உதிராதபூக்கள் – அத்தியாயம் 6

This entry is part 27 of 28 in the series 22 மார்ச் 2015

இலக்கியா தேன்மொழி

கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது, வினயிடமிருந்து.   வானம் கறுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்போலிருந்தது.

சுற்றிலும் டவர் வந்த பொதுஜனம் பரபரப்பாக இருந்தது. பலர் தங்களது வாகனங்களில் தங்களை நிறைத்துக்கொண்டு பார்க்கை விட்டு போய்க்கொண்டிருந்தனர்.

கிரிஜா வினய்யின் எண்ணை தேர்வு செய்து அழைத்தாள்.

‘ஹலோ’

‘ஹேய் வினய்..பக்கி.. இன்னிக்கு வேணாம்ன்னு சொன்னேன்.. கேட்டியா? இப்போ பாரு மழை வரப்போகுது.. நீ எங்கடா இருக்க?’ என்றாள் கிரிஜா.

‘நோ நோ அவசரப்படக்கூடாது.. கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பாரு’ என்று வினய்யிடமிருந்து பதில் வர, திரும்பிப் பார்த்தாள்.

‘என்ன? பாக்க என்ன இருக்கு? ரோடு தான் இருக்கு? நீ எங்க?’

‘ஏம்மா.. கோழி முட்டை சைஸுக்கு கண்ணை வச்சிக்கிட்டு உனக்கு ரோடு மட்டும் தான் தெரிஞ்சதா… ரோட்டுமேல ஒரு ஸ்விஃப்ட் நிக்கிதே அது தெரியவே இல்லையா?’

கிரிஜா மீண்டும் பார்த்தாள். ஒரு மினி லாரிக்கு பின்புறம் மெரூன் நிறத்தில் ஒரு மாருதி ஸ்விஃப்ட் கார் நின்றுகொண்டிருந்தது.

கொஞ்சம் கண்ணை சுருக்கி பார்த்ததில் உள்ளே அமர்ந்திருந்தவன் சாயலில் வினய் போலவே இருந்ததாகப்பட்டது கிரிஜாவுக்கு.

‘உனக்காக காரோட பின் சீட் கதவை திறந்து வச்சிருக்கேன்.. வா’ என்றான் வினய் போனில்.

‘ஆங்.. ஏன் முன் சீட்டுன்னா ஆகாதா?’

‘அய்யோ.. அழகான பொண்ணுங்க எல்லாம் பின் சீட்டுல தாம்மா உக்காரணும்’ என்றான் வினய்.

‘ம்ஹும்.. நான் வர மாட்டேன்… நீ கூப்பிடுறத பாத்தா ஏதோ வில்லங்கமா இருக்கு’ என்றாள் கிரிஜா.

‘பின்ன… வில்லங்கத்தை விலை கொடுத்து இல்ல வாங்கி வச்சிருக்கேன்.. முழுசா ஆறரை லட்சம் இந்த காரு தெரியுமா?’

‘அதுக்கு?’

‘அட.. வாம்மா… நேரம் ஆக ஆக, மழை வந்திடும்.. பாவம் நீ.. வெள்ளை கலர்ல சுடிதார் போட்டுட்டு வேற வந்திருக்க.. நீ மட்டும் மழையில நனைஞ்சா,  இந்த ஏரியாவே சூடாயிடும்… ஆம்பளைங்க வயித்தெறிச்சலை வாங்கி கொட்டிக்காத…’

‘சுடிதார்ன்னதும் நியாபகம் வருது.. உன் டேஸ்ட் ரொம்ப மட்டம்.. என்கிட்ட அழகழகா டிரஸ் இருக்கு.. போயும் போயும் இத போட்டுட்டு வர சொன்ன பாரு? இதெல்லாம் நல்ல நாள்லயே நான் போடமாட்டேன்’

‘மேடம், நான் உன் டேஸ்டுக்கு ஜீன்ஸ்ல இறக்குமதி ஆயிருக்கேன்ல. ஏதாவது சொன்னேனா?.. அதே மாதிரி நீயும் எதுவும் சொல்ல கூடாது.. நீ இந்த சுடிதார்ல தான் தேவதை மாதிரி இருக்க தெரியுமா.. ஐயய்யோ’

‘என்னடா?’

‘ஏற்கனவே மேகம் வந்தாச்சு.. மழை சீக்கிரம் வந்துடும். வாம்மா’

கிரிஜா அண்ணாந்து பார்த்துவிட்டு,

‘டேய்.. காருக்குள்ள உக்காந்துகிட்டு மேகம் வரதுலாம் எப்படிடா கவனிக்கிற’ என்றாள்.

‘அதான் உன் முதுகுல திரண்டு கிடக்கே……………. மேகம்… ‘ என்றான் வினய்.

‘அடச்சே.. ரொம்பத்தான் உனக்கு’ என்ற கிரிஜா, தொடர்ந்து,

‘ஆனா, மழை வர அளவுக்கு இல்லைடா மேகம்’ என்றாள் அண்ணாந்து பார்த்தபடியே.

‘செல்லம்.. நீ காருக்குள்ள வந்துட்டா, மேகமா இருந்த உன் கூந்தல் கார் மேகம் ஆயிடும்மா,.. மழை கன்ஃபர்ம்ட்’ என்று வினய் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே , தடதடவென மழை பொழியத்துவங்க, கிரிஜா சட்டென  காரை நோக்கி ஓடினாள்.

வினய் எக்கி காரின் பின் சீட் கதவை திறக்க, ஓடி வந்து அவசரமாக ஏறிக்கொண்டு கதவை சார்த்திக்கொண்டாள்.

அதற்குள் முகம் , கைகளிலெல்லாம் திட்டுதிட்டாய் மழைத்துளிகள், அவளின் வெண்மை நிறத்தை பளபளக்கச்செய்தன.

‘பக்கி பக்கி… ஃப்ர்ஸ்ட் மீட்டுக்கு நேரம் பாக்குது பாரு’ என்றாள் கிரிஜா. மழை இப்போது தடதடவென பொழிய, காருக்குள் சன்னமாக இறங்கிக்கொண்டிருந்த ஏசி குளிர் மயிர்க்கூச்செறிய வைத்தது. மெல்லிய இசை காற்றில் இழைந்தோடிக்கொண்டிருந்தது.

வினய் சன்னமாக உறுமிக்கொண்டிருந்த காரின் கியரை உயர்த்தி, சாலையில் செலுத்தினான்.

‘டேய், என்னை எங்கடா கூட்டிட்டு போற?’ என்றாள் கிரிஜா.

‘உன்னை ஒண்ணும் கடத்திட்டு போகலை.. ஒரு சின்ன டிரைவ் அவ்ளோ தான்’ என்று சொல்லிக்கொண்டே காரை சாலையில் செலுத்தினான் வினய். கார் ஐயப்பன் கோயிலைத்தாண்டி சிக்னலில் இடது புறம் திரும்பி, காம்ப்ளக்ஸ் தான், மீண்டும் இடது புறம் திரும்பி, பார்க்கின் பின்பக்க வாயிலைக் கடந்து, மீண்டும் இடது புறம் திரும்பு சற்றே உள்வாங்கி சாலையோரம் நின்றது.

மழை இப்போது ச்சோவென கொட்டத்துவங்கியிருந்தது. தடதடவென அதன் சத்தம், காருக்குள்ளும் கேட்டது. கிரிஜா கண்ணாடி ஜன்னலினூடே பார்த்தாள். கண்ணாடி மீது மழை நீர் மீண்டும் மீண்டும் ஒழுகி புதிது புதிதாய் சித்திரங்களை அழித்து அழித்து வரைந்துகொண்டிருந்தது.

வினய், காரின் டிரைவர் சீட்டை பின்பக்கமாக சாய்த்து, அப்படியே பின் சீட்டுக்கு தாவினான். கிரிஜா அதிர்ந்து பின் சுதாரித்து அவனுக்கு இடம் விட்டாள்.

வினய் பின் சீட்டில் அமர்ந்தபின், குனிந்து சீட்டின் வலது பக்கம் இருந்த லிவரை திருக, சீட், மீண்டும் எழுந்து நின்றுகொள்ள, முன்னிருக்கை இரண்டும் ரோட்டிலிருந்து பின் பக்க சீட்டை மறைத்தன. கிரிஜா சுதாரிப்பதற்குள் அவளது கழுத்தில் கைவைத்து இறுக்கி, அவளது இதழை தன்னிதழால் கவ்வினான் வினய்.

சட்டென நேர்ந்த அபகரிப்பில் அதிர்ந்து பின் சுதாரித்த கிரிஜா, அவனுடைய இதழ்களுக்கு தன் இதழ்களை தெரிந்தே பறிகொடுத்தாள்.

இரண்டு வழுவழுப்பான சதைகள் ஒன்றையொன்று விழுங்க முயற்சிக்கத்துவங்கின. இதழ்களுக்கிடையிலான‌ அந்த போர், மெல்ல மெல்ல உக்கிரம் அடைந்தது. கிரிஜா கிறங்கிச்சாய்ந்தாள். வினய்யின் கை கிரிஜா கழுத்திலிருந்து சரிந்து, மார்பில் விழுந்தது.

துப்பட்டாவில் மறைந்திருந்த இரண்டு பட்டன்களை அவனது விரல்கள் லாவகமாக கழற்றின. இருவருக்குமிடையில் மெல்லிய துப்பட்டாவிற்கும் கூட இடமில்லாது போய், சரிந்து கீழே விழுந்தது. கிட்டத்தில் கிரிஜாவின் மார்புக்குழியில் உப்பு நீரை சுவைத்தன வினய்யின் இதழ்கள்.

அந்த அடை மழையில், காரின் முன்பக்க கண்ணாடியில், மழை நீர் களி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இரைந்து கொண்டிருந்த குளிரை, இரு உடல்களின் வெக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தன.

துப்பட்டாவில் மறைந்திருந்த இரண்டு பட்டன்களை அவனது விரல்கள் லாவகமாக கழற்றின. இருவருக்குமிடையில் மெல்லிய துப்பட்டாவிற்கும் கூட இடமில்லாது போய், சரிந்து கீழே விழுந்தது. கிட்டத்தில் கிரிஜாவின் மார்புக்குழியில் உப்பு நீரை சுவைத்தன வினய்யின் இதழ்கள்.

அந்த அடை மழையில், காரின் முன்பக்க கண்ணாடியில், மழை நீர் களி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இரைந்து கொண்டிருந்த குளிரை, இரு உடல்களின் வெக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தன.  கிரிஜா முன்பு ரசித்த மழை நீர் ஓவியம் இப்போது அவர்களது உஷ்ணத்தில் பனி படர்ந்துவிட்டிருந்தது.

அந்த குறுகிய இடம் அவர்களுக்கென ஒதுங்கியது. ஒதுங்கிய இடத்தில் அவர்களின் வெப்ப உடல்கள் நிறைந்தன. மென்மேலும் இறுகின. விட்டுவிட்டு தளர்ந்தன. ஒன்றின் தளர்ச்சியை மற்றொன்று சமன்செய்தது. சில சமயங்களின் இரண்டுமே உக்கிரமாக மோதிக்கொண்டன.

கிரிஜாவின் உடல் மெல்ல அதிர்ந்தது. அவள் வினய்யை தள்ளிவிட்டாள்.

‘போதும்…ப்ளீஸ்’ என்றாள் ஆடைகளை சரிசெய்துகொண்டே.

வினய் ஒரு நொடி கிரிஜாவின் அங்கங்களை பார்த்தான். மீண்டும் அவள் மீது பாய்ந்தான். கிரிஜா மீண்டும் தள்ளிவிட்டாள்.

‘போதும்ன்னு சொல்றேன்ல… ப்ளீஸ் வினய்.. லீவ் மீ’ என்றாள்.

வினய் சாய்ந்து அமர்ந்தான். தலை முடியை கோதிக்கொண்டான்.

‘கிரி, நீ செம ஃபிகர்டீ’ என்றான்.

கிரிஜா மார்பில் கைவைத்து சுடிதாரை நோண்டிவிட்டு,

‘டேய் பட்டனை பாழ்பண்ணிட்டியேடா’ என்றவள், தொடர்ந்து,

‘இதுக்கு தான் இந்த சுடிதாரை போட்டுட்டு வர சொன்னியா…. கேடிப்பயலே’ என்றாள்.

– இலக்கியா தேன்மொழி
(ilakya.thenmozhi@gmail.com

Series Navigationஉலகம் வாழ ஊசல் ஆடுகசெல்மா கவிதைகள்—-ஓர் அறிமுகம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *