கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 5 of 18 in the series 26 ஜனவரி 2014
“துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்: மார்ச் 15-இல் காரைக்குடியில் தொடக்கம்

76ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் காரைக்குடி கம்பன் கழகம் இடையறாது கம்பன் திருநாள் நடத்திவருவதும். சென்ற ஆண்டு சிறப்பாக, காலந்தோறும் கம்பன் என்ற பொருண்மையில் உலக அளவில் கருத்தரங்கை நடத்தி, மூன்று பெருந்தொகுதிகளை வெளியிட்டதும் வரலாறு.

இந்த ஆண்டு, பவள விழா நிறைவை ஒட்டி, மீண்டும் கூடுகிறது- பன்னாட்டுக்கருத்தரங்கம்

கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் “துறைதோறும் கம்பன்’ என்ற தலைப்பில் வரும் மார்ச் 15-ஆம் தேதி சர்வதேச ஆராய்ச்சிக் கருத்தரங்கம் காரைக்குடியில் தொடங்குகிறது.

கம்பர் திருநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கம்பன் தமிழ் மையம் சார்பில் 2 நாள்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.

“கம்பன் துறைகள்’ என்ற பொதுத் தலைப்பில் மூன்று பிரிவுகளில் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பொது ஆராய்ச்சிகளுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் பேராளர்களாகக் கலந்துகொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.

பேராளர்களால் அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கம்பன் தமிழ் ஆய்வுக்கோவை என்ற பெயரில் ஐஎஸ்பிஎன் எண்ணுடன் பதிவு பெற்ற நூலாக மார்ச் 15-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

கருத்தரங்கு குறித்த விரிவான விளக்கங்கள், தலைப்புகள், நெறிமுறைகள், பதிவுப் படிவம் அடங்கிய அறிக்கையினை கம்பன் தமிழ் ஆய்வு மையம், கம்பன் மணி மண்டபம், காரைக்குடி-630001 என்ற முகவரிக்கு எழுதி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் kambantamilcentre@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு விவரங்களை மின் அஞ்சலிலோ, தபாலிலோ பெறலாம்.

விவரங்களையும், படிவத்தையும் kambantamilcentre.blogspot.in என்ற மின் வலைப்பூவினை திறந்தும் பெறலாம்.

கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களை 9445022137, 9442913985 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, பேராளர்கள் தங்களது கட்டுரைகளைப் பதிவு செய்ய பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்கொள்ளலாம்.

முனைவர் சொ.சேதுபதி

Series Navigation”ஆனைச்சாத்தன்”நீங்காத நினைவுகள் – 31
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *