”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” -நா. விச்வநாதன்

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 33 in the series 12 மே 2014

”மென்மையானகுரலோடு

உக்கிரமானசமர்”

—-நா. விச்வநாதன்

[ வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை” புதினத்தைமுன்வைத்து ]

”எவன்இங்குவேற்றுமையைக்காண்கிறானோஅவன்

மரணத்திலிருந்துமரணத்தையேஅடைகிறான்”—–கடோபநிஷத் [4-10]

உண்மையில்கதைகளில்ஏதாவதொருபாத்திரமாகஆசிரியன்இருப்பதுபோலவேவாசகனும்உலவிக்கொண்டிருக்கிறான்என்பதுசரியானது. தமிழ்ப்படைப்புலகில்வெகுசொற்பமானவர்களாலேயேஇந்தயுக்திகையாளப்படுகிறது. வாசித்துமுடித்தவனைஎதையோதேடச்சொல்லும்உந்துதலைத்தரவேண்டும்; தொந்தரவுசெய்யவைக்கவேண்டும். ஏன்? ஏன்? இதுஏன்இப்படிஇருக்கிறது;நடக்கிறதுஎனலட்சம்கேள்விகளைக்கேட்கவேண்டும்.

வளவ. துரையனின்எழுதுகோல்மிகஇயல்பாகஇந்தவிந்தைகளைச்செய்கிறது. சமூகம், வாழ்க்கைமுதலானவார்த்தைகளின்இன்னும்கூடுதலான செறிவானபொருளைஅகராதிகளில்தேடிக்கண்டடையும்அபத்தமானவேலையைச்செய்வதில்லை. முழுமையற்றவாழ்க்கையிலிருந்துவிடுபடும்முயற்சிஏதுமற்றுகம்பீரமாகநிற்கும்முறைமைமகிழ்ச்சியானது.

கதைவேறு, வாழ்க்கைவேறுஎன்பதாய்இல்லை; இதைகவனப்படுத்திக்கொண்டுஇவருடையஇயக்கம்சரியானதாகஇருக்கிறது. வெற்றுமுழக்கங்களும், அறைகூவல்களுமாய்அலுத்துப்போகுமளவுக்குஇரைச்சலுமாய்நிறைந்துதளும்பும்தமிழ்ச்சூழலில் ‘சின்னசாமியின்கதை’ வந்திருக்கிறது. புதியதரிசனம்ஒன்றுஇயல்பாய்க்கிடைக்கிறது.

இந்தக்கதைஎன்னதான்சொல்லவருகிறது? ஒரேவரியில்சொல்லிவிடமுடியும். வாழ்வியலைச்சொல்கிறது. வாழ்தல்கலையைச்சொல்கிறது. வாழ்வியல்எனில்போஜனம், சம்போகம், சயனம்என்பதாயில்லை. நிறைந்தநேசம், மேன்மையானமானிடஉறவுகள்என்பனவற்றைக்களப்படுத்துகிறது. மென்மையானமயிலிறகுவருடல்தானாவாழ்க்கைஎன்றகேள்வியைக்கேட்பதேஅபத்தம். எல்லாமானதுதான்வாழ்வு. அவலங்களையும், நேசமின்மையையும், கயமையையும், பொய்மையையும்கூடஇன்னதுதான்இவைஎன்றுவிளக்கும்வேலையும்படைப்பாளிக்குஇருக்கிறது. அறம்சார்ந்தமெல்லியவரிகளின்சேர்க்கையில்இவைகளைஅப்புறப்படுத்திவிடலாம். இந்தப்புதினத்தின்பிரதானஅறிவிப்பாகஇதுவேஇருக்கிறது.

நீதிநூல்கள்நம்மைஎதிர்காலத்திலேயேஇருக்கச்சொல்கின்றன. நாம்விரும்பியஅனைத்தும்அங்கேதான்கிடைக்கும்என்றசெய்தியைநாசூக்காகச்சொல்லித்தருகின்றன. கடந்தகாலம்மறந்துஇன்றையஇருப்பையும்மறந்துகண்களைமூடிக்கொள்ளும்இலகுவானகலையைப்பொறித்துநம்மைஇருட்டுக்குள்தள்ளிவிடுகின்றன. நம்மைநிழலாகஇருக்கச்செய்துஅதற்குள்ளானகுருதியோட்டத்தையும்உயிர்ப்பையும்அசைவுகளையும்நிஜமானதுஎனஅறிவித்துப்பழக்கப்படுத்திவிடுகின்றன. நம்நீண்டஇந்தியமரபுகளில்கேள்விகளுக்கேஇடமில்லைஎன்பதுசரியானதுதான்.

ஒருதேர்ந்தகலைஞன்இந்தமாயத்திற்குள்அகப்பட்டுக்கொண்டுவிடக்கூடாது. மரபுசார்ந்தஎழுத்துக்குமகிமைஎப்போதும்உண்டுஎன்றகிறக்கத்திற்குஉட்பட்டுவிடுதலும்தகாது. இதற்கானஞானம்தடித்தபுத்தகங்களில்இல்லை. நம்மைச்சுற்றியேகூடைகூடையாய்கொட்டிக்கிடக்கிறது. தேர்ந்துகைக்கொள்ளும்படைப்பாளீயின்வேலைசுலபமானதன்று. ஆனால்அதுதான்படைப்பாளியின்வேலை. நிஜமாகவாழ்தலின்மகிமையைஇதமாகச்சொல்வதுகூடஒருவலிமையானஉத்திதான்.

சாதிஇருந்தது, சாதிஇருக்கிறது, சாதிஇருக்கும்என்பதைவெவ்வேறுமொழிவடிவங்களில்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். புதியபுதியஉபதேசியார்கள்கதைசொல்லியாகவருகிறார்கள். அனைத்தையும்நொறுக்கிப்போடுவேன்எனப்பெருங்குரலெடுத்துஉள்ளுக்குள்சிரித்துஏதோசெய்கிறார்கள். பரபரப்பாகஇருக்கிறஇந்தஆரவாரத்தில்இலக்குகாணாமல்போய்விடுகிறது. சாதிவலுவானது. பேருண்மையாலும்இன்றையஅபத்தஅரசியல், இன்றையமுற்போக்குஇயக்கங்கள், இன்றையசட்டங்கள், எனஇவற்றால்அசைத்துப்பார்த்துவிடவும்கூடுவதில்லை. ஒருபடைப்பாளிஎன்பவன்இதைப்புரிந்துகொண்டிருக்கவேண்டும்.

நல்லபடைப்பாளிஎன்பவன்இன்றுவரம்தான். சாதியிலிருந்துவிலகியிருப்பது, சாதிஅருவெறுப்பானது, சாதிதுர்கந்தமுடைத்து, என்பதைத்துணிந்துஅறிவிக்கவேண்டும். இவைதவிர்த்துசெம்மையாகவாழ்ந்துகாட்டும்முன்னோடிநானும்என்கதையும்என்பதைஅழுத்தமாகச்சொல்லத்தெரியவேண்டும். வெகுசாதாரணமானமொழியைக்கூடவலிமைமிக்கதாகமாற்றமுடியும்என்பதைவளவ, துரையன்செய்துகாட்டுகிறார்.

கோயில்கள்ஏற்பட்டதன்நோக்கமேமனிதகுலமேன்மையைஉறுதிப்படுத்தும்அடையாளங்களாகஇருந்தன. இன்றுதலைகீழானவிந்தை. சாதியின்ஊற்றுக்கண்ணாகக்கோயிலும்அதன்கொண்டாட்டங்களும்வெகுகெட்டிக்காரத்தனமாகமாற்றப்பட்டுவிட்டன. கிராமங்களின்அழகுஎன்றுசொல்வதேசரியாயிருக்காது. தம்முகமிழந்துசாதிபோன்றசமூகஅவலங்களைக்கவனமாகப்பேணும்களமாகமாறிவிட்டது. வாழ்வியலின்எல்லாஅம்சங்களும்சாதியோடுகெட்டியாகஇணைக்கப்பட்டுவிட்டன. இடம்பெயர்தலற்றஇடத்தில்இதுஎளிதாகிவிட்டது.

’என்னைக்கேட்டாஜாதிக்காகக்கோயில்இருக்கக்கூடாது. கோயில்லேஜாதியைத்தவிர்க்கமுடியாது’

என்றபெருமாளின்வரிகள்இதுகுறித்தஒருவசதியானஏற்பாட்டைச்செய்துவிட்டசெய்தியைஅறிவிக்கின்றன. அறமற்றதைஅறமாகப்பிரகடனப்படுத்தியாகிவிட்டதுவெற்றிகரமாய்.

நம்சாமிகள்தம்மொழியைமறந்துபுதியமொழியைக்கற்றுக்கொண்டுவிட்டன. வழக்கமானஉணவைத்தவிர்த்துத்தம்இயல்பானஉடைகளைமறந்துவிடுகின்றன. குறிப்பிட்டசிலரானதொடர்முயற்சிவெற்றிபெற்றுவிட்டது. சாமிகளும்ஏமாந்துபோய்விட்டன. கிராமத்துநம்தெய்வங்கள்சாராயம், சுருட்டு, புலால்மறுத்துசர்க்கரைப்பொங்கலின்நெய்மணக்கும்ஆவியில்கிறங்கிப்போய்விட்டன. இறக்குமதியானசடங்குகள்எல்லாருக்கும்பிடித்துப்போய்விடுகிறது. சாயம்போனமதுரைவீரனும், இருளாண்டிச்சாமியும், காதொடிந்தகாத்தாயியும். கால்கள்ஒடிந்தகுதிரைகளும், தலையில்லாக்கருப்பும்அனாதையாய்ஒருபொட்டல்வெளியில்ஊருக்குவெளியேமயானத்திற்குஅப்பால்வீசப்பட்டுவிட்டன. எல்லோரும்வைதீகர்களாகமாறுவதைஉயர்ச்சிஎன்றுபுரிந்துகொண்டஅவலம்நேர்ந்துவிட்டது. சடங்குகளின்நிரப்பலேவாழ்க்கைஎன்றாகிவிட்டதுசோகம்தான்.

சாதிக்குள்—அதற்குள்ளேஇருக்கும்முரண்களைஎப்படிஉடைப்பது? இதற்கானபாடத்திட்டம்என்ன? வளவ. துரையனின் ‘சின்னசாமியின்கதை’ யில்இவைஇருக்கின்றன. நவீனம்சிலமேன்மைகளைஅகற்றிவிட்டது. இந்தஅறிவியலைஏற்பதேசால்பு. ஆனால்அதுஅகற்றிவிட்டஇடத்தில்எவற்றைஇட்டுநிரப்பிவைத்துக்கொண்டிருக்கிறோம்? நம்சிக்கலின்ஊற்றுக்கண்அதிலிருந்துதான்வருகிறது.

”கோவலன்மனமானதுஎங்கேஎதைப்பார்க்கிறதோஅங்கேயேநின்றுவிடும்”

கோடிசனங்களின்பார்வைகளும்நிற்றல்களும்இதுவே. இதிஎதிர்த்துசமர்செய்யும்வல்லமைநமக்குண்டா? உண்டுஎன்கிறார்வளவ. துரையன். பேனாவைவீசவேண்டியஇடங்களைத்துல்லியமாகக்கண்டுகொண்டுவீசுகிறார். எல்லவற்றையும்தெரிந்துகொண்டபின்னும்வாழ்வைமறுப்பதுமனிதகுலத்திற்குஎதிரானது.

படைப்பாளிஅப்படிஇருத்தல்தகாது. வளவ. துரையன்சீராகஇங்கேஇயங்குகிறார். எவ்வளவுவலுவானதாகஇருந்தாலும்அறமற்றவைகளைஅசைத்துப்பார்ப்பேன்என்றுமெல்லப்புன்னகைசெய்கிறார். தனிமனிதனால்இயங்கக்கூடும். அப்போதுஞானம்பொதுநிகழ்வாகிவிடும். நம்பிக்கைஎன்பதுஅழுத்தமானது. படைப்பாளிக்குஅதுகூடுதல்பலம்.

”ஆறுநாள்திருவிழாவைஆறுசாதிக்காரங்கபோட்டிபோட்டுக்கொண்டுசெய்யுறாங்க”—என்றஉரையாடல்எள்ளல்இல்லை. சமூகக்கேட்டின்அடையாளம். தடித்தனத்தின்வடிவமாகப்புரிந்துகொள்ளவைக்கிறார்முருகன்முதலானஅனைத்துப்பாத்திரங்கள்வழியாக. வளவ. துரையன்என்றசிறந்தமனிதன்சமூகப்பொறுப்புள்ளவன். அவர்இந்தப்பிரபஞ்சத்தைமுழுமையாகப்பார்த்துநிறையக்கண்டடைகிறார். ஒருகலைஞனின்கனவுஎன்னும்போதுநிஜம்யாவும்உள்ளங்கைக்குள்வந்துவிடும்.

இன்னொன்று ” இயற்கையை—வாழ்க்கையைஅப்படியேநகலெடுப்பதல்லகலைஞனின்வேலை” க. நா. சுவின்இந்தவரிகள்புதுப்புதுஅர்த்தங்களைத்தருவதாகநம்புபவன்நான். இங்கேபொருத்திப்பார்க்கவேண்டியிருக்கிறது.

தீர்வுஎன்னிடம், உங்களிடம், எல்லோரிடமும்இருக்கிறதுஎன்பதும்இவரால்உணர்த்தப்படுகிறது. இதுசுலபமானாலும்பெரியவேலைதான்.

வந்துபோகும்எழுத்தல்ல ‘சின்னசாமியின்கதை’. வந்துநின்றுஅதன்நோக்கத்தைச்செய்துவிடும்.

”காட்டுவாத்தாய்இறகைவிரி. வாழ்வும்வேடந்தாங்கலாகும்.” என்பார்நவீனகவிதையின்பிதாமகன்ந. பிச்சமூர்த்தி. சின்னசாமியின்கதையைவாசித்தபிறகுஇந்தவரிகள்நினைவுக்குவருகின்றன. பூடகமானபுன்னகையைஅகற்றிவிட்டுசுதந்திரமானமேலானபுன்னகையைஅரும்பவைக்கிறதுஇந்தப்புதினம்.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *