மாயன்  மணிவண்ணன்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

 

வளவ. துரையன்

நாயகனாய்நின்றநந்தகோப[ன்]னுடைய

கோயில்காப்பானேகொடித்தோன்றும்தோரண

வாசல்காப்பானேமணிக்கதவம்தாள்திறவாய்

ஆயர்சிறுமியரோமுக்கறைபறை

மாயன்மணிவண்ணன்நென்னலேவாய்நேர்ந்தான்

தூயோமாய்வந்தோம்துயிலெழப்பாடுவான்

வாயால்முன்னமுன்னம்மாற்றாதேயம்மாநீ

நேசநிலைக்கதவம்நீக்கேலோரெம்பாவாய்

இதுதிருப்பாவையின்பதினாறாம்பாசுரமாகும். இதற்குமுன்உள்ளபத்துப்பாசுரங்களிலும்தங்கள்இல்லத்தின்உள்ளேஉறங்கிக்கொண்டிருக்கும்பத்துப்பெண்களைஎழுப்பியதாகக்கூறப்பட்டுள்ளது. இதன்மூலம்ஆயர்பாடிச்சிறுமிகள்அனைவரையும்எழுப்பியதாகக்கொள்ளலாம்.

இதுஆச்சார்யசம்பந்தத்தைஉண்டாக்கபுருஷகாரமாய்இருப்பவர்களைஉணர்த்தும்பாசுரம். இதுமுதற்கொண்டு 7 பாசுரங்களில்எல்லாப்பெண்களும்வந்துவாசல்காக்கும்முதலிகளையும், நந்தகோபர், யசோதை, பலராமன், நப்பின்னைப்பிராட்டி, முதலியவர்களைமுன்னிட்டுக்கொண்டுகண்ணபெருமானைஎழுப்புகிறார்கள்.

முதலிலேயேஇவர்கள் ’செய்யாதனசெய்யோம்’ என்றுகூறியிருக்கிறபடியால்இப்போதுபாகவதர்களைக்கொண்டுபகவானைப்பற்றநினைக்கிறார்கள். ”வேதம்வல்லார்களைக்கொண்டுவிண்ணோர்பாதம்பணிந்து” என்றுநம்மாழ்வார்அருளிச்செய்திருப்பதுஇங்குநினைக்கத்தக்கது. பாஞ்சராத்ரசாஸ்திரத்திலும்பெருமாளின்திருக்கோயிலுக்குச்சேவிக்கச்செல்லும்போதுஅச்சன்னதியின்திருவாசல்காவல்புரியும்முதலிகளிடம்அனுமதிபெற்றுத்தான்செல்லவேண்டும்என்றுகூறப்பட்டிருக்கிறது. ஆயர்குடிச்சிறுமிகள்அதைஅறியார்களானாலும்ஸ்ரீவைஷ்ணவகுடியிலேவந்தவர்களாதலின்இந்தஅனுஷ்டானம்அவர்களிடம்இயற்கையாகவேகுடிகொண்டுள்ளதுஎன்றுகொள்ளலாம்.

மேலும்பகவத்சம்பந்தத்தால்உண்டானபிறப்பு, முக்திக்குக்காரணமானகல்வி, பகவத்கைங்கர்யமானகர்மம்ஆகியபெருமைகள்யாரிடம்காணப்படுகிறதோஅவர்கள்அனைவரும்சேவிக்கத்தக்கவர்கள்ஆவர். இந்தஆய்பாடிப்பெண்கள்செய்வதெல்லாமேஅனுஷ்டானமாகிறது. ‘ரஸவாதம்கைப்பட்டவன்இருந்தஇடமெல்லாம்பொன்னாமாப்போலேபகவானிடம்ப்ரேமைகொண்டவர்கள்சொல்லும்எல்லாமேவார்த்தையாம்’என்றுநஞ்சீயர்நம்பிள்ளைக்குஅருளியதுஇங்குநினைவுகூறத்தக்கது.

சூர்ப்பனகைபாகவதர்களைப்பற்றாமல்நேரேபகவானைப்பற்றமுயன்றதால்படாதபாடுபட்டாள். விபீஷணன்நேராகஸ்ரீராமனிடம்செல்லாமல் ”நான்வந்திருப்பதைஎம்பெருமானுக்குத்தெரிவியுங்கள்” என்றுகூறிச்சென்றதைநினைவுகூறவேண்டும். ‘வில்லிபுதுவைவிட்டுசித்தர்தங்கள்தேவரைவல்லபரிசுவருவிப்பரேல்அதுகாண்டுமே” என்றுஅருளியபெரியாழ்வாரின்திருமகளன்றோஆண்டாள்நாச்சியார்.

அடுத்துஇவர்கள்நாயகன்என்றுகுறிப்பிடுகிறார்கள். உலகுக்கோர்தனிநாயகனாய்ஏழுலகும்தனிக்கோல்செல்லஆற்றல்மிக்கபெருமான்கண்ணன். மேலும்அவன்நாயகனாய்நின்றுசலித்துப்போய்இங்குஎளிமையாய்வந்துள்ளான். ஆனால்இங்குநாயகன்என்றவிளிநந்தகோபனைக்குறிப்பிடுகிறது. நந்தகோபன்எப்படிநாயகன்ஆவான்? நந்தகோபன்மிகவும்பெருமைஉடையவன். என்னபெருமைஎன்றால்பகவானையேபிள்ளையாகப்பெற்றவன். எல்லாஉலகத்தையும்ஆளும்எம்பெருமான்அவன்முன்கைகட்டிநிற்பாரன்றோ? மேலும்கண்ணனுக்கும்நாயகனன்றோஅவர்.       கிருஷ்ணனுக்கும்நாயகன்நந்தகோபன்தானே!

மேலும்நந்தகோபனைமிகச்சிறந்தஆச்சாரியனாகஇச்சிறுமிகள்எண்ணுகிறார்கள். ஆச்சாரியசம்பந்தத்தோடுதான்பகவானைஅணுகவேண்டும். பெருமாளையேநமக்குஉபதேசிக்கும்ஆச்சாரியன்குருவாகிறார். அவர்பகவானைக்காட்டிலும்பெரியவர்தானே? மிகவும்பாபங்களேசெய்தஷத்திரபந்துவும்புண்ணியங்களேசெய்தபுண்டரீகனும்ஆச்சாரியசம்பந்தம்பெற்றதாலேமுக்திஅடைந்தனர். ஓர்விலைஉயர்ந்தரத்தினத்தைக்கொண்டாடும்போதுஅதைக்கொடுத்தவர்களையும்பெருமைப்படுத்தவேண்டுமல்லவா?

பெருமானைமங்களாசாஸனம்செய்யவந்தஆளவந்தாரும்முதலில்நாதமுனிகள்போன்றபாகவதர்களைப்போற்றிஇறுதியிலும் ’நாதமுனிகளுடையசம்பந்தத்தையேபார்த்துஎன்னைக்காத்தருளவேணும்’ என்றுமுடித்தார்.

”வேறாகஏத்தியிருப்பாரைவெல்லுமேமற்றவரைச்சாத்தியிருப்பார்தவம்”

”தொண்டர்தொண்டர்தொண்டன்சடகோபன்”

“அடிகளடியேநினையும்அடியவர்கள்தம்அடியான்”

“ஆர்தொழுவார்பாதம்அவைதொழுவதன்றேஎன்சீர்கெழுதோள்செய்யும்சிறப்பு”

”உன்னடியார்க்காட்படுத்தாய்”

“அடியார்க்கென்னைஆட்படுத்தவிமலன்”

என்றுஆழ்வார்பெருமக்களெல்லாம்அருளிச்செய்திருப்பதுஇங்குநினைவுகூறத்தக்கது.

நாயகனாய்இருக்கும்”நந்தகோபருடையஅரண்மனைக்குக்காவல்காக்கின்றஎங்கள்ஸ்வாமியே” என்றுஇவர்கள்அழைக்கிறார்கள். இங்குஓர்ஐயம்எழுகிறது. ஏன்இவர்கள்நந்தகோபனைஅழைக்கவேண்டும்?  நேராகக்கண்ணன்எம்பெருமானைஅழைக்கவேண்டியதுதானே?

இதற்குவியாக்கியானமாகமூவாயிரப்படியில்பெரியவாச்சான்பிள்ளைஎழுதுகிறார். “ஸ்ரீஇராமச்சந்திரமூர்த்திபதினான்குஆண்டுகள்வனவாசம்பூர்த்தியானபின்னர்அனுமனைஅயோத்திக்குஅனுப்பிவிட்டுபுஷ்பகவிமானத்தில்வந்துகொண்டிருக்கிறார். அப்போதுஅயோத்திமாநகர்தெரிகிறது. சீதைநம்ஊர்வந்துவிட்டதுஎன்றுதானேசொல்லவேண்டும்? ஆனால்ஸ்ரீராமர்அப்பாவின்ராஜதானிதெரிகிறது, பார்என்றாராம். தந்தையைச்சொல்லித்தான்மைந்தனைஅழைக்கவேண்டும்எனவேஇவர்கள்நந்தகோபனைமுன்னிட்டுக்கொண்டுகண்ணனைஅழைக்கிறார்கள்.

நந்தகோபன்அரண்மனையைக்கோயில்என்றழைக்கிறார்கள். கோயிலிலிருந்துஅலுத்துப்போனஎம்பெருமான்நந்தன்அரண்மனைக்குவந்துகுடிகொண்டிருப்பதால்அதுகோயிலாயிற்று. பெருமாள்எப்பொழுதும்எல்லாஉலகத்தையும்தன்னடியார்உலகமாகத்தான்அருளப்பண்ணுகிறார். ‘வானிளவரசு’ என்றருளியபெரியாழ்வார் ‘நந்தகோனிளவரசு’ என்கிறார்.

பரபதநாதனைத்தசரதனுக்கோவசுதேவனுக்கோஇளவரசானாகக்காண்கின்றபேறுவாய்க்கவில்லை. அப்பாக்கியம்நந்தகோபனுக்கேகிடைத்தது.

“ பரமபதத்திலும்வானிளவாசிறே; அதுவும்வானவர்நாடாய், கடவர்கள்முடியுடைவானவராய், அவர்கள்தான்மூதுவராய், இவன்அவர்கள்மடியிலேகிடப்பது, சிறகிலேஒதுங்குவது, பிரம்புக்குஅஞ்சிசொன்னதுக்கெல்லாம் ‘அப்படியேஅப்படியே’ என்னும்இளவரசாயிற்றேவளருவது “ என்றுஆறாயிரப்படியில்கூறப்பட்டுள்ளது.

இவர்கள்அறியாச்சிறுமிகள். கோயில்காப்பவனின்பெயர்தெரியாது. எனவேஅவன்தொழிலைவைத்து ‘கோயில்காப்பானே’ என்றுஅழைக்கிறார்கள். இப்படிஇயற்பெயர்இல்லாமல்பகவத்சம்பந்தம்தெரியும்பெயரேசிறப்பாகிறது. எப்பொழுதும்எம்பெருமானுக்குசேஷத்துவமேகைங்கர்யமாகச்செய்துவருவதால்அக்குணத்தின்பெருமையைக்குறிக்கும்ஆதிசேஷன்என்றதிருநாமம்வந்ததன்றோ?

கண்ணபெருமானுக்கேகாக்குமியல்பினன்எனும்பெருமைஉண்டு. அவனையேகாக்கும்தொழில்செய்பவன்இந்தக்கோயில்காப்பவன்.

“ போய்ப்பாடுடையதந்தையும்தாழ்த்தான்பொருதிறல்கஞ்சன்கடியன்காப்பாருமில்லைகடல்வண்ணாஉன்னை “

என்றுஅனைவரும்மனத்துன்பத்தில்ஆழ்ந்திருக்கஅதைப்போக்குபவன்அல்லவாஇந்தக்கோயில்காப்பவன். ஊரில்எல்லாரும்உறங்குகையில்தான்மட்டும்விழித்துக்காவல்காப்பவன்இவன்.

எம்பெருமானைப்பரமபதத்திலேசேவித்துக்கொண்டிருப்பவர்களும், கண்துயிலல்அறியாதநித்யசூரிகளும்காவல்காத்துக்கொண்டுள்ளார்கள். மேலும்அவனைஎன்னென்னெசூழ்ந்துநிற்கின்றனதெரியுமா?

“ கோலார்ந்தநெடுஞ்சார்ங்கம்கூனற்சங்கம்

கொலையாழிகொடுந்தண்டுகொற்றவொள்வாள்

காலார்ந்தகதிக்கருடனென்னும்வென்றிக்

கடும்பறவைஇவையனைத்தும்புறஞ்சூழ்காப்ப “

என்றுசொல்ல[ப்பட்டிருக்கிறது. அப்படிஅனைவரும் அங்கேஒன்றாகச்சேர்ந்துகாவல்காக்கின்றதொழிலைஇங்கேஇவன்ஒருவன்மட்டுமேசெய்கிறான்.

“அப்படிப்பட்டபுண்ணியம்செய்தவனே! எங்களைஇந்தஅரண்மனைஉள்ளேஅனுமதிப்பாயாக” என்றுஆயர்சிறுமிகள்வேண்டஅவனும்இவர்களைஅனுமதிக்கிறான்.

அடுத்துஒருவாயில்தெரிகிறது. அங்கேதோரணங்கள்தொங்குகின்றன.பல்வேறுகொடிகள்கட்டப்பட்டுப்பறந்துகொண்டிருக்கின்றன. அந்த வாயிலைக் காப்பவனை ’கொடி தோன்றும் தோரணவாயில் காப்பானே’ என்றழைக்கிறார்கள். ஆயர்பாடியின் எல்லா மாளிகைகளும் ஒரேமாதிரி சிறந்து விளங்குவதால் இரவில் வரும் பெண்கள் தடுமாறாமல் இருக்க நந்தகோபன் தன் மாளிகையில் கொடிகளும், தோரணங்களும் நாட்டி வைத்திருக்கிறார் போலும். பரதாழ்வார் ஸ்ரீஇராமபிரானை அழைத்து வர வனம் சென்றபோது மரவுரி, புகை முதலியவற்றைக் கண்டு தரிசித்தாற் போலே இவர்கள் கொடி, மற்றும் தோரணம் கண்டு தரிசிக்கிறார்கள். தொலைவிலிருந்தே தெரிவதற்காக அக்காலத்தில் தண்ணீர்ப் பந்தல்களில் கொடி மற்றும் தோரணங்களைத் தொங்க விடுவதுண்டு. உள்ளே கிடப்பவன் அனைவரின் அனைத்து விடாயையும் தீர்க்கும் வல்லமை கொண்டவனன்றோ? மேலும் ‘வாசத்தடம்’ என்றும் ‘மரகத மணித்தடம்’ என்றும் போற்றப்படுபவன் அல்லவா? பரமபதமும் ‘வாசலில் வானவர்’ என்றும் ’கொடியணிநெடுமதிள்’ என்றும் போற்றப் படுவது நினைக்கத்தக்கது.

கொடிகள் புராணங்களிலும் இலக்கியங்களிலும் முக்கிய இடம் பிடித்துள்ளன. கொடிகளைப் பற்றிய காளிதாசனின் முக்கியமான வர்ணனை ஒன்று உண்டு. ரகு வம்சத்தில் திலிபனும் ஸுதட்ஷிணையும் கானகம் செல்கிறார்கள். அப்போது ஸாரஸப் பறவைகள் வரிசையாகப் பறந்து செல்கின்றன. கம்பம் இல்லாத தோரணம் போன்று அவை காட்சியளிக்கின்றனவாம்.

இராமகாதையில் விஸ்வாமித்திரர் இராம இலக்குவருடன் மிதிலை நோக்கிச் செல்கிறார். செந்தாமரை மலரை விட்டு நீங்கித் தான் செய்த தவத்தால் இலக்குமிப்பிராட்டி இங்கு வந்து எழுந்தருளி இருக்கிறாள். அவளை மணம் புரிய ‘வா’ வென்று மிதிலை நகர் தன் கொடிகளென்னும் கைகளை நீட்டி இராம பிரானை அழைப்பது போல கொடிகள் அசைந்தன என்று கம்பநாட்டாழ்வார் பாடுகிறார்.

:மைஅறு மலரின் நீங்கி யான்செய்த மாதவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்

ஐயனை ஒல்லை வாஎன்று அழைப்பது போன்றது அம்மா”

இராமாயணத்தில் கொடிகள் வா வா வென்று அழைக்கின்றன என்றால் மகாபாரதத்தில் கொடிகள் வரவேண்டாம் என்று அசைவதைப் பார்க்கிறோம். துரியோதனன் குருசேத்திரப் போரில் தன் சார்பாகத் துணை வேண்டி கண்ணனிடம் படை உதவி கேட்டு துவாரகைக்கு வருகிறான். துவாரகையின் மதில்மீது பறக்கும் கொடிகளும் பதாகைகளும், “ நீ இங்கு வந்தால் கூட எங்கள் கண்ணன் பாண்டவருக்குத்தான் படைத்துணையாவான். உனக்குத் துணையாக வரமாட்டான். எனவே நீ போகலாம்“ என்று சொல்வது போல அசைந்தனவாம் என வில்லிபுத்தூரார் பாடுகிறார்.

”ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழில்வண்ணன்

பண்டவர் தங்கட்கு அல்லால் படைத்துணை ஆக மாட்டான்

மீண்டு போக என்று அந்த வியன்மதில் குடுமிதோறும்

காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்றே

கோயில் காப்பான், வாசல் காப்பான் என்று கோபிகையர்கள் விபவ அவதாரத்திலே அனுபவித்ததை ஆண்டாள் நாச்சியார் இப்போது அர்ச்சாவதாரத்திலே கண்டு மகிழ்கிறார். இதன் மூலம் கோயில்களில் நுழையும் போது எத்தகைய அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்பதும் கூறப்படுகிறது.

திவ்ய தேசங்களில் எப்படி சேவிக்க வேண்டும் என்பதைப் பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவம் என்ற நூலில் எழுதி உள்ளார்.

அதன்படி கரிமுகர், ஜயத்ஸேநர், காலர், சிம்கமுகர், சேத்திரபாலர் ஆகியோரையும்,

குமுத, குமுதாட்ச, புண்டரீக, வாமந, சங்கர்ஷண, ஸர்ப்ப, நேத்ர, ஸூமுக, எனும் எட்டு நகர பரிபாலர்களையும்,

சண்ட, பிரசண்ட, ஜய, விஜய, பத்ர, ஸூபத்ர, தாத்ரு, விதாதாக்கள் எனும் எய்யு துவாரபாலகர்களையும் வணங்கி அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் பெருமானைச் சேவிக்க உள்ளே நுழைய வேண்டுமாம்.

அவ்வாறு இக்கோபிகையர்கள் அனுமதி வேண்டி வாசல் காப்பானிடம் “இக்கொடிகளும் தோரணங்களும் அசேதனப் பொருள்கள் ஆகும். அவை அறிவற்றவை. ஆனால் நீ சேதனன்; எங்களுடைய ஆற்றாமையைப் பார். எங்களை உள்ளே விடு; அர்ச்சுனனுக்கு சுபத்ரையைக் கொண்டு போக கண்ணன் உதவினாற்போல நீ எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். எனவே அரண்மனையின் மணிக்கதவம் தாள் திறவாய்” என்று வேண்டுகின்றனர்.

ஏற்கனவே இக்கோபிகையர்கள் ’மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்’ என்று வேண்டினர். அவளுடைய கதவும் மணியிலானது. அதுபோல இவன் கோயில் கதவும் மணியிலானது. அவன் தனக்கு இருப்பதைப் போன்றே பிறர்க்கும் அருள் செய்பவனன்றோ?

வாசல் காப்பவனிடத்தில் கோபிகையர்கள் உரையாடுவது மிகவும் ரசிக்கத் தகுந்த ஒன்றாகும். அங்கே பெரிய வாதமே நடக்கிறது.

கோபிகையர்கள்; வாசல் காப்போனே! மணிக்கதவம் தாள்  திறந்து நாங்கள் உள்ளே நுழைய அனுமதி தருவாயாக.

காவலன்: என்ன இது? யாவரும் அஞ்சும்  இந்த ஆய்பாடியிலே அதுவும் இந்த நடுநிசி வேளையிலே வந்து நின்று கதவைத் திறக்கச் சொல்லும் நீங்கள் எல்லாம் யார்?

கோபிகையர்கள்: இது அஞ்ச வேண்டிய நிலமா? கண்ணன் அவதாரம் செய்த இடமாயிற்றே! பயாநாம் அபஹாரி என்று சொல்லப்படும் அவன் இருக்கும் இடத்திலே பயமும் உண்டா?

காவலன்: ஆமாம்; இது இராமன் அவதாரம் செய்த த்ரேதாயுகமா? அவனின் தந்தை தசரதன் பத்து ரதங்கள் ஓட்டியவன்: மேலும் அவன் பல அஸுர்ர்களை வென்றவன்; இராமனின் சகோதரர்கள் எல்லாரும் ஆண் புலிகள்; அயோத்தி நகர மக்கள் இராமனுக்காக உயிரையும் கொடுப்பவர்கள்; இராமனோ சாதுவான குழந்தை; இங்கு ஆய்பாடியில் கண்ணனின் தந்தை நந்தகோபன் மிகவும் சாது. புல்லையும் மிதியாதவர்; இந்தப் பிள்ளையும் குறும்பு செய்பவன்; இந்த இடமும் விரோதியான கம்சனின் ராஜ்யத்துக்கு அருகில் உள்ளது. இங்கே புல்லும் பூண்டும் கூட அசுர்ர்களாக மாறுகின்றன மக்கள் எல்லாரும் அறிவொன்றும் இல்லாத ஆய்குலம்; எனவே பயம் இருக்கத்தானே செய்யும்?

கோபிகையர்; நீர் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால் நாங்களெல்லாம் பெண்கள்; எனவே எங்களுக்கு அஞ்ச வேண்டா; எம்மை உள்ளே விடுவாயாக

காவலன்; பெண் என்பதால் உங்களை உள்ளே விட முடியுமா? சூர்ப்பனகையும் ஒரு பெண்தானே? அவள் என்ன பாடு படுத்தினாள். ‘அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் அரக்கர் குலப் பாவைதன்னை’ என்றார் திருமங்கை ஆழ்வார்.

கோபிகையர்கள்: அவள் ராட்சசி; நாங்கள் எல்லாம் இடைப்பெண்கள்.

காவலன்: பூதனை இடைப் பெண்ணாகத்தானே வந்தாள். பூதனைக்குப் பிறகு இடைப் பெண்கள் என்றால் அஞ்ச வேண்டி உள்ளது. கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை, வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பார் ஆழ்வார். படுபாவி இன்னும் எத்தனை பேரை அனுப்பி இருக்கிறானோ?

கோபிகையர்: அவள் வயது முதிர்ந்தவள்; எங்கள் பருவத்தைப் பார்த்தாயா? அவள் செம்மயிர்ப் பேய்; நாங்களோ கருங்குழல் ஆய்ச்சிகள்; அதுவும் அவள் தனியாகத்தான் வந்தாள்; நாங்கள் அஞ்சு லட்சம் குடியின் பெண்கள் எல்லாரும் வந்துள்ளோம். நாங்கள் அறியாச் சிறுமிகள் எங்களை உள்ளே விடு.

காவலன்; சிறுமிகள் என்று உங்களை நம்பலாமா? வத்சாசூரன் இளன்கன்றாகவன்றோ வந்தான். அது சரி. உள்ளே போய் என்ன செய்யப் போகிறீர்கள்? வந்த காரியத்தைச் சொல்லுங்கள்.

கோபிகையர்: இது நல்ல கேள்வி. நாங்கள் ஒரு புருஷார்த்த விஷயமாக வந்துள்ளோம். எங்கள் நோன்பிற்காக சப்திக்கும் பறை தருகிறேன் என்று நேற்றே சொன்னான். அதை கேட்டு வந்தோம்.

காவலன்: என்னிடம் சொல்லவில்லையே? வாக்கு அளித்திருந்தால் என்னிடம் கூறியிருப்பாரே?

கோபிகையர்: அவன் அளித்த வாக்கு பொய்யாகுமா? மகபாரதத்திலே கிருஷ்ணன் திரௌபதியிடத்தில் ”சுவர்க்கம் கீழே விழுந்தாலும் விழும்; பூமி சிதறிப் போனாலும் போகும்; இமாலயம் பொடிப் பொடியாய்ப் போனாலும் போகும்; கடல் வற்றிப் போனாலும் போகும்; என்னுடைய வார்த்தை பொய்யாகாது” என்றானே. அதனால் கண்ணன் நேற்று சொன்ன வார்த்தை பொய்யாகாது. எங்களை உள்ளே விடு.

காவலன்: அவன் வாக்களித்திருந்தாலும் அவனைக் காக்கக் கடமைப் பட்ட நான் உங்கள் சுபாவம் அறியாமல் உள்ளே விட மாட்டேன். நீங்களும் அறைபறை என்று ஒரு பிரயஜோனமாய் வந்ததாகச் சொன்னீர்கள். ஆகையால் உங்களை நான் நம்புவதற்கில்லை.

கோபிகையர்: நாங்கள் பறை என்ற பிரயோஜனம் கொண்டு பரிசுத்தர்களாக வந்தோம். தூயோமாய் வந்தோம். இது தேக சுத்தி அன்று. உள்ள சுத்தியாகும். விபீஷணன் முழுக்கிட்டா வந்து இராமனிடம் சரணடைந்தான்;  அருச்சுனன் தூர்த்தர்கள் நடுவில்தானே சரமஸ்லோகம் கேட்டான். அவன் எங்களை நாடி வர வேண்டி இருக்க நாங்கள் வந்தோமே? இதிலிருந்தே எங்கள் உள்ள சுத்தி தெரியவில்லையா?

காவலன்: பிரபுக்கள் தூங்கும்போது எழுப்புவது பெரிய அபசாரம். சித்திர கூடத்தில் ”சிறுகாக்கை முலை தீண்டப் பெற்ற பிராட்டி சயனித்திருந்த பிரானை எழுப்பிவிட்டு எவ்வளவு அனுதாபப் பட்டார் தெரியுமா?

கோபிகையர்; நாங்கள் அவன் எழுந்த பிறகு  பார்க்க வர வில்லை. அவன் எழும் அழகைக் காணவே வந்திருக்கிறோம். துயிலெழப் பாடவே வந்திருக்கிறோம்.

“மேட்டு இளமேதிகள் தளைவிடும் ஆயர்

வேய்ங்குழல் ஓசையும், விடைமணிக்குரலும்

ஈட்டிய இசைதிசை பரந்தன; வயலுள்

இரந்தன சுரும்பினம்; இலங்கையர் குலத்தை

மாட்டிய வரிசிலை வானவர் ஏறே

வாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

என்று ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி பாடி உள்ளதுபோல் நாங்களும்

அவனுக்கு மங்களாசாசனம் செய்ய வந்துள்ளோம். உம்பர் கோமானே உறங்காதெழுந்திராய் என்று பாட வந்துள்ளோம்.

காவலன்: நன்றாக இருக்கிறது. பெருமான் தூங்கும்போது எழுப்புவதா? எவ்வளவு பெரிய அபசாரம்? வெளியே போங்கள்.

கோபிகையர்: உனக்கு இராமாயணம் தெரியாதா? அதில் உறங்குகின்ற இராம பிரானை,   விஸ்வாமித்திரர்,

“கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்”

என்று பாடி துயில் எழுப்புகிறாரே? இது உனக்குத் தெரியாதா? மீண்டும் வாயினால் ஏதேனும் சொல்லிச் சொல்லி மறுக்காதே; நீ எங்களுக்கு ஸ்வாமியைப் போன்றவன்; பகவானையே காட்டித்தருவதால் நீ அவனைக் காட்டிலும் மேலானவன்; வழி விட்டுத் தாள் திறவாய்.

காவலன்: ஆமாம்; நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்; நான் இனி உங்களைத் தடுக்கவில்லை. கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்லுங்கள்.

கோபிகையர்: இந்தக் கதவோ உன்னைக் காட்டிலும் பகவானிடத்தில் பரிவு உடையது. நாங்களெல்லாம் கூடித் தள்ளினாலும் அது திறவாது. எனவே நீயேதிறந்து விடு. விபீஷணன் சரணாகதி செய்ய வந்தபோது சுக்ரீவன் தடையாக இருந்தான், பின் ஸ்ரீராமன் அவனையே அனுப்பி விபீஷணனை அழைத்து வரச் செய்தார். அதுபோல் இத்தனை நேரம் தடையாக இருந்த நீதான் திறந்து விட வேண்டும்.  எங்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்.

பிறகு காவலன் திறந்துவிட கோபிகையர்கள் உள்ளே செல்கிறார்கள்.

 

இப்பாசுரம்நிறையஉள்ளர்த்தங்கள்கொண்டதாகும்.

துவாரபாலகர்களின்அனுமதிபெற்றுத்தான்திருக்கோயிலினுள்பகவானைச்சேவிக்கச்செல்லவேண்டும்.

நந்தகோபன்ஆச்சாரியன்; அவனைக்கொண்டுஇவர்கள்பகவானைப்பற்றநினைக்கிறார்கள்.

மணிக்கதவம்என்பதுஉள்ளேஞானமும்வெளியேஅகங்காரம்கொண்டது.

பறைஎன்பதுபெருமானின்புருஷார்த்தமாகும்

காப்பதுஎன்பதுதிருமந்திரத்தைத்தகுதியற்றவர்பெறாமல்காப்பதாகும்.

ஆயர்சிறுமியரோம்என்பதுசிறந்தஆச்சாரியரைஅண்டிமந்திரம்வேண்டும்போதுநாங்கள்ஞானமில்லாதவர்கள்; ஒன்றும்தெரியாதவர்கள்என்பதைத்தெரிவிக்கவேண்டும்.

நிலைக்கதவம்என்பதுஇரட்டைத்தன்மைகொண்டதாகும். அதுபோலதிருமந்திரம் = 1 ப்ரணவம்; 2 மந்த்ரசேஷம்

த்வ்யம் = 1 பூர்வவாக்கியம் 2 உத்தரவாக்கியம்

சர்மஸ்லோகம் = 1 பூர்வார்த்தம் 2 உத்தரார்த்தம்

ஆகியஇரட்டைத்தன்மைகளைக்கொண்டவையாகும்

இவ்வாறுஆண்டாள்நாச்சியாரின்திருப்பாவையில் 16 ஆம்பாசுரம்விசேஷமானசிறப்பைப்பெற்றுவிளங்குகிறது.

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *