மூன்றாவது விழி

This entry is part 15 of 28 in the series 12 ஏப்ரல் 2015

 

 

உன் துணையோடுதான்

இவ்வளவுத்தூரம்

கடந்துவந்திருக்கிறேன்

 

களைப்பின்றி

கவலையின்றி

என்பயணம் நிகழ

வழித்துணை நீதான்

 

இன்பபென்று

எதையும் தேடவேயில்லை

இன்பமில்லை

என்ற எண்ணமேயில்லை

துன்பமும் அப்படியே

துளியும் உணர்ந்ததில்லை

 

புயல்

வந்துபோனதற்குப்பின்

அமைதியாய் நானிருக்க

அரவணைத்தது நீதான்

 

உனக்கும்

எனக்குமுள்ள உறவு

உள்ள உறவு

 

அது

உண்மையான உறவு

உலகைப்பேசவைத்த உறவு

 

தலைவலிக்குத்

தைலம்போல் உதவினாய்

மனவலி நீங்க

மருந்தானாய்

 

காலம்கரைய

காரணி நீதான்

கதலைத் தந்து

காத்ததும் நீதான்

 

ஒவ்வொரு நொடியும்

துடிப்புடனும்

உயிர்ப்புடனும்

உலவவிட்டாய்

இன்னொருவர் துன்பத்தை

இடம்மாறி உணரவைத்தாய்

 

உன்வழியாக

உலகைப்பார்த்தேன்

உன்மொழியால்

உலகைப்பார்க்க வைத்தேன்

 

என்

மூன்றாவது விழி

நீதான்

 

இப்பவும்

இனியும்

நீதான்

என்

மொழியும் விழியும்

 

(1.4.2015 அதிகாலை 6.20க்கு தோன்றிய சிந்தனை. இரவு 8.20க்கு முடித்துவைத்தேன்)

Series Navigationஅப்பா எங்க மாமாதொடுவானம் 63. வினோதமான நேர்காணல்
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *