குறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் வந்துவிட்டோம். பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் இரவு சிற்றுண்டியை முடித்தோம்.
புகைவண்டி நிலையத்தில் நிறைய பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டங் கூட்டமாக பிளாட்பாரத்தில் காணப்பட்டனர். புகைவண்டி வந்ததும் அதில் பிரயாணம் செய்யும் பயணிகளைப் பார்ப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு.
வண்டி வந்ததும் முண்டியடித்துக்கொண்டுதான் ஏறினேன். நல்லவேளையாக உட்கார இடம் கிடைத்தது.
நள்ளிரவு வரை தூக்கம் வரவில்லை. நாவலைக் கையில் எடுத்து வைத்திருந்தேன். அனால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. கிராமத்தில் இருந்தபோது கோகிலம் என்னிடம் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது. அவள் மீது இரக்கம் மேலிட்டது. இந்நேரம் அவளும் தூக்கமின்றி படுக்கையில் புரண்டு கொண்டிருப்பாள். அவளுக்கு நான் பிரயாணப்பட்டது பெருத்த ஏமாற்றத்தையே உண்டு பண்ணியிருக்கும். அவள் ஒவ்வொரு நாளும் என்னிடம் நெருங்கி நெருங்கி வந்தும்கூட நான்தான் எப்படியோ விலகி விலகி சென்றேன்.நான் மனது வைத்திருந்தால் அவளுடைய ஆசைக்கு இணங்கி இருக்கலாம்.கிராமத்தில் அதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. தெரு விளக்குகள் இல்லாத காரணத்தால் இரவில் ஆள் நடமாட்டமே தெரியாத வகையில் இருட்டு நிலவும். ஆனால் அப்படி செய்துவிட்டு அவளை மேலும் தவிக்க விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அனால் கூடுமானவரை அவளின் மனம் நோகாத வண்ணம் அன்புடன் பேசி சமாளித்து விட்டேன். இனியும் அவள் காத்துக்கொண்டுதான் இருப்பாள். அவள் மிகுந்த வைராக்கியம் கொண்டவள் என்பது எனக்குத் தெரிந்தது. இனி என் நினைவில் அவள் அடுத்த விடுமுறை வரை நிச்சயம் காத்திருப்பாள்.
அவள் முழுக்க முழுக்க கிராமத்திலேயே வளர்ந்தவள். ஒரு வேளை மண நாளன்று கல்லூரி மாணவனாக என்னைக் கண்டதில் அது ஒருவிதமான கவர்ச்சியை உண்டு பண்ணியிருக்கலாம்.அதிலிருந்து விடுபட முடியாமல் இன்னும் தவிக்கிறாள் கோகிலம்.உடன் கணவன் இருந்தும் அவள் மனதை அவனால் கொள்ளை கொள்ள முடியவில்லை.கல்லூரி மாணவனான என்மீது இத்தகைய நோக்கம் உண்டானதே அவளுடைய தவிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.
நாளையிலிருந்து வெரொனிக்காவைப் பார்க்கலாம்.அவள் எந்த மனநிலையில் இருப்பாள் என்பது தெரியவில்லை. இத்தனை நாட்களில் கடிதத் தொடர்புகூட இல்லைதான்.அவளைப் பார்த்தபின்பு வேண்டுமானால் கோகிலம் பற்றிய எண்ணம் குறையலாம்.ஆனால் கோகிலம் பற்றி வெரோனிக்காவிடம் ஒன்றும் சொல்லக்கூடாது.அது தேவையற்றது.வீண் பிரச்னையை உண்டுபண்ணலாம்.இது போன்ற பிரச்னையில் ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணின் மீது அவ்வளவு சுலபத்தில் இரக்கம் வந்துவிடாது. அது அவ்வளவு சுலபம் அல்ல.பெண்ணுக்கு எப்போதுமே தன்னைப்பற்றிய எண்ணமே மேலோங்கும்.அதனால்தான் பெண்ணுக்கு இயற்கையிலேயே பொறாமைக் குணம் அதிகம் என்பார்கள்.
ஆனால் அதே வேளையில் மனித மனமும் எவ்வளவு பலவீனமானது என்பதையும் எண்ணிப்பார்த்தேன்.
திருமூலர் சொன்ன ” ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்ற தாரக மந்திரத்தை கூறிவந்தார் அறிஞர் அண்ணா. கலைஞர்கூட கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தான். இந்த மூவரையும் நான் இளம் வயதிலேயே வாழ்கையின் வழிகாட்டிகளாகக் கொண்டவன். . அதனால்தான் என்னவோ ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன்.
- ஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! முடிந்தது நம் காதல்
- சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்
- சோசியம் பாக்கலையோ சோசியம்.
- அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்
- வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை
- பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)
- நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு
- புது டைரி
- Caught in the Crossfire – another English Book – a novel
- கோசின்ரா கவிதை
- வாய்ப்பு
- தொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.
- மூன்றாம் பரிமாணம்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி (5)
- விடாது சிகப்பு
- நகைகள் அணிவதற்கல்ல.
- வேறு ஆகமம்
- தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு
- மருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி
- கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்
- திருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]
- மிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
- மரபு மரணம் மரபணு மாற்றம்
- இலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்