வால்ட் விட்மன் வசனக் கவிதை – 81
(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(What Think You I Take My Pen in Hand ?)
(To the East and To the West)
1. என் கை பேனாவைத் தொடும்போது
2. கிழக்குக்கும், மேற்குக்கும்
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
1. என் கை பேனாவைத் தொடும் போது
பதிவில் குறித்திடப் பேனாவை
என் கரம் தொடும் போது
என்ன நினைக்கிறாய் ?
போர்க் கப்பல்,
சீராய் அமைத்த மாதிரி,
பார்த்திடக்
கம்பீர மாய்த் தெரியுது !
கரையி லிருந்து
காணும் தூரத்தில்
கடந்திடக் கண்டேன்,
முழுப் பாய்மரம் விரித்து !
முந்தைய நாளில் நிகழ்ந்த
விந்தைகளா ?
அல்லது
என்னைச் சூழ்ந்தி ருக்கும்
இருளின் பகட்டா ?
அல்லது
வீண் தற்பெருமையா ?
நான் வாழும்
பெருநகரின் வளர்ச்சியா ?
இல்லை ! கடற்கரை
நடைப் பாலத்தில்
பிரியா
விடை பெறும் கூட்டத்தில்
இன்று கண்ட
இரு பாமர மனிதரைப்
பற்றியதா ?
ஒருவன் தோள் மீது
அடுத்தவன் தொங்கி வண்ணம்
வாயில் முத்த மிட்டான்
வாஞ்சை யோடு !
பிரிந்து செல்வோன் அடுத்தவனை
இறுக அணைத்தான்
கரங்களில் தாங்கி !
++++++++++++++
2. கிழக்குக்கும், மேற்குக்கும்
கிழக்கிற்கும், மேற்கிற்கும்
சொல்கிறேன் ;
கடல் மாநிலத் துக்கும்
பென்சில் வேனியா வுக்கும்
சொல்கிறேன்;
வடக்கே
கனடா நாட்டவ ருக்கும்
நேசிக்கும்
தென்னவ ருக்கும்
சொல்கிறேன்;
முழு நம்பிக்கை யோடு உம்மை
என்னவர் போன்றிப்
பேணுகிறேன் !
விஷக் கிருமிகள்
எல்லா மனிதரிடமும்
உள்ளன ! இந்த
மாநிலங் களின் குறிக்கோள்
மனித நேயப்
பற்றென நம்புகிறேன் !
முன்னர்
அறியப் படாத
அரியதோர் விதி இது !
காத்திருக்கும் அது வென்று
கருது கிறேன் ! ஆம்
எப்போதும் காத்திருக்கும் அது
மனிதரின்
மனத்துக்குள் ஒளிந்து !
+++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 25, 2014
- ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்- 3
- வாழ்க்கை ஒரு வானவில் 9
- சிவமே
- இந்த இதழ்கள் இடம்பெயராதா…..
- இடையன் எறிந்த மரம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 81 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்
- மல்லித்தழை
- சுமை துணை
- ஒரு நதி ஒரு கடல் ஒரு சில கரைகள்
- இளைப்பாறல்
- புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு
- தொடுவானம் 22. வீட்டை விட்டு ஓடினேன்
- ப்ரதிகள்
- ஆத்ம ராகம்
- நீங்காத நினைவுகள் – 52
- தினம் என் பயணங்கள் -23 என்னைப் போன்றவர்கள்
- யானை டாக்டர்.
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 10
- கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத் திறனில் இயங்குகிறது
- இருக்கிற கடவுள்களும், இனி வரப் போகும் கடவுள்களும் கை விட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள் – தங்கர்பச்சான் கதைகள் தொகுப்பு
- மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது
- தி.க.சி. யின் நினைவில்