வால்ட் விட்மன் வசனக் கவிதை – 79 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Children of Adam)

(Here the Frailest Leaves of Me) &

[No Labour Saving Machine]

 

  1. எனது நொறுங்கிய இலைகள்
  2. வேலைப் பளு குறைக்கும் யந்திரம்

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

 

  1.  எனது நொறுங்கிய இலைகள்

 

 

இந்த நொறுங்கிய இலைகள்தான்

எனக்குரியவை !

ஆயினும் இவைதான்

எனக்கு வலு தருபவை

என்னுடன்

நீடித்து இருப்பவை !

இவற்றுக் கெல்லாம்

நிறம் பூசி

மறைத்து வைப்பேன் நான்

என் சிந்தனை களை.

நானாக

வெளிப்படுத்துவ தில்லை

அவற்றை !

ஆனால் அவை 
என்னைக்

காட்டிக் கொடுத்து விடும்

எனது மற்ற

கவிதைகளைக் காட்டிலும் !

 

 

  1. வேலைப் பளு குறைக்கும் யந்திரம்

 

 

வேலைப் பளு குறைக்கும் யந்திரம்

காணப்பட வில்லை.

நானும் இதுவரைக்

கண்டு பிடிக்க வில்லை !

ஓர் மருத்துவ மனைஅல்லது

நூலகத்தை

எனக்குப் பின்னால்

ஏற்படுத்த

எந்தக் கொடை நிதியும் நான்

சேர்த்து வைக்க வில்லை;

அமெரிக்க வரலாற்றில்

நினைவுக்குக் கொண்டு வர

எவ்விப் புரட்சி

வினையும் உருவாக்க வில்லை

இலக்கிய சாதனையோ,

அறிவுச் செல்வமோ

நூலக அலமாரிக் கேற்ற

நூற்களோ

நானென்றும் படைக்க வில்லை !

ஆனால் காற்றில்

அதிர்வலை யாய்ப் பரவச் சில

களிப்புப் பாடல்களை

ஆக்கி யுள்ளேன்

காதல ருக்கும்தோழ ருக்கும்  !

 

 

+++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 12, 2014

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *