பாவலர் கருமலைத்தமிழாழன்
கிழிந்திட்ட துணிதன்னைச் செம்மை யாக்கக்
கிழிச்சலினைத் தைக்கின்ற ஊசி போல
கிழிந்திட்ட மனந்தன்னை நல்ல நூல்கள்
கீழ்வான வெளிச்சம்போல் செம்மை யாக்கும்
வழிமாறிப் போகின்ற நீர்த டுத்து
வளமாக மாற்றுகின்ற அணையைப் போன்று
விழிமறைக்கும் அறியாமை இருளை ஞான
விளக்கேற்றிப் போக்குவதும் நூல்கள் தாமே !
அறிவுதனை வளர்க்காமல் விலங்கைப் போல
அலைவதுவும் தின்பதுமே வாழ்க்கை யன்று
அறிவிலியும் வாழ்கின்றான் அந்த வாழ்க்கை
அறிஞர்கள் போற்றுகின்ற வாழ்க்கை யாமோ
நெறியோடும் பண்போடும் வாழ்வ தற்கும்
நேர்செயல்கள் சிந்தித்தே ஆற்று தற்கும்
அறிவார்ந்த நூல்களினைப் படிக்க வேண்டும்
அதன்வழியில் நடப்பதற்கே முனைய வேண்டும் !
நூல்கள்தாம் நமக்குற்ற நல்ல நண்பன்
நூல்கள்தாம் சூழ்ச்சிசெய்யா உண்மை நண்பன்
ஆல்விழுது அடிமரத்தைக் காத்தல் போல
அருநூலே நம்வாழ்வைக் காத்து நிற்கும்
கால்உடலைத் தாங்கிவழி நடத்தல் போல
கற்றிட்ட நூல்கள்தாம் வழியைக் காட்டும்
சால்புதரும் சிறப்பான நூல்கள் கற்றே
சாகாத சான்றோராய்ப் புகழில் வாழ்வோம் !
- தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு
- கம்பன் திருநாள் – 4-4-2015
- பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )
- ஞாழல் பத்து
- எழுத்துப்பிழை திருத்தி
- சான்றோனாக்கும் சால்புநூல்கள்
- என்னைப்போல
- மிதிலாவிலாஸ்-7
- குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?
- மருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்
- நிழல் தந்த மரம்
- கருவூலம்
- வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி
- ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – (7)
- ஆத்ம கீதங்கள் –21 ஆடவனுக்கு வேண்டியவை
- உளவும் தொழிலும்
- வைரமணிக் கதைகள் -8 எதிரி
- சீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரி
- ஒட்டுண்ணிகள்
- தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !
- English rendering of Thirukkural
- ஷாப்புக் கடை
- தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்
- உலகம் வாழ ஊசல் ஆடுக
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 6
- செல்மா கவிதைகள்—-ஓர் அறிமுகம்