வால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 5 of 19 in the series 13 ஏப்ரல் 2014

(Children of Adam)

(For You O Democracy)

குடியரசே ! இவை என் அர்ப்பணம்

 

 (1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

 

துண்டுபடுத்த முடியாத 

அந்தவோர்

கண்டத்தை நான்

உண்டாக்குவேன், நீயதைக்

காண வா !

இதுவரைக் கதிரோன் 

ஒளிபடாது

உயர்ந்த ஓரினத்தைத்  

தயாராக்குவேன் !

தெய்வீகக் காந்த முள்ள

திருத்தலங்களை

உருவாக்குவேன் நான்,

நேச முள்ள தோழ ருடன்,

ஆயுள் வரை

நீளும் நேசமுள்ள

தோழ ரோடு !

 

 

மரங்களைப் போல் நடுவேன்

நெருங்கித் தோழமையை,

அமெரிக்காவின்

ஆற்றோரங் களிலே,

ஐம்பெரும் ஏரிக் கரைகளிலே

மையச் சமவெளிப்

பசுமைத் தளங்களிலே !

எழுப்பிடுவேன் கைகளால்

கழுத்தைப் பின்னிப்

பிணைத்து

பிரிக்க இயலா நகரங்களை,

பரிவுத் தோழ ரோடு,

ஆண்மை அன்புத்

தோழரோடு !

 

 

இவை அனைத்தையும்  

நான் அளிப்பது

அன்னையே !

உனக்கே தான் !

நின்னரும் பணிக்குத்தான் !

முழக்கி முரசடிப்பேன்

எனது கீதங்களை

உனக்குத்தான் ! ஆம்

உனக்கு மட்டும் தான்

குடியரசே !

 

 

+++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman  [April 8, 2014]

Series Navigationஇலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணிதிண்ணையின் இலக்கியத் தடம் -30
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *