ஆத்ம கீதங்கள் – 8 எத்தனை நாள் தாங்குவீர் ? [கவிதை -6]

This entry is part 13 of 23 in the series 7 டிசம்பர் 2014

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

கடவுள் கல்லாகிப் பேசா துள்ளது !

நடப்ப தில்லை கேட்ப தெலாம் என்று

உடனே சொல்வர் அலறும் சிறுவர்;

அதன் தோற்றம் அதிபதி போல்வது,

ஊழியம் செய்ய  

ஆணை யிடுவதும் அதுவே !

சூழிருள் மேவும் அறையில்

ஆழிப் புகை மூட்டமே

காண்கிறோம்

மேலுல குக்கு யாம் ஏகும் போது;

கேலி செய்யாதீர் எம்மை,

சோகமே எம்மை நாத்திகர் ஆக்கும்;

 

கடவுளிடம் முறை யிட்டோம்,

கண்ணீர்த் துளிகள் பொங்கி எம்மைக்

குருடாக்கும் ! 

விதிகளை ஏற்காச் சிறுவர்

வேதனைக் குரல் கேட்குதா உமக்கு ?

என்ன அறிவுரை கூறுவீர்

எம்மரும் சகோ தரரே ?

சிறுவர் ஆயினும்

அறவே நம்புவ தில்லை !

கடவுள் செய்யக் கூடிய தெல்லாம்

கற்றுக் கொள்ளப் படுகிறது,

காசினி நேசத்திலே !

 

உன்னுடை சன்னதியிலே

நன்றாக அழட்டும் சின்னஞ் சிறுவர்கள்;

களைத்துப் போயினர் சிறுவர் ஓடி

உழைப்ப தற்கு முன்னரே !

கதிரோன் வெளிச்சம் கண்டிலர்;

எதிலும் புகழ்ச்சி பெற்றிலர்;

பரிதி ஒளியினும் பெரியது அதுவே !

காரண மற்ற மானிடத் துயரே

பாலகர் அறிவது !

அனைத்துச் சிறுவரும் பொறுமை யிழந்து,

மனித ஏலாமையில் மூழ்குவர் !

அடிமைகள் ஆயினர்

உரிமை யற்ற கிறித்துவ உலகில் !

தியாகம் செய்வர் வாழ்வை,

காப்பில் லாத கடும்நோ யுற்று;

மீளா நிலைக்கு

முது வயது மதலை போல் இளைத்தார் !

அறுவடை செய் நினைவுகளில்

சிறுவர் மனம்

பெறுவ தொன்றும் இல்லை !

அனாதையர் ஆனார்,

பிறவிப் பேரின்ப விளைவால்,

மேலுலக நிலையது !

அழட்டும் அவரெலாம் ! அழட்டும் அவரெலாம் ! 

 

வெளுத்த முகமும் குழிந்த விழியுடன்,

வெறித்து நோக்குவர்

பரிதாபப் பார்வையில்!  காணும்

விண்ணுலகத் தேவதைகளைத்

தெய்வங்களாய்

எண்ணிக் கொள்ளலாம்.

எத்தனை காலம் ? எத்தனை காலம் ?

ஏ ! இடர்தரும் நாடே !

எத்தனை நாள்தான் தாங்குவீர்

பாரை நகர்த்துவது

பாலர் இதய ஓட்டமா ?

செங்குருதி பொங்கி யோடும்,

தங்கம் குவிப் போரே !

பழுப்பு நிறம் காட்டு தும் பாதையை !

சலித்திடும் சிறுவர் பெரு மூச்சு

துடிப்பாய்ச்

சபித்திடும் மௌனமாய்,

வலுத்த சினமுடை யோனை மிஞ்சி !

 

++++++++++++++++++++

Series Navigationசூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளக் கோள் “ஏரிஸ்” புறக்கோள் புளுடோவுக்கு அப்பால் கண்டுபிடிப்புஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 4 பாரதியுள் ஷெல்லி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *