வைகை அனிஷ்
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் தரிசிக்கும் நாகூரா என நாகூர் அனிபா தன்னுடை கம்பீரக் குரலில் பாடும் பாடல் தமிழகம் எங்கும் ஒலித்து வருகிறது. நாகூருக்கு வாருங்கள் நாதாவை கேளுங்கள். நாட்டமுடன் சொல்லுங்கள். இறை நாட்டசத்துடன் செல்லுங்கள் என பல பாடல்கள் நாகூரைப்பற்றிப் பாடுவதுண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது நாகூர். நாகூர் பிரபலம் ஆவதற்கு அங்கு அடக்கம் செய்யப்பட்ட நாகூர் சாகுல்ஹமீதுவின் கல்லறை தான்.
இந்து மதசாயலில் இஸ்லாமிய கலாச்சாரத்தை இந்த தர்காவில் காணலாம். நாகூர் பேரூந்து நிலையத்தில் இறங்கி நம்மை வரவழைப்பது அலங்கார வாசல். அலங்கார வாசலின் இருபுறமும் இரண்டு அறைகளில் மங்கல வாத்தியம் ஒலித்துக்கொண்டு இருக்கும். அதனைக்கடந்து சென்றால் இந்துக்கோயில்களில் யானைகள் வரவேற்பது போல இங்கும் யானைகள் நிறுத்தப்பட்டு ஆசி வழங்கி கொண்டிருக்கும். தர்காவின் நுழைவு வாயில் நுழைந்தவுடன் தங்கள் எண்ணம் நிறைவேறவேண்டும் என்ற நோக்கில் புறாவை இந்துக்கோவில்களில் தலையில் தடவி காணிக்கை செலுத்துவது போல இங்கும் ஒவ்வொருவரும் தங்கள் தலையில் புறாவை தடவி பறக்கவிடுவதை காணலாம். அதன் பிறகு நுழைந்தவுடன் மயில் இறகால் நம்முடைய தலையை வருடி தர்காவின் உள்ளே நுழைய அனுமதிப்பார்கள். அதற்கு எதிரே இந்துக்களின் கலாச்சாரமான விளக்கு ஒன்று எரிந்து கொண்டே இருக்கும். தங்கள் எண்ணம் நிறைவேற இந்த நந்தியாவிளக்கில் நெய்யை ஊற்றுவது அனைத்து சமூகத்தினரிடமும் உண்டு.அதனை அடுத்து சென்றால் இந்துக்கோயில்களில் உள்ள குளங்கள் போன்று இங்கும் குளம் உள்ளது. தங்கள் நேர்ச்சைகளை செய்பவர்கள் இங்கு மொட்டையடித்து தங்கள் முடிகாணிக்கையை செலுத்துகிறார்கள். இவ்வாறு இந்துமதத்தின் சாயலில் இருப்பதால் ஏராளமான இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து தங்கள் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். அதிகாலையிலும் மாலையிலும் கோயில்களில் வெடி வெடிப்பது போல இங்கும் வெடிகள் வெடிக்கப்படுகிறது.
யார் அந்த சாகுல் அமீது.
நாகூர் சாகுல்ஹமீது அவர்கள் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மாணிக்கப்ப+ரில் கி.பி.1490 ஆம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய 44 வது வயதில் நாகூர் வந்தடைந்தார். கி.பி.1558ல் தனது 68 வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
கி.பி.16-ம் நூற்றாண்டில் இவரது அமைதியான பிரச்சாரம் மூலம் பலர் இஸ்லாமியர்கள் ஆனார்கள். ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவரது பெயரால் தஞ்சாவ+ரை ~காதர் நகர்~ என அழைத்தனர்.
சாகுல்ஹமீது நாகூரை வந்தடைந்தபோது (1560-1614) ஆம் ஆண்டு தஞ்சாவ+ரை அச்சுதப்ப நாயக்கர் ஆண்டு வந்தார். சாகுல்ஹமீது அவர்கள் மீது ஈடுபாடு கொண்ட கொண்டிருந்தார். பிரதாப்சிங்(1739-1763) இந்த தர்காவிற்கு 15 கிராமங்களை கொடையளித்துள்ள செய்தியினை கல்வெட்டுக்கள் கூறுகிறது. பிரதாப்சிங் காலத்தால் தர்காவில் கட்டிடங்கள் விரிவு படுத்தப்பட்டது. பிரதாப்சிங்கை நாகூர் தர்காவின் சிற்பி என ஆங்கிலேய பதிவேடுகள் கூறுகிறது. பிரதாப்சிங் ஆட்சியில் தர்காவில் நிர்வாகத்தை கவனிப்பதற்கு தனியாக உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் தர்காவிற்கு வெளியே உள்ள பெரிய மினாராவை கட்டி(உயரம் 131 அடி) இந்நகருக்கு பெருமை சிறப்பித்தார். பிரதாப்சிங்கிற்கு பின்வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு நிறைய நன்கொடைகள் வழங்கியுள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் தர்கா கந்தூரி உற்சவத்தின்போது மராட்டிய மன்னரிடமிருந்து அலங்கார ஆடை தர்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று வரை மராட்டிய மன்னர்கள் வம்சாவழிகள் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.;இந்திய சுதந்திரப்போராட்டத்தில் போராடிய குஞ்ஞாலி மரைக்காயரை தூத்துக்குடி கடல் பகுதியில் வரவழைத்தவர் நாகூர் சாகுல் ஹமீது. இதனால் நாகூரில் உள்ள தெரு ஒன்றின் பெயர் குஞ்ஞாலி மரைக்காயர் தெரு உள்ளது.துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடனும், நிறைய பொருளுதவி செய்துள்ள செய்திகளை கண்டு ஆங்கிலேயர்கள் திகைத்துள்ளார்கள்.
இந்து கலாச்சாரத்தில் முஸ்லிம்கள்
இந்து கலாச்சாரத்தின் தாக்கத்தினால் முஸ்லிம்கள் சமுதாயத்தில் பல பழக்கங்களை தர்காவில் காணலாம். தர்கா வழிபாட்டு முறைகளிலும் இந்த தாக்கத்தினை காணமுடிகிறது. இறந்தவர்களுக்கு சிறப்பு விழாக்கள் எடுப்பது இந்து கலாச்சார வழக்கமாகும். இதற்கு ~குருப+ஜை~ என்று கூறுவார்கள். இதே பழக்கத்தை ஒட்டி ~கந்தூரி~ எனப்படும் விழாக்கள் நடைபெறுகின்றன. இந்த விழாக்களில் நடைமுறைகளில் பெரும்பாலானவை இந்து கலாச்சாரத்தின் கூறுகளாகும். இந்து திருவிழாக்களில் தேர் இழுத்து வருவது போன்று தர்கா கந்தூரி விழாவில் ~சந்தனக்கூடு~ வலம் வருவதை பார்க்கலாம். தேரில் உற்சவமூர்த்தி வலம் வருவது வழக்கம். ~சந்தனக்கூடு-தேர் போன்று அலங்கரிக்கப்பட்டு அதில் சந்தனம் நிரம்பிய குடம் ஒன்று வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, தர்காவில் கல்லறைகளில் ப+சப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களால் பிரசாதமாகக் கருதப்படுகிறது. இன்றும் இந்து கோயில்களில் நடைபெறும் நேர்ச்சை(வேண்டுதல்) போன்று மொட்டையடித்துக் கொள்ளுதல், கோழி, புறா, கால்நடைகளை காணிக்கையாக செலுத்துதல் ஆகியவற்றையும் இங்கு வரும் முஸ்லீம் மக்களும் செய்வதை காணலாம்.
கட்டிடக்கலை
தர்காவின் கட்டிடக்கலை அமைப்பு(மனோராக்களைத்தவிர) திராவிடக் கட்டிடக்கலை பாணியிலேயே அமைந்துள்ளது. தர்காவிற்கு கிழக்கு வாயிலில் குளம் இருப்பதை காணலாம். இது போன்ற குளங்கள் இந்து கோயில்களோடு இணைந்து காணப்படுவதாகும். மேலும் இங்குள்ள மண்டபத்தின் தூண்களும் கூறைகளும் திராவிடக் கட்டிடக் கலைப்பாணியிலேயே கட்டப்பட்டுள்ளன. பொதுவாக மனோராக்கள் வட்டி வடிவில் இருக்கும். இங்குள்ள ஐந்து மனோராக்களும் சதுரமாக கட்டப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும்.
மினார்
தொலை தூரங்களிலிருந்து வருபவர்களுக்கு பள்ளிவாசலை அடையாளம் காட்டும் சின்னமாக மினராக்கள் உள்ளது. எகிப்து நாட்டில் உள்ள பஸ்தாத் என்ற நகரில் ஹஜ்ரத் அமர்பின்ஆஸ் அவர்களால் மினராக்கள் இல்லாமல் கட்டப்பட்ட பள்ளிவாசலில் ஹஜ்ரத் முஆவியா(உமைய்யா வம்சத்து முதல் கலீபா) வின் கவர்னர் நான்கு மினராக்களை கட்டினார். இப்பள்ளியில் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலாக மினாரா கட்டப்பட்டது. உமைய்யா வம்சத்து கலீபாக்களே பள்ளிவாசல்களில் மினராக்களை அறிமுகப்படுத்;தினார்கள். நான்கு மினராக்கள் கட்டும் முறை எகிப்து நாட்டிலிருந்தும், ஒரு மினரா கட்டும் முறை ஈராக் நாட்டிலிருந்தும் வந்தவை. ராவுத்தர்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்பட்ட பள்ளிகளில் குதிரை குளம்பு வடிவத்தில் மினராக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
பள்ளி
சங்க காலத்தில் அரசர்கள் உயிர்துறந்த பின் புதைத்த இடங்களைப் பள்ளி என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. பள்ளி என்ற சொல்லானது துறவிகள் தங்குவதற்கும், உறங்குவதற்கும் அமைக்கப்பட்ட இடங்களுக்கு பள்ளி என்றே தமிழ்பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. இவை தவிர முனிவர்கள் ஆசிரமம், பௌத்த கோயில்கள், அரண்மனை, படுக்கை, பள்ளிக்கூடம் போன்றவை பள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஆதியில் சமண, பௌத்த கோயில்களே பள்ளி எனப்பட்டன. அவைகள் சைவ, வைணவக் கோயில்களாக மாறியபின்பும் அதே பெயர்களில் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சிராப்பள்ளி, அகத்தியான்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி போன்ற ஊர்கள் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் தங்கள் தொழுகைக்கான இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர்.
நாகூர் மினராக்கள்
மராட்டிய மன்னன் பிரதாபசிங் கட்டியுள்ள பெரியமனோராவுக்கு மன்னர் துக்கோஜி கொடையளித்துள்ளார். தஞ்சாவ+ர் விஜயநாகவ நாயக்கர் தர்காவின் முதல்வாயில் மனோராவைக் கட்டியுள்ளார். தலைமாட்டு மனோராவை நாகூர் நல்ல சையது மரைக்காயரும், மூன்றாவது மனோராவை பீர் நைனா மரைக்காயரும், நான்காவது மனோராவை தாவ+த்கானும் கட்டியுள்ளார்கள். இதற்கு கூத்தாநல்லூரைச்சேர்ந்த நடேச ஐயர் தங்க கலசம் வைத்துள்ளார். மேலும் இங்குள்ள கட்டிடங்கள் அனைத்துமே 17-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிவந்த திராவிடக் கட்டிடக்; கலைப் பாணியும், இஸ்லாமிய கட்டிடக் கலைப்பாணியும் கலந்து கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு இந்துக்கள் கோயில்களுக்கு முஸ்லிம்களும், முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு இந்துக்களும் கொடைகள் மற்றும் திருப்பணிகள் வழங்கியுள்ளனர். வழங்கியும் வருகின்றனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகூரைப்போலவே ஏர்வாடி, திருச்சி, சென்னையில் உள்ள தர்காக்களிலும் பல உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா என்பதற்கு இதுவே தக்க சான்றாகும். இங்குள்ள கல்வெட்டுக்கள் மதவெறிக்கு சாட்டையடிக்கும் கல்வெட்டுக்களாக காலங்களை கடந்தும் திகழ்கிறது.
இந்துக்கள் வழங்கிய கொடைகள் பற்றிய கல்வெட்டுக்கள்
இடம்:நாகூர் புகைவண்டி நிலையம் அருகில் காணப்படும் கல்வெட்டு
காலம்:1911
கல்வெட்டு:ஸ்ரீமது.நாகூர் ஆண்டவர் துணை
சென்னப்பட்டனம்
ஸ்ரீபழனியாண்டி பிள்ளை அண் சன்ஸ்
தர்மசத்திரம்
என குறிப்பிட்டுள்ளது.
இதே போல இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தர்மசத்திரம் கொடையாக கொடுத்துள்ளார்.
2.மண்டபத் திருப்பணி செய்த அப்துல்காதார்
நாகூர் தர்ஹா அலங்கார வாசல் என்று அழைக்கப்டும் நுழைவு வாயிலின் வலது புறத்தூணில் தமிழிலும், இடது புறத் தூணில் உருதுவிலும் எழுதப்பட்டுள்ளது.
இடம்:முன் மண்டபத்தூண் இடது புறம்
காலம்:பிரமாதி வருடம் கி.பி.1879
செய்தி:முன் மண்டபத்தின் கீழ்ப்புறம் ஒரு பத்தியை நாகூர் அகமது லெப்பை குமாரர் ஹாஜி அப்துல் காதர் கட்டி வைத்தார். இதனைக்கட்டிய கொத்தனார் இருவர் பெயரும் கூறப்படுகிறது.
கல்வெட்டு:
1.பிஸ்மில்லாஹிஃ2.இந்தக் கட்டிடமும் கீள்ஃ3.புறம் ஒரு பத்தி கட்டிடமும்ஃ4.ஹஜரத்து ஷாஹனால்
5.ஹமீது செய்யிதுஃ6.அப்துல் காதிர் ஒலிஃ7.கஞ்ஜ சவாயி கஞ்ஜ பகுசுஃ8.பாத்துஷா சாஹிபு
9.ஆண்டவர்களுக்காகஃ10.நாகூர் அஃமது லெவ்வைஃ11.குமாரற் ஹாஜிஃ12.அப்துல் காதிர்
13.நகுதாவால் கட்டப்பட்டதுஃ14.பிரமாதி வரு 1879ஃ15.இந்த வேலை திருச்சினாப்பள்ளி ஒறைய+ர்
16.சின்னத் தம்பி முத்து கருப்ப கொத்தர் குமாஃ17.ரர்கள் க.று.ம. சிவந்திலிங்கம்
18.தாறானூர் ஆ.அண்ணாவி
3.பிரதாபசிங் கொடை
இடம்:நாகூர் தர்கா முன்னர் உள்ள வெளி மினார்
காலம்:தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங் மகாராசா
(1739-1763) காலம், யுவ வருடம் தை மாதம் 11:கி.பி.1755
செய்தி:தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாபசிங் மகாராசா வெளி மினார் கட்டி வைத்தார். நாகூரில் ;அதிகாரியாக இருந்தவர் சேக் அப்துல் மலிக் அவர்கள் குறிப்பெறுகிறார். மராட்டிய அதிகாரிகள் மானோசி செகதாப், ராமோசி நாயக்கர் ஆகியோரும் குறிக்கப் பெறுகின்றனர்.
கல்வெட்டு:
1.அசரத்து மீறா சாயிபுஃ2.ராஸ்ரீ பிறதாபசிங்கு மஃ3.காராசா சாயிபு அவர்ஃ4.கள் கட்டிவச்ச மணாறா
5.ரா.மானோசி சிகதாபு ரா.ஃ6.அவர்கள் ரா.ரா.ராமோசிஃ7.னாயக்கர் அவர்கள் மத்தி
8.ஷத்தில் உத்தாரப்படிக்கு சேகுஃ9.மலிக்கு நாகூர் மத்திஷத்ஃ10.தில் மனாரா பதினொரு நிலம் க
11.ட்டி முடிஞ்சுது யுவ வருஷம் தை மாதமஃ12.தேதி கும்பம் வச்சது
4.விசயராகவ நாயக்கர் கொடை
இடம்:நாகூர் தர்கா உள் மினார்
காலம்:தஞ்சை நாயக்கர் விசயராகவ நாயக்கர் (1640-1674)
காலம் பார்த்திப ஆடி15: கி.பி.3.7.1645
செய்தி:தஞ்சை நாயக்க மன்னரின் அதிகாரியாக இருந்த நாகூர் மீரா ராவுத்தர் உள் மினாரைக் கட்டினார்
கல்வெட்டு
1.பாத்திப வருஷம் ஆடி மாதம் 10 தேதிஸ்ரீ விசையராவுகஃ2.நாயக்கய்யன் காரியத்துக்குக் கர்த்தரான
3.மதாறு ராவுத்தர் நாவ+ர் மீரா ராவுத்தர் முதஃ4.ல் வாசலில் கட்டின மினாற் மீரா ராவுத்தர் த
5.ம்மத்துக்கு அகுதம் பஃ6.மக்கத்திலே அகுதம் பஃ7.ண்ணின பாவத்திலேஃ8.போக கடவாராகவும்
9.கெங்கைக் கரையில் காராஃ10.ன் பசுவை கொன்ற பாஃ11.வத்திலே போககடவாராகவும்
5.தங்க கலசம் வைத்த மகாதேவ அய்யர்
வடக்கு மனோரா கல்வெட்டு
1.உஃ2.கூத்தா நல்லூர்ஃ3.எஸ்.மகாதேவ ஐயர் அவர்களால்ஃ4.தங்க கலசம்ஃ5.வைக்கப்பட்டதுஃ6.92-1956
6.குஞ்சு மரைக்காயர் கட்டிய பீர் மண்டபம்
பீர்மண்டபத்தில் உள்ள கல்வெட்டு
காலம்:ஹஜ்ரி 972 றசப் மாதம்
செய்தி:குஞ்சு மரைக்காயர் காதர் மீரா சாயபு தன் சொந்தப் பணத்தில் பீர் மண்டபம் கட்டிய செய்தி கூறப்பட்டுகிறது.
கல்வெட்டு:
1.பீர் மண்டபம்ஃ2.பிசுமில்லாகிஃ3.றரு கிசரத்துஃ4.972 வருஷம் றசப்ஃ5.மாதம் முதல் நாகூர் கலா
6.ரத்து சாகுல் கமீதொலிஃ7.ஆண்டவரவர்கள் சீசறுஃ8.மான குஞ்சு மரைக்ஃ9.காயர் முகம்மது அ
10.பு பக்கர் மரைக்காஃ11.யரவர்கள் குமாரருஃ12.மாகிய குஞ்சு மரைக்ஃ13.காயர் காதிறு மீறா சா
14.கிபு சொந்தத்தில் சிலஃ15.வு செய்து கட்டிய பீர்ஃ16.மண்டபம் 7031ஃ17.நள வருஷம் சித்திரை மாதம்
7.மினார் கட்டிய சையது மரைக்காயர்
இடம்:நாகூர் தர்கா வடக்கு மினார்
காலம்:19ம் நூற்றாண்டு:ஸ்ரீமுக மாசி:கி.பி.1873
செய்தி:நாச்சிகுளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் கட்டிய விபரம் கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு:
1.அமானல்லாயி சாஃ2.த்துக்தண நிறெகவுஃ3.ம் சிறிமுக வருஷம் மாசிஃ4.மாதம் நாச்சிகுழம்
5.உதுமா மரைக்காஃ6.யர் குமாரர் நல்லஃ7.தம்பி மரைக்காயஃ8.ர் குமாரர் நகுதாஃ9.நல்ல செயிது மரை
10.க்காயர் அவர்கள் நாஃ11.கூர் மீரா சாயபுஃ12.அவர்கள் தறுகாஃ13.வில் கட்டிவச்ச மினாற்
கட்டுரை
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602.
செல்:9715-795795
- பாரம்பரியத்தை பறைசாற்றும் கல்வெட்டுக்கள்
- மதநல்லிணக்கத்தின் சின்னமான நாகூர்
- மிதிலாவிலாஸ்-4
- அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்
- தொடுவானம் 57. பெண் மனம்
- தொலைக்கானல்
- ஆத்ம கீதங்கள் –18 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! மறுபடி நீ மணமகன் ஆயின் ..!
- வார்த்தெடுத்த வண்ணக் கலவை – திலகன் எழுதிய “புலனுதிர் காலம்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து
- வெட்கச் செடியும் சன்யாசி மரமும்
- வைரமணிக் கதைகள் -5 இடிதாங்கி
- தப்பிக்கவே முடியாது
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 4
- காக்கிச்சட்டை – சில காட்சிகள்
- ஒவ்வொன்று
- சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ நாவல்