இந்து மோடியும், புதிய இந்தியாவும்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

ஜெயானந்தன்.
இந்திய நாட்டின் ” புது அவதாரமாக ” மோடியை ஏற்று, இந்திய மக்களில் 30% மக்கள், வாக்களித்து, தங்களின் வாழ்க்கையை அர்பணித்துள்ளனர். மீதம் 70% மக்கள், ஒருவித குழப்பதோடும்,பயத்தோடும் , எட்டி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

நமது புதிய பிரதமர், இந்த 70% சதவிகத மக்க்ளின், நம்பிக்கை சின்னமாக் மாற வேண்டும், அதற்கு , காவி மனது , மாற வேண்டும். டீக்கடைக்காரர்எனற முத்திரை, அவருக்கு, இந்த தேர்தலில், காங்கிரஸ் கொடுத்த கொடை.இது, இவருக்கு, கோடான்கோடி ஏழை மக்களின் உள்ளங்களில் பதிய வைத்த நம்பிக்கை சின்னம். இதுவே அவருக்கு பல லட்ச ஓட்டுக்களை வாரி வழங்கியிருக்கலாம். ஏனெனில், ஒரு ஏழையின் அவலம், இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும் எனற் நம்பிக்கையே, அவருக்கு சதமாக மாறி இருக்கலாம்.

வெற்றிக்கு பின், தாயின் பாதங்களும், கங்கையின் புனிதமும், காவியின் பலமும், மோடிக்கு புனித சின்னங்களாக தெரிந்தாலும், தாழ்த்தப்பட்ட,மைனாரிடி ப்ரிவினர், முஸ்லிம் வகுப்பு மக்களின் உள்ளங்களுக்கும், இவர், ஒளி விளக்காக மாறினால், பெரும் கலவலரங்களாக் ஏற்பாடாமல்,
பார்த்து கொள்ளலாம். இதுவே, இன்றைய, இந்தியாவிற்கு தேவை.

முதலில், பார்லிமெண்டை, நமது புதிய எம்.பி.க்கள் , ஒரு நம்பிக்கையின் சபையாக மாற்ற வேண்டும். மக்களின் நலமே முக்கிய்ம், நாட்டின் பாதுகாப்பை கருதி, கொஞ்சம் கெளரவமாக, நடந்துக்கொண்டால், மக்களிடையே, முதலில், ஒரு நம்பிக்கையை பெறலாம். ஒரு ” கொள்ளைக்கூட்டம் கூடாராமாக மாறியதைக் கண்டுதான், மக்கள், புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனை, மோடியும் மறக்கக் கூடாது, புதிய எம்.பிக்களும் மறந்துவிடக்க்கூடாது.

இந்திய மக்கள் ஏழையாக இருக்கலாம், ஆனால், மூளையற்ற வீணர்கள் அல்ல.

பொருளாதார வளர்ச்சிக்கு, புதிய தொழிற் புரச்சி செய்ய வேண்டும். ஏற்கனெவே , மோடி, குஜாராத்தில், புரச்சி செய்தவர்ரே !. இதனை புதிய இந்தியாவில் பாயச்ச வேண்டும்.வ்ங்கி சீர்திருத்தம், தொழிலாள்ர் சட்ட திருத்தங்கள். அந்தந்த துறை நிபுணர்களைக் கொண்டு சரிசெய்ய வேண்டும்.
இந்த முறை, இளைஞர்களின், பங்கு , கணிசமாக் வ்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றது. அவர்களும், நாட்டின் நடப்பை, உண்னிப்பாக பார்த்துக் கொண்டுள்ளனர் எனபதை புதிய் அரசு மற்ந்து விடக்கூடாது.

முக்கியமாக காவி அரசை நடத்தும் எண்ணத்தில், பார்லிமெண்டில் நுழையாமல், மூவர்ண வண்ணத்தில், மோடி புது அவதாரம் எடுத்தால், இந்திய நாட்டில், ” கல்கி” அவதாரம் எடுத்து விட்டார் என்று நம்பலாம்.

Series Navigation
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *