-எஸ்ஸார்சி
திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்பது சா¢. அப்படி திரவியம் தேடுவதில் எது அளவுகோல் தேடலுக்கு எல்லை என்று ஏதும் உண்டா. பொருளில்லாதவர்க்கு பரந்து வி¡¢ந்து கிடக்கும் இந்த உலகம் இல்லை. அருள் இல்லாதவர்க்கோ அவ்வுலகம் இல்லை. இந்த உலக லடசணம் எல்லாம் நமக்கு க்கொஞ்சம் கொஞ்சம் அத்துப்படி. மற்றபடி அருள் அவ்வுலகம் பற்றி எல்லாம் தொ¢யுமா என்றால் தொ¢யாது அந்தப்பொய்யாமொழியார் திருவள்ளுவர் எப்பாடுபட்டாரோ தொ¢ந்து கொண்டு நமக்குச்சொன்ன அந்த சமாச்சாரம் மட்டும்தான், இவைகள் எல்லாம் இன்று நேற்று விஷயமுமில்லை.
அவள் கணவனைப் பற்றி முதலில் உங்களுக்குச்சிலதுகள் சொல்லவேண்டும். இந்த தருமங்குடி கிராமத்தை விட்டு விட்டு எங்கோ இருக்கின்ற அந்த துபாயில் அவன் வேலை பார்த்தான். இந்த தம்பதியருக்கு ஆணும் பெண்ணும் என இரு குழந்தைகள் அந்தக்குழந்தைகள்இரண்டும் அருகிலே வெள்ளாற்றங்கரை மீதுள்ள சின்னஞ்சிறு நகரமான சேத்தியாத்தோப்பு வாசவியன்னை ஆங்கில பள்ளியிலே படித்தனர். மஞ்சை வண்ணம் வழித்துப் பூசிக்கொண்ட அந்தப் பள்ளிப்பேருந்திலேயே பள்ளிக்குச் சென்று படித்து விட்டு தினம் தினம் தருமங்குடி யிலுள்ள வீடு திரும்புகின்றனர்.
எங்கோ இருக்கிற அந்த துபாயில் இல்லை இன்னும் தாண்டிப்போய் என்ன வேலைபார்த்தால் என்ன பணம் காசு ஒருவருக்கு எவ்வளவு கையில் தேருகிறது என்பது மட்டும் தானே ஒரு பிரதான விஷயம். தேவைக்கு ஏற்ப காசு பெயரா விட்டால் குழந்தைகளை எங்கே அந்த ஆங்கில பள்ளிக்கு கழுத்திலே டைகட்டி முதுகில் ஒருமுடி கட்டி ஜம்பமாய் அனுப்பிவைப்பது.
காலையில் புறப்படும் பள்ளியின் பேருந்து தருமங்குடி அவள் வீட்டு வாசலிலுக்கே வந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு போய் மாலையில் அதே வாசலிலே திரும்பவும் பத்திரமாகக் கொண்டு விடும்போது எத்தனைப்பெருமையாக அவள் உணருகிறாள். அனுபவித்தால் மட்டுமே சிலதுகள் பிடிபடும். தருமங்குடியில் இருந்து எல்லா வீட்டு பிள்ளைகளும் ஆங்கிலப் பள்ளிக்கு அப்படிப்போக முடிகிறதா. வர முடிகிறதா என்று கேட்டால் அது எப்படி முடியும்.சொல்லுங்கள்.
அவளுக்கு த்துபாயில் இருந்து அவள் கணவன் பணம் அனுப்புகிறான்.ஆணும் பெண்ணும் என குழந்தைகள் தினுசு தினுசாய் சட்டை அணிகிறார்கள்.பார்த்தாலே தொ¢கிறதே இவர்களின் அப்பா துபாய்க்காரர் என்று. அவள் வீடு மட்டும் என்ன அது தான் தருமங்குடியிலே உயர்ந்த தளம் கொண்ட மெத்தை வீ£டு. அவள் வீட்டுக்குள் சப்பையான மற்றும் நீட்டமான ஒரு தொலைக்காட்சி அதுதான் எத்தனை அகங்காரமாய் சுவா¢ல் தொங்குகிறது. அதன் ஒய்யாரமான அகலமும் வழுவழுப்பும் வண்ணமும் தேவலோகத்தில் இருந்து அதை யாரோ பெயர்த்து எடுத்து தருமங்குடி அவள் இல்லம் கொண்டுவந்து கூடத்தில் மாட்டி வைத்துவிட்டுப்போன மாதி¡¢தான். தேவலோகத்தில் மொட்டைமாடியில் குடை கட்டிக்கொண்ட சன் டிவி கனைக்ஷன் உண்டா என்று எல்லாம் என்னைக்கேடகாதீர்கள்.
அவள் தெருவில் ஏதோ ஒரு விஷயத்துக்கு நடந்துவருகிறாள் என்றால் அவ்ள் கட்டியிருக்கும் தினுசு தினுசு சேலை. அதனிலிருந்து எழும் அந்த துபாய் சென்ட் வாசனை எதனைத்தான் நான் உங்களுக்குச் சொல்வது. எதனை விடுவது.தருமங்குடி சிவன் கோயிலுக்கு அந்த தருமாம்பாள் உடனுறை தருமை நாதக்கடவுளை ச்சேவிக்க அவள் சென்றாலோ அங்கே அந்த கோவில் குருக்கள் நெளியும் இல்லை குழையும் அழகை.ப்பார்க்கவேண்டும் அழகா இல்லை அது வக்கிர சேஷ்டையில் சேர்த்தியாக எதுவுமோ .காசா லேசா.ஒரு நூறு ரூபாய் நோட்டு குருக்களுக்கு த்தட்டில் விழும் என்பது உறுதியாகிவிட்ட பிறகு அந்த அருள்மிகு தருமை நாதனுக்கும் பெப்பேதான். அந்தக்கடவுளுக்குமே கூட அதில் ஒன்றும் வருத்தம் கிடையாது என்பதாய் எனக்குச் சொற் கேள்வி..
எந்தக்கோயிலிலாவது எந்த சாமியாவது அதான் அந்த ரத்தம் மட்டுமே குடிக்கும் கொல்கத்தா காளியாகவே இருக்கட்டும் கொஞ்சம் தைர்யத்தை கியர்த்தை வரவழைத்துக்கொண்டு ‘காசு காசு என்று அலையாதீர் நிறுத்தும் இந்த யாசகத்தை ஏ, சிவாச்சா¡¢ய க் குருக்களே, அகல நெற்றியில் திருமண் இட்டுக்கொண்ட பட்டாச்சா¡¢யே ,குங்குமப்பொட்டுபோட்டப் பூசாலியே, சந்தனத்தை விபூதிக்கணக்காகப் பூசிய நம்பூதி¡¢ அய்யனே, சாய்வுக்கொண்டை தீட்சிதரே,குங்குமம் பூசிய தாடி க்கார சாமியாரே உட்ன் பிச்சை எடுப்பதை நிறுத்தும். என் சன்னதிக்கு முன்னால் கல்பூர ஆரத்தி தட்டை க்காட்டி விபூதி குங்குமத்தை இல்லை எதுவோ ஒன்றை க்கொடுத்து காசுக்கு இனி நாயாய்க்குழையாதீர்’ என்று கட்டளை தந்ததாய் க்கேள்விப்பட்டதுண்டோ நாம்.
இப்படி எல்லாம் கேள்வி ஒன்றை கேட்டு விட்டு அப்புறம் அந்தக் கோவிலில்களில்தான் எல்லாம் தொ¢ந்த ஏகாம்பர சாமிகள் எங்கே குடி இருந்து குப்பைக்கொட்டி உங்களுக்கும் எங்களுக்கும் அருள் பாலிப்பது.விடுங்கள் விடுங்கள். சாமியோ பூதமோ அவரவர் கஷ்டம் அவரவர்க்கு.
இன்று காலையில்தான் தொலைபேசியில் கூப்பிட்டுச்சொன்னார்கள்.அவளால்தான் தாங்கிக்கொள்ள முடியுமா அந்த விஷயத்தை. எந்த ஒரு குடும்பப்பெண்தான் அப்படி ஒரு சமாச்சாரம் கேட்டு அதனைத் தாங்கிக்கொண்டுவிட முடியும்.
துபாயில் வேலை பார்க்கும் அவள் கணவனுக்கு சாலையில் ஒரு விபத்தென்றார்கள். முதலில் பயப்பட ஒன்றுமில்லை என்றார்கள்.அது கேட்டே அவள் திக்கு முக்கு ஆடிப்போனாள் விஷயம் நடந்திருப்பதோ .பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால். நம் மக்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத வேற்று மண். பேசும் மொழியும் அனுசா¢க்கும் கலாசாரமும் துளிக்கூட சம்பந்தமே இல்லாதபடிக்கு. அவள் புழுவாய்த்தான் துடித்தாள். அவள் ஒரு பெண்.ஆயிரம் விஷயங்கள் பேசிவிடலாம். வீம்புக்கோ இல்லை அதுவும் சா¢தானோ. நமது சா£ரம் ஒரு ஓட்டைக்குடம் அதில் பிரம்மன் வைத்ததுவோ ஒன்பது வாசல் இன்னும் இந்த வகையில் ஒரு வண்டிக்கு ப் பேசலாம். பேசும் போதே வேப்ப மரத்து கட்டெறும்பு கடித்துவிட்டால்தான் தொ¢யும் அப்புறம் படும் அந்த அவஸ்தை.
குழந்தைகள் இருவரும் சேத்தியாத்தோப்பு பள்ளிக்கு சென்று விட்டு இருந்தனர். அவர்கட்கு இந்த ச்செய்தி எதுவும் தொ¢யாது. அவள் மட்டுமே தருமங்குடி வீட்டில் தனித்து இருந்தாள். அவள் கதறி அழுவது கேட்டு அக்கம் பக்கத்துக்காரர்கள் அவள் வீட்டு வாயிலில் கூடி நின்றனர். என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்ன விசா¡¢க்க ஆரம்பித்தனர்.துபாயிலிருந்து வந்த விபத்துச்செய்தி பற்றி அங்கு கூடியவர்களிடம் அவள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மக்கள் கூடிக்கூடி. ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தனர்.மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது.. எது வந்தாலும் அந்த கருப்பாய் மொத்தையாய்மேசை மீது பள்ளி கொண்டிருக்கும் தொலைபேசி வழியேதான் வரவேண்டும்.
‘ விபத்துக்குள்ளான நபர் மருத்துவ்பமனையில் சிகிசை பலனின்றி இறந்துவிட்டதாகவும் உடல் மெடிகல் பேக்கிங்க் செய்து இப்போதே இந்தியாவுக்கு விமானம் மூலம் பத்திரமாய் அனுப்பி வைக்கப்படும் ‘என்று மட்டும் தகவல் சொன்னார்கள். அவள் கீழே விழுந்து புரண்டு புரண்டு அழுதாள்.சுற்றி அங்கே நின்றவர்கள் அவளை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.கணவனை இழந்த ஒரு பெண்ணிற்கு கடவுளாலும் ஒன்றும் சமாதானம் சொல்லிவிட முடியாது. அந்த சத்தியாவான் செத்துப்போனது மட்டுமே மெய்,பத்தினி சாவித்தி¡¢ அவனை எமனிடம் வாதிட்டு தான் வாழும் இந்த பூமிக்கு மீண்டும் கூட்டி வந்தது கதை தானே
‘ அது அழுவுட்டும் வுடு இதுக்கு கூடம் அழுவாம எதுக்கு பொறவு இந்த பொம்பள ஜன்மம்’ சொல்லி நிறுத்தினார் ஒரு முதியவர். அவள் ஒப்பா¡¢ வைத்து அழ ஆரம்பித்தாள்.
‘பச்ச புள்ளவுள வுட்டுட்டு போவயா என் ராசா நானு இனி என்ன பண்ணுவன். போன தீவாளிக்குத்தான் வந்த நீ அதுதான உன்னை உசிரோட நானு பாத்தது அதுவே கடசீன்னு ஆக்கீப்புட்டிகளே என் ராசா இங்க நீ சாணி சுருணையா கெடந்தாலும் உன் தேரகத்த பாத்தாவது அழுது அழுது என் ஆத்திரம் தீப்பனே நமக்கு .புள்ளவ ரெண்டு பொறந்துபோச்சி கென காசு வேணுமின்னு அந்தக் காசுதானே முக்கியமுன்னு ஆகாயத்துல ஏறிகினு பறந்து போனயே. என் ராசா .பூவும் பிஞ்சுமா இப்ப நடுத்தெருவுல நானு பட்ட மரமா அல்லவோ நிக்குறன்.என்ன கொடுமை. யாருக்கு என்ன தீங்கு செஞ்சன். உன் செத்த உடலு அங்கு அனாதய கெடக்குமா செதஞ்சி கிடக்குமா ஈ எறும்பு மொய்க்குமோ நீ ஆண்ட பூமி நீ புழங்குன மண்ணு உன் சனம் உன்ன தோத்துப்புட்டு அநாதையா இங்க நிக்குதே. உன் மக்க ரெண்டும் வந்தா நான் என்ன சமாதானம் சொல்லுவன் என் ராசாவே என் சாமியே என் கடவுளே.இது என்ன தும்பம்.பொண்ணா பொறந்தா மகாலச்சுமின்னு சொன்னவாயி இப்ப அதே வாயேலாதான் என்ன என்னான்னு சொல்லும் என் கடவுளே. என்னடா இது தும்பம். ஆ அந்த கடவுளுக்கு கண்ணுன்னு ஒண்ணு இருக்குதா இல்லை அதுவுமே இல்லையா. நானு இப்பவே என் புருசன் திரேகத்தைப் பாக்குணுமே என் ராசாவ என் கண்ணுல காட்டுங்களேன். பொட்டணமா கட்டி கொடுப்பானுவளா இதுதான் உம் புருஷன்னு, இல்ல எதனா மூட்டைக்கட்டிக் கொண்டாந்து எம்முன்னால வுட்டுத்தான் கெடாசுவானுவளா, அந்த பச்சக்கொழந்தயா தொ¢ஞ்ச முகம், பாலு வடிஞ்ச மொகம் இப்ப கோரமாத்தான் கெடக்குதோ, ஈ மொக்குதோ எறும்பு மொய்க்குதோ என் ஆண்டவரே.இது என்ன சோதனை பொம்பளயா பொறந்தா இந்த துன்பமு உண்டுன்னு சொல்வாங்க அது தே இப்ப என் கழுத்தப்புடிச்சிகிட்டு நெரு நெருன்னு நெருக்குதே இது என்ன கெட்டகாலமோ, இந்த பாழும் சன்மம் பொசுக்குன்னுபோவுமா இல்லை பொழுது சாஞ்சிதான் போவுமான்னு ஒலகம் சொல்லுமே. இங்க பாருங்க என் தருமங்குடி மக்களே இப்ப என் பொழப்பு நா பீயா ஆயிடிச்சி’ தரை மீது விழுந்து புரண்டாள் அவள்.
பள்ளி சென்ற அவள் குழந்தைகள் இரண்டும் வீட்டுக்கு வந்திருந்தன. யார் போய் அழைத்து வந்தோர்களோ யார் சேதி சொல்லி அனுப்பினார்களோ. தொ¢யவில்லை. தாய் அழுவதைப்பார்த்து அவை நிலை குலைந்து நின்றுகொண்டிருந்தன.
‘புள்ளிவளா அப்பாரு போயிட்டாரு. இப்ப அனாதயா ஆயிப்போனோம். என் செல்வமே ஆரு இருக்கா நமக்கு. நானு கும்புடுற கடவுளு இன்னும் நம்ப வூட்டு குலச் சாமி எல்லாமே என்னைக் கை வுட்டு புட்டாங்க என் ஆத்தாவே நான் என்ன செய்யுவேனோ’ அவள் தன் குழந்தைகளைக்கட்டிக்கொண்டு அழுதாள்.குழந்தைகள் எதுவும் பு¡¢யாமல் திக்கு முக்கு ஆடிப்போயிருந்தனர்.தம் தந்தைக்கு ஏதோ விபா£தம் ஆகிப்போனது மட்டும் அவர்களுக்கு உறுதி ஆனது.
தொலைபேசி மணி தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது. மீண்டும் துபாயிலிருந்துதான் அவளை அழைத்தார்கள்.’ விபத்தில் இறந்தவர் சடலத்தை இந்தியா அனுப்புவது எல்லாம் சாத்தியமில்லை. அப்படி அனுப்பினால் அதற்காகும் செலவு என்னவோ அதனையும் கூட்டி இறப்பு நஷ்ட ஈட்டுத்தொகையோடு மொத்தமாக உங்களுக்கு அனுப்பி விடுகிறோம்.அதற்குச்சம்மதம் என்று சொன்னால் மட்டுமே மேற்கொண்டு பேச முடியும்’. இதுவே அந்தச்செய்தி.
ஆளுக்கு ஆள் என்னவோ யோசனை சொன்னார்கள்.சடங்கு செய்தாகவேண்டும் என்பதில் பொ¢யவர்கள் உறுதியாக இருந்தார்கள்.’ இன்னும் ரெண்டு புள்ளைங்க இருக்குது .அதுவுள நல்லபடியா கரை ஏத்துணும். இந்த இறப்பு தொடர்ந்து செய்யுற கரும கா¡¢யம், தல திவசம், வருஷம் தோறும் திதின்னு கொடுத்தாவுணும். இது சின்ன விஷயமில்லை’ மூத்த பெண்டிர்கள் இழவு வீட்டில் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
மீண்டும் தொலைபேசி மணி ஒலித்தது.இந்த முறை செய்தி அவளுக்கு இப்படி வந்தது.’ விபத்தில் இறந்தவா¢ன் சவ அடக்கத்தை எங்கள் செலவிலேயே வீடியோ எடுத்து சி டி யாக அனுப்பி வைக்கிறோம். உங்கள் சம்மதம் சொல்லுங்கள்’
‘சா¢ன்னு சொல்லு,இதுல என்ன இருக்கு ஆனது ஆச்சி போனது போச்சி இனி என்ன’ கூடியிருந்தவர்கள் ஏகோபித்துச்சொன்னார்கள்.’சா¢’ அவள் தொலைபேசியில் எப்படியோ சம்மதம் சொன்னாள்.
‘இங்க குந்தி என்ன பண்ணப்போறம்’ வந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.
‘எழவு செலவும் இப்ப நமக்கு இல்ல அதயும் அங்க துபாய்க்காரனே பாத்துகுறான்’ தொடர்ந்தார்கள்
‘ செத்தவன் பாடிய இந்தியா அனுப்புனா என்னா செலவு ஆவுமோ அந்த காசியும் சேர்ந்து இப்ப பொம்பளைக்கு வருது பாரு’ கிழவர் சொன்னார்.
‘அடக்கத்தை வீடியோ பண்ணி அனுப்புறான்ல அதுவும் கூட ஒரு சவுகா¢யம்தான்’ கிழவர் விடாமல் தொடர்ந்தார்.
‘பதினாறா நாளு ஒரு பாப்பான கூப்புட்டு வூட்டுல ஒரு யக்யத்தை வளத்து சாவுத் தீட்டு முறிக்கணும்.புள்ளவ ரெண்டு இருக்கு ஆனா அதுவ செறுசு’ ஒரு கிழவி ஆரம்பித்தாள்
ஒவ்வொருவராக எழுந்து போயிக்கொண்டிருந்தார்கள்.
‘இப்ப நேரா போயி பட்டினத்தான் வாய்கால்ல உழுந்து குளிச்சி தலய முழுவிட்டுத்தான் நாம நம்ப வூட்டுக்குள்ளாற நொழைஞ்சி எதுவும் செய்ய முடியும்,எழவு வூட்டுக்குள்ளார வந்து பொறம்ல’
கிழவி தொடர்ந்தாள்.
‘எல்லாருக்கும் ஏதோ ஏதோ சொல்லுற பாட்டி எனக்கும் எம்பிள்ளவுளுக்கும் இப்ப என்னன்னு சொல்லுவ’
அவள் கிழவியை அழுதுக்கொண்டே கட்டிக்கொண்டாள்..
‘கெடக்கு வுடு எம் புருசன் போயி வருஷம் எத்தினி ஆச்சி தொ¢யுமா . சாவுன்றது எமனோட கொமஸ்தா அந்த சித்திர புத்திரன் போடுற கணக்கு. ஆருக்கு அது எப்ப வரும்னு ஆரு கண்டா. அதுக்குன்னு நானு இப்ப செத்தா பூட்டன். உம் முன்னாடி நிக்குல வுடு வுடு என்னா செய்வ. ஒரு வூட்டுல ஆம்பள இல்லைன்னா நாமதான் ஆம்பளயும் பொம்பளையுமா. இருக்குணும் நாம திரேகத்த புட்டு புட்டு வச்சில்ல நாம பெத்த புள்ளிவ உசுறு வந்திருக்கு’ பாட்டி சொல்லி நிறுத்தினாள்.
‘தடிப்பயலுவ ஆரும் நானு பேசுறது கேட்டுபுடலயே பாப்பா’ குசுகுசுத்தாள் மீண்டும் பாட்டி.
‘ இங்க நீனும் நானும்தான் பாட்டி பாக்கி எல்லா சனமும் தெருவுக்கு போயிட்டாங்க.’
‘ உம் புள்ளவ எங்க ‘ கிழவி கேட்டாள்.
”அதுவுளும் தெருவுக்குத்தான் ‘ ஆரம்பித்தாள் அவள்.
‘இல்லம்மா நாங்க உன் மடியில தான் கெடக்குறம்’ பதில் தந்தன மடியில் இந்தப்புறமும் அந்தப்புறமும் தலை வைத்துக்கொண்டிருந்த அவளின் இரு குழந்தைகள்.
============================
- வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7
- பயணச்சுவை! 6 . முடிவுக்கு வராத விவாதங்கள் !
- மராமரங்கள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !
- முக்கோணக் கிளிகள் படக்கதை – 4
- கையறு சாட்சிகள்
- தொடுவானம் 16. இயற்கையின் பேராற்றல் காதல்.
- தனியே
- 2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது
- ‘கா•ப்கா’வின் பிராஹா -1
- தினம் என் பயணங்கள் -17 ஓரினச் சேர்க்கை பற்றி.
- பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்
- வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்
- அந்த நாளும் ஒரு நாளே.
- நீங்காத நினைவுகள் 46
- சீன காதல் கதைகள் 4. வெண்ணிற நாக கன்னி
- திண்ணையின் இலக்கியத் தடம் -35
- ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்
- மோடி என்ன செய்ய வேண்டும் …?
- விளைவு
- சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு