தால் ஸ்ரீமான் ஜெயபாரதன் சீதாபிராட்டியின் மூலம் நீதி பேசி ராம பிரானுடன் சீதையை தன் குழந்தைகளுடன் சேர்த்திருக்க வேண்டும்.////

   என் சீதாயண நாடகத்தை வெறுக்கும் திரு. கிருஷ்ண குமார், தான் விரும்பும் ஒரு சீதாவைப் படைத்து, ஒரு புது இடைச் செருகளை தன் இராமாயணத்தில் நுழைக்கிறார்.

   இப்படித்தான் வால்மீகி மூல இராமாயணம் பலரால், பன்முறை மாற்றப் பட்டு சிதைந்து போயுள்ளது.

   சி. ஜெயபாரதன்

 29. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  ///இந்தக் கந்தறகோள கவிதை அல்லது கழுதை ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது புனைவு என்றால் அதில் *கேடு கெட்ட விக்ஞானி* என்று போட்டிருக்கலாமே.

  ஜெயபாரதன் எப்போது தான் எழுதும் பேத்தல் வ்யாசங்களைப் படிப்பவர்கள் அடிமுட்டாள்கள் என்று கருதாது……. தான் அடித்து விடும் புளுகு மூட்டைகளை விடுத்து ………ஒரு விஷயத்தை எழுது முன்னர் முதலில் அடிப்படையாக அந்த விஷயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்? ///

  மிகவும் திமிரான எழுத்து. அநாகரீகப் போக்கு. அவர் யார் நான் எப்படி எழுத வேண்டும் என்று அழுத்திச் சொல்ல ?

  திரு. கிருஷ்ணகுமார் ஒரு தாலிபான் போல் மிரட்டலுடன், கர்வமுடன் அவரது மூர்க்க குணத்தை தன் ஆவேச எழுத்தில் காட்டுகிறார்.

  சீதாயண நாடகம் தமிழ்வலை உலக மெங்கும் பரவி விட்டது.

  அவர் ஒரே மாவைத் திருப்பித் திருப்பி அரைக்கிறார் !!!

  சீதையும், இராமனும் எப்படிச் செத்தார் என்று இதுவரைச் சொல்லாமல் செக்கு மாடு போல் சுற்றிச் சுற்றி வருகிறார்.

  சி. ஜெயபாரதன்

 30. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  இராமன் அவதார தேவன் இல்லை என்னும் என் சீதாயண நாடகம் தமிழ் வலை இணைத்த உலகெங்கும் பரவி விட்டது. யாரும் அதைத் தடுக்க முடியாது ! அழிக்கவும் முடியாது.

  சி. ஜெயபாரதன்.

  1. Avatar
   புனைப்பெயரில் says:

   ஆம் ஜெயபாரதன், காந்தியை கொன்றவன் பெயர், இயேசுவை காட்டிக் கொடுத்தவன் பெயர், சீசரை முதுகில் குத்தியவன் பெயர், கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தவன் பெயர், ஏஞ்சல்களின் எதிரணியின் பெயர், நன்றின் எதிர்ப்பதம், சுத்தத்தின் எதிர்ப்பதம் இவையெல்லாம் காலத்தால் மறக்கப்படாது, அழிக்கப்படாது. அது போல் தான் ராமனுக்கு செருப்பு மாலை போட்டவர்கள், அவரை இகழ்ந்து பிதற்றி இதிகாசம் என்று மமதை போதை கொண்ட உங்கள் நிலையும். அஹம் பிரம்மாஸ்மி தத்துவத்தில் நீங்களே உங்களின் நல்லெண்ண ஒட்டிய சதவிகிதம் கடவுள் தான். சீதையிருக்கட்டும், நீங்கள் உங்கள் மனையாளை எப்படி நடத்தீனீர்கள் என்று சுய பரிசோதனை செய்யுங்கள்.. அதில் உங்களின் இறைத்தன்மை எத்தனை சதவிகிதம் என்று மனமறியும். அதுவே இந்துமதத் தத்த்துவ நிலை. நான் இந்து. நானே கடவுள் என்னுள் கடவுள் என நினைப்பவன். உங்களிடமிருக்கும் சாத்தானின் சதவிகிதம் ஆட்டம் போடுவதால் நீங்கள் இப்படி உள்ளீர்கள். ஒரு நாள் உணர்வீர்கள்.

   1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    புனை பெயராரே,

    ஒளிந்து கொண்டு இராமனைப் போல வாலி மீது அம்பு ஏவாமல், முதலில் நீர் மெய்யான “மனிதன்” என்பதற்கு உங்கள் முகத்தையோ, அல்லது உண்மைப் பெயரையோ திண்ணை வாசகருக்குக் காட்டுங்கள்.

    அறிஞரே! நீங்கள் முதலில் உங்களை சுய பரிசோதனை செய்யுங்கள்

    ///நீங்கள் உங்கள் மனையாளை எப்படி நடத்தீனீர்கள் என்று சுய பரிசோதனை செய்யுங்கள்.///

    உமது இராமபிரான் தன்னருமை மனைவி கர்ப்பவதியைக் காட்டுக்கு அனுப்பியது போல் எவனும் தாலி கட்டிய மனைவியைக் காட்டு விரட்ட மாட்டான்.

    நெஞ்சில் உரமுமின்றி
    நேர்மைத் திறமுமின்றி
    வஞ்சனை செய்வாரடி – கிளியே
    வாய்ச் சொல்லில் வீரரடி

    சி. ஜெயபாரதன்

   2. Avatar
    IIM Ganapathi Raman says:

    // அதில் உங்களின் இறைத்தன்மை எத்தனை சதவிகிதம் என்று மனமறியும். அதுவே இந்துமதத் தத்த்துவ நிலை. நான் இந்து. நானே கடவுள் என்னுள் கடவுள் என நினைப்பவன். //

    இந்துமதத்தின் சித்தாந்தங்கள் பலபல. அவற்றுள் ஒன்றான சங்கரர் பிரிவு மட்டுமே “நானே கடவுள்”என்று சொல்கிறது. அதையெல்லா இந்துப்பிரிவுகளும் ஏற்பதில்லை. சங்கரரின் கொள்கையை நிராகரித்தோர் கோடானுகோடி வரலாற்றில். உங்கள் பிரிவு சார்பாக மட்டுமே பேசலாம்.

    ஜயபாரதனின் குடும்ப நபரை இங்கு குறிப்பிட்டுச்சொல்லி, ஜயபாரதனையும் இராமனையும் ஒரே தட்டில் வைத்துப்பார்ப்பதூ ஜயபாரதனின் “”இராமன் மானுடனே’என்ற கொள்கைக்கு வெண்சாமரம் வீசுவது.
    ஒரு முறைக்கு இருமுறை தான் எழுதியதைப்படித்தபின் என்டர் பண்ணினால் இத்தவறுகள் நேரா.

 31. Avatar
  ஷாலி says:

  //இந்தக் கந்தறகோள கவிதை அல்லது கழுதை ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது புனைவு என்றால் அதில் *கேடு கெட்ட விக்ஞானி…….//

  திரு.க்ருஷ்ண குமார் அவர்களே! இது என்ன எழுத்து கேடுகெட்ட எழுத்து…ஆட்டை கழுதையாக்கலாம்,நரியை பரியாக்கலாம் நீங்கள் மனிதரை கழுதையாக்கும் மாமுனி என்று தெரிகிறது.எந்த எழுத்திலும் மனிதம் இருக்க வேண்டும்.மிருகம் எழுதியதாக இருக்கக்கூடாது.மனிதர்கள் பல சிந்தனையுடன் படைக்கப்பட்டுள்ளனர்.எல்லோரையும் உம்பக்கம் இழுக்க ஆசைப்படுவது அடி முட்டாள்தனம்.இனியாவது நா…காக்க! காய் கவர்ந்தற்று

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   தம் கருத்தின் மீது நம்பிக்கையில்லாமல் எழுதுவோர் இப்படி எதிர்தரப்பாளியை தனிநபர் காழ்ப்புணர்ச்சியோடு கெட்ட சொற்களால் அர்ச்சிப்பர். அஃது அவர்கள் கருத்திலிருந்து மற்றவர் பார்வையை திசை திருப்ப உதவுமென அவர்கள் நினைக்கிறார்கள். கருத்துக்கு கருத்தை வாதமாக வைக்கவியலாமல் தனிநபர்களை தரக்குறைவாக எழுதுகிறார் கிருஸணகுமார்.

   கற்றகல்வியும் தனிநபர் நற்பண்பும் ஒன்றாகத்தான் செல்லும். இல்லாவிட்டால் அது கல்வியன்று; வேஷம்.

 32. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்

  முக்கோணத்துக்கு நாலு கோணம் என்றும் சதுரத்துக்கு மூன்று கோணம் என்றும் நீங்கள் எழுதிவிட்டு அதில் உள்ள அவலத்தை ஒருவர் சுட்டிக்காட்டினால்,

  அதைத் திமிரான எழுத்து அநாகரீகப்போக்கு என்று சொல்வீர்களா?

  \ அவர் யார் நான் எப்படி எழுத வேண்டும் என்று அழுத்திச் சொல்ல? \

  என்று சொல்வீர்களா?

  *கேடுகெட்ட வண்ணான்* என்று வால்மீகி ராமாயணத்தின் எந்த சர்க்கத்தில் எந்த ச்லோகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று இந்த தளத்து வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா? அப்படித் தெரிவிக்க முனைந்தால் நீங்கள் அறிவு பூர்வமான ஒரு விவாதத்தில் நம்பிக்கை உடையவர் என்று கருதப்படும்.

  சீதாபிராட்டியின் மீது அபவாதம் சொன்னது கேடுகெட்ட செயல் என்று நீங்கள் கருதுவது புரிகிறது. அந்தக் கேடுகெட்ட செயலை செய்ததான ஒரு பழியை எதற்காக ஒரு வண்ணான் மீது போடுகிறீர்கள்?

  கேடு கெட்ட வண்ணான் என்று ஆதாரம் இல்லாத செய்தியை எந்த ஒரு தயக்கமும் இல்லாது உரைநடையை உதிர்த்துப் போட்ட கவிதை என்ற கழுதையின் மீது சுமர்த்திய உங்கள் செயல் ந்யாயமானது என்றால் வண்ணான் என்ற பதத்திற்குப் பதில் விக்ஞானி என்ற பதம் அங்கு மாற்றப்பட்டால் எந்த கோபாவேசமும் வரக்கூடாது.

  வண்ணான் ஒரு கேடுகெட்ட செயலை செய்ய முடியும் என்று விக்ஞானியாகிய நீங்கள் ……….

  எந்த ஒரு *திமிரில்* எந்த ஒரு ராமாயணத்திலும் சொல்லப்படாத செய்தியை *கேடு கெட்ட வண்ணான்* என்று கூறினீர்கள் என்று கண்டிப்பாகப் பொது தளத்தில் உங்கள் அறியாமையை பறை சாற்றுவது கேழ்விக்கு உட்படுத்தப்படும் ஐயா.

  எந்த ஒரு விஷயத்தைப்பற்றியும் அடிப்படைப்புரிதல் கூட இல்லாது மதக்காழ்ப்புகளையே பேத்தல்களையே வ்யாசங்களாகவும் நாடகங்களாகவும் எழுதுவது உங்கள் உரிமையே. உங்களை வாசிக்கும் வாசகர்களை அடிமுட்டாள்கள் என்று கருதுவதால் தானே அப்படி எழுத முடியும். ஆனால் நீங்கள் எழுதும் புளுகு மூட்டைகள் தோய்த்து வெளுத்துக் காயப்போடப்படும் என்பதனை மறவாதீர்கள்

  உண்மையில் நீங்கள் வால்மீகி ராமாயணம் என்ற க்ரந்தத்தையோ அல்லது நீங்கள் அனுபந்தமாகக் கொடுத்த நூற்களையோ அதன் தலைப்பைத் தவிர வேறொன்றையும் வாசிக்கவில்லை என்பதனையே உங்கள் உத்தரங்கள் தெரிவிக்கின்றன.

  இந்த்ரஜித் என்ற அசுரன் மாயாசீதையை வாளால் வெட்டியது போன்று நீங்கள் உருக்குலைத்தை மாயாசீதையை நீங்கள் கொலை செய்திருக்கிறீர்கள். ஆனால் ராமாயணத்தில் சீதை எப்படிச் செத்தாள் என்று நீங்கள் கேழ்வி கேட்டிருப்பதிலிருந்தே நீங்கள் உங்களால் கொடுக்கப்பட்ட எந்த ஒரு நூலையும் தலைப்பையன்றி வேறு ஏதும் வாசிக்கவில்லை என்ற செய்தியை மதில் மீது ஏறி பொது தளத்தில் உரக்கக் கூவுகிறீர்கள்.

  சீதாபிராட்டியின் அந்தர்தானம் (இறப்பு அல்ல) மட்டுமல்ல ஐயா, மற்றும் நீங்கள் பேத்தியுள்ள பேத்தல்கள் உளறல்கள் மற்றும் புளுகு மூட்டைகளை ஒவ்வொரு விஷயமாகப் பொது தளத்தில் எனது அடுத்த வ்யாசத்தொடர் அம்பலமாக்கும் ஐயன்மீர். ஒவ்வொரு விஷயமும் அதனுடைய முழுப்பரிமாணத்துடன் வைக்கப்பட வேண்டும் என்பது என் ப்ரயாசையாதலால் அள்ளித்தெளித்த கோலமாக உங்கள் பினாத்தல்களுக்கு ஒரு வரி அரைவரியில் உத்தரமளிக்க இப்போது விழையவில்லை என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்.

 33. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  திரு. கிருஷ்ணகுமார், ஒரே மாவைத் திருப்பித் திருப்பி, திருப்பி அரைக்கிறார் !!!

  சீதா மீது அவதூறு பேசிய வண்ணான் மீது கோபப் படாமல் எழுதிய என் மீது ஏன் ஆவேச நர்த்தனம் ஆடுகிறார் ?

  பெரியவாளுக்கு கோபம் ஏன் பொத்துக் கொண்டு வருது ? உண்மை கசக்கும். தாங்கிக் கொள்ளுங்கள்.

  யாகாவா ராயினும் நாகாக்க வேண்டும் ! சினம் காப்பது அவசியம்.

  சீதையும், இராமனும் எப்படிச் செத்தார் என்று இதுவரைச் சொல்லாமல் செக்கு மாடு போல் சுற்றிச் சுற்றி வருகிறார்.

  சி. ஜெயபாரதன்

 34. Avatar
  ஷாலி says:

  //*கேடுகெட்ட வண்ணான்* என்று வால்மீகி ராமாயணத்தின் எந்த சர்க்கத்தில் எந்த ச்லோகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று இந்த தளத்து வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா? அப்படித் தெரிவிக்க முனைந்தால் நீங்கள் அறிவு பூர்வமான ஒரு விவாதத்தில் நம்பிக்கை உடையவர் என்று கருதப்படும்.//

  ஐயா! அறிவுத் திரு.க்ருஷ்ணகுமார் அவர்களே? திரு.ஜெயபாரதன் கேட்ட கேள்விக்கு இன்னும் சான்று கொடுக்கவில்லை. கேடுகெட்ட வண்ணானை பிடித்துக்கொண்டு வெளுக்கிறீர்!
  வால்மீகி ராமயாணப்படி அவன் கேடுகெட்ட வண்ணான்தான். ஸ்ரீ ராமன் விஷ்ணுவின் அவதாரம்.சீதாதேவி லட்சுமியின் அம்சம்.இருவரும் தெய்வ புருஷர்கள் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். வால்மீகியும் பல இடங்களில் தெய்வத்தன்மையுடன் விளிப்பதாக கூறுகிறீர்கள்.
  தெய்வாம்சம் பொருந்திய சீதை விதிப்படி இராவணனுடன் சிறைப்பட்ட காரணத்தால் அவள் கற்பு கலங்கப்படுமோ? அப்படி நினைப்பவன் நல்லமனிதனாக இருக்க முடியுமா?கெட்ட சிந்தனை உள்ள கேடுகெட்டவனாகாவே இருக்க முடியும். தனது நாட்டு பட்டத்து ராணி சீதையை சந்தேகிப்பவனை க்ருஷ்ணகுமார் புகழ்ந்து வண்ணான் எளக்கியம் படைக்கட்டும்.”கேடுகெட்ட” என்ற எழுத்தை பிடித்துக்கொண்டு அற்பத்தனமாக வாதிடுவது கோயாபல்ஸ் தனமாகவே தெரிகிறது.

 35. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  இந்து மகா சமுத்திரத்தில் என் சீதாயண நாடகம் ஒரு சிறு அலையைக் கூட உண்டாக்காது. அஞ்ச வேண்டாம் இராம பக்தர்களே.

  மாற்றுக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கட்டாய மில்லை. நேர்மைக் கருத்துக்கள் என்று கருதப் படுபவை மூர்க்கத்தன மானவையாய் இருக்கலாம்.

  ஆகாய விமானத்தைப் படைத்தவன் ஓர் இன்பியல்வாதி [Optimist]
  பாராசூட்டைக் கண்டுபிடித்தவன் ஒரு துன்பியல்வாதி [Pessimist].

  நேர்ப்புற, எதிர்ப்புறச் சிந்தனையாளர் இருவரும் நாட்டுக்குத் தேவை, ஆளும் கட்சி, எதிர்க் கட்சி போல்.

  கடவுளே அவ்விதம் இருபுற மனிதராய்ப் படைத்துள்ளார்.

  சி. ஜெயபாரதன்

 36. Avatar
  paandiyan says:

  //கி. வீரமணி போன்ற சிந்தனையாளரால் வரவேற்கப் படுகிறது.
  //

  அதை போல பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்ற கோட்பாடும் உங்கள் எல்லாருக்கும் உடன்பாட?

 37. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ வால்மீகி ராமயாணப்படி அவன் கேடுகெட்ட வண்ணான்தான். \

  இல்லை. என் வசம் உள்ள வால்மீகி ராமாயண கோரக்பூர் பதிப்பு ராமாயண மூலத்தில் அப்படியொரு கருத்து இல்லை.

  பாடபேதமுள்ள ராமாயண மூல நூல் உங்கள் வசம் இருக்குமானால் குறிப்பிட்ட சர்க்கம் மற்றும் ச்லோகத்தின் மூலத்தினை தளத்து வாசகர்களுடன் பகிரவும்.

 38. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ சீதா மீது அவதூறு பேசிய வண்ணான் \

  இது வரை ராமாயணம் பற்றி எழுதப்பட்ட எந்த நூலில் அவ்வாறு எழுதப்பட்டது என்பதனைப் பகிரவும்.

  சீதாபிராட்டியின் மீது நகர மாந்தர்கள் அவதூறு பேசினர் என்று தான் எழுதப்பட்டுள்ளதேயன்றி அதை ஒரு வண்ணான் பேசினான் என்று எழுதப்படவில்லை.

  மதிப்பிற்குறிய ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் ,

  தன் கவிதையில் பொதுவாக கேடுகெட்ட மனிதன் என்று எழுதியிருந்தால் நான் அதை முற்றிலும் ஒப்புக்கொண்டிருப்பேன்.

  அவதூறு சொல்லுதல் என்ற அவச்செயலை எந்த ஆதாரமும் இன்றி மேட்டிமைத் தனமுடன்

  ஒரு “வண்ணான்” மீது சுமத்தலாம் எனில் ஒரு “விக்ஞானி” மீது ஏன் சுமத்த முடியாது என்ற படிக்கு மட்டிலும் தான் என் உத்தரம்.

  இது எவ்வகையிலும் என்றென்றும் எனது மதிப்பிற்குறிய அன்பிற்குறிய ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களை தனிப்பட்ட வகையில் தாக்குவதான உத்தரம் அன்று.

  மேட்டிமை மிக ஆதாரமின்றி அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் பகிர்ந்த கருத்திற்கு பொதுப்படையான மாற்றுக்கருத்து.

 39. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்

  “சீதாபிராட்டியின் மீது நகர மாந்தர்கள் சிலர் அவதூறு பேசினர்” என திருத்தம்

  நான் உங்களது படைப்பான சீதாயணம் பற்றி எழுப்பிய குறிப்பான ஆரோபங்களை முழுமையாக எனது அடுத்த வ்யாசத் தொடரில் விசாரிக்க உள்ளேன்.

  இதற்கு முன் பகுதிகளில் தாங்கள் முன்வைத்த – நான் மாற்றுக்கருத்து கொண்டுள்ள குரங்கு விஷயம், சீதாபிராட்டியின் அந்தர்தானம், தற்போது காரமாக விவாதத்தில் உள்ள “வண்ணான்” விஷயம் – இவற்றில் சில.

  பொத்தாம் பொதுவான பொதுப்புரிதல்களை வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டவை என்று அடித்து விடாது குறிப்பிட்ட காண்டம் குறிப்பிட்ட சர்க்கம் குறிப்பிட்ட ச்லோகம் என்று முழு ஆதாரங்களுடன் மட்டிலும் அல்லாது பொதுவில் புழக்கத்தில் இருக்கும் எந்த வால்மீகி ராமாயணப் பதிப்பைச் சார்ந்தவை எனது ஆதாரங்கள் என மிகக் குறிப்பாக எனது ஆதாரங்களைப் பகிருவேன். விரிவாக இவை விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் உங்கள் வ்யாசத்தில் பின்னூட்டங்களாக இவை இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

  உங்களது படைப்பு கற்பனையல்ல ராமகதையில் *மெய்*யாக நடந்த நிகழ்வு என்று தாங்கள் கருத்துப் பதிந்தமை, மேலும் வால்மீகி ராமாயண நூல் இடைச்செருகல்களால் சிதைந்து பொய்க்கதையானமை, வால்மீகி ராமாயணத்தில் சீதாபிராட்டியின் மீது அவதூறு சொன்னது ஒரு வண்ணான் என்று தாங்கள் கருத்துப்பதிந்தமை – இவற்றுக்கு தங்கள் தரப்பிலிருந்து எந்த ஆதாரங்களும் முன் வைக்கப்படவில்லை. இன்னும் தங்களது படைப்பில் சில ஆக்ஷேபகரமான ஆதாரமற்ற கருத்துக்களும் உள்ளன. அவையும் எனது அடுத்த வ்யாசத் தொடரில் விசாரிக்கப்படும்.

  வால்மீகி ராமாயண நூல் இடைச்செருகல்களுக்கு உட்பட்டது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயமானாலும் இடைச்செருகல்கள் ராமகதையைப் பொய்க்கதையாய் ஆக்கவில்லை என்பதனை – சிறியேன் அல்லேன் – இந்தியவியலாளர்கள் மற்றும் ராமாயணத்தை முறையாக ஆய்வு செய்தவர்கள் மிக ஆழமாக — ஆய்வு செய்து — தங்கள் கருத்தினை பகிர்ந்துள்ளமையை — எனது நான்கு பாகங்களினாலான வ்யாசம் பதிவு செய்துள்ளது.

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 40. Avatar
  ஷாலி says:

  //சீதாபிராட்டியின் மீது நகர மாந்தர்கள் அவதூறு பேசினர் என்று தான் எழுதப்பட்டுள்ளதேயன்றி அதை ஒரு வண்ணான் பேசினான் என்று எழுதப்படவில்லை.//
  ஸ்வாமி க்ருஷ்ணாஜி! அதெல்லாம் சரிதான்.இன்னும் கொஞ்சம் மேலே போய் படியுங்கள்.ஊரு உலகத்திற்கே தெரிஞ்ச கதை.உங்களுக்கு தெரியலையே சாமி.உங்களின் கேடு கெடாத வண்ணான் வருவார்.தன் மனைவியை சந்தேகப்படுவார்.ஸ்ரீ ராமன் அரசன் அட்ஜஸ்ட் பண்ணீட்டு போயிருவார்.என்னால் முடியாது.வெளியே போ! என்கிறார் கே.கெ.வண்ணார்.ஸ்ரீ ராமன் இதை காது கொடுத்து கேட்டு மனம் கலங்கினான்.ஸ்வாமிகளே!ராமாயண ஆராய்ச்சி எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.இப்போதைக்கு நல்லா எழுத்துக்கூட்டி படியுங்கள்.வெளுக்கிற ஆளை ஒளிக்காதீர்கள். சாயம் வெளுத்துவிடும்.

  As the king, so the subjects’! This is what the people say, in their ignorance”.
  Ram’s whole face changed when he heard this slanderous accusation against him and his immaculate wife. He could not speak a word. His friends tried to comfort him and said, “Your Majesty, it is the nature of common people to speak ill of the nobility. A king need not pay heed to such false accusations”.
  Ram hardly heard what they were saying. Taking leave of then in his usual, courteous manner, he went to the garden and sat immersed in thought. He decided that it was his duty to check on this matter before coming to a decision. That evening, he wore the clothes of an ordinary citizen of Ayodhya and went incognito on a tour of the city. As luck would have it, as he passed the house of a washer-man, in one of the small streets of the city, he heard the sound of raised voices and went close to the door of the house and stood outside listening. The husband was berating his wife. “I have heard reports of your indecent behaviour. You have been seen talking to the nobleman who comes for a walk down this street. You may go back to your own home. I will not keep you here any longer. I belong to a respectable family and will not keep a loose woman as my wife. You are free to go where you please”.
  The poor woman pleaded that she was totally innocent and had only answered some questions, the man had put to her. The washerman replied sternly, “Do you think I am Ram to tolerate such behaviour? He is the king and can do as he pleases. But, as for me, I will never keep a wife who has been seen with another man”
  The Ramayana By Rishi Valmiki
  Chapter 7 Uttara Kanda
  Canto I – Sita Abandoned
  http://www.astrojyoti.com/ramayanavalmikuttarakanda.htm

 41. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பர் ஷாலி

  வால்மீகி ராமாயணத்தில் ஒரு விஷயம் எழுதப்பட்டுள்ளது என்றால் அதை வால்மீகி ராமாயணத்தில் எழுதப்பட்டுள்ள மூல ச்லோகத்தினை எடுத்துக்காட்டி பேச வேண்டும்.

  வால்மீகி ராமாயணத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் நீங்கள் பேச வேண்டிய விஷயம் எந்த காண்டத்தில் எந்த சர்க்கத்தில் எந்த ச்லோகத்தில் உள்ளது என்று பேச வேண்டும்.

  ராமாயணத்தில் இப்படி கதைக்கப்பட்டுள்ளது என்று பேசக்கூடாது.

  நீங்கள் கொடுத்துள்ள தளத்தில் வால்மீகி ராமாயணம் என்ற பெயரில் கதை சொல்லப்பட்டுள்ளது.

  நான் உங்களிடம் பேசும் விஷயம் வால்மீகி ராமாயணம் என்ற பெயரில் பேசப்படும் கதையல்ல.

  வால்மீகி ராமாயணம் என்ற பெயரில் புழங்கும் நூல். பதிப்பிக்கப்பட்ட நூல்.

  மூல வால்மீகி ராமாயணப்பதிப்பிலிருந்து நான் பரிசீலித்த விஷயங்களின் படி நீங்கள் சொல்லும் கதை அப்படி ஏதும் இல்லை.

  என்னுடைய அடுத்த வ்யாசத்தொடரில் மூல வால்மீகிராமாயண சான்றாதாரங்கள் சார்ந்து விக்ஞானி அவர்கள் பொதுதளத்தில் பகிர்ந்த கருத்து விவாதிக்கப்படும்.

  மூல வால்மீகி ராமாயணம் கோரக்பூர் கீதாப்ரஸ் பதிப்பை நான் பரிசீலித்து உள்ளேன்.

  விக்கிபீடியா தளத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ள வால்மீகி ராமாயணத்தின் அனைத்து காண்டங்களின் மூலம் பொது வாசிப்புக்கு உலகோருக்கு உள்ளது. அதில் பரிசீலித்து உள்ளேன்.

  பாடபேதம் உள்ள சர்க்கங்கள் மாறுபடும் ஸ்ரீ மன்மதநாத தத்தரின் ஆங்க்ல மொழியாக்கம் என்னால் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

  சதுர்வேதி த்வாரகாப்ரசாத் அவர்களது வால்மீகி ராமாயணத்தின் ஹிந்தி வ்யாக்யானம் மூலச்லோகங்களுடன். அதை பரிசீலித்து உள்ளேன்.

  வால்மீகி ராமாயணத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது என்றால் அது எந்த பதிப்பு, அந்தப் பதிப்பில் எந்த சர்க்கம் எந்த ச்லோகம் என்ற அளவுக்கு விவாதிப்பது அறிவுபூர்வமான விவாதம். அறிவுபூர்வமான ஒரு விவாதத்தில் உங்களுக்கு நாட்டம் உண்டு என்றால் மேற்கண்ட விஷயங்களை மேலும் பகிர்ந்து நீங்கள் என்னுடன் உரையாடலாம்.

  வெட்டிக்கதைகள் பேசுவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. கால அவகாசமும் இல்லை.

 42. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் சீதாபிராட்டியின் மீது அபவாதம் பேசியது ஒரு வண்ணான் என்ற இவ்விஷயத்தை மூலநூல் சார்ந்து ஆராய்ந்து பொதுதளத்தில் தன் கருத்தை வைத்துள்ளார் என்றால் குறிப்பிட்ட பதிப்பு குறிப்பிட்ட சர்க்கம் குறிப்பிட்ட ச்லோகம் என்று தெளிவாக வெளிப்படையாகத் தன் கருத்தை முன்வைக்கவும்.

  கம்ப ராமாயணத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது என்றால் மிகக் குறிப்பாக கம்ப ராமாயணச் செய்யுளை எடுத்துக்காட்டுவோமே? அதுபோன்று வால்மீகி ராமாயணத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது என்றால் மூல வால்மீகி ராமாயணத்தை வாசித்து அதில் உள்ள ச்லோகங்களை மிகக் குறிப்பாக எடுத்துக்காட்ட விழையவும்.

  ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் மேலும் கதை பேசாமால் மிகக் குறிப்பாக வால்மீகி ராமாயணத்தில் தான் வாசித்த மூலச்லோகத்தையும் அது எந்த பதிப்பு போன்ற மிகக்குறிப்பான சான்றாதாரங்களை பொது தளத்தில் வைப்பார் என எதிர்பார்க்கிறேன்.

 43. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  கீதாப்ரஸ் வால்மீகி ராமாயண மூலக்ரந்தம், விக்கிபீடியாவில் உலகப்பொதுமக்களின் பார்வையில் உள்ள வால்மீகி ராமாயண மூலம், பாடபேதமுள்ள ஸ்ரீமான் மன்மதநாத தத்தரின் வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டத்தின் ஆங்க்ல மொழியாக்கம் மற்றும் ஸ்ரீமான் த்வாரகாப்ரசாத் ஷர்மா அவர்களின் வால்மீகி ராமாயணத்தின் மூல ச்லோகத்துடன் கூடிய உத்தரகாண்டத்தின் ஹிந்தி வ்யாக்யானம் போன்ற நான் கு தனித்தனியான மூலராமாயணப் பதிப்பைப் பற்றி முன்னர் தெரிவித்திருந்தேன்.

  இன்னொரு source

  வால்மீகிராமாயணத்துக்கான http://www.valmikiramayan.net தளத்தில் உத்தரகாண்டம் காணக்கிட்டாது. ஆயினும் valmiki.iitk.ac.in/‎ தளத்தில் உத்தரகாண்டத்து மூலச்லோகங்களைப் பார்க்கலாம். கீதாப்ரஸ் பதிப்புடன் ஒத்துப்போகும் நூற்றுப்பதினொரு சர்க்கங்களும் அதைத்தவிர அதிகபாடம் எனும்படிக்கு மேற்கொண்டு பதின்மூன்று சர்க்கங்கள் கொண்ட பதிப்பு இது. இதிலும் வண்ணான் விஷயம் காணக்கிட்டாது.

  வண்ணான் விஷயம் மூல வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ற விஷயம் சரியல்ல என்பது நான் மேற்குறிப்பிட்ட ஐந்து வேறு வேறு பதிப்புகளின் மூலம் துலக்கியுள்ளேன்.

  இல்லை இந்த விஷயம் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது என நிறுவ விரும்புபவர், அந்த விஷயத்தை உள்ளடக்கிய மூல ராமாயணப்பதிப்பை பகிரவும். குறிப்பிட்ட சர்க்கம் மற்றும் ச்லோகங்களுடன்.

  குறிப்பான பாடபேதமுள்ள மூலபாடாந்தரத்தை பொதுதளத்தில் முன்வைக்காது பொதுப்புரிதல்களை வால்மீகி ராமாயணத்தின் மீது சுமத்துவது அறிவுபூர்வமான செயலாகாது.

 44. Avatar
  ஷாலி says:

   க்ருஷ்ணகுமார் says:
  January 29, 2014 at 8:26 am
  \ சீதா மீது அவதூறு பேசிய வண்ணான் \
  இது வரை ராமாயணம் பற்றி எழுதப்பட்ட எந்த நூலில் அவ்வாறு எழுதப்பட்டது என்பதனைப் பகிரவும்.
  சீதாபிராட்டியின் மீது நகர மாந்தர்கள் அவதூறு பேசினர் என்று தான் எழுதப்பட்டுள்ளதேயன்றி அதை ஒரு வண்ணான் பேசினான் என்று எழுதப்படவில்லை.//
  ஸ்ரீமான் க்ருஷ்ணாஜிக்கு கதை சொல்லுவது பிடிக்கவில்லை.ஒரிஜினல் ஆதாரம் சேதாரம் செய் கூலி கேட்கிறார்.ஐயன்மீர்!வால்மீகி ராமாயணம் அசல்தான்.ஆனால் அது மட்டும் ராமன் கதையை சொல்லவில்லை.ஏகப்பட்ட நூல்கள் ராம கதையை சொல்கின்றன.k.k.வண்ணைப்பற்றி திரு.ஜெயபாரதன் கற்பனையில் எழுதினாரா அல்லது ராமாயண நூல்களில் இருந்து எடுத்து எழுதினாரா? பாப்போம்.
  க்ருஷ்ணாஜி குறிப்பிடும் நகர மாந்தர்கள் மட்டுமே ராமனை அபகீர்த்தியாக பேசினர் என்பது உத்தர காண்டத்து செய்தி.இந்த உத்தர காண்டத்திற்க்கும் வால்மிகிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.பத்ம புராணம் என்ற பெரும் நூல் உள்ளது.அதில் ஸ்ரீராமன் சம்பத்தப்பட்ட செய்திகளை அதாவது ராமயான சம்பவங்களை குறிப்பிடுகிறது.அதில் உள்ள பாதாள காண்டத்தில் சீதையை இழிவு படுத்திய K.K.வண்ணான் கதை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
  உத்தர காண்டத்தில் நகர மக்கள் ராமனை குறை சொல்வதாக கூறுகிறது. ஆனால் பத்ம புராண பாதாள காண்டத்தில் அனைத்து மக்களும் ராமனை புகழ்கிறார்கள்.ஒருவனை தவிர.அவன்தான் K.K.வண்ணான்.ராமன் ஆறு ஒற்றர்களை மக்களிடம் அனுப்புகிறான்.தன்னைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துவர.அதில் ஐந்து பேர்,மக்கள் ராமனிடம் அதிக மதிப்பு வைத்திருந்ததை எடுத்துக்காட்டியது.உதாரணமாக, ஒரு வீட்டில் ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டுகிறார்.அவள் குழந்தையிடம் கூறுகிறாள்.”உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு பாலறிந்திக்கொள் ஸ்ரீ ராமன் ஆட்சியில் வாழும் நமக்கு இனி வேறொரு பிறப்பு இல்லை.அனைவருக்கும் முக்தி உண்டு” என்று புகழ்கிறாள்.
  ஆறாவது ஒற்றன்,வண்ணான் வீட்டில் நடந்த உரையாடலை ஸ்ரீ ராமனிடம் கூறுகிறான். பிறன் இல்லத்துக்கு சென்று வந்த மனைவியின் குற்றம் சுமத்தி அவளை அடித்து விரட்டுகிறான்.அவள் ஒரு அப்பாவிப் பெண் என்று அவன் தாய் பரிந்து பேசினாலும் அதை ஏற்க மறுத்து, நான் ஸ்ரீ ராமன் அல்ல.பிறரிடம் இருந்த மனைவியை ஏற்றுக்கொள்ள என்று சொல்லி அவளை விரட்டி விடுகிறான்.இதைக்கேட்டதும் ராமன் மயக்கமடைந்து தரையில் விழுந்தான்.பிறகு மறுநாளே சீதையை காட்டிற்கு அனுப்பி விடுகிறான்.
  திரு.ஜெயபாரதனின் சீதாயணப்படி வண்ணான் கதை வால்மீகி ராமாயணத்தில் உள்ளதா?அல்லது உத்தர காண்டத்தில் உள்ளதா என்பது அசலான சர்ச்சை அல்ல. ஒரு அப்பாவி கர்ப்பிணி கற்புள்ள அபலைப் பெண்ணை K.K.வண்ணான் சொல்லைக்கேட்டு விரட்டி அடிப்பது தர்மமா? நீதியா?மன்னனோ,அவதார புருஷனோ எவர் செய்தாலும் இது அநீதிதானே! இதுதான் திரு.ஜெயபாரதன் கேள்வி.க்ருஷ்ணாஜி அவர்களே! ஜெயபாரதனை விடுங்கள், அபலை சீதை எழுப்பும் நீதியின் குரல் உங்கள் காதில் விழவில்லையா? எந்த ஒரு தவறும் செய்யாத என்னை ஏன் ராமன் புறக்கனித்தான்?
  “katham mam pra? Atah pra? Tham vipapam Raghavo’tyajat”
  இதே கேள்வியைத்தான் திரு.ஜெயபாரதனின் சீதாயணம் கேட்கிறது.க்ருஷ்ணாஜியின் ராம கடவுள் பற்று சீதை துன்பத்தை மறுக்கிறது.—PADMA PURANA,Patala khanda Chapter.55-59.

 45. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன் அன்பு நண்பர்களே

  என்னுடைய வாத விவாதம் ஜெயம் அபஜெயம் போன்ற அற்ப விஷயங்களுக்கல்ல. விஷயத்தெளிவுக்கு என்பதை அறியவும்.

  வால்மீகி ராமாயணத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது என்றால் அதை விளக்குமுகமாக நீங்கள் பகிர வேண்டியது மூன்று விஷயங்கள்

  அணுகிய பதிப்பின் பெயர்
  அந்தப் பதிப்பில் நீங்கள் அணுகிய சர்க்கத்தின் எண்
  அந்த சர்க்கத்தில் நீங்கள் அணுகிய ச்லோகங்களின் எண்கள்

  நான் ஐந்து வேறு வேறான பதிப்புகளிலிருந்து இந்த விஷயத்தை அணுகியுள்ளேன். அவற்றில் சீதாபிராட்டியின் மீது அபவாதம் சொல்லியது ஒரு சில பொதுஜனங்கள் என்று தானேயல்லாது ஒரு வண்ணான் என்று இல்லை என்பது திண்ணம்.

  ஓரிரு பக்கங்களில் எழுதினாலன்றி முழுக்குறிப்புகளுடன் இந்த விஷயத்தை விளக்க முடியாது.

  ஸ்ரீ மன்மதநாத தத்தரின் ஆங்க்ல மொழியாக்கத்தின் உரலை தமிழ் ஹிந்து தளத்தில் ஸ்ரீமான் ஜெயபாரதன் காபிபேஸ்ட் செய்து இங்கு பகிர்ந்துள்ளார். ஒருமுறை அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை வாசிக்க முனைந்திருந்தார் என்றால் என்னுடைய கருத்தை அப்படியே ப்ரதிபலிக்கும் மேலும் “வண்ணான்” விஷயம் காணப்படாத அந்த உரலை இங்கு பகிர்ந்திருக்க மாட்டார். 314 பக்கங்களில் ஆன அந்த பிடெஃப் கோப்பை வாசிப்பதற்கு முன் வால்மீகி ராமாயணத்தில் எந்த விஷயம் எங்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று குத்துமதிப்பாகவாவது ஒரு புரிதல் இருக்க வேண்டும். அல்லது கருத்துப்பகிர்வதில் நேர்மை இருக்கும் பக்ஷத்தில் முழு கோப்பையும் வாசித்தால் விஷயத் தெளிவு கிட்டும். துரத்ருஷ்டவசாமா ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது தொடரும் உத்தரங்கள் அன்பர் அவர்கள் வால்மீகி ராமாயணத்தைப்பற்றி ஆனா ஆவன்னா கூட அறியாதவர் என்பதை பறைசாற்றுகின்றன என்றால் மிகையாகாது. மேலும் அன்பர் அவர்கள் பொறுமையுடன் அவரே பகிர்ந்த பிடிஃப் கோப்பைப் வாசிக்க வேண்டிய விஷயம். அன்பர் அவர்கள் அதை வாசிக்கவும் இல்லை அதில் அன்பர் அவர்களுக்குகு நாட்டமும் இல்லை. இது புதிதும் இல்லை. ஸ்ரீ வீரசாவர்க்கர் காந்தியடிகள் இறப்பிற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று கூசாது சொல்லிய விஷயத்தில் அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் இதோ என்று பகிர்ந்த கோப்பு தானே அவரது பொய்யை உலகத்திற்கு அம்பலப்படுத்தியது.

  சிறியேனுக்கு லவலேசமும் மேதமை இல்லை. ஆனால் இந்த வால்மீகி ராமாயணம் என்ற க்ரந்தத்தை வாசித்திருக்கிறேனே. எந்த விஷயம் எங்கு சொல்லப்பட்டிருக்கும் என்ற புரிதலும் அடிப்படை சம்ஸ்க்ருத அறிவையும் வைத்து விஷயங்களை ஐந்து வேறு வேறு பதிப்புகளில் ஆழ்ந்து அணுகிய பின்னரே இந்த விஷயத்தைப் பகிர்ந்துள்ளேனே. பதிப்புகள் ஐந்து என்றாலும் பாடபேதம் இரண்டு.

  சீதாபிராட்டியின் மீது அபவாதம் பேசியது ஒரு வண்ணான் என்று சொல்லக்கூடிய பதிப்பு ஏதேனும் உள்ளது என்று திண்ணமாக நீங்கள் கருதினால் உள்ளபடி அந்த பதிப்பைப் பற்றியும் மேற்குறிப்புகளையும் அறிய மிகவும் ஆவலாக உள்ளேன் என்பதும் திண்ணம்.

  ஆகவே நீங்கள் தேட வேண்டியது இணையம் அல்ல. வேறு வேறு பதிப்பான வால்மீகி ராமாயணங்கள் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். எங்கெங்கோ ஓடி ஓடித் தேடுகிறீர்கள். உங்கள் அலக்கியப்படைப்பின் கீழ் நீங்கள் அணுகியபடிக்கு ஐந்தாறு நூற்களைப் பகிர்ந்துள்ளீர்கள். அதில் இருந்து இதுவரை ஒரு வரியாவது உங்களுடைய நிலைப்பாடுகளுக்கு சான்றாக பகிர்ந்துள்ளீர்கள்? ஓ அவற்றை நீங்கள் வாசித்திருந்தாலல்லவோ அதிலிருந்து பகிர முடியும்?

  மாயமானைத் தேடப்புகுமுன் லக்ஷ்மண ரேகை என்ற கோட்டை நிலத்தில் பதிந்து இளைய பெருமாள் தேடச்சென்றார் என்பது பொதுப்புரிதல். வால்மீகி ராமாயணத்தில் அப்படி சொல்லப்படவில்லை. வெறும் பொதுப்புரிதலை வைத்துக்கொண்டு வால்மீகி ராமாயணத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று கூரை மீதேறிக் கூவினாலும் இல்லாதது உள்ளதாகுமோ.

  நீங்கள் உங்களது பிறழ்வுப் புரிதலை பொது தளத்தில் வைத்துள்ள படியால் இந்த பிறழ்வுப் பொதுப்புரிதலையும் மூலகாவ்யம் சார்ந்து என்னுடைய தொடர இருக்கும் வ்யாசத் தொடரில் விளக்கி விடுகிறேன்.

  வாலைப்பிடித்து தொங்குகிறேன். சதாம்ஹுஸைன், தாலிபான், செக்குமாடு என்று நீங்கள் சிறியேனை வசவிட முனைந்தால் உகப்புடன் நன்றாக வசவிடுங்கள். கூடவே மாற்றுக்கருத்து என்று நீங்கள் கூரைமீதேறிக்கூவும் விஷயம் பற்றி மிகக் குறிப்பான சான்றாதாரங்களையும் பகிர முனையலாமே.

  முறையான ஆதாரங்கள் இன்றி வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படாத விஷயங்களை சொன்னதாக பதைப்புடன் நீங்கள் சாதிக்க முனைவதில் உங்களுக்கு கிட்ட இருப்பது என்ன? மாறாக வால்மீகி ராமாயணத்தில் எந்தப் பதிப்பிலாவது சீதாபிராட்டியின் மீது அபவாதம் சொன்னது ஒரு வண்ணான் என்பது மிகக் குறிப்பாக இருப்பின் பதிப்பின் பெயருடனும் மூல ச்லோகங்களுடனும் பகிரப்பட்டால் நான் வால்மீகி ராமாயணம் பற்றிய எனது புரிதலை இன்னமும் மேம்படுத்திக்கொள்வேன். இப்படியும் ஒரு பதிப்பில் விஷயம் பகிரப்பட்டுள்ளது என மிகக் குறிப்பாக அறிவேன்.

 46. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  Great Drama Writers like Shakespeare and Bernard Shaw followed their own intuitive style of wisdom to express their point of view when they wrote Dramas like Julius Caesar, Antony and Cleopatra, Saint Joan [Joan of Arc], Caesar and Cleopatra, The Man of Destiny [Napoleon], The Devil’s Disciple [American War of Independence].

  I have translated all these English Dramas in Tamil which are available in http://www.thinnai.com [old & new].

  They all deviated to some extent from the original historical records, written by the Greek Historian Plutarch.

  S. Jayabarathan

 47. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பர் ஷாலி, தாங்கள் பகிர்ந்த கருத்து

  ஷாலி says:
  January 26, 2014 at 3:08 pm

  \ வால்மீகி ராமயாணப்படி அவன் கேடுகெட்ட வண்ணான்தான். \

  இது தவறு என்று ஒத்துக்கொள்கிறீர்களா?

  ஒரு விஷயத்தை காபி பேஸ்ட் செய்வது மூலம் மட்டிலும் விவாதம் செய்ய முடியும் என்ற மனப்பாங்கை முதலில் விட்டொழிக்க முயலுங்கள்.

  பாண்டியன் சபையில் கண்ணகி உடைத்த சிலம்புகளின் எத்துணை மற்றும் கண்ணகி மதுரையை எரித்தது எப்படி என்ற விஷயம் சிலப்பதிகாரப்படி எப்படி என்றால் அதற்குப் பதிலாக சிலப்பதிகாரச் செய்யுள்களை மேற்கோள் காட்டாது கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுதிய பூம்புகார் திரைப்படத்திலிருந்து விஷயத்தை விளக்க விழைவது எப்படி அபத்தமோ அப்படிப்பட்ட அபத்தம் உங்களால் பேராசிரியப்பெருந்தகை என்று விதந்தோதப்பட்ட ஸ்ரீமான் ஜெயபாரதன் செய்யும் காரியமும் நீங்கள் செய்ய முனைந்த காரியமும்.

  \ ஒரிஜினல் ஆதாரம் சேதாரம் செய் கூலி கேட்கிறார்.ஐயன்மீர்!வால்மீகி ராமாயணம் அசல்தான்.ஆனால் அது மட்டும் ராமன் கதையை சொல்லவில்லை \

  வால்மீகி ராமாயணம் அசல்தான் என்று அன்பர் ஜெயபாரதன் காதில் ஓங்கி சங்கை முழக்குங்கள்.

  சரி. நீங்கள் பின் எந்த ஆதாரத்தில் வால்மீகி ராமாயணப்படி அவன் கேடுகெட்ட வண்ணான் என்று இந்த தளத்தில் கருத்துப்பகிர்ந்தீர்கள். எப்போதும் செய்யும் கூகுள் சர்ச். வால்மீகி ராமாயணம் பற்றிப் பேசவேண்டுமானால் முதலில் அதன் செய்யுட்களிலிருந்து பேச வேண்டும் என்ற அடிப்படை வாத முறைமையைக் கூட கையாள முடியாத நீங்கள் செய்யும் வாதம் நேர்மையான ஒரு வாதமாகும்?

  \ க்ருஷ்ணாஜி குறிப்பிடும் நகர மாந்தர்கள் மட்டுமே ராமனை அபகீர்த்தியாக பேசினர் என்பது உத்தர காண்டத்து செய்தி.இந்த உத்தர காண்டத்திற்க்கும் வால்மிகிக்கும் எந்த சம்பந்தமுமில்லை \

  உத்தரகாண்டம் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டது இல்லை / எழுதப்பட்டது என்பதற்கு மாறு மாறான கருத்துக்கள் இருக்கின்றன. ஸ்ரீ ஜடாயு அவர்கள் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டது இல்லை என்ற கருத்தினை நிர்த்தாரணம் செய்ய தன் வ்யாசத்தை சமர்ப்பிக்க இருக்கிறார். சரி. நீங்கள் நான் இங்கு பகிர்ந்த ஆராய்ச்சி தவிர்த்து இது சம்பந்தமாக எந்த ஆராய்ச்சியை வாசித்துள்ளீர்களா? வால்மீகி ராமாயணம் ஒரு முறையாவது முழுமையாக வாசித்ததுண்டு இப்படி ஒரு கருத்தைப் பகிருமுன்?

  உத்தர காண்டத்திற்கும் வால்மீகிக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று இப்போது எந்த வித லஜ்ஜையும் இல்லாது இந்த தளத்தில் கருத்துப் பகிரும் நீங்கள் வால்மீகி ராமாயணப்படி அவன் கேடுகெட்ட வண்ணாந்தான் என்று கருத்துப்பகிர்ந்தது பச்சைப்பொய் என்று இந்த தளத்தினரின் முன் நீங்களாகவே அம்பலப்படுத்துகிறீர்களா?

  நீங்கள் வால்மீகி ராமாயணப்படி அவன் கேடுகெட்ட வண்ணான் தான் என்ற சொன்ன பச்சைப்புளுகிற்கு மேற்கொண்டு ஆதாரம் கிட்டவில்லை என்றவுடன் மேற்கொண்டு கூகுள் சர்ச். மேற்கொண்டு கூகுள் ஆராய்ச்சி. மேற்கொண்டு இன்னொரு காபிபேஸ்ட். மேற்கொண்டு இன்னொரு புராணாந்தரம். ஆனால் அந்த புராணத்தின் மூல சம்ஸ்க்ருத ச்லோகம் பகிரமுடியாது. அதன் பதிப்பு பற்றி பேச முடியாது.இப்படி ஒரு வாதவிவாதம்? பத்ம புராணத்தில் என்னென்ன பாடபேதங்கள் – என்று நான் விளக்க முனைய வேண்டும் அடுத்து?

  நீங்கள் முன்னர் பகிர்ந்தது முற்று முழுதாக அபத்தமான விஷயம் என்பதால் மேற்கொண்டு இன்னொரு அபத்தக் களஞ்சியத்தில் ப்ரவேசிக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. பாத்மபுராண பாடபேதங்கள் எனக்கு பரிச்சயமான விஷயம் தான். பின்னும் உங்கள் மேற்கொண்ட தகவல் “பாங்க்த” பாத்மபுராணப்படி என்றால் என் புரிதல் மேம்பட்டதாக எண்ணிக்கொள்வேன். அப்போது இங்கு மீண்டும் வந்து நன்றியும் தெரிவிப்பேன்.

  \ இது அநீதிதானே! இதுதான் திரு.ஜெயபாரதன் கேள்வி.க்ருஷ்ணாஜி அவர்களே! ஜெயபாரதனை விடுங்கள், அபலை சீதை எழுப்பும் நீதியின் குரல் உங்கள் காதில் விழவில்லையா? \

  ஸ்…………இதை வாசித்தால் சீதாபிராட்டியின் பால் அன்பர் ஷாலி தவிர்த்து இந்த பூவுலகில் அன்பும் பாசமும் உள்ளவர் வேறு யாரும் இருக்க முடியாது என்று தோன்றும். நீங்கள் இதற்கு முன் எழுதிய உத்தரங்களை நீங்களே வாசித்துப் பார்க்கவும். கேடுகெட்டவன் சொன்னதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் படி உங்கள் உத்தரங்களில் நீங்கள் எழுதவில்லை?

  அபலை சீதையின் குரல் தங்கள் காதில் வாங்கிய எத்துணையோ காவ்யகர்த்தர்கள் உள்ளனர். அவர்கள் சீதையின் துன்பம் அறிந்து துன்பத்தை துடைக்கும் படி தங்கள் காவ்யத்தை எழுதிச் சென்றனர். நான் முன்னமே சொன்ன படி இயன்றால் அக்காவ்யங்களில் ஒன்றைப் பகிர விழைகிறேன்.

  ஆனால் ஹிந்துமதக்காழ்ப்பாளரான ஸ்ரீமான் ஜெயபாரதனுக்கு சீதாபிராட்டியின் துன்பத்தில் எல்லாம் அக்கறையில்லையே. சீதாபிராட்டியின் துன்பத்தை ஒரு சாக்காக வைத்து சீதாபிரட்டியை தனது காவ்யத்தில் கொன்று அதன் மூலம் சீதாபிராட்டியையும் ராமபிரானையும் ஒருங்கே இழிவு செய்த ஒரு சுகத்தைக் கண்டுள்ளார். இந்த தளத்தில் இடைவிடாது முழுமையான மேற்கோள்களுடன் ஆதாரபூர்வமாக சுவிசேஷ ப்ரசங்கம் செய்து வரும் வல்லமை வாய்ந்த உங்களுக்கு அதில் மேலும் உகப்பு அவ்வளவே

  ஆனால் பரிதாபமான விஷயம் உங்கள் அளவுக்குக் கூட — கூகுள் சர்ச் கூட — ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களால் முழுமையாகச் செய்ய முடியவில்லை என்பது. செய்த கூகுள் சர்ச் கூட முன்னர் அவர் செய்த வீரசாவர்க்கர் பண்டாஃபோட் மாதிரி மன்மதநாததத்தர் பண்டாஃபோட். எப்போதும் ஸ்ரீமான் ஜெயபாரதன் தன் பொய்க்கு மிக சமர்த்தாக தானே சாக்ஷி சொல்லுவார். ஒரு கேழ்விக்கும் நேர்மையுடன் அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை என்பது பரிதாபத்தை அளிக்கிறது.

  தற்போது நான் செய்ய வேண்டியது ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது சீதாயண அலக்கியம் மூலம் அன்பர் அவர்கள் பகிர்ந்த ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்கள், போலிப்பகுத்தறிவுப் பரப்புரைகள், வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படாத கருத்தை அதில் சொல்லியதாக அன்பர் அவர்கள் வால்மீகி ராமாயணத்தை பொது தளத்தில் இழிவு செய்தமை போன்றவற்றை விரிவாக விளக்கும் எனது அடுத்த வ்யாசத் தொடரை பொதுதளத்தில் சமர்ப்பிப்பது.

  விதிவிலக்காக ஒரு சில விஷயங்களில் உங்களிடம் இருந்தும் ஒரு சில கம்பராமாயணத் தகவல்கள் பெற்றதற்கும் அமுதினுமினிய திருப்புகழில் இருந்து ஒரு சில துளிகள் கிட்டியதற்கும் நன்றி.

  மேற்கொண்டு எனது அடுத்த பொது தளத்திய பகிர்வு எனது அடுத்த வ்யாசத்தொடர்.

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 48. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  Mr. Krishnakumar,

  Who are you, the God father of “Hinduism” ? I am in Canada & you are in India.

  Why should I prove to you what I have written in Seethayana is correct or not according to your bird-eye point of view.

  I will write what I think “right” to my point of view. You can write whatever you want. But don’t expect or insist for a reply from me to your repeat questions.

  S. Jayabarathan.

  1. Avatar
   ஷாலி says:

   நெத்தியடி! உஹூம்….அவருக்கு இதெல்லாம் உறைக்காது.
   திரு.ஜெயபாரதன் அவர்களே! இந்த பதிலை முன்பே சொல்லியிருந்தால் ஆட்டைக் கடித்து,மாட்டை கடித்து மனுஷனை கடிக்கிற நிலை வந்திருக்காது.

   “ஹிந்து” மகா சமுத்திரத்தை பாதுகாக்க புறப்பட்ட சிறு நண்டுகள் சமுத்திரத்தின் சொந்தக்காரர்களாக மாற மஞ்சக் குளிக்கிறார்கள்.
   சேவல் கூவி சூரியன் உதித்த கதையாக உள்ளது.

   ஆர்ப்பரிக்கும் பேரலையின் நுனியில் உருவாகும் நுரைக் குமிழ்கள் சில நொடியில் உடைந்து விடும்.ஹிந்து மதத்தின் ஆன்மா தரிசனங்கள் எவர் தயவுமின்றி தொடர்ந்து அலை முழங்கும்.

   ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஹிந்து சூரிய பகவானை மறைத்துவிட முடியாது.ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் ஆன்மீக அலைகளை தடுத்து விட முடியாது.

   இந்த உண்மைகள் எனக்கும் தெரியும்,திரு.ஜெயபாரதனுக்கும் தெரியும்.திண்ணை வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்.ஒரே ஒரு மனிதருக்கு மட்டும் தெரியவில்லை.

 49. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  My dear and respected Shriman Jeyabharathan

  \ But don’t expect or insist for a reply from me to your repeat questions \

  Be happy sir, no more cross examinations, what awaits is only exposure. நீங்கள் பதிலளிக்க பயப்படுவது புரிகிறது. ஆனால் நான் உங்களது கேழ்விகளுக்கு முழுமையாக பதிலிறுத்தே மேற்கொண்டு என் வ்யாசத்தொடரை எழுதிச் செல்வேன்.

  அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் உங்களது அலக்கியத்தை குறைகள் மட்டிலும் சொல்லவில்லை என்பதை நினைவு கூறவும். அதில் உள்ள நிறைகளையும் நான் பொதுதளத்தில் பகிர்ந்து கொண்டதை நினைவு கூறவும்.

  உங்களை குறை சொல்லுமுன்னர் முற்று முழுதாக உங்கள் கருத்துக்களை அறிந்த பின்னரே குறை சொல்ல வேண்டும் என்ற படிக்கு மட்டிலும் Cross examinations தொடர்ந்தது என்பதனை நினைவிலிருத்தவும்.

  \ Who are you \

  உங்கள் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்ட உங்கள் வாசகன். உங்களுடைய ஏற்கத் தகுந்த கருத்துக்களை ஏற்று விதந்தோதி உங்களுடைய ஏற்கவொண்ணா கருத்துக்களை பொதுதளத்தில் அக்கு வேறு ஆணி வேறாக அலச விழையும் உங்கள் மீது அன்புள்ள உங்கள் வாசகன். முறையான தர்க்கத்தில் பிடிவாதமுள்ள வாசகன்.

  “மஹாத்மா காந்தியின் மரணம்” என்ற தங்களது வ்யாசத்தில் செய்த மட்டற்ற க்றைஸ்தவ துஷ்ப்ரசாரத்தையும் ஹிந்துமதக்காழ்ப்பையும் மறுதலித்து நான் சமர்ப்பித்த வ்யாசத்தின் பின்னூட்டங்களூடே தேவரீர் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே இந்த அலக்கியத்தை அறுவை சிகித்சைக்கு உள்ளாக்க நேர்ந்தது.

  \ the God father of “Hinduism” \

  No.

  நீங்கள் மட்டற்ற ஹிந்துமதக்காழ்ப்புகளை பொது தளத்தில் வைத்து சமயம் கிடைக்கும் போதெல்லாம் மட்டற்ற க்றைஸ்தவ துஷ்ப்ரசாரத்தையும் முன் வைக்கப்புகுந்தால் அதை ஹிந்து மதத்திலிருந்து ஒரு “God father of “Hinduism” ஸ்பெஷலாக வந்து அதை மறுதலிக்க வேண்டும் என்று எண்ணுவதே அடிப்படைப்பிசகு.

  ஏதோ நீங்கள் எழுதுவதில் பெரிய தத்துவார்த்த விசாரங்கள் செய்வது போலும் …… அதை மறுதலிக்க பெரும் மேதமை பொருந்தியவர் அதை ****திறனாய்வு***** செய்ய வேண்டும் என்பதெல்லாம் அதிகப்படி. நீங்கள் அடித்து விடும் விஷயங்களை மறுதலிக்க அடிப்படை வாசிப்புள்ளவர்களே சர்வ சாதாரணமாக மறுக்க முடியும்.

  \ Why should I prove to you what I have written in Seethayana is correct or not according to your bird-eye point of view. \

  சீதாயணம் என்ற அலக்கியத்தை என்னுடைய பறவைப்பார்வை என்ற வ்யாசம் சார்ந்து நான் எப்போது உங்களை prove செய்யச்சொன்னேன்?

  உங்களை cross examination செய்தது எல்லாம் நீங்கள் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டது என்று இஷ்டத்துக்கு அடித்துவிட்ட விஷயங்களைப் பற்றித் தான். உங்கள் அலக்கியத்தின் கீழ் ஐந்தாறு நூற்களின் பட்டியலை அலங்காரமாக பட்டுக்குஞ்சலமாக கட்டியிருக்கிறீர்களே? உங்களிடம் கேட்ட கேழ்விகளுக்கு ஒரு வரி அல்லது அரை வரி அந்த பட்டுக்குஞ்சலங்களிலிருந்து பதில் என்று ஏதும் சொல்ல முடிந்தது. அதைப் படித்திருந்தால் தானே பதில் சொல்ல முடியும்.

  எந்த கேழ்விக்கும் உங்கள் பட்டுக்குஞ்சலங்களிலிருந்து பதிலளிக்காமால் கூகுள் சர்ச்சிலிருந்து நீங்கள் பதிலிளக்க முனைந்த படி உங்கள் அனுபந்தத்தில் வெறுமனே http://www.google.com என்று நீங்கள் போட்டிருந்தால் அது நேர்மையாக இருந்திருக்கும்.

  காலே அரைக்கால் அணாவுக்கு விற்கும் ராமாயணத்தை இழிவு செய்யக்கூடிய ஏதாவது விசிலடிச்சான் குளுவான்கள் எழுதிக்கிறுக்கிய கந்தறகோளங்களை மட்டிலும் வாசித்து விட்டு வால்மீகி ராமாயணத்தைப் பற்றிப்பேசும் நூற்களை படித்தது போல் பாசாங்கு செய்து………. ராஜாஜியைப் படித்தது போல் பாசாங்கு செய்து…….பின்னர் போதாதென்று கூகுள் சர்ச் செய்ய ஒரு குழுமத்தையே அமைத்து மூலநூலைத் தொடுவதற்குக் கூட முனையாது இணையத்தினர் பேசும் கதைச்சுருக்கங்களையே வால்மீகி ராமாயணம் பேசுவதாகக் கதைபேசி…….. மேதமையை பறைசாற்றுவது போல் பாசாங்கு செய்தால் அது தவிடுபொடியாக்கப்படும்.

  நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதினீர்கள் என்றால் அது சம்பந்தமான விளக்கங்களை நான் உங்களைத் தவிர்த்து உங்கள் நண்பர்களிடமா கேழ்க்க முடியும்? அப்புறம் நீங்கள் prove பண்ண வேண்டியது எதுவும் க்ருஷ்ணகுமாரிடம் அல்ல. உங்களது கந்தறகோள விளக்கங்களையும் வாசித்து அதற்கு நான் எதிர்க்கேழ்விகள் எழுப்பி அதையும் வாசிக்கும் வாசகர்களுக்கு. நீங்களாக எழுதிய விஷயம் என்றால் உங்களுக்கு பதில் சொல்வதில் ப்ரச்சினை என்று ஏதும் இருக்கக்கூடாது. தவறாக எழுதியிருந்தால் தவறு என்று சொல்லிப்போகலாம். தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லிப்போகலாம். நேர்மையாக கருத்துப்பரிவர்த்தனம் செய்ய வேண்டும் என்றிருந்தால்.

  \ But don’t expect or insist for a reply from me to your repeat questions. \

  What else can you say when you see the writing on the wall that your lies you penned in your write up “seethayana” are going to be busted. that you have no explanations worth to offer to even a single statement you have made in your write up is a fact well demonstrated by you in websites across the globe.

  உங்கள் விக்ஞானம் சார்ந்த வ்யாசங்களால் நான் மிகவும் பயனடைகிறேன். அதை இன்னமும் வாசிப்பேன். பயனடைந்தால் விதந்தோதவும் செய்வேன். நான் ஏற்பது மற்றும் மறுப்பது ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது ஆதாரம் சாராத பொய்க்கருத்துக்களை மேலும் மட்டற்ற ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்களை மட்டிலும் அன்பரே. ஸ்ரீமான் ஜெயபாரதன் என்ற தமிழ் கூறும் நல்லுலகிற்கு தனது விக்ஞானம் சார்ந்த வ்யாசங்களால் அரும் பெரும் தொண்டாற்றும் எனது மதிப்பிற்குறிய அன்பர் ஸ்ரீமான் ஜெயபாரதன் என்றும் என்றென்றும் எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரியவரே.

  இத்தனை கடும் விமர்சனங்கள் இருந்தாலும் எனது அன்பிற்குறிய ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் வாயிலாக நான் ராமாயணத்தையும் ராமாயணம் பற்றிய செய்திகளையும் வாசித்தமைக்கும் கூட அன்பின் ஜெயபாரதன் அவர்களுக்கு மிகுந்த நன்றி.

  A STRONG WORD OF CAUTION. BE HUNDRED TIMES SURE TO SAY SOMETHING NEGATIVE ABOUT ANYTHING AND DO PROPER HOMEWORK.

  BEST WISHES SIR.

  I WOULD BE GRATEFUL TO YOU IF YOU COULD TAKE TIME ENOUGH TO GO THROUGH MY FORTHCOMING SERIES WHICH IS GOING TO BE A FACTS BASED CRITICISM OF YOUR WRITE UP AND OFFER YOUR VALUABLE COMMENTS.

  I WOULD REPLY FURTHER IF THERE ARE ANY MORE QUESTIONS FROM YOUR END.

  என்றென்றும் அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 50. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  Dear Mr. Krishnakumar,

  ///A STRONG WORD OF CAUTION. BE HUNDRED TIMES SURE TO SAY SOMETHING NEGATIVE ABOUT ANYTHING AND DO PROPER HOMEWORK.//

  Your so called BIRD’EYE VIEW” of Valmiki Ramayana is slightly better than a Blind Eye View. Definitely it is not a Hawk Eye view.

  Are you sure you are able to look sharply by your Bird’s Eye what is moving on Earth or crawling underneath the corrupted and polluted Valmiki Ramayana that has many additions and subtractions over the years with fictitious names of heavenly bodies ?

  My only objective in writing Seethayanam Drama has been to bring out the greatness and weakness of Rama, treating him only as a human king rather than a divine one.

  Also I wanted to show that ILanga king, Ravana too was a human being like Rama. Most importantly, the Southerners Hanuman and his warriors who helped Rama to regain his wife Seetha from Ravana, are not talking monkeys with long tail but human beings.

  One cannot show or prove Rama’s merits or mighty skills treating him as a divine being. It is conflict of interest as divine beings are always supposed to be omnipotent, omniscient and omnipresent.

  Rama does not fit into the divine formula of an omniscient or omnipresent being. If he were omnipotent, why should he hide himself to kill the super-powered Vaali, unless he was nothing but a human being. All Rama’s great achievements or faults are nothing but only human deeds.

  How did Rama and his wife die in the End ?

  My strong sense tells me that Rama is the one and only Villain who was responsible for Seetha’s pathetic suicide.

  None of your four long Ramayana articles clear my doubts, mentioned above.

  S. Jayabarathan

 51. Avatar
  IIM Ganapathi Raman says:

  //My only objective in writing Seethayanam Drama has been to bring out the greatness and weakness of Rama, treating him only as a human king rather than a divine one.//

  இதைப்புரிந்து கொண்டால் கிருஸ்ணகுமார் நுழைந்து பறவைப்பார்வை வீச‌த்தேவையேயிருந்திருக்காது.

  இன்னொன்றையும் அவர் புரிவது நன்று. இராமாயணம் இருவகையாக ஏற்புடைத்து. 1. பொது காவியமாக 2. மதப்பனுவலாக. 2 இந்துக்களுக்கு மட்டுமே. 2 வதில்தான் இராமனும் சீதையும் அவதாரங்கள். அப்படி இந்துக்கள் ஏற்று அப்பனுவலைப்படித்து ஆன்மபலன் பெறுகிறார்கள். .

  1வது எல்லோருக்கும். அனைத்து இந்தியர்களுக்கும்; மஹாபாரதமும்; இராமாயாணமும்.இந்திய இருபெரும் ஹிதிகாசங்களாக (காப்பியங்களாக) தொன்றுதொட்டு திகழ்ந்து வருபவை அவற்றுள் காட்டப்படும் வாழ்க்கை நெறிமுறைகள் எல்லாக்காலத்துக்கும் ஒத்துவரா. எனவே எழதப்பட்ட காலத்தில் அவை சரியென நினைத்தபடியால், விமர்சனம் இல்லை. இன்று விமர்சனம் எழுகிறது. ஐந்து பேருக்கு ஒருத்தி மனைவியாக இன்று இருந்தால் அடல்ட்டரி. அன்று சரி. இன்று பெண்ணியம் உரிமைகளுக்காகப் போராடும்போது சீதையின் கதாபாத்திரம் சரியான மாதிரியன்று. இந்துமதத்தில் தாலிபானிதனமில்லாததால், விமர்சனங்கள் படிப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. எவருமே தடுப்பதில்லை. கை காலகளை வெட்டுவதில்லை கோட்டயம் பேராசிரியரை வெட்டியது போல.

  இப்போது ‘கேழ்வி’ அஃதாவது கேள்வி என்னவென்றால், இராமாயணம் வெறும் காப்பியமாக ஏற்று அக்காவியமாந்தர்களை மனிதர்களாக மற்றுமே ஏற்று எழுதப்படும் விமர்சனங்களுக்கும் இராமயாணத்தை ஒரு தெய்வப்பனுவலாக ஏற்ற இந்துக்களுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் ஏன் இங்கு நுழைய வேண்டும்? அவர்களை எவரேனும் கட்டாயப்படுத்தினார்களா? காப்பியத்தை விமர்சனம் செய்வோர் வால்மீக இராமயணத்தப்புரட்டிப்போட்டார் என்று இந்துக்களுக்கு ஏன் கவலை? வால்மீகி இராமாயணத்தை எவரும் தனிச்சொத்தாக்கி விட்டார்களா? காப்பி ரைட் இருக்கிறதா?

  அப்படியே விமர்சனம் செய்ய விழைந்தால் இராமாயணத்தைப்பொது நூலாக எடுத்த்ப்பேசுவோராக மட்டுமே இருக்கவேண்டும். இராமனைத்தெய்வமாக ஏற்றோர் செய்யவே மாட்டார். இராமன் சம்பூகனைக்கொன்றது சரியா? இராமன் சீதையை நடாத்தியது சரியா? வாலியை மறைந்திருந்து கொள்வது வீரனுக்கு அழகா போன்ற விவாதங்களுக்கு பதில்கள் சொல்ல விழைவோரும் இராமனை மனிதனாக ஏற்றவர்களாத்தான் இருக்க வேண்டும்.

  இராம பக்தர்கள் விவாதம் பண்ண மாட்டார்கள். விவாதங்களினாலும் சர்ச்சைகளினாலும் மதங்கள் தங்களை மக்களிடையே நிலை நிறுத்தவில்லை. அனுமனைக்கும்பிடுவோர் அவன் குரங்கா? குரங்கு எப்படி பேசியிருக்க முடியும்? என்றெல்லாம் நினைத்துப்பார்க்க மாட்டார்கள்.

  எனவே, கிருஸணகுமாரின் எந்த நிலையில் இருந்து ஜயபாரதனின் சீதாயாணத்தை எதிர்க்கிறார்?

 52. Avatar
  ஷாலி says:

   //சீதாபிராட்டியின் துன்பத்தை ஒரு சாக்காக வைத்து சீதாபிரட்டியை தனது காவ்யத்தில் கொன்று அதன் மூலம் சீதாபிராட்டியையும் ராமபிரானையும் ஒருங்கே இழிவு செய்த ஒரு சுகத்தைக் கண்டுள்ளார். இந்த தளத்தில் இடைவிடாது முழுமையான மேற்கோள்களுடன் ஆதாரபூர்வமாக சுவிசேஷ ப்ரசங்கம் செய்து வரும் வல்லமை வாய்ந்த உங்களுக்கு அதில் மேலும் உகப்பு அவ்வளவே
  ஆனால் பரிதாபமான விஷயம் உங்கள் அளவுக்குக் கூட — கூகுள் சர்ச் கூட — ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களால் முழுமையாகச் செய்ய முடியவில்லை என்பது. //

  சீதாபிராட்டி படும் துன்பங்களை மானிடவியல் பார்வையில் விமர்சித்து சீதாயணம் எழுதினால் அது சுவிசேஷ பிரசங்கம் ஆகிவிடுமா? என்ன ஒரு அற்பத்தனமான பார்வை! நிலம் பிளந்து அதற்குள் சீதை சென்று விட்டால்,சரயு நதியில் ராமன் இறங்கி தன்னை முடித்துக்கொண்டான் என்று ராமாயண புராண செய்திகள் கூறுவதை எழுதினால் அது இழிவு செய்வது என்பது பொருளாகி விடுமா? ராமாயணம் பற்றி எழுதுவதற்கு அசல் மூலப்பிரதிகளை கையில் எடுத்துப் படித்த பின்பே பின்னூட்டம் இட வேண்டுமா? கூகுளில் செய்திகளை தேடிப் பார்த்து எழுதுவது மட்டமான காரியமா? இது போன்ற மனநிலை மனிதர்களுக்கு எந்த பதிலும் திருப்தி அடையச் செய்ய முடியாது.இவர்களின் எழுத்துக்களை கண்டு கொள்ளாமல் விடுவதே உத்தமம்.ஸ்ரீ மான் கிருஷ்ணகுமாரின் அலம்பல்களுக்கு திண்ணையின் அபிமானமும் ஆதரவும் இருக்கும்வரை அவர் எழுதிக்கொண்டே இருக்கட்டும்.ஹிந்து மதத்தை விழித்திருந்து காக்கட்டும்.கடல் வத்தி கருவாடு சாப்பிட குடல் வத்தி கொக்கு சாகட்டும்.

 53. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  Dear Shriman.Jeyabharathan
  The bird eye view deliberates about only one question as to composition of Valmiki Ramayana. To understand the nuances of its composition, one has to completely read the epic. For deeper perspective, a complete reading of Mula Ramayana in Sanskrit is necessary. If not so deeper, to get a better understanding atleast one has to study any of the English or Tamizh translation COMPLETELY. It is only beyond that one can even be able grasp what is deliberated in the bird eye view. To comment about composition of VR without even reading COMPLETE VR once takes one nowhere.
  Portrayal of Rama as human in your write up was not debated by me. Overall portrayal of Rama in a negative sense is not acceptable to me. This is a subjective issue and I understand there can be two opinions. I have not made it an issue for discussion.
  Portrayal of vanaras and your observations vis.a.vis Valmiki Ramayana. I would try to explain a complete picture of portrayal of vanaras in VR. Ram & Seetha piraati’s anthardana (not death) as explained in VR would be explained. The comment about a washerman was another factual issue where I had difference vis.a.vis VR.
  You may recall that I frankly made it clear that I am no expert on Valmiki Ramayana but yes I have studied it though not completely — fairly exhaustively to understand the nuances. From any description to VR, I get ERC.
  Factual issues where I have strong differences are the areas where I differed and discussed. And these I would try to explain in my series. Subjective issues have not been in the realm of our discussions.
  And, sir, these were the factual areas where we had differences on discussions. Hope, I could proceed further with your best wishes to pen the series ( a part has been completed.)
  With respects and regards
  Krishnakumar

 54. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ சீதாபிராட்டி படும் துன்பங்களை மானிடவியல் பார்வையில் விமர்சித்து சீதாயணம் எழுதினால் அது சுவிசேஷ பிரசங்கம் ஆகிவிடுமா? \

  சுவிசேஷ ப்ரசங்கத்தை முழுமையான மேற்கோள்களுடன் இந்த தளத்தில் இடையறாது செய்து வருவது பைபள் க்ரந்தத்தை கரைத்துக் குடித்த நீங்கள். ஸ்ரீமான் ஜெயபாரதனை அதில் எதற்கு இழுக்கிறீர்கள். சீதாபிராட்டியின் துயருக்கு சுவிசேஷிகள் கண்ணீர் விடுவது எப்படி என்பது தான் இங்கு அவர்களது உத்தரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதே. சீதாபிராட்டியின் மீது அபவாதம் சொன்னவர்கள் ராமாயண காலத்திலானால் என்ன கலிகாலத்திலானால் என்ன கேடுகெட்டவர்கள் தானே? நான் சொல்வது சரிதானே?

  \ ராமாயணம் பற்றி எழுதுவதற்கு அசல் மூலப்பிரதிகளை கையில் எடுத்துப் படித்த பின்பே பின்னூட்டம் இட வேண்டுமா? கூகுளில் செய்திகளை தேடிப் பார்த்து எழுதுவது மட்டமான காரியமா? \

  ஆம். கூகுளில் இருந்து பகிரப்பட்ட / சொல்லப்பட்ட செய்தி வால்மீகி ராமாயணம் என்ற மூலநூலில் சொல்லப்படாதது என்று ஆக்ஷேபம் எழுந்தால்…… தொடர்ந்து கூகுள் சர்ச் மட்டிலும் செய்து சகலகலாவல்லவர் என்று பட்டம் பெறுவது மேதமையாகாது என்றாகும். வருத்தம் புரிகிறது. சகலகலாவல்லவர் என்று விதந்தோதப்படும் நீங்கள் செய்த காபி பேஸ்ட் விஷயத்தை ஸ்ரீமான் ஜெயபாரதன் மேற்கொண்டு காபிபேஸ்ட் செய்வது போதாதென்று தான் அடித்து விடும் உரலில் உள்ள பெரும் பிடிஎஃப் கோப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று கூடப் பார்க்காது அடித்து விட்டது தான் காமெடியின் உச்சம்.

  சிலப்பதிகாரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்ற விஷயத்தை சிலப்பதிகாரச் செய்யுளை மேற்கோள் காட்டாது பேசாது கலைஞர் வசனமெழுதிய பூம்புகார் மூலமாக விவாதம் செய்ய விழைவது எப்படி முறையற்ற விவாதமோ அப்படியே முறையற்ற விவாதம் வால்மீகி ராமாயண விஷயங்களை அதன் செய்யுட்கள் சார்ந்து பேசாது வெட்டியாகக் காபி பேஸ்ட் செய்ய விழைவது.

  நீங்கள் காபி பேஸ்ட் செய்து அதை ஸ்ரீமான் ஜெயபாரதன் தமிழ் ஹிந்துவிலும் காபி பேஸ்ட் செய்து…………. ஷாலி என்ன சொல்கிறார் என்பது எனக்கு ஒரு பொருட்டு இல்லை.

  ஸ்ரீமான் ஜெயபாரதன் தனக்குத் தெரியாத விஷயத்தை தெரியாது என்று சொல்லிப்போகாது கூசாது பொதுதளத்தில் பொய்க்கருத்துப் பரப்புவதை எப்படி பொருட்படுத்தாமல் இருக்க முடியும். ஸ்ரீமான் ஜெயபாரதன் பகிர்ந்த உரல் மூலமாகவும் அவர் சொல்லிய பொய் அம்பலப்படுத்தப்படும்.

  \ இது போன்ற மனநிலை மனிதர்களுக்கு எந்த பதிலும் திருப்தி அடையச் செய்ய முடியாது. \

  வால்மீகி ராமாயணத்தில் சீதாபிராட்டியின் மீது அபவாதம் சொன்னது வண்ணான் என்று தான் அறவே தெரியாத விஷயத்தை சகலகலாவல்லவர் என்ற பட்டத்தை ஸ்ரீமான் ஜெயபாரதன் மற்றும் ஸ்ரீமான் ஜான்சன் போன்ற அறிஞர்களிடம் வாங்கிய ஷாலி அவர்களுக்கு தான் சொன்ன விஷயம் மூலநூல் சார்ந்து பொது தளத்தில் அம்பலப்படுத்தப்படும் என்றால் வருத்தமாகத் தான் இருக்கும் இருக்காதா பின்னே.

  கவலைப்படாதீர்கள். உங்களது கருத்து தப்பு என்பது பொது தளத்தில் ஜெயபாரதன் அவர்களின் புண்ணியத்தில் அம்பலமானாலும் அவர்கள் தொடர்ந்து உங்களை சகலகலா வல்லவர் என்று சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்.

  ம்ஹும்……….கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற மனநிலையில் உள்ள மனிதர்களை என்னவென்று சொல்வது?

 55. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ காப்பியத்தை விமர்சனம் செய்வோர் வால்மீக இராமயணத்தப்புரட்டிப்போட்டார் என்று இந்துக்களுக்கு ஏன் கவலை? \

  ஆமாமில்லை. வால்மீகி ராமாயணத்தைப் புரட்டிப்போட்டார் என்றால் ஹிந்துக்களுக்கு கவலை வரக்கூடாது என்று ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஃபத்வா விதிப்பது ஏன் என்று புரிகிறது.

  வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படாத செய்திகளை சொல்லியதாக ஒரு பேராசிரியப்பெருந்தகை புரட்டுக்கருத்து தெரிவித்தால் அதை மறுப்பதற்கு ஒரு ஹிந்து தான் வரவேண்டும் என்று இல்லை தான். ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ கூட செய்யலாம்.

  அந்தப் புரட்டுகளை வால்மீகி ராமாயணச் செய்யுட்களை மேற்கோள் காண்பித்து அம்பலப்படுத்துவது வேண்டிய அடிப்படைத் தகுதி வால்மீகி ராமாயணம் என்ற நூலைப் பற்றிய பரிச்சயம் உள்ளவர் செய்ய முடியும்.

  அதுசரி, வால்மீகி ராமாயணத்தைப் புரட்டிப்போட்டார் விக்ஞானி .

  \ வால்மீகி இராமாயணத்தை எவரும் தனிச்சொத்தாக்கி விட்டார்களா? காப்பி ரைட் இருக்கிறதா? \

  இல்லையே. அதனால் தான் ராமாயணம் பற்றிய கருத்து தெரிவிக்க வேண்டுமானால் கூகுள் சர்ச் மட்டிலும் செய்யாது ராமாயணச் செய்யுட்களை வாசித்து கருத்துச் சொல்லுங்கள் ஐயன்மீர் என்று சொல்லியுள்ளேன். காப்பி ரைட்டோ சாய் ரைட்டோ இல்லாததால் தான் ஐயன்மீர்.

  விக்ஞானியான ஒருவர் சொல்லும் புரட்டுக்கருத்துக்களை கவர் செய்ய இருவர். இருவரும் விவாதத்தில் உள்ள விஷயத்தைப் பேசவே கூடாது என்று ப்ரதிக்ஞை எடுத்தவர்கள். ஓ கீழே விழுந்தாலும் ஜனகனுக்குப் பிறந்தவன் ராமன் என்றும் அஸ்வமேத யாகத்தின் மூலம் பிறந்தவன் ராமன் என்றும் சகலகலாவல்லவத்தனத்துடன் சொன்னால் கீழே விழுந்தால் என்ன. மண்மேட்டால் மூடப்பட்டாலும் கூட மண் ஒட்டவில்லையே என்று தான் சொல்லத்தோன்றும்.

 56. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ அப்படியே விமர்சனம் செய்ய விழைந்தால் இராமாயணத்தைப்பொது நூலாக எடுத்த்ப்பேசுவோராக மட்டுமே இருக்கவேண்டும். \

  ஆமாம். ராமாயணத்தைப் பொது நூலாக எடுத்துப்பேசுவோர் மட்டுமே விமர்சனம் செய்ய விழைய வேண்டும். உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள் போய் ராமாயணத்தைப் படித்து விட்டு மேற்கொண்டு விமர்சனம் செய்யுங்கள். கூகுள் சர்ச்செல்லாம் வேலைக்குதவாது என்று.

  விமர்சனம் செய்யப்பட்ட விஷயங்கள் என்னென்ன என்பது மிகத்தெளிவு. ஸ்ரீமான் ஜெயபாரதன் எழுதிய விஷயங்களில் ஒவ்வாத விஷயம் என்று நான் விவாதம் செய்தவையே என் கடுமையான விமர்சனத்துக்குட்பட்ட விஷயங்கள். நான் விவாதம் செய்த ஒவ்வொரு விஷயத்திலும் விஷயத் தெளிவு எனக்கு முழுமையாக உண்டு.

  ஸ்ரீமான் ஜெயபாரதன் சொல்லிய ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்களையும் அன்பர் அவர்களின் க்றைஸ்தவ மத துஷ்ப்ரசாரக் கருத்துக்களையும் ஒருங்கே வைத்தால் வாசிக்கும் வாசகர்கள் ஸ்ரீமான் ஜெயபாரதன் சொல்ல வருவது என்ன என்பதை முழுமையாக அறிவர்.

  சுவிசேஷ ப்ரசங்கம் நிகழ்த்துவர்களுக்கு அது கசப்பாக இருக்கலாம் தான்.

  \ இராம பக்தர்கள் விவாதம் பண்ண மாட்டார்கள். \

  \ அனுமனைக்கும்பிடுவோர் அவன் குரங்கா? குரங்கு எப்படி பேசியிருக்க முடியும்? என்றெல்லாம் நினைத்துப்பார்க்க மாட்டார்கள். \

  ஆமாம். அது விவாதத்திற்கு உரிய விஷயமே இல்லையே.

  விவாதத்திற்கு உரிய விஷயம் ராமாயணத்தில் வானரர்கள் எப்படி portray செய்யப்பட்டார்கள் என்பது விவாதத்திற்கு உரிய விஷயம்? சகலகலாவல்லவரால் பாலாபிஷேகம் செய்யப்பட்ட ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் வால்மீகி முனிவர் தென்னவரை குரங்குகளாகக் காண்பித்து வடவரை மனிதர்களாக வால்மீகி முனிவர் காண்பித்துள்ளார் என்பது விவாதத்திற்கு உரிய விஷய்ம்

 57. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ எனவே, கிருஸணகுமாரின் எந்த நிலையில் இருந்து ஜயபாரதனின் சீதாயாணத்தை எதிர்க்கிறார்? \

  வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படாத செய்திகளை ஸ்ரீமான் ஜெயபாரதன் சொல்லியதான புரட்டுக்கருத்துக்களை பொது தளத்தில் உரியதான சான்றாதரங்களை வேறு வேறு பதிப்புகளாலான வால்மீகி ராமாயணத்தில் இருந்தும் மற்ற ராமகதைகளிலிருந்தும் முன்வைத்து அம்பலப்படுத்த வேண்டும் என்ற நிலையில் சீதாயணத்தை எதிர்க்கிறேன்.

  தான் எழுதிய கதை நிஜத்தில் நடந்த நிகழ்வு என்று ஜெயபாரதன் சொல்லி அதற்கு இது வரை எந்த ஆதாரமும் கொடுக்காத பொய்யை எதிர்க்கிறேன்.

  வால்மீகி ராமாயணம் என்ற நூலில் எழுதப்பட்ட விஷயங்கள் என்ன என்று கூடத் தெரியாது…… ஆனால் அந்த நூல் இடைச்செருகல்களுக்கு உட்பட்டது என்று மட்டிலும் சொல்லாது இடைச்செருகல்களால் பொய்க்கதையாக ஆனது என்று தான் தோன்றித்தனமாக அடித்துவிட்ட விஷயத்தை எதிர்த்து பொதுதளத்தில் அதை விளக்கியுள்ளேன்.

  புனைவு என்ற அடிப்படையில் எழுதப்பட்டிருந்தால் — சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகும் ஒரு பெண் எடுக்க வேண்டிய அறுதி முடிவு ஆத்மஹத்யை என்ற கருத்தில் ஜெயபாரதன் எழுதிய புனைவை நிர்தாக்ஷண்யமாக பெண்மையை இழிவு செய்யும் ஒரு அவல அலக்கியமாக எதிர்க்கிறேன்.

  சீதாயண அலக்கியம் என்ற பெயரில் முன்னுரை பின்னுரை போன்ற பினாத்தலுரைகளின் வாயிலாக ஸ்ரீமான் ஜெயபாரதன் பொழிந்துள்ள ஹிந்துமதக்காழ்ப்புக்கருத்துக்களை அன்பர் அவர்கள் பகிர்ந்துள்ள க்றைஸ்தவ மத துஷ்ப்ரசாரக் கருத்துக்களுடன் ஒருங்கே பொதுதளத்தில் முன்வைத்து வாசகர்களின் முடிவுக்கு வைக்கிறேன். அன்பர் அவர்களின் போலி மதச்சார்பின்மையில் பொதிந்துள்ளது மதச்சார்பின்மையா க்றைஸ்தவ சம்ப்ரதாயவாதமா என்பதனை பொது வாசகர்கள் அவதானிக்கட்டும்.

  என் எதிர்வினை வ்யாசத்தில் பங்கு கொண்டு அவர்களது மேலான கருத்துக்களை — தாங்களாக கற்பனை செய்யாத விஷயங்களாக இல்லாது — நான் விவாதத்திற்கு முன்வைக்கும் விஷயம் சார்ந்து — கூகுள் சர்ச் சொல்வது தான் உண்மை என்ற மாயையில் இருந்து வெளி வந்து — மூலநூலில் என்னதான் சொல்லியிருக்கிறது என்பதனை அறியவும் விவாதிக்கவும் வரவேற்கிறேன். சகலகலாவல்லவர்கள் விதண்டாவாதமே செய்யவே விழைந்தாலும் மூலநூலையும் வாசித்து அதன் பின் விதண்டாவதம் செய்ய வரவேற்கிறேன்.

  ஆகவே என்னுடைய எழுத்திலான வரவேற்பையே வெற்றிலைபாக்குடன் கூடிய தாம்பூலமாக பெரியமனது கொண்டு எண்ணி விவாதத்தில் பங்கு பெறுமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  அதுவும் பெரும் எழுத்தாளரால் நகைச்சுவையாளராக அபிஷேகம் செய்யப்பெற்ற அன்பர் விவாதத்தில் பங்கு கொண்டால் விவாதத்தில் நகைச்சுவையும் கலக்கும் என்ற படிக்கும்.

  வாருங்கள் வந்து கலக்குங்கள்.

  என்ன தான் சண்டே டூ மண்டே சண்டே போட்டுக்கொண்டாலும் உங்களது உத்தரங்கள் வாசிக்காது தூங்காத பேரன்புடைய சிறியேன்

  க்ருஷ்ணகுமார்

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   மேலே எழுதியவை பதில் கிடையாது. என் கேள்வி: இராமாயணத்தை ஒரு காவியாமாக மட்டும் படித்து இராமன் சீதையை மனிதர்களாக மட்டுமே கொண்டு இராமாயண்த்தையும் அதன் கதாமாந்தர்களையும் விமர்சனம் செய்வோரிடம் இந்துக்களுக்கு என்ன தொடர்பு என்று கேட்டால் அது ஃபத்வா ஆகாது. காரணம் தொடர்பே இருக்க முடியாது. அம்மாந்தர்களில் சில பல செயல்களைக்கண்டிப்பது இந்து என்று சொல்பவருக்குக் கோபம் வந்தால் அவர் இந்து இல்லை. தாலிபான். இந்துக்கள் இப்படி இராமாயணத்தைப்படிப்போரை வெறுப்பதில்லை. இராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஏகப்பட்ட புனைகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவ்வெழுத்தாளர்களையெல்லாம் இந்துமதக் காழ்ப்புணர்வு கொண்டோர் என்று இதுவரைக்கும் எவரும் சொல்லி அவர்களைக் கொல்லத்துணியவில்லை. இப்போக்கு இன்றைய இந்துத்தவ ஊக்கச்சிந்தனை. இராமானுஜனின் இராமாயணத்தை ஜே என் யு வில் வைக்கக்கூடாதென்று போராட்டம் நடாத்தியவர்கள் இந்துத்வாவைச்சேர்ந்த மாணாக்கர். ஏ பா வி பரிஷது.

   ஜயபாரதன் இந்துவன்று. அவர் வால்மீகி இராமாயணத்தை எப்படியும் வைத்து எழுதலாம். வரலாற்றில் ஒரு சில புள்ளிகளை மட்டும் மையமாய வைத்துத்தான் மாபெரும் வரலாற்று நாடகங்களும் காவியங்களும் எழுத்ப்பட்டிருக்கின்றன. இலக்கியம் அச்சடித்த காப்பியாக இருக்காது.

   ஜயபாரதனின் நூலை அப்படித்தான் எடுக்க வேண்டும். அவரும் அதையே சொல்கிறார். அச்சடித்த காப்பியாக இருந்தால் மட்டுமே எழுத வேண்டும் என்பதுதான் ஃபத்வா.

 58. Avatar
  IIM Ganapathi Raman says:

  ஏன் தொடர்பு இருக்கக்கூடாது? –

  ஆண்டாள் அனாதைக்குழந்தையாகத்தான் கண்டெடுக்கப்பட்டாள். அதே போலவே திருமழிசையாழ்வாரும். இப்புள்ளிகளை வைத்து ஒரு வரலாற்றுப்புனைவு இலக்கியம் படைக்கலாம். ஆனால் இந்துக்களுக்கு அதாவது உண்மை வைணவருக்கு இயலாது. அவர்களூக்கூ ஆண்டாள் பூமிதேவியின் அவதாரம். திருமழிசையாழ்வார் திருமாலில் மார்பிலிருந்து வந்தவர். இப்படியே அனைத்து ஆழ்வார்களுக்கும் மனுசியின் வயிறு இல்லை. திருமாலில் அங்கங்களாகப் பிறந்தார்கள். இப்படி நம்புவந்தான் அம்மதத்தில் இருக்க முடியும். அதே சமய்ம் இப்படி நம்பு என்று மற்றவர்களை நிர்ப்பந்தப்படுத்தி நம்பாமல் புனைவு இலக்கியம் படைத்தால் அவர் கையை வெட்டுவோம்; காலை வெட்டுவோம்; பொது இடத்தில் பொய்யுரை பரப்புகிறரர்; அமபலப்படுத்துவோர் என எவரும் கத்தூவதில்லை. கிருஸ்ணகுமார் அதைத்தான் செய்துவருகிறார்.

  எந்த நிலையிலிருந்து என்றால் சொல்லத்தெரியவில்லை. இந்து என்ற நிலையில் இருந்து செய்ய முடியாது எனப்தே என தெளிவான கருத்து.

  முடிவு: எவரும் இராமாயணம் தெயப்பனுவலன்று; கதாமாந்தரகள் தெப்வங்களல்ல. வால்மீக் இராமாயணத்தை அடிப்படையாக வைத்து இலக்கியம் பின்னலாம். இதை எவரும் செய்யலாம். செய்பவரை எதிர்ப்பவர்கள் தாலிபான்கள்.

  இந்துக்களுக்கு இராமாயணமும் மஹாபாரதமும் 100/100 உண்மை. கதாமாந்தர்கள் தெய்வங்கள். அதேவேளையில் அவர்கள் பிறர் இவ்விதிஹாசங்களை அவர்கள் விருப்பின்படி படித்து விமர்சனம் செய்ய இந்துமதம் பிறமதங்களைப்போல அடி கொல் அவனை என்று தூண்டவில்லை. பேராசிரியர் ஜோசப்பின் கையை வெட்டியோர், நியு யார்க்கில் டவரை வெடிவத்துத் தகர்த்த தாலிபான்கள் அவர்கள் மதக்கட்டளையாக நிறைவேற்றினார்கள். இந்துக்கள் செய்வதில்லை.

  காழ்ப்புணர்ச்சி என்பது மிகவும் தாறுமாறாக இங்கு கிருஸ்ணகுமாரால் பயனபடுத்தப்படுகிறது. புனைவு இலக்க்கியம் படைத்தல் காழ்ப்புணர்ச்சியாகாது.

 59. Avatar
  ஷாலி says:

  //முடிவு: எவரும் இராமாயணம் தெய்வப்பனுவலன்று; கதாமாந்தரகள் தெய்வங்களல்ல. வால்மீக் இராமாயணத்தை அடிப்படையாக வைத்து இலக்கியம் பின்னலாம். இதை எவரும் செய்யலாம். செய்பவரை எதிர்ப்பவர்கள் தாலிபான்கள்.//

  அன்பு நண்பர் திரு.IIM.Ganapathy Raman மிக அழகாக சொல்லிவிட்டார்கள்.உண்மை இதுதான். ஒரு சின்ன உதாரணம் சீதாபிராட்டி ஸ்ரீ லஷ்மி அம்சம் பொருந்தியவள்.சீதையின் தெய்வத்திரு மேனியை கம்பரை விட வேறு எவரும் புகழ்ந்து கண்ணியப்படுத்தி விட முடியாது.அதே கம்பன் சீதையை எதை வைத்து அடையாளம் காணுவது என்பதை ஸ்ரீ ராமன் வாய் மூலம் உரைக்கின்றான். எந்த மானிட கணவன் கூட இப்படி தன் மனைவியின் அங்கங்களைக் கூறி அடையாளம் காட்ட மாட்டான்.ஆனால் ஸ்ரீ விஷ்ணு அவதாரமான ஸ்ரீ ராமன் கூறுவதாக கம்பன் காட்சி அமைக்கின்றான்.

  “வாராழி கலசக் கொங்கை
  வஞ்சி போல் மருங்குவாள் தன்
  தாராழிக் கலைசார் அல்குல்
  தடங்கடற்கு உவமை தக்ககோய்
  பாராழி பிடரில் தங்கும் பாந்தழும்
  பணி வேன் றோங்கும்
  ஓராளித் தேறும் கண்ட உனக்கு
  நான் உரைப்பதென்ன?

  எந்த ஒரு படைப்பிலும் இலக்கிய சுவையை மட்டும் பார்க்க வேண்டும்.ஆனால் மேற்படி தாலிபானுக்கு இதெல்லாம் தெரியாது.திரு.ஜெயபாரதன் அவர்களுக்கும் கம்பர் அளவுக்கு கன பரிமாண இலக்கியம் படைக்க தெரியவில்லை.தெரிந்தால்,பட்டம் கிட்டும் பரிவட்டம் கட்டும் மேற்படி கூட்டம்.

  1. Avatar
   புனைப்பெயரில் says:

   “A few days after Sita’s disappearance, a messenger came to Rama from the gods, who intimated to him that his mission on earth was finished and he was to return to heaven. These tidings brought to him the recognition of his own real Self. He plunged into the waters of Sarayu, the mighty river that laved his capital, and joined Sita in the other world…”

   1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ////புனைப்பெயரில் says:
    February 14, 2014 at 6:50 am
    your interpretation is too dangerous to the society. Now I realize why some people go mad at people like you.
    in the link given by you, only the below is given, and it is not suicide.. you need to grow – mentally…///

    THINNAI EDITOR SHOULD REMOVE THIS UNCIVILIZED EMAIL, AS IT IS A PERSONAL ATTACK.

    S. JAYABARATHAN

 60. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் ஷாலி

  தாங்கள் பகிர்ந்த பாத்ம புராண குறிப்புகளை மூல நூலாதாரம் சார்ந்து சரிபார்த்துள்ளேன். தகவலுக்கு நன்றி. பாத்ம புராணப்படி வண்ணான் சொன்ன விஷயங்களை மூல நூல் சார்ந்து மூல ச்லோகங்களை சுட்டி என் அடுத்த வ்யாசத்தில் விசாரிப்பேன்.

  ஆனால் இது ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு உபகாரமாக இருக்காது.

  இது என்னுடைய அடுத்து வரும் வ்யாசத் தொடரில் மூல நூல் சார்ந்தும் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது முகத்திரையிடப்பட்ட போலிப் பகுத்தறிவுக் கருத்துக்கள் மூலமும் அணுகப்பட்டு பொதுதளத்தில் வைக்கப்படும். அன்பர் அவர்களது இரட்டை அலகீடுகள் அம்பலப்படுத்தப்படும்.

  இணைய பேத்தல்களையும் காபி பேஸ்ட்களையும் மூலநூல் சாராது நான் ஏற்பதில்லை. வால்மீகி ராமாயணப்படி சீதாபிராட்டியின் மீது அபவாதம் சொல்லியது *கேடுகெட்ட வண்ணான்* என்ற பொய்க்கருத்தை நான் புறந்தள்ளியது மூல நூல் சார்ந்து. இதுவும் என்னுடைய அடுத்த வ்யாசத் தொடரில் அம்பலப்படுத்தப்படுத்தப்படும் விஷயம்.

  நான் இது வரை என்னுடைய ஒரு உத்தரத்திலும் கூட ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் தன்னுடைய *சீதாயணம்* என்ற அலக்கியத்தை எழுதுவதில் உள்ள உரிமையை கேழ்விக்கு உட்படுத்தவில்லை என்பது. நான் எதிர்க்கும் விஷயங்களை தெளிவாகப் பட்டியலிட்டுள்ளேன்.

  அது மட்டுமில்லாது இந்த அலக்கியத்தில் உள்ள பாராட்டத் தகுந்த விஷயங்களை நான் இதே தளத்தில் பாராட்டியும் உள்ளேன் என்பது.

  **** தகர முதல எழுத்தெல்லாம் பேதி பகவன்*** என்று ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் ……வேண்டுமானால் ஜெயக்குறள் என்று தன்னுடைய குறட்பாக்களாக எழுதி பொது தளத்தில் பதிவிட்டு யாரையாவது பதிப்பாளரை கூப்பிட்டு புஸ்தகம் கூட போடலாம். அவரை ஸ்துதி பாட விழையும் கூட்டம் அதை ஸ்துதிக்கவும் கூட செய்யலாம் தான்.

  ஆனால்

  ****தகர முதல எழுத்தெல்லாம் பேதி பகவன்*** என்பது திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் முதல்பா என்று ஸ்ரீமான் ஜெயபாரதன் எழுதினால்…………….. அதை அவருடைய ஸ்துதி பாடிகளின் கூட்டம் முழுப்பூசணிக்காயை ஒரு கபள சோற்றில் மறைப்பது போல் மறைக்க முனைந்தாலும்……..நிச்சயம் நான் அது போன்ற பண்டாஃபோட் சமாசாரத்தை பொது தளத்தில் அம்பலப்படுத்துவேன்.

  வசவு பசவெல்லாம் எனக்கு என்றும் பொருட்டு இல்லை. அவற்றினூடே அபூர்வமாக கிட்டும் அருமையான தகவல்கள் எனக்கு கண்டிப்பாக பொருட்டானவை. அப்படி பாத்ம புராணம் சார்ந்த ஒரு கருத்துப் பகிர்ந்த தங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 61. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  ////All of a sudden, the old murmur arose: “The test! The test!” Poor Sita was so terribly overcome by the repeated cruel slight on her reputation that it was more than she could bear. She appealed to the gods to testify to her innocence, when the Earth opened and Sita exclaimed, “Here is the test”, and vanished into the bosom of the Earth. The people were taken aback at this tragic end. And Rama was overwhelmed with grief.

  A few days after Sita’s disappearance, a messenger came to Rama from the gods, who intimated to him that his mission on earth was finished and he was to return to heaven. These tidings brought to him the recognition of his own real Self. He plunged into the waters of Sarayu, the mighty river that laved his capital, and joined Sita in the other world.///////

  These are the lines of Swami Vivekananda. I have shown how human beings Rama and Seetha died in the End. I do not know how divine beings have died.

  The Great Messenger & Mahatma Jesus Christ also died as a human being, crucified by the Romans in the cross.

  S. Jayabarathan

 62. Avatar
  ஷாலி says:

  அவுக….. வால்மீகி மூல நூலில் உள்ள வ்யாசத்தைத்தான் விசாரிப்பாக… அருள்மிகு கூகுலாண்டவர் சன்னதிக்கு அவுக போகமாட்டாக! சரி மூலம் என்ன சொல்லுதுன்னு பாப்போம்!

  வால்மீகி ராமாயணம் யுத்த காண்டப்படி குரங்குகள் (வானரர்-வனம் என்றால் காடு நரர் என்றால் மனிதர்கள் அதாவது காட்டுவாசிகள்) பாக் ஜல சந்தியில் (சேது அணை) கட்டிய பாலம் 100 யோஜன நீளமும் 10 யோஜன அகலமும் உள்ளது என்று கூறுகிறது.
  ஒரு யோஜனம் என்பது 12.87 கி.மீ அப்படியென்றால் இராமர் பாலம் 1287 கி.மீ நீளமும் 128.7 கி.மீ அகலமும் இருக்க வேண்டும். கம்பனும் வால்மீகியை சரி கண்டு “ஓசனை ஒரு நூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை” என்று கூறுவது கவனிக்கத்தக்கது.

  ஆனால் உண்மை நிலவரம் என்ன? இராமேஸ்வரம் TO இலங்கை மன்னார் பாலத்தையும் சேர்த்து வெறும் 21 கி.மீ தான்.அப்படியென்றால் மீதமுள்ள 1266 கி.மீ எங்கே?இலங்கையின் மொத்த நீளமே 440கி.மீ. மட்டுமே.அப்ப இலங்கையையும் தாண்டி பாலம் எங்கே போகுது இந்தோனேசியாவுக்கா? வடநாட்டு வால்மீகி க்கு தெரியாதது சரிதான்.நம்ம தென்னாட்டு கம்பனாட்டாழ்வாருக்கும் இந்த கணக்கு தெரியாமல் போயிடுச்சு. நம்ம உத்தர பாரதத்து உத்தமர் என்ன கணக்கு வச்சிருக்கார்.? இதையும் தன் வ்யாசத்திலே அம்பலப்படுத்திட வேண்டுகிறோம்

 63. Avatar
  ஷாலி says:

  இராமன் சென்ற பாதை அயோத்தியிலிருந்து கங்கை நதி வரை 55 மைல், கங்கையிலிருந்து சித்திரக்கூடம் வரை (யமுனை நதியை கடந்து சென்றது வரை)45 மைல், (அடுத்து இராமன் தங்கியது ஆத்ரீ முனிவர் ஆசிரமம்) சித்துரக்கூடத்திலிருந்து ஆத்ரீ முனிவர் ஆசிரமம் வரை 12 மைல், (ஒரு நாள் பயணம்) ஆத்ரீ முனிவர் ஆசிரமத்திலிருந்து சரபங்க முனிவர் ஆசிரமம் வரை 12 மைல், அடுத்து சரபங்க முனிவர் ஆசிரமத்திலிருந்து சுதீக்‌ஷண முனிவரின் ஆசிரமம் வரை 20 மைல், சுதீக்‌ஷண முனிவரின் ஆசிரமத்திலிருந்து அகத்தியருடைய சகோதர்ரின் ஆசிரமம் வரை 18 மைல், அங்கிருந்து அகத்தியரின் ஆசிரமம் நான்கு (4) மைல், அகத்தியரின் ஆசிரமத்திலிருந்து தெற்கே பஞ்சவடியில் இராமன் பர்ணசாலையை அமைத்த இடம் வரை (9) ஒன்பது மைல் ஆக அயோத்தியிலிருந்து பஞ்சவடி வரை இராமன் தெற்கு நோக்கி வந்தது 200 மைல்களே. அதை அடுத்து இருந்த நீர் சூழ்ந்த பகுதியே இராவணனின் லங்காபுரியாகும். இந்த வர்ணனை ஆரண்ய காண்டம் 116வது சர்க்கம் முழுவதிலும் வால்மீகியால் சித்தரிக்கப்படுகிறது.

  கிஸ்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திர மலையை கால் நடையாக சென்றடைய ஸ்ரீ ராமன் எடுத்துக்கொண்ட காலம் வெறும் நான்கு நாட்கள். இது ஒரிஸ்ஸாவில் உள்ள மகேந்திரமலையாகும்.தமிழ் நாட்டிலுள்ள மகேந்திர கிரி அல்ல.கிஸ்கிந்தையிலிருந்து இராமேஸ்வரம் 1500 மைல் தொலைவு உள்ளது.நான்கே நாட்களில் ஆயிரம் மைல் நடக்க முடியாது.

  வால்மீகி குறிப்பிடும் பூகோள வர்ணனைகள் இன்றுள்ள ஸ்ரீ லங்கா அல்ல.இராமன்,லட்சுமணன்,அனுமன், ஆகியோர் விந்திய மலைக்கு தெற்கே வரவே இல்லை.விந்திய மலைக்கு வடபகுதியில் வாழ்ந்த கோண்டு இனக்குழுவின் தலைவனே இராவணன்.
  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)

 64. Avatar
  ஷாலி says:

  வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் சர்கா 22-ல்,இராமன் விடும் அம்புகள் கடல் நீரை வற்றவைத்து நிலமாக்கியது.அந்நிலத்தில் வானர குரங்குகள் கொண்டு வந்த கற்கள்,மலைகள்,மரங்களைப்போட்டு பாலம் அமைத்ததாக கூறு வதைக்காணலாம்.

  இராமன் கடலை நோக்கி அம்பு எய்தால் கடலுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் எனக்கருதி கடல் தேவனே தனது நீரை குறுக்கிக்கொண்டு பாலம் அமைக்க வழி வகுத்தான் என்றும் இதனால் நீரில் உள்ள முதலைகளால் குரங்குகளுக்கு எத்துன்பமும் ஏற்படாது என்றும் கூறப்பட்டது.அதற்க்கு ராமன்,”நான் அம்பை எடுத்து எய்து விட்டால் அது எதையாவது அழிக்காமல் வீணாகாது.” என்று கூறியவுடன்,கடல் தேவன் கூறினான்,”இராமா! எனது வட எல்லையில் ஒரு புனிதமான இடம் உள்ளது (Drumatulya) அங்கு அநேக கொள்ளைக்காரார்கள் அபிராஸ் என்னும் தலைவனை வைத்துக்கொண்டு என் நீரைக்குடித்து அட்டகாசம் செய்கிறார்கள்.அவர்களை என்னால் தண்டிக்க முடியவில்லை.உனது அம்பை வீணாக்காமல் அவர்களை அழிக்கச் செய்!” என்கிறான் உடனே இராமன் அத்திசையை நோக்கி பாணத்தை செலுத்தி அவர்களை அழிக்கின்றான்.

  அம்பு பட்ட இடம் இடி மின்னல் கிறுகிறுக்க நீர் எல்லாம் உறுஞ்சப்பட்டு பாலைவனமாக ஆக்கப்பட்டது. அதுதான் இன்றைய புகழ்பெற்ற மாரு பாலைவனம் Maru-Malwar in Rajastan.

  வால்மீகியின் லங்காபுரி வட இந்தியாவில் உள்ள ஒரு பகுதி.அன்றைய சிங்களம்,சிலோன் அல்ல.மேலும் பாக் ஜல சந்தியில் முதலைகள் வசிப்பது இல்லை.அது நன்னீர ஆற்றில் மட்டும் வசிப்பவை. எந்த கொள்ளக்காரனும் கடல் உப்பு நீரை குடிக்க மாட்டான்.சாஹரம் ,சமுத்திரம் என்பது பொதுவாக கடலுக்கும் பெரிய நதிகளுக்கும் கூறப்படுகிறது.கிருஷ்ணா ராஜ சாஹரம்,சிவ சமுத்திர நீர்வீழ்ச்சி எல்லாம் கடல் அல்ல கடல் போன்ற மிகப்பெரிய நீர் நிலைகள்.இந்த நதியைக் கடக்கவே பாலம் அமைக்கப்பட்டது. ராவணன் கழுதை பூட்டிய ரதத்தில்தான் சீதையை கடத்திச் சென்றான்.ஆகாசத்தில் அல்ல.

  க்ருஷ்ண பருந்தின் பறவை ஆராய்ச்சியில் இந்த வ்யாசங்களையும் ஆராய்ந்து அம்பலப்படுத்த வேண்டும்.

 65. Avatar
  admin says:

  வாதப் பிரதிவாதங்களில் சமநிலை பிறழ்ந்து தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
  ஆசிரியர் குழு.

 66. Avatar
  Dr.G.Johnson says:

  நண்பர் ஜெயபாரதனின் சீதாயனம் நன்றாகவே திண்ணையின் சிறந்த விமர்சகர்களால் அலசி ஆராயப்பட்டுள்ளது. அவற்றில் நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களின் விடாப்பிடியான அந்த வண்ணான் வாதங்களும், சகலகலாவல்லவரான ஷாலி அவர்களின் பிரதி வாதங்களும், கேள்விக் கணைகளும், சிலேடைகளும், அங்கதங்களும் என்னைப் போன்ற வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளன! இவற்றை வால்மீகியும் கம்பரும் படித்தால் எப்படி மகிழ்வார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்தேன். எது உண்மையோ இல்லையோ… இந்த சீதாயணம் ஜெயபாரதனுக்கு பெரும் வெற்றியைத் தந்துள்ளது என்பது மட்டும் உண்மை! டாக்டர் ஜி. ஜான்சன்.

 67. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன்

  \ இந்த சீதாயணம் ஜெயபாரதனுக்கு பெரும் வெற்றியைத் தந்துள்ளது என்பது மட்டும் உண்மை! டாக்டர் ஜி. ஜான்சன். \

  Unfortunately not. The matter of fact is Sh.JB’s flaws have been just touched. Not fully rebutted with apparent source materials.

  அன்பின் ஜான்சன், வால்மீகி ராமாயணம் நான் வாசித்து வரும் காவ்யம். ஸ்ரீ ஜெ.பா வை வாசிக்க வாசிக்க அவர் அடித்து விட்ட தகவல்கள் எனக்கு எட்டிய வரைக்கும் அதை முழுமையாக அணுகிய வரை நான் கருத்துக்களை தெளிவு செய்கிறேன்.

  இரண்டாவது தொடர் தயாராகி வருகிறது with extensive quortes. இடையில் எனக்குத் தமிழகப் பயணம் வாய்த்துள்ளது. அன்பின் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுடைய பொய்க்கருத்துக்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றாலும் வ்யாசத்தில் கசப்பில்லாது அதை எப்படி செய்வது என்பதையும் ஆழ்ந்து அலசி வருகிறேன். நிச்சயம் அவகாசம் எடுத்து செய்யப்படும்.

  அனைவருக்கும் அன்புடன்.
  ஸ்ரீ சீதாராமஜெயம்
  க்ருஷ்ணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *