பட்டுப் போன வேர் !

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

உன் எண்ணங்களால்
ஏன் தீண்டுகிறாய்
நீ யாரோ வென
ஆன பிறகும்.

தூயதான அன்பை
திருப்பினாய்
வேண்டாம் போவென
அழிச்சாட்டியமாக.

கண்ணீரும் தவிப்பும்
கூக்குரலும் அழுகையும்
உன் ஜீவனைத்
தீண்ட வில்லை !

அதன் மெய்த்தன்மையை
சோதித்து
வலிகளால் பதியவிட்டாய்
நாட்களை.

உனக்கான தோர் இடமென்று
கிழிசலை முன் எறிந்தாய்
அது எனக்கான தாகக்
கொள்வ தெப்படி ?

மீண்டும் வந்து நில்
நட்பினால் சிருங்காரிப்பேன்
என்பாயோ – அது
காதலில் கரைந்த பிறகு.

பட்டுபோன வேருக்கு
நீருற்ற வந்தாயோ
இயல்புணராமல்
உன் மன ராஜ்யத்தின் படி.

போ உன் பாதையின் வழி, அங்கே
பாதை மாறாது ! பயணம் தொடராது !
திரும்பிப் பார்ப்பானேன்
நாம் ஒன்றாய் பயணித்த
அந்த நாட்களை !

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *