திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

நவம்பர் 4 2005 இதழ்:
சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல்- III & IV பி.கே.சிவகுமார்
க்ரியேஷனுக்கும் ரெஃலக்ஷனுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு.
இணைப்பு

வனத்தின் அழைப்பு- அஸ்வகோஸ்- ‘மகனும் ஈ கலைத்தலும்’- சிறு குறிப்பு- ப.வி.ஸ்ரீரங்கன்

எத்தனையோ இரவுகளில்
புலர்ந்து கிடந்த மண்ணினது மைந்தர்கள்
சாய்ந்து போன உடல்களாய்
சவப்பெட்டிகளில் ஈயுடன் போராடி
இணைப்பு

நவம்பர் 11 2005 இதழ்:

ராஜ் கவுதமன் எழுதிய ‘க.அயோத்தியாதாசர் ஆய்வுகள்- ஒரு திறனாய்வு- மலர் மன்னன்
ஆக தலித் என்றால் தீண்டாதார்கள். நான் சொல்வதை கவனியுங்கள் தீண்டாதார்கள்.
இணைப்பு

பௌத்த மீட்டுருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர்- (க.அயோத்தியாதாசர் – கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்-பாவண்ணன்)- தாசரின் சிந்தனைகளும் லட்சியங்களும் சாதி மதமற்ற அற வாழ்க்கையையும் கருணையும் அன்பும் மிக்க மேம்பட்ட மனித உறவுகளையும் பற்றியவை.
இணைப்பு

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல்- V பி.கே.சிவகுமார்
தமிழ்ல Creative Process என்கிற thoughtஏ கிடையாது.
இணைப்பு

நவம்பர் 18 2005 இதழ்:

தனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மைப் பின்னடைவுகளும்- அருண் மொழி- அமெரிக்க நிலப்பரப்பு இந்தியாவைப் போல மூன்று மடங்கு பெரியது. மக்கட் தொகை இந்தியாவை விட மூன்றில் ஒரு பங்கு குறைவானது.
இணைப்பு

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல்- VI பி.கே.சிவகுமார்

பிலாஸபியை விட்டு -அது சம்பந்தம் இல்லாம- ரைட்டிங்னு எதுவுமே கிடையாது.
()

நவம்பர் 25 2005 இதழ்: ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கி ஜனாதிபதி ஆற்றிய உரை: பி.கே.சிவகுமார்
இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது. உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி. நீங்களே உங்களைக் கடந்த் செல்வதற்கு உதவுவது இலக்கியத்தின் வெற்றி. அதற்கு இன்னொரு பெயர் வளர்ச்சி.
இணைப்பு

கற்பும் கருத்துச் சுதந்திரமும் – லதா ராமகிருஷ்ணன்- கற்பு தூலமானதா? சூக்குமமானதா? மனம் சார்ந்ததா? உடல் சார்ந்ததா?
இணைப்பு

நாடோடி மனம்- பிரம்மராஜன்- மாலதி

வேசிப் பெண்கள்
——————-
அவர்களை அப்படி நடத்துவது சரியே
நிச்சயமாய் அவர்களுக்காகப் பரிதாபப் பட்டு
பின் படுக்கைக்கு அழைத்துச் செல்வதை விட

இணைப்பு

பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன்- எமே செசேர்- (Aime Cesaire)- நாகரத்தினம் கிருஷ்ணா-

எனது நீக்ரோத்தனம் உயர்ந்த கோபுரமுமல்ல பெரிய தேவாலயமுமல்ல
அது பூமியின் செங்குருதியிற் தோயும்
அது வானின் கஞ்சாப் புகையில் மூழ்கும்
பொறுமையினாலுற்ற
பொல்லாங்குகளை இனங்கண்டிடும்
இணைப்பு

இலக்கியத்தில் பெண்கள்- திலகபாமா
சமையலறை தேடி
நீரருந்தி விட்டுத் திரும்பும் அவருக்கு
எதை சொல்லி
என் வயதை
ஞாபகப் படுத்த?
இணைப்பு

தமிழ்க் கவிதையில் பாலியல் இருப்பின் குரல்- வெளி ரங்கராஜன்
அது வெற்றுடம்போடு குளிப்பதை
வெப்பத்தில் உடல் உலர்த்திக் கொள்வதை
உயிர்களை விழுங்குகையில்
ஆண் வாசனை வீசுமதன் நடுக்கமுற்ற மார்பில் முத்தமிடுகிறேன்
அளவு கூடிய மின் கசிவாய் என் உதடுகளில் பரவுகிறது
தார்ச்சாலையின் ஊமை வலி
இணைப்பு

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல்- VII பி.கே.சிவகுமார்
கவிதா சரண் பத்திரிக்கையை நான் மூணு தடவை படிப்பேன். அதுல அவ்வளவு விஷயங்கள் இருக்கு.

இணைப்பு

டிசம்பர் 2 2005 இதழ்:
தமிழக தத்துவங்களின் பன்முகம்- என்.குணசேகரன்- உலகில் வேறு எந்த ஒரு செம்மொழியிலும் இல்லாத அளவுக்கு சமஸ்கிருதத்தில் நாத்திகக் கருத்துகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார் அமர்தியா சென்.
இணைப்பு

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல்- VIII பி.கே.சிவகுமார்
ஜெயகாந்தனை, leftists, marxists and communists யாருமே விமர்சனம் பண்ண மாட்டாங்க.
இணைப்பு

அடியோர் பாங்கினும்- இந்திரா பார்த்தசாரதி

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்;
கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர்
இணைப்பு

டிசம்பர் 9,2005 இதழ்:
தத்துவார்த்தப் போர்கள் – இந்திரா பார்த்தசாரதி- ஸமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றிருந்ததால் தான் ஜாபாலி முனிவரிலிருந்து அம்பேத்கர் வரை எல்லா அறிஞர்களாலும் ஸ்தாபனத்தை எதிர்க்க முடிந்திருக்கிறது.
இணைப்பு

ஈ.வே.ரா- ஒரு முழுமையான பார்வை முயற்சியில்- மலர் மன்னன்- ஒரு முறை நாகை பாட்சா என்னும் முகமதிய தி.க. பேச்சாளர் ஹிந்து சமய நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து பேசத் துவங்கிய போது மேடையிலிருந்த ஈ.வே.ரா. உடனே குறுக்கிட்டு “அதையெல்லாம் பேச நாங்க இருக்கிறோம். நீங்க உங்க மதத்தில இருக்கிற கோளாறுகளைப் பத்தித் தான் பேசணும்” என்றார்.
இணைப்பு

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல்- IX பி.கே.சிவகுமார்-

ஒருத்தன் சின்சியரான ரைட்டராக இருப்பானானால் அவனை நீங்க progressiveவா பார்க்கறத்து எவ்வளவு சந்தர்ப்பங்கள் தரானோ அதே மாதிரி reaction ஆ பார்க்கறத்துக்கும் சந்தர்ப்பங்கள் தந்து கிட்டே இருப்பான்.
இணைப்பு

டிசம்பர் 16,2005 இதழ்:
போல் வெர்லென் (Paul Verlaine)- நாகரத்தினம் கிருஷ்ணா
நமது கவிஞனுக்கு பிரான்ஸின் தெற்குப் பிரதேசம் மதப் பிசாசுகளின் ஊர்வல பூமி, சோகையானது, வெளுத்துப் போனது. பேச்சற்றது
இணைப்பு

டிசம்பர் 16,2005 இதழ்:
வியாக்கியான இலக்கியம்- இந்திரா பார்த்தசாரதி
வேதங்களைக் காட்டிலும் இறைவன் நம்மாழ்வார் பாடல்களைத் தான் விரும்பிக் கேட்கிறார்.
இணைப்பு

டிசம்பர் 23,2005 இதழ்:

ஜோஜ் ஒர்வலின் விலங்குப் பண்ணை- என் எஸ் நடேசன்

“எல்லா மிருகங்களும் சமமானவை” என்னும் வாக்கியம் பின்னர் “சில மிருகங்கள் மேலானவை ” என்று மாறுகிறது.
இணைப்பு

நெய்தலின் மெய்யியல் ஜோ டி குரூஸின் ஆழி சூழ் உலகைச் சிறப்பித்து
மரணத்தின் முன் வாழ்வின் பெறுமதி என்ன?” என்ற கேள்வியே “ஆழி சூழ் உலகு” என்னும் பெரும் புதினத்தைப் பின்னின்று இயக்கும் கேள்வியாக அடையாளம் காணப் படுகிறது.
இணைப்பு

டிசம்பர் 30,2005 இதழ்:

‘ராமய்யாவின் குடிசை’- பாரதி கிருஷ்ண குமாரின் ‘கீழ் வெண்மணி’ விவரணப் படம்
உலக மனிதர்கள் அனைவரது இதயத்தையும் வெப்பமாக்கும் இந்தப் படத்தை அனைத்து மனித குலமும் பார்க்க வேண்டும்.
இணைப்பு

‘இலக்கியத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து- லதா ராமகிருஷ்ணன்
திலக பாமா வசை பாடியிருக்கும் சங்கர ராமசுப்ரமணியத்தின் ”சில பொமரேனியன்கள் ஸ்டிக்கர் பொட்டிட்டுள்ளன” என்று முடியும் கவிதை உண்மையில் poignant and sensitive படைப்பு.
இணைப்பு

Series Navigation
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *