பி.லெனின்.
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்- 613 010.
நுழைவு
இலக்கணம் என்பது ஒரு மொழியின் கட்டமைப்பை விவரிப்பது. எழுத்ததிகாரத்தைப் பொறுத்த வரையில் மொழியின் அமைப்பு மட்டுமல்லாமல் சில பொது இலக்கணக் கோட்hபடுகளையும் விவரிக்கிறது, அவற்றுள் தமிழ் எழுத்துக்கள், சார்பெழுத்துக்கள், மாத்திரையின் அளவு, மொழி முதல், இடை, இறுதி எழுத்துக்கள் பற்றியும் மேலும் எழுத்துக்களின் பொதுப் பிறப்புமுறை மற்றும் புணர்ச்சிபற்றிய பொது விளக்கம், கருவி மொழி பற்றிய பொது விளக்கம் சில சொல்லியல் கோட்பாட்டுக் கூறுகள் போன்றவையும் காணப்படுகிறது. இவ்வமைப்பில் எழுத்தியல் கோட்பாட்டினில் மாத்திரைக் கோட்பாடும், பொருள் விளக்கமும் எவ்வாறு காணப்படுகிறது என்பதனை அதன் பொருண்மை அமைப்பு நூற்பா அமைப்பு மற்றும் தொடர் அமைப்பு, புறனடை அமைப்பு போன்ற இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டின் அடி;படையில் மாத்திரைக் கோட்பாட்டின் அமைப்பமுறையினை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கு.
இலக்கண அமைப்புமுறைக்கோட்பாடு
இலக்கண அமைப்பமுறைக்கோட்பாடு என்பது, ஒவ்வொரு மொழிக்குரிய இலக்கணத்தினையும் அதன் உள் கட்டமைப்பு ஒழுங்காக்கத்தினை, அதன் அக அமைப்புமுறையின் அடிப்படையில் ஆய்வதே, இலக்கண அமைப்பமுறைக் கோட்பாடு, இக்கோட்பாடானது இக்கட்டுரையாளரின் முனைவர்பட்ட ஆய்வினில் நிறுவப்பட்டதாகும்.
இலக்கண அமைப்புமுறைக்கோட்பாடு வகை
பொருண்மைக் கோட்hபடு
ஓற்றைப் பொருண்மை
இரட்டைப் பொருண்மை
பன்முகப் பொருண்மை
நூற்பா அமைப்புக் கோட்பாடு
விளக்கமுறை
விதிமுறை
விளக்கமும் – விதியும்
வாய்பாடு – கோட்பாடு
தொடர்பு முறைக் கோட்பாடு
தொடர் தொடர்பு
மாட்டேறு தொடர்பு
மாற்றியல் – மாற்றதிகாரத் தொடர்பு
புறனடைக் கோட்பாடு
இயல் – புறனடை
அதிகாரப் புறனடை
பொருண்மை விளக்கப் புறனடை
மேற்கண்ட இலக்கண அமைப்புமுறைக் கோட்பாடுகளின் உலக மொழி இலக்கணங்கள் அனைத்தினையும் ஆய்ந்தால் அதன் உள் கட்டமைப்பு ஒழுங்காக்கத்தினை துல்லியமாக அறிய முடியும், என்பதே இக்கோட்பாட்டின் பயன்.
மாத்திரை – பொருள் விளக்கம்
மாத்திரை எனும் சொல்லிற்கு கழகத் தமிழ் அகராதி “ கணப்போது, அளவு, பருவம், குளிகை, அற்பம், காதணி,கால நுட்பம், கால நுட்பம், கால விரைவு, குற்றுயிரெழுத்து, கண்ணிமைத்தல், மிகச்சுருக்கமான இடம், பாக்கியம்” என பனிரெண்டு விதமான பொருள் விளக்கம் தருகிறது. இப்பொருள் அமைப்பினில் கணப்போது, அளவு, பருவம், குளிகை, கால நுட்பம், கால விரைவு, கண்ணிமைத்தல் போன்ற பொருள்கள்காப்பியர் குறிப்பிட்டுள்ள மாத்திரை எனும் சொற்பொருள் விளக்கத்pற்கு ஏற்றவாறு அமைந்தள்ளது.
காப்பியர் கூறும் மாத்திரையின் – பொருள்
நூற்பா
“கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதன் உணர்ந்தோர் கண்டவாறே” – ( தொல்-நூ-எண் – 7 )
பொருள்
கண்ணிமைப்பொழுதும், கைநொடிப்பொழுதும், ஒரு மாத்திரை அளபைக் கணக்கிடுவதற்கான கருவிகளாக அறிவு சார் சான்றோர்களால் விள்க்கப்பட்டுள்ளது என்று காப்பியர் குறிப்பிடுகிறார்.
பொருள் – விளக்கம்
பொருண்மைக்கோட்பாடு
இந்நூற்பாவில் ஒற்றைப் பொருண்மை முறைக்கோட்பாடு கையாளப்பட்டுள்ளது, கணணிமைத்தல் கைநொடித்தல் போன்ற செயல்பாடுகளால் மாத்திரை அளவிடப்படுவதாக பொருண்மை அமையப் பாடப்பெற்றுள்ளது.
நூற்பா அமைப்புமுறை
மேற்கூறப்பட்ட விளக்கத்தின் வழி இந்நூற்பாவினில் விதிமுறைக்கோட்பாடு இடம்பெற்றுள்ளது. மாத்திரை எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பதற்கான விதி இந்நூற்பாவினுள் விளக்கப்பட்டுள்ளதனை அறியமுடிகிறது.
தொடர்புமுறைக் கோட்பாடு
தொல்காப்பிய எழுத்திகார நூற்பா எண்-3 முதல் 14 வரை உள்ள நூற்பாக்கள் அனைத்தும் தொடர்-தொடர்புக்கோட்பாடு முறையில் அமையப்பெற்றுள்ளது, ஒரு மாத்திரை அளபு ஒலிக்கும் குற்றெழுத்து முதல் அரை மாத்திரை அளபு ஒலிக்கும் மகரக்குறுக்கம் வரை இது நீட்சி பெறுகிறது. இவ்வாறு அமையப்பெற்றதன் அடிப்படையில் இந்நூற்பாவானது தொடர் – தொடர்புக் கோட்பாடு முறையில் அமைந்துள்ளதனை அறியமுடிகிறது.
உயிர் எழுத்துக்கள்- இலக்கண அமைப்புமுறைக்கோட்பாடு
நூற்பா
“அவற்றுள்
அ இ உ
எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓரளபு இசைக்கும் குற்றெழுத்தென்ப” ( தொல்- எழுத்து, நூற்பா எண்;;;-3 )
“ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஒள என்னும் அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப” ( தொல்- எழுத்து, நூற்பா எண்;;;-4 )
பொருள்
அ இ உ எ ஒ மற்றும் ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஒளஎனும் பனிரெண்டு எழுத்துக்களும் முறையே ஒன்று மற்றும் இரண்டு மாத்திரை அளபு ஒலிக்கும் உயிர் குற்றுழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களாகும் என்பது இந்நூற்பாக்களின் பொருளாகும்.
பொருண்மைக்கோட்பாடு
இந்நூற்பாக்களின் பொருண்மையின் அடிப்படையில் ஒற்றைப் பொருண்மைக் கோட்பாடு பதிவு செய்யப் பெற்றுள்ளது. குற்றுயிர் மற்றும் நெட்டெழுத்துக்களுக்கு ஒன்று மற்றும் இரண்டு மாத்திரை தாம் ஒலியளபு எனும் ஒற்றைப் பொருண்மை மட்டுமே இடம்பெற்றுள்ளது.
நூற்பா அமைப்புமுறை
நூற்பா அமைப்புமுறையின் அடிப்படையில் குற்றுயிர் மற்றும் நெட்டெழுத்துக்களுக்கு ஒன்று மற்றும் இரண்டு மாத்திரை தாம் ஒலியளபு எனும் விதியினை இந்நூற்பாவானது விளக்குவதால் விதிமுறைக்கோட்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதனை அறியமுடிகிறது.
மெய் எழுத்துக்கள்- இலக்கண அமைப்புமுறைக்கோட்பாடு
நூற்பா
“மெய்யின் அளபே அரையென மொழிப” ( தொல், எழுத்து, நூற்பா எண் -11 )
பொருள் – விளக்கம்
மெய்யெழுத்து ஒலிக்கும் கால அளபு அரை மாத்திரை என காப்பியர் குறிப்பிடுகிறார்.
இந்நூற்பாவின் பொருண்மை அமைப்பு மற்றும் நூற்பா அமைப்புமுறையின் வழி ஒற்றைப்பொருண்மையும், விதிமுறையும் இடம்பெற்றுள்ளதனை அறியமுடிகிறது. மேற்படி முன்னமே சுட்டியது போலவே தொடர்புமுறைக் கோட்பாடானது மாத்திரையை விளக்குவதற்கு ஒரு தொடர் நீட்சியினை கையாளும் போக்கினையும் அறியமுடிகிறது.
நூற்பா
“நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய
கூட்டி யெழூவுதல் என்மனார் புலவர்” ( தொல், எழுத்து, நூற்பா எண் – 6 )
பொருள்
நீட்டி ஒலிக்க விரும்பினால் எந்த அளபு நீட்டி ஒலிக்கக் கருதுகின்றனறோ அந்த அளபு இயல்புடைய ஒலியைக் கூட்டி ஒலித்துக்கொள்க என்று இலக்கணப்புலவர் கூறுவதாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இலக்கணத்திற்குறிய எடுத்துக்காட்டையும் உடன் தந்துள்ள தொல்காப்பியரின் திறம் இங்கு போற்றுதற்குறியது. அந்தந்த நெடிலுக்குரிய இனமான குறில்களே அடையாளமாக எழுதப்படும். அவ்வாறே ஒலி கூட்டி ஒலிக்கவும் படும்.
பொருள் விளக்கம்
பொருண்மைக் கோட்பாட்டின் வழி இந்நூபாவானது மேற்கண்ட விளக்கத்தினில் குறிப்பிடப்பட்டவாறு ஒற்றைப் பொருண்மையினையும்
நூற்பா அமைப்புமுறைக் கோட்பாட்டின் படி விதிமுறையினையும் தன்னூடே பதிவு செய்துள்ளது இப்பா.
முடிபு
தமிழ் மொழியில் ஒலி வரி வடிவ எழுத்துக்கள் இருப்பினும், அவற்றின் ஒலிக்குறிப்பிற்கு தகுந்தாற் போல் மாத்திரையினை சுட்டும் முறையில் பல உள் அகக் கட்டமைப்பு ஒழுங்காக்கத்தினையும் தொல்காப்பியர் கட்டமைதுள்ளார் அவற்றில் நூற்பாவினுள் பொருண்மை, விதி மற்றும் தொடர்புமுறைக் கோட்பாட்டினையும் நூற்பாவினூடே எடுத்துக்காட்டினையும் சில இடங்களில் பதிவு செய்துள்ளமையை அறிய முடிகிறது. மேலும் இவ்விலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டின் வழி ஒரு இலக்கணி தாம் எடுத்தியம்பும் படைப்பினில் எவ்வளவு விதியினைக் கூறுகிறார் அதற்கான விளக்கம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்து என்பதனையும் அவ்வாறு சுட்டப்படும் நூற்பாவினுள் பொருண்மையினை எவ்வாறு உள்ளமைத்துள்ளார் என்பதனையும் இக்கட்டுறையின் வழி அறியமுடிகிறது.
துணை நின்றவை
கழகத்தமிழ் அகராதி
தொல்காப்பியம் எழுத்திகாரம்- இளம்பூரனர் உரை கழக வெளியீடு
தொல்காப்பியம் எழுத்திகாரம்- முனைவர்.தமிழண்ணல் கருத்து விளக்கச் செம்பதிப்பு
- “எஸ்.பொ”
- இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வு
- ‘நாடகங்கள் தொடரும்’
- சாவடி – காட்சிகள் 7-9
- சுப்ரபாரதி மணியனின் நீர்த்துளி – உளவியல் பார்வை
- ஊழி
- அளித்தனம் அபயம்
- ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-15
- தொடுவானம் 44. மலைக்கோட்டை To புதுக்கோட்டை
- ஆத்ம கீதங்கள் – 7 எங்கள் கூக்குரல் கேட்குமா ? [கவிதை -5]
- சாபக்கற்கள்
- ஒரு செய்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
- எனது கதைகளின் கதை – 1.எங்கள் வாத்தியார்
- சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)
- தினம் என் பயணங்கள் : 37 கடலும் நானும் -1
- நெசவாளன் எப்போதும் அம்மணத்தோடா..
- இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டில் தொல்காப்பியரின் – மாத்திரை
- சூரியனின் காந்தப்புலச் சுழற்சி பூமியிலே இடி மின்னலை மிகையாக்கி அசுர ஆற்றல் ஊட்டுகிறது.
- பயணப்பை
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 3 எனக்குப் பிடித்த சிறுகதை: கி ராஜநாராயணனின் ‘நாற்காலி’
- பூனையும் யானையும் – முரகாமியின் சிறுகதைகள்