(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(Salute Au Monde)
[Salute to World]
வையகமே வந்தனம் உனக்கு [4]
வியப்பான ஒரு பெருங்கோள்
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
வால்ட் விட்மன் ! சொல்
நீ காண்ப தென்ன ?
யார் அவர்
நீ வந்தனம் செய்வது ?
அடுத்தடுத் துனக்கு வந்தனம்
செய்பவர் யார் ?
விண்வெளியில் உருளும்
ஒரு பெருங் கோள்
வியப்பைக் காண்கிறேன்.
சிறு பயிர் வயல்கள், சந்துகள்,
சிதைவுகள், இடுகாடுகள்,
சிறைச் சாலைகள்,
மாளிகைகள்,
மாட்டுத் தொழுவங்கள்,
அநாகரீக மாந்தர் குடிசைகள்,
நாடோடி களின்
கூடாரங்கள்,
புவிமேல் காண்கிறேன்.
நிழல்படிந்த ஒருபுறத்தில்
பலர் தூங்குவதைப்
பார்க்கிறேன்;
பரிதி ஒளிபடும்
மறுபகுதி பார்க்கிறேன்.
ஒளியும், நிழலும் விரைவில்
மாறிடும்
கூரிய ஆற்றலை வியக்கிறேன்,
தென்படும்
தூரத் தளங்கள் யாவும்
மெய்யானவை !
அவற்றின்
அருகில்தான் இருக்கிறேன்,
என்னாட்டில் நான்
இருப்பது போல் !
பேரளவு நீர்மயம் காண்கிறேன்,
மலைச் சிகரங்கள்,
ஆன்டிஸ் மலைத் தொடர்,
ஆல்ஃப்ஸ் மலை, இமயமலை,
பால்க்ஸ் கடற்பகுதிகள்,
இத்தாலியில்
வெஸ்ஸூவியல் எரிமலை,
மடகாஸ்கர்
செந்நிறக் குன்றுகள்,
சந்திரனில் தோன்றும்
மலைகள்,
மற்றும் காண்பது
லிபியன், அரேபியன்,
ஆசியப் பாலை வனங்கள்
அச்சம் தரும்
ஆர்க்டிக், அண்டார்க்டிக்கில்
மிதக்கும்
பனித் திரட்டுகள்,
பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல்,
மெக்ஸிகன் வளைகுடா,
இந்துஸ்தான் ஆறுகள், சைனக் கடல்,
நியூ கினியா வளைகுடா,
ஜப்பானிய கடல் கரைகள்,
நாகசாகியின்
மலைச் சுழ்வெளி சுற்றிய
அழகிய வளை குடா,
பால்டிக், காஸ்பியன்
பிரிட்டிஷ் கடற்கரைகள்,
பரிதி ஒளி முழுதும் தழுவும்
மத்தியதரைக் கடல் நாடுகள்,
ஐஸ் லாந்து, கிரீன் லாந்தைச்
சுற்றிய
வெண்ணிறக் கடல்,
கண்டேன்.
உலகக் கடற்படை வீரர்கள்
தம்மைக் கண்டேன்,
புயலில் சிலர் !
இரவில் கவனமுடன்,
தடுமாடுவர் சிலர்,
தொத்து நோயுடன் சிலரைப்
பார்த்தேன்.
+++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
S. Jayabarathan [jayabarathans@gmail.com] August 13, 2014
- நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்
- “சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்
- முடிவை நோக்கி !
- நெருப்புக் குளியல்
- இயற்கையின் மடியில்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 17
- நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு
- ஆனந்த பவன் (நாடகம்) காட்சி-1
- நிழல்
- சீதை, அமுதா, நஞ்சா, தீயா?
- தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014
- வாழ்க்கை ஒரு வானவில் 16
- தொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி
- நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?
- பாவண்ணன் கவிதைகள்
- வண்ணவண்ண முகங்கள் விட்டல்ராவின் நாவல் ‘காலவெளி’
- எலிக்கடி
- உம்பர் கோமான்
- பால்கார வாத்தியாரு
- வேல்அன்பன்
- தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை
- உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 88
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
- இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி