சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது

author
29
2 minutes, 19 seconds Read
This entry is part 8 of 21 in the series 23 நவம்பர் 2014

என். செல்வராஜ்

முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது. 135 ஆண்டு கால நாவல் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கில் நாவல்கள் வந்துள்ளன. இதுவரை வெளிவந்த நாவல்களில் சிறந்த 150 நாவல்களைக் கண்டறிய நான் எடுத்துக் கொண்ட முயற்சியே தலை சிறந்த நாவல்கள் ஒரு பார்வை, சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்-1 , சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்-2 ஆகிய மூன்று கட்டுரைகளாக வந்தன. இவை திண்ணை இணைய இதழில் வெளிவந்தன. இந்த மூன்று கட்டுரைகளின் முடிவை இதில் காண்போம். டாப் 10 பரிந்துரைகள், எனது தலை சிறந்த நாவல்கள் கட்டுரையில் உள்ளது. நாவல் பரிந்துரைப் பட்டியல், சிறந்த நாவல்கள் பட்டியல்-1 மற்றும் 2 ல் உள்ளவை. இவற்றையே பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் என குறிப்பிட்டு இருக்கிறேன்.

நாவல் — ஆசிரியர்– பரிந்துரைகள்

1.மோகமுள்- தி.ஜானகிராமன் – ( டாப் 10 பரிந்துரைகள்-20,
பட்டியலுக்கான பரிந்துரைகள் -21 )

2. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி– ( டாப் 10 பரிந்துரைகள்-15, பட்டியலுக்கான பரிந்துரைகள் -20 )

3. ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி- ( டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21 )

4. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்-( டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள்-16 )
5. கடல்புரத்தில் – வண்ணநிலவன்— ( டாப் 10 பரிந்துரைகள்-10, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )

6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்–( டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19 )

7 .கோபல்ல கிராமம் – கி ராஜநாராயணன்—-( டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )

8. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19 )

9. பொய்த்தேவு – க நா சுப்ரமணியம் –( டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )

10. தலைமுறைகள் – நீலபத்மநாபன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21 )

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் -( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -17 )

12. பொன்னியின் செல்வன் – கல்கி- -( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -11 )

13. 18 வது அட்சக்கோடு – அசோகமித்திரன்–( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13 )

14. சாயாவனம் – சா. கந்தசாமி– ( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

15. பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )

16. கோவேறு கழுதைகள் – இமையம்- ( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13 )

17. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்–( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

18. நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம்–( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

19. நினைவுப்பாதை – நகுலன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

20. கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்–( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -8 )

21. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -18 )

22. ஆழி சூழ் உலகு – ஜோ.டி.குரூஸ் — ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -14 )

23. வெக்கை – பூமணி —— ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

24. கிருஷ்ணப்பருந்து – ஆ.மாதவன் —( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -10 )

25. வானம் வசப்படும் – பிரபஞ்சன்–( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )

26. வாசவேஸ்வரம் – கிருத்திகா–( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )

27. வாடிவாசல்- சி சு செல்லப்பா ( டாப் 10 பரிந்துரைகள் – 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 14,)

28. குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி (டாப் 10 பரிந்துரைகள் – 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 13,)

29. சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன் ( டாப் 10 பரிந்துரைகள் – 3, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 12)

30. பிறகு – பூமணி ( டாப் 10 பரிந்துரைகள் :- 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 12, )

31. பின் தொடரும் நிழலின் குரல்- ஜெயமோகன் (டாப் 10 பரிந்துரைகள் :- 3, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 11)

32. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் (டாப் 10 பரிந்துரைகள் :- 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 11, )

33. நெடுங்குருதி – எஸ் ராமகிருஷ்ணன் (டாப் 10 பரிந்துரைகள் :- 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 10, )

34. சோளகர் தொட்டி – ச பாலமுருகன் (டாப் 10 பரிந்துரைகள் :- 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 7,)

35. காவல் கோட்டம் – சு வெங்கடேசன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 3 ,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-6 )

36. ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் – தமிழவன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 3 , பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-6),

37. உயிர்த்தேன் – தி ஜானகிராமன் (டாப் 10 பரிந்துரைகள் :- 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-5, )

38. வேள்வித்தீ – எம் வி வெங்கட் ராம் ( டாப் 10 பரிந்துரைகள் :- 3 ,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 5, )

39. அவன் ஆனது – சா கந்தசாமி (டாப் 10 பரிந்துரைகள் :- 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 4 )

40. சித்திரப் பாவை — அகிலன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 3,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 3, )

41.எட்டு திக்கும் மத யானை – நாஞ்சில் நாடன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:12,)

42.ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகம்மது மீரான்( டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:-12 )

43. கோபல்லபுரத்து மக்கள்- கி. ராஜநாராயணன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:11,)

44. பசித்த மானுடம்- கரிச்சான் குஞ்சு (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:10, )

45. ரப்பர்- ஜெயமோகன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:10,)

46. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9,)

47. என் பெயர் ராமசேஷன்- ஆதவன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9,)

48. ஏழாம் உலகம்- ஜெயமோகன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9 ,)

49. அசடு – காஷ்யபன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8 , )

50.இடைவெளி- சம்பத் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

51. காகித மலர்கள்- ஆதவன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

52.தண்ணீர் – அசோகமித்திரன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8,)

53. நல்ல நிலம் – பாவை சந்திரன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8,)

54.ரத்த உறவு – யூமா வாசுகி ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

55. அஞ்சலை – கண்மணி குணசேகரன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

56.சாய்வு நாற்காலி- தோப்பில் முகமது மீரான் (டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

57. நித்ய கன்னி- எம். வி வெங்கட்ராம் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

58. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை (டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7,)

59. கூகை – சோ. தர்மன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

60.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – ஜெயகாந்தன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

61. சிவகாமியின் சபதம் – கல்கி (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

62.குறிஞ்சி மலர் – நா பார்த்தசாரதி (டாப் 10 பரிந்துரைகள் :- 2 ,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

63. கொற்றவை- ஜெயமோகன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

64. மணல்கடிகை- எம்.கோபாலகிருஷ்ணன் (டாப் 10 பரிந்துரைகள் :- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5 )

65. தியாகபூமி – கல்கி ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 4, )

66. பாலும் பாவையும் – விந்தன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:3,)

67. யவனராணி – சாண்டில்யன் ( டாப் 10 பரிந்துரைகள் :- 2,
பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 3,)

68. சிலுவைராஜ் சரித்திரம்- ராஜ் கௌதமன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13,)

69. யாமம்- எஸ்.ராமகிருஷ்ணன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13, )

70. அபிதா- லா சா ராமாமிர்தம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13, )

71. கருக்கு – பாமா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13, )

72. புலிநகக் கொன்றை – பி ஏ கிருஷ்ணன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 12,)

73. காடு– ஜெயமோகன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 11,)

74. கம்பா நதி – வண்ணநிலவன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, )

75. கூளமாதாரி – பெருமாள் முருகன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, )

76. தந்திரபூமி – இந்திரா பார்த்தசாரதி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, )

77. தலைகீழ் விகிதங்கள்- நாஞ்சில் நாடன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, )

78. ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, )

79. ஒரு நாள் – க நா சுப்ரமணியம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, )

80. கடலுக்கு அப்பால்- ப சிங்காரம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9,)

81. கொரில்லா- ஷோபா சக்தி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, )

82. மரப்பசு – தி ஜானகிராமன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, )

83. உப பாண்டவம்- எஸ்.ராமகிருஷ்ணன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:8,)

84. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

85. சதுரங்க குதிரை- நாஞ்சில் நாடன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

86. மலரும் சருகும் – டி செல்வராஜ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

87. இரண்டாம் ஜாமங்களின் கதை- சல்மா (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

88. நாய்கள்- நகுலன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

89. நிழல் முற்றம் – பெருமாள் முருகன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8 , )

90. பழையன கழிதலும் – சிவகாமி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

91. செடல் – இமையம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

92. செம்பருத்தி- தி ஜானகிராமன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, )

93. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7 )

94. தாகம்—-கு சின்னப்ப பாரதி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

95. மண்ணாசை- சங்கரராம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

96. மாமிசப் படைப்பு — நாஞ்சில் நாடன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

97. தரையில் இறங்கும் விமானங்கள்– இந்துமதி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

98. சட்டி சுட்டது – ஆர் ஷண்முகசுந்தரம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7,)

99. சொல் என்றொரு சொல் — பிரேம் ரமேஷ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

100. ஏறுவெயில் – பெருமாள் முருகன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, )

101. வாக்குமூலம்—நகுலன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7,)

102. என்பிலதனை வெயில் காயும் – நாஞ்சில் நாடன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

103. எக்சிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- – சாரு நிவேதிதா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

104. ஒற்றன்- அசோகமித்திரன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

105. கரமுண்டார் வீடு- தஞ்சை பிரகாஷ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

106. கரிசல் – பொன்னீலன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

107. கூனன் தோப்பு–தோப்பில் முகம்மது மீரான் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

108. தகப்பன் கொடி- அழகிய பெரியவன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

109. புதிய தரிசனங்கள் – பொன்னீலன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

110. மானசரோவர்- அசோகமித்திரன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

111. ம் – ஷோபா சக்தி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

112 . யாரும் யாருடனும் இல்லை- உமா மகேஸ்வரி ( பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 6,)

113. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்- எம் ஜி சுரேஷ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

114. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்- எம் ஜி சுரேஷ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

115. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

116. ஆனந்தாயி – ப சிவகாமி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

117. ஜீவனாம்சம்- சி சு செல்லப்பா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

118. கள்ளம்- தஞ்சை பிரகாஷ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

119.குறிஞ்சித் தேன்- ராஜம் கிருஷ்ணன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

120. தேநீர்- டி செல்வராஜ் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

121. தொலைந்து போனவர்கள்- சா கந்தசாமி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

122. பத்மாவதி சரித்திரம்- அ. மாதவைய்யா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

123. புணலும் மணலும்- ஆ மாதவன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)

124. ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

125. ராஸலீலா- சாருநிவேதிதா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

126. ரெயினீஷ் அய்யர் தெரு – வண்ணநிலவன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

127. வாடாமல்லி- சு சமுத்திரம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, )

128. அலைஓசை – கல்கி ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5,)

129. பகடையாட்டம்- யுவன் சந்திரசேகர் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

130. புத்ர – லா சா ராமாமிர்தம் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

131. மெர்க்குரிப்பூக்கள் – பாலகுமாரன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

132. ஆறுமுகம்- இமையம் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

133. கல்லுக்குள் ஈரம்- ர சு நல்லபெருமாள் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

134. கள்ளி – வா மு கோமு ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

135. கவலை- அழகிய பெரிய நாயகி அம்மாள் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

136. கனவுச் சிறை – தேவகாந்தன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

137. சங்கதி – பாமா ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5,)

138. சாயத்திரை- சுப்ர பாரதி மணியன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

139. துறைமுகம்- தோப்பில் முகம்மது மீரான் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

140. நிழல்கள் – நகுலன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

141. பஞ்சும் பசியும் – தொ மு சி ரகுநாதன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

142. பாய்மரக்கப்பல் – பாவண்ணன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

143. மிதவை- நாஞ்சில் நாடன் ( பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, )

இந்த 143 நாவல்களில் 26 நாவல்கள் தலைசிறந்த நாவல்கள், 117 நாவல்கள் சிறந்த நாவல்கள் ஆகும். 5 பரிந்துரைகளைப் பெற்ற நாவல்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த பட்டியலை 150 நாவல்கள் என்ற அளவில் முடிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் மேலும் 7 நாவல்களை( 4 பரிந்துரைகள் பெற்ற நாவல்கள்) பட்டியலில் சேர்க்கலாம். அவை எவை எனப் பார்ப்போம்.

144. இதயநாதம்- சிதம்பர சுப்ரமணியம்

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 4, க நா சுப்ரமணியம்(டாப் 10), ஜெயமோகன், சி மோகன், நாஞ்சில் நாடன்

145. இரும்பு குதிரைகள் — பாலகுமாரன்

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 4, ஃபோரம்ஹப்.காம்(டாப் 10) இரா முருகன், கோவை ஞானி, பா ராகவன்

146. கன்னி – ஜெ பிரான்சிஸ் கிருபா

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 4, சு வேணுகோபால்( டாப் 10), நாஞ்சில் நாடன், அய்யனார் விஸ்வநாத், ம மணிமாறன்

147. சுதந்திரபூமி — இந்திரா பார்த்தசாரதி

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 4, அசோகமித்திரன்(டாப் 10), ஜெயமோகன், நாஞ்சில் நாடன், இரா குருனாதன்

148. தில்லானா மோகனாம்பாள் – கொத்தமங்கலம் சுப்பு

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 4, அசோகமித்திரன் (டாப் 10), எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், இரா குருனாதன்

149. தூர்வை – சோ தர்மன்

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 4, வெங்கட் சாமினாதன்(டாப் 10), கோவை ஞானி, ஜெயமோகன், க பூரணசந்திரன்

150. மலர் மஞ்சம் – தி ஜானகிராமன்

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 4, விக்ரமாதித்யன் (டாப் 10), ஜெயமோகன், நாஞ்சில் நாடன், அய்யனார் விஸ்வநாத்

இந்த பட்டியல் பல்வேறு எழுத்தாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நிரந்திரமானது அல்ல. மாற்றத்துக்குரியது. புதிய பரிந்துரைகள் மேலும் கிடைக்கும்போது பட்டியலில் மாற்றம் ஏற்படும். இந்த ஆய்வில் கிடைத்த மற்ற முடிவுகளை இப்போது பார்க்கலாம்.

இந்த 150 நாவல்களில் முக்கிய எழுத்தாளர்களின் பரிந்துரைகள்

1. அசோகமித்திரன் பரிந்துரைத்த 23 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

2. அய்யனார் விஸ்வநாத் பரிந்துரைத்த 60 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

3. பாலகுமாரன் பரிந்துரைத்த 37 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

4. இரா முருகன் பரிந்துரைத்த 47 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

5. சி மோகன் பரிந்துரைத்த 38 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

6. ஜெயமோகன் பரிந்துரைத்த 133 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

7. எஸ் ராமகிருஷ்ணன் பரிந்துரைத்த 81 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

8. ஆர் வி பரிந்துரைத்த 56 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

9. நாஞ்சில் நாடன் பரிந்துரைத்த 114 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

10. ந முருகேச பாண்டியன் பரிந்துரைத்த 54 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

11. வெங்கட் சாமினாதன் பரிந்துரைத்த 42 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

12. கோவை ஞானி பரிந்துரைத்த 43 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

13. க பூரணசந்திரன் பரிந்துரைத்த 47 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

14. க நா சுப்ரமணியம் பரிந்துரைத்த 53 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

15. எம் வேதசகாயகுமார் பரிந்துரைத்த 31 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

16. பா ராகவன் பரிந்துரைத்த 27 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

17. சுந்தர ராமசாமி பரிந்துரைத்த 35 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

18. விக்ரமாதித்யன் பரிந்துரைத்த 25 நாவல்கள் இடம் பிடித்துள்ளன

இந்த பதினெட்டு எழுத்தாளர்களின் பரிந்துரைகளை ஆய்வு செய்து
குறைந்தது ஆறு பரிந்துரைகள் பெற்ற நாவல்களைப் பட்டியலிடுகிறேன். 150 நாவல்கள் பெரிய பட்டியல் என நினைக்கும் வாசகர்கள் இந்த பட்டியலில் இடம் பெறும் நாவல்களைத் தேடி படிக்க கேட்டுக் கொள்கிறேன்.

1. மோகமுள்- தி ஜானகிராமன் – 13 பரிந்துரைகள்

2. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – 13 பரிந்துரைகள்

3. தலைமுறைகள் – நீல பத்மநாபன் – 13 பரிந்துரைகள்

4. ஜே ஜே சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி – 12 பரிந்துரைகள்

5. நாளை மற்றுமொரு நாளே – ஜி நாகராஜன் – 12 பரிந்துரைகள்

7. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் – 12 பரிந்துரைகள்

8. ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி – 12 பரிந்துரைகள்

9. கடல் புரத்தில் – வண்ணநிலவன் – 11 பரிந்துரைகள்

10. நினைவுப்பாதை – நகுலன் – 11 பரிந்துரைகள்

11. புயலிலே ஒரு தோணி – ப சிங்காரம் –11 பரிந்துரைகள்

12. அம்மா வந்தாள் – தி ஜானகிராமன் – 10 பரிந்துரைகள்

13. கிருஷ்ணபருந்து — ஆ மாதவன் – 10 பரிந்துரைகள்

15. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு -10 பரிந்துரைகள்

16. வாடி வாசல் – சி சு செல்லப்பா -10 பரிந்துரைகள்

17. கருக்கு – பாமா – 9 பரிந்துரைகள்

18. குருதிப்புனல்– இந்திரா பார்த்தசாரதி – 9 பரிந்துரைகள்

19. நாகம்மாள்- ஆர் ஷண்முகசுந்தரம் – 9 பரிந்துரைகள்

20. பள்ளி கொண்டபுரம் – நீல பத்மநாபன் -9 பரிந்துரைகள்

21. பொய்த்தேவு – க நா சுப்ரமணியம் -9 பரிந்துரைகள்

22. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் -9 பரிந்துரைகள்

23. 18 ஆவது அட்ச்க்கோடு – அசோகமித்திரன்- 8 பரிந்துரைகள்

24. அபிதா – லா சா ராமாமிர்தம் – 8 பரிந்துரைகள்

25. கோபல்ல கிராமம் – கி ராஜ நாராயணன் – 8 பரிந்துரைகள்

26. இடைவெளி – சம்பத் – 8 பரிந்துரைகள்

27. கம்பா நதி – வண்ணநிலவன் – 8 பரிந்துரைகள்

28. பிறகு – பூமணி – 8 பரிந்துரைகள்

29. சாயாவனம் – சா கந்தசாமி – 8 பரிந்துரைகள்

30. வாஸவேஸ்வரம் – கிருத்திகா – 8 பரிந்துரைகள்

31. அசடு – காசியபன் — 7 பரிந்துரைகள்

32. கடலுக்கு அப்பால் – ப சிங்காரம் – 7 பரிந்துரைகள்

33. காகித மலர்கள் – ஆதவன் — 7 பரிந்துரைகள்

34. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர் – 7 பரிந்துரைகள்

35. கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் – 7 பரிந்துரைகள்

36. கோவேறு கழுதைகள் – இமையம் – 7 பரிந்துரைகள்

37. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – 7 பரிந்துரைகள்

38. நெடுங்குருதி – எஸ் ராமகிருஷ்ணன் – 7 பரிந்துரைகள்

39. சதுரங்க குதிரை – நாஞ்சில் நாடன் – 7 பரிந்துரைகள்

40. தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன் – 7 பரிந்துரைகள்

41. தந்திர பூமி – இந்திரா பார்த்தசாரதி – 7 பரிந்துரைகள்

42. ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – 7 பரிந்துரைகள்

43. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன் — 7 பரிந்துரைகள்

44. தண்ணீர் – அசோகமித்திரன் – 7 பரிந்துரைகள்

45. கள்ளம் – தஞ்சை ப்ரகாஷ் – 6 பரிந்துரைகள்

46. கூளமாதாரி – பெருமாள் முருகன் -6 பரிந்துரைகள்

47. மரப்பசு – தி ஜானகிராமன் – 6 பரிந்துரைகள்

48. நாய்கள் – நகுலன் -6 பரிந்துரைகள்

49. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகம்மது மீரான் – 6
பரிந்துரைகள்

50. சாய்வு நாற்காலி – தோப்பில் முகம்மது மீரான் – 6 பரிந்துரைகள்

51. சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன் – 6 பரிந்துரைகள்

52. தாகம் – கு சின்னப்ப பாரதி – 6 பரிந்துரைகள்

53. வாடாமல்லி- சு சமுத்திரம் – 6 பரிந்துரைகள்

54. வெக்கை – பூமணி – 6 பரிந்துரைகள்

55. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன் – 6 பரிந்துரைகள்

56. அவன் ஆனது – சா கந்தசாமி – 6 பரிந்துரைகள்

57. ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ் -6 பரிந்துரைகள்

58. காடு – ஜெயமோகன் – 6 பரிந்துரைகள்

59. கொரில்லா – ஷோபா சக்தி – 6 பரிந்துரைகள்

60. குள்ள சித்தன் சரித்திரம் – யுவன் சந்திர சேகர் — 6 பரிந்துரைகள்

61. நல்ல நிலம் – பாவை சந்திரன் – 6 பரிந்துரைகள்

62. நித்ய கன்னி – எம் வி வெங்கட்ராம் – 6 பரிந்துரைகள்

63. புலிநகக் கொன்றை – பி ஏ கிருஷ்ணன் -6 பரிந்துரைகள்

64. புணலும் மணலும் – ஆ மாதவன் – 6 பரிந்துரைகள்

65. ரப்பர் — ஜெயமோகன் – 6 பரிந்துரைகள்

66. செம்பருத்தி – தி ஜானகிராமன் – 6 பரிந்துரைகள்

67. எட்டு திக்கும் மத யானை – நாஞ்சில் நாடன் – 6 பரிந்துரைகள்

150 நாவல்களில் இரண்டு நாவல்களும் அதற்கு மேலும் இடம் பெற்ற எழுத்தாளர்களும் அவர்களது படைப்புக்களையும் இங்கே பட்டியலிட்டு இருக்கின்றேன். அடைப்புக் குறிக்குள் அந்த நாவல், தர வரிசையில் பெற்ற இடத்தைக் குறிப்பிட்டுள்ளேன்.

1. ஆ மாதவன் – கிருஷ்ணபருந்து ( 24) , புணலும் மணலும் (122)

2. ஆதவன் – என் பெயர் ராமசேஷன் (47), காகித மலர்கள் (51),

3. அசோகமித்திரன் – 18 ஆவது அட்சக்கோடு ( 13), கரைந்த நிழல்கள்( 20) , தண்ணீர் ( 52),
ஒற்றன் (104) , மானசரோவர்( 110)

4. டி செல்வராஜ் – மலரும் சருகும் (86) , தேநீர் (120),

5. இமையம் – கோவேறு கழுதைகள் ( 16), செடல் (91), ஆறுமுகம் ( 132)

6. இந்திரா பார்த்தசாரதி – குருதிப்புனல் (28), தந்திர பூமி (76) , சுதந்திர பூமி (147)

7. ஜெயகாந்தன் – ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ( 4), சில நேரங்களில் சில
மனிதர்கள் ( 29) , ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (60)

8. ஜெயமோகன் – விஷ்ணுபுரம் ( 11) , பின்தொடரும் நிழலின் குரல் ( 31), ரப்பர் ( 45),
ஏழாம் உலகம் (48), கொற்றவை ( 63) , காடு ( 73)

9. க நா சுப்ரமணியம் – பொய்த்தேவு ( 8), ஒரு நாள் (79 )

10. கல்கி – பொன்னியின் செல்வன் ( 12 ), சிவகாமியின் சபதம் ( 61), தியாக பூமி ( 65),
அலை ஓசை ( 128)

11. கி ராஜ நாராயணன் – கோபல்ல கிராமம் ( 7), கோபல்லபுரத்து மக்கள் ( 43)

12. லா சா ராமாமிர்தம் – அபிதா ( 70) புத்ர ( 130)

13. எம் ஜி சுரேஷ் – அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் ( 113) ,
அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் ( 114)

14. எம் வி வெங்கட்ராம் – வேள்வித்தீ ( 38), நித்யகன்னி ( 57)

15. நகுலன்- நினைவுப்பாதை ( 19), நாய்கள் ( 88), வாக்குமூலம்( 101), நிழல்கள் ( 140)

16. நாஞ்சில் நாடன் – எட்டுத் திக்கும் மத யானை ( 41) , தலை கீழ் விகிதங்கள் ( 77),
சதுரங்க குதிரை ( 85) , மாமிசப் படைப்பு ( 96) , மிதவை ( 143)

17. நீல பத்மநாபன் – தலைமுறைகள் ( 10) , பள்ளி கொண்டபுரம் ( 15)

18. ப சிங்காரம் – புயலிலே ஒரு தோணி ( 6), கடலுக்கு அப்பால் ( 80)

19. பாமா – கருக்கு ( 71), சங்கதி ( 137)

20. பால குமாரன் – மெர்க்குரிப் பூக்கள் ( 131), இரும்புக் குதிரைகள் ( 145)

21. பெருமாள் முருகன் – கூளமாதாரி ( 75), நிழல் முற்றம் ( 89) , ஏறு வெயில் ( 100)

22. பொன்னீலன் – கரிசல் (106), புதிய தரிசனங்கள் ( 108)

23. பூமணி – வெக்கை ( 23), பிறகு ( 30)

24. பிரபஞ்சன் – வானம் வசப்படும் ( 25), மானுடம் வெல்லும் ( 32)

25. ஆர் ஷண்முகசுந்தரம் – நாகம்மாள் ( 18) , சட்டி சுட்டது ( 98)

26. ராஜம் கிருஷ்ணன் – அலைவாய்க்கரையில் ( 115), குறிஞ்சித்தேன் (119)

27. எஸ் ராமகிருஷ்ணன் – நெடுங்குருதி ( 33), யாமம் ( 69), உபா பாண்டவம்( 83)

28. சா கந்தசாமி – சாயா வனம் ( 14), அவன் ஆனது (39), தொலைந்து போனவர்கள் ( 121)

29. சாரு நிவேதிதா – ஸீரோ டிகிரி ( 78),
எக்சிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் (103), ராஸலீலா ( 125)

30. ஷோபா சக்தி – கொரில்லா ( 81), ம் ( 111)

31. சி சு செல்லப்பா – வாடிவாசல் ( 27), ஜீவனாம்சம் ( 117)

32. சிவகாமி – பழையன கழிதலும் ( 90), ஆனந்தாயி (116)

33. சோ தர்மன் – கூகை ( 59), தூர்வை ( 149)

34. சுந்தர ராமசாமி – ஒரு புளிய மரத்தின் கதை (2) , ஜே ஜே சில குறிப்புகள் ( 3),
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (93)

35. தஞ்சை ப்ரகாஷ் – கரமுண்டார் வீடு – (105), கள்ளம் ( 118 )

36. தி ஜானகிராமன் – மோகமுள் (1), அம்மா வந்தாள் ( 17), உயிர்த்தேன் ( 37), மரப்பசு (82), செம்பருத்தி ( 92), மலர் மஞ்சம் (150)

37. தோப்பில் முகம்மது மீரான் – ஒரு கடலோர கிராமத்தின் கதை ( 42), சாய்வு நாற்காலி (56), கூனன் தோப்பு ( 107), துறைமுகம்( 139)

38. வண்ண நிலவன் – கடல் புரத்தில் (5), கம்பா நதி ( 74), ரெயினீஷ் அய்யர் தெரு ( 126)

39. யுவன் சந்திரசேகர் – குள்ளச்சித்தன் சரித்திரம் ( 84), பகடையாட்டம் ( 129)

இதில் தி ஜானகிராமன் எழுதிய 6 நாவல்கள் இடம் பிடித்துள்ளன. ஜெயமோகன் எழுதிய 6 நாவல்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. நாஞ்சில் நாடன் எழுதிய 5 நாவல்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அசோகமித்திரன் எழுதிய 5 நாவல்கள் இடம் பிடித்துள்ளன. இலக்கியத் தரம் வாய்ந்த நாவல்கள் மட்டுமே இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டன. வரலாற்று நாவல்களில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வானம் வசப்படும், மானுடம் வெல்லும் , யவனராணி, ரத்தம் ஒரே நிறம், காவல் கோட்டம் ஆகிய 7 நாவல்கள் இடம் பிடித்துள்ளன. துப்பறியும் நாவல்கள் , பொழுது போக்கு நாவல்கள் போன்ற நாவல்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படவில்லை. இதில் பெரும்பாலான நாவல்கள் காலச்சுவடு, நற்றிணை, தமிழினி, கிழக்கு ஆகிய பதிப்பகங்களில் வாங்கலாம். 2000 க்கு பிறகு வந்த நல்ல நாவல்கள் சில இந்த பட்டியலில் இடம் பிடிக்காமல் இருக்கலாம். அதற்கு காரணம் போதிய பரிந்துரைகள் இல்லாமல் இருப்பதே காரணம். அது போல பழைய நாவல்கள் பல இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. அவை இந்த கால கட்டத்தில் பல எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப் படவில்லை. மு வ நாவல்கள் எதுவும் இதில் இடம் பெறவில்லை. சுஜாதாவின் சமூக நாவல்கள் எதுவும் இதில் இடம் பெறவில்லை. தொடர்கதைகளாக வந்த பெரும்பான்மை நாவல்கள் அந்த காலத்தில் பிரபலமானவை என்றாலும் அவை இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மோகமுள் , பொன்னியின் செல்வன் , சிவகாமியின் சபதம் போன்று சில நாவல்களே இடம் பிடித்துள்ளன.

Email:- enselvaraju@gmail.com

Series Navigationகொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :“ மொய் “ : சுப்ரபாரதிமணியன் சிறுகதைஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு – மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு
author

Similar Posts

29 Comments

 1. Avatar
  ரெ.கா. says:

  மிக அருமையான உழைப்பு உங்களுடையது. பாராட்டுக்கள். ‘பலருக்கும் பிடித்த நாவல்’ என ஒன்றைத் தேர்ந்தெடுக்க /பெயர் குறிக்க உங்கள் ஸ்டேட்டிஸ்கல் அட்டவணை நிச்சயம் ஏற்புடையதே. “மோகமுள்” முதலிடத்தைப் பிடித்துள்ளது மிக மிக நியாயமாகவே அமைகிறது. என்னுடைய சொந்தக் கருத்தையும் உறுதிப்படுத்துகிறது. குடோஸ். பாராட்டுக்கள்.

 2. Avatar
  வெங்கட் சாமிநாதன் says:

  இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அனேகம் எழுத்தாளர்கள், ஐம்பது வருடங்களுக்கு முன் இந்தத் தரவேறுபாட்டில் இடம் பெற்றிருக்க மாட்டார்கள். விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தி.ஜானகி ராமன் இதில் அதிக பரிந்துரைகள் பெர்று முதலிடம் பெற்றுள்ளார். அவர் காலத்தில், அகிலனுக்குத் தான் அதிக பரிந்துரைகள் கிடைத்திருக்கும். தி. ஜானகிராமன் பின்னுக்கு எங்கோ தள்ளப்பட்டிருப்பார். இந்த ஐம்பது அறுபது வருட காலத்தில் பொதுவான வாசகர் தர்ம் கட்டாயம் உயர்ந்திருக்கிறது. காரணம், அன்று பலரது ஏசலுக்கும் கிண்டலுக்கும் ஆளாகி, அதிப் பொருட்படுத்தாது அன்றைய வாசகர் களுக்கு உவக்காத விஷயங்களைச் சொன்ன க.நா.சு.வும் செல்லப்பாவும்.

  போகட்டும் இந்த 150 நாவல்களில் தரமற்றது என்று ஒதுக்க வேண்டியவை மிக மிகச் சிலவே. அதில் எனக்கு சந்தோஷம் தான்.

  20/25 வருடங்களுக்கு முன் கழகங்களோ முறுபோக்குகளோ அரசியல் கொள்கை சார்ந்து கதை பண்ணுவது இலக்கியமாகாது, காரணம் அதில் உண்மை இல்லையாதலால், அவர்க்ளது அனுபவ்ம் சார்ந்தும் இல்லை. பிரசாரப்படுத்த அவர்கள் கொள்ளும் கொள்கை சார்ந்து இருப்பதால், அவர்கள் எழுத்தும் சரி, கொள்கைகளும் சரி, உண்மை சார்ந்தவை அல்ல என்று சொன்னதற்கு, இன்று பெரிதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் பேராசிரியர், அறிஞஃர் என்று சொல்லப்படும் அ.மார்க்ஸ்,உள்ளிட்ட புதுச்சேரி அறிஞர் குழாம் ஒன்று கூட்டம் கூடி இவரது (என் எழுத்து -வெசா) மலம் துடைக்கத் தான் லாயக்கு என்று தீர்மான்ம் நிறைவேற்றி, என் எழுத்து பிரசுரமான இந்தியா டுடே இதழை கிழித்து கூட்டத்தில் இருந்த பல எழுத்தாளர்/பேராசிரியர்/அறிஞர், எனக்கு ஒரு பக்கம், எனக்கு ஒரு பக்கம் என்று ஆளுக்கு ஒரு பக்கமாக, மலம் துடைத்து இந்திய டுடே அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். பேராசிரியர், அறிஞர், அ.மார்க்ஸுக்கும் அவரது அன்றைய சகாக்களுக்கும் இது பற்றி, இந்த புரட்சி கரமான அறிவியல் சார்ந்த செயல்பாடு பற்றி மிக்க பெருமையும் உண்டு.

  வருடங்கள் ஓடிவிட்டன. அந்த பெருமை மிக்க செயல் பற்றி அவர்கள் அ.மார்க்ஸும் சேர்த்து இந்த வரலாற்று சிறப்பும், அறிவியல் புரட்சியும் கலந்த செயல் பற்றி அ.மார்க்ஸும் அவரது கூட்டாளிகளும் பெருமைப் படுகிறார்களா, கர்வத்துடன் நினைவு கொள்வார்களா தெரியாது. தமிழ் நாட்டில் அறிவு ஜீவிகளின் குணமும் தரமும் என்ன என்று தெரியப்படுத்தியது வரலாற்றுச் சிறப்பு மிக்க காரியம் தான்.

  இப்போது 20/25 வருடங்கள் க்ழிந்து, அத்தைகைய் வீரமும் தீரமும், சார்ந்த கொள்கை தீப்பொறி பறக்கும் கழக/முற்போக்கு எழுத்துக்கள் எதுவும் அகப்படுகின்றனவா எத்தனை அகப்படுகின்றனவா என்று இந்த 150 நாவல்கள்பட்டியலில் தேடிப் பார்க்கலாம். அவர்கள் சத்தமும், முரட்டுச் செயல்பாடுகளும் அன்று பெரிதாகத் தெரிந்தன. இன்று அவர்கள் எங்கே?

  கடைசியாக, இந்தப் பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் என்று 11-ம் இடத்தில் என் பெயர் இருக்கிறது. நான் 42 புத்தகங்களைப் பரிந்துரைத்ததாகவும் சொல்லப்படுகிறது. என்னை யார் பரிந்துரைக்க கேட்டார்கள், எப்போது நான் பரிந்துரைத்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை. இது முதன் முறையாக நான் பார்க்கும் செய்தி. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதுபற்றி எனக்கு யாரும் விளக்கம் அளித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

  மற்றபடி, மாறி வரும் சூழல் பற்றி சந்தோஷம் தான்.

 3. Avatar
  வெங்கட் சாமிநாதன் says:

  -+—-

  இன்னம் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.இம்மாதிரியான பட்டியல்களில், ஏதும் தெய்வ சாந்நித்யம் இல்லை. அவரவர் படிப்பு விசாலம் ஆழத்திற்கும் பார்வை வேறுபாட்டுக்களுக்கும் ஏற்ப ரசனை மாறும். விருப்பு வெறுப்புகள் மாறும். நான் முதலில் இப்படி ஒரு பட்டியல் இடமாட்டேன். அப்படி தயாரித்தால்,அது இந்த பட்டியலிலிருந்து அங்கங்கு கொஞசம் மாறும். யாரது பட்டியலும் அவரவர் பார்வைக்கும் ரசனைக்கும் ஒரு ஜன்னல் திறப்பே ஒழிய வேறு சாந்நித்யங்கள் அதற்குக் இல்லை. க.நா.சு. அடிக்கடி சொல்வது போல இதில் நூறு பார்வைகளுக்கென்ன, ஆயிரம் பார்வைகளுக்கும் இடமுண்டு. அவ்வளவு பார்வைகளும் நமக்கு வேண்டும்.அவ்வளவும் நம் வளத்தைத் தான் சொல்லும். ஆனால் இதில் அரசியல், ஜாதி, வர்க்க பார்வைகளுக்குமாத்திரம் இடமில்லை. அ.மார்க்ஸும் முற்போக்குகளும், கழகங்களும் தரும் முரட்டுத்தனத்துக்கும், மூர்க்கத்துக்கும் மாத்திரம் இங்கு இடமில்லை.

  *
  ++
  ———————————————–

  1. Avatar
   என்.செல்வராஜ் says:

   எனது மதிப்புக்குரிய வெ சா அவர்களுக்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி. நான் ஒரு எழுத்தாளன் அல்ல. நான் ஒரு வாசகன். க நா சு , வெ சா மற்றும் பலர் எழுத்துக்களை படித்தபோது அந்த பதிவுகளை வைத்து ஒரு ஆய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த பட்டியல் தயாரித்தேன். அப்படி பட்டியல் தயாரிக்க முடிவு செய்தபோது 2000 க்கு மேற்ப்பட்ட பதிவுகள் இணையத்தில் இருந்தும், பல கட்டுரை நூல்களில் இருந்தும் திரட்டினேன். அவற்றை எனது கட்டுரைகள் சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1 http://puthu.thinnai.com/?p=26879
   சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2

   http://puthu.thinnai.com/?p=27224

   தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை

   http://puthu.thinnai.com/?p=26102
   ஆகிய மூன்று கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். இரா முருகன் குறிப்பிடுள்ளது போல இது கணிணி உதவியால் தான் செய்ய முடிந்தது. பெரும்பான்மை பரிந்துரைகளை எனது கட்டுரைகளில் விளக்கத்துடன் குறிப்பிடுள்ளேன்.
   வெ சா அவர்களின் டாப் 10 நாவல்கள் குமுதம் தீபாவளி
   இதழில் வெளிவந்தது. அவரின் தமிழ் இலக்கியம் 50 வருட
   வளர்ச்சியும் மற்றங்களும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நாவல்களும், மற்றும் எண்பதுகளில் தமிழ் இலக்கியம் என்ற கட்டுரையில் குறிப்பிட்ட நாவல்களையும் நான் அவர் பரிந்துரைத்த நாவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளேன்.இந்த கட்டுரைகள் சொல்வனம். காம் ல் வந்தவை.இந்த கட்டுரையில் எனது பரிந்துரைகள் எதுவுமில்லை. பெரும்பான்மை எழுத்தாளர்களின் கருத்தையே இது பிரதிபலிக்கிறது

 4. Avatar
  இரா.முருகன் says:

  திரு செல்வராஜ் அவர்களின் ‘சிறந்த 150 தமிழ் நாவல்கள்’ பட்டியல் பார்த்தேன். அவருடைய முயற்சிக்குப் பாராட்டுகள்.

  இது செல்வராஜ் பட்டியல் என்பதை விட அவருடைய கம்ப்யூட்டர் தயாரித்த பட்டியல் என்றே சொல்ல வேண்டும். என்னுடையது உட்பட இணையத்தில் உலவி வரும் சிற்சில ‘படிக்க வேண்டிய நாவல்’, ‘சிறந்த நாவல்’, ‘தலை சிறந்த நாவல்’ பட்டியல்களை தகவல் பரப்பில் (database) ஏற்றி, ansi sql-ல் ஒரு nested query அளித்தால் இப்படியான பட்டியல் எடுத்து விடலாம். செல்வராஜ் ஆர்வத்தோடு எந்த சார்பும் இன்றித் தயாரித்த இந்தக் கணினிப் பட்டியலை நிறுவனம் சார்ந்து செய்ய முனைந்தால், skewed ஆக வாய்ய்பு இருக்கிறது. ஆயிரம் இணையப் பட்டியல்களை முனைப்பாகச் சார்பு எடுத்து (biased) உருவாக்கி, தகவல் பரப்பில் அவற்றைக் கணக்காக்கிக் கொண்டால் முதல் இடத்தில் இருக்கும் தி.ஜா பட்டியலில் இருந்தே காணாமல் போகலாம்!

  செல்வராஜ் அவர்களுடையது data sampling கொண்டு உருவான் பட்டியல். நல்ல நாவல்கள் பல இந்தப் பட்டியலில் இருப்பது தற்செயலானதே.

  க.நா.சுவின் பட்டியல் தயாரிப்புப் பணியை கம்ப்யூட்டர் மேற்கொள்வதின் மூலம் விமர்சகர்களிடையே பரவலாக எழக்கூடிய சர்ச்சையைத் தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது.

  1. Avatar
   என்.செல்வராஜ் says:

   இரா முருகன் அவர்களுக்கு நன்றி. கணிணி இல்லாமல் இதை செய்வது மிக கடினம். 2000 க்கு மேற்ப்பட்ட பதிவுகளை திரட்டி அவற்றை கணிணியில் பதிவு செய்தே இதைச் செய்து உள்ளேன். எனக்கு கிடைத்த அனைத்து தகவல்களையும் இதில் சேர்த்து இருக்கிறேன். அனைத்து எழுத்தாளர்களும் தங்களது பட்டியலை வெளியிட்டால் இந்த பட்டியலை மாற்ற வேண்டியிருக்கும்.

 5. Avatar
  Meenakshi Balganesh says:

  Authors like Srivenugopalan ( who gave us Thiruvarangan ulaa, Swarnamukhi, kaLLazhagar kadhali) Saavi (not for Washingtanil tirumanam only but also for Novels like Vedhaviththu, visiri vaazhai, etc) never got voted!Or even the contemporary writer Vairamuthu for his Karuvachchi kaaviyam! These are great novels which tell us about our own culture and letting us understand some of our history in the correct perspective. Those who have not read these should also read these.

 6. Avatar
  IIM Ganapathi Raman says:

  100ல் மூன்று பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள். அவர்கள் கூட இறுதியில்தான் வருகின்றனர். ராஜம் கிருஷ்ணன் கூட 115ல்தான்.

  ஆங்கிலத்தில் பலதடவை உலகில் சிறந்த பத்துநாவல்கள் என்று கணிப்பு எடுத்திருக்கிறார்கள். அவற்றில் பார்த்தால் அதில் முதலிடம் அல்லது இரண்டாமிடத்தில் ஒரு பெண் எழுத்தாளர் வந்துவிடுவார். கடந்து நூற்றாண்டு நூறு நாவல்கள் என்று தேடிப் பாருங்கள். முதல் பத்திடங்களில் சில பெண் எழுத்தாளர்கள் இருப்பார்கள். போன வாரம் மரித்த பி டி ஜேம்ஸின் மரணம் ஆங்கில இலக்கியத்துக்கு பெரும் இழப்பாகப் கருத‌ப்படுகிறது. ஜேம்ஸ் ஒரு பெண் எழுத்தாளர்.

  தமிழில் பெண் எழுத்தாளர்கள் ஒதுக்கப்படுவதன் காரணம் ஒரு சராசரி தமிழ் ஆண்மனமே. அது பழமையில் ஊறியது. இன்று கூட பெண்களுக்கு இலக்கியம் எழுத வராது என்று ஒரு பிரபல எழுத்தாளரும் ஆமாம் போட இன்னொரு பிரபல எழுத்தாளரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கூட்டமே இருக்கிறது. அவர்கள் சொல்வது அரைவேக்காட்டுத்தனம் என்று சொல்லக் கூட நாதியில்லை. ஒரு காலத்தில் பெண்கள் கல்வி கறக இலாயக்கில்லை என்றார்கள்; இன்று எழுத இலாயக்கில்லை என்கிறார்கள்.

  எது சிறந்த படைப்பு என்ற ஆராய்ச்சியில் கூட ஆணாதிக்க மனப்பான்மை இருக்கிறது தமிழர்களிடம். தமிழ் ஆண்கள் இந்த ஆதிகாலச்சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும்.

  1. Avatar
   paandiyan says:

   You can bring the details here. instead of critic why don’t you bring those novels and explain why that should be consider in the list??

   1. Avatar
    IIM Ganapathi Raman says:

    பின்னூட்டப்பகுதியில் குறைகளைத்தான் சுட்டிக்காட்ட முடியும். தனிக்கட்டுரையே எழுத முடியாது.

    தமிழில் தகைச்சான்ற பெண் எழுத்தாளர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறதா? என்பதுதான் என் பின்னூட்டத்தின் சாராம்சம். ஆங்கிலத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுபவரிடம் நீங்களே செய்யலாமே என்று கேட்க மாட்டார்கள்.

    ஜாண்சன் ஒரு நாடகத்தை விமர்சித்த போது. அந்நாடகாசிரியரின் விசிறி ஒருவர் கேட்டார்: “உங்களால் அவரைப்போல எழுதமுடியுமா?” அதற்கு ஜாண்சன் சொன்ன பதில்

    “You may abuse a tragedy, though you cannot write one. You may scold a carpenter who has made you a bad table, though you cannot make a table. It is not your trade to make tables.”

    தமிழாக்கம்:

    //நாடகத்தை விமர்சிப்பவருக்கு நாடகம் எழுதத்திறமையிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஒரு மேஜை சரியாகச் செய்யப்படவில்லை என்று சொல்பவருக்கு அம்மேஜையைச் செய்யவியலாது. மேஜையைச்செய்வது தச்சரின் வேலை. அம்மேஜை சரியாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்று கணிப்பது மட்டுமே மற்றவருக்கு வேலை//

  2. Avatar
   என்.செல்வராஜ் says:

   பட்டியலை மீண்டும் பாருங்கள்.
   21. புத்தம் வீடு
   26. வாசவேஸ்வரம்
   71.கருக்கு
   90.பழையன கழிதலும்
   97.தரையில் இறங்கும் விமானங்கள்
   112.யாரும் யாருடனும் இல்லை
   115.அலைவாய் கரையில்
   116.ஆனந்தாயி
   119.குறிஞசித் தேன்
   135. கவலை
   இவை பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்.

 7. Avatar
  IIM Ganapathi Raman says:

  //அவர்கள் சத்தமும், முரட்டுச் செயல்பாடுகளும் அன்று பெரிதாகத் தெரிந்தன. இன்று அவர்கள் எங்கே?// – வெ சாமிநாதன் எழுதியது

  அவர்களில் பலர் காலமாகிவிட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் சிலரை இலக்கியத்தில் ஈடுபாடு காட்டவொட்டாவண்ணம் வாழ்க்கை மாற்றியிருக்கிறது. திராவிட இயக்கத்தைச்சேர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் கொள்கைகளைப் பரப்பவே எழுதினார்கள். எப்படி நாயன்மார்களும் ஆழ்வார்களும் தங்கள்தங்கள் இறைவனின்மீது மக்களுக்கு பக்தியை வளர்க்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எழுதினார்களோ அப்படி. பாசுரங்களும் பதிகங்களும் இலக்கிய இன்பத்தைத் தருவது எழுதியோர் நினைத்தது அன்று. தானாகவே நடந்தவொன்று. அதைப்போலவே திராவிட இயக்கத்து எழுத்தாளர்கள் படைப்புக்கள் இலக்கியமென்றால், அஃது ஒரு கடைச்செயலே ஒழிய முதற்செயலன்று. எப்படி ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலம் போய்விட்டதோ, அதாவது இன்று பக்தி இலக்கியம் படைப்போர் இல்லையோ, அதைப்போல திராவிட இயக்கத்து எழுத்தாளர்கள் காலம் போய்விட்டது. அவர்கள் எழுத்துக்களை இலக்கியமன்று; குப்பை என்று சொன்னால் அவர்கள் எவரும் வருந்தப்போவதில்லை. ஏனென்றால், எழுத்துக்களில் அழகு இருந்தால், அழகுணர்ச்சியுடையோர் கண்டிப்பாக மெச்சுவர் என்பது இயற்கை உண்மை. பாரதிதாசனின் கவிதைகள் பாரதியாரின் கவிதைகளைவிட அழகுணர்ச்சி நிறைந்தவை என்று சார்புநிலை கொள்ளா வாசகர்கள் உணர்வர். காழ்ப்புணர்ச்சியாளர்களுக்காக அழகும் அழுக்காகத்தான் தோன்றும். பாரதிதாசனும் புலவர்குழந்தையும் அண்ணாத்துரையும் கருநாநிதியின் குறளோவியமும் குப்பைகள்.

  எழுத்தாளர்கள் வாசகரிடம் கெஞ்சுவதில்லை. தன் படைப்பு வாசகர்களால் கண்டிப்பாகப் பாராட்டப்படவேண்டுமென்று என்று ஏங்கி காத்துக்கிடப்பதில்லை. வாசகர்கள் வேலை. படிப்பது. நன்றென்றால் மெச்சுவது. இல்லையென்றால் புறந்தள்ளுவது. எழுத்தாளர்கள் வேலை எழுதுவது மட்டுமே. அல்லது எழுதிய நூலை நன்கு விளம்பரம் பண்ணுவது. இன்று சாருவும் ஜயமோஹனும் செய்துவருகிறார்கள்; இல்லையா?

 8. Avatar
  IIM Ganapathi Raman says:

  Thinnai, before disallowing my comments, should retrospect whether my comments are worthy or not. It appears they are disallowing mine only for the reason that the comments criticise the conservatism. Please leave it to readers to judge; why do you deprive them of the other viewpoint and fob them with only one viewpoint? Release all viewpoints. Disallow them only if the language is crude, uncivil and unparliamentary, or spreads hatred and propagate lies.

  You allow comments in English if they come from Pandian ignoring the fact that he is able to write in Tamil well. But you are quick to stop mine if in English. Have a uniform policy, dear and apply it impartially.

  All the prejudices of Ve Sa are allowed here in long messages. He spews venom against Dravidian movement. But others are not even allowed to spot such baseless and motivated prejudices in his writings.

  Thinnai may change its name as WE ARE RIGHT OF CENTRE as one BJP internet magazine prides itself: http://www.swarajyamag.com. (Even they allow all kinds of viewpoints in their comments columns :-) If that is done, persons, who don’t like to eye-to-eye with you, can avoid your magazine. Why not be transparent Sirs?

 9. Avatar
  ஷைன்சன் says:

  இணையத்தில் ஏற்கனவே எக்கச்சக்கமாக சிறந்த நாவல்கள் பட்டியல்கள் இருக்கின்றன. அவற்றுள் மற்றுமொரு பட்டியலே இது. பல பட்டியல்களிலிருந்து தொகுத்த பட்டியல் இது என்பது மட்டுமே வித்தியாசம். இரா.முருகன் சொன்னதைப் போல இதை ஒரு கணினி கூட செய்து விடலாம். பட்டியலிடுபவர்கள் ஏன் குறிப்பிட்ட நூலை சேர்த்திருக்கிறார்கள்? ஏன் சில நூற்களை சேர்க்கவில்லை? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்து உருவாக்கும் பட்டியல்தான் வாசகனுக்கு உதவுமே தவிர வெறுமனே பெயர்களை மட்டும் அடுக்கிக் கொண்டு போவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆங்கிலத்தில் வெளிவரும் இதுபோன்ற பட்டியல்களுக்கு அதற்கான நியாயங்களையும் தொகுப்பாளர்கள் அளித்திருப்பார்கள். A rough guide to classics, 100 must read life changing books போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தமிழில் இம்மாதிரி முயற்சி எதுவும் இப்போது நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

  அடுத்து பெண் எழுத்தாளர்கள் அவ்வளவாக இல்லாததைப் பற்றி ஒரு நண்பர் பின்னூட்டத்தில் குறைபட்டுக் கொண்டார். உண்மைதான். அதற்குக் காரணம் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. பெண்களுக்கான வாய்ப்புகள் இந்தத் தலைமுறையிலும் அரிதாகவே இருக்கின்றன. இன்னும் ஒரு பெண் சற்றே சப்தமாகப் பேசிவிட்டால், சுயேச்சையான மனோபாவம் கொண்டவளானால் ** என்கிறார்கள். பெண்கள் ஆண்களுடன் நட்பாய்ப் பழகுவதைக் கூட வேறேதோ ஒரு கண்ணோட்டத்தில் இன்னமும் அணுகிக் கொண்டுதானிருக்கிறோம். (சில ஆண் “நண்பர்கள்” கூட அதை வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பது தான் துரதிருஷ்டம்) இத்தனை கலாசாரப் பிரச்சினைகள் இருக்கும் போது, எழுத்து என்னும் அந்தரங்க+பொதுவாழ்க்கைக்குள் ஒரு பெண் எப்படி நுழைய முடியும்?

  1. Avatar
   என்.செல்வராஜ் says:

   இந்த பட்டியல் இணையத்தில் உள்ள பட்டியல்களை மட்டும்
   எடுத்து தொகுத்ததல்ல. பெரும்பான்மை மூத்த எழுத்தாளர்களின் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டவை. அதிக பரிந்துரைகளை பெற்ற நாவல்கள் பரீசிலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அவை பரிந்துரைகளின் அடிப்படையில் தர வரிசை படுத்தப்பட்டுள்ளன. இணையத்தில் உள்ள எந்த பட்டியலும் தர வரிசைபடுத்தப்படவில்லை.

 10. Avatar
  IIM Ganapathi Raman says:

  //அந்தரங்க+பொதுவாழ்க்கைக்குள் ஒரு பெண் எப்படி நுழைய முடியும்?//

  A fallacy indeed, that should be dispelled at once.

  அப்படி நுழைந்தால்தான் சிறந்த படைப்பு உருவாகும் என்பது ஆண் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் (அதுவும் பிரபலங்கள்) இட்டுக்கட்டிய கட்டுக்கதை. இலக்கியம் பன்முகத்தன்மை கொண்டது. ஒரேயொரு முகம்தான் என்றால் என்றோ தமிழ் இலக்கியம் நீர்த்துப்போய் காலாவாதியாகி இருக்கும். பன்முகத்தன்மையே இலக்கியத்தின் உயிர்ச்சத்து. அதாவது செழிப்பாக வாழவைக்கும். அவரவர் தாம்தாம் அறிந்த, புரிந்த வண்ணம் எழதும்போது அவர்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர்களென்றால் அப்படைப்புக்கள் இலக்கியத்தில் உயர்நிலைக்குச்செல்லும். மீண்டும் ஜேம்ஸுக்கே வருகிறேன்.

  ஆங்கிலத்தில் துப்புறியும் நாவல்கள், சமூக, சரித்திர நாவல்களைப்போல, இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அகதா கிரிஸ்டி கூட, ஹாட்லி சேஸ் போன்ற எழுத்தாளர்களோடு இணைத்துத்தான் பார்க்கப்பட்டார். ஆனால், ஜேம்ஸ் மாற்றிக்காட்டினார். அவரின் எழுத்துநடை, கதை சொல்லும் பாங்கு, இலக்கியத்துக்கு வேண்டிய முறுகவிழ் இன்பத்தைத் தர, பெரும் இலக்கியமாக அவரின் எழுத்துக்கள் பார்க்கபப்ட்டன.

  ஆண் ஜாம்பவானகள் ஆங்கில இலக்கியத்தில் மாபெரும் படைப்புக்களை உருவாக்கி மக்களின் சிந்தனையை ஆக்கிரமித்த போது, எங்கோ ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்து, அக்கிராமத்தில் நடைபெறுவதாக சித்தரிக்கப்பட்ட குடும்பக்காட்சிகளை நிலைக்களனாக வைத்து எழுதப்பட்ட நாவல்களில் சில, உலக இலக்கியத்தில் முதல் பத்துப்படைப்புக்களிலும் கூட வைக்கப்படுகிறது. ஜேன் ஆஸ்டினின் நாவ்லகளே அவை.

  காதல் என்றால், ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்ப, அல்லது ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்ப என்றுதான் எழுதப்பட்டது. ஆனால் ஒருவரையொருவர் வெறுத்து, அது காதலா என்ன பயங்கரமா என சிந்திக்க வைத்து அதுவும் காதலே என அனைவரையும் மலைக்கவைத்த நாவலை எழுதிவரும் பெண்ணே. அது உலகில் சிறந்த நாவலகளின் முதல் இருபதில் வந்துவிடும். உதரிங்க் ஹைட்ஸ்.

  இப்படியும் ஒரு நாவலா? இப்படியும் மாந்தர்களை படைக்கமுடியுமா என சைக்கலாஜிக்கல் நாவல் என்று ஒரு புதிய வார்ப்பையே படைத்த ஜியார்ஜ் எலியட் ஒரு பெண் எழுத்தாளர். அதுவும் முதல் இருபதில் வரும்.

  இப்படி ஏராளம். இப்படித்தான் கதை சொல்லவேண்டும் என்ற விதியைப் தாங்களே படைத்துக்கொண்டு நாடகமாடும் ஆண் எழுத்தாளர்களும் அவர்களின் விமர்சகர்களிடம் நாம் ஏமாறாமல், எவ்வழியும் போகலாம்; இறுதி அலவுகோல் இலக்கிய இன்பமே என்று சொல்லி படைக்கப்படும் நாவல்களுக்கு ஆண் பெண் பேதமில்லை. தரையில் இறங்கும் விமானங்கள் முதல் பத்தில் வந்தேயிருந்திருக்கும்., ஒரு கொழந்தனுக்கும் ஒரு அண்ணிக்கும் இடையே உள்ள உறவு walking on razer’s edge. அற்புதமாக அழகாக நாகரிகமாக நடந்துகாட்டப்பட்ட நாவல். ஒரு debut novel என்னை இப்படி அசத்தும் என நினைத்துப்பார்க்கவேயில்லை என்றார் ஆனந்த விகடனின் பணிபுரிந்த சாவி. இஃதென்ன அந்தரத்தில் நுழைவதா?

  அடுப்பங்கரையிலும் ஆத்தங்கரையிலும் அய்யங்கார் ஆத்திலேயும் அருந்ததியர் குடிசையிலும் காதல் வரும், காமம் வரும், துயரங்களும் சோகங்களும் இன்பங்களும் வரும். அதை எப்படி எடுத்துச்சொல்லி என்ன முடிவை நமக்குள் உருவ்க்காகுகிறார்கள் எனபதுதான் நம் பட்டியலுக்கு அடிப்படை.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   மன்னிக்கவும். அப்போது ஆனந்த விகடன் ஆசிரியர் சாவி இல்லை. மணியன். இந்நாவல் ஒரு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதில் அணிந்துரையில் மணியன் இவ்வாறு சொல்லியிருந்தார்.

 11. Avatar
  ஷைன்சன் says:

  பட்டியலோடு பட்டியலாக இதுவும் சேர்ந்துகொண்டது என்றுதான் சொன்னேன். பெரும்பான்மையான எழுத்தாளர்களின் பட்டியலும் இணையத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் இப்போதைய உண்மையான தேவை அதுவல்ல. பல படைப்புகளை முன் வைத்து விரிவான விவாதங்கள் எழுப்பி, விமர்சனப்பூர்வமாக தயாரிக்கப்படும் பட்டியலே முழுமையான பட்டியலாக இருக்க முடியும்.

 12. Avatar
  ஷைன்சன் says:

  பெண்களுக்குப் போதுமான அளவு வாய்ப்புகள் நம் நாட்டில் வழங்கப்படவில்லை என்பதே உண்மை. ஜேம்ஸ் தவிர நீங்கள் பட்டியலிடும் எழுத்தாளர்கள் அனைவருமே பதினெட்டாம் நூற்றாண்டிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்கள். அந்தக் காலத்தில் நம் நாட்டுப் பெண்களில் எத்தனை பேர் எழுத்தறிவு பெற இந்த சமுதாயம் வாய்ப்பளித்திருக்கும்? மட்டுமல்லாமல் இந்தப் பட்டியலில் எத்தனை பெண் எழுத்தாளர்கள்/ விமர்சகர்களின் பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன? உண்மையில் எழுதவே பெண்ணுக்கு சந்தர்ப்பமளிக்காமல் நாம் எப்படி இங்கே சிறந்த பெண் எழுத்தாளர்களை எதிர்பார்க்க முடியும்?

 13. Avatar
  ஷைன்சன் says:

  ஆனால் வெறும் நியாயங்கள் பேசும் முன்னால் ஒன்று கேட்டே ஆக வேண்டும். தமிழில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறந்த நாவல்கள் என்று நீங்கள் கருதுபவை எவை? அவற்றை ஏன் சிறந்த நாவல்கள் என கருதுகிறீர்கள்?

 14. Avatar
  ரெ.கா. says:

  //பல படைப்புகளை முன் வைத்து விரிவான விவாதங்கள் எழுப்பி, விமர்சனப்பூர்வமாக தயாரிக்கப்படும் பட்டியலே முழுமையான பட்டியலாக இருக்க முடியும்.”
  இது செயல் சாத்தியமானதல்ல.விவாதங்கள் நிறைய வரும். பட்டியலை முழுமை அடைய விடமாட்டார்கள். முதலில் நல்ல நாவலைக் கமிட்டி அமைத்துத் தீர்மானிக்க முடியாது. இரண்டாவது தற்சார்பற்ற விமர்சனம் என்பது தமிழில் இன்னும் காணவில்லை.அவரவர் அவரவர்க்குத் தெரிந்த அவரவர்க்கு வேண்டிய எழுத்தாளர்களை மட்டுமே விமர்சிக்கிறார்கள். மூன்றாவதாக விமர்சன முறைகளிலேயே ஒரு நடுவுநிலைமை (neutrality)இல்லை. இந்த லட்சணத்தில் யார் பட்டியல் தயாரிக்க லாயக்கானவர்?
  செல்வராஜின் முயற்சி எந்தத் தற்சார்பும் இல்லாத முயற்சி. அது கணிணிப் பட்டியலாகவே இருக்கட்டும். இருந்தாலும் நீங்கள் குறிப்பிடும் ‘விமர்சனபூர்வமான’ அலசல்களை வைத்துத்தான் அது தயாரிக்கப்பட்டது. இப்போதைக்குத் தமிழில் நல்ல நாவல்களைச் சுட்டிக்காட்ட அது ஒரு சிறந்த வழிதான்.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   நான் வெ. சாமிநாதன் எழுதியதற்கு மாற்று கருத்தொன்றைப்போட்டிருந்தேன். அது தடை செய்யப்பட்டதால், நான் சொல்ல வந்த கருத்தைச்சொல்ல முடியவில்லை. அதில், கன்சென்சஸ் பற்றி விளக்கியிருந்தேன் தடை செய்துவிட்டார்கள்.

   போகட்டும். சிறந்த நாவல்கள் எவைஎவை என்ற கேள்விக்கு விடைகள் பலவிதமாக வரும். ரெ கா சொன்னது போல அவரவர் தங்கள்தங்கள் விருப்பு வெறுப்புக்க‌ளின்படி பட்டியல் போட்டுவிடுவார்கள். இன்னொன்றையும் பார்க்கவேண்டும். இக்காலத்தில் அரசியல் எழுத்தாளர்களிடையேயும் பரவிவிட்டது. ஆங்கிலத்தில் இல்லை. அங்கு மக்களும் எழுத்தாளர்களும் பொதுவாகத்தான் இருப்பார்கள். சர்ச்சிலின் அரசியல் கொள்கைகள ஏற்காதவர்களுக்கும் ஏற்றவர்களுக்குமிடையில் சர்ச்சில் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதில் கருத்துவேறுபாடு கிடையாது.

   தமிழ் எழுத்தாளர்கள் பலர் (ஜயகாந்தன், ஜயமோஹன், சாரு நிவேதிதா போன்றவர்கள்) சமூகப்பிரச்சினைகளில் தலையிட்டுக் கட்டுரைகள் போட்டு ஒருதலைப்பட்சமாக கருத்தைச்சொல்ல, அக்கருத்து எக்கூட்டத்திற்கு, எக்கட்சியாளருக்கு உவப்போ அக்கூட்டம் அக்கட்சி அவ்வெழுத்தாளரின் விசிறிக்கூட்டமாகத் தங்களை மாற்றிக்கொண்டு பல அரங்குகளில் அவ்வெழுத்தாளரின் அனைத்து படைப்புக்களையும் ஓஹோ என்று புகழ்ந்து மக்களிடையேத் தள்ளப்பார்க்கிறது. இவ்வெழுத்தாளருக்கு நேர்மாறாக கருத்தைக்கொண்டவருக்கு அக்கருத்துக்கு உகந்தோரும் அக்கட்சியாளர்களும் சேர இருவருக்கும் சண்டை சச்சரவு. இதற்கிடையில் நாம் பரிந்துரை என்று வாசர்களிடம் போனால், இக்கூட்டங்கள் வாக்குகளை அள்ளிப்போட்டு தம் எழுத்தாளரின் படைப்புக்களை பட்டியலில் அடைக்கப்பார்க்கும். இன்று படைப்புக்கள் வெளிவரும்முன்னே ஆரவார விளம்பரம் பண்ணுபவர்கள். படிக்காத நாவலையும் சிறந்த நாவல் என்றுதானே விளம்பரப்படுத்துகிறார்கள். வெளிவந்தால் அது ஒரு சாதாரண படைப்பென்றால் அடிக்கவந்துவிடுவார்களே! விசித்திரமான வேதனையான இலக்கிய சமூஹநிலை இது :-( இது வரலாறு எழுதுவதில் தொடங்கி, இலக்கியத்தில் வந்து முடிந்துவிட்டது.

   இதுதான் இன்றைய நிலை. வெளிநாடுகளிலும் எழுத்தாள்ர்கள் பொது இயக்கங்களிலும் கட்சிகளிலும் இயங்கினாலும் வாசகர்கள் அவர்களின் தனிநபர் கொள்கைகளை, அவர்களின் படைப்புக்களோடு இணைத்துப்பார்ப்பதில்லை. தமிழர்களுக்கு அப்பக்குவம் இல்லை. ஆக்ஸ்ஃபோர்டு பலகலைக்கழகம், இருபதாண்டுகளுக்குமேலாக பிரதமராக இருந்த தாட்சருக்கு முனைவர் பட்டம் வழங்க மறுத்துவிட்டது. தமிழ்நாட்டில் மறுக்க முடியுமா? நமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்று களையப்படுமோ அன்று சிறந்த நாவல்கள் பட்டியல் உண்மையிலேயே சிறந்த நாவல்களைக் காட்டும். ஆங்கிலத்தில் பலதடவை பலர் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவைகளில் சிற்சில மாற்றங்களே வரும். மற்றபடி சிறந்த நாவலகள் நிலைக்கும். வாசகர்கள் படைப்புக்களை சீர்தூக்கும் பக்குவத்தால் இது சாத்தியமாகிறது. கன்சென்ஸ் முடிவை இது காட்டுகிறது. கன்சென்ஸ் படி சிறந்த நாவலகள் என்றும் பட்டியிலிருந்து விலகா. .

   செல்வராஜ் அனேக நாவல்கள் படித்துவிட்டு, தானே ஒரு பட்டியலிட்டால், பிரச்சினையேயில்லை. பரிந்துரைகள் என்று போக மாட்டிக்கொண்டார் பக்கசார்பு நிலையானவர்களிடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *