திண்ணையின் இலக்கியத் தடம்-21

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

ஜனவரி- 4, 2003 இதழ்:

கடிதங்கள்- சி.மோகன் பட்டியலுக்கு எதிர்வினை புரிந்த கோபால் ராஜாராமின் கட்டுரைக்கு எதிர்வினைகள் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301041&edition_id=20030104&format=html )

உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்- எல் எஸ் என் பிரசாத்- உலக வர்த்தக அமைப்பின் சில ஷர்த்துகள் வளரும் நாடுகளுக்கு சாதகமானவை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301042&edition_id=20030104&format=html )

பிரம்ம ராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்- கலாப்ரியா-
நாளென் வசமிருந்தது நீ
நேரத்தை யெடுத்துக் கொள்ளாததும்
நல்லூழே
கணத்தை நிர்ணயிப்பது
சற்றே
கடினமாயிருந்தது
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301041&edition_id=20030104&format=html )

பெண் படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி- கோசல்யா சொர்ணலிங்கம்- போர்க்காலச் சூழலில் பெண்ணை மானபங்கப் படுத்துவதன் மூலம் அந்த நாட்டின் சுதந்திர வேட்கையை அந்தரமாக்கலாம், நலிவுறச் செய்யலாம் என்னும் வக்கிரத்தை உண்மையாகவே ஊடறு கண்டிக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301042&edition_id=20030104&format=html )

அநித்தமும் அநாத்மமும் – (ஆன்மா குறித்து நாகசேனருக்கும் மினான்டருக்கும் இடையே நடந்த உரையாடல் – எச் .பீர்முஹம்மது
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301044&edition_id=20030104&format=html )

ஜனவரி 12,2003 இதழ்:

எண்ணைக்காக ரத்தம் சிந்த வேண்டுமா?- லெவெலின் எச் ராக்வெல் ஜுனியர்- அமெரிக்கா ஈராக்கின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போர் என்றாலும் உலகம் இதை எண்ணைக்கான போர் என்றே கருதுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301126&edition_id=20030112&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்-43- தாகூரின் ‘காபூல்காரன்’- எழுத்தாளரின் மகள் மினி. அவள் சிறுமியாக இருக்கும் போது காபூலிவாலா “எப்பம்மா மாமியார் வீட்டுக்குப் போவாய்?” என்று கிண்டல் செய்வான். அவளுக்குப் பிடித்த பாதாம் பருப்பை வாங்கி வருவான். ஒரு தகறாரில் சிறை செல்லும் அவன் ஆறு ஆண்டுகள் கழித்து விடுதலை ஆகி வருகிறான். அவளுக்காகப் பரிசுப் பொருட்கள் வாங்கி வருகிறான்.’வீட்டில் விசேஷம் – பார்க்க முடியாது” என்று கூறும் எழுத்தாளரிடம் அந்தப் பரிசுப் பொருட்களைத் தந்து அவளிடம் கொடுக்கும் படி வேண்டுகிறான். அதற்கு உண்டான பணத்தை அவர் தர முன் வரும் போது மறுத்து விட்டு கசங்கிய காகிதம் ஒன்றைக் காட்டுகிறான். அதில் ஒரு சிறு குழந்தையின் கைவிரல் ரேகை உள்ளது. கிராமத்தில் உள்ள தனது மகளின் கை ரேகை அது -அவளை ஒத்த மினியைப் பார்ப்பதில் ஒரு மன நிறைவு என்று விளக்குகிறான். வழக்கத்தை மீறி மணப்பெண்ணை அவன் பார்க்க அனுமதிக்கும் அவர் திருமண செலவுகளில் ஒன்றைக் குறைத்து விட்டு அவனைத் தன் மகளைச் சென்று காணும் படி வற்புறுத்தி அவனிடம் பணம் தருகிறார் எழுத்தாளர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301121&edition_id=20030112&format=html )

மெல்லத் திறக்கும் மனம்- (அபர்ணா சென்னின் மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர்- படத்தை முன் வைத்து சில குறிப்புகள்)- பாவண்ணன்- கலை நுட்பமான படம். ஒவ்வொரு காட்சியும் உயர்வான அனுபவத்தைத் தருகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301122&edition_id=20030112&format=html )

ஜனவரி 19, 2003- இதழ்:

ஸ்வாமி விவேகானந்தர் – பாபா சாகிப் அம்பேத்கர்- சமுதாய கருத்துக்கள்- அரவிந்தன் நீலகண்டன்- டாக்டர் அம்பேத்கர் வேதங்களைத் தானே கற்றறிந்தவர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301193&edition_id=20030119&format=html )

பிறவழிப் பாதைகள்- (சொல் புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச் சுவடு, சிறு பத்திரிக்கை இயக்கம்)-கோபால் ராஜாராம்- பல சிறு பத்திரிக்கைகள் ஒரு சில இதழ்களில் நின்று போவதும், அப்போதைய மிகை உணர்ச்சி ஈடுபாடுகளினால் தொலை நோக்கை இழந்து போவதும் மிக இயல்பாக இங்கே நடக்கிறது. சிறு பத்திரிக்கை என்பதாக இல்லாமல் சிறு பிரசுரங்களாக இவை வெளி வந்தால் அப்போதைய பிரச்சனைக்கு அப்பாலும் இவை நிரந்தரம் பெறும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301195&edition_id=20030119&format=html )

மனம் என்னும் விசித்திரப் புதிர் -(ஒரு தலித்திடமிருந்து- ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில் வெ.கோவிந்தசாமி- புத்தகத் திறனாய்வு)- பாவண்ணன்- 1932ம் ஆண்டில் பிறந்து இளமை முதலே செயல்வீரராக உழைத்து டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் குன்றாத ஆர்வமுள்ளவராக விளங்கி 2002ம் ஆண்டில் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301191&edition_id=20030119&format=html )

எளிமையும் பெருமையும்- (எனக்குப் பிடித்த கதைகள்-44- நதேணியேல் ஹாதர்ணின் ‘கல்முகம்’- ஒரு பள்ளத்தாக்கில் நடக்கும் கதை இது. பல்வேறு வடிவப் பாறைகள் பல முகங்களாகத் தோன்றும். மக்கள் அந்தக் கற்கள் பெரிய மகான்களின் முகவடிவம் என்றும் ஒரு நாள் கல்முகம் போன்ற முக வடிவம் உள்ள ஒருவர் வருவார் என்றும் தீர்க்கமாக நம்புகின்றனர். சிறுவன் எர்னஸ்ட் அவர்களில் ஒருவன். அரசியல்வாதி, பணக்காரன், ராணுவ வீரன் எனப் பலரையும் கல்முகமுள்ள மகான் என நம்பி மக்கள் பிறகு வருந்துகின்றனர். ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்த நற்குணங்கள் அவர்களிடம் இல்லை. எர்னெஸ்ட் வயதாகி ஒரு ஆன்மீக போதகனாகிறான். ஒரு நாள் அவன் மிகவும் மதிக்கும் கவிஞன் ஊருக்கு வரும் போது கவிஞன் முகம் கல்முகம் போலுள்ளது என்று எர்னெஸ்டும், கவிஞன் எர்னெஸ்ட் முகம் தான் கல்முகம் போல் உள்ளது என்றும் நினைக்கின்றனர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301193&edition_id=20030119&format=html )

ஜனவரி 24,2003 இதழ்

மகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)- சி.ஜெயபாரதன், கனடா-

மனிதர் உன் அறப் போருக்கு
ஆதரவு தரவில்லை யெனின் நீ
தனியே நடந்து செல்
தனியே நடந்து செல்
-ரவீந்திரநாத் தாகூர்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301253&edition_id=20030125&format=html )

ஒத்திசைவும் பிரபஞ்சமும்- (கறுப்பு நாய்- சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)- பாவண்ணன்- இந்த அடுக்குகளுனூடே அலைந்து அலைந்து தான் ஒரு கவிஞனால் பறத்தலை சாத்தியப் படுத்திக் கொள்ள முடியும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301251&edition_id=20030125&format=html )

மிர்சா காலிப்பின் கவிதை உலகம்- எச்.பீர் முகம்மது –

அழகின் ஆட்ட பாட்ட
அவையில் அன்னியர்
கூடாது என்றேன் நான்
எழப்பா நட வெளியே
விரட்டினாள் அவள்

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301252&edition_id=20030125&format=html )

கசப்பும் துயரும்- (எனக்குப் பிடித்த கதைகள்-45- ஸாதனா கர்ரின் சிறைப் பறவைகள்) – பாவண்ணன்- குற்றவாளி என்று கைதிகளாகவும், அரசின் சட்டதிட்டங்களின் கைதிகளான அவர்களின் காவலாளிகளையும் சித்தரிக்கும் கதை. பறவை இதில் படிமமாகப் பயன்படுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301253&edition_id=20030125&format=html)

பிப்ரவரி 2 2003 இதழ்: இந்திய 70000 கோடி மதிப்புள்ள உணவுப்பொருளை வீணடிக்கிறது- அறுவடைக்குப் பின்பு விவசாயத்தில் 30-40% உற்பத்திப் பொருட்கள் வீணாகின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20302022&edition_id=20030202&format=html )

அன்பு என்னும் மாமருந்து- (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம்’)- பாவண்ணன்- ஒரு சிறுவனின் கதை. தான் சுற்றுலாவுக்குக் கொண்டு வந்திருந்த உணவுப் பாத்திரத்தை வைத்துத் தன்னை மட்டப்படுத்தும் நண்பர்கள் பொறாமைப் படும் விதமாக அவனது ஆசிரையை வயதுள்ள ஒரு இளம் பெண் அவனிடம் நட்பு காட்டுகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302021&edition_id=20030202&format=html )
புன்னகைக்கும் கதைசொல்லி- அ.முத்துலிங்கத்தின் படைப்புகளை முன் வைத்து- ஜெயமோகன்- அ.மு. அடிப்படையில் ஒரு கதைசொல்லி. ஒன்று அவர் கதை சொல்வார். அல்லது கதாபாத்திரம் கதை சொல்லும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302022&edition_id=20030202&format=html )

சொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்- தேவர் மகனும் தலித் மகளும்- இரா.மதுவந்தி- பழைய தேவர் பணக்காரர்களும், புதிய தலித் பணக்காரர்களும் மோதுவதுதான் இன்றைய கதை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302024&edition_id=20030202&format=html)

பிப்ரவரி 9 இதழ்: சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்- வே.வேங்கட ரமணன்- முதலில் என்னைக் கடுமையாக பாதித்த புத்தகம் புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’. அதில் உள்ள ‘ம்காமாசானம்’ என்ற கதையைப் படித்த போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வை அடைந்தேன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20302091&edition_id=20030209&format=html )

அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்குப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை- சின்னக்கருப்பன்- இந்தியாவுக்குப் பலர் எரிபொருள் தருகிறேன் என்று சொன்னாலும் அதை வாங்கும் நிலையில் இந்தியா இல்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20302092&edition_id=20030209&format=html )

போலந்து தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்- ஐரோப்பியர்களில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு இந்தியா சென்று தமிழ் கற்று வர நிதி உதவுங்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20302095&edition_id=20030209&format=html )

ஆண் என்ற காட்டுமிராண்டி- மார்வின் ஹாரிஸ்- முரட்டுத்தனமான ஆண்கள் இன்னும் முரட்டுத்தனமான போரை உருவாக்குகிறார்கள். அதற்கு அதிக முரட்டுத்தனமான ஆண்கள் தேவைப்படுகிறார்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20302096&edition_id=20030209&format=html )

சுதந்திரத்துக்கான நாட்டமும் குழந்தைமையும்- (ஆறாவது பகல்- அப்பாஸ் கவிதைத் தொகுதித் திறனாய்வு)- பாவண்ணன் – பயமற்ற சுதந்திரத்துக்கான தாகமே அப்பாஸின் கவிதை உலகம் ஏன்று சொல்லத் தோன்றுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302091&edition_id=20030209&format=html )

மனிதனும் இருப்பும்- மறுபிறப்பு பற்றி சரிபுத்திரருக்கும் மஹா கோத்திரருக்கும் நடந்த இடையே நடந்த உரையாடல் – எச்.பீர்முஹம்மது- புத்தர் மறுபிறப்பை நம்பினாரா?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302092&edition_id=20030209&format=html )

சுருக்கமாகச் சில வார்த்தைகள்- (புகைச் சுவருக்கு அப்பால்)- கவிதைத் தொகுதியின் முன்னுரை- எம்.யுவன்-

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம் என்ற கவிதையின்
சாரமான தனிமை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302093&edition_id=20030209&format=html )

பிள்ளையின் பித்துமனம்-எனக்குப் பிடித்த கதைகள்- 47- அகிலனின் ‘காசு மரம்’ – ஆரஞ்சு சுளையை விழுங்கினால் வயிற்றில் ஆரஞ்சு மரம் முளைக்கும் என்று பள்ளி நண்பர்கள் கூறியதை நம்பி அம்மாவின் வறுமையைப் போக்க நிறைய காசுகளை விழுங்கி உயிர் நீக்கிறாள் சிறுமி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302094&edition_id=20030209&format=html )

புன்னகைக்கும் கதை சொல்லி- அ.முத்துலிங்கத்தின் படைப்புகளை முன் வைத்து (இறுதிப் பகுதி)- ஜெயமோகன்- புதுமைப் பித்தனின் அங்கதம் கசப்பு நிரம்பியது. இருண்மை கொண்டது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302096&edition_id=20030209&format=html )

பிப்ரவரி 15 2003 இதழ்:
ரஷீத் மாலிக் எழுதிய குவாதீம் ஹிந்துஸ்தான் கீ டாரிக் கே சந்த் கோஷே- மதச்சார்பற்ற நூல்களைப் பேசும் போது மாலிக் சில இந்துப் புனித நூல்களைக் குறிப்பிடுகிறார். ரிக் வேதம், சாம வேதம், யஜூர் வேதம், அதர்வண வேதம் ஆகியவை இவை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203021510&edition_id=20030215&format=html )

உலக வங்கி சிபாரிசு- சீனாவுக்கு மாட்டுக் கறி- பிராட் எட்மண்ட்ஸன் – உலக வங்கி இப்போது பால் கிரீம்களையும் மாட்டுக் கறியையும் சீனாவில் பயன்படுத்த வற்புறுத்தத் தொடங்கி விட்டது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20302155&edition_id=20030215&format=html )

ஆண் என்னும் காட்டுமிராண்டி- இறுதிப்பகுதி – மார்வின் ஹாரிஸ்- போர்களும் ராணுவ பலமும் குறையும் போது மட்டுமே ஆணாதிக்கம் குறைய முடியும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20302156&edition_id=20030215&format=html )

இசைக் கலைஞர்களை ஒழிக்கப் பாகிஸ்தான் முயற்சி- NWFP- North West Frontier Province மாநிலத்தில் சினிமாவும் இசையும் தடை செய்யப் பட்டது. இசைக் கலைஞர்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20302159&edition_id=20030215&format=html )

புரியாத முரண்-(குலாப் தாஸ் ப்ரோக்கரின் வண்டிக்காரன் – எனக்குப் பிடித்த கதைகள்-48- பாவண்ணன்- தன்னைக் காதலித்து மணந்த பணக்காரப் பெண்ணான அழகான மனைவியை சந்தேகப்பட்டு விவாகரத்து செய்து விடுகிறான் கணவன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302151&edition_id=20030215&format=html )

பிப்ரவரி 22, 2003 இதழ்:

சேவியரும் குஜராத்தின் ஆதிவாசிகளும்: யோகிந்தர் சிகந்த்: ஆதிவாசிகள் இந்துக்களே அல்ல.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20302232&edition_id=20030223&format=html )

ஒவ்வாமை என்னும் எரிமலை- (ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் – எனக்குப் பிடித்த கதைகள்- 49)- பாவண்ணன்- ஒரு தமிழரால் டெல்லியில் உள்ள அரசு அலுவலகத்தில் வட இந்திய சக ஊழியர் ஒருவருடன் அனுசரித்துப் போகவே முடியவில்லை. அந்த ஒவ்வாமைக்குத் தீர்வே இல்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302231&edition_id=20030223&format=html )

கசடதபற இதழ் தொகுப்பு by சா. கந்தசாமி – ஒரு பார்வை- பிர்காஷ்ராயன்-

வாசன் மகனுக்கென்றால் மட்டும்
அச்சுப் பொறிகள் அடிக்குமா?
முத்துசாமி போன்றவர்கள் சொன்னால்
மாட்டேனென்று மறுக்குமோ?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302233&edition_id=20030223&format=html )

தப்பித்தலின் கணங்கள்- லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனா குறித்து ஒரு பார்வை- எச்.பீர்முகம்மது-
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60302234&edition_id=20030223&format=html)

 

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *