முனைவர் ந. பாஸ்கரன்,
தமிழாய்வுத்துறை,
பெரியார் கலைக் கல்லூரி,
கடலூர்.
உ.வே.சா- வின் கற்றல் மகாவித்வானாரிடம் மிகவும் சிறப்பாக நிகழ்ந்து வந்தது. மகாவித்வானார் கம்பராமாயணம் நடத்தியபோது அதற்கான புத்தகத்தை வாங்கவேண்டும் என்று உ.வே.சா- வின் மனம் விரும்பியது. கம்பராமயணத்தின் ஏழு தொகுதிகளும் ஏழு ரூபாய்க்கு விற்றார்கள். அதனை வாங்க வேண்டும் என்ற ஆசையில் சிறிய தந்தையிடம் சென்று பணம் கேட்டார். அப்பொழுது சிறிய தந்தை தன்னிடமிருந்த ரூபாய் எழுவதை கொடுத்து வாங்கிக் கொள்ளும்படி கூறினார். உ.வே.சா-வும் அப்பணத்தைக் கொண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டார். உ.வே.சா-வின் சிறிய தந்தையின் மாதசம்பளமே எழுபது ரூபாய்தான் என்பதே குறிப்பிடத் தக்கதாகும். 1875–க்குப்பிறகு மகாவித்வானார் உடல் நலம் கவலைக்குரியதாக மாறியது. பாடம் சொல்வதைக் குறைத்துக் கொண்டாலும் அவ்வப்போது மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்கினார். 1876-இல் மகாவித்வானார் சிவலோகப்பதவி அடைந்தார். அதன்பின் உ.வே.சா-வின் வாழ்க்கைப் பயணத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. மகாவித்வானாருக்குப்பின் அவரின் சீடனாக திருவாவடுதுறை மடத்தின் தமிழ்ப்பணிகளைக் கவனிக்கும் பணிகளில் சன்னிதானத்தின் அருளாசியுடன் செயல்பட்டு வந்துள்ளார். அச்சமயத்தில் கும்பகோணம் அரசு கல்லூரியில் பணியாற்றி வந்த தியாகராச செட்டியார் பணி ஓய்வுப்பெறுகிறார். கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றி தன்னுடைய இடத்தை நிறைவு செய்யக்கூடிய தகுதியுள்ள சரியான அறிஞரைப் பற்றி யோசித்து வருகையில் அவரது சிந்தனயில் தட்டுபட்டவர் மகாவித்வனாரின் மாணவர் உ.வே.சா- என்னும் அறிஞரே ஆவார். அவரை திருவாவடுதுறையிலிருந்து அழைத்து வந்துவிட வேண்டுமென்று திட்டமிட்டு புறப்பட்டு சென்றார்.
திருவாவடுதுறை ஆதீனத்தின் அனுமதி பெறல்:
உ.வே.சா- அவர்கள் ஆதீனத்தைச் சார்ந்த இளம் சன்னிதானங்களுக்குப் பாடங்களைப் போதிப்பதைத் தனது கற்பித்தலின் தொடக்கமாக மேற்கொண்டு செயல்பட்டுள்ளார். இடையிடையே தம்பிரானுடன் பல இடங்களுக்குப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளார். சன்னிதானம் உ.வே.சா- வின் மீது அளப்பரிய பற்றுகொண்டவராக இருந்ததால் பொன்னணி, புத்தாடை என்று பலவும் சென்ற இடங்களிலெல்லாம் வாங்கி வழங்கி மகிழ்ந்துள்ளார். அத்தகைய தருணத்தில் உ.வே.சா- வை கும்பகோணம் கல்லூரிதமிழ்ப் பணிக்கு அழைத்து வரும் முயற்சியை தியாகராச செட்டியார் எடுக்கின்றார். உ.வே.சா- விடம் செட்டியார் தமது கருத்தை முதலில் வெளிப்படுத்தியுள்ளார். அதனைக்கேட்ட உ.வே.சா- பல தடுமாற்றங்களுக்குப் பிறகு சன்னிதானம் போகும்படி உத்தரவு கொடுத்தால் வருகின்றேன் என்று சம்மதித்தார். அது போதுமென்று எண்ணிய செட்டியார் அடுத்து சன்னிதானத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மறுநாள், உ.வே.சா- வுடன் தாமும் புறப்பட்டு மடத்திற்கு சென்றுள்ளார். உ.வே.சா- மிகுந்த தடுமாற்றத்துடன் சன்னிதானம் சொல்லவுள்ள பதிலுக்காக காத்திருந்துள்ளார். ஆனால், செட்டியார் நேரடியாக செய்திக்கு வராமல் எப்படியும் சம்மதத்தைப் பெற்று விடுவது என்ற தீர்மானத்தில் மெல்லமெல்ல காயை நகர்த்தியுள்ளார். உ,வே.சா –வை அந்த இடத்திலிருந்து நகர்த்துவதை முதலில் செய்துள்ளார். அதன்படி மகாவித்வானார் எழுதிய ஒரு புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்து வரும்படி அனுப்பிவிட்டார். அதன்பின், தான் ஓய்வுபெறப் போவதையும் அந்த இடத்திற்கு உ.வே.சா- வை அனுப்பிவைக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். இதனால், மடத்திற்கும் தமக்குமான உறவும், உ.வே.சா- விற்கும் மடத்திற்குமான உறவும் தொடர்வதற்கும் வாய்ப்பாக இருக்குமென்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் உ.வே.சா- மடத்திற்கு வந்து செல்வதற்கும் வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி உ.வே.சா- வின் புகழ் ஓங்கி உயர்வதற்கும் வழியமைத்து கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
எல்லாவற்றையும் நிதானமாக கேட்டு அறிந்த மடாதிபதி அவர்கள் மனம்மாறி உ.வே.சா- வை குடந்தைக்கு அனுப்பிவைக்க முடிவெடுக்கிறார். அனுப்பிவைக்கும்படி சொல்லிவிட்டு தியாகராசசெட்டியார் கும்பகோணத்திற்கு சென்றுவிட்டார். சன்னிதானம், உ.வே.சா- வின் தகுதிகளைக் குறிப்பிட்டு ஓர் யோக்கியதா பத்திரத்தைத் தாயரித்து கல்லூரி முதல்வர் கோபாலராவ் அவர்களிடம் கொடுப்பதற்காக கொடுத்தனுப்பினார். உ.வே.சா- திருவாவடுதுறை மட்த்தையும் அம்மட்த்தில் உள்ள எல்லோரையும் பிரிவதற்கான மனமின்றி பிரிந்து சென்றார். புகைவண்டி மூலமாக கும்பகோணத்திற்குச் சென்ற உ.வே.சா- அதிகாலையிலேயே தியாகராசசெட்டியாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இருவரும் இணைந்து கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானார்கள்.
நேர்முகத்தேர்வு:
ஒரு மாட்டுவண்டி முழுவதும் நூறு தமிழ்ப் புத்தகங்களை ஏற்றிகொண்டு உ.வே.சா-வையும் அதில் அமர்த்திகொண்டு கல்லூரி நோக்கி சென்றார். கல்லூரியின் ஓர் அறையில் மேசைமீது நூறு புத்தகங்களைக் கொட்டி அதன்முன் உ.வே.சா-வை அமரச்சொல்லி ஆசிரியார்கள் பலரையும் அங்கே வரவழைத்து ஆளுக்கொரு புத்தகங்களை எடுத்துக்கொண்டு இவரிடம் யார் வேண்டுமானாலும் எந்த கேள்வியையும் கேளுங்கள் இவர் பதிலளிப்பார் என்று உ.வே.சா-வை நோக்கி கையைக் காட்டிவிட்டு அமர்ந்து விட்டார். கேள்வி கேடக வந்த ஆசிரியர்களில் ஒருவர் தமிழில் இவ்வளவு புத்தகங்கள் உள்ளதா? என்று ஆச்சரியப்பட., அவரிடம் ஒரு சிறு பகுதியயைத் தான் எடுத்து வந்துள்ளேன் என்றார். எல்லோரும் அளுக்கொரு கேள்வியைக் கேட்க உ.வே.சா- அமைதியாக., அனைத்திற்கும் பதிலளித்துள்ளார். தாம் கற்ற இலக்கணப் புலமையைக் கொண்டு பலபுதிய பாடல்களையும் புனைந்து கட்டினார். பல பாடல்களை தமது இசை ஞானத்தால் பாடியும் கட்டியுள்ளார். சன்னிதானத்தால் கொடுத்தனுப்பப் பட்ட யோக்கியதா பத்திரத்தையும் படித்துப் பார்த்த கல்லூரி முதல்வர் கோபாலராவ் உள்ளிட்ட அனைவரும் அனைத்திலும் மனநிறைவும் மகிழ்வும் அடைந்தனர். உ.வே.சா-வின் பணி நியமனம் உறுதியானது.
உ.வே.சா-வின் கல்லூரி பணி:
தமக்கு கல்லூரிப் பணி புதியது. ஆகையால், அருகில் இருந்து சில தினங்கள் பழக்க செட்டியார் அவர்களைப் பணிக்க வேண்டுமென உ.வே.சா- முதல்வர் கோபாலராவிடம் அனுமதி வேண்டியுள்ளார். அப்பணிவும் அடக்கமும் அவரின் மேன்மைக்கு சான்றாக விளங்கியதை கண்டு வியந்தனர். மறுநாளிலிருந்து கல்லூரிப் பணிக்கு வர இருந்த உ.வே.சா-விற்கு செட்டியார் அவ்ர்கள்.,
“இந்த உலகம் பொல்லாதது. கல்லூரி பணியில் ஜாக்கிரதையாக இருந்து நல்ல பெயரை வாங்க வேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கு கெளரவம் உண்டாவது படிப்பினாலே தான் அந்த படிப்பை கை விடாமல் மேன் மேலும் ஆரய்ந்து விருத்தி செய்து கொள்ளவேண்டும். கல்லூரிப் பிள்ளைகளிடம் நாம் நடந்து கொள்வது சரியானதாக இருந்தால் அவர்களுடைய அன்பைப் பெறலாம். பாடங்களைத் தெளிவாக நடத்த வேண்டும். நடத்திய பாடங்களில் அவ்வப்போது கேள்விகளைக் கேட்டு மாணவர்களின் கற்றல் அறிவுத்தெளிவை சோதித்து அறிந்து அவரிடம் தெளிவின்மை இருப்பின் அதனை போக்கவேண்டும். சகஆசிரியர்களிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்.”
என்றும் செட்டியார், உ.வே.சா-விடம் பல அறிவுரைகளைக் கூறினார். எல்லாவற்றையும் பணிவுடன் கேட்டுக்கொண்டார். 16.02.1880-இல் உ.வே.சா-வின் கல்லூரிப் பணியின் முதல் நாள் தொடக்கமானது. முதல்நாள் முதல் வகுப்பில் நாலடியாரில் இரவச்சம் என்ற பாடப் பகுதியை நடத்தத் தொடங்கினார். பாடலை ராகத்தோடு பாடியும், எளிய உதாரணக் கதைகளோடு
இணைத்தும் மாணவர்கள் மனம் மகிழிவு கொள்ளும்படி நடத்தியுள்ளார். இதனை,
“ஒரு பாடலைப் பாடம் சொல்லும் போது, வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் மாத்திரம் சொல்லி நிறுத்தினால் கேட்பவர்களுடைய மனம் அதில் பொருந்தாது. அதனால் உபமானங்களையும் , உலக அனுபவச் செய்திகளையும் எடுத்துச் சொல்லி மாணாக்கர்களின் மனத்தைப் பாட்டின் பொருளுக்கு இழுத்தேன்.”
என்ற அவரின் கூற்று அவரின் கற்பித்தல் உத்தியைப் புலப்படுத்துவதாக உள்ளது.
அவர் கற்ற சூழல் திண்ணைப்பள்ளிக்கூட அமைப்பு. அங்கு கற்க வேண்டிய பாடங்களை அவ்வப்போது ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து முடிவெடுத்து கொள்வர். ஆனால், நிறுவன வயப்பட்ட சூழலில் பல்கலைக் கழகத்தால் வகுக்கப்பட்ட பாடத்திட்டத்தை நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதற்கேற்ப உ.வே.சா- தமது கற்றலை அதிகப்படுத்திக்கொள்வதும் கற்பித்தலைத் தேர்வுநோக்கியதாக கட்டமைத்துக்கொள்வதும் அவருக்கு அவசியமானது. உ.வே.சா- தமது கற்றலையும் கற்பித்தலையும் எந்நிலைக்கு ஏற்பவும் தகவமைத்துக்கொள்ள அவரின் அடிப்படை ஞானம் அவருக்கு கைகொடுத்த்து.
புராணங்கள், சிற்றிலக்கியங்கள், இதிகாசங்கள், காரிகை, தண்டி, சமய சாத்திரங்கள், சைவ ஆகமங்கள் என்று பல பாடங்களைப் படித்து அறிவில் நிரம்பிய அவர்., மேலும்; பல பாடங்களைக் கற்று அறிய வேண்டிய நிலை இருந்துள்ளது. இதனை கும்பகோணம் முன்சீப் சேலம் இராமசாமி முதலியாரின் சந்திப்பிற்கு பிறகு உ.வே.சா- உணர்ந்து மிக ஆவேசமான வாசிப்புகளை நிகழ்த்தியுள்ளார். பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு பாடத்திட்டத்தில் பாடத்திற்கானத் தலைப்பை அறிந்த மட்டில் வைத்துவிடுகின்ற நிலை இருந்துள்ளது. பாடத்திற்கான பகுதி அச்சு வடிவத்தில் இல்லாத நிலையில் அதனை ஓலைச்சுவடிகளில் இருந்து படியெடுத்து படித்து நடத்த வேண்டிய நிலை இருந்துள்ளது. தியாகராச செட்டியார் காலத்திலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்ததை குறிப்பிடுகிறார். அதாவது, சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூர் எடுத்த காதை பாடமாக இருந்துள்ளது. அப்பாடத்திற்கான குறிப்பும் புத்தகமும் கிடைக்காத செட்டியார் இது என்ன விழவூர் எடுத்த காதையா? அல்லது எழவு ஊர் எடுத்த காதையா? என்று வெறுத்திருக்கிறார்.
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் என்ற பல நூல்களுக்கான கற்றல் கற்பித்தலில் அவர் நிகழ்த்திய ஆகப்பெரிய தேடுதலே உ.வே.சா-வை பதிப்புப் பணிக்கு இட்டு சென்றுள்ளது. புராணங்கள், சிற்றிலக்கியங்கள், இதிகாசங்கள், காரிகை, தண்டி, சமய சாத்திரங்கள், சைவ ஆகமங்கள் என்று பல பாடங்களைப் படித்து அறிவில் நிரம்பிய அவர்., மேலும்; பல பாடங்களைக் கற்று அறிய வேண்டிய நிலை இருந்துள்ளது. இதனை கும்பகோணம் முன்சீப் சேலம் இராமசாமி முதலியாரின் சந்திப்பிற்கு பிறகு உ.வே.சா- உணர்ந்து மிக ஆவேசமான வாசிப்புகளை நிகழ்த்தியுள்ளார். பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு பாடத்திட்டத்தில் பாடத்திற்கான தலைப்பை மட்டும் அறிந்த அளவில் அதனை பாடமாக வைத்து விடுகின்ற நிலை இருந்துள்ளது. அப்பகுதி அச்சு வடிவத்திற்கே வந்திருக்காது. பாடத்திற்கானப் பகுதி அச்சு வடிவத்தில் இல்லாத நிலையில் அதனை ஓலைச்சுவடிகளில் இருந்து படியெடுத்து படித்து நடத்த வேண்டிய நிலை இருந்துள்ளது. தியாகராச செட்டியார் காலத்திலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்ததை குறிப்பிடுகிறார். அதாவது, சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூர் எடுத்த காதை பாடமாக இருந்துள்ளது. அப்பாடத்திற்கான குறிப்பும் புத்தகமும் கிடைக்காத செட்டியார் இது என்ன விழவூர் எடுத்த காதையா? அல்லது எழவு ஊர் எடுத்த காதையா? என்று வெறுத்திருக்கிறார்.இதுபோன்ற பல சிக்கல்களும் சவால்களும் உ.வே.சா-விற்கு நேர்ந்துள்ளது. அவற்றையெல்லாம் எதிர்கொண்டு செயல்பட்டுள்ளார். உ.வே.சா-விற்கானப் பாட ஒதுக்கீட்டில் ஒருமுறை சிலப்பதிகாரத்தின் கனாத்திறம் உரைத்தகாதையை நடத்தும்படி ஒதுக்கியுள்ளார்கள். அம்மட்டோடு அன்றி அவர் எப்படி நட்த்துவார் என்று பார்த்திடுவோம் என்று கிண்டலும் கேலியும் பேசியவர்களாக சக ஆசிரியர்கள் இருந்துள்ளனர். அதையெல்லாம் முறியடித்து ஆதினத்தின் சுவடிசாலையிலும் நண்பர்களிடத்திலும் என்று பல இடங்களில் கடினப்பட்டுதேடியும் பல உரையாசிரியர்களின் உரைகளை ஒப்பிட்டும் ஒரு ஆராய்ச்சியையே அதில் நிகழ்த்தி மாணவர்கள் மகிழ்வும் நிறைவும் அடையும்படியும், மற்றவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும்படியும் நட்த்தியுள்ளார். பின்னர் அதில் ஏற்பட்ட பல்வேறு அனுபவ தாக்கத்தால் அந்நூலைப் பதிப்பித்தும் புகழடைந்தார்.
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் என்ற பல நூல்களுக்கான கற்றல் கற்பித்தலில் அவர் நிகழ்த்திய ஆகப்பெரிய தேடுதலே உ.வே.சா-வை பதிப்புப் பணிக்கு இட்டு சென்றுள்ளது. அவரின் பதிப்பு பணியில் நிகழ்ந்த தடைகளும் அரசியல்களும் வாய்ப்பிருப்பின் எதிர்காலத்தில் பகிர்ந்து கொள்வோம். கட்டுரையின் சூழல் கருதி பல இடங்களில் குறிப்பிட்ட சாதியைசுட்டி அவர்களை அடையாளப்படுத்தியுள்ளேன். பொறுத்தருள்க.
(நிறைவு செய்கிறேன்.)
- சூரியனை நெருங்கிச் சுற்றும் முதற்கோள் புதன் மெதுவாய்ச் சுருங்கிக் கொண்டு வருகிறது
- “மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2
- தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3
- சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பயணத்தின் அடுத்த கட்டம்
- தினம் என் பயணங்கள் -9
- தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்
- நீங்காத நினைவுகள் 39
- கொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்
- ”பங்கயக் கண்ணான்”
- புகழ் பெற்ற ஏழைகள் -50
- திண்ணையின் இலக்கியத் தடம் – 27
- வெளி
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014
- சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை
- கால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்
- சமுத்திரக்கனியின் ‘ நிமிர்ந்து நில் ‘
- என் நிலை
- உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா
- சீதாயணம் நாடகப் படக்கதை – 2 5
- மொட்டைத் தெங்கு
- வாழ்க நீ எம்மான்.(1 )