“ கவிதைத் திருவிழா “-

This entry is part 21 of 23 in the series 15 பெப்ருவரி 2015

செய்தி: கா. ஜோதி

கனவு இலக்கிய வட்டம் சார்பில் “ கவிதைத் திருவிழா “ திருப்பூர் மங்கலம் சாலை மக்கள் மாமன்றம் நூலகத்தில் ஞாயிறு அன்று கவிஞர் கா. ஜோதி தலைமையில் நடைபெற்றது. நாகேசுவரன் ( உலகத் திருக்குறள் பேரவை ), சி.சுப்ரமணியன் ( மக்கள் மாமன்றம் ) , கே.பி.கே செல்வராஜ் ( முத்தமிழ்ச் சங்கம் ) , மூர்த்தி ( கல்விக் கூட்டமைப்பு ) , நடேசன் ( ஆசிரியர் கூட்டணி ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுப்ரபாரதிமணியன், ரத்னமூர்த்தி, . அம்சப்பிரியா, இராபூபாலன், சோலை மாயவன், புன்னகை ஜெயகுமார், வைகறை ஆகியோரின் 7 கவிதை நூல்களை ” ஓசை ”அவைநாயகன், கவிஞர் சவ்வி ஆகியோர் அறிமுகப்படுத்திப் பேசினர். அதில் சிலரின் பேச்சு:

* அம்சப்ரியா: வாழத் தவறிய ஒரு கணத்தையும், வாழ்ந்துவரும் நாழிகையும், வாழப்போகிற வாழ்வின் புள்ளியையும் அடையாளம் காட்டுபவை நவீன கவிதைகள்

* சுப்ரபாரதிமணியன் : தமிழ்க்கவிதை இந்நூற்றாண்டில்தான் தீவிரமாக இயங்கிவருகிறது. பெண் கவிதை மொழியில் தமிழ் , மலையாளத்திற்கு நிரம்ப வேறுபாடு உள்ளது. தமிழில் சுதந்திர பார்வை.உள்ளது. பெண்கள் இருப்பை நியாயப்படுத்த எழுதுகிறார்கள்.மரபின் தொடர்ச்சியாகவும் எழுதுகிறார்கள்.மலையாளத்தில் முன் கவிதைத் தடத்தில் போகிறார்கள். தங்கள் இருப்பை ஒத்துக் கொண்டு நகர்கிறார்கள்.துன்பியலை பெரும்பாலும் முன் வைக்கிறார்கள். செய்யுள் மரபின் தொடர்ச்சி உண்டு . தலித் மற்றும் விளிம்பு நிலை மக்களின் அனுபவங்களும் வெகு சிறப்பாக தமிழில் கவிதைகளாக சமீபத்தில் வெளிவந்துள்ளன

* புன்னகை பூ ஜெயக்குமார்: மனிதன் மனிதனாக வாழ சிலவற்றைப் பின்பற்றினாலே போது. நம் வாழ்க்கையும் இந்த இயற்கையும் நம் கட்ட்டுப்பாட்டில் இருக்கும். கவிதையும் அது போல்தான். * அவை நாயகன்: கவிதைகளை மெட்டிசைத்துப் பாடுவது மெல்ல மெல்ல குறைந்து கொண்டிருக்கிறது. கவிதைக்கு இசையும் ஓசையும் அவசியம். ஓசை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். கவிதை நயத்தை அது கட்டுப்படுத்த முடியாமல் திணறும். அதுவே சிறந்த் கவிதைக்கு அடையாளம்

அழகுபாண்டி அரசப்பன், இரத்னமூர்த்தி, அருணாசலம், கனல், முத்துபாரதி உட்பட பலர் கவிதை வாசித்தனர். கனவு இலக்கிய வட்டம் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

செய்தி: கா. ஜோதி

கனவு இலக்கிய வட்ட்த்திற்காக.

Series Navigationசமூக வரைபடம்ஓர் எழுத்தாளனின் வாசலில்… “யதார்த்தமாய்….பதார்த்தமாய்…”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *