(Children of Adam)
(Whoever You are Holding Me Now in your Hand)
இப்போது உன் கரத்தால் என்னைப்
பற்றி கொண்ட நீவீர் யாராயினும் !
(1819-1892)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இப்போது உன் கரத்தால்
என்னைப் பற்றிக் கொண்ட நீவீர்
யாராயினும்,
எல்லாம் பயனற்றுப் போகும்
ஒன்று மட்டும்
இல்லாமல் போயின் !
மேலாக உமக்கு
முன் எச்சரிக்கை விடுப்பேன்
மேற்கொண்டு நீவீர்
முயல்வ தற்கு முன்பு !
நீவீர் நினைப்பது போல்
நானில்லை !
வேறானவன் நான் !
யாரென்னைப் பின்பற்ற வருபவன் ?
என் அன்புக்கு உரியவனாய்
முன்வந்து முத்திரை இடுபவன்
யாரென்று சொல் !
உன் பாதை ஐயப்பாட்டுக்கு
உரியது !
அதன் விளைவு
உறுதிப்பாடு இல்லாதது !
ஒருவேளை
அழிவுக்குச் செல்வது !
இல்லை யென்றால் நீ
எல்லா வற்றையும் கைவிட்டுத்
துறக்க வேண்டும்.
நான் மட்டும் நீ
எதிர்பார்க்கும்
ஏற்புடைய தனிவிதி யென
எண்ணிக் கொள் !
உன் புதுப்
பருவ காலம்
வருவதற்கு நெடுங்காலம்
நீடித்துக்
களைப்புண் டாக்கும் !
கடந்த காலத்தில் நிகழ்ந்த
உன் வாழ்க்கை
வரலாற்றுக் கொள்கை முழுதும்,
உன்னைச் சூழ்ந்தோர்
வாழ்வுகளையும்
கைவிட வேண்டும் நீ !
ஆதலால்
விடுவிப்பாய் என்னை
இப்போது, மேலும்
உன்னைத் துயர்ப்படுத்தும்
முன்பு,
எடுத்து விடு
உனது கரங்களை
எனது தோள் மீதிருந்து !
என்னைக் கீழிறக்கி விட்டுப்
போய்விடு
உன் பாதையில் !
+++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.
- வாழ்க நீ எம்மான் (2)
- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலி
- தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்
- சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்
- பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]
- மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு
- மருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்
- ராதா
- தினமும் என் பயணங்கள் – 10
- திண்ணையின் இலக்கியத் தடம் – 28
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37
- அன்னம் விருது பெறும் எழுத்தாளர் சங்கரநாராயணன்
- நீங்காத நினைவுகள் 40
- புகழ் பெற்ற ஏழைகள் 51
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்பு
- சென்றன அங்கே !
- ’ரிஷி’ கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சீதாயணம் நாடகப் படக்கதை – 2 6
- நெய்யாற்றிங்கரை
- கவிதைகள்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும். 6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)