கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளை1/174, செல்லம்மாள் இல்லம், முல்லை நகர்,நாமக்கல்- 637 002 | |||
தலைவர்திரு.கு.சின்னப்பபாரதி | செயலாளர்திரு.கே.பழனிசாமி | ||
உறுப்பினர்கள் | |||
திரு.ச.தமிழ்செல்வன் | திரு.சி.ரங்கசாமி | திரு.கு.பாரதிமோகன் | |
பத்திரிக்கைச் செய்தி
கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளையின் 6- ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா
கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளையின் சார்பில், அதன் நிர்வாகிகளைக் கொண்ட 6-வது ஆண்டு பரிசளிப்பு விழாவிற்கான கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அறக்கட்டளையின் தலைவர் கு.சின்னப்பபாரதி தலைமை தாங்கினார். வருகின்ற அக்டோபர் 2- ந் வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி தினத்தன்று நாமக்கல் கவின் கிஷோர் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசு வழங்கப்படும் இனங்களான வாழ்நாள் சாதனையாளர் விருது, நாவல், சிறுகதை, கட்டுரை. மற்றும் மொழிபெயர்ப்பு ஆகியவற்றிற்கு பரிசு பெறுவோர் விபரங்களை கூட்ட முடிவின்படி அறக்கட்டளையின் தலைவர் கு.சின்னப்பபாரதி வெளியிட்டார்.
அறக்கட்டளையின் விருதுக்கு உலக அளவில் வரப்பெற்ற ஒவ்வொரு இனத்திற்கும், கு.சின்னப்பபாரதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இறுதியில் சிறந்த படைப்புக்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு இலட்சத்து தொண்ணூறாயிரத்துக்கான பணமுடிப்பு வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில்,வாழ்நாள் சாதனையாளர் என்ற தலைப்பிற்கு, முதன்மைப் பரிசாக,காலம் தோறும் பிராமணியம் மற்றும் கலை இலக்கிய ஆய்வுக்காக தமிழ்நாட்டைச் சார்ந்த பேராசிரியர் அருணன் அவர்களுக்கு விருதும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான பணமுடிப்பும் வழங்கப்படுகிறது.
நாவல் வரிசையில், குடைநிழல் என்ற நாவலுக்கு, இலங்கையைச் சார்ந்த தெளிவத்தை ஜோசப் என்ற எழுத்தாளருக்கு விருதும், ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது
நான்கு சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்களான,
தவிக்கும் இடைவெளிகள் – எழுத்தாளர் உஷா தீபன், தமிழ்நாடு
இப்படியுமா? – எழுத்தாளர் வி.ரி இளங்கோவன், பாரீஸ்
ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்
வெந்து தணிந்தது காலம் – எழுத்தாளர் மு.சிவலிங்கம், இலங்கை
ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புக்களின் ஆசிரியர்களுக்கும் விருதும், தலா ரூபாய் பத்தாயிரமும் வழங்கப்படுகிறது.
நூல் தேட்டம் என்ற கட்டுரைத் தொகுப்பிற்கு லண்டனைச் சார்ந்த என்.செல்வராஜா நூலகவியலாளருக்கு விருதும், ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது.
மொழி பெயர்ப்புக்காக சல்மான் ருஷ்டியின் நள்ளிரவின் குழந்தைகள் என்ற நூலின் மொழிபெயர்ப்பாளர் கா.பூரணசந்திரன் மற்றும் கு.சின்னப்ப பாரதியின் பாலைநில ரோஜா என்ற நூலின், சிங்கள மொழிபெயர்ப்பாளர் உபாலி நீலாரத்தினாவிற்கு விருதும் தலா ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது,
இலங்கை மலையக மக்களின் கலை இலக்கிய சமூகப் பணிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதாக ஆண்டனி ஜீவாவிற்கு விருதும் ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது.
மற்றும் பெங்களுர் தமிழ் சங்கம் ஆற்றிவரும் தமிழ்பணிக்காக விருதும் ரூபாய் ஐயாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது என அறக்கட்டளையின் தலைவர் கு.சின்னப்ப பாரதி அறிவித்தார்.
இக்கூட்டத்திற்கு,செயலாளர் கே.பழனிசாமி, உறுப்பினர்கள் சி.ரங்கசாமி மற்றும் கு.பாரதிமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்
- பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.
- உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)
- பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்
- “கையறு நிலை…!”
- கடவுளும் வெங்கடேசனும்
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 21
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92
- கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014
- “மூட்டை முடிச்சுடன்….”
- நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி
- வீரனுக்கு வீரன்
- எல்லை
- புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்
- எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- ‘மேதகு வேலுப்போடி’
- கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்
- பாவண்ணன் கவிதைகள்
- கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்
- வாழ்க்கை ஒரு வானவில் – 20
- தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்
- நொண்டி வாத்தியார்